Advertisement

                        நெஞ்சம் நிறையுதே 1
           சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே                   நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே               
நின்றது போல் நின்றால் நெடுந்தூரம் பறந்தாள்                   
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்                             
  மணம் பெறுமோ வாழ்வே 
           செந்தமிழ் தேன் மொழியாள்                             நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்                             நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்                   பைங்கனி இதழில் பழரசம் தருவாள்                                 பருகிடத் தலை குனிவாள்
சிவநாதன் தாத்தா வீட்டின் திண்ணையில் அமர்த்து வலது கையால் தொடையில் தாளம்தட்டி தன்னை சுற்றி யார் இருக்கிறார் இல்லை என்றெல்லாம் கவனியாது கண்கள் மூடி பாட்டில் ஒன்றிப்போய் பாடிக்கொண்டிருந்தார். வீட்டின் வெளி வாயிலில் பெரிய பந்தல் கிட்டதட்ட ஐந்தாயிரம் ஸ்குயர் ஃபீட் நீல் வாக்கில் தென்னை ஓலை வேய்ந்து அதற்கு கீழ் வெள்ளை துணியால் மூழுக்க பந்தலுடன் சேர்த்து இழுத்து கட்டி நடுவில் மட்டும் வட்ட வட்டமாக நெருக்கி தைத்த தொங்கும் வண்ண அலங்கார துணிகள் இருந்தன. பந்தல் முடிவில் ஒரு சவுண்ட் ஸிஸ்டெம் ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ பாடலை பாடிக்கொண்டிருந்தது. 
திருச்சி அருகே உள்ள ஒரு சிற்றூர். கிராமம் என்று சொல்ல முடியாது, கொஞ்சம் வளர்ச்சி பெற்ற ஊர். எப்படியும் ஒரு முன்னூறு குடும்பங்கள் வசிபார்கள்.
வீட்டை சுற்றிலும் வயல், சிறிது தூரம் தள்ளி தென்னந்தோப்பு. மதிய வேளை இளங்காற்றுடன் பாடலை ரசித்து கொண்டிருந்தவரை, ஒரு கை சிவநாதன் தாத்தவை தட்டி இந்த லோகத்திற்க்கு கொண்டுவந்தது. 
“சிவசு நல்ல இருக்கியா. வீட்ல எல்லா சுகமா இருக்காங்களா. அலங்காரம் எல்லா நல்ல செஞ்சிருக்க. கல்யாணம் வேல எப்டி போயிட்டு இருக்கு” என்று சிவநாதன் தாத்தா கையை பிடித்து பேசிக்கொண்டே அருகில் அமர்ந்தார் முத்து.
சிவசு தாத்தா மனமார்ந்த சிரிப்புடன் “வாய்யா வாய்யா முத்து. நான் நல்ல இருக்கேன். நீ எப்டி இருக்க. வீட்ல எல்லா சுகமா. என்ன நீ மட்டும் வந்துருக்க. வீட்ல எல்லா எப்போ வருவாங்க.”
“எல்லா சாயங்காலம் மண்டபத்துக்கு நேர வரேன்டாங்க. பசங்க மருமக புள்ளங்க எல்லாம் வந்ததும் வீட்டம்மா மண்டபத்துக்கு கூட்டியந்திடும். இந்த இத பிடி.” என்று ஒரு சுருட்டிய மஞ்சப்பையை சிவசு தாத்தா கையில் தினித்தார் முத்து.
“பாப்பாக்கு எதுனா அதுக்கு புடிச்சுதா வாங்கி குடு. நமக்கு இந்த கால புள்ளங்கக்கு எது புடிக்கும்னு தெரிய மாட்டிங்குது.” என்று சொன்னார் முத்து. கண்களில் மெல்லிய நீர் படலம், நெகிழ்ந்த உள்ளத்தோடு மறுக்காமல் வாங்கி வைத்துக்கொண்டார் தாத்தா. இருக்காதா பின்னே, முத்துவிற்கும் தாத்தா வயது தான், நிலம் புலம் எல்லாம் இருக்கிறது, ஏழை எல்லாம் இல்லை ஆனால் விவசாயம் செய்ய வாங்கிய கடனால் ஏழையாக்கப்பட்டவர். இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருக்கிறது, ஆனாலும் நண்பர் பேத்திக்கு கல்யாண பரிசு கொடுக்க வந்திருகிறார். வேண்டாம் இருக்கட்டும் என்று சொன்னாலும் வருத்தபடுவார். 
