Advertisement

           என்னமாக இருக்கிறான், Wowww…my prince charming வாசு. வஞ்சனையே இல்லாமல் அவனை என்னமாக நோக்கினால் ஸ்ரீ. ஆனால் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. எல்லாம் கண் அறியும் மொழி மட்டுமே.
           வாசு பைக்கை கடையின் முன் நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். இவளும் ஆவலாக அவனை தான் பார்த்திருந்தாள். வந்தவன் வெளியே இருந்தே இவள் இருப்பதை பார்த்து, வரவேற்கும் விதமாக தலையை அசைத்து புன்னகையுடன் கடையின் உள் நுழையும் சமயம். யாரோ அருகில் இவனது அரிசி கடையில் இருந்து கூப்பிடவும் அங்கே சென்று விட்டான்.
‘அடேய் எவன் டா அவன் என் மாமஸ்ஸ கூப்பிட்டது. இங்க நான் ஒருத்தி அப்போ இருந்து வைட் பண்ணிட்டு இருக்கேன், எவன் பார்த்த வேல டா இது’ என ஆற்றாமை பொங்க எழுந்தே விட்டாள் ஸ்ரீ.
வெளியே வந்து முன்கூரையின் அடியில் நின்றாள். சத்தியமாக அவ்வளவு குழுமையாக இருந்தது. ஒரு இரண்டு அடி எடுத்து வைத்தால் நிச்சயமாக வெயிலின் தாக்கம் நன்றாக தெரியும். ஆனால் இந்த தென்னை கூரையின் அடியில் தெரியவே இல்லை. It was a like a magic roof. 
ஒரு நொடியேனும் கண்களை மூடினாள், அது இளம் காற்றின் தென்றல் வீசும் இடம். அது அவளை கொஞ்சம் அசுவாசப்படுத்த, லேசாக கண்களை திறந்தாள்.
பார்த்தவளுக்கு அவனை அப்படியே ஒரு போட்டோ எடுத்தால் என்ன என்று தோன்றியது. 
எப்போதுமே வேட்டியும் சட்டையுமாய் மீசையை முறுக்கி திரிபவன், அன்று அசல் ப்ரொஃபஷனல் லுக்கில் வந்திருந்தான் . லைட் பிங்க் ஷர்ட் , க்ரே நிற பாண்ட், டக் – இன் செய்து, மீசையையும் தாடியையும் பெரிதாக இல்லாமல் நன்றாக டிரிம் செய்து, தலையை நன்றாக வாரி, ஷூஸ் அணிந்து, மெட்டாலிக் சில்வர் நிற கை கடிகாரம் அணித்து இவனா அவன் என்று யோசிக்கும் அளவு தான் இருந்தான். 
அங்கே மணி  ஏதோ புதுசாக மூட்டை வந்திருக்கிறது என்று காட்ட கூப்பிட்டான். அங்கே ஒரு சின்ன டெம்போ இருந்தது.
‘டேய் நீயா தம்பி வில்லதனம் பண்ணது.’ என மணியை ஸ்ரீ பார்க்க, மணி அதை கவனிக்கவில்லை.
மணி வாசுவிடம் என்ன சொன்னானோ, மணியும் வாசுவும் சட்டையை கலட்டி தாமதிக்காமல் டெம்போவில் இருந்து மூட்டயை இறக்க ஆரம்பித்திருந்தனர். 
       ‘அடேய் உன் சின்சியரிட்டிக்கு ஒரு அளவு இல்லயா டா,  நீ என்னடா இப்டி உழைக்கிற. இப்பவே கண்ண கட்டுதே. ’ என நின்று பார்த்தவள். அவன் ஒரு பத்து மூட்டையை இறக்கி முடித்ததும் தான் சட்டை மாற்றி கொஞ்சம் முகம் கழுவி வந்தான். 
வந்தவன் இவள் வெளியே நிற்பததை பார்த்து, 
“வா ஸ்ரீ, வா வா உள்ள வா.” என மகிழ்ச்சியாக அழைக்க, 
“வரேன் மாமா “ என புன்னகையுடனே உள்ளே நுழைந்தாள்.
