Advertisement

       வாசுவை அழைத்திருந்தது அவன் அத்தை வாணி. எப்போதும் வேலை என அலைந்து கொண்டிருப்பவன், அதனால் ரிங்டோன் எல்லாம் காதில் விழாது. ஸ்ரீயின் அழைப்பு மட்டும் அல்ல எந்த அழைப்பு வந்தாலும் வைப்ரேட்டில் வைப்பவன், இன்று காலை தான் ரிங்டோனிற்கு மாற்றிவிட்டிருந்தான். 
முதல் அழைப்பே அவர்கள் வீட்டின் வாணி அத்தை. இவர்கள் ஏன் இந்நேரதில் அழைக்கிறாராகள் என யோசனையாய் நின்றான். சீதாவின் ஒன்று விட்ட அண்ணன் மனைவி, ஆனால் எல்லாம் ஒரே ஊர், சிவசு தாத்தாவிற்கு ஒரு வையில் சொந்தம். அதனால் நல்ல உரிமையாய் பழகுவார். 
அவரது கணவன் எப்போது இயற்கையோடு கலந்து விட்டார். கடுமையான உழைப்பாளி, அவரது ஒற்றை மகள் தான் இவர் ஆதாரமே. நல்ல மனுஷி, ஆனால் கொஞ்சம் முன் கோபம் வரும். சில விஷயங்களை முதலில் புரிந்து கொள்ளாமல் நடப்பார், பிற்பாடு புரிந்த கொண்டு மாற்றிக்கொள்வார் . ஆனால் வாசு வீட்டிற்கு இவர் மிகவும் நெருக்கமானவர். வாணி வீட்டிற்கு எது என்றாலும் சிவசு தாத்தா தான் முன் நிற்பார். வாசுவின் மீது தனி பிரியம். அவர் வீட்டிற்கு ஏதாவது என்றால் வாசுவிற்கு தான் அழைப்பார்.
எப்போதும் இது போல் இரவில் எல்லாம் அழைக்க மாட்டார். ஏதோ அவசரம் என புரிந்தவன், உடனே அழைப்பை ஏற்றான்.
“ தம்பி இந்த ஜெயா வா இவ்ளோ நேரம் ஆகியும் இன்னும் காணோம். ஒரு எட்டு பார்த்து சொல்றியா தம்பி. “ என தயங்கி சொன்னார்.
“சரிங்க அத்த நான் பார்த்துட்டு கூப்பி‌டுறேன்.” என அழைப்பை வைத்தவன். ஊருக்கே திரும்பினான். வேறு விஷயமாக இருந்தால் கிருபா, மணி என யாரையாவது விட்டு முடித்திருபான், அங்கு இவன் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை . 
ஆனால் ஜெயாவை தேட வேண்டும், இப்போதே மணி ஏழே முக்கால், இன்னும் இவன் ஊருக்கு சென்று தேட வேண்டும். இப்போது இவன் இங்கே இருந்தே ஆக வேண்டும். இவனுக்கு ஜெயா ஏங்க போயிருப்பாள் என பதட்டம் வந்து விட்டது.   
இப்போது தான் கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கிறாள். இவனை விட பத்து வயது சிறிய பெண். சிறு வயதில் இருந்தே இவன் அவளிடதில் மிகவும் கண்டிப்பு கலந்த அன்பு. 
படிப்பில் படு சுட்டி, எப்போதும் ஒரு விளையாட்டுதனம், இவன் எவ்வளவோ எடுத்து சொன்னாலும் கேட்காமல் ஊருக்குள் இருக்கும் அவள் தோழிகளுடன் எங்காவது அமர்த்து அரட்டை அடிப்பது,  தோப்பு,  ஓடை என எதையும் பெரிய கவனம் இல்லாமல் துருத்துருப்புடன் திரியும் சுட்டி பெண். 
எப்போதும் எங்காவது ஊர் சுற்றினாலும் இவ்வளவு நேரம் எல்லாம் செய்யமாட்டாள். ஏழு மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் இன்று ஏனோ இன்னும் வீடு வரவில்லை. மணி, கிருபா இருவரையும் அழைத்தான் வாசு .   
வாசுவின் எண்ணை பார்த்ததும் அதிசயத்த கிருபா, 
“ அண்ணா ஏதோ இன்னைக்கு எல்லை தாண்டி எங்கயோ போறேன் சொன்னிங்க. இன்னும் கிளம்பலயா . “ என இவன் குதூகலமாக கேட்க,
“ டேய் நான் சொல்றத முதல கேளுடா. “ என கத்தியவன், பிறகு விவரம் சொல்ல, இருவரும் அடித்து பிடித்து கிளம்பினார்.    
