Advertisement

         வாசு ஒரு நிமிடம் ஸ்ரீயின் குறும்பு புன்னகையை பார்த்தவன், உடனே பின்கட்டை நோக்கி சென்று விட்டான்.
‘என்ன இவ நம்பள இப்டி பாக்குறா. வீட்ல எல்லாரையும் வச்சிட்டு பாக்குறா, எப்படி சமாளிக்கறது. 
தவறி கூட நம்ப இப்போ அவ கிட்ட எதுவும் சொல்ல கூடாது. ‘ என யோசித்து கொண்டிருந்தவனை ஆச்சியின் குரல் அழைத்தது. இவன் உள்ளே வரும் போதே ஆச்சி மற்றவர் கவனிக்கா வகையில் கருவாட்டு குழம்பு சோற்றுருண்டை நான்கை அவசரமாக வாசுவிற்கு ஊட்டி, அவனுடன் உள்ளே வந்தார்.
உள்ளே சென்று பார்த்தால், வயல் வேலை முடிந்து கோதண்டமும் வந்திருந்தார். அவர் சாப்பிட்டு முடித்ததும் தான் இவன் சாப்பிடுவான் இல்லையென்றால் ஏதாவது இவனை பேசி வைப்பார். அதனால் பேரனுக்கு முதலிலயே ஊட்டிவிட்டார்.
எப்போதும் இப்படி தான். பேரன் பசியோடு இருப்பதை பொறுக்க மாட்டார் ஆச்சி. இவனும் மதியம் மட்டும் தான் நிம்மதியாய் வீட்டில் சாப்பிடுவான். அதுவும் கோதண்டம் சாப்பிடும் நேரம் கணக்கிட்டுத்தான் பொறுமையாக தான் வீட்டிற்கு வருவான். 
இன்று ஸ்ரீ இருந்ததால், கோதண்டம் வாயை சாப்பிடுவதற்கு மட்டுமே உபயோகித்தார். ஸ்ரீயிடம் நன்றாக தான் பேசுவார். அதனால் அவ்வப்போது அவளது நலம் விசாரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இவன் அமைதியாக உள்ளே வந்தவன் அவர்கள் எல்லாரும் கீழே உட்கார, இவன் சோபாவில் அமர்ந்து டி‌வியில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தான். அடுத்த பந்தி எப்போதடா வரும் என அமர்ந்திருந்தான்.
ஹாலின் நடுவில் ஆச்சி தாத்தாவிற்கும் சீதாவும் கோதண்டதிற்கும் பரிமாற, ஸ்ரீ சற்று தள்ளி சுவற்றில் சாய்த்து கால்களை கைகளால் கட்டி அமர்ந்திருந்தாள்.  
இவன் மட்டும் தனியாக இருப்பதை நான்கு கண்கள் கவனித்தது. 
ஆச்சி, பேரன் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறானே என்று தவிப்பாய் பார்க்க, ஸ்ரீயோ கண்களால் இவனிடம் கபடி ஆடி கொண்டிருந்தாள். 
ஒரு பேச்சிற்கு தான் இவன் டிவி பார்பது போல் அமர்ந்திருந்தான். ஆனால் கவனம் ஸ்ரீயின் மேல் இருந்தது. அவள் கண்கள் செய்யும் அத்தனையும் இவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
கோதண்டமும் சிவசு தாத்தாவும் சாப்பிட்டு எழுந்து விட்டனர். சிவசு தாத்தா காற்றாட உட்கார பேப்பரை தூக்கி கொண்டு வெளி திண்ணைக்கும், கோதண்டம் அவர் அறைக்கும் இளைப்பாற சென்று விட்டனர்.
அடுத்தது ஆச்சியும் வாசுவும் சேர்ந்து அமர, ஸ்ரீ மட மட வென எழுந்தவள் அவளே உள்ளே சென்று ஒரு இலையை எடுத்து கொண்டு வாசுவிற்கு சற்று இடைவெளி விட்டு ஏதோ மும்மரமாய் டி‌வி பார்ப்பது போல் அமர்ந்து விட்டாள். யாரும் தவறாகவே எடுக்கவேவில்லை. 
தேனுவும் இவளும் இருந்த நாட்களில் இப்படி தான் இருவரும் டி‌வியை பார்த்து கொண்டே பேசி கொண்டு சாப்பிடுவர். 