“சிவசு, பேத்திக்கு கல்யாணம் முடிக்க போற. ரொம்ப சந்தோசம்யா. நெஜமா சொல்றேன் மாப்ள வேற ஆளுங்களா இருந்தாலும், சொந்தம் எல்லார்தையும் அரவனச்சு செய்யற பாரு, பெரிய விசயம்யா. பாப்பாவும் மாப்ளயும் நல்ல இருப்பாங்கயா.”
“ரொம்ப சந்தோசம்யா. நம்ப கைல என்னய்யா இருக்கு, எல்லாம் சாமி குடுக்குது. நண்பன் வீட்டுக்கே பேத்திய கட்டி கொடுப்பேனு நெனச்சு பாக்கல. எல்லாம் தானா கூடி வந்ருச்சு.” என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார் சிவசு தாத்தா. பிறகு முத்துவை கொஞ்சம் நெருங்கி வரும்படி கண்களாலயே சைக்கை செய்தார், மெல்லிய குரலில் “ இது நமக்குள்ளயே இருக்கட்டும்யா. இது காதல் கல்யாணம்.” என்று சொல்லவும் ஒரு நிமிடம் முத்துவிற்க்கு எதுவும் புரியவில்லை. பிறகு தெளிந்து மெல்லிய புன்னகை புரிந்தார். இருவரும் சேர்ந்து மனம் விட்டு சிரித்து கொண்டிருந்தனர்.
“சிவசு, பாப்பா எங்க, சாயங்காலம் ரிசப்ஷன்க்கு அலங்காரம் பண்ணிட்டு இருக்காங்களா?”
மறுபிடியும் சிவசு தாத்தா சுற்றும் முற்றும் பார்த்தார். பேக் டூ வெரி சைலன்ட் மோட் போல மெல்லிய குரலில் “பாப்பாவும் மாப்ளயும் போட்டோ புடிக்க போய்ருகாங்க.”
பதட்டம் ஆகி விட்டார் முத்து “அட என்னய்யா உனக்கு தலைல ஏதாவது இருக்கா. கல்யாணம் முடியும் முன்னாடி இப்டி பன்றியே. பாப்பா எங்க இருக்குனு சொல்லு. நான் போய் கூட்டியாறேன். வெளில தெரிஞ்ச என்ன நெனபாங்க.” துண்டை தோளில் போட்டு கிளம்பி விட்டார் முத்து.
சிவசு தாத்தா மிக அப்பாவியாக “நம்ப பாப்பா மட்டும் போல. பாப்பா ஃபிரண்ட்ஸ், மாப்ள ஃபிரண்ட்ஸ், நம்ப பேரன் அப்றோம் கன்னுகுட்டி எல்லாரும் போய்ருக்காங்க. எல்லாம் சேர்ந்து தான்யா போட்டோ புடிக்கிறாங்க.”
“ஏன் கல்யாணம் ஆனா பின்ன போட்டோ புடிச்சா போட்டோ வரமாட்டேனு சொல்லுமா. இப்போ என்ன அவசியம் இதுக்கு. அதுங்க தான் சின்ன புள்ளைங்க. நீ எடுத்து சொல்லிருக்கனும்”
“அட என்னய்யா நீ. இந்த போட்டோ பிடிக்க பேரு ப்ரீ புட்டிங் சூட்டாம். இதெல்லாம் இப்போ சகஜம்யா.” என்னமோ நமக்கு ஒண்ணும் புரியவில்லை போ என்று முத்து கிளம்பிவிட்டார். 
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து ஒரு 170 டிகிரி நம்ப திரும்பி பார்த்தால். புல்வெளியை தவிர ஒன்றும் தெரியவில்லை. கொஞ்சம் ஜும் போவோம்.
அட கடவுளே!
ஒரு பெண் ஃபுல் பீச் கலர் லேஹெங்காவில், நகையெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. ப்ரீ ஹேர் ஸ்டைல், கையில் மருதாணி தவிர ஒன்றும் இல்லை. 