டாக்ஸி பிடித்து இவன் உணவகத்திற்கு வந்தான், அங்கே தானே இவன் பைக் நிற்கிறது. வந்த உடன் பைக்கில் கிளம்பி விட்டான். 
இவன் வரும் போதே மணி பத்து , இவனுக்கு மிகவும் கவலையாகி போனது. எப்படியும் தூரம் எல்லாம் போயிருக்க மாட்டாள். எங்காவது ஊருக்குள் தான் இருப்பாள். இந்த மணியும் கிருபாவும் இன்னும் சரியாக எதுவும் சொல்லவில்லை. தேடி கொண்டிருக்கிறோம், பார்த்து கொண்டிருக்கிறோம் என சொல்கிறார்களே தவிர வேறு எதுவும் சொல்ல வில்லை. 
அவள் தோழிகளுடன் இவ்வளவு நேரம் பேசினாலும், அவர்கள் வீட்டில் இவ்வளவு நேரம் எல்லாம் இருக்க மாட்டாள் என தெரியும், அதனால் அந்த இரவில் டார்ச்சை எடுத்து கொண்டு தோப்பு, வயல், குறுங்காடு என அந்த ஊரில் முக்கால்வாசி இடத்தில் தேடினான். 
இவன் இங்கு வந்ததும் சீதாவிற்கு விஷயத்தை சொல்லிவிட்டான். சீதா வாணி தனியாக இருக்க வேண்டாம் என இவர்கள் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார்.
வாணி அப்போதிருந்து அழுது ஓய்ந்து விட்டார். அவருக்கு ஜெயாவிற்கு   என்ன ஆனதோ என கவலை. மணி இரவு ஒன்றை நெருங்கி விட்டது. வாசுவிற்கு அழைத்தார், இப்போது வாசு எடுக்கவில்லை.
களைத்து கவலை தோய்ந்த முகத்துடன் இறுதியாக எதற்கும் ஓடை அருகே சென்று இரண்டாவது முறையாக தேடினான். அது அவளுக்கு மிகவும் பிடித்த இடம் என இவனுக்கு தெரியும். 
சென்று நன்றாக இண்டு இடுக்கு விடாமல் தேடினான். ஏதோ சல்வார் துப்பட்டா ஓரிடதில் தென்பட, அருகே சென்று பார்த்தான். 
கல்லூரி புத்தகம் ஒன்றை நெஞ்சில் வைத்து கைகளை அந்த புத்தகத்தை பாதுகாப்பாய் பிடித்து, காலை குறுக்கி, அங்கே உள்ள மரத்திலே சாய்ந்து எதை பற்றியும் சிந்தியாமல் அந்த அழகிய முகத்தில் ஒரு உறைந்த புன்னைகயோடு நன்றாக தூங்கி கொண்டிருந்தாள் ஜெயா.
பார்த்தவனுக்கு முதலில் ஒரு நிம்மதி. மனதில் ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்தவன். 
கடுங்கோபத்துடன் ஜெயா அருகே சென்றான். வந்த கோபத்தை கடினபட்டு சிறுது குறைத்தவன், அவளை தொட்டு எழுப்ப,
“ போம்மா…தூங்கவுடு மா..” என தூகத்தில் பேசியவள், இன்னும் நன்றாக தூங்க ஆயத்தமானாள்.
படார் என அவள் அடி காலில் ஒரு அடி வைத்தான் வாசு. 
அதிர்ச்சியில் வேகமாய் எழுந்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
“ ஏன் மாமா என்ன அடிச்ச. “ என கண்ணை நன்றாக விழித்து பார்த்தவள். ஏன் மாமா இந்த நைட் இங்க வந்துருக்கோம் என வாசுவை திருப்பி கேள்வி கேட்டாள்.
“ அப்டியே ஒன்னு குடுத்தேனா,  வீட்ல போய் விழுந்துடுவ. எப்போ வீட்ல இருந்து கெளம்புன. மணி என்ன தெரியுமா, நைட் ஒரு மணி ஆகுது. உன்ன காணோம்னு வீட்ல எல்லாரும் தேடிட்டு இருக்கோம். இப்டியா பண்ணுவ. எந்திரி முதல. கிளம்பு. “ என வாசு திட்ட,
அவன் சொன்ன பின் தான் எழுந்த ஜெயா சுற்றி முற்றி பார்க்க, தான் எங்கே இருக்கிறோம் என உணர்ந்தவள், வாசு சொன்னதை கேட்டு பீதியாகி இன்றைக்கு தனக்கு அம்மாவிடம் நன்றாக இருக்கிறது என புரிந்தது.