“ ஏய் குட்டி சாப்பிடம் போது டி‌வி பார்க்காதனு எத்தன தடவ சொல்றது. சீதா டி‌விய அமர்த்து. “ என ஆச்சி மருமகளை ஏவ,
“ ஆச்சி வீட்ல இந்த டைம்ல அம்மா சீரியல் பார்பாங்க என்னை வேற பாக்கவே விடமாட்டாங்க. நான் இங்க வந்தா தான் இந்த டைம்ல ம்யூசிக் சேனலே பாக்குறேன். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பார்துக்குறேன்.
அத்த ஆஃப் பண்ணாதிங்க. நான் உங்களுக்கு மருதாணி அரச்சு தறேன். “ என அச்சியிடம் ஆரம்பித்து அத்தையிடம் டீல் பேசினாள்.
வாசு அச்சியின் அருகில் அமர்ந்திருந்தவனின் உதட்டில் மெல்லியே புன்னகை. 
“அப்போ அரச்சு தந்துட்டு தான் நீ வீட்டுக்கு போகணும் சொல்லிட்டேன். “ என சீதா உடனே டீல்லுக்கு ஒத்துக்கொள்ள, ஸ்ரீயை ஆச்சி முறைக்க, ஸ்ரீ பதிலுக்கு அச்சியை வெற்றி பார்வை பார்த்து டி‌வியை நோக்கி திரும்பி விட்டாள்.
ஆச்சி பேரனுக்காக பார்த்துப் பார்த்து கருவாடை அள்ளி வைத்தார். அதை பார்த்து எவ்வளவு வைக்கிறார் என ஸ்ரீ ஒர கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பின்னாளில் இவளும் அதே போல் அவனுக்கு பரிமாற வேண்டும் என ஆசை. 
அவளுக்கு ஒரே யோசனை, அவளுக்கு இதெல்லாம் செய்ய தெரியாது. அவளாக விரும்பினால் எப்போதாவது குக்கீஸ், கேக் அப்படி ஏதாவது செய்து பார்ப்பாள், அவ்வளவே, இங்கே இவள் ஊருக்கே வந்தாலும் வெளியே தேனுவுடன் ஊர் சுற்ற கிளம்பி விடுவாள், ஊர் சுற்ற அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு.  
‘ சரி விடு பார்த்துக்கலாம். பொறுமையா கத்துக்கலாம், இவன் முதல நம்பகிட்ட பேசட்டும். எப்டியோ மாமஸ் என்ன மைண்ட் செட்ல இருக்குனு தெரிஞ்சு போச்சு. இருந்தாலும் என்ன தான் சொல்றான் பாக்கலாம். “ என அவனை ஒர கண்ணால் பார்த்தாள். 
இதற்கு முன்பும் ஸ்ரீ இந்த வீட்டில் வந்திருக்கிறாள், இவனும் சகஜமாய் அவளுடன் பேசியிருக்கிறான். அப்போதெல்லாம் இப்படி இருந்ததே இல்லை. ஆச்சி, சீதா, கோதண்டம், தாத்தா என அவள் கூட்டம் தனி .  தேனு இவளும் தான் ஒட்டி கொண்டு திரிவர். 
வாசுவிடம் பெரிதாக உரிமை பேச்செல்லாம் இருக்காது, ஆனால் இவனிடம் மிக மரியாதையாக நடப்பாள் ஸ்ரீ.
இப்போது வாசு வேறு எண்ணத்தில் இருந்தான்.
ஆனால் இப்போது இவனுக்கு நேசம் இருந்தும் சொல்ல முடியா நிலைமை. அதனால் எதையும் காட்டி கொள்ள கூடாது என்ற முடிவில் இருந்தான்.  
ஆனால் இப்போது இவள் அருகில் அமர்ந்து சாப்பிடவே அவள் கண்கள் இவனிடம் ஏதோ கூறவருவது இருக்க, இவளை ஒரே முறை திரும்பி பார்த்தான்.
சரியாக அவள் கண்களும் அவன் கண்களை சந்தித்தது. இவள் சாப்பிட்டு முடித்தும் துவையலை மட்டும் கையில் வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். இவன் இவளை பார்த்ததும், ‘ வேணுமா ‘ என்பது போல் குறும்பாக துவையலுடன் கையை காட்டவும், 
வாசு சுற்றி பார்த்தான், ஆச்சி பிஸியாக சாப்பிட, அவருக்கு சீதா பரிமாற என யாரும் இவர்களை பார்க்கவில்லை. மூச்சை இழுத்துவிட்டவன், இவளை அழுத்தமாக முறைக்க, இவள் அவனை கண்டு கொள்ளவில்லை, இவள் புன்னகையுடன் டி‌வியின் பக்கம் திரும்பிவிட்டாள்.
