Advertisement

அப்புறம் நாலு நா கழிச்சி வலி பிடிச்சது தாயிஅப்பவும் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகாமா நல்லா வலி பிடிகட்டும்னு வீட்லயே வச்சி இருந்தாக….

கடைசியா பிள்ள வலி தாங்காமா கதறவும் தான் அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த சின்ன ஆஸ்பத்திரிக்கு அழச்சிட்டு போனாக தாயிஅங்க இதோ இந்த நர்ஸ் அம்மா தான்அப்போ இருந்தாக,” என்றவர் ஒரு இளம் பெண்ணைக் காட்ட, நாட்சியும் அவரைப் பார்த்துக் கொண்டாள்

அவிய செக் பண்ணி பாத்துட்டு ஏன்மா இவ்ளோ லேட்டா கூட்டிட்டு வந்தீகன்னு ஏச வேற செஞ்சாகஅப்புறம் இதுக்கு முன்னாடி செக் பண்ண சீட்டு எல்லாம் கேட்டாகநாங்க அவசரத்துல மறந்து வீட்ல வச்சிட்டு வந்துட்டோம்னு சொன்னோம்.. அதுக்கும் எசுனாக….புறவு இந்த டாகர் ஐயா வந்தாக.’’ என அருகில் இருந்த மற்றொரு வாலிபரை கைக் காட்ட, நாட்சியும் சரி என்பதாய் பார்த்துக் கொண்டாள்.  

அப்புறம், “உடனே பிரசவமாகப் போகுதுன்னு சொன்னாக…. கூட யாராவது ஒருத்தரை இருக்க சொன்னாகநான் தான் தாயி போனேன்…. பிள்ள வலிக்கு முக்கி முக்கி தள்றா.. பிள்ள தலைக் கொஞ்சமும் முகமும் ஒன்னா வருது வெளிய….

அந்த நர்ஸ் அம்மாவும், டாக்டர் ஐயாவும் ஏதோதோ எனக்கு புரியாம பேசிக்கிட்டாக. அந்த டாக்டர் ஐயா எங்களை கூப்பிட்டு, “முகம் முன்னால இருக்குசுகப் பிரசவம் கஷ்டம் அதனால் பெரிய ஆஸ்பதிற்கு உடனே கொண்டு போகணும்கொஞ்சம் முன்னாடி கூடிட்டு வர மாட்டீங்களா…. அப்படின்னு அவரும் ஏசிட்டு 108 ஆம்புலன்சுக்கு போனை போட்டார் தாயி

அவுக வண்டி அனுப்ப அரை மணி நேரம் ஆயிடும்னு சொல்லிட்டாங்கஅதுக்குள்ள இங்க பிள்ள வலி தாங்காம கிடந்தது தவிக்குறாஅப்புறம் அந்த அம்மாவும், ஐயாவும் சேந்து பிரசவம் பாக்க தொடங்குனாக…. எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு குழந்தை வெளிய வந்தது ஐயா

பிள்ள ரொம்ப சிரம பட்டு தான் வந்ததுஅப்பமே குழந்தை அழவே இல்ல கண்ணா முழி எல்லாம் வீங்கி போய் இருந்ததுகஇவுக ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பிள்ளைய அழ வைக்க என்ன எண்ணமோ பண்ணிகிட்டே இருந்தாக..

இந்தக் களேபரத்துல நானும் எம் மகளை பாக்கலீங்க தாயிபொறந்த புள்ள  கண்ணும் முழிக்கல அதுக்கு மூச்சும் வரலபொறவு நர்ஸ் அம்மா எம் மகளுக்கு சத்தை எடுக்க வந்தவக, எம் மகளை செக் பண்ணிட்டு மறுபடி ஏதோ கத்த ஆரம்பிச்சாக

ரெண்டு கையிலையும் குளுகோஸ் போட்டு என்ன எண்ணமோ துணியை எல்லாம் கட்டி, அவங்க செஞ்சிகிட்டு இருக்கும் போதே அது மயக்கத்துக்கு போயிடுச்சீங்கபொறவு 108 வண்டி வந்ததுங்கபுள்ளைய அங்க கொண்டு போய் விட்டாங்க….

அங்க இருந்த டாக்டருங்க எல்லாம் உடனே ஆப்ரேசன் பன்னோனும்னு சொன்னாக. எங்க மருமகனும் கையெழுத்து எல்லாம் போட்டாருஅப்புறம் என்ன என்னவோ பண்ணினாங்க எம் மகளை…. 20 பாட்டிலு ரத்தம் எல்லாம் போட்டாக….. மூணு நாலு கழிச்சி மூட்டையாதான் தாயி திருப்பிக் கொடுத்தாக….

