Advertisement

           வாசு அவனது தோப்பில் இருக்கும் ஒற்றை அறை கொண்ட வீட்டில் இருக்கிறான். இங்கே ஒற்றை அறை என்றாலும் ஒரு அமைதி இங்கே அவனுக்கு கிடைக்கும். 
கோதண்டம் அவனை பேசியதும், சாப்பிடாமல் அப்படியே எழுந்தவன், கையில் கிடைத்த டி‌-ஷர்ட்டை உடுத்தி கொண்டு கையில் மொபைலை மட்டும் எடுத்து கொண்டு அச்சியிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். 
சீதா வாசுவை தடுக்கவில்லை அவருக்கு சிறு அதிர்ச்சி மட்டுமே, எப்போதும் இப்படி எல்லாம் எதிர்வினை ஆற்ற மாட்டான். கோதண்டம் எது சொன்னாலும் விளையாட்டாய் எதாவது பதில் கொடுப்பான். 
ஆனால் சுந்தரி ஆச்சி கோதண்டதைப் பேசி பேரனை தடுத்து பார்த்தார், வாசு நில்லாமல் சென்று விட்டான், போகும் போது கூட இட்லியை எடுத்து பாத்திராத்தில் பத்திரபடுத்தும்படி சுந்தரி அச்சியிடம் சொல்லிவிட்டு தான் சென்றான். வாசு உணவு வீனாவது என்றும் விரும்பமாட்டான், அது அதீத கோபமே வந்தாலும் சரி, உணவை கீழே போடுவது, இல்லை தூக்கி எறிவது அப்படியெல்லாம் செய்யமாட்டான்.
அவன் சாப்பிடும் உணவை அவனே பயிர் செய்பவன், அதனால் அதன் அருமை புரிந்தவன். ஒரு இட்லி நம் தட்டில் வைப்படுகிறது என்றால் அதில் பத்து பேரின் கண்களுக்கு தெரியாத உழைப்பும் இயற்கையின் கருணையும் அடங்கி இருக்கிறது. 
நிலத்தை களை எடுக்க, நிலத்தை உழ , விதை நெல் பாதுகாத்து விதைபவனுக்கு குடுக்க, அதை விதைக்க , இயற்கையின் கருணையால் மழை வந்து, அப்படியே வராவிட்டாலும் அடி மோட்டார் போட்டு தண்ணீர் இறைத்து ஊற்றி, அறுவடை செய்யும் முன் பூச்சி வராமல் பாத்துகாத்து, அறுவடை செய்ய, அறுவடை செய்த நெல்லை பத்திரபடுதி, அரிசி ஆலையில் கொடுத்து உமி பிரித்து வர, அதை கொள்முதல் செய்து கடைக்கு வர, அங்கே இருந்து  வீட்டிற்கு வந்து அம்மா சமைத்து குடுத்து, அதன் பின் தான் நம் தட்டிற்கே வருகிறது.  
அப்படி பட்ட உணவை ஒரே நிமிடதில் வீனாக்க வாசுவால் முடியாது. செய்யவும் மாட்டான்.       
இப்போது அவன் தோப்பில் இசையுடன் ஓர் இரவை களித்துகொண்டிருக்கிறான் .
நேற்று இரவும் தூக்கம் இல்லை, இன்று இரவும் பாதி பொழுது ஓடிவிட, எழுந்தமர்தவன், வெளியே நடக்க தொடங்கினான்.
ஸ்ரீபத்மாவின் நினைவு அவனை மிகவும் யோசிக்க வைத்தது. 
இவ்வளவு நாள் பெரிதாக எதுவும் இவன் சேர்த்துவைத்ததில்லை. சிங்கப்பூரிருந்த போதே சிவசு தாத்தாவின் நிலத்தை மீட்டிருந்தான்,  அங்கே இருந்தே சிவசு தாத்தாவிடம் பேசி பயிர் செய்ய ஆவன செய்திருந்தான். 
இங்கே வந்ததும் இந்த உணவகம் இருக்கும் இடம், அரிசி கடை இருக்கும் இடம் எல்லாம் வாங்கவே, அவன் பாதி சேமிப்பு அதில் சென்று விட்டது.
அதன் பிறகு உணவகம் கட்ட, பிறகு அரிசி கடை, அதனுடன் கூடிய இயற்கை விளை பொருட்களை விற்க என அமைக்க, அதன் பின் இவன் இந்த தொழில்களில் நிற்க என அதற்கே எவ்வளவோ முதலீடு செய்திருந்தான்.