‘ இவ என்ன இப்படி பண்ற, நம்ப இன்னும் பதிலே சொல்லல அதுக்குள்ள ஓவர் சேட்டையா இருக்கே. இப்படியெல்லாம் பன்றவளே இல்லையே.
சீக்கிரமா கடைக்கு கிளம்பிடணும். ‘ என நினைத்தவன், சாப்பிட்டு முடித்து கை கழுவ பின் கட்டிற்கு செல்ல, இவளும் அவசரமாக இலையில்  வைத்திருந்த துவையலை முடித்தவள், எழுந்து வாசுவின் பின்னே ஆட்டுக்குட்டியை போல் பின் கட்டிற்கு சென்றாள். 
‘ அய்யோ பின்னாடியே வாராளே. என்ன செய்யபோறானு தெரியலையே. அப்பா வேற வீட்ல இருக்காங்க. ‘ என இவன் இன்னும் அவசரமாய் பின்கட்டுக்கு செல்ல, இவளும் அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவன் பின்னே சென்றாள்.
இவன் அவசரமாக கை கழுவி திரும்ப, இவள் இலையை போடும் இடத்தில் போட்டு விட்டு, இவனிடம் கை கழுவ தண்ணி உற்றுமாறு உரிமையாக கை நீட்டி கொண்டு சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள்.
அவளை முறைத்தவன் ஒன்றும் சொல்லாமல் மக்கை அவள் கொடுத்துவிட்டு நகர பார்க்க, அவசரமாக கை கழுவியவள், அவனுக்கு முன் சென்று கை நீட்டி தடுத்தவள்,
“ ஒரு நிமிஷம் மாமா. “
இவன் என்ன என்பது போல் பார்க்க,
“ நீங்க டிசைட் பண்ணிட்டிங்களா. “ இவள் சீரியஸ்சாக முகத்தை வைத்து கேட்க,
அவனும் சீரியஸ்சாக முகத்தை வைத்து, “ இன்னும் டிசைட் பண்ணல. எனக்கு டைம் வேணும். இப்போலாம் எதுவும் சொல்ல முடியாது. 
அப்றோம் இப்படி எல்லாரும் இருக்கும் போது இப்படி பண்ணாத. “ என சாதாரணமாக ஆரம்பித்து இவன் கடிய,
ஸ்ரீ குறும்புடன், “ எப்படி பண்ணேன். “ என கேட்க,
காண்டாகி போன வாசு, “ கொழுப்பா உனக்கு, அப்பா வீட்ல இருக்காங்க, அவங்க இருக்கும் போததே அப்படி பாக்குற. 
யாராவது பார்த்தாங்கன்னா என்ன நினைப்பாங்க. 
எனக்கு சீரியஸா டிசைட் பண்ண ஐஞ்சு மாசமாவது ஆகும். எனக்கு நிறையா கமிட்மெண்ட்ஸ் இருக்கு, அதெல்லாம் முடிக்கணும். அப்றோம் தான் எதுவும் சொல்ல முடியும். 
அது வரைக்கும் உன் சேட்டையெல்லாம் முட்ட கட்டி வை.” என அழுத்தமாக கறாராக சொன்னான். 
அவனை கண்கள் சுருங்க பார்த்த ஸ்ரீ ‘ அப்போ நீ  விஷயத்த ஓபன் பண்ண மாட்ட’  என நினைத்தவள்,
வாசுவை சீரியசாக உற்று நோக்கி, அவன் அருகே மெல்ல வந்தாள்.
இவன் அவள் வருவதை பார்த்து வாசு ஓரடி பின்னே வைத்தான்.
இவனுக்கு மிக அருகில் வந்தவள், “ நீங்க உங்க வீட்டுக்கு பின்னாடி வெண்டைகாய் செடி வச்சிருக்கிங்க தான “
எதற்கு சம்பந்தம் இல்லாமல் கேட்கிறாள் என புரியாமல், யாராவது அங்கே வந்துவிடுவாரோ என பின்கட்டின் வாயிலை பார்த்துக்கொண்டே 
“ ஆமா “ என்றான்.