புல்வெளிக்கு நடுவில் இருந்த ஆலமரத்தில் ஒரு குச்சி சாரி ஒரு பையன் தலைகீழாக கயிற்றில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தான். அவன் கையில் ஒரு ஸ்லேட், அதில் இருந்த வாசகம் ”Beware of Wife”. அவன் தொங்க விடப்பட்டிருந்த கயிற்றின் இன்னொரு முனயை பிடித்திருந்தாள் அந்த பெண். காமெராவை பார்த்து ஸ்மைலிங் மோடில் முகத்தை லேசாக தூக்கி கெத்தாக போஸ் குடுத்துக்கொண்டிருந்தாள்.
காமெரா கிளிக்கியதும் ஒரு பத்து பேர் கொண்ட காட்சில்லா கூட்டம் “ Ohhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh” என்று கத்தி காது ஜவ்வை கிழித்து கையில் வைத்திருந்தனர்.
Pre-Wedding shoot starts…
                        நெஞ்சம் நிறையுதே 1-2
“டேய் கொஞ்சம் கீழ இறக்குங்க டா. ஸ்மால் இண்டஸ்டைன்லாம் என்னமோ பண்ணுது டா. இறக்கி தொலைங்க டா” கதறி கொண்டிருந்தான் கார்த்திகேயன்.
“மச்சி ஸ்நாப் சரியா வரலாயாம். மறுபிடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து ஸ்டார்ட் பண்றோம் சரியா. என்ன மச்சான் இதுக்கே இப்டி வேர்த்ருக்கு. இருடா நா போய் மேக்கப் கிட் எடுத்துட்டு வரேன்” கார்தியின் கதறலை கண்டுக்கொள்ளாமல் காட்சில்லா படையை நோக்கி சென்று கொண்டிருதான் ராகவ். 
“என்னது மறுபிடியும் முதல இருந்தா. அய்யோ இப்டி என்ன தனியா போலம்ப விட்டாய்ங்களே.”
தேனு காட்சில்லா கூட்டத்தில் தனியாக சிக்கி சின்னாபின்னமாக்கி கொண்டிருந்தாள்.
“தேனு என்ன நீங்க இவ்ளோ சாஃப்ட்டா எக்ஸ்பிரஷன் குடுத்துட்டு இருக்கீங்க. இதெல்லாம் செட் ஆகாது. தூக்கி போட்டு மிதிங்க அவன. இதுதாங்க சான்ஸ். Pre-wedding photo shoot லாம் இதுக்கு தாங்க வச்சிருக்காங்க. நீங்க மட்டும் எக்ஸ்பிரஷன மாத்துல, அடுத்த டார்கெட் நீங்க தான்.” மிரட்டி விட்டு சென்றாள் சத்யா.
சிரித்து கொண்டே கார்தியிடம் சென்றாள் தேனு.
“என்னங்க அடுத்த மெடீரியல் வந்ததும் உங்கள கீழ இறக்கிடுவாங்க. கொஞ்சம் வைட் பண்ணுங்க.”
“என்னது அடுத்த மெடீரியல்லா. ஹனி என்ன கீழ இறக்கி விட்டுட்டு அவனுங்க போய்ருக்கலாம்ல. யாரையாவது வர சொல்ல. பாண்ட்ல வேற ஒரு எறும்பு போயிடுச்சு போல.” அவஸ்தையாக கெஞ்சி கொண்டிருந்தான் கார்த்தி. 
தேனு சிரித்து கொண்டே காட்சில்லா கூட்டத்தில் ஐக்கியமாயிருந்த ராகவை அழைக்க ஓடினாள். 
“ராகவ் அண்ணா அவருக்கு கீழ இறங்கணுமாம். கொஞ்சம் வாங்களேன்.”
“ஏன் மா ?”
காரணத்தை சொன்னால் தான் ஆயிற்று என்று கூட்டம் சொல்லிவிட்டது. தேனு வேற வழியே இல்லாமல் சிரித்து கொண்டே காரணத்தை சொன்னாள். கிளம்பிவிட்டான் ராகவ் கையில் வைதிருந்த மேக்கப் கிட்டோடு, ஏதோ தயார் செய்து கொண்டிருந்த காமெரா மேனயும் கையோடு அழைத்து வந்தான். காமெரா மேனை சற்று தள்ளி நிற்க வைத்து விட்டு, கார்தியின் அருகில் வந்தான்.
