Advertisement

             கிருபா கதற கதற ஐந்தாவது இட்லியை சாப்பிட வைத்தான் வாசு. மணி இவன் சுட்ட நான்கு மசால் தோசையால் மயங்கிவயவன் இன்னும் கூட தெளியவில்லை. அதற்கு மட்டுமா தெளியவில்லை, இவர் நேற்று இருந்த சைலன்ட் மோட் என்ன இன்று இருக்கும் வைப்ரேட் மோட் என்ன என வாசுவை தான் பார்த்திருந்தான் மணி.
ஆம், வாசு கிருபவையும் மணியையும் இவன் அதிரடியால் அதிர வைத்துக் கொண்டிருந்தான். காலையில் உணவகம் வந்ததும் கிருபாவும் மணியும் இவனிடம் எதுவும் பேசாமல் முறைத்துக்கொண்டு அனைத்து வேலையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
காலையில் தான் கூட்டமே வரும் அதனால் அவர்கள் போக்கிலே விட்டவன். நண்பகல் போல் வயல் வேலை முடிந்து உணவகம் வந்தான். அன்று இவனும் ஸ்ரீயும் அமர்திருந்த ஊஞ்சல் இருக்கையில் அமர்ந்தவன் அங்கே இருந்து தான் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தான்.
மணியும் கிருபாவும் இவனை கண்டுகொள்ளாமல் திரிந்தாலும் இவன் அந்த இடத்தை விட்டு அசையாமல் இருப்பதை பார்த்துக்கொண்டிருந்தனர். 
“ மணி, இப்போ ஏன் இவரு இப்படி ஸீன் போடுறாரு “  
“ தைரியம் இருந்தா நீ போய் கேளுடா. என்ன ஏன் டா கோத்து விடுற “
“ நான் எங்க டா கோத்து விட்டேன். ஏதோ ஒரு ஆர்வத்துல உன்கிட்ட கேட்டேன்.”
“ நானும் உன்கூட தானா சுத்துறேன். உன்ன மாதிரி ஆர்வகோளரா நான் போய் அவர கேட்டு நீ நேத்து தானா போய் அவர் தோளுல தொங்குன மாதிரி நான் தொங்க ரெடியா இல்ல மச்சான் .”
காண்டாகி போன கிருபா, ஆள்காட்டி விரலை தன்னை நோக்கி திருப்பி, ‘இந்த அவமானம் எல்லாம் உனக்கு தேவையா’ என தன்னை தானே கேட்டு, மணியை முறைத்து நகர்ந்து விட்டான்.
அடுப்பில் மதியதுக்கு தேவையான எல்லாவற்றையும் ஏற்றி வைத்த மணியை நகற்றிய வாசு, தோசைகல்லை அடுப்பில் வைத்து மசால் தோசையை சுட்டவன் மணியிடம் கொடுத்து உன்ன சொல்ல, இது இவர் தினமும் செய்யும் வேலைதானே என அசால்ட்டாய் உட்கார்ந்தவன், ஒன்றோடு எழ போக, விட்டான வாசு, அடுத்ததை வைக்க, 
‘என்ன பாசம் ஓவரா பொங்குதே’ என சந்தேக கண்களோடு பார்த்திருந்த மணியின் தட்டில் மூன்றாவது தோசையை வைத்தான் வாசு. 
“ அண்ணே போதும். இதுக்கு மேல தாங்காது. “ என எழ பார்த்தவனை எழ விடாமல் அவன் ஒற்றை தொடையில் வாசு அமர்த்தான். 
“ஆஆஆஆஆஆ…..அண்ணே வலிக்குதுணே. உங்க மசால் தோசையும் போதும். நீங்க என்னை சட்னி அக்குனதும் போதும். பிளீஸ் அண்ணே, போதும்ண்ணே.” என அலறிக்கொண்டு இருந்தான் மணி.   
மணியின் அலறலை கேட்டு என்ன என பார்க்க வந்த கிருபவையும்  தொக்காய் பிடித்து மணியின் அருகிலயே வம்படியாய் அமர்தியவன் அவன் கையில் இட்லி வைத்த பாக்குமர தட்டை குடுத்து சாப்பிட செய்தான். 
