Advertisement

இன்றைக்கு மாலை சுமார் மூன்று மணியளவில், டைகர்ஸ் வாரியர்ஸ் அணிக்கும், பெங்கால் கிங்கர்ஸ் அணிக்கும் இடையேயான கால் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன

அந்தப் போட்டியில் தமிழக கால்பந்து வீரரான கலிங்கத்துப் பரணி, தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டம் முடிந்து இரண்டுக்கு நான்கு என்ற கோல் கணக்கில் டைகர்ஸ் அணி வெற்றி வாகை சூட மைதானத்தில் பரணி உற்சாக வலம் வரத் தொடங்கினார்

அதுவரை, தங்கள் அணியின் டைகரஸ் கொடியை உயர்த்தி பிடித்து வெற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த தாராதத், தீடீரென இறங்கி மைதானத்திற்குள் நுழைந்தார்

பரணியை நோக்கி அவர் வந்ததும், பரணி வெற்றியின் மகிழ்ச்சியில் அவர் கரம் பற்றிக் குலுக்கினார். அந்த நேரத்தில் தாராதத் ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் சூழ்ந்திருக்கும் மைதானத்தில்,பரணிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையை வட மாநிலங்களிலும்இந்திய கால்பந்துக் குழுமத்திலும் தோற்றுவித்துள்ளது. நடிகை தாராதத் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

முத்தம் அன்பின் வெளிப்பாடு. நான் பரணியை பாராட்டவே என் அன்பு பரிசாக அவர் கன்னத்தில் முத்தம் பதித்தேன். இதற்கெல்லாம் நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என சொல்லிச் சென்றுள்ளார்

பரணி பத்திரிகையாளர்கள் சந்திப்பை முழுவதும் தவிர்த்து வருகிறார். இவர்கள் அணி வெற்றி பெரும் போது எல்லாம் கொடுக்கப்பட்ட பார்ட்டிகளில் இருவரும் இணைத்து நடனம் ஆடியதைப் போல இருந்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் தற்சமயம் வெளி வந்து உள்ளன

பரணியின் மீது கொண்ட காதலாலே தாராதத் புதிய கால்பந்து அணியை வாங்கி இருக்கலாம் என்ற ஊகங்களும் உலா வருகின்றன. டைகர்ஸ் அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றியதும் திருமணம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது

நாட்சியாவின் கண்கள் தெரித்து விடும் போல தொலைக்காட்சியையே நோக்கிக் கொண்டிருந்ததது. அதில் தன் வெண்ணிற ப்ரில் கவுன் காற்றில் பறந்தாட, வன மோகினியாய் பரணியை நோக்கி ஓடி வரும் தாரா

அவன் கைகுலுக்கியதும், தன் வெண்பற்கள் புன்னகை சிந்தி, காதோடு குனிந்து அவனிடம் ரகசியம் பேசும் தாரா. நிமிர்பவள் அவன் எதிர்பார்க்காத தருணத்தில் அவன் கன்னத்தில் தன் மென் உதடுகள் பதிக்கும் தாரா

தரணியின் முகத்தில் அதிர்ச்சியை எதிர்பார்த்தால், புன்னகையோடு கன்னத்தை தடவிக் கொள்ளும் பரணி

அதோடு ஏதோ மேற்கத்திய நடனத்திற்கு இருள் சூழ்ந்த பப்பில், தாராவின் மொத்த சௌந்தர்யத்தையும் எடுத்துக் காட்டும் உடையில் அவள் இருக்க, அவள் இடையில் கரம் கோர்த்து, மிடுக்காய் அவளோடு நெருங்கி நிற்கும் பரணி

நாட்சியின் மொத்த ரத்தமும் அவள் முகத்திற்கு பாய்ந்திருக்க, அடுத்து பரஞ்சோதி பேசிய வார்த்தைகளில் அவன் முகம் சிம்ம வாகினியின் ரௌத்திரத்தை தத்தெடுத்தது

மச்சான்…. சும்மா சொல்லிட்டே இருப்பியலே அவன் பந்தை தூக்கிட்டு க்ரவுண்டுக்கு போகும் போது எல்லாம் எம் மவன் கஜபதி வளர்ப்பு கஜபதி வளர்ப்பு அப்படின்னு. அப்ப எல்லாம் நம்ப தோணலை மச்சான்..இப்போ நம்ப தோணுது எனக்கு. உண்மையிலேயே மாப்பிள்ளை….. நம்ம சகலை கஜபதி வார்ப்புதேன். அவனைப் போலவே உலகத்துக்கு ஒரு பொண்டாட்டி அழகா ஒரு வப்பாட்டின்னு பிடிச்சிட்டான் பாத்தியளா? ஆனா ஒன்னு மச்சான்...! இவனும் அவன் மாமனை மாதிரி எத்தனை பெத்தாலும் அத்தனையும் பொண்ணா போகமா இருந்தா சரிதேன்.’’

இன்னும் அவர் என்ன எல்லாம் பேசி இருப்பாரோ, நாட்சியா மூலையில் இருந்த பித்தளை பூஜாடியை எடுத்து, அந்த பெரிய எல்..டி டிவியையின் மேல் குறிபார்த்து வீச அதன் பெரிய கண்ணாடி திரை உடைந்து கலிங்என்ற ஒலியோடு வீடு முழுக்க சிதறியது.

