Advertisement

கூடு – 12

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன

நாட்சியா வீட்டிற்குள் நுழையவும், அதுவரை அங்கே நடந்தவற்றை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த செல்வாம்பிகை சற்றே தெளிந்தார். 

அம்மா தாயிமொதோ மொதோ கல்யாணம் முடிஞ்சி வாழப் போற வீட்டுக்கு வந்து இருக்க…. சித்த வெளிய நில்லுமாஉனக்கும் தம்பிக்கும் சேத்து ஆரத்தி எடுக்கலாம்…’’ அவர் அவளிடம் பேசிக் கொண்டே ஆரத்திக் கரைப்பதற்கு ஆயத்தம் ஆனார். 

ஆரத்தியா…?’’ என்று நக்கலாய் மொழிந்தவள், ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்டதைப் போல விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள். மதுஸ்ரீயும், சிவாத்மிகாவும் அவளை பயமாய் பார்த்துக் கொண்டிருந்தனர், “அடுத்து என்ன செய்யப் போகிறாளோ..?’’ என்ற ரீதியில்

ஒரு வழியாய் தன் சிரிப்பை நிறுத்தியவள், செல்வாம்பிகையை பார்த்து, “அத்தஅத்தஆரத்தி எல்லாம் யாருக்கு எடுக்கணும்…. புகுந்த வீட்ல வாழ வரப் பொண்ணுக்கு எடுக்கணும் அத்த…. நான் எதுக்கு வந்து இருக்கேன்இந்த வீட்டைவீட்ல இருக்குறவங்க நிம்மதிய, சந்தோசத்தை, கௌரவத்தை எல்லாம் முழுசா குழி தோண்டி புதைக்க வந்து இருக்க வேலுநாட்சியா நானு….’’

கடைசி இரு வரிகளை சொல்லும் போது நாட்சியாவின் கண்கள் அடர் பழுப்பிற்கு மாறின. அவள் முகம் வெகு அருகில் இருந்ததால், செல்வாம்பிகையால் அவள் கண்களின் நிறமாற்றத்தை காண முடிந்தது

யாரோ ஒரு யட்சினியின் முன் நிற்பதை போல அவர் உணர ஆரம்பிக்க, அவர் முகம் பயத்தில் வெளிறியது. தாயின் பயந்த தோற்றம் பரணியை  முழுதாய் மீட்டது

வேகமாய் அவள் அருகில் வந்தவன், அவள் கரம் பற்றி தன் புறம் திருப்பி, பைத்தியக்காரி….இனி இந்த வீட்ல நீயும் ஒருத்திஉன்னோட சந்தோசம், கௌரவம், நிம்மதி இது எல்லாத்தையும் நீயே அழிச்சிக்க போறியா என்ன...?’’ என்று அவளை நோக்கி இகழ்ச்சியாக கேட்டான்

உன் குடும்பம் வேதனைப்பட என்னை உயிரோட தீக் குளிக்க சொன்னாக் கூட நான் தாயார் மிஸ்டர் கலிங்கத்துப்பரணி. ஆனா  எனக்கு நீங்க வருத்தப்படுறத்தை பாத்து ரசிக்கனுமே….’’ என நிறுத்தியவள்,

அதனால என் உயிர் எனக்கு முக்கியம். உன்ன மாதிரி ஒரு கிறுக்கனை நான் பாத்ததே இல்ல மாம்ஸ். எவனாவது கொள்ளிக் கட்டையை எடுத்து வந்து வீட்ல விளக்கு ஏத்துவானா…’’ என்றவள் அவனை மேலும் கீழும் பார்த்தாள்

அது விளக்கை ஏத்தாது ஒட்டு மொத்த வீட்டையும் எரிச்சிடும்நானும் அப்படி தான் பரணிமனசு முழுக்க பழி வெறி பத்தி எரியுற கொள்ளிவீடுக்குள்ள கொண்டு வந்துட்ட இல்லஇனி என்ன நடக்குது பாரு….’’அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே பேசியவள், அவன் பிடியில் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள்

அடுத்த நொடி இயல்பாகி தன் பார்வையை வரவேற்பறையில் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சி பெட்டியை நோக்கி திருப்பினாள்

