Advertisement

கூடு – 8

வேலுநாட்சியா இரவை உறக்கமின்றிக் கழித்துக் கொண்டிருந்தாள். தன்னை மீறி உறங்கினாலும், விழிப்பு வந்த அடுத்த நொடி அவளை அறியாமல் அவள் விழிகள் சுவர்க் கடிகாரத்தில் சென்று நிலைத்தன

சைஆறு மணியாக இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே…’’ வழக்கம் போல விழித்தவள், கடிகாரம் காட்டிய நேரத்தைப் பார்த்து தனக்குள் அலுத்துக் கொண்டாள்.  

இனி படுத்தாலும் உறக்கம் தன்னை தீண்டப் போவதில்லை என்று உணர்ந்தவள் எழுந்து அமர்ந்தாள். குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், மனதை ஒரு முகப்படுத்த யோகாவில் இறங்கினாள்

நேற்று இரவு பரணி வந்து மிரட்டி விட்டு சென்றதும் முதலில் கலங்கிப் போனாலும், போராட்ட வாழ்வு கற்றுக் கொடுத்த திடம் அவளுள் தலை தூக்க என்னை மீறி யார் என்னை என்ன செய்து விட முடியும் என்ற துணிச்சல் அவளுள் உதித்தது

அந்த துணிச்சல் உதித்த மறுகணம் அலைபேசியில் பரணியை அழைத்தவள், அவன் அந்தப் பக்கம் அலைபேசியை இயக்கியதும்

மாமோய்…. எங்க இருக்க…. உன்ன நினச்சா சிரிப்பு சிரிப்பா வருதுய்யா…. வடிவேலு மாதிரி வாலண்டியரா நானும் ரௌடி தான்நானும் ரௌடி தான்னு வீட்டுக்கே வந்து மிரட்டிட்டு போற இல்ல

உன்ன என்ன செய்யலாம்…. ஹும் சரியா ஆறு மணிக்கு நீ சொன்ன மாதிரி என் கழுத்துல தாலிக் கட்டி நீ என்னை உன் பொண்டாட்டி ஆக்கிக்கலைன்னு வையி… 

சரியா ஆறு பத்துக்கு கலெக்டர் சாரோட புது செல்லம் ரோஸ்மேரிக்கு நீ வாங்கிக் கொடுத்த புடவை நகை எல்லாம் போட்டு ரெடி பண்ணிக் கூட்டிட்டு வறேன். வேணா அது கழுத்துல தாலிக் கட்டிக்கோ

பாவம் சின்னப் பையன் நீ ஏமாந்து போகக் கூடாது இல்ல மாமா. என்ன நான் சொல்றது…. லேநான் வேலு நாட்சிலேஎன் நிழலையே என் விருப்பம் இல்லாம யாரும் தொட முடியாதுநீ என் கழுத்துல என் சம்மதம் இல்லாம தாலி கட்டிடுவியோ…? யாருகிட்ட வந்து சவால் விட்டுட்டு போற…’’

அவள் பேச பேச அமைதியாய் இருந்தவன், இறுதியில் தன்னை மீறி விழுந்து விழுந்து சிரித்தான். அவன் சிரிப்பு அவளுள் இன்னும் கோபத்தை கிளப்ப, “ஏய்…’’ என அவள் கர்ஜிக்கும் போதே

மயிலுமுடியல உன் ஸ்டான்ட் அப் காமெடிகொஞ்சம் நிறுத்துஎப்படி எப்படி நான் நாய் கழுத்துல தாலி காட்டுவேணா..? உனக்கே இது நியாயமா மயிலுஉன்னை நீயே நாய் பேய் இப்படி எல்லாம் அசிங்கப் படுதிக்கக் கூடாது மயிலுஇனி அந்த ஏக போக உரிமை எல்லாம் உன் மாமன் இந்த கலிங்கத்துப்பரணி ஒருத்தனுக்கு தாண்டி இருக்கு…. 