இருவரும் இவள் முன்னே உட்கார்ந்திருந்த ஊஞ்சல் இருக்கையிலே அமர, இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர். 
“ ஏதாவது சாப்டியா ? “
“ ஃபுல் மீல்ஸ் அச்சு. எல்லாம் உங்க தம்பிகள் நல்லா கவனிச்சாங்க மாமா. “
“ ஹா அப்டியா . இப்போ தானா கடைக்கு ஃபர்ஸ்ட் டைம் வர. எப்டி இருந்துச்சு இங்க ?” அவன் சிறு எதிர்பார்புடன் கேட்க, 
“ ரியல்லி நல்லா இருந்துச்சு மாமா. உள்ள இருக்க எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸ்ஸும் நல்லா இருக்கு மாமா. “ உளமார்ந்து சொன்னாள் ஸ்ரீ.
“இரு வரேன்” என சமைக்கும் இடத்திற்கு உள்ளே சென்றான்.
உணவகம் வரை வந்தவளுக்கு எப்படி இவனிடம் சொல்வது என்றே தெரியவில்லை. கொஞ்சம் யோசித்தவள், சரி நாம் எதுவும் தனியாக யோசித்து பெரியதாக குழம்ப வேண்டாம். 
‘எப்போவும் போல பேசுவோம், ஒரு ஃப்லோல வந்துச்சுனா வரட்டும். ரொம்ப ஸ்ட்ரெஸ் அகக்கூடாது’  என முடிவு செய்தவள் அவன் வரும் வரை காத்திருந்தாள்.
உள்ளே சென்றவன் ஒரு இரண்டு நிமிடத்தில் வந்தான்,
“ இந்தா ஸ்ரீ சாப்பிடு. இன்னைக்கு நமக்கு கிடச்சா ஸ்வீட் நியூஸ்காக “ என சொல்லி  இவள் முன்னே கேரட் அல்வாவை வைத்தான். 
அதை பார்த்தவள், ’ஒரு வேலை நமக்கு அல்வா குடுத்துருவானோ. அத தான் இப்படி சிம்பாலிக்கா சொல்றானோ’ என நினைத்து அவனை பார்த்தாள், அவனும் ஒரு கிண்ணத்தில் அல்வாவை வைத்து சாப்பிட அயத்தமானான் 
‘ஹப்பா டா. அவனும் அல்வா சாப்பிட்றான். சோ நோ ப்ராப்ளம்.’ என தன்னை தேற்றியவள்,
“மாமா பிளீஸ், மதியம் வீட்ல சாப்பிட்டு, இங்க வந்து ஒரு மினி மீல்ஸ் சாப்பிட்டு ரொம்ப ஹெவி மாமா, எனக்கு ஒரு ஸ்பூன் போதும்.” என கெஞ்சினாள்.
“அதுல பாரு கம்மியா தான் இருக்கு. முடியும் சாப்பிடு ” என ஊகினான்.
‘அடேய் நானே கொஞ்சம் இருக்க தொப்ப தெரிய கூடாதுனு பார்த்து பார்த்து டிரஸ் பண்ணிட்டு வந்தா, இப்டி பண்றியே டா.’  என நினைத்தவள் வேறு வழியே இல்லாமல் அவன் கொடுத்த அல்வாவை சுவைக்க ஆரம்பித்தாள்.
வாயில் வைத்தவுடன் அல்வா ருசிக்க, ‘டேய் இந்த டேஸ்ட்க்குனே உன்ன காட்டிக்கலாம் டா’ என நினைத்தவள் அவன் அறியாமல் அவனை  கண்களில் ஆவல் மின்ன நோக்கினாள் .
