Advertisement

‘ ஹப்பா டா கட திறந்து இருக்கு ‘ குதூகலமானாள். ஆட்கள் வேறு குடும்பமாய் உள்ளே போய் வந்து கொண்டிருந்தனர்.
‘ இந்த மாம்ஸ் பைக் வேற வெளியே நிக்குதே. அப்போ நம்ப சிங்கம் உள்ள இருக்கா , நம்ப வேணா போய் அதோட பிடரிய புடுச்சு கொஞ்சம் விளையாடி பார்க்கலாமா. 
நோ…நோ…அந்த வேலையே அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ தகவல் ரொம்ப முக்கியம் மன்னா. அதை பார்ப்போம். ‘ என நினைத்தவள் உள்ளே சென்றாள்.
‘ ஆஹா நம்ப வெப்பென் சப்லயர் ‘ என உற்சகமாக கவுண்ட்டர் பில்லிங்கில் இருந்த அவனிடம் சென்றாள்.
கவுண்ட்டர் வெளியே தனியாக இருந்தது. கடையின் உள்ளே இல்லை. அப்போது யாரும் பில்லிங்க்கு வரவில்லை. 
“ ஹாய் வெப்பென் சப்லயர். எப்படி இருங்கிங்க. “ உற்சாகமாய் கேட்டாள் ஸ்ரீ.
ஸ்ரீயை பார்த்ததும் முகமெல்லாம் சந்தோஷத்துடன், 
“ ஹாய் அண்ணி அக்கா.  “ என உளறி கொட்டினான்.
“ ஹலோ நான் உங்களுக்கு அண்ணி மட்டும் தான், அக்கானு சொல்லி என் புண்ணுல டிஞ்சர் வைக்க கூடாது அண்ட் இந்த விஷயம் வெளியே கசிய கூடாது. ரொம்பபபப ரகசியமா இருக்கணும். முக்கியமா உங்க அண்ணாக்கு தெரியவே கூடாது.  
அப்புறம் தெரிஞ்சது சேதாரம் எனக்கு தான் ஜாஸ்திய இருக்கும் ஓகே. “ என தல வடிவேலுவாய் விளக்க,
“ ஓகே ஓகே அண்ணி “  ‌அவனும் உற்சாகமானன்.
“ அண்ணி ஒரு டவுட். “
“ சொல்லுங்க வெப்பென் சப்லயர். “
“ எல்லாரும் முன்னாடி எப்படி அண்ணினு கூப்பிடறது. “
“ Good question. பட் எனக்கு ஆன்சேர் தெரிலயேயய பா  “ என நடகர் திலக சிவாஜியாய் மாறி நடுக்கமாய் கவலைப்பட ,
“ அப்போ எல்லார் முன்னாடியும் வாங்க போங்கனு மட்டும் கூப்பிடுறேன். “
“ ஹா கருத்துக்களை கட்சிதமாக கேட்ச் பண்ணிவிட்டீர் வெப்பென் சப்லயர்.”
“ நன்றி நன்றி. “
“ நீங்க எத்தன வருஷமா இங்க வொர்க் பன்றிங்க. “
முகம் சுருங்கிற்று கிருபாவிற்கு. அதை பார்த்தவள், 
“ சாரி சாரி. நான் ஏதாவது தப்பா கேட்டனா. ரியல்லி சாரிங்க. “ என பரபரத்தாள்.
“ அய்யோ அண்ணி நீங்க சாரிலாம் சொல்லாதிங்க.
அண்ணி நீங்க ஒன்னும் தப்பா கேக்கல. நீங்க இப்போ தான எங்க கூட ஜாயின் ஆயிருக்கிங்க. அதான் உங்களுக்கு தெரிலனு எனக்கு தெரியும். என்னோட ஃபேமிலி அண்ட் மணி ஃபேமிலி எல்லாரும் அண்ணாவோட தோப்புல தான் தங்கி வேல பாக்குறாங்க. 
