Advertisement

      ஸ்ரீ ஆவளே உருவாய் அவன் மொபிலை பார்க்க , மொபைல் கொஞ்சம் லேட் பிக் அப் போல, சற்று நேரம் காக்க வைத்தே 
Raan Kie
சத்தமில்லாமல் ஒளிர்ந்தது.
இவளுக்கு புரியவில்லை, நம் எண்ணா அல்லது வேறு யாராவத என இவளின் மொபிலை காதில் வைத்து பார்க்க, இவளின் அழைப்பு என உறுதியானது. 
ஆனால் இவளுக்கு புரியவில்லை. 
ஸ்ரீயின் கண்கள் சுருங்க யோசித்து, தைரியம் வரவைத்து கொண்டு “ ஆச்சி ஆச்சி யாரோ கூப்பிடுறாங்க. “ என இவள் கத்த, ஆச்சி வெளியே வந்தவர் அருகே வந்து அந்த பெயரை பார்த்துவிட்டு,
“ கன்னு குட்டி இது ராசாவோட சிங்கப்பூர்ல அவனுக்கு மேல இருந்த முதலாளியாம். 
பேரு கூட எப்படி இருக்கு பாறேன்.
இந்த ஃபோன் மட்டும் வந்தா என்ன எடுக்க கூடாதுனு சொல்லும். அதனால் நீயும் எடுக்காத குட்டி. “ என அப்பாவியாய் அவர் சொல்லிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்து விட்டார்.
இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ ஒரு வேல என்ன அவாய்ட் செய்றானோ ‘ என கலங்கியவள், அவன் மொபிலை எடுத்து சைலன்ட் மோடில் இருந்து மாற்றி, இனிமேல் எது வந்தாலும், அச்சியின் காதிலே விழட்டும், நம் இதன் அருகில் இருக்க வேண்டாம் என சோர்ந்து போய், சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.
மனதின் எதிர்பார்பெல்லாம் மாயமாய் மறைவது போல் இருக்கு, இதற்கு மேல் இவன் மொபைல் எண் கூட நம்மிடம் வேண்டாம் என முடிவெடுத்தவள், அவனது எண்ணை நீக்கும் பொருட்டு மொபிலை எடுத்து அழிக்க பார்த்தாள், ஆனால் துவையலை அறைத்து முடித்து வெளியே வந்த ஆச்சி படாரென அவள் மொபிலை வாங்கி சோபாவில் வைத்து அவளை காதை பிடித்து, 
“ உன்ன என்ன சொன்னேன். அந்த ஃபோன்ல யாராவது கூப்பிட்டா சொல்ல சொன்னேன்ல, நீ என்ன இங்க உட்காந்து உன் ஃபோன்ல விளையாடுற. 
அவனுக்கு பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் ஃபோன் பண்ணுவாங்க.
ஒரு பொறுப்ப குடுத்தா ஒழுங்கா பாரு குட்டி “ என தலையில் குட்டி விட்டு, பின் பக்கம் வாழை இலை பறிக்க சென்றார்.
‘ அவன் பெரிய இவன். அவன் என்னையே அவாய்ட் பண்றான்.
இவன் டப்பா  ஃபோன்க்கு நான் காவலா. 
அதெல்லாம் முடியாது சுண்டலி ‘ என கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் செய்ய முடியாதே.
எல்லாம் ஒரு சில வினாடிகளே,
சரியாக அந்த நேரம் வாசுவின் மொபைல் அடிக்க,
‘ யார்ரா இவன் என் பீலிங்க்ஸ் தெரியாம டார்ச்சர் செய்யறது. ‘ என இவள் காண்டாகி தங் தங் என வாசுவின் மொபைல் அருகில் சென்று பார்த்தாள். 
அவள் எண் தான். 
