Advertisement

கூடு – 9

ஒலிம்பிக்கின் தாரக மந்திரம், “Faster, Higher, Stronger’’ என்பதாகும். அதை உருவாக்கியவர் ஹென்றி டைடொன் ஆவார்

அயர்ந்துப் போய் நின்றிருந்த பரணியின் அருகே சென்ற விஜயன், “லே பரணி..’’ என அழைக்கவும், தன் சிந்தனையில் இருந்து விடுபட்ட பரணி என்ன..?’’ என்பதைப் போல விஜயனைப் பார்க்க, அவனோ தன் கண்களால் அவன் குடும்பத்தைக் காட்டினான்

அனைவரும் திகைத்துப் போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் செல்வாம்பிகா எந்த நொடியும் கண்களில் இருந்து கண்ணீர் வரலாம் என்பதைப் போல நின்றுக் கொண்டிர்ந்தார்

வேகமாய் அவர்களை நெருங்கியவன், ராசு மதுரவனிடம், “அப்பாகிளம்பலாம் உங்க மருமக தானா நம்ப வீட்டுக்கு அவளுக்கு தோணும் போது வருவா…’’ அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

ஐயாபரணி கடைசியா உன் வாழ்க்கை இப்படியா ஆகணும்…. பெத்தவங்க செஞ்சப் பாவம் பிள்ளைங்களைப் போய் சேரும்னு சொல்லுவாங்களே…. இந்தக் குடும்பம் செஞ்ச மொத்தப் பாவமும் உன் தலையில விடிஞ்சிடுச்சே பரணி…..’’என சொல்லிக் கொண்டே கண்ணீர் விடத் தொடங்கினார். 

அம்மா…. எதுக்கு இப்ப கண்ணுல டேமை திறந்து விடுறஅவ நம்ம குடும்பம் செஞ்ச பாவத்துக்கு எனக்கு கிடச்ச சுமை இல்லமாபுண்ணியத்துக்கு எனக்கு கிடச்ச பொக்கிஷம்…’’என்றவன், அவர் கைகளை எடுத்துக் கொண்டு தன் கன்னத்தில் வைத்தான்.

அம்மா சும்மா பீல் பண்ணாத என்ன. செவ செவன்னு அவளை மாதிரியே பேரனோ இல்லப் பேத்தியோ எண்ணிப் பத்து மாசத்துல உன் கையில இருக்கும்….சரியா..?’’ என்ற சமாதனப் பேச்சு வார்த்தையில் இறங்கினான்

அவ நம்ம வீட்டுக்கு வரலைனா என்னமா..? நான் ஜோரா அவ குவாட்டர்ஸ்க்கு போயி குடித்தனம் நடத்துதேன்…. இந்த வீம்பு எல்லாம் ஒரு குழந்தை குட்டின்னு ஆகுற வரைக்கும் தான்மாஉன் பையன் எதுலையும் தோக்க மாட்டேன்அந்த நம்பிக்கை உனக்கு இருக்கு இல்ல..’’ என அவரை தேற்றத் தொடங்கினான்.

அவருகில் வந்த மதுஸ்ரீ, “கொழுந்தனாரே இப்பவே அவ முந்திய பிடிச்சிக்கிட்டு போகப் போறீங்களாக்கும்ஆனாலும் உங்க சாமார்த்தியம் உங்க அண்ணனுக்கு போதாதுதேன்..’’என்று தாடையை தோளில் இடித்து அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

மயினிவேண்டாம் என்னை பேச வைக்காதீகஉங்களுக்கு கல்யாணமாகி சரியா ஆறே முக்கா மாசம் தான் ஆகுதுஆனா போன வாரமே ஏழு மாசம் முடியப் போறதா சொல்லி வளைகாப்பு பண்ணிட்டாக இல்லஇதுக்கு மேல எங்கண்ணன் சாமர்த்தியத்தை வேற நான் தனியா தம்பூரா அடிச்சி சொல்லனுமாக்கும்….’’ என அவளை வாரினான்.

ஆத்தி நான் வாயே திறக்கல…’’ என்றபடி அந்த இடத்தில் இருந்து மதுஸ்ரீ வெட்கப்பட்டு ஓடிப் போனாள். அங்கே நின்றுக் கொண்டிருந்த தரணியின் முகத்தல் வெட்கத்தின் சாயலோடு, ஒரு அப்பாவாகப் போகும் ஆணின் கர்வமும் சேர்ந்து மிளிர்ந்தது

ராசுமதுரவன், இரு சிங்கக்குட்டிகளின் தந்தை என்ற கர்வத்தோடு மீசையை முறுக்கியபடி, “அவன் தான் சொல்லுதாம்ல எல்லாம் சரியாகிப் போகும்…. பண்ட பாத்திரத்தை, பூஜை சாமானை எல்லாம் வண்டியில ஏத்தலாம்நேரத்தோட வீட்டுக்கு போயி வீட்டுச் சாமிக்கு பூஜை போடணும் இல்லஅம்பிகா கிளம்புவே…’’ என்றார்.  