“ என்ன ஸ்ரீ நல்லா இருக்கா. வீட்ல அம்மா செஞ்சாங்க. பசங்களுக்கு கொடுக்க கொண்டு வந்தேன். ம்ம்.. அப்றோம் உன் ஜாப்லாம் எப்டி போய்ட்டு இருக்கு. இரண்டு வருஷம் கொச்சின்ல இருந்துட்ட , எப்டி இருக்கு ஊரு. “
“ஸ்வீட் நல்லா இருக்கு மாமா . ஜாப்லாம் நல்லா போய்ட்டு இருக்கு. இரண்டு வருஷம் எப்படி போச்சுனே தெரில மாமா. இப்போ மூனாவது வருஷம் நல்லா போகுது. ஊரெல்லாம் நல்லா இருக்கு. ஒரே க்ரினரி தான், பீச், பார்க், போட்டிங்னு நல்லா இருக்கும்.”
“அப்போ நல்லா ஊர் சுத்துர நீ” என புன்னகைத்து கொண்டே வினவினான் வாசு.
“ஆமா மாமா. எனக்கு ரெண்டு குளோஸ் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. அபிதா அண்ட் ஷங்கர். ரெண்டு பேர் கூட தான் நிறையா ஊர் சுத்துவேன். டைம் இருந்தா வீகெண்ட்ஸ்லாம் எல்லாரும் எங்காவது போவோம் மாமா. உங்களுக்கு டைம் இருக்கப்போ அத்த, பெரிய மாமா, தாத்தா, ஆச்சி எல்லார்தையும் கூட்டிட்டு வாங்க, ஒன் வீக் நல்லா சுத்தி பாக்கலாம்.”  சிறு ஆர்வத்துடன் ஸ்ரீ கூறினாள் .
“ம்ம் பாக்கலாம் ஸ்ரீ . அப்படி ஏதாவது பிளான் பண்ணா கண்டிப்பா சொல்றேன். வீட்ல எல்லாம் கூட்டிட்டு போயிருக்கியா. எல்லாம் என்ன சொன்னாங்க  ” 
“இந்த டூ இயர்ஸ்ல அம்மா அப்பாகிட்ட கெஞ்சி அவங்களே ஒன் இயர் முன்னாடி தான் ஒன் வீக் வந்து இருந்தாங்க மாமா. அந்த ஒன் வீக் நல்லா போச்சு மாமா. 
ம்ம்…அப்றோம் இந்த ஹோட்டல் ஐடியா எப்டி வந்துச்சு. கூட அரிசி கடையும் வச்சிருக்கீங்க. உங்க புரஃபஷன்க்கும் இப்போ உங்க வேலைக்கும் சம்பந்தமே இல்லையே. எப்டி இந்த ஐடியா வந்துச்சு. “
“சின்ன வயசுல இருந்தே இயற்கை விவசாயத்துல ஒரு ஆர்வம் இருந்துட்டே இருந்துச்சு. சோ சிங்கப்பூர்ல இருந்து வந்ததும் ஸ்டார்ட் பண்ணனும்னு ஒரு ஐடியா இருந்துச்சு, ஆனா வேற வேலையில இது கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. 
இங்க பக்கத்துல நம்ப கடையிலே இருக்கறது எல்லாம் இயற்கை விவசாயம் முறையில வந்தது தான். அரிசி, காய், கீரை எல்லாம் நம்ப தோட்டம் அப்றோம் தெரிஞ்சவங்க தோட்டத்துல இருந்து வரது தான்  .  
இன்னும் இந்த ரெண்டு கடையும் பெருசாக்கனும்னு வேற சில ஐடியாஸ் கூட இருக்கு.  ஃப்யூச்சர்ல பார்ப்போம்.” கண்களில் கனவுடன் சொன்னான் வாசு.
“ நீ என்ன தேனு கல்யாணத்துல காமெராவோட சுத்திட்டே இருந்த.“ புன்னகையுடன் கேட்டான் வாசு.
“ஆமா மாமா, நிறையா போட்டோஸ் எடுத்தேன். போட்டோக்ரபில நிறையா இண்டரெஸ்ட் இருக்கு. ஆனா ரொம்ப ப்ரொஃபஷனல் மாதிரி இல்ல. ஏதோ தோன்றது எடுப்பேன். அது ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம். “ கண்கள் மின்ன சொன்னாள் ஸ்ரீ.
