Advertisement

             “வாசு…சின்ன ராசா…வா வந்து இந்த பூண்டு தோல நீக்கி தாயேன்.” என சுந்தரி ஆச்சி வாசுவை அழைத்து கொண்டிருந்தார். அவன் பின்கட்டில் தண்ணி தொட்டிக்குள் அமர்ந்து கழுவி கொண்டிருந்தான்.
    “நான் வேலையா இருக்கேன் ஆச்சி, அம்மாட்ட சொல்லுங்க.” என வாசு பதிலுக்கு கத்திக்கொண்டிருந்தான். இவன் போடும் சத்தத்தை பார்த்து உள்ளே இருந்து எழுந்து வந்தார் ஆச்சி. 
“இதுக்கு தான் ராசா உன்ன ஒரு கல்யாணம் பண்ண சொல்றேன். இப்டி நீ சிரமப்பட வேண்டாம்ல.”
“ஓஹ் இந்த தொட்டி கழுவரதுக்காக நான் ஒரு பொண்ண கட்டிகனுமா. ஏன் ஆச்சி இப்டி ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாட பாக்குறிங்க. மனசாட்சி இல்லையா உங்களுக்கு எல்லாம்.” என தொட்டியை கழுவியபடியே சுந்தரி ஆச்சியிடம் வாயாடினான்.
“நான் எங்க ராசா அப்படி சொன்னேன். நீ ஒரு பொண்ண பார்த்து கட்டிக்கிட்டேனா, நானும் உன் பொண்டாட்டியும் கோவில் குளம்னு ஊர் சுத்துவோம்ல, இப்படி நீ தொட்டி கழுவி சிரமபடுறத விட்டுட்டு நீ பூண்டு உரிச்சி சட்னி செய்யற ஈசியான வேல பாக்கலாம்ல. அதுக்கு தான் சொன்னேன் ராசா. ”    
கையில் இருந்த விளக்குமாரோடு வெளியே தவ்வி குதித்தவன் சுந்தரி ஆச்சியை முறைத்தபடி, “ ஓஹ் அப்போ நீங்க ரெண்டும் பேரும் ஊர் சுத்துவிங்க…நான் சட்னி ஆட்டணும். என்ன ப்ளானிங்க்..என்ன ப்ளானிங்க்.. 
சுண்டலி… இருங்க உங்க வீட்டுக்காரர் ஏற்கனவே ரெண்டாவதா ஒரு ஆச்சிய எனக்கு கொண்டு வர ஆர்வமா இருக்குறதா அன்னைக்கு சொன்னாருல,   நீங்க இப்படி ஊர் சுத்த போயிட்டா அவருக்கு ரொம்ப வசதியா இருக்கும், அதனால இந்த விஷயத்த அவர் காதுல போடுறேன். “ என சுந்தரி அச்சியை தாளித்தான்.
அப்படி ஒரு சிரிப்பு சுந்தரி அச்சிக்கு. 
“இப்போ எதுக்கு இந்த ஆணவச்சிரிப்பு.” 
“ இது ஆணவ சிரிப்பு இல்ல. இது ஆனந்த சிரிப்பு ராசா. உங்க தாத்தாவால ஒரு பொழுது கூட என்ன விட்டு இருக்க முடியாது ராசா. அந்த காலத்துலேயே உங்க தாத்தா கிட்ட பேசி கல்யாணம் கட்டிக்கிட்டேன் நானு” என சொல்லி இந்த எழுபது வயதிலும் ஒரு வெட்கம் கலந்து முகத்தோடு சன்ன சிரிப்போடும் பேரன் முகத்தை தவிர்த்து தரையை நோக்கி சொன்னார் சுந்தரி ஆச்சி.  .
குதூகலமானன் பேரன், “ ஆச்சி உங்கள தாத்தா ஆசப்பட்டு கட்டிக்கிட்டாருனு தெரியும். ஆனா இந்த விஷயம் இவ்ளோ நாளா தெரியாதே. சொல்லுங்க சொல்லுங்க. “ என ஆர்வமாய் விளக்குமாரை தூக்கி ஓரத்தில் வைத்தவன் முகத்தை கழுவிக்கொண்டு அப்படியே ஆச்சியின் காலடியில் அமர்ந்தான். 