கிட்டதட்ட அண்ணா எங்கள ஐஞ்சு வருஷமா படிக்க வச்சு வளக்குறாங்க. அப்டியே வளர்ந்ததால டக்குனு இங்க வேல பாக்குறிங்களானு கேட்டதும் ஒரு மாதிரி ஆயிடுச்சு அதான். வேற ஒன்னும் இல்ல அண்ணி. “ என குரல் இறங்கி இருந்தது.  
“ ரொம்ப சாரி. நான் இனிமே அப்படி பேச மாட்டேன். ரொம்ப ரொம்ப சாரி “ ஸ்ரீயின் குரல் மிகவும் கலங்கி விட்டது.  
“ அட பரவால அண்ணி. ஏன் இவ்ளோ சாரிலாம் கேக்குறிங்க. உங்களுக்கு எங்க கிட்ட கேக்க எல்லா உரிமையும் இருக்கு.
உங்க வாய்ஸ் இப்படி மாறிடுச்சு. இனிமே நீங்களும் நம்ப கேங் தான. “ என கிருபா ஸ்ரீ இவ்வளவு மன்னிப்பு கேட்பது மனம் கேளாமல் ஆறுதல் கூற, அப்போதும் ஸ்ரீ தெளிந்தப்பாடு இல்லை. ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி.
அப்போது யாரோ ஒரு குடும்பம் வெளி பில்லிங்கிற்கு வர, ஸ்ரீ அங்க விற்பனைக்கு இருக்கும் இயற்கை முறை தயாரிப்பை பார்ப்பது போல் நகர்ந்து விட்டாள்.
கிருபா சீக்கிரம் அவர்களின்‌ வேலை முடித்து அனுபினான்.
“ அண்ணி..”
மெதுவாக ஸ்ரீ குனிந்த தலையோடு கிருபா பக்கம் வர, அவளை எப்படி சமாதானம் செய்வது என தெரியவில்லை கிருபாவிற்கு.   
“ அண்ணி…
எங்களுக்கு அண்ணாவோட மேரேஜ் நினச்சு எவ்ளோ கவல தெரியுமா.
நீங்க வந்ததும் தான் எங்க அண்ணா இப்படியே இருந்திட மாட்டாருனு ஒரு ஆறுதலே வந்துச்சு. 
கீர கடையர மத்துக்கெல்லாம் முத்தம் வைச்சு சுத்திட்டு இருந்தார்னா  பார்த்துகோங்களேன். “ 
இது அவளுக்கு புது செய்தி, ஸ்ரீயின் முகம் கொஞ்சம் மலர்ந்தது. மெல்ல புன்னகையுடன் கிருபவை பார்த்தாள்.
“ ஹப்பா டா. அண்ணி சிரிச்சிட்டாங்க. “ என கிருபா சந்தோஷத்தை காட்ட, அதில் இன்னும் ஸ்ரீயின் புன்னகை விரிந்தது. 
“ வெப்பென் சப்லயர். நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும். “
“ சொல்லுங்க அண்ணி… நான் உங்கள் அடிமை. “ என முன்னே சிறிது குனிந்து நிமிர்தான்.
“ ஹா..ஹா.. உங்க மொபைல் நம்பர் தர முடியுமா. எனக்கு உங்க அண்ணாவோட ஷெட்யூல் நாளைக்கு எப்படினு தெரியணும். எனக்கு அது மெசேஜ் பண்றிங்களா. “
“ ஓகே அண்ணி, என் நம்பர் நோட் பண்ணிக்கோங்க. “
கட கட என நம்பர் பரிமாற்றம் நடந்தேறியது.
பிறகு தான் நியாபகம் வந்தவளாய், “ ஏன் கட இன்னும் திறந்து வச்சிருக்கிங்க. உங்க அண்ணா உள்ள என்ன பண்றாரு. “
“ நைட் டிஃபன்க்கு ஒரு ஆர்டர் அண்ணி. அதான் ரெடி ஆயிட்டு இருக்கு. கொஞ்சம் பெரிய ஆர்டர் அதான் வெளியே இருந்து ஆளுங்க வந்து செஞ்சிட்டு இருக்காங்க. மணியும், அண்ணாவும் தான் எல்லாம் சரியா பண்றாங்களானு பார்த்துட்டு இருக்காங்க. 
