Advertisement

கூடு – 10

ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. அப்போட்டிகள்  கோடைக்கால ஒலிம்பிக், மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இருவகைப்படும்

தன் அறைக் கதவு மென்மையாக தட்டப்படவும், தான் மூழ்கி இருந்த நினைவலைகளில் இருந்து மீண்டவளாக நாட்சியா எழுந்து அமர்ந்தாள்

அவள் எழுவதற்க்குள் மீண்டும் இருமுறை அறைக் கதவு மென்மையாய் தட்டப்பட்டது. “வறேன்…. சங்கரி…’’ என சலிப்பாய் அறிவித்துக் கொண்டே எழுந்த நாட்சியா சென்று அறைக் கதவை திறந்தாள்

அங்கே ஆட்சியரின் உதவியாளர் சாமிகண்ணு நின்றுக் கொண்டிருந்தார். இவளைப் பார்த்ததும், “வணக்கம்மா..’’ என பவ்யமாய் வணக்கம் வைத்தார்

முதலில் நாட்சியாவிற்கு இவர் ஏன் இங்கே வந்து இருக்கிறார் என ஒன்றும் புரியவில்லை. அதன் பிறகு தன் தலையில் தட்டிக் கொண்டவள்

சாரி சாமிக்கண்ணு! சார் டெல்லி போன விசயத்தையே மறந்துட்டேன் பாருங்களேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சீக்கிரம் கிளம்பி வந்துடுறேன்’’என்றவள் புடவை மாற்ற அறைக்குள் நுழைந்தாள்

பாரவாயில்லீங்க அம்மாமணி இப்ப தானுங்க எட்டரை ஆகுதுநீங்க பொறுமையா கிளம்பி வாங்க அம்மா…’’ என்றவர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொள்ள, சங்கரி அவருக்கு காபி கொண்டு வந்து கொடுத்து உபசரித்தாள்

நன்றிமா..’’ என்றபடி அவர் பெற்றுக்கொள்ள, அதை அவர் குடித்து முடிக்கும் முன் நாட்சியா மின்னல் வேகத்தில் கிளம்பி வெளியே வந்தாள். அவளை கண்டதும் அவர் கப்பை கீழே வைத்துவிட்டு எழுந்துக் கொண்டார்.  

உக்காந்து காப்பியை குடிங்க சாமிக்கண்ணு…’’ என்றவள் அவருக்கு எதிரில் இருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்துக் கொண்டு, “சங்கரி எனக்கு க்ரீன் டீ..’’ எனக் குரல் கொடுக்க, சங்கரி நாட்சியா வழமையாய் அருந்தும், மூலிகை தேநீரைக் கொண்டு வந்துக் கொடுத்தாள்

அதைப் பெற்றுக் கொண்டவள், “தாங்க்ஸ் சங்கரி..’’ என அவள் முகம் பார்த்து முறுவலிக்க, அந்தப் புன்னகை சங்கரியின் முகத்திலும் தொற்றியது. ஒரு கையால் தேநீர் கோப்பையை வைத்திருந்தவள், மறு கையால், அருகே இருந்த கோப்பை எடுத்துக் கொண்டபடி

இன்னைக்கு அஜந்தா எல்லாம் இந்த பைல்ல தான இருக்கு சாமிக்கண்ணு..?’’ என வினவவும், “ஆமாமா..’’ என அவர் மரியாதையாய் பதில் அளித்தார்

தேநீரை பருகிக் கொண்டே நிமிட நேரத்தில் அந்த பைல்களை பார்வையிட்டு முடித்தவள், காலிக் கோப்பையை கீழே வைத்துவிட்டு எழவும், அவளோடே எழுந்துக் கொண்ட சாமிக்கண்ணு. 

யப்பாஒரு டீக் குடிக்கிற நேரத்துக்குள்ள இந்த அம்மா ஒரு பைலையே பாத்து முடிக்கிறாங்களே…. ரொம்ப வேகம் தான்..’’ என மனதிற்குள் அவளை மெச்சிக் கொண்டார்

ஆட்சியர் முக்கிய கூட்டதிற்காக தலைநகர் டெல்லி சென்று இருந்ததால், உதவி ஆட்சியர், தற்சமயம் ஆட்சியர் பொறுப்பில் அமர்ந்து அலுவல்களை கவனிக்க வேண்டி வந்தது. அதனால் சாமிக் கண்ணு இன்று இங்கே விஜயம் செய்து இருந்தார்

முதல் நாள் பரணி செய்த கலாட்டாவில் நாட்சி, ஆட்சியர் தன்னை அழைத்து விவரம் சொல்லி விடைப்பெற்று சென்றிருந்ததை மறந்து விட்டிருந்தாள்

எழுந்தவள், “ராஜேஷ்..’’ என்றுக் குரல் கொடுக்க, அவனோடு மேலும் இருக் காவலர்களும் உள்ளே வந்து அவளுக்கு விறைப்பாய் சல்யூட் வைத்தனர்.