பின்கட்டு திண்டில் அமர்ந்திருந்த சுந்தரி ஆச்சி உழைத்து வேர்த்து இருந்த வாசுவின் தலையை வாஞ்சையாய் வருடினார். அப்படியே தன் முந்தானையால் அவன் தலையை துவட்ட, வாசு அதை விலக்கி இவரை மேலும் சொல்லுமாறு அவசர படுத்தினான்.
“சொல்றேன் ராசா. உங்க தாத்தாவா முதல எங்க பார்த்தேன் தெரியுமா.”
“சொன்னா தானா தெரியும்.”
“பொறுமையா கேளு ராசா. சரியான அவசர குடுக்கு நீ. “
“கூல் கூல்…சொல்லுங்க சுண்டலி.”
“இப்படி தாண்டா உங்க தாத்தா என்ன முதல எங்க வீட்ல வச்சி வம்பு இழுத்தாரு. எனக்கு கோவம் வந்துடுச்சு, என்ன விட ஏழு வயசு மூத்தவரு, அதனால வீட்டாலுங்க முன்ன அவரோட சண்ட போட முடியல. பேசாம போயிட்டேன்.”  
“எங்க தாத்தா அப்போவே அப்படியா.. அப்றோம் என்னாச்சு.”
“அப்புறம் என்ன, அவர எங்கயாச்சும் பார்த்த நல்ல கேள்வி கேக்கணும்னு நினைச்சேன். வசமா ஒரு நாள் தன்னந்தனியா வாயாகட்டுல என்கிட்ட மாடிக்கிட்டாரு. நல்லா சண்ட போட்டேன், அதுக்கு ஏன் வீட்ல வந்து சொல்லி குடுத்துட்டாரு.” சோகமாக முடித்தார் ஆச்சி.
“ஹா.. ஹா.. ஹா.. தாத்தா அப்போவே இவ்ளோ வில்லத்தனம் பண்ணாறா.”
“ராசா அவர் ஒண்ணும் வில்லன் இல்ல. அப்படியெல்லாம் நீ அவர சொல்லக்கூடாது. “ முகத்தை தூக்கி வைத்து சொன்னார் சுந்தரி ஆச்சி.
“சரி சுண்டலி…நான் அப்படி சொல்லல..மேல சொல்லுங்க.” சமாதான உடன்படிக்கையில் உடனடியாக கையெழுத்திட்டான் வாசு.
“நீ நல்லா புள்ள ராசா. நான் சொன்னா உடனே கேட்டுக்கிட்ட. அப்புறம் வீட்ல எல்லாரும் என்ன திட்ட உங்க தாத்தா முன்னாடியே அழுதுட்டேன். 
அவரு ஏதோ விளையாட்டா சொல்ல, இப்படி நான் அழுகவும் அவருக்கு மனசு கஷ்டமாயிடுச்சு.
பிற்பாடு நான் அவர பார்த்தாலே ஓடிடுவேன். அவரு வம்புக்கே போக மாட்டேன். இத கவனிச்சு ஒரு நாள் என் கூட வந்து பேசுனாரு. மன்னிப்பு கேட்டாரு. நான் பதறி போயிட்டேன். ஊருக்குள் நேர்மையான மனுஷன். அவர் சொல்லுக்கு ஊருக்குள்ள அவ்ளோ மதிப்பு, அப்படி ஒரு நியாயமான மனுஷன். அவரு வந்து என்கிட்ட மன்னிப்பு கேட்டதும், அப்படியே ஆடி போயிட்டேன். 
அப்புறோம் நான் எங்கயாச்சும் போன இவரு என் கண்ணுல படாமா போயிடுவாரு. இப்படியே போக்கு காட்டிட்டு இருந்தாரு, எனக்கு மறுபிடியும் கோபம் வந்துடுச்சு, நம்ப என்ன பேய்யா இப்படி இவரு நம்பல பார்த்து ஓடி போய்டுராரேனு .