அங்கே அலறிக் கொண்டிருந்த ஹிந்தி சீரியலைக் கண்டவள், வேகமாய் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டு, “ஆஹா.. சூப்பர் சீன் ஒரு வழியா அந்த ரமேஷ் சோனாலிகிட்ட லவ்வ சொல்லிட்டான் போலையே…’’ என்று குதூகலக் குரலில் தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், அருகில் இருந்த பழக் கூடையிலிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து உண்ணத் தொடங்கினாள்

அவள் அப்படி அமர்ந்துக் கொண்டதும், அவள் பின்னால் வந்து செங்கன் நிற்க, அவளின் காலின் அருகே அலெக்சாண்டர் வந்து அமர்ந்துக் கொண்டது

அங்கிருந்த பெண்கள் அவளை விசித்திரமாய் பார்க்க, பரணியோ, “இவ என்ன டிசைனா இருப்பா. நொடிக்கு ஒரு முறை பச்சோந்தி மாதிரி கலர் மாறிட்டே இருக்கா. இவளை எப்படி சமாளிக்க போறோமோ…?’’ என மனதிற்குள் ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்

அடுத்த பத்து நிமிடத்தில் அந்த நாடகம் முடிந்து விட, எழுந்து நின்று சோம்பல் முறித்தவள், செல்வாம்பிகையை பார்த்து, “அத்த…. மாமா எல்லாம் எப்ப வருவாங்க..?’’ எனப் பாசமாய் கேட்டாள்

அவள் அப்படி கேட்ட விதமே செல்வாம்பிகைக்கு பீதியைக் கிளப்பியது. இருந்தாலும் மருமகளுக்கு, “இப்போ வர நேரம் தான் தாயி…’’ என அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்கும் ஒலிக் கேட்க, ராசு மதுரவனோடு, தரணியும் வீட்டிற்குள் நுழைந்தனர்

அவர்கள் வந்ததும் சிவாத்மிகாவும், மதுஸ்ரீயும் வேகமாய் அவர்கள் அருகில் சென்று நின்றனர்வரவேற்பறையில் அலட்சியமாய் நின்றுக் கொண்டிருந்த நாட்சியாவை கண்டவரின் நெற்றி சுருங்கினாலும், “வா தாயி..’’ என மருமகளை வரவேற்க அவர் தவறவில்லை

அவர் அப்படி சொன்னதும், “அதான் வந்துட்டேனே…’’ என அதே அலட்சியத்தோடு பதில் சொன்னவள், “செங்கா..’’ எனக் குரல் கொடுக்க, செங்கன் வெளியே சென்றான்

ராசுமதுரவனின் முகத்தை பார்த்தவள், “மாமாகல்யாணத்தை நீங்க நம்ம முறைப்படி நடத்திட்டீங்க. அடுத்து வரவேற்பை வெஸ்டன் ஸ்டைல்ல நடத்த வேண்டாம். அதுக்கு தான் நான் வந்து இருக்கேன். எப்படினா!’’ என்றவள்

வெளியே சென்ற செங்கன் கொண்டு வந்த அட்டைப் பெட்டியை திறந்து அதற்குள் இருந்த வெளிநாட்டு மதுபான வகையறாக்களை எடுத்து அங்கிருந்த டீபாயில் அடுக்கினாள்

மொத்தக் குடும்பமும் அவளை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அதில் இருந்த ஒரு பாட்டிலை கையில் எடுத்தவள், “இதை புல்லா குடிச்சிட்டு தெருவுல போய் டான்ஸ் ஆடினா எப்படி இருக்கும்….’’ என கண்களில் கனவோடு கூற, “உன் இடுப்பு மொதோ உடையும்…..’’ என்று பரணி வார்த்தைகளை கடித்து துப்பினான். அப்படி சொன்னவனை மயக்கும் புன்னகையோடு பார்த்தாள்.  

ஏன் மாம்ஸ் நேத்து நைட்டு பேச்சிலர் பார்டின்னு குடிச்சியே அது என்ன சந்தனமா? நான் பத்தினி மாமா! கணவன் எவ்வழியோ, பத்தினி அவ்வழி…’’அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, தன் ஊன்றுகோல் ஒலிக்க கிருஷ்ணமூர்த்தி அங்கே வந்தார். வந்தவர் டீபாயில் இருந்த வஸ்துகளை பார்த்துவிட்டு, அவளைப் பார்த்தார்

பின்பு ஒன்றும் பேசமால் வெளியே நடக்க தொடங்கினார். ராசு பதறிப் போய் அவர் பின்னோடே ஓடினார்.