இப்போது தான் காலூன்றிருக்கிறான். இனிமேல் தான் அதன் பலன் வரும். மற்றவை கூட தொழில் என்று விடலாம், ஆனால் விவசாயம் அப்படி அல்லவே. அது அவனது வாழ்க்கை, அவன் மிகவும் நேசித்து செய்கிறான். அதை வைத்து இவனை விமர்சனம் செய்தாலும் இவன் பதில் சொல்லுவான், ஆனால் நாளைக்கு இவனுக்கு வரப்போகும் மனைவியையும் சேர்த்தல்லவா பேசினார். 
இத்தனை நாட்களாக இவனுக்கு பெண் தேடினார் சுந்தரி ஆச்சி. 
இவனுக்கு சொத்து இருந்தும், மாப்பிள்ளை ஏதாவது வேலையில் இருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு தொழிலாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். பெண்களை பெற்றவர்களின் இயல்பான எதிர்பார்ப்பு. அதை வாசு தப்பா வெல்லலாம் எடுக்கவில்லை. அவனுக்கு புரிந்தது. அவன் தேனுவிற்கு பார்த்தாலும் இப்படி தானே எதிர்பார்ப்பான்.
ஆனால் வருபவர்கள் எல்லாம் இவனின் இயற்கை உணவகத்தை ஒரு தொழிலாக ஏற்க வில்லை. இதெல்லாம் ஒரு தொழிலா என்று தான் பார்த்திருந்தனர். 
சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு இப்படி விவசாயம் செய்பவன் என ஏதோ இவனை கஷ்டப்படும் ஜீவனை போல் பார்த்தனர். அல்லது இந்த உணவகத்தை மாற்றியாவது அமைக்க சொன்னார்கள்.
பெண் குடுக்கவில்லை யென்றாலும் பரவாயில்லை, ஆனால் இவன் மேல் இரக்கம் காட்டும் பாவனையில் பேச, இவனுக்கு பொங்கி கொண்டு வந்தது. இது போல் வரும் போதெல்லாம் கோதண்டம் வேறு இவனை பேசித் தீர்பார். அப்போதெல்லாம் இவன் அவர் பேச்சை கண்டுகொண்டதில்லை. 
மற்ற நேரமாய் இருந்திருந்தால் இதை இவ்வளவு யோசித்திருக்க மாட்டான். ஆனா இப்போது வாழ்க்கை முழுவதும் ஒருத்தியுடன் பயணிக்கும் முடிவு எடுத்திருக்கிறான். இன்னும் பிடித்ததேயே சொல்லவில்லை, அப்படியே சொன்னாலும் ஸ்ரீபத்மா காதலி ஆகிவிடுவாள், அப்போது பெரிதாக ஒன்றும் தெரியாது, ஆனால் திருமணம் நடந்து விட்டால், இவன் மனைவி. 
வாசுவை சொல்லும் சொற்கள் யாவும் திருமணம் பின்பு ஸ்ரீபத்மாவை தானே பாதிக்கும். இவனுக்கு என்ன பேச்சு கிடைத்தாலும் அவள் பாதிக்கப்படுவாள். அப்படி அவள் பாதிக்கப்படுவதில் வாசுவிற்கு விருப்பம் இல்லை.
இன்னும் ஐந்தே மாதங்கள், இவன் கனவு நிறைவேறிவிடும். இன்னும் நிறைய யோசித்து வைதிருக்கிறான். 
இப்போது இவன் நிலைமையை கீழாக விமர்சிக்கும் கோதண்டமே அப்போது நிச்சயமாக இவனை புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. 
இவ்வளவும் இருக்க இப்படி விருப்பத்தை சொல்ல பறக்கவிருந்தோமே, அதுவும் எத்தனை அனுபவங்கள் இருந்தும், ஒரு நிதானம் இல்லாமல் நடந்து விட்டோமே என்ற ஒரு எண்ணம் வர ஒரு முடிவுக்கு வந்தான் வாசு.
இவன் முதலில் ஒரு ஆளாய் அவன் குடும்பத்தின் முன்னே நிற்க வேண்டும். எப்படியும் ஸ்ரீ இவனுக்கு யோசிக்க நேரம் கொடுத்திருக்கிறாள். 
அப்படியே அவள் கேட்டாள் கூட டைம் வேண்டும் என சொல்லி விடுவோம். அது வரை இவன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்க வேண்டாம் , இன்னும் ஐந்து மாதங்கள் தானே, அப்படியே அதற்குள் ஸ்ரீக்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தால், அப்போது கார்த்தியிடம் சொல்லிகொள்ளலாம் என ஃபளான் செய்து விட்டான் வாசுதேவன்.