செல்லாக் குட்டி மாமன் பேச்சுலர் பார்ட்டில இருகேண்டி தங்கம்அப்புறம் சில பல மேட்டர் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப கட்டுப்பாட வேற இருந்தேனாஇப்ப அதுக்கு வேற பசங்க தனி டியூசன் எடுத்துக்கிட்டு இருக்காய்ங்க…. 

நாளைக்கு நைட்டு நானும் ஒன்னும் தெரியாம பஸ்ட் நைட் ரூம்ல முழிச்சேன்னு வையேன் அப்புறம் நம்ம வம்சம் எப்படி வளர்றதுஇந்த விசயத்துல நீ பச்சை மண்ணுன்னு உன் மூஞ்ச பாத்தாலே தெரியுதே மயிலு…’’

அவன் இன்னும் என்ன எல்லாம் பேசி இருப்பானோ, அதற்குள் நாட்சியா சிவந்து போன முகத்துடன், “நீ சொல்றது எல்லாம் ஒரு நாளும் நடக்காதுடா..’’ என்றபடி அழைப்பை துண்டிக்க போனாள்

அதற்குள் பரணி, “நடக்கும்டி நடக்கும்…. சரியா நாலு அம்பதுக்கு என்னோட அடுத்த பாம் வெடிக்கும் அடுத்த ஒரு மணி நேரத்துல நீயா அலறிப்புடச்சி கோவிலுக்கு ஓடி வந்து நிப்பஇல்ல இல்ல நான் நிக்க வைப்பேன்..’’ 

அப்படிச் சொன்னவன் அலைபேசியை துண்டிக்க, வேலு நாட்சியா கால்கள் துவண்டுப் போய் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அந்த நிமிடத்தில் இருந்து அவளுள் ஒரு போராட்டம் தொடங்கிவிட்டது

அவன் சொல்வதை செய்துவிடுவானோ..?’’ என அஞ்சி நடுங்கியது ஒரு மனம். “நான் வேலு நாட்சியாஎன் நிழலைக் கூட அவனால் தொட முடியாது..!’’ என்று உரம் கொண்டு நிமிர்ந்து நின்றது மறு மனம்

இருந்தாலும் அடி மனதின் ஓரத்தில் ஏதோ ஓர் அலைப்புறுதல் இருந்துக் கொண்டே இருக்க, அந்த இரவு அவளுக்கு தூங்கா இரவாய் முடிந்துப் போயிற்று

அவள் யோகாவை முடித்து விட்டு நிமிர்ந்த மறு நொடி, அவள் அலைபேசி சிணுங்கியது. வெளியே தைரியமாய்க் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் உதறலெடுக்க நாட்சியா அந்த அலைபேசியை இயக்கினாள்

பரணி தான் அழைத்து இருந்தான். “என்ன மயிலு விடிய விடிய மாமன் நினைப்புல தூங்கல போலசரி சரி உன் போனுக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன்அதைப் பாத்துட்டு கல்யாணத்துக்கு வரணுமா வேண்டாமான்னு நீ முடிவு பண்ணு…’’ 

நாட்சியா பதில் சொல்வதற்குள், அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க, நாட்சியா விரைவாய் தன் அலைபேசியில் இணையத்தை இயக்கினாள். அடுத்த நொடி பரணியின் எண்ணில் இருந்து இவளது வாட்ஸ் அப்பிற்க்கு இரண்டு மூன்று வீடியோக்கள் வந்து இருந்தன

முதல் வீடியோவை பார்க்கும் போதே அவள் ரத்த அழுத்தம் தாறு மாறாய் எகிறத் தொடங்கியது. மூன்றாவது வீடியோ முடியும் போது, “புல் ஷிட்..’’ எனக் கத்தியவள், தன் கையில் இருந்த அலைபேசியை தூக்கி வீசியடித்தாள்

அதற்கு நல்ல நேரமோ என்னவோ, பாதுகாப்பாக மெத்தையில் தரை இறங்கி தப்பித்துக் கொண்டது. அவளுக்கு சிந்திக்க கூட அவகாசம் இல்லை. வேக வேகமாய் பரணிக் கொடுத்து விட்டுச் சென்ற பையை தேடிக் கண்டெடுத்தாள்