முன்னமே இப்படி ஆகும்னு தெரிஞ்சி இருந்தா குடி இருக்க ஓலைக் குடிசையை வித்துக் கூட தனியார்லையே வைத்தியம் பாத்து இருப்பேன் தாயிஇன்னைக்கு நான் சுமந்ததையும், அது சுமந்ததையும் வாரிக் கொடுத்துட்டு வெறுங்கையா நிக்குறேன் தாயிவெறுங்கையா நிக்குறேன்…’’

சொல்லி முடித்த அத்தாய் குமுறிக் குமுறி அழ, உள்ளே வலித்ததை கஷ்டப்பட்டு விழுங்கியவள், “அழாதீங்க அம்மாகண்டிப்பா உங்களுக்கு நியாயம் கிடைக்கும்கொஞ்சம் பொறுங்க டாக்டருங்க கிட்ட பேசிட்டு உங்களுக்கு விளக்கம் சொல்றேன்..’’ என்றவள் தலைமை மருத்துவரை நோக்கி திரும்பினாள்

இவள் அவர் புறம் திரும்பவுமே, “மேம்திஸ் ஈஸ்எ கேஸ் ஆப்…’’ என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். அவரை நிறுத்தியவள், “மேம். தமிழ்லையே உங்க விளக்கத்தை சொல்லுங்கஅவங்களும் கொஞ்சம் புரிஞ்சிக்கட்டும்..’’ என்றாள்

சரியென்று தலை அசைத்தவள், “மேம்…. அந்த பொண்ணுக்கு பிரசவ நேரத்துல கூபகத்துல வந்து பதிஞ்ச உறுப்பு முகம்…. எப்பவும் தலை வந்து கூபக்கதுல முதல் உறுப்பா உக்காந்தா தான் சுகப் பிரசவம் நடக்கும்…. ஏன்னா பிரசவத்தப்ப கருப்பை வாய் 10 சென்டி மீட்டர் அளவு மட்டும் தான் திறந்து குழந்தை வெளி வர அனுமதிக்கும்தலை பதிஞ்சா அதோட நீட்சி அளவு 9.6 சென்டிமீட்டர்…. சோ அது ஈசியா கருபப்பை வாயை தாண்டி வெளிய வரும்…  ஆனா முகத்தோட நீட்சி அளவு 14 சென்டி மீட்டர்.. அது எப்படி 10 சென்டிமீட்டர் துவாரத்துல புகுந்து வெளிய வரும் ரொம்பக் கஷ்டம்….

அதனால தான் ஸ்கேன் எடுத்து பாக்கும் போது தலையை தவிர வேற ஏதாவது உறுப்பு கூபகத்துல உக்காந்து இருந்தா நாங்க ஆப்ரேசன் ப்ளான் பண்ணிடுறோம்

இந்த பேசன்ட் மேட்டர்ல என்ன நடந்து இருக்குன்னா இவங்க மாசமா இருக்கப்ப முழுக்க ஒரு ப்ரைவேட் கிளினக்ல செக் பண்ணி இருந்து இருக்காங்ககவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு போகல.. லாஸ்ட்டா அவங்க ஆப்ரேசன் சொன்னதும் அங்க வேண்டாம்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய் இருந்து இருக்காங்க

அப்புறம் வலி பிடிச்சி உடனேயும் ஆஸ்பத்திருக்கு போகாமா அந்த பேசன்ட் கர்ப்பபை முழுசா அதாவது 10 சென்டி மீட்டரும் திறந்ததுக்கு அப்புறம் அங்க கூட்டிட்டு போய் இருக்காங்க.

புல் போர்சா பெயின் வரவும், அந்த பேசன்ட் பயங்கர ஸ்ட்ரையின் பண்ணி முக்கி இருக்காங்கஅங்க இருந்த டாக்டர் நர்ஸ் எல்லாரும் முடிஞ்ச அளவு சப்போர்ட் பண்ணி டெலிவரி பாத்தும், குழந்தை ரொம்ப நேரம் பிரசவ சமயத்துல கூபகத்துல சிக்கி இருந்ததால மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கு

அதோட ரொம்ப போர்சா குழந்தைய வெளிய தள்ளி விட்டா போதும்னு அந்த பொண்ணு ஸ்ட்ரைன் பண்ணதுல கர்ப்பபை வாயோடு கீழ் பகுதி கர்ப்பபையும் சேர்ந்து கிழிஞ்சி இருக்குஅதுல ஹெவி பிளட் லாஸ் தொடங்கி இருக்கு….