மணியாவது நான்கு மசால் தோசையோட எப்படியோ தப்பித்தான், பாவம் கிருபாவுக்கு ஐந்தாவது இட்லியை வைத்து அவனை திணறடித்து கொண்டிருந்தான் வாசு.
“அண்ணா இதோட என்ன விட்டுருவிங்களா..பிளீஸ்ண்ணா…” என பாவமாக கேட்டு கொண்டிருந்தான் கிருபா.
வாய்க்குள் அடக்கியே நமட்டு சிரிப்புடன் கிருபா படும் அவஸ்தையை பார்த்த மணி, “ மச்சான் உனக்கு இன்னும் கொஞ்சம் சட்னி வைக்கட்டா “ என அவனை பார்த்து கண் அடிக்க, கிருபா ‘ நீயுமா டா ‘ என மணியை பார்த்திருந்தான். 
“அதெல்லாம் முடியாது கிருபா…இனிமே தான் உனக்கு மசால் தோசைய ரெடி பண்ணனும். “ என அடுத்த கட்டளை பிறப்பித்தான் வாசு.
அவசரமாக ஐந்தாவது இட்லியை உள்ளே தள்ளியவன், டபார் என ஓடி கை கழுவி வந்தான்.
“ அண்ணா நீங்க எல்லை மீறி போறீங்கண்ணா… இதெல்லாம் அநியாயம். காலையில் இருந்து நானும் பாக்குறேன் நீங்க ஒரு மார்க்கமா தான் சுதிக்கிட்டு இருக்கிங்க.”
“ஆமாண்ணே இன்னைக்கு எங்களுக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும். ஒளுங்கா உண்மைய கக்குங்க.” என மணியும் சவுண்ட் விட.
வாசு ஒரு புன்னையோடு தான் அவர்கள் சொல்லியதை கேட்டிருந்தான், ஆனால் அவர்களை பார்க்கவில்லை பதிலும் சொல்லவில்லை.
பொறுமை பறந்தது கிருபாவிற்கு, அருகில் இருந்த கீரை கடையும் மத்தை எடுத்து வாசுவின் முகத்தின் முன் நீட்டியவன்,   
“ இதுக்கு மேல நான் பேச மாட்டேண்ணா…இது தான் பேசும். “ என பயம் காட்ட, வாசு அதனை பார்த்தவன், மத்திற்கு நச்சென ஒரு முத்தம் குடுத்து சிரிப்புடன் நகர்த்தான்.
இதை பார்த்து அதிர்ந்த கிருபா மத்தை கீழே நழுவ விட, இதை சுவாரசியமாக பார்த்திருந்த மணிக்கு உள்ளே மணி அடித்து விட்டது.
“ கிருபா நமக்கு அண்ணி வர போறாங்க டா. அதான் அண்ணே ஒரே  மயக்குத்தலயே மிதக்குறாரு. அதுக்கு தான் இன்னைக்கு நமக்கு ட்ரீட் போல “ என மகிழ்ச்சியாக கணித்துச் சொல்ல,
‘அப்படியா’ என கிருபா வாசுவை பார்க்க, வாசு இவர்களை பார்த்தால் தானே, விடு விடு என வெளியே சென்றிருந்தான்.
அப்போது யாரும் உணவகத்தில் இல்லை, இவன் பின்னே இவனை விட்டுவிட கூடாது என வந்தவர்கள், வாசு எதிர்பார்க்காத நேரத்தில் அப்படியே வாசுவின் கால்களை ஆளுக்கு ஒன்றாய் தூக்கி அவர்களின் தோள்களில் அமர்த்தி ‘ஹேய்ய்ய்ய்’ என கத்தினர். 
“ டேய் இறக்குங்க டா. டேய் விடுங்க டா என்னை. “ என வாசு கத்த,
“ நாங்க போதும்னு சொன்னப்போ நீங்க விட்டிங்களா . இல்ல தான, அப்போ உங்கள இப்படியெல்லாம் இறக்கிட முடியாது. “ என நியாயம் பேசினான் கிருபா.
“ டேய் நீங்க என்னை இறக்கிவிட்ட தான் டா நான் ஊருக்கு கிளம்ப முடியும்.”