அது செய்யறது இன்னைக்கு ஈவினிங் டிஃபென்னும் வரவங்களுக்கு ஓபன்ல இருக்கு. 
அண்ணி நீங்க சூப்பர். 
இப்போவே நீங்க பொறுப்பான குடும்ப தலைவியா விவரம் எல்லாம் கேக்குரிங்க “ என கலாய்க்க 
“ ஏங்க வெப்பென் சப்லயர் இப்படி . ஒரு டவுட் கேட்டது குத்தமாங்க  “ என அவனை பாவமாய் பார்த்து வைத்தாள். 
கிருபாவிடம் இப்போது பார்சல் கிடைக்குமா என உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றாள். 
அதே ஊஞ்சலில் உட்கார பார்க்க, அங்கே ஒரு குடும்பம் உட்கார்ந்திருக்க, அதை சிறிது ஏக்கமாய் பார்த்துக்கொண்டே, வேறு இருக்கையில் அமர்ந்தாள். 
அங்கே சப்ளை செய்ய வந்த மணி, இவளை பார்த்ததும், உடனே அவள் அருகில் மகிழ்ச்சியாக சென்றான்.
“ வாங்க வாங்க. எப்படி இருக்கிங்க “ 
“ நான் நல்லா இருக்கேன்ங்க. நீங்க எப்படி இருக்கிங்க. “ 
“ நான் நல்லா இருக்கேன்ங்க. என்ன வேணும். “
“ இடியாப்பம் இருக்கா. கார இடியாப்பம் வெளில போட்ல இருந்துச்சு. அதுவும் உழுந்த வடையும் தாங்க. ஐஞ்சு பேருக்கு வீட்டுக்கு பார்சல் வேணும். “
“ சரிங்க, பண்ணிடலாம்.  உள்ள அண்ணா இருக்காங்க. கூப்பிடட்டுமா. “ என
சரி யென புன்னகையுடன் தலை ஆடினாள்.
‘ ஹைய் சிங்கம் வருதா. இங்க பிடரியே புடுச்சு விளையாண்டா கடுச்சிடுமே. சரி முடிஞ்ச வரைக்கும் பி‌பி ஏத்திவிட்டு போவோம். ‘ என குதூகலமாய் உட்கார்ந்திருந்தாள். 
கிருபா குடும்பத் தலைவி என அழைத்திருக்க அதை இப்போது நினைத்தவளுக்கு உதட்டில் ஒரு மென்னகை கூட புதிதாய் பூத்திருந்தது, அது வெளியே தெரிந்து விடுமோ என மெனு கார்டில் தலையை விட்டிருந்தாள்.
உள்ளே வந்த மணி, “ அண்ணா…அண்ணா … “ என கத்திக்கொண்டே வாசுவிடம் வர,
வேட்டியிலும் கை இல்ல பனியனிலும் வேர்வையால் குளித்து அங்கே எல்லாம் சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து கொண்டிருந்தவன்,  இவன் கத்தியதும், 
“ ஏன் டா காதுலயே கத்துர…” என ஒரு கையை கொண்டு காதை அடைத்தான்.