“ அவ்ளோ பிடிக்குமா. அப்போ ஒரு நாள் நம்ப தோட்டத்துக்கு வா. அங்க நிறையா பாக்கலாம் நீ. ஆனா வரும் முன்னாடி சொல்லிடு, நான் ரெடியா இருப்பேன்.”
“ஓகே மாமா. கண்டிப்பா சொல்றேன்”
அதற்குள் அல்வாவை முடித்திருந்தனர் இருவரும். ஒரு சிறு மௌனம் அங்கே நிலவியது. இருவருக்கும் இதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. 
ஸ்ரீ தான் ஆரம்பிதாள், “அப்றோம் மாமா. தேனு கல்யாணம் முடிஞ்சது. நெக்ஸ்ட் உங்களுக்கு தான். வீட்ல பொண்ணு பாக்குறாங்களா ?”
முகம் கொஞ்சம் இறுகியதோ வாசுவிற்கு, 
அவ்வளவு நேரம் நன்றாக புன்னகையுடன் பேசியவன், சிறிது அமைதியாக ஸ்ரீயை பார்த்தான்.
அவன் பதிலுக்காக பார்த்துக்கொண்டு இருந்து ஸ்ரீக்கு தான் தவறாக ஏதாவது கேட்டுவிட்டோமா என்று இருந்தது.  
அதற்குள் இயல்பு நிலைக்கு வந்தவன், “ இப்போ ஒண்ணும் இல்ல ஸ்ரீ. அப்றோம் பொறுமையா பார்துக்கலாம். 
அப்றோம் நீ சொல்லு உனக்கு எப்படி வேணும் மாப்பிள்ளை. கார்த்தி, மாமாலாம் எப்படியும் இனிமேல் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. நீ எப்படி எதிர்பார்க்குற ? ” 
‘இத… இத… தான் எதிர்பார்த்தேன்’ என நினைத்தவள்,
“எனக்கு பாக்குற மாப்பிள்ளை, ரொம்ப தூரமா இல்லாம பக்கத்துலயே இருக்குற மாதிரி இருக்கணும்.
பைக்ல நல்லா ஊர் சுத்தணும். 
கண்டிப்பா அவரோட ஃப்யூச்சர் பிளான்ஸ்க்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்.
நிறையா லவ் பண்ணனும், நம்ப லைஃப் எவ்ளோ நாள்லெல்லாம் தெரியாது மாமா. சோ இருக்குற மொமென்ட்ட என்ஜாய் பண்ணி வாழணும். 
பெருசா சமைக்க தெரியாது, ஆனா செஞ்சு தந்தா நல்லா சாப்பிடுவேன்.  நானா சண்டையெல்லாம் போடமாட்டேன், ஆனா சண்ட வந்தா கண்டிப்பா சும்மாலாம் விடமுடியாது . அப்றோம் இந்த மளிகை பொருள் வாங்கலாம் அவரு தான் வெளியே போகணும், ஏன்னா எனக்கு அதெல்லாம் இன்னும் சரியா வாங்க தெரியாது. 
நான் கண்டிப்பா வர மாப்பிள்ளைய கண்கலங்காம பார்துப்பேன் மாமா. ஆனா பாருங்க அப்டி ஒருத்தர் இன்னும் எங்க அப்பா கிட்ட சிக்கலா. 
பட் என்கிட்ட அப்டி ஒருத்தர் சிக்குனா நல்லா இருக்கும்னு இப்போ ஒருத்தர  நான் நினைக்கிறேன். நடக்குமானு தெரில. “ என விழிகள் அவள் கனவுகளை அழகிய அசைவிகளுடன் சொல்ல இறுதியில் சிறு எதிர்பார்ப்புடன் முடித்தாள்.
“ஹா ஹா…பாவம் அவன்.. நீ இவ்ளோ சொல்றத பார்தா நீ யாரையோ மனசுல வச்சிருக்க போல. வீட்ல சொல்ல பயமா. நீ சும்மா சொல்லு நா யாருனு விசாரிச்சு கண்டிப்பா கார்த்திகிட்ட பேசுறேன். அவன் புரிஞ்சுப்பான். ” என சிரிக்க ஆரம்பித்து ஸ்ரீக்கு உதவும் குரலில் முடித்தான்.