“ எப்போ காய் விளையும் “ 
‘ இப்போ எதுக்கு இவ என்ன லூசு மாதிரி கேக்குற’ என நினைத்தவன், “ அம்பது நாள் பக்கம் நல்லா விளஞ்சு காய் விட ஆரம்பிச்சிடும். வீட்ல யூஸ் பண்ணிக்கலாம் .“ என இவன் தேர்ந்த விவசாயியாய் விளக்கம் குடுக்க,  
“அது வரைக்கும் என்ன பண்ணுவிங்க. “
“ என்ன பண்றது, செடியே நல்லா பார்த்துக்கணும். சரியா மாட்டுசானம் உரம் வைக்கணும். கரெக்ட்டா தண்ணி விடணும், ஆடு மாடு நெருங்காம பார்த்துக்கணும். முத அருவடையிலே கொஞ்சம் தான் கிடைக்கும் அப்புறம் அடுத்தடுத்து நிறையா கிடைக்கும். வெளியே பெருசா வெண்டைகாய் வாங்க தேவையே இருக்காது. ஏன் உனக்கு வேணுமா. நான் நாளைக்கு வீட்டுக்கு கொண்டு வந்து தரேன் ” என இவன் சின்சியராய் செடி வளர்ப்பில் மூழ்கி விட்டான்.  
“ அதான் மாமா நானும் சொல்றேன். எப்படியும் அம்பது நாள் அப்றோம் காய் விளையும்னு தெரிஞ்சு அதுக்கு இப்போ இருந்தே தண்ணி விடுறிங்க.   
சோ நீங்க யோசிச்சு உங்க முடிவ சொல்ல ஐஞ்சு மாசம் ஆகும். 
அது வரைக்கும் நான் என் காதல் பயிர நான் வளக்குறேன். 
ஏன்னா நீங்க பாக்க வேற அழகா மொரட்டு சிங்கிளளா இருக்கிங்களா, யாராவது உங்க பக்கம் வந்து உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்ட, நான் என்ன பண்ணுவேன்.  
மீ பாவம்ல. 
அதனால நம்ப இனிமே அடிக்கடி மீட் பண்ணுவோம்னு நினைக்கிறேன். 
அப்போ, அய்யோ பாக்குறாளே, பேசுறாளேனு பதற கூடாது. சரியா. “ என கொஞ்சம் கூட சிரிக்காமல் சீரியஸாக சொல்லி நில்லாமல் உள்ளே சென்று விட்டாள்.
ஸ்ரீயின் இத்தனை உரிமையான பேச்சை கேட்டு வாசுவிற்கு அதிர்ந்து போய் உள்ளே செல்லும் அவளேயே பார்த்திருந்தான்.  
இன்று ஒரு நாளே தாங்கவில்லையே, இனியும் சந்திக்க வேண்டுமா என தோன்ற தலையை கவிழ்த்து அங்கே உள்ள திண்டில் அமர்ந்து விட்டான். 
‘ இப்படி மனுசன பாட படுத்துறாளே கிறுக்கி. இவ்ளோ நேரம் இங்கே பேசுனத வீட்ல யாராவது பார்த்த என்ன நினைப்பாங்க. 
நம்ப டைம் கேட்டும் இவ்ளோ கான்ஃபிடெண்ட் பேசுறா. ஏதாவது கெஸ் பண்ணிருப்பாளோ.  
நம்ப அம்மாவோட ஹஸ்பண்ட் நம்பள கெடா வெட்டி பிரியாணி போடாம இவ அடங்க மாட்ட போல இருக்கே.
பாக்க முயகுட்டி மாதிரி இருந்துக்கிட்டு பண்றதெல்லாம் பூனகுட்டி சேட்ட‘ என நினைத்தவன் கொஞ்சம் நிதானித்து,
 ‘ சரி எது வந்தாலும் பார்த்துக்கலாம் விடு ‘ என ஒருவாறு மனதை தேற்றி எழுந்து நின்றான். 
கண்களை மூடி ஹூஃப் என மூச்சை விட்டவன், சிறிது ஆசுவாசம் கொள்ள பின்னந்தலையை கோதிக்கொண்டே அங்கயே நடந்தான். 
அதற்குள் சீதாவும் அச்சியும் கை கழுவி வர, அமைதியாக திண்டில் உட்கார்ந்து விட்டான். அவன் உடல் மொழியில் மாற்றம் தெரிந்தால் உடனே சீதா கண்டு பிடித்து விடுவார், ஆச்சி தான் அப்பாவி, இவன் என்ன சொன்னாலும் நம்புவார். 
அவர்கள் இருவரும் கை கழுவி விட்டு, சுற்றி வளர்ந்து இருந்த மருதாணி  செடியை நோக்கி நகர்ந்து, அதில் இருந்த இலைகளை பறித்து முத்தனையில் சேகரித்து கொண்டிருந்தனர்.