அதை விட வேகமாய் குளித்துவிட்டு, முதல் முறையாய் புடவை அணியக்  கற்றுக் கொள்ளும் பெண்ணைப் போல, தாறு மாறாய் உடலில் புடவையை சுற்றினாள்

அவன் கொடுத்துவிட்டுச் சென்ற நகைகளை வேண்டா வெறுப்பாய் அணிந்தவள், வழக்கமாய் தனக்கு பாதுகாப்பு பணி புரியும் காவலாளியை அலைபேசி மூலம் எழுப்பினாள்

அவர் அவளுக்கு காலை வணக்கம் சொல்லக் கூட அவகாசம் தராமல், “இன்னும் பத்து நிமிசத்துல நான் நெல்லையப்பர் கோவிலுக்கு போகணும்..பீ பாஸ்ட்…’’ என உத்தரவிட்டவள், தலையை ஏனோ தானோவென்று சீவி முடித்தாள்.

அடுத்த நொடி அவள் வாயிற்க் கதவு தட்டப்படவும், அவளுடன் தங்கி இருக்கும் பணிப் பெண் சங்கரி அரைத் தூக்கத்தில் எழுந்து வந்து யார் இந்த நேரத்துல…. ஆவ்..’’ கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றிய படியே வந்து கதவைத் திறந்தாள்

அந்த நேரத்தில் இரவுக் காவலரை அவள் எதிர் பார்க்காமல் விழிக்கவும், சங்கரி என்ன என்று விவரம் கேட்பதற்குள், “வழி விடு சங்கரி..’’ என அவளை நகர்ந்திவிட்டு முழுதாய் தயாராகியிருந்த நாட்சியா கைப் பையோடு பின்னால் காவலர் தொடர்கிறாரா என்று கூட கவனிக்காமல் வேகமாய் குடியிருப்பை விட்டு வெளியேற தொடங்கினாள்

என்ன ஆச்சு அம்மாவுக்கு இன்னைக்கு….இந்த புடவையில கல்யாணப்  பொண்ணு மாதிரி அலங்கரிச்சிட்டு போறாங்க….’’ என சங்கரியும், காவலரும் மனதிற்குள் எண்ணிக் கொண்டாலும் இருவரும் அதை வாய் விட்டு சொல்லவில்லை

காவலர் ஓட்டுனரை தயார்படுத்தி இருக்க, அவள் வந்து அமர்ந்த நொடி வண்டி நெல்லையப்பர் கோவிலை நோக்கி வேகமெடுத்தது. பின் இருக்கையில் விழி மூடி சாய்ந்து அமர்ந்திருந்த நாட்சியாவின் மனம் முழுக்க, அந்த வீடியோ காட்சிகளே நிறைந்திருந்தது

பரணி முதலில் வீடியோவை அனுப்பி இருக்கிறான் என்ற போது தன்னையும், அவனையும் வைத்து எதையாவது மோசமாய் சித்தரித்திருப்பான் என்று தான் முதலில் நாட்சியா எண்ணினாள்

ஆனால் அந்த காணொளியில் செங்கன் ஒரு நாற்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏதோ மயக்கத்தில் இருப்பவன் போல தலை தொங்கி அமர்ந்திருப்பதைக் கண்டதும் நாட்சியாவிற்கு தூக்கி வாரிப் போட்டு விட்டது

அதோடு ஆங்காங்கே கன்றி சிவந்து வீங்கி இருந்த முகத்தோடு, செங்கன் மெல்லிய குரலில், “தண்ணி…. தண்ணி….’’ என முணகுவதும் கேட்டது

இறுதியாய் இருந்த பரணி தான் பேசி இருந்தான். கண்களில் இருந்த லேசானா சிகப்பு அவன் இரவு சொன்ன பாச்சுலர் பார்டியை நினைவுறுத்த, நாட்சி பற்களைக் கடித்துக் கொண்டே அந்த வீடியோவைப் பார்க்க தொடங்கினாள்

மயிலுமாமன் எவ்ளோ பாஸ்ட் பாத்தியா…. அவன் உன் சார்பா கோர்ட்டுக்கு வரும் போதே எனக்கு டவுட்டுஅவனை பாலோ பண்ணி பாத்தா இப்போதைக்கு உன் ஒரே சொந்தம் அவன் தான் போலையே

உன் சார்பா உங்க பழைய வீட்டை பாத்துக்கிறான் போலஅவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தூக்கிட்டு வர்றதுக்குள்ள அப்பப்பா…. பீம் பாய் என்னா கணம் கனக்குதான்…. 