எனக்கு இதையெல்லாம் பாக்க முடியும்னு தோணலை ராசு. கொஞ்ச நாள் உங்க சித்தப்பன் மாணிக்கம் வீட்ல இருந்துட்டு வறேன். தரணிய என்னை கொண்டு போய் விட சொல்லு. உங்க அம்மாவை நேரா அங்கேயே வர சொல்லி மலருக்கும் போன் போட்டு சொல்லிரு.’’ சொன்னவர் வெளியே நடக்க வேறு வழியின்றி தரணி கார் சாவியை எடுத்துக் கொண்டு அவரை கொண்டு சென்று விட வெளியே விரைந்தான்

நடந்த எதுவும் நாட்சியாவை பாதித்ததாக தெரியவில்லை. அவள் கல் சிலைப் போல அப்படியே நின்றாள். அவர் கிளம்பிய ஓசை அடங்கியதும், கையில் இருந்த மதுபான பாட்டிலை கலீர் என்ற ஒலியோடு வரவேற்பறையில் போட்டு உடைத்தாள்

பெண்கள், “ஐயோ’’ என்ற கூச்சலோடு ஒதுங்கி நிற்க, ராசு மதுரவன் அவள் ரௌத்திரத்தின் முன் மலைத்து நின்றார். பரணியோ, “நாட்சிவேண்டாம்…’’ என்றபடி அவளைத் தடுக்க வந்தான்

அங்கேயே நில்லுங்க மிஸ்டர் கலிங்கத்துப்பரணி….. அங்கேயே நில்லுங்க ஒரு அடி முன்னாடி எடுத்து வச்சீங்க. என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. எவ்ளோ தைரியம் இருந்தா குடிச்சிட்டு, அந்த மூஞ்சை எனக்கு வீடியோ வேற எடுத்துக்காட்டுவ. பேச்சுலர் பார்டியா பேச்சுலர் பார்டி...! உங்களை மாதிரி யாரோ எங்கையோ விளையாட்டா தொடங்கி வைக்குற பழக்கம் எத்தனை பேர் உயிர் குடிக்குது தெரியுமா…?”

ஆங்காரமாய் கத்திக் கொண்டே இருந்தவள், அந்த அட்டை பெட்டியில் இருந்த மதுபான பாட்டில்கள் முழுவதையும் திசைக்கொன்றாய் வீசி எறிந்தாள்

வீடு முழுக்க ஆல்கஹாலின் நெடி ஆக்ரமிக்க, மூச்சு வாங்க நிமிர்ந்தவள், “எனக்கு தெரிஞ்சி நீ குடிக்கிற முதல் முறை. அதனால பாட்டில் தரையில உடையுது. மகனே இனி ஒரு முறை குடிச்சேன்னு தெரிஞ்சது…. அதே பாட்டில்ல உன் மண்டையை உடைப்பேன்….. நான் நாட்சியாசொன்னா செய்வேன் தெரியுமில்ல…. இந்த வீட்டை நீ ஒருத்தன் தான் கிளீன் பன்றவேற யாராவது பண்ணாங்கன்னு தெரிஞ்சது தினம் இப்படி நூறு பாட்டிலை உடைப்பேன்…..’’

அவனை நோக்கி கரம் உயர்த்திக் கத்தி முடித்தவள், “செங்கா..’’ என அழைக்க, அடுத்த நொடி, “சின்னம்மா..’’ என்றபடி முன்னே வந்து நின்றான் செங்கன்

மேல இருக்க மூணாவது ரூம்ல என் பொருளை எல்லாம் கொண்டு போய் வை. எனக்கு பக்கத்து ரூம்ல நீ தங்கு…. ரூம் வாசல்ல எப்பவும் அலெக்சாண்டர் இருக்கனும்என் அனுமதி இல்லாம யாரும் என் ரூம் பக்கம்  காலை வைக்கக் கூடாது புரிஞ்சதா…’’ 

அவள் ஆணையிடவும், “அப்படியே பண்ணிடலாமுங்க..’’ என்றவன், தங்கள் பொருட்களை எடுக்க, நாலா புறமும் சிதறி இருந்த கண்ணாடி சில்லுகள் காலில் குத்தி விடாமல் பார்த்து பார்த்து வெளி நோக்கி நடந்தான்.  