‘என்னது ஊருக்கா’ என்ற குழம்பிய இருவரும் வாசுவை இறக்கிவிட்டு அவனை பார்க்க. வாசு பதில் சொல்லாமல் வீட்டிற்கு செல்ல பார்க்க, அவன் முன் இரு கைகளையும் விரித்து நின்றிருந்தான் கிருபா.
‘என்ன டா’ என வாசு அவனை பார்க்க, 
“ நேத்து மாதிரி நீங்க என்னை தூக்கி கொண்டு போய் வெளியே கூட விடுங்க, ஆனா எந்த ஊருக்கு போறிங்கனு சொல்லிட்டு போங்க “ என டீல் பேச, 
“ நீ தான் டா கிருபா போக சொன்ன. அதான் போறேன்.” என வாசு சொல்ல,
குழம்பிய கிருபா, “நான் எங்கண்ணா சொன்னேன்.” என கேட்க
“ இப்போ நீ தான் டா என்னை எல்லை மீறி போறிங்கனு சொன்ன. அதான் இன்னைக்கு நம்ப ஊர் எல்லையை தாண்டிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். எல்லாத்துக்கும் நீ தான் காரணம். “  என வாசு கிருபவை சிக்கவைக்க,
கிருபா, “ இது என்ன புது டெச்னிக்கா இருக்கு . ஒளுங்க உண்மைய சொல்லுங்க. இல்லைனா பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும். “ என அவன் முழியை பயங்கரமாக முழித்து பயம் காட்ட,   
“அதெல்லாம் சொல்ல முடியாது போட “ என கெத்தாக சொல்லி கிருபா கணிக்கும் முன் அவன் கையின் அடியின் குனிந்து வெளியே சென்று விட்டான வாசு. 
கிருபாவும் மணியும் வெளியே வந்து வாசுவை பிடிக்க முயற்சிக்க, வாசு பைக்கில் அமர்திருந்தான். 
மணி பைக்கின் பின் பக்கத்தை பலம் கொண்டு இழுக்க, கிருபா முன்னே வந்து சாவியை எடுத்திருந்தான்.
அவனை சாதாரணமாக பார்த்த வாசு பைக்கில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடையை கட்டினான்.
“ டேய் என்ன டா இவரு இப்படி பண்றாரு. கடையை அப்படியே விட்டுட்டு இவர் பின்னாடி போக முடியாதே டா. என்ன டா செய்யறது இப்போ “ என கிருபா மணியை பார்த்து கேட்க,
“விடு டா, இன்னும் எவ்வளோ நாளைக்குனு பார்க்கலாம். எல்லாத்தையும் மனசுலயே வச்சிருக்காரு. எல்லாம் பத்மா அக்காவா தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா மனுஷன் வாய திறக்க மாட்டேன்றாரு. நேத்து நம்ப அவ்வளவு கேட்டும் அந்த அக்கவா பத்தி வாயே திறக்கல. நீ நாளைக்கு எதுக்கும் அந்த அக்கா எங்க வேலை பாக்குறாங்கனு விசாரிச்சு சொல்லு.
சரி முதல வண்டிய நம்ப கடை பக்கம் நிறுத்து. நாளைக்கு அவர் நம்பகிட்ட சிக்கட்டும் பார்த்துக்கலாம். ” என பேசி இருவரும் கடைக்குள்ளே சென்று விட்டனர்.
      வீட்டிற்கு வந்த வாசு எதுவும் கையில் எடுத்து கொள்ளவில்லை ஒரே நாள் சென்று திரும்பிட போகிறான் என அன்று விமல் அனுப்பிய சில முக்கியமான விஷயங்களை மட்டும் லேப்டாப்பில் பதிவேற்றினான்.
      அன்று இரவு வெளியூர் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினான். எப்போதும் சில சமயம் வீடு கட்டும் ப்ராஜக்ட் ஏதாவது வந்தால் இவன் இப்படி செல்வது வழக்கம் தான். அதனால் யாரும் துருவி கேட்கவில்லை. எப்போதும் என்ன விஷயம் எங்கு வேலை என்று சீதாவிடம் சொல்லி செல்வான். ஆனால் இந்த முறை எதுவும் சொல்லவில்லை. ஒரு தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
      கிளம்பும் போது மட்டும் அவன் தாளாமல் சீதாவிடம் கேட்டுவிட்டான்.