வாசு இவள் கிடைத்து விட்டாள் என வீடு, மணி, கிருபா என அழைத்து சொன்னவன்,  இவளை பைக்கில் அமர்த்தி வீட்டிற்கு போகும் வழி எல்லாம் திட்டி கொண்டே வந்தான். 
வீட்டின் முன் வந்து இருவரும் இறங்கி நின்றது தான் தாமதம், ஒரு தென்னை மட்டை ஜெயாவை பார்த்து பறந்து வந்தது. வாணி தான் அதை பறக்க விட்டிருந்தார்.
“ நில்லு டி அங்கயே. உன் கால உடச்சி வீட்ல உட்கார வைக்கிறேன். ஊர் உலகத்துல எவ்வளவோ நடக்குது. போயி தூங்கிருக்கா பாரு அங்க. எந்த பூச்சியாவது வந்துச்சுனா என்ன பண்ணிருப்ப.
பாக்க ஒட்டட குச்சி மாதிரி இருந்துகிட்டு, அத்தனையும் கொழும்பு. 
நல்ல அடி போட்டு வளதுருக்கணும் உன்ன. எப்படி பதற வச்சிட்ட என்னை. “
என வாழை மட்டையை கையில் வைத்து கொண்டு ஜெயவை அடிக்க, சீதா அவரை தடுக்க பார்க்க,
“மாமா காப்பாத்து மாமா..மாமா காப்பாத்து..” என ஜெயா வாசுவின் பின்னே சென்று அந்த பக்கமும் இந்த பக்கமும் ஒழிய, அத்தனை அடியும் வாங்கியவன் வாசு தான்.
“அத்த முதல மட்டைய கீழ போடுங்க. அதுல அடிக்க கூடாது.
ஏதோ படிச்கிட்டே தூங்கிட்டா. சின்ன புள்ள தான, நல்ல காத்து அடிக்கவும் அப்டியே தூங்கிருச்சு.
இவ்ளோ தூரம் அவள தேட அலஞ்ச என்ன தான் சாத்து சாத்துனு சாதிருக்கிங்க.” என வாசு பேச, சுந்தரி ஆச்சியும் வாணியை அதட்ட, அதன் பின் தான் தனிந்தார். 
எப்படியோ இரவு இரண்டு மணிக்கு இரவு உணவு உட்கொண்டு எல்லாரும் வாசுவின் வீட்டிலயே படுத்து விட்டனர்.
இத்தனை களேபரங்களும் முடிந்து வாசு படுக்க இரவு மணி மூன்று. 
எப்போவும் நான்கரை மணிக்கு எழுந்து விடும் வாசு, தோட்டத்திற்கு சென்று விட்டான். அதன் பின் காலை அவனுக்கு வேலை மள மள வென வந்து இறங்க, நிக்க கூட நேரம் இல்லை. உணவகத்தில் ஏதோ திருமண சமையல் வேலை இருக்க, எப்போதும் வரும் வடிக்கையாளர்களுக்கு என தனியாக சமையல் வேலை நடக்க, கிருபா, மணியுடன் வாசுவும் களத்தில் இறங்கி விட்டான்.
எல்லாம் முடிந்து வாசு வீட்டிற்கு வந்து சேர மாலை ஐந்து. சிறிது நேரம் உட்காரலாம் என பார்த்தால், இவன் வந்தவுடன் சிவசு தாத்தா இவனை காரை எடுக்க சொல்லி பரபரத்து கொண்டிருந்தார். அவர் நண்பர் முத்துவை பார்க்க திருச்சி மருத்துவமனை செர்திருந்தனர். 
அங்கே திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனை.
அங்கே உள்ளே சென்றால், சிவசு தாத்தாவின் நண்பர் முத்துவிற்கு டிரிப்ஸ் போட்டிருக்க, அவர் மனைவி கவலை தோய்ந்த முகத்துடன் அருகில் அமர்திருந்தார்.
“ வாங்கண்ணே, வா பா தம்பி “ என சிவசு தாத்தவையும், வாசுவையும் அழைக்க, என்ன ஏது வென்று விசாரித்தனர்.
அவர் சொல்லியதெல்லாம் இது தான்,
முத்து இரண்டு லட்சம் ரூபாய் பாங்க்கில் விவசாய கடன் வாங்கி இருந்தார், இது இல்லாமல் வெளியே ஒரு ஒன்றரை லட்சம் மகனுக்கு உதவுவதற்கு என வாங்கி இருந்தார். 