சரி மயிலு வள வளன்னு பேசிக்கிட்டே இருந்தா எம்.பீ வீணா போகுதா இல்லையாமேட்டர் என்னானா நீ சரியா அஞ்சி அம்பதுக்கு கோவிலுக்கு வந்து ஆறு மணிக்குள்ள எம் பொண்டாட்டி ஆகலஉன்னோட பீம் பாய் கதைய நாங்க குளோஸ் பண்ணிடுவோம். லூசுத் தனமா போலீஸ் போலாம் உன் பவரை யூஸ் பண்ணலாம்னு எல்லாம் யோசிக்காதா.நீ அவனைத் தேடிக் கண்டுப் பிடிக்கவே ஒரு நாள் ஆகும்உனக்கு அந்த பீம் பாய் ரொம்ப முக்கியம்னு நம்புறேன்கோவில்ல மீட் பண்ணலாம் மயிலு…’’ என்றதோடு உதட்டை குவித்து, “உம்மா..’’ எனவும் தான் நாட்சியா அந்த அலைபேசியை தூக்கி வீசி இருந்தாள்

நாட்சியாவின் நாடி நரம்பெங்கும் வெறி வெறி கொலை வெறித் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. வாகனம் குலுங்கி நிற்கவும், தன் சிந்தனையில் இருந்து கலைந்தவள் கோவில் வந்துவிட்டதை உணர்ந்து, வேகமாய் கதவைத் திறந்து கொண்டு கிட்ட தட்ட கோவிலை நோக்கி ஓடினாள்

அவள் பின்னே அவளது பாதுகாப்புக் காவலரும் ஓடிக் கொண்டிருந்தார். கோவிலின் கருவறை முன்பு பந்தல் போடப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன

நாட்சியா அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. பரணியின் குடும்பமே அங்கே குழுமி இருந்ததையும் அவள் உணரவில்லை. அவள் கண்கள் தேடி அலைந்தது எல்லாம் பரணியை மட்டுமே

கோவில் கருவறையின் மிக அருகே, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமான மண மகனாய் பரணி நின்றுக் கொண்டிருந்தான். வேகமாய் அவனை நெருங்கியவள், அதே வேகத்தோடு அவன் சட்டைக் காலரைப் பற்றி இருந்தாள், “எங்கேடா செங்கன்…?’’ என்ற கேள்வியோடு

அவளின் குரலில் இருந்த சீற்றத்தை அவன் கொஞ்சமும் மதிக்காமல், அவள் காதருகே குனிந்து என் கைத் தாலியை உன் கழுத்துல வாங்கின ஐஞ்சாவது நிமிஷம் அவன் இங்க நிப்பான்மொதோ என் சட்டையில இருந்து கை எடு….எல்லாரும் நம்மை தான் பாக்குறாங்க…’’ 

என்றவன்  அவள் கரத்தில் இருந்து தன் சட்டையை விடுவித்துக் கொண்டான். அப்பொழுது தான் நாட்சியா தன்னை சுற்றி பார்வையை ஓட்டினாள்

பரணியின் மொத்தக் குடும்பத்தோடு, அவன் நண்பர்களும் அங்கே குழுமி இருந்தனர். அவளுடைய பாதுகாப்பு காவலர் அவள் அருகே வந்து, “மேம்எனி ப்ராப்ளம்…?’’ என பவ்யமாய் வினவ