மறுபிடியும் ஓடை பக்கம் தனியா என்கிட்ட மாட்டிக்கிட்டாரு. ஏன் நான் வழில வந்தா என்ன பாக்காம ஓடுறிங்கனு சண்ட பிடிச்சேன்.”
“தாத்தா மறுபிடியும் உங்க வீட்ல வந்து போட்டு குடுத்துட்டாறா…மறுபிடியும் உங்கள ஆழ வச்சிட்டாரா ?” 
“அட போ ராசா… அவரு நான் சண்ட பிடிச்சதுக்கு ஒண்ணுமே என்ன திருப்பி சொல்லல. நான் என்ன சொன்னாலும் அமைதியா கேட்டுக்கிட்டு நின்னாரு. எனக்கு முதல ஒண்ணும் புரில.
இதே மாதிரி அடிக்கடி அவரு கூட சண்ட பிடிக்க ஆரம்பிச்சேன். என்ன சொன்னாலும் அமைதியவே கேட்டுகிட்டு நிப்பாரு, எனக்கு சந்தோசமா போயிடும்.” என குதூகலித்தார் சுந்தரி ஆச்சி.
“சுண்டலி.. அப்போ நீங்க தான் எங்க தாத்தாவ வச்சி செஞ்சிருக்கிங்க…பாவம் எங்க தாத்தா.” என இவன் சிவசு தாத்தாவிற்காக அனுதாப பட,
“வாயிலயே போடுவேன்…நான் ஒண்ணும் உங்க தாத்தாவ பாடுப்படுத்துல…சும்மா ஒரு ஆசைக்கு தான் திட்டுவேன்.” என சுந்தரி ஆச்சி முறுக்கி நிக்க, திட்டுவதெல்லாம் ஒரு ஆசையா என இவன் தாத்தாவை  நினைத்து பரிதாபம் கொள்ள, திரும்ப வாசு தான் சமாதான பட்டர்பிளையை பறக்க விட்டான்.
அதில் மலை இறங்கிய ஆச்சி அவர் கதையை தொடர்ந்தார். 
“நான் என்ன பேசுனாலும் உங்க தாத்தா பொறுமையா போய்டுவாரு…அதானால ஒரு நாள் நானே கட்டிக்கிறிங்களானு கேட்டேன்.”
“அப்போ ஒரு மனுஷன் எவ்ளோ அடுச்சாலும் தாங்கரான்…அதனால இவன்  ரொம்ப நல்லவன் டானு… இப்படி கேட்டுருக்கிங்க.” என வடிவேலுவின்  பாணியில் சொன்னவன், அச்சியின் கையால் இரு கொட்டு வாங்கிய பின்னர் அடங்கினான்.
“மேல சொல்லுங்க…மேல சொல்லுங்க..” என வாசு ஆர்வம் காட்ட,
“நான் கேட்டதும் இத சொல்ல உனக்கு இவ்ளோ நாளானு கேட்டாரு பார்க்கணும், நான் வீட்டுக்கு ஓடியே போயிட்டேன்.”
ஏதோ இப்போது தான் நடப்பது போல சுந்தரி ஆச்சி முகத்தை கையை வைத்து மறைத்து கொண்டு சிரித்தார்.
அதை அவரின் மடியில் சாய்ந்து கொண்டு கண் எடுக்காமல் ஆசையாய்  பார்த்திருந்தான் வாசு.
“அப்புறம் என்ன கல்யாணந்தான். இது வரைக்கும் என்னை அப்படி பார்த்துக்குராரு உங்க தாத்தா.” என சொல்லும் போது அந்த ‘அப்படி’ யில் அத்தனை அழுத்தம். 
அந்த கருத்த பேரிளம் பெண்ணின் சுருக்கம் நிறைந்த முகத்தில் அவ்வளவு பூரிப்பு, உதட்டில் ஒரு வாடா புன்னகை, ஒரு நிறைவு.   