இப்போது அவர் மகன் வியாபாரத்தில் கொஞ்சம் சறுக்கல், அவர் மகனும் நல்ல உழைப்பாளி, ஆனால் தற்போது நிலைமை சரி இல்லை. அதுவும் வெளியூரில் இருக்கிறார். இப்போது உடனே அவரால் வர முடியாத நிலைமை.
விவசாயம் மட்டும் தான் முத்துவின் வாழ்வாதாரம். ஏதாவது ஒரு கடன் அடைபட்டால் கூட கொஞ்சம் நிமிர்த்து விடுவார். எல்லாவற்றையும் விட அதை திருப்பியும் தந்து விடுவார். நேர்மையானவர், ஆனால் இப்போது அவர் விவசாயம் செய்யும் பயிர் விலை இறங்கி விட்டது, நிலையற்ற விலை, கொள்முதல் செய்ய வருபவர்களும் குறைத்துக் கேட்க, உடைந்து போய் விட்டார். அதனால் இப்போது இரண்டு மாதமாக கணவன் மனைவி இருவரும் வெளியூர் சென்று சொந்தங்கள் வர போக இல்லாத இடத்தில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார்கள். 
நன்றாக வாழ்ந்த உள்ளூரில் வேறு ஏதாவது வேலை செய்தால் சொந்தங்கள் எப்படி நினைப்பாரோ என்ற எண்ணம். 
இவர்கள் உழைபிற்கு அஞ்சுபவர்கள் அல்ல, அதனால் வெளியூர் ஹோட்டல் ஒன்றின்‌ பரமரிப்பிற்கு சென்று விட்டனர். ஆனால் அப்போதும் வருமானம் போதவில்லை.
அதனால் முத்து மட்டும் வேலை நேரம் போக அருகில் இருந்த ஒரு லோக்கல் பாரில் வேலை செய்திருக்கிறார். அங்கே வாடிக்கையாளர்கள்  கேட்கும் அம்லெட், சிப்ஸ், பொறித்த உணவுகள் எல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுப்பார்.
முதலில் மிகவும் சிரமப்பட்டார். நாற்று பிடித்து பயிர் செய்த கைகளில் இவை எல்லாம் வாங்கி வந்து குடுக்கவே மனம் கேட்கவில்லை. அங்கே அவருக்கு மரியாதையான அழைப்பு கூட இருக்காது. இருந்தாலும் எல்லாம் செய்தார், மானத்தோடு வாழ வேண்டுமே, அதற்காக செய்தார்.
அப்படி செய்து கொண்டிருந்த போது, ஏதோ பாரில் தகராறு, அப்போது நடுவில் இவர் மாட்டிக்கொண்டார். அதில் பாதிக்கப்பட்டு இங்கு அவர் மனைவி எப்படியோ அவசரதிற்கு இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். பில் கட்டினால் தான் மேற்கொண்டு எதுவுமே என, ஆரம்ப கட்ட மருத்துவ உதவி மட்டும் செய்து அட்மிட் செய்திருந்தனர். 
இதெல்லாம் அவரால் சாதாரணமாக கூட சொல்ல வாய் வரவில்லை, எப்படியோ தயங்கி தயங்கி சொல்லிவிட்டார். சிவசு தாத்தாவிற்கு கண்களில் நீரே துளிர்த்து விட்டது. முத்துவை சிறு வயதில் இருந்தே தெரியும். முத்து நன்றாக இருந்த காலத்தில் எவ்வளவோ தெரிந்தவர்களுக்கு எல்லாம் செய்திருக்கிறார். ஏன் சிவசு தாத்தாவிற்கு கூட செய்திருக்கிறார். 
தேனு திருமனதிற்கு முதலில் வந்து ஆசீர்வதித்து, சிரமம் இருந்த போதும் தேனுவிற்கு பிடித்ததை வாங்கி கொடுங்கள் என்று வந்து பணம் கொடுத்தவர். இன்னும் எவ்வளவோ நினைவுகள் அவரை பற்றி, மிகவும் நெருங்கிய நண்பர், இவ்வளவு கஷ்டதிலும், ஒரு வார்த்தை சிவசு தாத்தாவிடம் சொல்லவில்லை.
சிவசு தாத்தா தளர்ந்து வாசுவின் கையை பிடித்து விட்டார். 
வாசு மிகவும் உறுதியாக சிவசு தாத்தவை தாங்கிக்கொண்டான்.
சிவசு தாத்தவை உட்காரவைத்து விட்டு, அனைத்தையும் முன் நின்று செய்தான். ஒரு குறையும் வராமல் பார்த்துக்கொண்டான்.