“ஏன் டா கொஞ்ச நேரம் தொங்க மாட்டிய நீ. நானெல்லாம் மூணு வருஷமா தொங்கல. உனக்கு என்ன ஒரு பத்து நிமிஷம் தொங்க மாட்டியா ?”
“என்னது மூணு வருஷமா தொங்குறியா. எங்க இங்க பாரு.” சந்தியா பின்னாடி இருந்து கூப்பிட்டாள். திகிலுடன் திரும்பினான் ராகவ். மைண்ட் வாய்ஸ் ‘அய்யய்யோ இப்டி சிக்கிடிய டா கைப்புள்ள.’
“அதில்ல மா, நான் ஜிம்ல அப் சைட் டவுனா தொங்கி எக்சர்சைஸ் பண்ணுவேன்ல அத சொன்னேன் மா.” சந்தியா நம்பவில்லை போலும் கண்களை சுருக்கி ராகவை பார்துக்கொண்டிருந்தாள்.
கார்த்தியின் மைண்ட் வாய்ஸ் ‘அடேய் மனுசனோட அவஸ்தா புரியமா, ஏன் டா இப்டி உயிர வாங்குறிங்க. எறும்பு இன்னும் உள்ள எறங்கறதுக்குள்ள காப்பத்துங்க டா. இவனுக்கு வேற வேல இல்ல இங்க வந்து தான் பொண்டாட்டிகிட்ட எக்ஸ்பிளனேஷன் குடுப்பான். ஏப்புள்ள தேனு அங்க என்ன பார்த்து கெக்க புக்கேனு சிரிச்சிட்டு இருக்கு. ஆண்டாவ என்ன இவங்க கிட்ட இருந்து காபாத்து.’
ஆண்டவனுக்கு கேட்டது போல, அனுப்பி வைத்து விட்டார் ஆளை. 
யாரோ ஒரு உருவம் தலைகீழாக தெரிந்தது. ஒயிட் டெனிம்ஷர்ட் அருகே வந்து கொண்டிருந்தது. கார்த்தியின் மைண்ட் வாய்ஸ் ‘யார்ரா இவன் கையில ஏதோ வச்சிருக்கான். தொப்பி போற்றுக்கான்.’
தொப்பி கார்தியின் அருகே வந்தது. கார்தியின் கையில் ஏதோ குடுத்தது. “மாம்ஸ் இந்தா குச்சி. எப்படியும் எறும்பு ஷர்ட் கிட்ட வந்துடும். அப்போ குச்சி வச்சு சொறிஞ்சுக்கோ. அழக்கூடாது.” 
கார்த்தி “ஆண்டவா என்ன காப்பாத இந்த உலகத்துல ஆளு இல்லையா” வாய்விட்டே புலம்பினான். சொல்லி வாய் மூடவில்லை ஒரு வாளி நிறைய தண்ணீர் அபிஷேக்கத்திற்கு உள்ளானான்.
ஷர்ட்டிலிருந்து நீர் சொட்ட சொட்ட கண் திறந்து பார்த்தான். அபோசிட்டில் மூணு ரௌடீஸ் வெடி சிரிப்பு சிரித்து கொண்டிருந்தனர். அகாஷ், விமல், அஜய்.
“மச்சி தண்ணி ஊத்துனா எறும்பு செத்துடும்டா. அதான் உனக்கு ஹெல்ப் பன்னாலாம்னுனுனு.”
“ஆனிய புடுங்க வேண்டாம் டா.” கை எடுத்து கும்பிட்டான் கார்த்தி.
இதெல்லாம் ஒரு 10 நிமிடத்துக்குள் நடந்து விட்டது. வந்த காமெரா மேனே சிரிப்புடன் இந்த கூத்தெல்லாம் பார்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த நிமிடங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கேண்டிட் போட்டோஸாகா கிளிக்கிக் கொண்டிருந்தது ஒரு காமெரா.  