இப்படி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என எண்ணம் கொண்ட மனது அனிச்சை செயலாய் ஸ்ரீபத்மாவை தான் நினைத்தது. எத்தனை நம்பிக்கையாய் பேசி சென்றாள் அன்று.
“பாப்பா மாதிரியே உனக்கும் ஒரு கல்யாணம் பண்ணி பார்த்துட்டேனா, நாங்க இன்னும் சந்தோசபடுவோம். உனக்கு இன்னும் ஒண்ணும் கூடி வர மாட்டிங்குதுனு கவலபடாத ராசா. 
ஒரு விசயம் தள்ளி போகுதுனா, உனக்கு இப்போ கிடைக்கிற நல்லத விட பெருசா நல்லது நடக்க சாமி வழி காட்டுவாருனு ஒரு நம்பிக்கை இருக்கு.
நீ வேணா பாரேன் ராசா உன்ன ரொம்ப நேசிக்கிற பொண்ணா அமையும் பாரேன். நீங்க சந்தோசமா இருக்கறதை பார்த்தே நாங்க நூறாயிசு வாழ்வோம் சாமி.” என வாஞ்சையாய் வாசுவின் தலையை வருடினார். அவரின் கண்களில் மெல்லிய நீர் படலம்.
அவருக்கு வாசுவின் திருமணம் விரைவில் நடக்கவேண்டும் என்று அவ்வளவு ஆசை. தகப்பனுக்கும் பிள்ளைக்கும் முட்டிக்கொள்வதால், சீக்கிரம் இவர்களின் உறவும் சீர்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் தாய்யுள்ளம்.
அன்று இரவும் கனிய வாசுவிற்கு வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. தோப்பு வீட்டிரற்கு சென்று விட்டான்.
ஸ்ரீபத்ம ஊருக்கு கிளம்பி ஒரு வாரம் முடிந்திருந்தது. வாசுவும் அவ்வப்போது அவள் சொன்னதை நினைத்து பார்க்கிறான் தான். ஒரு மனம் இது சரிவருமா என கேள்வி கேட்க இன்னொரு மனம் சரி என்று தலையாட்ட, இவனுக்கு ஸ்ரீயுடன் மனம் ஒத்து வாழ முடியுமா என பெரிதும் யோசித்தான். 
இந்த ஒரு வாரமாக யோசித்து ஒரு வழியாகி விட்டான். எல்லாம் ஸ்ரீபத்மாவிற்காக தான். இவன் எந்த முடிவெடுத்தாலும் அவளுக்கு என்றும் சங்கடம் வந்துவிடக்கூடாது என மனம் விடாமல் நினைத்தின் விளைவு இத்தனை அவகாசம்
ஒரு வழியாக ‘நீ பொரிச்சா நான் பொரியரேன் டி என் ராங்கி.’ என முடிவு செய்து விட்டான். என்ன கோதண்டம் தான் கொஞ்சம் ஆடுவார், அவருக்கும் ஸ்ரீயின் விருப்பமும் இதில் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால் நிச்சயமாக ஒத்து கொள்வார் என புரிந்தது.
அந்த நட்டநடு இரவில், குளிர் காற்று அவனை தழுவ, மனம் முழுவதும் புது உற்சாகம் பரவ, சிறிது தூரம் நடந்தான். 
அவனின் கனவு வளர்ந்து இருந்த இடத்தை அடைந்தான். அதை தொட்டு பார்த்தான், இது பற்றி கூட ஸ்ரீக்கு பெரிதாக தெரியாது. இதை வைத்து அவனுக்கு தலைக்கு மேல் நிறைய  வேலை இருக்கிறது. கிட்ட தட்ட கத்தியில் நடப்பது போல் சில வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறான். சிறிது பிசக்கினாலும் பிரச்சனையே இல்லை என்றாலும் பிரச்சனை ஆக்குவர். அதனால் இவன் மிக கவனமாய் இருக்கிறான். எல்லாம் நன்றாக நடந்தேற வேண்டும் என்ற பிராத்தனை மட்டும் இப்போது இவனிடம். 