ஆஆஆ என பார்த்தவள். இது எப்படி என யோசிக்க,
ஆச்சி படாரென இவள் மொபிலை வாங்கியபோது அவர் கை பட்டு வாசுவின் எண்ணிற்கு அழைப்பு சென்றிருக்க, லேட் பிக் அப் ஆனா அவன் மொபைல் இப்போது தான்
Raan kie
என காண்பித்து,
பொறுமையாக,
என்னானதோ எதனாதோ ஒன்னும் புரியாமலே
அல்லாடுறேன் உன்னால நான் சொல்ல தெரியாமலே 
ஓறங்கமா கிடக்கேனே நீ என்னத்துக்கு கண்ணுகுள்ள நொழஞ்ச
ஐயோ பாட படுத்துறியே 
பாயா சுருட்டுறியே 
அடி ராங்கி என் ராங்கி ராங்கி 
நீ போற என் உசுர வாங்கி 
என கரோக்கி இசைத்தது. 
அதை பார்த்து கொண்டு இருந்தவள் எப்படி உணர்ந்தாள் என தெரியவில்லை, கண்களில் நீர் கட்டியது. ஒரு நிமிடம் எல்லாம் கிரக்கிக்க இவளுக்கு நேரம் பிடித்தது.
தாத்தா சோபாவில் அமர்த்து  டிவியில் மூழ்கி இருந்தார் . இவள் சோபா பின் சற்று தள்ளி நின்றதால் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை.
இவள் நின்றபடி நிற்க, அதற்குள் ஆச்சி இலையை எடுத்து உள்ளே வந்தவர் இவள் இப்படி நிற்பதை பார்த்து, 
“ அச்சோ என் சாமி என்ன கண்ணு அச்சு. 
ஏன் சாமி அழுகுற. இவ்ளோ நேரம் நல்லா தான இருந்த, என்ன கண்ணு அச்சு. “ என இவளிடம் ஆரம்பித்தவர், சிவசு தாத்தாவிடம் தவிப்போடு பாய்ந்தார், 
“ ஏன் மாமா இங்க தான இருக்கிங்க.  டி‌விக்குள்ளயே போய் உட்காந்துக்குவிங்களா.
புள்ள கண்ணு கலங்கி நிக்குது அது கூட கவனிக்காம என்ன அப்படி டி‌வி வேண்டி கிடக்கு. “ என அவரிடம் காய்ந்தவர், ஸ்ரீயிடம் திரும்ப, சிவசு தாத்தாவும் என்னமோ ஏதோவென பரபரத்து எழுந்து ஸ்ரீயிடம் வந்தார்.
அதற்குள் ஸ்ரீ சுற்றம் உறைக்க, தன்னுள் இருந்து மீண்ட ஸ்ரீ காபார் என யோசிக்க, 
சுந்தரி அச்சியோ இரு கையையும் உதற ஆரம்பிதார், “அய்யோ என் பேத்திக்கு என்னமோ ஆயி போச்சே. 
ஒன்னும் பேச மாட்டிங்குதே. சீதா…” என இவர் சீதாவை அழைத்தார். 
சீதா குளியல் முடித்து விட்டாரா என பார்க்க பின் கட்டிற்கு ஆச்சி செல்ல, அங்கே வாசு உடை மாற்றி பனியனும் வேட்டி மட்டும் அணிந்து தலை துவட்டி நின்றிருந்தான்.  
“ ராசா “ என பதறி வாசுவை அழைத்தார். 
இவர் அழைத்த தொனியை பார்த்து என்னமோ ஏதோவென அவன் இவர் அருகில் வர, 
“ என்ன ஆச்சி. என்னாச்சு. “
“ ராசா நம்ப பத்மா குட்டி நம்ப வீட்டுக்கு வந்து இவ்ளோ நேரம் நல்லா தான் இருந்துச்சு. இப்போ அழுதுட்டு நிக்குது. 
என்னாச்சுனு தெரியல ராசா. எனக்கு பயமா இருக்கு. “ என இவனிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போது, சீதாவும் குளியல் முடிந்து வந்து விட்டார். 
சுந்தரி ஆச்சி அவரிடமும் அலபாறையை கூட்ட, சுந்தரி ஆச்சி, சீதா, வாசு என ஒரு படையே அவசரமாக வீட்டின் உள்ளே நுழைந்தது. 