வாசுவின் கையை வெடுக்கென இழுத்த மணி, அவன் காதருகில் கிசு கிசுப்பாய், “ அண்ணி வந்துருக்காங்க. “
“ எந்த அண்ணி டா. “ என இவன் புரியாமல் புருவம் சுருக்கி கேட்க,
தலையிலே அடித்த கொண்ட கிருபா, 
“ ஸ்ரீபத்மா அண்ணி வந்துருக்காங்க. அங்க உட்காந்துருக்காங்க. “ என கடியாத குறையாக விளக்க,
‘ அந்த ராங்கியா’ என உள்ளே அதிர்ந்தவன், வெளியே எதுவும் காட்டி கொள்ளாமல், “ என்னவாம் “ என மணியிடம் சாதாரணம் போல் கேட்க,
“ இடியாப்பமும் வடையும் பார்சல் கேட்டாங்க. சரினு சொன்னேன். அப்புறம்  உங்கள பார்க்கணுமானு கேட்டேன். சரினு சொன்னாங்க. “
“ லூசு பயலே நீயே ஏன் டா வாலன்டரி கேட்ட. “
“ நான் என்ன பண்றது நீங்க லவ் மெட்டீரியலே இல்லனு நினச்சேன். ஆனால் இப்போ இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு என்ன தெரியும். “
‘ அடேய் ‘ என வாசு மணியை முறைக்க,
“ நீங்க சொல்லாடியும் எங்களுக்கு தெரியும். இந்த முரப்ஸ் எல்லாம் இங்க வேண்டாம். அங்க உங்க முறை பொண்ணு வந்துருக்காங்க, அவங்க கிட்ட காட்டுங்க. இங்க இருக்க வேலையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.
வந்துட்டாரு நம்ப கிட்ட முறைக்க “ என வாரிவிட்டவன் வேலையை பார்க்க செல்ல, ‘ சுத்தி இருகறவன் எல்லாம் நம்பள கோத்து விடுறான்‌களே ’ என நினைத்த வாசு, எப்படி ஸ்ரீபத்மாவை எதிர்கொள்வது என இரண்டு நொடி யோசித்து நின்றான்.    
மணி வாசுவின் எல்லா செயலையும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.
சமையல் அறையில் இருந்து பின் பக்கம் செல்ல ஒரு வழி இருக்கிறது. அதன் வழியே சென்றவன், அங்கே இவர்கள் மட்டும் உபயோகிக்கும் வாஷ் பேசின் முன் நின்றான். அதில் சோப் போட்டு முகத்தை இரண்டு முறை கழுவினான், அப்படியே கைகள் முதல் தோள் வரை முழுமையாக கழுவினான்.  
அருகில் தொங்கி கொண்டு இருந்த துண்டை எடுத்து எல்லாம் துடைத்தான். தலையை வேறு எதற்கு என்று தெரியாமல் கலைத்து விரல்களாலே வாரினான். 
இதெல்லாம் போத வில்லை என்று அங்கே இருந்த சீப்பை எடுத்து வாஷ் பேசின் முன் இருத்த கண்ணாடியில் மறுமுறையும் வாரினான்.
இதெல்லாம் போத வில்லை என அங்கே இருந்த மிக சிறிய பவுடர் டப்பாவை எடுத்தான். அதை கையில் கொட்டினான். சரியான பொழுதில் தான டப்பா காலை வாரும். அதே போலே வாரியது. இருந்தாலும் விடுவேனா என எப்படியோ அழுத்தி எடுத்து வெளிவந்த கொஞ்சம் பவுடரையும் முகத்தில் பரப்பினான். விரலில் அத்தனை பதம், பவுடர் போட்டது போலும் இருக்க வேண்டும், இல்லாதது போலும் இருக்க வேண்டும். 
இவற்றையெல்லாம் உள்ளே இருந்து அவ்வப்போது ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த மணிக்கு வாயிக்குள் அத்தனை சிரிப்பு, வெளியே காட்டிக்கொள்ள வில்லை. 
உள்ளே வந்தவன் அங்கே தொங்கி கொண்டிருந்த வெள்ளை சட்டையை பார்த்தான், அருகில் இருந்த க்ரே டி – ஷர்ட்யும் பார்த்தான். எதை போடுவது என குழப்பம்.
இதை பார்த்த மணிக்கு அதிர்ச்சி, எப்போதும் கையில் கிடைத்ததை எடுத்து போடுபவன், இப்படி குழம்பி இருப்பதை பார்த்தவனுக்கு பாவமாய் போய் விட்டது. 