மகனின் வார்த்தைகளில் சற்றே தெளிந்திருந்த செல்வாம்பிகை, பரணியின் கைகளில் இருந்து தன் கைகளை உருவியபடியே, “இதோங்க..’’ என்றவர் பரணியை நோக்கி,  

எனக்கு எம் மவனைப் போல கம்பீரமான பேரந்தேன் மொதல்ல வேணும்அப்புறம் அவளை மாதிரி எம்பூட்டு வேணா பெத்துக் கொடுஅதை நான் வளக்குதேன்….’’ என்றுவிட்டு தன் பணிகளை கவனிக்க சென்றார்

திருமணத்திற்கு தாத்தா வரவில்லை. நாட்சியின் ஆவேசம் அவரை அடியோடு சாய்த்திருந்தது. மிகவும் தளர்ந்துவிட்ட அவரை பயணிக்க வைக்க  முடியாது என்பதால் பரணி அவரிடம் வீட்டில் வைத்தே ஆசிர்வாதம் வாங்கி இருந்தான்.

அவர் சொன்ன ஒரே வார்த்தை, “அந்தப் பொண்ணுக்கு மறுபடி எந்த அநியாமும் நடக்காம பாத்துக்கோ..’’ என்பதை தான். அவன் பாட்டி நாகம்மை வடநாட்டு சுற்றுலா பயணத்தில் இருந்து இன்னும் திரும்பவில்லை.  

முதலில் பரணி வீட்டில் நாட்சியை திருமணம் செய்யப் போகிறேன் என்று அறிவித்த போது அவன் எதிர்பார்த்த எதிர்ப்பு யாரிடம் இருந்தும்  கிளம்பவில்லை

அவன் தந்தை மட்டும், “எல்லாம் சரியா வருமாயா..? அந்தப் பொண்ணு இதுக்கு சம்மதிக்குமா..?’’ என்றுக் கேட்டு மறைமுகமாக தன் சம்மதத்தை அறிவித்தார். பத்து வருடங்களுக்கு முன் சரியாய் தோன்றிய விஷயம், தற்போது அவர் மனதையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது

‘பரஞ்சோதியை நாட்சியின் விசயத்தில் தலையிட அனுமதித்து தவறோ…?’ என் முதல் முறையாக உள்ளுக்குள் கலங்கிக் கொண்டிருந்தார். நாட்சியா இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பாள் என்று நிச்சயம் அவருக்கு தெரியாது

அவர் தன் சிந்தனையோட்டத்தில் மூழ்கி இருக்க, பரணியின் குரல் அவரை நடப்பிற்கு திருப்பியது.  “அப்பாஅவளுக்கு நீங்க என்ன அநியாயம் பண்ணீங்கன்னு எனக்குத் தெரியாது.. ஆனா அவளுக்கு நியாயம் செய்ய வேண்டிய கடமையும் நமக்கு இருக்குப்பாஅவளை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு .’’ சொல்லிக் கொண்டே அவன் தன் அத்தை சிவாத்மிகாவின் முகத்தைப் பார்க்க, அவர் எனக்கு எந்த வருத்தமும் இல்ல தம்பி..’’ என்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

அவன் மாமா பரஞ்ஜோதியோ முகத்தில் மகிழ்ச்சி மின்ன, “லே பரணி அந்த பொட்டச்சிய அடக்க சூப்பர் பிளான் போட்டலே..’’ என்றவர் அவன் முக மாறுதலைக் கொண்டே வாயை இறுக மூடிக் கொண்டார்

அவரை உறுத்துப் பார்த்தவன், “இனி ஒருக்கா எம் பொண்டாட்டியை பொட்டச்சி, சிறுக்கி அப்படி இப்படின்னு யாரவது பேசினீங்க.. யம்மா அந்த வீச்சருவா சாண புடுச்சி எம்புட்டு நா இருக்கும்….’’ என்று தாயிடம் எதையோ விசாரிப்பவன் போல சமையல் அறைக்குள் நுழைந்தான்.  

அதற்கு மேல் பரஞ்சோதி அவன் இருந்த திசைப் பக்கமே திரும்பாமல் மனைவியை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டை நோக்கி ஓடிப் போனவர், சகோதரியும், மச்சானும் போனில் திருமணத்திற்கு அழைக்கவே வேறு வழியில்லாமல் அவன் கண்ணில் படாமல் ஒதுங்கி நின்று திருமணத்திற்கு ஆசிர்வதிக்க வந்து இருந்தார்.   