அவள் ஒரு ராணியின் தோரணையோடு முன்னே நடக்க, அவள் பின்னால் கோப்புகளை சுமந்த படி சாமிக் கண்ணும், அதற்கும் பின்னால் அவளுடைய பாதுகாப்பு காவலர்களும் நடந்து வந்தனர்.

அவள் ஆட்சியர் வாகனத்தில் பின் இருக்கையில் ஏறி அமர, முன்னால் சாமிக் கண்ணு அமர்ந்துக் கொண்டார். வழி முழுக்க, நாட்சியா மீண்டும் கோப்பில் மூழ்கியபடியே வர சாமிக்கண்ணுவும் அடுத்து அவள் சந்திக்க வேண்டிய ஆட்களின் பட்டியலை சரி பார்த்தபடி வந்தார்

அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்ததும், முதலில் ஏதோ தொழிற்சங்க நிர்வாகிகள் வந்து தொழிற்சாலை விரிவாக்க அனுமதிக் கடிதம் வேண்டி மனுக் கொடுக்க வந்தனர்

அடுத்து யாரோ வார்ட் கவுன்சிலர் ஒருவர் வந்து அவர்கள் ஊரில் பாதாள சாக்கடைக் திட்டத்திற்கு குழி தோண்டி ஒரு மாதம் கடத்தும் திட்டத்தை முடிக்காததால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப் படுவதோடு, சுகாதார சீர் கேடும் ஏற்படுவதாக புகார் அளித்தார்

அவர் முன்னிலையிலேயே அந்த குத்தகைக்காரரை அழைத்து அவள் விசாரிக்கவும், அவர் தலையை சொறிந்தபடி, “அம்மாஅது வந்துங்கபோன வாரம் எம். எல்.ஏ தெருப்பக்கம் குழி தோண்ட தொடங்கும் போதே கையோட ரோடும் போடணும்னு மொத்த ஆளுங்களையும் அங்க நிப்பாட்டி வச்சிக்கிட்டாங்க…. அதனால இங்க வேலை நின்னுப் போச்சுங்க அம்மா..’’ 

அவர் பேச்சை முழுதாய்க் கேட்டவள், “அந்த எம்.எல்.ஏ கிட்ட நான் பேசுறேன்நீங்க முதல்ல இவங்க ஊரை சரிப் பண்ணுங்கநமக்கு என்னப்  ப்ளான் கொடுத்தாங்களோ அதுப் படி தான் நாம வேலை செய்யணும். அதை விட்டுட்டு இப்படி எம்.எல்.ஏ தெரு, எம்.பி தெருன்னு பாத்து பாத்து வேலை செஞ்சீங்கன்னா உங்களுக்கு அடுத்ததா அமௌன்ட் கோட் பண்ணி இருக்குற ஆளுக்கு காண்ட்ராக்டை கை மாத்தி விட வேண்டி வரும். இது முதல் முறைங்கிறதால கம்ப்ளைன்ட் பைல் பண்ணாம வார்னிங்கோட விடுறேன். போங்க…’’ 

அவள் பேசிய விதத்தில் மிரண்டு போன அந்த குத்தகைக்காரர், “ரொம்ப நன்றிங்க அம்மாஇனி அப்படி நடக்கமா பாத்துக்கிடுதேன் அம்மா..’’ என்று கும்பிட்டபடியே விடைப் பெற்றுச் சென்றார்

அடுத்ததாய் அந்த வார்டு கவுன்சிலரும், இவளை நோக்கி கரம் கூப்ப, வேண்டாம் என தலை அசைதவள், “எப்பவும் இப்படி மக்கள் பிரச்சனைக்கு முன்னாடி நில்லுங்கசில சமயம் தவறிப் போனாலும்பல சமயம் தீர்வு கிடைக்கும்..’’ என்றபடி அவரை பார்த்து புன்னகைத்தாள்

அவரும் நாட்சியை பார்த்து புன்னகைத்தபடியே, “ரொம்ப நன்றிங்க அம்மா...! உங்களை மாதிரி ஆளுங்களைப் பாக்கும் போதுதேன் நம்ம நாட்டு சட்டம்  மேல நம்பிக்கை வருது. நாங்க வறோமுங்க..’’ என்றபடி விடைப் பெற்றுச் சென்றார்

அடுத்தடுத்து தொடர்ந்த சந்திப்புகள், தகவல் பறி மாற்றங்கள், எங்கோ நடந்த கலவரத்திற்கு பதில் சொல்ல வேண்டியக் கட்டாயம் அனைத்தையும் முடித்து நாட்சியா, “அப்பாடா..’’ என மூச்சு விடும் போது நேரம் இரண்டை கடந்து இருந்தது

இவள் அறைக்குள் அனுமதிப்பெற்று நுழைந்த சாமிக்கண்ணு, “அம்மா இந்த இருபது நிமிஷம் தான் இன்னைக்கு நமக்கு கிடச்சி இருக்க நேரம்.அடுத்து மூணு மணிக்கு மெட்டர்னல் டெத் ஆடிட் இருக்குஎல்லாரும் கீழ் கான்பரன்ஸ் ரூம்ல வைட் பண்றாங்க அம்மா…. உங்களுக்கு லஞ்ச் வந்துடுச்சிகொண்டு வரவாமா….?’’ 