நோநோப் ப்ராப்ளம்….’’ எனவும், விஜயன் அந்தக் காவலரின் பின்னே வந்து நின்று, “நீங்க வந்து அங்க நில்லுங்க…” என அவரைத் தள்ளிக் கொண்டு நடந்தான்

அடுத்து கோவில் அர்ச்சகர் வந்து, “ஐயாஆரம்பிக்கலாமா..’’ என ராசு மதுரவனை நோக்கிக் கேட்க, அவர் சம்மதமாய் தலை அசைக்கவும், கருவறைக்குள் அர்ச்சதை தட்டில் தேங்காயோடு வீற்றிருந்த திருமாங்கல்யத்தை சுவாமியின் சன்னதிக்கு சுமந்து சென்றார்.

திருமண மந்திரங்களை ஓதி முடித்தவர், அர்ச்சதை தட்டோடு வெளியே வந்து அங்கிருந்த செல்வாம்பிகையிடம் தட்டைக் கொடுத்துவிட்டு

மாப்பிள்ளைபொண்ணை விட வயசுல பெரியவாளை தாலியை ஆசிர்வாதம் பண்ணிண்டுஅர்ச்சதையை அள்ளிக்க சொல்லுங்கோ…’’ எனச் சொல்ல, செல்வாம்பிகை ஒரு நொடியில் அந்த சிறிய கூட்டத்தை சுற்றி வந்தார்

மீண்டும் அவர் அர்ச்சகரிடம் வந்து நிற்கவும், அவர் பரணியை நோக்கி, “முருகனை சேவிச்சின்டு திருமாங்கல்யத்தை கையில எடுத்துக்கோங்கோ…’’ என ஆணையிடவும்,பொன் தாலியை கையில் எடுத்தவன்

அவன்  தந்தையைப் பார்க்கவும், அவர் அளவில் சற்றே பெரிதாய் இருந்த கஜபதி பாண்டியனின் புகைப் படத்தை சுமந்த படி முன்னால் வந்து நின்றார்

அவர் அருகில் நாட்சியாவின் தாய் அல்லியின் புகைப்படத்தை சுமந்த படி செல்வாம்பிகை வந்து நின்றார். தாய், தந்தையரின் புகைப்படத்தை கண்டதும் நாட்சியாவின் விழிகளில் நீர் நிறையத் துவங்கியது

கையில் தாலியை எடுத்துக் கொண்ட பரணி, அப்புகைப்படங்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினான்

நீங்க எங்க இருந்தாலும்இந்த நொடி இங்க இருக்குறதா நினச்சி உங்க முன்னால உங்க பொண்ணுக் கழுத்துல தாலிக் கட்டப் போறேன். நீங்க எங்க இருந்தாலும் எங்களை ஆசிர்வாதம் பண்ணனும். மாமா இனி உம் பொண்ணு நாட்சியா கஜபதி பாண்டியன் இல்ல. நாட்சியா கலிங்கத்துப்பரணி. இனி என் குடும்பம் அவ குடும்பம். அவ வைராக்கியம் என் வைராக்கியம். உன் முன்னால நடக்குற இந்தக் கல்யாணம் எங்க ஜென்மத்தை தாண்டியும் தொடரனும் மாமா.’’ 

மிக உருக்கமாய் அவர் முன் தன் உள்ளக் கிடக்கை கொட்டியவன், அடுத்து அர்ச்சகர் உதித்த, “மாங்கல்யம் தந்துனானேநவ ஜீவன கேதுனா…’’ என்ற மந்திர முழக்கத்தோடு, சொந்தங்கள் ஆசிர்வதிக்க, நாட்சியாவின் மணிக் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன்னவள் ஆக்கினான்

அந்த நொடி, அவன் வலிய கரம் அவள் பிடறியில் உரசிய அந்தக்கனம் நாட்சியாவின் உடல் முழுக்க ஏதோ ஒரு நடுக்கம் ஓடி அடங்கியது. உடம்பில் உள்ள மொத்த மயிர்க் கால்களும் ஒரு முறை சிலிர்த்து அடங்கின