கொச்சின், 
இதோ மாதம் இறுதி வந்துவிட்டது, வாசுவிடம் ஸ்ரீ அவள் விருப்பத்தை சொல்லி ஒரு மாதம் கடந்து விட்டது. 
இன்றைக்கு திருச்சிக்கு கிளம்புகிறாள். ஒரு வாரம் முன்னே பதிவு செய்து விட்டாள். இப்போது வெள்ளி இரவு, ஏர்போர்ட் செல்ல வேண்டும், ஷங்கர் வந்து அழைத்து செல்வான்.
ஹாஸ்டலில் பேந்த பேந்த முழித்து கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரீ, ‘ இந்த சங்கு வேற அவனோட வருங்கால மச்சான்னு யாருனு கேட்டு படுத்துறானே. தெரியதானமா இவன் கிட்ட சொல்லிட்டோம். டார்ச்சர் பண்றான் ராஸ்கல் நம்பள.  
சரி இந்த ருத்து அண்ணிய வச்சி அவன சமாளிக்கலாம்னு பார்த்த, என்ன தான் அவங்கள பத்தி பேசுனாலும், ட்ரீமஸ்க்கு போய் அவங்க கூட சாங்க் எல்லாம் பாடிட்டு கரெக்ட்டா நம்ப விஷயத்துல வந்து நிக்குறான், பக்கி பய. இதுல ராஜமாத கிட்ட வேற மாட்டிவிட்டுட்டான், அவங்க டெய்லி அட்வைஸ போட்டு நம்பள ஒரு வழி ஆக்குறாங்க. இவன எப்படி சமாளிக்க போறேன்னு தெரிலையே ஆண்டவா’ என இவள் அமர்ந்திருந்தாள்.
ஸ்ரீபத்மா ஏர்போர்டில் ஷங்கரிடம் விஷயத்தை சொன்னதிலிருந்து இவள் கொச்சினுக்கு வந்தவுடன் ஷங்கரும், அபியும் இவளை பிடித்து கொண்டனர்.
ஷங்கர் இவள் யாரை விரும்புகிறாள் என இவளை நொங்கு எடுக்க, அபி வேறு நீ விருபவன் எப்படியோ என்னமோ, உஷாராய் இரு, இந்த காலத்தில் தெரிந்தவரே ஆயினும் யாரையும் எளிதாக நம்பிட முடியாது, அப்படி இப்படி என இவளுக்கு பயம் காட்ட, இவள் நிலைமை தான் பரிதாபமாய் போய் விட்டது. 
ஸ்ரீ வாசு என்ற பெயரை இவர்களிடம் சொல்லவில்லை. அவன் ஒத்துகொண்டால் இவர்களிடம் சொல்லலாம் இல்லையென்றால் வேண்டாம் என நினைத்திருக்கிறாள்.  
இதோ வெளியே இருந்து ஷங்கர் இவள் எண்ணிற்கு அழைத்து விட்டான். உடனே முதுகில் மாட்டும் பையை தூக்கி கொண்டு கிளம்பி விட்டாள் ஸ்ரீ. காரில் வந்து சாய்ந்தமர்ந்த ஸ்ரீபத்மா தான் முறைத்திருந்தான் ஷங்கர்.
ஏர்போர்ட் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஸ்ரீ அவன் பக்கம் திரும்பவே இல்லை. காதில் ஹெட் ஃபோன் போட்டு, பார்வையை வெளியே வைத்திருந்தாள். 
ஏர்போர்ட் வந்து இருவரும் அமைதியாக அமர்திருந்தனர். 
ஸ்ரீக்கு இப்படி அவனிடம் சொல்லாமல் கிளம்புவது ஒரு மாதிரி இருக்கவும், அவன் அருகில் வந்து நின்றாள். அவள் இவன் முன் வந்து நின்றதை பார்த்தும், அவளிடம் பேசாமல் என்ன என்பதாய் அவளை பார்க்க, அமைதியாக அம்மாவிடம் திட்டு விழும் என தெரிந்தும் மறைக்க மனமில்லாமல் சேட்டையை சொல்ல வந்து நிற்கும் குழந்தை போல் ஒரு முக பாவனையுடன் ஸ்ரீ.