ஆனால் இதன் ஊடே ஸ்ரீயை நினைத்தாள் மனதில் ஒரு சாரல். அவள் இங்கு வரும் வரை ஏன் காத்திருக்கு வேண்டும் பேசாமல் இப்போதே ஃப்ளைட் டிக்கெட் எடுத்து விடுவோமா, என்ன ஒரு நாள் காத்திருந்து நாளை தான் ஃப்ளைட்டில் போக முடியும்.  
ஒரு நாள் கடப்பது வாசுவிற்கு மிகவும் கடினம் என்றே தோன்றியது. 
‘ ச்சை இந்த ராங்கி சும்மா இருந்தவன இப்படி ஆக்கிட்டா. எப்படி மூன்று மாசம் பொறுத்து என்கிட்ட சொன்னா.’ 
ஃப்ளைட் டிக்கெட்ஸ் பார்த்தான், நாளை இரவு தான் கிடைத்தது. உடனே பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை பதிவு செய்துவிட்டான்.  
பிறகு தான் தோன்றியது கார்த்தியிடம் இன்னும் சொல்லவில்லையே, சரி அவன் தான் குழந்தை வரப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறானே, இப்போது இதை சொன்னால் வீட்டில் நிச்சயம் பேசுவான். ஸ்ரீக்கு தெரியும் முன்னே கோதண்டம் ஒரு ஆட்டம் போடுவார். அதனால் அவன் மனம் நோக கூடாது. அவள் வந்துவிட்டாள் இருவரும் சேர்ந்தே இரு வீட்டினரிடமும் பேசலாம். இப்படி பலதும் யோசித்தான்.
எல்லாவற்றையும் விட முதலில் வேண்டாம் என மறுத்த இவனிடம் பொறுமையாய் சொல்லி இவனை இப்படி ஆகியவள் ஸ்ரீ தானே, அவளிடம் நேரில் சொல்லும் ஆர்வம் அதிகமாக இருந்தது. அவள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் மேலோங்க, சரி கார்த்தியிடம் பிறகு சொல்லி கொள்ளலாம் என முடிவு செய்து விட்டான்.   
இவன் இதையெல்லாம் நினைத்து அங்கே இங்கே என சுற்றி தோப்பு வீட்டிற்கு வந்தால் மணி மூன்று, என்ன மணி மூணு தானா என தோன்ற எப்படி தூங்குவது என மீண்டும் நகர் வலம் சென்றான், அதுவும் காதில் ஹெட் செட் போட்டு ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்’ என்ற பாட்டை போட்டு அலைபறையை கூட்டினான் . 
பணி இரவு, ஸ்ரீயின் நினைவு என எங்கந்தமாய் இருந்தவன் கவனத்தில் பட்டார் வழியில் இருந்த அரசமரத்தடி பிள்ளையார்.
சரி இப்போது தான் வாழ்க்கையில் உருபிடியாக ஒரு முடிவு எடுத்துள்ளோம், அவருக்கு ஒரு அப்ளிகேஷன் பார்சல் செய்வோம் என நினைத்தவன், ஹெட் செட்டை கழட்டி பத்திரபடுத்தி, வேட்டியை இறக்கி விட்டு, அவர் முன்னே கரம் கூப்பி நின்றான். 
விதியோ,  “அடேய் தம்பி என்ன டா நீ இப்படி ஆயிட்ட…உன்ன வச்சு fun பண்றோம்” என சிரிக்க, 
பிள்ளையாரோ “ நாம்ப fun க்கே fun பண்ணுவோம் வாசு, don’t worry my boy ” என ஹேப்பியாக சிரித்து கொண்டிருந்தார்.
இது எதுவுமே தெரியாத ஸ்ரீபத்மாவோ ஹாஸ்டாலில் பப்பரப்பா என ஆனந்த சயனத்தில் இருந்தாள். 
 
  

Advertisement