பட் அவங்க பேஷண்டை ஜி.எச் ஷிப்ட் பண்ணும் போது ப்ரீசியஸ் டைம் முடிஞ்சி பேசன்ட்டோட ரத்தம் உறையிற தன்மை முழுக்க செயல் இழந்து போய் DIC அப்படிங்கிற கண்டிசனுக்கு போயிட்டாங்கப்ளீடிங் ஸ்டாப் பண்ண கர்பப்பை பாதியா  எடுக்குற சர்ஜரியை கூட பண்ணிப் பார்த்துட்டோம்… 20 யூனிட்ஸ் ப்ளட் போட்டோம்பட் நோ யூஸ்…. கடைசியா வீ லாஸ்ட் த பேசன்ட்…’’ 

பேசி முடித்தவர், தன் கண் கண்ணாடியை துடைத்துவிட்டு மீண்டும் அணிந்துக் கொண்டார். அவர் குரலிலும் வேதனை எட்டிப் பார்க்க, அடுத்து நாட்சி அங்கிருந்த பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் மருத்துவரை பார்க்க, அந்த இளம் மருத்துவர் பேசத் தொடங்கினார்

மேம் அவங்க வரும் போதே புல் டயலடேசனோட வந்தாங்கஎங்களுக்கு பிரசவம் பாக்குறதை தவிர வேற ஆப்சன் இல்லாம போச்சுஅதோட அன்னைக்கு எங்க ஏரியா 108 வண்டி வேற ஏதோ மாஸ் ஆக்சிடென்ட் அட்டென் பண்ண போனாதால நாங்க எதிர் பார்த்த டைம்க்கு பேசன்ட்டை ஜி. எச் ஷிப்ட் பண்ண முடியல…’’ 

என்றதோடு அவர் நிறுத்திக் கொள்ள, அப்பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சை அளித்த கையேடுகளை நாட்சி சரி பார்க்க தொடங்கினாள். பிறகு தெளிவாக நிமிர்ந்தவள் அங்கிருந்த அப்பெண்ணின் உறவினர்களை பார்த்துப் பேச தொடங்கினாள்

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலஇந்தக் காலத்துலப் போயி உங்கப் பிடிவாதத்துக்கு அநியாயமா ரெண்டு உயிரை பலிக் கொடுத்து இருக்கீங்க.. தனியார் ஆஸ்பத்திரியில ஆப்ரேசன் பண்ணனும்னு சொன்னதும் ஒன்னு நீங்க அங்க ஆப்ரேசன் பண்ணி இருக்கனும். இல்ல உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு போயி அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டு அதைப் பண்ணி இருக்கனும்.

ரெண்டையும் விட்டுட்டு வலி வந்த பொண்ணை உடனேயும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகாம, கடைசி நேரத்துல இழுத்துகிட்டு போயிஉங்களை எல்லாம் என்ன சொல்றதுன்னே எனக்கு உண்மையா புரியல…’’ என்றவள்

கூட்டத்தோடு கூட்டமாக நின்றுக் கொண்டிருந்த அப்பெண்ணின் மாமியாரை நோக்கி, “ஏம்மா உங்களுக்கு எத்தனைக் குழந்தைங்க..?’’ எனக் கேட்க, அம் மூதாட்டியோ, “ஆறு தாயி..’’ என்றார்

..எப்படிப் பொறந்தாங்கஆஸ்பத்திரிக்கு போவீங்களா..?’’ எனக் கேட்க, “இல்ல தாயிஎல்லாம் வூட்ல பொறந்த பிள்ளைங்க தான்அதிலும் கடைசி புள்ள கதிர் அறுக்க வயக் காட்டுக்கு போற வழியில பொறந்தவன் தாயி

இப்படி எல்லாம் நடக்கும்னு சாமி சத்தியமா தெரியாதுங்க…. எங்க காலத்துல ஆப்ரேசன் எல்லாம் கிடையாதுங்கடாக்டருங்க பணம் புடுங்க பாக்குறாங்கன்னு நினச்சி மருமவளை கூட்டிட்டு வந்துட்டேனுங்க.இப்படி ஆகும்னு தெரியாதுங்க..’’ என்றவர் முந்தானையில் முகத்தை மூடி அழத் தொடங்க அடுத்து என்ன பேசுவதென்றே அவளுக்கும் புரியவில்லை

நிறைய தனியார் மருத்துவமனைகளில், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கே, ஆப்ரேசன் செய்து பணம் வசூலிக்கும் தந்திரமும் அரங்கேறுவது அவளுக்கும் தெரியும் தான்

ஆனால்இந்த பெண்ணின் விசயத்தில்…. சற்று நேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்டவள், “அம்மாஉங்க காலம் வேற இப்ப இருக்க காலம் வேற. உங்க காலத்துல பிரசவிக்கும் போது ஏற்படுற இறப்பு ரொம்ப ரொம்ப அதிகம். அப்ப எல்லாம் அதைப் பத்தின விழிப்புணர்ச்சியோ  கணக்கெடுப்போ கிடையாதுஅதனால அதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாம போச்சு.