அவர் தன்மையாய் கேட்கவும், “ஆடிட் வேற இருக்காசரி சாமிக்கண்ணு…. லஞ்ச் கொண்டு வாங்க, நீங்களும் சாப்பிட்டுடுங்க..’’ என்றவள், கைகழுவ எழுந்துக் கொள்ள, சாமிக்கண்ணு அவள் மதிய உணவு கேரியரை அங்கே கொண்டு வந்து வைத்துவிட்டு தானும் உண்ணப் போனார்

பத்து நிமிடத்திற்குள் உண்டு முடித்தவள், அடுத்து நடத்த வேண்டிய ஆடிட் சம்மந்தப்பட்ட பைலை பார்வையிட தொடங்கினாள். அந்த கோப்பை படிக்கும் போதே இதயத்தில் முணுக்கென்ற வலி எழுவதை அவளால் தடுக்க முடிவதில்லை

ஏதோ ஓர் கிரமாத்தில் பிரசவித்து இருந்த தாயும், குழந்தையும் ஒரே சமயத்தில் இறந்து இருந்தனர். ஏன்..? எப்படி…? என்ற கேள்விக்கு விடைக் காணவே இந்த ஆடிட்டிங்

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற  நாடுகளில் மகப்பேறு இறப்பு என்ற விசயமே அடியோடு தவிர்க்கப்ட்டு விட்டது. கருவுற்றால் இறந்துப் போக அது ஒன்றும் நோய் அல்லவே

நம் இந்தியாவில் மட்டும் கருவுறும் ஒரு லட்சம் தாய் மார்களில் 130 தாய்மார்கள் இறந்துவிடுவதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அதிலும் தமிழகத்தில் அந்த இறப்பு விகிதம் 79தாக உள்ளது

இத்தனைக்கும் நம் தமிழகத்தில் தாய் சேய் நலம் காக்க ஏகப்பட்ட நலவாழ்வு திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன. அனைத்து சுகாதார மையங்களிலும் இலவச பிரசவத்தோடு அத்தாய் கர்ப்ப காலத்திலும், அதற்கு அடுத்து வரும் பின் பிரசவக் காலம் என்ற பாலூட்டும் காலத்திலும் வசதி குறைந்த தாய்மார்களும் சத்தானா ஆகாரம் எடுத்துக் கொள்ள, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை வழங்கப்படுகிறது

மொத்தம் பனிரெண்டாயிரம் அரசு வழங்கினாலும், அதை பத்திரமாக தங்கள் குழந்தையின் பெயரில் போட நினைக்கும் பெற்றோர்களே இங்கு அதிகம். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்ற உண்மை அவர்களுக்கு விளங்குவதில்லை

ஆரம்பத்தில் இது போன்ற மகப்பேறு விசாரனைகளில் அமரும் போது நாட்சியா மிகவும்  வேதனைப்படுவாள். இப்பொழுது அந்த வேதனைக் குறைந்து இருந்தாலும், உள்ளுக்குள் ஏற்படும் வலியை உதற முடிவதில்லை

சரியாய் மூண்று மணிக்கு நாட்சியா விசாரணையில் சென்று அமர்ந்தாள். அங்கே மருத்துவக்கல்லூரியில் மகப்பேறு துறையில் உயர் பதவியில் இருக்கும் மருத்துவரோடு, அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் வந்து இருந்தனர். மற்றொரு புறம் அப்பெண்ணின் உறவினர்கள் வந்து இருந்தனர்.

இவள் வந்து அமரவும் விசாரணை தொடங்கப்பட்டது. இறந்து போன பெண்ணின் தாய், அப்பெண்ணின் மாமியாரை குறை சொல்லத் தொடங்கினார்

அம்மாகடைசி முறை குழந்தைய படம் பிடிச்சி பாக்கும் போதேமுகம் தான் முன்ன இருக்கு ஆப்ரேசன் பண்ணிக் குழந்தையை எடுத்துடலாம்னு தனியார் ஆஸ்பத்திரியில சொன்னாங்க..தாயிஇவுக தான் பணம் புடுங்க தனியார் டாக்டருங்க அப்படி தான் சொல்லுவாக  பிரசவ வலி பிடிச்சதும் கவருமன்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போலாம்னு சொல்லி அவங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயி என் மகளை வச்சிக்கிட்டாக

Advertisement