“பாவம் டா மாமஸ இறக்கிடுவோம். அப்றோம் என் தங்கச்சி வாழ்க என்னாகறது.” ஒயிட் டெனிம் பாவப்பட்டு கார்தியை இறக்கினான். தரையில் லாண்ட் ஆன கார்த்தி அப்படியா வானத்தை பார்த்து படுத்து விட்டான். அவ்வளவு தான், காட்சில்லா கூட்டம் பாய்ந்து வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து “மச்சான் என்னாச்சு…” ஒருவன் கார்தியின் கையை தேய்க்க, இன்னும் ஒருவன் காலை தேய்க்க, இன்னுருவன் தலையை துண்டால் துடைத்து விட, ஒரே களேபரமாகி விட்டது.
மெதுவாக கண்ணை திறந்த கார்த்தி, “ என்ன கொல்ல பார்திங்களே டா. ”
“அதான் இன்னும் சாகல இல்ல. எந்த்ரி டா. அடுத்த மெடீரியல் வந்த்ருச்சு. கெளம்பு மேக்கப் போடலாம்.”
“மனுசங்கள டா நீங்கலாம். உயிர் பொளச்சி வந்துருக்கேன். மறுபிடியும் மேக்கப் போட கூப்பிட்றீங்க. கொஞ்சம் கேப் விடுங்க டா.”
ராகவ் “மச்சான் நீ கவலயே பாடத. அடுத்த ஷூட்ல அசதிர்லம் டா.”
ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அதில் என்னமோ அலங்கார பொருளெல்லாம் வந்துகொண்டிருந்தது. அதெல்லாம் இறக்கி வைத்து விட்டு  ஒயிட் டெனிம் ஷர்ட் ஆட்டோவை ஒட்டி வந்து கொண்டிருந்தான். சரி இந்த கார்டனில் ஏதோ அலங்காரம் போல என்று அசல்டாக ராகவும் கார்தியும் நின்று பார்த்து கொண்டிருந்தனர்.
கார்த்தி, “மச்சான், வாசு ஏன் டா ஆட்டோ ஓட்டிவரான்.”
ராகவ், “தெரில டா”
ஆட்டோவிலிருந்து ஒயிட் டெனிம் ஷர்ட் தலையை வெளிய எட்டி பார்த்து லேசாக ராகவை பார்த்து அசைத்தது. புரிந்து கொண்டான் ராகவ். சத்தமே இல்லாமல் தள்ளி நின்று கொண்டான். கார்த்தி தலையை துவட்டி கொண்டே பார்த்து கொண்டிருந்ததால் அவன் கவனிக்க வில்லை.
ஆட்டோ மிக அருகில் வந்தது. கிட்ட தட்ட மோதி நின்றது. கார்தியின் கைக்கும் ஆட்டோவிர்க்கும் ஜஸ்ட் 2 இன்சஸ் தான் இடைவெளி. அதிர்ந்து நிமிர்த்து பார்த்தான் கார்த்தி, நம் ஒயிட் டெனிம் வாசு வெளிய எட்டி பார்த்து “ இன்னும் உயிரோட தான் இருக்கியா நீ ” என்று கேட்டான்.
அவ்வளவு தான் கார்த்தி ஆட்டோவின் வீல் அருகே படுத்து கொண்டான், “எதுங்க டா, ஏதுங்க, எப்படியும் போட்டோனு சொல்லி இத தான் செய்ய போறீங்க, அதுக்கு எதுக்கு இன்னொரு ஷர்ட் பாண்ட் எல்லாம்.”
காட்சில்லா கூட்டம் வந்துவிட்டது, கீழே படுத்து கிடந்தவனை வரிசையாக வாசு, அகாஷ், விமல், அஜய் அலேகாக தூக்கி கார்த்தியின் ஹேண்ட் பீஸ் ரெண்டும் லெக் பீஸ் ரெண்டும் ஆளுக்கு ஒருவர் பிடித்து தூரி ஆட ஆரம்பித்து விட்டனர். 
காமெரா மேன் வந்து ஷூட் ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று சொன்னதும் கார்தியை கதற கதற தூக்கி போட்டு இறக்கி விட்டனர். 
பிறகு ஆட்டோ முன்பு உட்கார்ந்து தேன் ஓட்ட பின்னாடி கார்த்தி கண்ணை அபாயமாக விழித்து போஸ் கொண்டிருந்தான். பிறகு அலங்கார குடை, வாட்டர் டப், பிறகு மாட்டு வண்டி, ஊஞ்சல் என போட்டோ ஷூட் போய்க்கொண்டு இருந்தது.