அதானால தான் இப்ப ஹாஸ்பிடல்ல பிரசவம் பாக்கணும்னு சொல்றாங்க. உங்க விசயத்துல குறை சொல்றதா இருந்தாஉங்களையும், அந்த விதியையும் தான் குறை சொல்ல முடியும்…’’ 

என்றவள், “ஏம்மா உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க..?’’ என இறந்த பெண்ணின் அம்மாவை பார்த்துக் கேட்க, அழுது கொண்டிருந்த அவர் முகத்தை துடைத்துக் கொண்டு, “ரெண்டு பொண்ணு, ரெண்டு பையன் தாயிஇவ தான் மூத்தவ..’’ என்றார்

ஹும்சரிஇனி நீங்க அழுதாலும் போனவங்க திரும்பி வர போறதில்லைஉங்கப் பொண்ணுக்கு நடந்த சம்பவம் உங்களுக்கு ஒரு பாடமா இருக்கட்டும்.. மீதம் இருக்க பொண்ணு பசங்களை நல்லா பாத்துக்கோங்கஉங்க பொண்ணுக்கோ, மருமகளுக்கோ இனி அந்த நிலை வரவே கூடாது

கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனதால உங்க பொண்ணு இறந்து போகலசரியான நேரத்துக்கு கூட்டிட்டு போகாததால தான் இறந்து போய் இருக்காங்கசரிங்களா….உங்க முன்னாடி தான் நான் இப்ப எல்லாரையும் விசாரிச்சேன்உங்களுக்கு திருப்பதி தானேஇந்த பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போட்டுட்டு கிளம்புங்க…’’என்றவள் அழுதுக் கொண்டிருந்த மாமியாரை நோக்கி திரும்பி

அம்மாஇனி இப்படி ஒரு நாளும் நீங்களா முடிவு எடுக்காதீங்க…. அக்கம் பக்கம் யார் வீட்ல மாசமா இருக்க பொண்ணைப் பாத்தாலும் வலி பிடிச்ச உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக சொல்லுங்க சரியா…. உங்க மகன் எங்க..?’’ எனக் கேட்கவும்

இனி யாரைப் பார்த்தாலும் முன்னாடியே ஆஸ்பத்திரிக்கு போக சொல்லுதேன் தாயி. பொண்டாட்டி போனதுல இருந்து குடியே கதின்னு கிடக்கான் தாயிஎங்களால சமாளிக்க முடியல…’’ என்றார் வேதனையோடு

அப்படியா சரி.. எப்ப தெளிவா இருக்காரோ அப்ப வந்து என்னைப் பாக்க சொல்லுங்க… ‘’ என்றவள் எழுந்து நின்று, மருத்துவக் குழுவிற்கு கரம் குலுக்கி முடித்தவள், “தாங்க்ஸ் பார் யுவர் கோ ஆப்ரேசன் டாக்டர்ஸ்….” என்றவள் அங்கிருந்த செவிலியர்  புறம் திரும்பி

சிஸ்டர்எப்பவும் நமக்கு கொடுத்து இருக்குற கோல்டன் ரூல்ஸ் பாலோ பண்ணுங்க. பேபி மதர் ரெண்டு பேரும் அட்டன் டைம்ல ரிஸ்க்குக்கு போனா நம்ம ஆக்சன் பஸ்ட் டூவார்ட்ஸ் தி மதர் தான் இருக்கனும்அப்புறம் உங்க ஹாஸ்பிடலுக்கு வர மதர்ஸ் எல்லாருக்கும் வார்னிங்  சைன்ஸ் ஆப் லேபர் சொல்லிக் கொடுத்து அனுப்புங்க. அப்ப தான் நம்ம மெட்டர்னல் டெத் அவாய்ட் பண்ண முடியும்.முடிஞ்ச அளவு மதர் அண்ட் பேபி சேவ் பண்ண போராடி இருக்கீங்கநல்ல முயற்சிதொடர்ந்து இதே மாதிரி சேவை செய்யுங்க… ’’ அவள் அந்த செவிலியருக்கு அறிவுறுத்தினாள்

சரிங்க மேம்..’’ என அந்த செவிலியர் பணிவாய் இவள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டார்

அந்த கலந்துரையாடல் அறையில் இருந்து வெளியேறியவள் ஆட்சியர் அறைக்குள் நுழைய அவளுக்கென அங்கே காத்திருந்த வேலைகள் அவளை உள் இழுத்துக் கொண்டன

நாட்சி காலையில் நடந்த திருமணத்தை முற்றிலும் மறந்தவளாய் தன் பணியில் தன்னை அர்ப்பணித்து மூழ்கி இருக்க, தன் அறையில் படுத்துக் கொண்டு விட்டதை வெறித்துக் கொண்டிருந்த பரணியோ முழுக்க முழுக்க அவள் நினைவில் மூழ்கி இருந்தான்

கூடு நெய்யும். 

 

Advertisement