“ ஏய் அப்படி பாக்காத, பண்றதெல்லாம் அட பாவி வேலை ஆனா பாக்க அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சிக்கோ. “ என ஷங்கர் ஆரம்பிக்க,
“ ஏன் மூஞ்சிய அப்படி வச்சா என்ன பண்ணுவ  “ என இன்னும் அப்பாவியாய் முகத்தை வைத்து ஸ்ரீபத்மா பதிலளிக்க, 
“ ஒன்னுமே பண்ண மாட்டேன். டைரக்ட்டா அங்கிள் கிட்ட பேசி போட்டு குடுத்துடுவேன். வெரி சிம்பிள் “ 
“ ஓகே சொல்லிக்கோ. எனக்கு வேல மிச்சம். “ என இவள் ஹாயாக அமர,
“ கும்கி அப்றோம் வீட்ல எல்லாம் உன்ன வச்சி செய்வாங்க. ஓகே வா உனக்கு. “
“ ப்ச செஞ்சா, எனக்கு தான் டா நல்லது சங்கு “ என அமைதியான குரலில் முடிக்க, ஷங்கர்க்கு எப்படியோ ஆனது. எப்போதும் உற்சாகமாக திரிபவள், இந்த ஒரு மாதமாக உற்சாமாக இருந்தாலும் அவ்வப்போது ஏதோ சித்தனையில் செல்ல, அவளை இப்படி செய்யும் விஷயம் என்ன என தெரிந்து கொண்டு அவளுக்கு உதவவே அவளை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தான். தினமும் அதிகம் கூடவே இருக்கும் நண்பர்களுக்கு நம் மாற்றம் எளிதில் தெரிந்து விடும் வாய்ப்பு அதிகம் தானே. 
மன அழுத்தமோ, இல்லை வேறு பிரச்சனையோ எதுவாயினும் கூடவே சுற்றும் நண்பர்கள் கொஞ்சம் முன்னே கணித்து ஆறுதல் வார்த்தை கூறினால், தற்கொலை எண்ணம் உள்ள நண்பனை கூட காப்பாற்ற முடியும்.  
அப்படி இருக்கையில் ஸ்ரீயின் பிரச்சனையோ ஒன்றுமே இல்லை, அவளுக்கு வெறும் எதிர்பார்ப்பு, வாசு என்ன சொல்வானோ என்ற யோசனை, அவ்வளவே. மிகவும் தைரியமான பெண்.
ஆனால் இவள் அவ்வப்போது யோசனைக்கு செல்வதால், ஷங்கர் தான் பயந்து விட்டான், ஏதாவது காதல் தோல்வி என மாட்டி கொண்டாளோ. நம்மிடமும் அபிதாவிடமும் மறைக்கிறாளோ என ஏதேதோ சிந்தனை. வெளியே இவன் அவளிடம் பகடி செய்து கேட்டாலும் நாளுவுகிறாள். அபிதாவும் முயற்சி செய்து விட்டார், ஒரு மாதம் போகட்டும் சொல்கிறேன் என சாக்கு சொல்கிறாள்.
ஸ்ரீ அவ்வளவு பலவீனமானவள் அல்ல என ஷங்கருக்கு தெரியும். ஆனால் இது வரை ஸ்ரீ வாழ்க்கையில் பெரிதாக ஏமாற்றம் அடைந்ததில்லை என இவனுக்கு தெரியும், அதனால் வந்த கவலை. அதனால் அவளை பகடி செய்தோ, மிரட்டியோ அவளுக்கு உதவ அவளை பாடாய் படுத்தினான்.
அவள் இப்போது அமைதியாய் அமர்ந்திருபதை பார்த்துவிட்டு, ஷங்கர்க்கு மனது கேட்கவில்லை, 
“ கும்கி இங்க பாரு, இனிமே என் மச்சான் யாருனு கேட்க மாட்டேன். அவர் பேர் கூட எனக்கு தெரிய வேண்டாம். நீ பாசிட்டிவா பதில் வந்திருந்தா எங்க கிட்ட சொல்லிருப்ப, ஆனால் உனக்கு அப்படி வரல போல. 
மே பி அவர் டைம் கேற்றுகனும்னு நினைக்கிறேன். பாசிட்டிவ் வா பதில் வந்தா ஓகே. “
எப்படி இவள் சொல்லாமலயே இப்படி கணிக்கிறான் என அவனை அன்போடு பார்த்தவள், அவளையும் மீறி “ இல்லைனா என்ன பண்றது “ என கேட்டிருந்தாள்.