மிகவும் திடமானவன் வாசு. வாசு இப்படியெல்லாம் நடந்து கொள்வானா என வியப்பு. இத்தனைக்கும் விடலை பையன் எல்லாம் இல்லை வாசு. ஒரு வருடதில் முப்பது வயதை நெருங்க போகிறவன். வாழ்கையில் எவ்வளவோ அனுபவங்கள் அவனுக்கு உண்டு என்று மணிக்கு தெரியும். 
அப்படியும் வாசு இப்படி நடந்து கொள்கிறான் என்றாள் ஸ்ரீபத்மாவின் மேல் உள்ள விருப்பத்தை அன்றி வேறு எதை நினைப்பது என மணிக்கு தெரியவில்லை.  
வாசுவின் அருகில் வந்தவன், 
“ அண்ணே…வெள்ள சட்ட உங்கள கொஞ்சம் பெரிய ஆள் ரேஞ்ச்ல காட்டும், இந்த டி-ஷர்ட் போடுங்க, கொஞ்சம் நார்மலா தெரிவிங்க. “ என வெறும் மணி ஐடியா மணி ஆனான்.
“ எல்லாம் எனக்கு தெரியும் போடா “ என மணியை விரட்டினான். ஆனால் மணி சொன்னதை தவறாமல் செய்தான்.  
சமையல் நுழைவாயில் வரை போய் விட்டான். அப்படியே பின்னந்தலையை கோதியபடி, ‘ஹூஃப்’ என மூச்சு விட்டவன் மெதுவாக மிக மெதுவாக தயங்கி வெளி வந்தான். ஆனால் வெளியே வந்ததும் முகத்தில் இளக்கம் தெரியாதவாரு சாதாரணமாக வந்தான். இப்போது இயல்பாகவே அருகில் வந்தான்.
அவனை வருவதை எதிர்பார்ப்பதும் மெனு கார்டில் தலையை விடுவதுமாய் இருந்த ஸ்ரீபத்மா, 
முதலில் அவன் மெல்ல வருவதை பார்த்தாள், கலையாமல் வாரி இருந்த அவன் சிகை, படர்ந்த அவன் நெற்றி, களையான அவன் முகம், மெய் மொழியும் அவன் கண்கள், அந்த அழகிய புருவம், முறுக்கிய மீசை, தாடி, அவன் உடை, அவன் கம்பீரம், , ஏன் அவன் வேட்டியில் கூட எண்ணை கரை இருந்தது, அது கூட அவள் கண்களில் தப்பவில்லை, இப்போது இயல்பான வேகத்தோடு வருவது என பார்த்திருந்தாள்.
ஸ்ரீபத்மவிற்கு விழிகளை அசைக்க முடியவில்லை, ஒரு நொடி மூச்சு கூட நின்று வந்தது, அவனிடம் இவள் விருப்பத்தை சொன்ன போது கூட ஏற்படாத உரிமை உணர்வு, இப்போது எட்டி பார்க்கவும் சிறிது சுவாரசியம் கூட கூடி போனது. ஸ்ரீ அசையாமல் நன்றாக இருகையில் சாய்ந்து அமர்ந்து, இவனை தான் அசையாமல் பார்த்திருந்தாள். 
          வாசுவும் வெளியே வந்தது முதல் அவளது முகத்தை தான் பார்த்திருந்தான். அவளது விழிகளின் அசைவு, அதில் தெரிந்த இவனுக்கான உற்சாகம், அவள் உதடு புன்னகையை அடக்கினாலும் அதை காட்டி கொடுக்கும் அவளது காட்டன் கேண்டி கன்னங்கள் என வெளியே காட்டி கொள்ளாமல் அனைத்தையும் அவனது கண்கள் பார்த்து தான் இருந்தது. வாசுவின் மனதுக்குள் ஒரு பூங்காற்று. ஆனால் வெளியே ஒன்றையும் காட்டி கொள்ளவில்லை.