தன் துளைக்கும் பார்வையால் ராசு மதுரவனை அளந்தவள், “என்ன மாமா திகைச்சி போய் நிக்குறீங்க…. பழசெல்லாம் மறந்து போச்சோ….. பட்ட சாராயத்தை வாங்கி ஊத்தினா உண்மையை கக்கிருவானு எந்தப் பொண்ணு  திமிற திமிற அவ வாயில சாராயத்தை ஊத்தி வேடிக்கைப் பாத்தீங்களோ இன்னைக்கு அந்தப் பொண்ணு உங்க வீடு முழுக்க சாராயத்தால நாரடிச்சி இருக்கா…. கடவுள் இருக்கார் இல்ல….’’ என்று விட்டு பரணியை நோக்கி திரும்பினாள்.

யோவ் மாம்ஸ் உனக்கு கிளீன் பண்ண கஷ்டமா இருந்தா உங்க அப்பாவை வேணா கூட்டு சேத்துக்கோ. அய்ய அத்த இப்பவே எதுக்கு வாயில துணிய பொத்தி அழுதுக்கிட்டு இருக்கீங்க. அப்படி அழுக எல்லாம் நிறைய நேரம் இருக்கு. போங்க போயி வெங்காய சட்னி அரச்சி தோசை ஊத்துங்க எம் மாமனுக்கு அது தானே இஷ்டம்என்ன சிவாத்மிகாமாஅப்படியே பேய் படத்தை பார்த்த ஹீரோயின் மாதிரி நிக்குறீங்க ரூமுக்கு போங்க…. மதுஸ்ரீ மேடம் உங்களுக்கு தனியா சொல்லனுமா….போங்க எல்லாரும்…’’அவள் கத்திய கத்தலில் பெண்கள் கலைந்து சென்றனர்

அப்படி நடந்து கொண்டிருக்கும் போது மதுஸ்ரீ மனதிற்குள், “இவன் குடிச்சதுக்கு இந்த புள்ள வீட்டையே சாராய கடையாக்கிட்டா….. இவன் சொன்ன மாதிரி அந்த தாராகிட்ட முத்தம்  கித்தம் வாங்கிட்டு வந்தா என்ன செய்வாளோ…. அடியாத்தி என்ன தோரணை என்ன ஆளுமைபரணிப் பயலுக்கு ஏத்த புள்ள தான்…..’’ என எண்ணிக் கொண்டே தன் அறையை நோக்கி நடத்து சென்றாள்

மீதம் இருந்த பரணியும், ராசுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, பரணியின் பார்வை அவன் தத்தையை, “நீங்களா இப்படி..?’’ எனக் கூறு போட்டது.  

அவன் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பரணியை பார்த்தவள், “என்ன மாமா…. நேத்து நைட்டு எதுக்கோ டியூசன் படிச்சிக்கிட்டு இருக்கேன்னு சொன்னஎன்ன மேட்டர்…?’’ என கண்களை சிமிட்டி கேட்டாள்

வேக வேகமாய் தந்தை அருகில் இருக்கும் பதட்டத்தில், “அதெல்லாம் ஒன்னும் இல்ல நாட்சி…. சும்மாஅது வந்து….’’ அவன் இன்னும் என்ன எல்லாம் உளறி இருப்பானோ, அதற்குள் அவனைப் போதும் என்பதாய் கை உயர்த்தி தடுத்தவள்

இனி உனக்கு எல்லா டியூசனும் நான் எடுக்குறேன் சரியா மாமா. ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் மூட் வரணும். அது எப்ப வரும்னு தெரியாது. வந்தா கண்டிப்பா எடுப்பேன். சரியா….? டைம் ஆகுது பார்…. வீட்டை கிளீன் பண்ணு போ…. பண்ணிட்டு வீடு முழுக்க ரூம் ஸ்ப்ரே அடிச்சி விடு மாமாஎன்ன கப்பு…. கருமம்…. இதை எப்படி தான் குடிக்கிறாய்ங்கலோ. கன்றாவி…’’ என்றவள் தன் அறையை நோக்கி நடந்தாள்

அவள் அங்கிருந்து நகரவும் தான் மகன், தந்தை இருவருக்கும் மூச்சே ஒழுங்காக வந்தது. பரணி, “அப்பா..’’ என அவரிடம் விளக்கம் கேட்க முனைய, “தம்பி எதுவும் நானா செய்யலையா…. எல்லாம் உம் மாமன் பரஞ்சோதி வேல தான்…. ஆனா அப்ப அவனைத் தடுக்காம விட்டது என் தப்புதேன்..’’என்றவர் குரல் கரகரத்தது.