வாசுவிடமும் இப்போது பெரிதாக தற்போது சேமிப்பு இல்லை, ஆனால் அவசர தேவைக்காக வைதிருந்தது எல்லாம் உதவிற்று. 
அவர்களுக்கு தேவையானதை செய்துவிட்டு, எதுவென்றாலும் எங்களை அழையுங்கள் என அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, இருவரும் வீடு வந்து சேர இரவு மணி எட்டு. 
சிவசு தாத்தா வந்ததும் சாப்பிட்டுவிட்டு, முத்துவின் நிலைமை பற்றி சுந்தரி அச்சியிடம் மனம் விட்டு பேசிவிட்டு, ஆச்சி ஆறுதல் சொல்ல, அன்று இருந்த மன உலைச்சளிலும், உடல் அலைச்சளிலும் சீக்கிரமாகவே படுத்து விட்டார்.
ஆனால் வாசுவின் மனம் ஆறவில்லை, முத்துவை சிறு வயதில் இருந்தே அறிவான். எப்படி இருந்தவர், அவருக்கு இந்த நிலைமையா என மனம் சமன்பட சிறிது நேரம் ஆனது. 
நேற்று இரவே குறைத்து தான் சாப்பிட்டான். இன்று வேறு நல்ல வேலை அதனால் சரியாக உண்ண முடியவில்லை, ஏதோ கொறிததிருந்தான். அதனால் நன்றாக பசியெடுக்க, குளிக்க சென்றான்.
ஆச்சி சீதாவிடம் சிவசு தாத்தா கூறியதை சொல்லிக்கொண்டு இருந்தார். சாப்பிட வந்த  கோதண்டம் அணைதையும் கேட்டுக்கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடிந்து அவர் எழ, அப்போது குளித்து முடித்து சாப்பிட வந்தான் வாசு. 
” சீதா நீ ஏன் இப்போ அவசரமா உன் புள்ளைக்கு பொண்ணு பாக்குற ? ” என ஆரம்பித்தார் கோதண்டம்.
வாசு அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை வாசு, தட்டில் மூன்று இட்லியை வைத்து அமர்ந்தான்.
” என் புள்ளைக்கு நான் பாக்குறேன் உங்களுக்கு என்ன வந்துச்சு ?”
” அதுக்கில்ல, உன் புள்ளயும் செஞ்சச்சிட்டு இருந்த வேலைய விட்டு வந்துடான். அவனும் விவசாயம் பாக்குறேன் அப்பிடி இப்படி சுத்துறான். 
நாள பின்ன முத்து அய்யா மாதிரி அவனுக்கு ஒரு நிலைமை வந்தா, உனக்கு வர மருமக நிலைமை என்னனு யோசி. அதுக்கு தான் கேட்டேன். “
எப்போதும் கோதண்டதிற்கு ஒரு பழகம் உண்டு. வெளியே ஏதாவது செய்தி வந்தால், அதை வைத்து வாசுவை ஏதாவது சொல்வது. அவன் சிங்கப்பூரில் இருந்து முதல் இதான் அவர் வேலை. அவரும் ஒரு விவசாயி என்பதை மறந்து போய்விடுவார். மகன் மேல் இருக்கும் கோபம் மட்டும் முன்னனியில் வந்து நிற்கும்.   
இதுவே மற்ற நேரமாய் இருந்தால் வாசு பதிலுக்கு, 
‘ ஏன் மா நீங்க நல்லா தானா இருக்கிங்க, உங்க வீட்டுக்காரரும் விவசாயம் தான பண்றாரு. உங்கள நல்லா தான பார்த்துக்குராரு. அத மாதிரி உங்க மருமகளையும் நான் நல்லா பார்த்துபேன் ‘ 
என பதில் சொல்லி இருப்பான்.
ஆனால் இட்லியை வைத்த கை அப்படியே இருந்தது. இப்போது தான் ஸ்ரீபத்மாவின் நினைவே வந்தது. 
நேற்று மட்டும் வாணி அத்தை அழைக்கா விட்டால், இந்நேரம் ஸ்ரீயுடன் இருப்பான். இவன் விருப்பத்தை சொல்லி இருப்பான். அவன் நிலைமையே வேறாய் இருந்திருக்கும்.
ஆனால் இப்போது கோதண்டதின் கேள்வி, அவன் மனதில் இப்போது தான் துளிர் விட்ட விருபத்தில் ஒரு வாலி சுடு தண்ணீரை ஊற்றியது.
தட்டில் இருந்த இட்லியை ஒரு வாய் கூட உண்ண முடியாமல் வைத்துவிட்டு அப்படியே எழுந்து விட்டான் வாசுதேவன்.         
     
      

Advertisement