ஒருவழியாய் அவர்கள் குடும்பம் கோவிலில் இருந்து தங்கள் வீட்டை நோக்கி கிளம்பவும், கோவில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த செங்கனை நெருங்கிய பரணி

நீங்க கிளம்பலையாசாரிஎன் காரியத்தை சாதிக்க உங்களை கஷ்டப்படுத்த வேண்டியதா போச்சு…’’ பரணி பேசப் பேச செங்கனிடம் எந்த பிரதிபளிப்பும் இல்லை

தன் தீர்க்கமான கண்களால் அவனை அற்பனைப் போல பார்த்தவன், “எங்க ராணிமா சம்மதம் இல்லாம அவங்க கழுத்துல நீ தாலி கட்டிட முடியுமா..? முட்டாள் அவங்க கழுத்துல நீ தாலிக் கட்டணும் தான் நானும் நீங்க இழுத்த இழுப்புக்கு எல்லாம் இழு பட்டேன்.என்னை உங்க சின்னக் கயிறு கட்டிப் போட்டு வைக்குமா..? என் எண்ணம் புரிஞ்சி தான் ராணிமா என்னை அடிச்சிட்டு போறாங்க.

நீ உன் குடும்பத்துக்காக அவங்க கழுத்துல தாலிக் கட்டி இருக்கஅவங்க ஒரு காலத்துல உன் மேல வச்சி இருந்த காதலுக்காக தான் உனக்கு கழுத்தை நீட்டிட்டு போய் இருக்காங்க.

என்ன நினச்சிட்டு இருக்க…. ஒரு மஞ்சள் கயிறு அவங்களை தடுத்து நிறுத்திரும்னா. முட்டாள் முட்டாள்! அவங்களை யாரும் எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. நீயும் உன் மேல உள்ள காதலும் கூட!

உன் குடும்பத்தை தயார்ப்படுத்து அவங்க செஞ்ச பாவ மூட்டையை சுமக்க. உன்னால தோள் மட்டும் தான் கொடுக்க முடியும் பாரத்தை குறைக்க. மத்தபடி அவங்களை காப்பாத்த எல்லாம் முடியாது…’’ 

ஒரு தீர்க்கதரிசிப் போல சொல்லி முடித்த செங்கன், பரணி அவனை அதிர்ந்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வேகமாய் எழுந்து அதே வேகத்தோடு அங்கிருந்து மறைந்து இருந்தான்

தன் வீட்டில் தன் படுக்கையறையில் விழுந்து விழிகளை மூடிக் கொண்டிருந்த நாட்சியாவிற்குள் பழைய நினைவுகள் பெரும் பிரவாகமாய் பொங்கி ஆர்ப்பரித்து அவளை மூழ்கடிக்க முயன்றன

தன் அறைக்குள் நுழைந்ததும், முதல் காரியமாய் அவன் கொடுத்த புடவையையும், நகைகளையும் திக்கிற்கு ஒன்றாய் கழட்டி வீசி இருந்தாள்

கழுத்தில் தாலியை தவிர ஒரு ஆபரணமும் இன்றி இருந்தவள், வழமையான தன் இரவு உடையை எடுத்து அணித்துக் கொண்டு அப்படியே படுக்கையில் சரிந்து விட்டாள்

நியாப்படி பார்த்தால் உலகத்தையே வென்ற உவகையோடு இந்த தினத்தை நாட்சியா கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிர் மறையான மன நிலையில் கொதித்துக் கொண்டிருந்தாள்

அவன் குடும்பத்தைக் காப்பத்த என் கழுத்துல தாலியை கட்டி இருக்கான்இடியட்அவனுக்கு காட்றேன் நான் யாருன்னு.’’ மனதிற்குள் கொலுவிருந்த வைராக்கியத்திற்கு மேலும் வெஞ்சினம் ஊற்றி வளர்ந்தாள்.  

என்னத் தடுத்தும் முடியாமல் அவள் மனது மீண்டும் பழைய நாட்களை நோக்கி ஓடியது. நாட்சி ஆறாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு ஊருக்குள் வந்த போது அவளுக்கு பதினோரு வயது நிரம்பி பனிரெண்டு வயது தொடங்கி இருந்து

இப்பொழுதெல்லாம் வெளியே சுற்ற அவள் யாரிடமும் அனுமதியெல்லாம் கேட்பதில்லை. செங்கனை துணைக்கு அழைத்துக் கொள்பவள், ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் தங்கள் பண்ணை வீட்டிற்கு சென்றுவிடுவாள் பொழுதைக் கழிக்க

கஜபதி மகளுக்கு சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை பழக்கி இருந்தார். அதானால் அவள் அந்த வயதிலேயே வயதிற்கு மீறிய அறிவோடு செயல்படுவாள்

Advertisement