“ அம்மா நான் எங்க கிளம்புறேன்னு நீங்க கேக்கல “
“ நீ எப்போவும் எங்க போறனு சொல்லுவ. அன்னைக்கு கடையில நடந்த ஸ்ரீதர் பஞ்சாயத்த கூட என்கிட்ட சொன்ன. 
நீ இப்போ அவசரமா கிளம்புறனா எதாவது முக்கியமானா விஷயமா இருக்கணும். நீ முடிச்சிட்டு வந்து பொறுமையா சொல்லு பா. 
All the best டா கண்ணா “ என சொல்லி இவன் எங்கோ வெளியூர் செல்கிறான் என சாமி கும்பிட்டு நெற்றியில் திருநீர் இட்டார்.
வாசுவிற்கு மனதில் அம்மாவிடம் சொல்ல முடியவில்லையே என குற்ற உணர்வாக போயிற்று. சரி எப்படியும் ஸ்ரீயிடம் சொல்லிய உடன் வீட்டில் சொல்ல வேண்டும், அதுவும் அம்மாவிடமும் கார்த்தியிடமும் முதலில் அலைபேசியிலாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வலு பெற்றது. இறுதியாக அம்மா வாழ்த்தி தானே அனுப்புகிறார் என மனதில் ஒரு ஆறுதல். 
கொச்சின்,
       இரவு உணவு முடிந்து ஸ்ரீபத்மா தேனுவிடம் கதை அளந்து கொண்டிருந்தாள். ஏதோ ஒரு வார பத்திரிகையில் கதை படித்தாளாம், அதை பற்றி தேனுவிடம் சொல்லி இப்போதிருந்தே தேனுவின் குழந்தையிடம் ஃப்ரெண்ட் ஆகிறாளாம். 
எல்லாம் பேசி முடித்த தேனு இறுதியில், “ ஹேய் கேர்ள் அன்னைக்கு பாப்பா விஷயம் சொன்ன போது நீ ஏதோ நினச்சேன்னு சொன்னிய. நீ எல்லாம் அசர ஆளே இல்லையே. என்னனு நினச்சு பீதி ஆனா. உண்மைய சொல்லு, அன்னைக்கு உன் முகத்தை நைஸ்ஸா பார்த்துட்டு தான் இருந்தேன். ஏன் அப்டி ஆனே ? என கட்சிதமாக பாயிண்ட்டை பிடிக்க, ஹாஸ்டலில் உருளை கிழங்கு சிப்ஸை கொறித்து கொண்டிருந்த ஸ்ரீயோ ஒரு நிமிடம்  ஸ்ரீ ஜெர்க் ஆகி விட்டாள். 
‘என்னடா இந்த பேத்தக்குட்டி இப்படி உஷார் ஆயிடுச்சு. இவ இப்போ தான் பாப்பா வர சந்தோஷத்துல இருக்கா. இவள வேற எதுவும் நினைக்க விட கூடாதே, ஏதாவது சாமளிக்கணும்.’ என ஸ்ரீ நினைக்க, வாயில் வந்ததை சொன்னாள். 
“ அதுவா நான் ஒரு போட்டோகிராபி காம்படிஷன்ல கலந்துக்கிட்டேன்னு சொன்னேன்லே, அது வேற லேட்டா சப்மிட் பணிட்டேன்னா. அத நினச்சிக்கிட்டே உட்காந்ததால, இந்த கார்த்தி பையன் வந்து சொன்னதும் கொஞ்சம் பீலிங்க்ஸ் ஓவர் ஆயிடுச்சு. அவ்ளோ தான். “ 
“ இது உன் பதிலே இல்ல கேர்ள். ஐ நோ நீ எப்போ எப்டி ரீயக்ட் பண்ணுவேன்னு. நீ என்கிட்ட சொல்ல தயங்குறனா சம்திங் நான் ஹர்ட் ஆக கூடாதுனு நினைக்கிற. எனக்கு உன்ன பத்தி தெரியும். 