“ வா ஸ்ரீ. என்ன வேணும் “ கடையின் உரிமையலனாய் வரவேற்று அவள் எதிர் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். 
‘ அட பார்ரா . என்ன நீயா வெல்கம் செய்ற மாமஸ்‘ என புருவம் உயர்த்தி அவனை பார்த்திருந்தாள் ஸ்ரீ.
‘ இவ ஒருத்தி எப்போ பார்த்தாலும் பக்கத்துல ஆளுங்க இருக்கப்போவே நம்பள உத்து உத்து பார்த்துப் வைப்பா. ‘ என நினைத்தவன்,
“ ப்ச் ஸ்ரீ “ என அவளது கவனத்தை சிறிது கலைத்து, முகத்தை கடுமையாக்கி,  புருவத்தி சுருக்கி இவன் விழிகளை கூர்மையாகி சுற்றி இருந்தவர்களை நோக்கி பார்வை செலுத்தி இவளை அழுத்தமாக பார்த்து கண்களாலே மிரட்டினான்.  
ஸ்ரீபத்மா அவன் செய்கையில் இன்னும் தான் புன்னகை கூடியது. அதை மறைக்க அருகில் இருந்த மண் குவளையில் இருந்த நீரை எடுத்து பாருகினாள். 
      அப்போதும் மிரட்டிய பார்வை மாறாமல் ஸ்ரீயை தான் பார்த்து இருந்தான் வாசு.  
   ஆனால் இப்போது மிகவும் வசதியாக அவள் எதிரிலயே சாய்ந்து அமர்ந்து இருப்பதால், இப்போது தான் அவளை இயல்பாய் கவனித்தான். 
      அவளது நெற்றியில் ஒரு பக்கம் அதிகபடியாய் இல்லாமல் இயல்பாக வழிந்த பிரின்ஜ்ஸ்,‌ மெல்லியே மையிட்ட விழிகள், மிகை அலங்காரம் எதுவும் இல்லாமல் நேர்த்தியாய் போடபட்டிருந்த அவளது போனி, அவளது பஞ்சு காது சூடி இருந்த ஒற்றைக்கல் தோடு என அவன் இப்போது தான் நன்றாக அவளை கவனித்தான், ஆனால் வெளியே விரைப்பாய் தான் அமர்த்திருந்தான். 
ஸ்ரீ தண்ணீரை குடித்து முடித்த பிறகு, 
“ நான் பார்சல் வாங்க வந்தேன் மாமா.  “
“ மணி ரெடி பண்ணிட்டு இருக்கான். “ 
“ உங்க ஹோட்டல்ல என்ன ஆயில் யூஸ் பண்ணுவீங்க. எல்லாம் சுத்தமா இருக்குமா. “ ஏதோ விசாரிக்கும் பாவனையில் ஸ்ரீ . 
“ எல்லாம் மரச்செக்கு கடலை எண்ணையும், நல்ல எண்ணையும் தான், ஆடுற எடுத்துலயே வாங்குறோம். 
இங்க நிறைய பேரு அவங்க வீட்டு குழந்தங்களுக்கு தான் அதிகமா வாங்கிட்டு போறாங்க. 
இங்க பஸ் ஸ்டாப் வர டிரைவர்ஸ்‌ அண்ட் சில டைம் லாரி டிரைவர்ஸ்‌ கூட தேடி வந்து சாப்பிடுவாங்க , அவங்க லாங் ட்ரிப்க்கு அவங்களுக்கு வயறு ஒன்னும் பண்ணக்கூடாது. 
அந்த அளவுக்கு இங்க ஹெல்த்திய தான் சமைக்கிறோம்.“ பொறுமையாக இளகுவாகவே பதிலளித்தான் வாசு. 
“ அப்படியா. “ 
“ ஆமா. ஏன் இப்போ அதுக்கு என்ன “ புருவம் சுருக்கினான்.