இந்த கலாட்டா எல்லாம் ஒரு காமெரா சைலன்டாக கிளிக்கிக்கொண்டிருந்தது. பிறகு அந்த காமெராவையும் காணோம். தேனு வையும் காணோம்.
மணமகள் அறை
“ஏப்புள்ள தேனு இந்த லேஹெங்க உனக்கு நல்ல இருக்கு கேர்ள். போட்டோஸ் லாம் நல்ல வந்துருக்கு. You have a surprise tonight” என்று கையில் காமெராவை நோடிங்கொண்டே கண்ணடித்து சொன்னாள் ஸ்ரீபத்மா. 
“ஹேய் என்னது. சொல்லு கேர்ள்.” என்று தேனு செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் ஸ்ரீபத்மாவிடம்.
“You have to wait for it baby.” 
“சரி போ. நான் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துறேன். பார்லர்ல இருந்து வந்துடுவாங்க.”
மாலை ஐந்து மணி, ரிசப்ஷன் ஆரம்பம் ஆக இன்னும் அரைமணி நேரம் இருந்தது. அவர்கள் பக்கத்தில் கல்யாணம் முதல் நாள் தான் நிச்சயம். ஆதலால் இப்பொழுது தான் நிச்சயம். மதியம் எல்லாம் அராத்து பண்ணிக்கொண்டு இருந்த காட்சில்லா கூட்டம் ஏதோ நல்ல பிள்ளைகள் போல அங்கும் இங்கும் வேலை செய்துகொண்டிருந்தனர். 
கண் தூங்கும் நேரத்தில்                                                      நீ நீங்க கூடாது 
‘தும்பி துள்ளல்’ பாட்டின் கரோக்கி ஒலிக்க கோலாகலமாக ஆரம்பம் ஆனது ரிசப்ஷன். மண்டபம் நுழைவாயிலில் மணமகள் வீட்டார் சார்பாக சிவசு தாத்தா, அவரது மனைவி சுந்தரி ஆச்சி, தேனு மற்றும் வாசுவின் அப்பா கோதண்டம், அம்மா சீதாலக்ஷ்மி எல்லாம் நின்று சொந்தகளை வரவேற்று கொண்டிருந்தனர் .
மணமகன் சார்பாக கார்தியின் அப்பா சுந்தரம், அம்மா சிவகாமி, தங்கை ஸ்ரீபத்மா எல்லோரும் அவர்கள் சொந்தங்களை வரவேற்று கொண்டிருந்தனர். 
மனமேடையில் க்ரே கலர் கோட் சூய்டில் தயாராகிருந்தான் கார்த்தி. அளவான தேகம், நல்ல உயரம், மாநிறம், களையான கண்கள், நேர்தியாக வாரப்பட்டா சிகை, சிரித்தால் கூடவே சிரிக்கும் கன்னக்குழி வேறு அம்சமாக இருந்தான்.
தேன்மொழி கருப்பட்டி நிறம், லட்சணமான முகம், அளவான உடற்கட்டு, ராயல் கோல்டன் பட்டு உடுத்தி மிகை என்றும் இல்லாமல் எளிய என்றும் சொல்ல முடியாமல் ஒரு மத்திம அலங்காரம். பார்க்க நிச்சயமாக தெவிட்டவில்லை. 
வரவேற்பிற்கு வந்திருந்த ஐந்நூறு சொச்சம் சொந்தத்தயும் வாசுவும் காட்சில்லா கூட்டமும் சுலன்று கவனித்து கொண்டிருந்தனர். எந்த குறையும் யாரும் கூறிவிடாத படி எல்லா ஏற்பாடும் கவனமாக செய்துதிருந்தான் வாசு. பரிசு கொடுத்தல், பந்தி எல்லாம் முடித்து ‘அப்பாடா’ என்று உட்கார இரவு பத்துமணி ஆயிற்று.
மணமகள் அறைகூட்டமாக எல்லாரும் படுத்திருந்தனர். கொஞ்சம் தனிமை வேண்டி இரவு 1.30 லேப்டாப், ஸ்ரீபத்மா வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்த சாக்கோ லாவா கேக்குடன் இன்னும் சில பொருள்கலெல்லாம் கையில் எடுத்து கொண்டு வாசுவிடம் மட்டும் சொல்லிவிட்டு தேனும் ஸ்ரீபத்மாவும் மண்டபம் மாடியில் தஞ்சம் அடைந்தனர்.