அங்கே பார்த்தால், சோபாவில் அமர்ந்து சிவசு தாத்தா ஸ்ரீபத்மாவின் கையில் வீட்டில் காய்ச்சிய மூலிகை எண்ணை விட்டு தேய்த்து கொண்டிருந்தார்.
இவர்கள் எல்லாம் ஸ்ரீயின் அருகே அடித்து பிடித்து நெருங்க, 
ஸ்ரீயோ அப்பாவியாய் முகத்தை வைத்து குனிந்திருந்தாள். 
சிவசு தாத்தா, “ புள்ள டான்ஸ் அடுனப்ப கைல இடுச்சிகிடுச்சாம்.” என பாவமாய் சொல்ல,
ஆச்சி, “ இத நான் கேட்டபோ சொல்றதுக்கு என்ன. நடு வீட்ல நின்னு பேக்கு மாதிரி பார்த்து கிட்டு நிக்கறது . 
கைய கொண்டா இங்க. “ என ஸ்ரீயிடம் வயலன்ஸ் காட்டினார்.
விட்டானே பார் என சிவசு தாத்தா, “ புள்ளயே எங்க சொல்ல விட்ட. அது சொல்றதுக்குள்ள ஊரயே கூட்டுறவ. “ என சுந்தரி ஆச்சி தாத்தவை திட்டியதற்கு நேரம் பார்த்து பதிலடி கொடுத்தார் தாத்தா.
அவரை முறைத்த ஆச்சி, ஸ்ரீயின் கையை பிடித்ததும்,
“எங்க சாமி இடுச்சிக்கிட்ட . ரொம்ப வலிக்குதா. அதுக்கு தான் ஜிங்கு ஜிங்குனு அடாதனு கத்துனே, காதுல வாங்குனியா…” என ஸ்ரீயை திட்டிக்கொண்டே சிவசு தாத்தா விட்ட இடத்தில் இருந்து ஆச்சி அவளுக்கு அழுத்தி கொடுத்தார்.
அட இவ்வளவோ தான என கண்ட சீதா, ஸ்ரீக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க சமையல் அறை சென்றார்.    
‘ இவ இடுச்சிக்கிட்டாளா,  இருக்காதே. 
அப்டியே இடுச்சிருந்தாலும் அந்த சுவத்துல ஏதாவது டேமேஜ் ஆயிருக்கானு பார்க்கணும்.     
ஏதோ நைஸ்ஸா வேலைய பார்த்துட்டு, அமைதியா ஸீன் போடுறா. என்ன பண்ணி வச்சிருக்கானு தெரிலயே. “ என அவள் அமைதியாய் உட்கார்ந்திருந்த தினுசை பார்த்த கணித்தான் . 
இதற்கு முன் இப்படி எல்லாம் உரிமையாக கூட நினைத்ததில்லை, ஆனால் என்று இவன் விருப்பத்தை சொல்ல கிளம்பினனோ, அப்போத்திருந்து இப்படி தான் சுற்றி கொண்டிருக்கிறான். 
தேனுவும் ஸ்ரீயும் சேர்ந்து ஆட்டம் போடும் காலத்தில் இருந்து இப்படி தான் ஏதாவது செய்து வைப்பாள். என்ன அவள் இப்போது கொச்சினிலிருபதால் இதெல்லாம் கொஞ்சம் குறைந்திருந்தது.  
அவளை சந்தேகமாக வாசு பார்க்க, அவ்வளவோ நேரம் நல்ல பிள்ளை போல் குனிந்திருந்தவள், மெல்ல நிமிர்ந்து வேறு யாரும் பார்க்கா வண்ணம் வாசுவை பார்த்து இரு கண்களையும் குறும்புடன் சிமிட்டி புன்னகைத்திருந்தாள் வாசுவின் ஸ்ரீ.
‘ அம்மாடி ’ என அதிர்ந்து நின்றிருந்தான் வாசுதேவன். 

Advertisement