“ அப்படி சுத்தமா எந்த கடையில வாங்குறிங்க. அட்ரஸ் கிடைக்குமா. நான் தலைக்கு தேக்கிர தேங்காய் எண்ணை வாங்கணும். “ அவசரமாக ஸ்ரீ அவள் மொபைலை எடுத்தாள். ஸ்ரீயின் முகம் சீரியஸ் மோட்டில் இருந்தது.
“ நானே கூட வாங்கி தரேன். நீ ஸ்ட்ரைட்டா போன நார்மல் ரேட்ல தான் குடுப்பாங்க. நான் போன கொஞ்சம் கம்மி பண்ணி தருவாங்க. “
“ எத்தன லிட்டர் வேணும். “
“ ஒரு ரெண்டு லிட்டர் போதும். “
“ அவ்ளோ தானா. அது என்கிட்டயே இருக்கே. நான் போய் எடுத்துட்டு வரேன். “
“ இல்ல மாமா. எனக்கு செக்கு இருக்குற இடத்துல தான் வாங்கணும். “
“ ஏன். “
“ அதில்ல மாமா. ஒருத்தர் ரொம்ப ரொம்ப வெறப்பா இருக்காரு . அதான் கொஞ்சம் தேங்காய் எண்ண விட்ட கொஞ்சம் ஸ்மூத்தா ஆவாரு. அதுக்கு தான். “   என குறும்பு சிரிப்புடன் ஸ்ரீ சொல்ல,
அவள் போட்ட முதல் பாலிலே டக் அவுட் ஆனா வாசுவோ,  இப்படி அப்படி என்று இல்லை அந்த முறை முறைத்தான் ஸ்ரீபத்மாவை.
‘ சிங்கத்த அசிங்கப்படுதியாச்சு…ஹே டன் டனக்கா டனக்கு நக்கா…‘ என அத்தனை அடக்கபட்ட சிரிப்பு ஸ்ரீயின் உதட்டில், அதை அப்படியே அவள் குறும்பு விழிகள் பிரதிபலிக்க, காண்டாகி போனவன் எழுந்தே விட்டான். 
‘ போய்யா வீட்ல என்னடானா உன் தங்கச்சி முறைக்கிறா, நீ இங்க முறைகிற . சரியான முறப்புக்குனு பொறந்த குடும்பமா இருக்கிங்களே ‘ என நினைத்தவள், ‘ இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்ல, I need more emotion ‘ என பாரதி ராஜாவாய் நினைத்தவள், அவளும் எழுந்தாள். 
அதற்குள் மணியும் பார்சலோடு வந்து விட்டான்.
அவள் அதை ஸ்ரீயிடம் நீட்ட, ஸ்ரீயோ மணியிடம் மிக சீரியஸ்ஸாக 
“ அமெளண்ட் எவ்ளோனு சொல்லுங்க “ வேண்டுமென்றே கேட்டாள்.
‘ சொல்ல முடியாது போடி ‘ என சொல்ல வேண்டும் போல் இருந்தது வாசுவிற்கு. 
அப்பாவியாய் மணி வாசுவின் முகம் பார்க்க, சொல்லாதே என்ற செய்தியை வாசுவின் கண்கள் நன்றாக எடுத்துக்காட்ட, 
மணி மீண்டும் அப்பாவியாய் ஸ்ரீயை பார்த்தான்.
“ இப்படி தான் கஸ்டமர்ஸ் கேள்வி கேட்ட சொல்லமா நிப்பிங்களா. எவ்ளோ ஆச்சு. இல்லைனா நான் கோதண்டம் மாமாக்கு ஃபோன் பண்றேன். 
என்ன உங்க நம்ப வீட்டு ஹோட்டல காசே வாங்கமா ப்ரீ சர்வீஸ் பண்றாங்கனு கேட்கிறேன். “ விட்டால் அவரை மொபிலில் அழைத்து விடுவேன் என்ற தோரணயில் என மொபைலை எடுக்க போனாள் ஸ்ரீ.