“ அப்டி இல்லைனு சொல்லிட்டா ஒரு டஸ்டர் போட்டு மனச தொடச்சி டஸ்ட் ப்ரீயா  வச்சிக்கோ. இதெல்லாம் பீல் பண்ற அளவுக்கு வோர்த்தான விஷயமே இல்ல. 
பட் பிளீஸ் எதுவானாலும் பொறுமையா டிசைட் பண்ணு. 
 உன் ஃபேமிலி அண்ட் ஃபிரண்ட்ஸ் எப்போவும் உன் கூடத்தான் இருப்போம். அத மட்டும் மனசுல வச்சிக்கோ கும்கி. “ என அவன் ஸ்ரீயின் ஊச்சந்தலையில் கை வைத்து ஆட்ட ஸ்ரீ அவனை தான் பார்த்திருந்தால்.
“ சங்கு நீ இவ்ளோ ஃபீல் பண்ண வேண்டாம் டா. என்கிட்ட இருக்கறது ஜஸ்ட் ஒரு எக்ஸ்பெக்டேஷன் தான். பெருசா வேற ஒன்னும் இல்ல.  சோ டோன்ட் வொர்ரி டா அண்ணா. “ என இவள் வாயார கேட்ட பின் தான் ஷங்கருக்கு சிறிது நிம்மதியானது. 
“ டேய் இருந்தாலும் நீ நல்ல வளந்துட்டா டா. “ என இவள் பதிலுக்கு அவன் தலையில் கை வைத்து சிரிக்க, 
“ ஏய் உன் தும்பிக்கையை எடு. வளர பையன் நான். நீ இப்படி பண்ணி தான் என் வளர்ச்சிய குறைகுற கும்கி குட்டி.” என முகத்தை உர்ரென வைத்து சொல்ல, 
“ அடிங்க…நீ வளர பையனா. நல்ல காட்டெரும மாதிரி வளந்திட்டு, இன்னுமும் வளரனும்னு நினைக்கிறியா. ஓவர்ரா ஆடாத டா தம்பி, ருத்து அக்கா கிட்ட சொன்னேன் வை, உன்ன பிச்சு மஞ்சூரியன் போட்டு டொமாட்டோ ரைஸ்க்கு தொட்டுக்கும் டா என் பொட்டேட்டோ. “  என இவள் எகிற,
“ எப்போ பாரு சாப்பாடு சாப்பாடுனு அலையாத. அப்புறம் ஹோட்டல் கடக்காரர தான் மாப்பிள்ளைலயா பார்க்கணும். “ என இவன் எக்கு தப்பாய் பௌலிங் போட, அது சரியாக ஸ்டம்பை தாக்கியது.  
ஒரு நிமிடம் அவள் முகம் கண்களை லேசாக விழித்து அதிர்ச்சியை காட்ட, அதை பார்த்த ஷங்கர் , “ ஓஹ் அப்போ அவரு ஹோட்டல் கட வச்சிருக்காரு. அப்டி போடு. அப்போ யானைக்கு கவாளம் கவாளமா ஊட்டுர அளவு வளமானவரு சொல்லு. “ என சிரிக்க,
“ ஆணவத்துல சிரிக்காத டா காட்டெரும. இன்னும் அவரு உனக்கு மச்சானானு இன்னும் கன்பர்ம் ஆகல. அதுக்குள்ள குதூகலமாகத, அடக்கி வாசி டா சங்கு. “ என இவள் காண்டாக,
‘அச்சோ இவளை நம்பளே அவரை வைத்து ஓட்ரோமோ. அதுவே அவள ரொம்ப பாதிச்சிட கூடாதே. ‘ என அவளை இவன் சிறு கவலையுடன் பார்க்க, அதை சரியாக புரிந்து கொண்டவள், “ அடேய் ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாத டா தம்பி…ரியாக்சன கொற…ரியாக்சன கொற. “ என இவள் கவுண்ட்டர் குடுக்க, சரியாக ஃப்ளைட்டிற்கு அழைப்பு வந்தது. ஸ்ரீயும் புறப்பட்டு விட்டாள் எதுவாயினும் இந்த முறை வாசுவிடம் கேட்டு விடுவது என்ற முடிவோடு . 
   வாசு தேர்ந்த சிவில் இஞ்சீனியரராய் ஸ்ரீயின் மேல் உள்ள விருப்பத்திற்கு அணை கட்ட ஃப்ளான் பண்ணி காத்திருக்க, விதியோ வேறு ப்ளான் செய்து இவனது அணையில் ஓட்டை போட காத்திருந்தாது. 
 
  
  
   
      
 2

Advertisement