“அதெல்லாம் பரவாலா மாமா. கார்த்திகிட்ட நானே சொல்லுவேன் ஆனா எனக்கு தான் சொல்ல முடில”
“ஏன் ?“  கேள்வின் நாயகனாய் அவன்.
“ஏன்னா நீங்க பாவப்பட்ட அந்த ஜீவனுக்கே இன்னும் விஷயம் தெரியாது.”
“என்ன ஸ்ரீ இப்டி சொல்ற ? அவன் கிட்ட சொல்ல தயக்கமா. சுந்தரம் மாமாட்டா சொல்லி அவங்க வீட்ல பேசி மாப்பிள்ளை கேக்கலாம்.” விட்டால் இவன் பேசிவிடுவான் போன்ற தோரணையில் நிமிர்ந்து அமர்ந்தான்.
“ ப்ராப்ளம் அதில்லா அவன் என்ன பிடிக்கல இல்லைனா வேற பொண்ண விரும்புறான்னு தெரிஞ்ச என்ன செய்றது மாமா ?” சோகமாக முடித்தாள்.
“நீ ரொம்ப யோசிக்கிற. யார் அவன் . நீ அவன் கிட்ட சொன்னாதான அவன் என்ன நினைச்சிருகான்னு தெரியும்.”  நியாயம் பேசினான் வாசு.
“இல்ல மாமா அவன் என்ன பிடிக்கலனு சொல்லிட்டா என்ன பண்றது ?” அநியாயமாக புகார் வாசித்தாள் ஸ்ரீ.
“அவன் பிடிக்கலனு சொன்னா அவன் இஷ்டம். முதல அவன் கிட்ட சொல்லு.“ அவன் பிடியில் அவன் நின்றான்.
“முடியாது மாமா. அவன் என்ன பிடிக்கலனு சொல்லிட்டா ரொம்ப கஷ்டமாயிடும். அவன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.” குரலில் குலாப் ஜாமூன்னின் ஜீராவாய் சொட்டியது அவளின் அவனுக்கான பிடித்தம்.
பொறுமை பறந்துவிட்டது வாசுவிற்கு,  “என்ன நீ சும்மா அவனுக்கு உன்ன பிடிக்காதுனு சொல்ற. ஃபர்ஸ்ட் பாசிட்டிவ்வா திங் பண்ணு, அப்றோம் அவன் முடிலனு சொன்னா அது வேற விஷயம். அப்போ பார்த்துக்கலாம்.
எவன் உன்ன பிடிக்கலனு சொல்றான், நானும் பாக்குறேன். பிடிக்கலனு சொன்னா அவன அப்டியே கோழி மாதிரி புடுச்சு உன்கிட்ட குடுக்குறேன். நீ பொரிச்சிடு அவன. “ என்று புருவங்கள் சுருங்க சீரியஸ்ஸாக சொல்லி முடித்தான். 
“அப்போ நீங்க பிடிக்கலனு சொன்னா கூட உங்கள பொரிச்சிடவா மாமா.” உதட்டில் புன்னகை உறைய கைகள் கட்டி வாசுவை நேர்கொண்டு பார்த்தாள் ஸ்ரீ. 
ஒரு கணம் வாசுவிற்கு ஒன்றும் புரியவில்லை, புருவங்கள் மேலும் சுருங்க ஸ்ரீயை பார்த்தவன், புரிந்தபின் கண்கள் கூர்மை பெற ஸ்ரீயை தான் ஆடாது பார்த்திருந்தான். 
பிறகு என்ன நினைதானோ வாசு, சட்டையின் கையை மேல மடக்கி விட்டவன், 
எழுந்து நின்றேவிட்டான்.
அவன் எழுந்த தினுசில் ஸ்ரீயும் எழுந்து நின்றாள். ஆனால் பார்வையை தழைக்காமல் அவனை தான் நேர்கொண்டு பார்திருந்தாள்.
சிறு ஓடையில் ஒரு ஓரமா 
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா 
என கரோக்கி மென்மையாக இசைத்து கொண்டிருந்தது.
 

Advertisement