“ஹூஃப் இப்போ தான் கேர்ள் கொஞ்சம் ப்ரீயா இருக்கு. கேக் சூப்பர், இன்னைக்கு சமைக்க உனக்கு டைம் கிடைச்சுதா” என்று லாவாவை நக்கி கொண்டே ஸ்ரீபத்மாவிடம் சொன்னாள் தேனு.
“surpriseeeeeee” என்று மெல்லமாக கத்திக்கொண்டே ஒரு ஆடியோ விஷ்வல் லேப்பில் ஓடவிட்டாள் ஸ்ரீபத்மா.
அதில் வாய்ஸ் ஓவெரெல்லாம்  ஸ்ரீ தான்,
AV
பாசமலர் படம் மலரும் மலராத சாங்க் பேக் கிரவுண்ட்…
டிஸ்ப்ளேவில் ரெண்டு தாத்தாஸ் போட்டோ ஸ்லைட் ஷோ…
ஹாய் மக்காஸ் உங்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி சொல்ல போறேன். ஒரு ஊருல ஒரு தாத்தா சாரி ரெண்டு தாத்தா சிவசு ( சிவநாதன் ) அண்ட் நடா ( நடேசன் ) தாத்தானு ரெண்டு பேரு இருந்தாங்க. ரெண்டும் பேரும் கேக் அண்ட் ஐசிங்க் போல ஃபிரண்ட்ஸ். ஒண்ணா ஸ்கூல் போயி படிச்சு, உருண்டு வேலையாண்டு, வேல பார்த்துனு ஒரே பாசமலர் படம் தான். என்ன அதுல சிவாஜி கணேசன் தங்கச்சிய ஜெமினி லவ் பண்ணி மேரேஜ் பண்ணுவாரு. ஆனா இங்க நடா தாத்தா லவ் பண்ண சாந்தா ஆச்சிய சைலன்டா மேரேஜ் பன்னிவச்சு தங்கச்சியா எதுக்கிட்டார் நம்ப சிவசு தாத்தா. 
சிவசு, சுந்தரி ஜோடி அண்ட் நடா, சாந்தா ஜோடினு ஒரே ரௌசு தான். ரெண்டு பேருக்கும் ஒரு பையன் அண்ட் பொண்ணுனு பொறந்திருந்த நிச்சயமா கல்யாணம் பண்ணி அக்கப்போர் ஆக்கிருப்பங்கா. But God had other plan. ரெண்டு தாத்தாஸ்கும் பசங்க தான்…ஹா…ஹா…ஹா…தாத்தாஸ் பிளான்ல‌‌ மண்ணள்ளிபோட்டுட்டார் God. 
இது ஒரு பொண் மாலை பொழுது சாங்க் பேக் கிரவுண்ட்…
டிஸ்ப்ளேவில் இரண்டு கிருதா மீசைக்காறார்கள்…
கம்மீங் பேக் டூ தே ஸ்டோரி. ரெண்டு தாத்தாஸ்கும் பசங்க பேரு as u all know கோதண்டம் and சுந்தரம். இவங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்னு நான் ஸ்டோரி ஆரம்பிச்ச அடி கன்பர்ம். சோ சீதாலக்ஷ்மி கோதண்டம் அண்ட் சிவகாமி சுந்தரம்னு டக்குனு ஜோடிக்கு வந்துடலாம். ரெண்டு ஜோடிக்கும் சேர்ந்து நாலு குட்டீஸ். 
சீதாலக்ஷ்மி கோதண்டம் – வாசுதேவன் அண்ட் தேன்மொழினு ரெண்டு குட்டீஸ்.
சிவகாமி சுந்தரம் – கார்திகேயன் அண்ட் ஸ்ரீபத்மானு ரெண்டு குட்டீஸ்.
முஸ்டாஃபா முஸ்டாஃபா சாங்க் பேக் கிரவுண்ட்…
டிஸ்ப்ளேவில் நான்கு குட்டீஸ் போட்டோ ஸ்லைட் ஷோ…வேற வேற போஸ்ஸில்…
 

Advertisement