அப்பா…. சரி விடுங்க…. மொதோ வீட்டை கிளீன் பண்ணலாம்…. தப்பை செஞ்சிட்டோம் தண்டனையை ஏத்துக்குவோம்…. அப்பவாச்சும் அவ கோபம் குறையுதா பாப்போம்….’’ என்றவன் வீட்டை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்க, ராசுமதுரவனும் அவனோடு இணைந்து கொண்டார்

ஆனால் அவன் உள்ளமோ ஒரு பக்கம் எரிமலையாய் நாட்சியாவிற்கு நடந்த கொடுமைகளை எண்ணி எரிந்தாலும், மறு பக்கம் பனி மலையாய் தன் மீது அவளுக்கு இருக்கும் அக்கறை எண்ணிக் குளிர்ந்தது

மயிலு…. மாமா மேல உனக்கு அவ்ளோ லவ்வா மயிலு…. ஹும் எப்ப தான் உன் வாயால அந்தக் காதல் கதைய கேப்பேனோ தெரியலையே….’’ என்றபடி வீட்டை சுத்தபடுத்த தொடங்கினான்

சமயலறையில் இருந்த செல்வாம்பிகையின் முகமோ தெளிவாக இருந்தது. “பய குடிச்சதுக்கு தான் அந்த ஆட்டம் ஆடுதாளோஹும் எம் மவனுக்கு பிடிச்ச வெங்காய சட்டினி வரை தெரிஞ்சி வச்சி இருக்கா. எம் மவனை என்னை விட நல்லா பாத்துக்குவா. நெல்லையப்பா! எங்களுக்கு துணை இருந்து அந்தப் பொண்ணு மனசுல இருக்குற வேதனையை எல்லாம் ஆத்திடு சாமி!’’ என்று மனமுருக இறைவனை வேண்டிக் கொண்டார்.

தனக்கென தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட அறையில் முடங்கிக் கொண்டவளின் மனமோ ஆற்றாமையில் தவித்துக் கொண்டிருந்தது. அறிந்தோ அறியாமலோ அவன் மீதான உரிமை உணர்வை காட்டிவிட்டு வந்திருந்தாள்

கீழே அந்த கண்ணாடி சில்லுகளை சுத்தம் செய்யும் போது தவறிப் போய் கைகளை கிழித்துக் கொள்வானோ என்ற எண்ணமே அவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது

பத்து நிமிடங்கள் தாக்கு பிடித்தவள், அதற்கு மேல் முடியாமல், பொருட்களை அடுகிக் கொண்டிருந்த செங்கனை அழைத்து இருந்தாள்

வழக்கமான கம்பீர தொனி மாறியிருக்க, செங்கன் அவள் அழைப்பிலேயே அவள் மனநிலை உணர்ந்தான்

சின்னம்மா! கவலைப்படாதீங்க. பெரிய ஐயாவுக்கும், சின்ன ஐயாவுக்கும் மொத்தமான பிளாஸ்டிக் கை உறை கொடுத்துட்டு தானுங்க வந்தேன். நீங்க சரக்கு வாங்க சொல்லும் போதே எதுக்கும் தேவைப்படும்னு இதையும் வாங்குனேனுங்க. நீங்க என்னை சுத்தம் செய்ய சொல்லுவீங்கன்னு நினச்சேன்...! ஆனா சின்ன ஐயாவுக்கு அந்த வேலைய கொடுத்துப் போட்டீங்க…’’ அவன் குரலில் உன்னை நான் அறிவேன் என்ற தொனி வெளிப்பட்டது

சரிசரி…. வேலையைப் பாரு செங்கா…’’ என்றவள் நிம்மதி உணர்வோடு, மீண்டும் படுக்கையில் சாய்ந்துக் கொண்டாள். “மயிலு மாமன் ஸ்பெஷல் டியூசன் படிக்கிறேன் மயிலு..’’ என்ற வார்த்தைகள் காதில் ஒலிக்க, அவள் முகத்தில் ஒரு குறுநகை மலர்ந்தது

அந்த முறுவலோடே உறங்கிய அவளின் கனவிலும், கடந்த கால அழகிய நிலா காலங்கள், கனவென்னும் போர்வை அணிந்து உலா வரத் தொடங்கின

கூடு நெய்யும். 

 

Advertisement