‘ இப்போ இவங்க இடத்த காலி பண்ண மாட்டாங்க போல இருக்கே. ‘ என எழுந்தவன், வேட்டியை மடித்துக் கட்டி நிமிர்ந்தான். 
சரியாக இவன் முகம் அங்கே மாட்டியிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் விழ, கொஞ்சம் அதன் அருகே சென்றான்.
‘ அம்புட்டு அழகாவா இருக்கோம் நம்ப.
இத்தன நாள இது தெரியாம போச்சே. ‘
என எண்ண சிரிப்பு கூட வந்தது. 
நேர்கொண்ட பார்வையை சுமக்கும் விழிகள், ஆண்களுக்கு புருவம் இவ்வளவோ அழகாய் இருக்குமா என தெரியவில்லை, அவனுக்கு அப்படி தான் இருந்தது. இரண்டு நாள் மழிக்காத தாடி, அடர்ந்த மீசை, கலைந்த தலைமுடி என இவனை கொஞ்சம் முரட்டு தனமாய் காட்ட, மீசையை முறுக்கி வேறு விட்டான்.
வாசு இப்படியெல்லாம் இத்தனை நாள் அவனையே பார்த்ததில்லை. 
கண்ணாடி அங்கே இருப்பது இவன் அவசரமாய் முக சவரம் செய்ய மட்டும் தான். பவுடர் போடுவது, தலை வாருவது என நின்று பொறுமையாக கூட செய்ய மாட்டான். எல்லாம் சில நிமிடங்களில் நடந்தேறும். அவனுக்கு அதற்கும் நேரமும் இருந்ததில்லை.
இன்று தான் இவனையே நிதானமாகக் கவனிக்கிறான். 
அப்படியே அதில் இடம் வலம் என சிறிதாக தலையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான். 
‘ போதும் டா. அடங்கு ‘ என அவனுக்கே தோன்றியதோ, பார்வையை அருகே திருபினான். அவன் விழிகள் பெரிதாக உயர்ந்தன.
பின்கட்டின் நுழைவாயிலில் சிறிது மறைவாக நின்று ஸ்ரீ இத்தனை நேரம் உதட்டில் உறைந்த புன்னகையுடன் இவனை தான்  பார்த்துக்கொண்டிருப்பாள் போல, இவன் அவளை பார்த்ததும் ‘சூப்பர்’ என்பது போல விரல்களை வைத்து காட்டினாள்.
‘ பார்த்துட்டாளா. ச்ச ‘ என தோன்ற கண்களை இறுக்கி மூடி தலையை கோதிக்கொண்டே வேறு புறம் திரும்பினான். 
மறைவில் இருந்து வெளியே வந்த ஸ்ரீ, 
“ ஆச்சி, அத்த சீக்கிரம் மருதாணி பறிச்சு அரச்சு வைங்க, நா அப்றோம் வந்து வாங்கிக்குறேன். “
“ வந்தேன் வையி அப்படியே டங்கு டங்குன ஆடுர உன் குதிர வால அப்டியே கொத்தா புடுச்சிபுடுவேன் பார்த்துக்க , நீ சீதாட்டா மருதாணி அரச்சு தறேன்னுட்டு, இப்போ வீட்டுக்கு ஓடுறியா. 
ஒழுங்கா அரச்சுபுட்டு தான் கிளம்புர. “ என ஆச்சி பஞ்சாயத்து வைக்க,
“ அது அப்போ, இது இப்போ…நாங்கெல்லாம் ரொம்ப பிஸி. 
நான் போயி தான் திருச்சில ஒரு துனி கடைய ஓபன் பண்ணனும். எனக்காக பிரஸ்லாம் வைட் பண்றாங்க.
எனக்கு ஃபோன் மேல ஃபோன் வந்துட்டு இருக்கு. நான் கிளம்புறேன் அத்த. பை. “ என்று பஞ்சாயதிற்கு தீர்ப்பு சொல்லி வாசுவின் கொழுக்கு மொழுக்கு முயல் குட்டி ஓட ஆரம்பித்தது. 
“ மருதாணி அரைக்காம ஓடுது பாரு. மருதானிய வாங்க வா, அப்போ பேசிக்கிறேன். “ என்ற சீதா சத்தமிட்டது ஸ்ரீக்கு கண்டிப்பாக கேட்டிருக்கும்.
‘ என்ன வாய் ராங்கி உனக்கு ‘ என எண்ணியவன் ஓடும் அவளைத்தான் புன்னகையுடன் பார்த்திருந்தான் வாசு. 
  
     
       
 

Advertisement