ஒண்ணு மட்டும் சொல்றேன், அது மட்டும் மனசுல வச்சுக்கோ, ஃபர்ஸ்ட் நான் உன் ஃப்ரெண்ட் அப்றோம் தான் உன் அண்ணி. I will be always there for you. “ என தேனு சொல்ல, ஸ்ரீக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன மாதிரி உணர்ந்தாள் என சொல்ல முடியவில்லை. அந்த நொடியில் அவள் இப்படி உறவுகள் அமைய ஆசீர்வதிக்க பட்டதாய் உணர்ந்தாள்.
ஒரு நொடி கண்களை மூடி திறந்தவள், “ பேத்து, யெஸ் நான் ஒரு விஷயம் எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருக்கேன். நடந்தா சொல்றேன். பாசிட்டிவ்வா நடந்துச்சுனா சொல்றேன்.” என மனம் கேளாமல் முழுமையாக சொல்லமுடியாமல் ஏதோ இப்படி சொல்லிவைத்தாள்.
“ஓகே டா. நீ கூல் ஆகு. நான் எதுவும் கேக்கல. எதுவா இருந்தாலும் அப்றோம் பார்த்துக்கலாம். நல்லா சாப்பிடு , உடம்ப பார்த்துக்கோ டா. டேக் கேர். குட் நைட் டியர். “ என தேனு முடித்தாள்.
தேனுவிடம் பேசிய பின் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி. தனக்காக நிபந்தனையற்ற அன்பு செலுத்த ஒரு தோழி இருக்கிறாளே அவளிடம் மறைக்கும் படி ஆயிற்றே என்ற உணர்வு. 
எல்லாம் விட அவள் அப்பா சுந்தரம். அவரை நினைத்தால் இன்னும் குற்ற உணர்வு தான். தேனுவிற்கு முன் என்ன இப்போதும் அவர் தான் இவளின் முதல் நண்பர், அவரிடமும் சொல்ல முடியவில்லையே என ஒரு எண்ணம்.
சரி இது வரை வந்தாயிற்று வாசு என்ன சொல்ல போகிறான் என தெரியவில்லை, ஆனால் அவன் என்ன சொன்னாலும் அவன் உணர்வுகளை மதிக்க வேண்டும் என முடிவு செய்தவள், அதற்கு பிறகு வேறு எந்த சிந்தனையும் மனதில் வரவிடாது அவள் புகைப்பட போட்டிக்காக எடுத்த போட்டோஸ்களில் மூழ்கி விட்டாள்.  
திருச்சி,
ஏர்போர்ட்டின் வாசலில் டாக்ஸியை விட்டு இறங்கி ஏர்போர்ட் நுழைவாயிலில் வந்து நின்றான் வாசுதேவன் . இது வரைக்கும் எத்தனையோ முறை இங்கு வந்து சென்றிருக்கிறான். ஆனால் இப்போது ஒரு மனதில் ஒரு உற்சாகம் வந்து ஒட்டி கொண்டது. 
அவள் எங்கு வேலை செய்கிறாள் என தெரியும், அவள் பாங்க் முகவரியெல்லாம் நெட்டில் பார்த்திருந்தான். ஆனால் அவளை பார்த்தால் எப்படி பேசுவது என தெரியவில்லை. ஒரு ஆர்வத்தில் கிளம்பி வந்துவிட்டான், இங்கு வந்ததிற்கு பிறகு என்ன செய்ய போகிறான் என இவனுக்கே தெரியவில்லை. என்ன டா பேசாமல் திரும்பி போய்விடலாமா என இவன் எண்ண, இன்னொரு மனமோ ‘கிளம்பு டா லூசு பையலே’ என திட்ட, அவன் உதட்டில் தானாக ஒரு முறுவல். 
அவன் ஏர்போர்ட்டில் உள்நுழையும் வேளை சரியாக ஒரு மொபைல் அழைப்பு…
என்னானதோ ஏதானதோ ஒன்னும் புரியாமலே 
அல்லாடுறேன் உன்னால நான் சொல்ல தெரியாமலே 
என கரோக்கி ரிங்டோன் இசைக்க, அதை எடுத்து பார்த்தவனின் புருவம் சுருங்கியது.
   

Advertisement