தன் கண்களை அவள் மூடிய மறு நிமிடம், அவர்கள் இருவரும் அட்சதையில் ஆசிர்வதிக்கபடுவதை அவளால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. அவள் விழிகளைத் திறக்கவும் அதற்கென்றே காத்திருந்தார் போல, அவள் விழி நீர் கன்னங்களை நோக்கி ஓடியது

கண் திறந்தவள், முதலில் கண்டது, அவளுக்கு எதிரே இருந்த அவள் தந்தையின் புகைப்படத்தை தான். ஏனோ அவள் தந்தை அவளை நோக்கி அன்பாய் புன்னகைப்பதைப் போல நாட்சியாவிற்குத் தோன்றியது.

உங்க ஆசை நிறைவேறிடுச்சிப்பா …. ஆனா அது நிறைவேறினது கூடத் தெரியாமா எங்கப்பா இருக்கீங்க…?’’ தன் முன் இருந்த புகைப்படத்தை நோக்கி நாட்சியா மானசீகமாய் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்

அதற்குள் பரணி அவள் வகிட்டிலும், மார்பின் மத்தியில் இனி என் இருப்பிடம் இது தான் என கம்பீரமாய் தொங்கிய தாலியிலும் குங்குமத்தை வைத்து இருந்தான்

அவர்கள் திருமண நிகழ்வு முழுவதையும் புகைப்பட கலைஞர் யாரோ ஒருவர் மிக அழகாய் வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்தார்

சற்றே நெகிழ்ச்சியில் இருந்த நாட்சியா, தன் பார்வையை உயர்த்தினாள் முருகனைக் கும்பிட. அந்த நொடி கருவறை நோக்கி வந்துக் கொண்டிருந்த செங்கன் அவள் பார்வை வட்டத்தில் விழுந்தான்

வீங்கி இருந்த அவன் உதடும், சிவந்து தடித்திருந்த அவன் கன்னமும், அவன் இரவு முழுக்க இருந்த நிலையை நாட்சியாவிற்கு எடுத்துரைக்க சடுதியில் அவள் மனம் பாறையின் கடினத்தை மீட்டெடுத்தது

மார்பில் இருந்த மாலையை வேகமாய் பிய்த்தெரிந்தவள், செங்கனை நோக்கி கோபமாய் நடந்தாள். அவனை நெருங்கியவள், அவனுக்கு ஓங்கி ஓர் அரைக் கொடுக்க, மொத்தக் கூட்டமும் அவளை அதிர்ச்சியாய்ப் பார்த்தது.

அவளை நெருங்கிய பரணி, அவள் கரம் பற்றித் தடுக்க முயல, அவனை அவள் பார்த்தப் பார்வையில் அவன் கரம் தானாக விலகிக் கொண்டது. அவள் பார்வையில் ஒரு ராணியின் தோரணை வந்திருந்தது.

ராஜேஷ்..’’ என அவள் உரத்த குரலில் அழைக்கவும், அந்த அழைப்பிற்க்கென்றே காத்திருந்தார் போல அந்தக் காவலர் அவள் அருகில் வந்து நின்றார்

போகலாம்..’’ என்றவள், செங்கனைப் பார்த்து, “உன்கிட்ட நான் இதை எதிர் பாக்கல செங்கா..’’ என்றவள், மற்ற யாரையும் கண்டுக் கொள்ளாது வேக வேகமாய் தன் வாகனத்தில் சென்று அமர்ந்தாள்

ராணிம்மா…! ராணிம்மா…!’’ எனத் தன் பின்னோடு ஓடி வந்தவனை அவள் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. வாகனம் அங்கிருந்து புகையைக் கிளப்பியபடி வெளியேற, பரணியின் மொத்தக் குடும்பமும் திகைத்துப் போய் நின்றிருந்தது.  

மணக் கோலத்தில் இருந்தவனோ, “இனி வாழ்க்கை முழுக்க இவளுடன் எப்படிப் போராடப் போகிறேனோ…?’’ என்று மலைத்துப் போய், விரைவாய் செல்லும் வாகனத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான்

கூடு நெய்யும். 

Advertisement