அவளுக்கு தெரியும் கோதண்டத்திற்கும் வாசுவிற்கும் முட்டும் என்று, ஆனால் எந்த அளவு முட்டும் என்று தெரியாது. 
இதே வேற வேற பெயரை சொன்னால் ‘ சொல்லிக்கோ போ ‘ என்று விடுவான் என நிமிடத்தில் கணித்தவள், இப்படி கேட்டிருந்தாள்.
அதை பார்த்து பதட்டமான மணியோ, “ அப்டிலாம் பண்ணாதிங்க. 125 ரூபாய்  ஆச்சு. “
“ அவ்ளோ தான. “
“ ஆமா அண்ணி. “ என பயத்தில் இவளை அண்ணி என அழைத்து விட்டான். அவனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
வாசு இவள் இப்படி ஆட்டம் காட்டவும்,  நன்றாக ஊருகாய் இல்லாமலே இவ்வளவோ பேச்சுகளிலே பி‌பி ஏறி போய் நின்றிருந்தான். 
இத்தனை நடக்க ஹோட்டலில் ஆளே இல்லை இப்போது. 
எப்போதோ இவர்களின் பேச்சியின் இடயே அங்கே இருந்த ஒரு குடும்பமும் சாப்பிட்டு கிளம்பியது, இன்னும் இருந்த சிலரும் மொத்தமாய் சாப்பிட்டு சென்றிருந்தனர். அதையெல்லாம் கவனித்து தான் பஞ்சாயத்தை கூட்டினாள் ஸ்ரீ. 
மணிக்கும் வாசுவிற்கு இதெல்லாம் கவனத்திலே இல்லை. இவள் தான் அவர்களை கவனிக்கவே விடவில்லையே. 
“ என் கைல இப்போ காசு இல்ல எங்க ஃபேமிலில யார் இப்போ வந்து பில் செட்டில் பண்ணாலும் போதும் தானே. “ முறைத்து வினவினாள் மணியிடம்.
பயந்தே விட்டான் மணி, ஏதோ இவர்கள் இருவருக்கும் ஏதோ சண்டை என நினைத்திருந்தான். 
“ போதும் அண்ணி. “ மறுமுறையும் உளறி கொட்டினான்.
“ அப்போ உங்க அண்ணா கிட்டவே வாங்கிக்கோங்க. நான் ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தான் அமெளண்ட் கேட்டேன். “ என வாசுவை கை காட்டி அசால்டாய் சொல்லி பார்சலை எடுத்து கிளம்பியே விட்டாள்.
மணிக்கு இன்னும் புரியவில்லை. அவன் வாசுவை பார்த்தான். 
உச்ச பச்ச பி‌பி ஏறி வாசுவோ அவளை ரெண்டு திட்டவது திட்ட வேண்டும் என மட மடவென்று  வெளியே வந்தான். அவள் கடைக்கு மிக அருகில் தான் இருந்தாள். 
வெளியே மக்கள் பஸ் ஸ்டாப்பிற்கு போவதும், வருவதுமாய் இருந்தனர். அதை பார்த்தவன்  கடையை விட்டு வெளி வந்தும் அவளை பின் தொடர முடியா நிலை .
இவன் கோபத்தை கட்டுபடுத்தி அவளை பார்க்க, சிறிது தூரம் நடந்துகொண்டே லேசாக திரும்பி பார்த்தாள், சிங்கமோ சீற்றத்தோடு நின்றிருப்பதை பார்த்து, வினாடிக்கு குறைவான நேரத்தில். அவளது மையிட்ட கண்கள் இரண்டும் லேசாக சிமிட்ட, குறும்போடு புன்னகை பூத்தது ஸ்ரீயின் உதடு. 
சரியாக கடையின் உள்ளே இருந்து கரோக்கி ஒலித்தது….
மாமா டவுசர் கலன்டுச்சு…
ஆமா மாமா டவுசர் அவுந்துச்சு…
ஹேய்…மாமா…
  

Advertisement