பிரேம் அவளின் அந்த ரௌத்திரம் கண்டு, சற்றே மிரண்டு ஓரடி பின்னால் நகர்ந்தார். மதுரவனும், பரஞ்சோதியும் எழுந்து நிற்க, மற்ற அனைவரும் ஓரடி பின்னால் நகர்ந்தனர்

திரும்பி நின்று பரஞ்சோதியை அனல்கக்கும் விழிகளால் அளந்தவள், “எம் புருஷன் ஊர்ல இல்லாத நேரம் கொஞ்சம் அமைதியா இருப்போம்னு பாத்தா விட மாட்டீங்க இல்ல. உன்னை எல்லாம் எப்பவோ செஞ்சி முடிச்சி இருக்கணும்என்ன சொன்ன என்ன சொன்னஎம் புருஷன் வப்பாட்டி தேடுற ஆளாவரட்டும் சொல்றேன்அவர் யாருன்னு அவரே உனக்கு விம் போட்டு விளக்குவார்.

மற்ற அனைவரையும் பார்த்து உக்கிரமாய் முறைத்தவள், “இந்த ஆளுக்கு தான் புத்தி இல்லைனாஅவர் கூட உக்காந்துகிட்டு நீங்களும் அந்தக் கன்றாவியை எல்லாம் பாக்கணுமா..? நம்ம பரணியை பத்தி நமக்கு தெரியாதா…? போங்க எல்லாம் போய் வேலை வெட்டி இருந்தா பாருங்க.

மாமா கப்பை வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் புது டீவி வீடுக்குள்ள வரணும். மிஸ்டர் பரஞ்சோதி இப்போ நீங்க உங்க வீட்டுக்கு கிளம்புறீங்களா ப்ளீஸ்முடிஞ்சா பொண்டாட்டி கையால உங்களுக்கு பிடிச்ச மீன் கொழம்பு வச்சி தர சொல்லி சாப்பிட்டுக்கோங்க. ஏன்னா ஜெயில்ல அதெல்லாம் கிடைக்காது.’’  அவரை பார்த்து தாழ்ந்த குரலில் அவள் கூறினாள்

அதில் இருந்த உறுதி அவள் சொன்னதை செய்யப் போவது உறுதி என அறிவித்தது. பரஞ்சோதியும் பதிலுக்கு அவளை பழிவாங்கும் பார்வை பார்த்து வைத்தார்

அவர்கள் வாக்குவாதத்தை தடுக்கும் பொருட்டு, ராசுமதுரவன் அவள் முன்னால் வந்து, “தாயி நான் வேணா பத்திரிக்கை எல்லாம் கூப்பிட்டு உங்களோட கல்யாணத்தை அறிவிச்சிடட்டுமா..? உன் முகம் இறுகிக் கிடந்தாலும் கண்ணு தவிச்சி கிடக்கே தாயி..?’’ 

அவர் அப்படி சொன்னதும், நாட்சியாவின் கண்களில், வேகமாய் நீர் துளிகள் உற்பத்தியாகத் தொடங்கின. அவள் தலையை குனிந்துக் கொள்ளவும், செல்வாம்பிகை ஒரு புறமும், சற்றே தயக்கத்தோடு என்றாலும் சிவாத்மிகா ஒரு புறமும், அவள் கரத்தை சென்றுப் பிடித்துக் கொண்டனர்

செல்வாம்பிகை, “அந்தக் கருவாப் பய வரட்டும் தங்கம்கரண்டியை சூடு பண்ணி அந்த வெள்ளைக் கழுதை முத்தம் கொடுத்த கன்னத்துலையே சூடு போடுறேன்..’’ என ஆறுதலாக உரைத்தார்

வேலும்மாஜோதி அண்ணன் என்ன ஏதுன்னு சொல்லாம எல்லாரையும் டிவி முன்னாடி வர சொல்லி அந்த சேனலை போட்டு விட்டாக. தெரிஞ்சி இருந்தா நாங்க பாத்தே இருக்க மாட்டோம். சரியா நாங்க பாத்துக்கிட்டு இருக்கும் போதே நீயும் வந்துட்ட. பதினாலும் வருஷம் குடும்பம் நடத்தின மனுஷன் மேல எனக்கு இல்லாத நம்பிக்கை வாழ்கையை தொடங்காத நீ உம் மாமன் மேல வச்சி இருக்க பாரு. கண்டிப்பா அந்த நம்பிக்கையை எப்பவும் எம் மருமகன் காப்பாத்துவான். நீ கிடந்தது மனசை உழப்பிக்காத…’’ 

அவர் திக்கி திணறி ஒவ்வொரு வார்த்தைகளாய் தான் பேசினார். ஆனாலும் அவர் அப்படி ஆறுதலாய் பேசியதும் நாட்சி அவர் தோளில் முகம் புதைத்து விம்மி தீர்த்து விட்டாள்

அம்மா…’’ என அழைப்பதும் பிறகு தேம்புவதுமாய் இருக்க, சிவாவும், “உன் அம்மா தாண்டி மகளே..’’ என நாட்சியாவை அணைத்துக் கொண்டு கதறி தீர்த்துவிட்டார். மதுஸ்ரீயும் மறுபுறம் வந்து தங்கையை அணைத்துக் கொண்டாள்

ராசுமதுரவன், அவர்களை சமாதானப்படுத்த, “ஏய்க் கழுதைகளாவீட்டுக்கு களைச்சி போயி வந்து இருக்கும் பிள்ளமொதோ டீ காபி போட்டுக் கொடுங்கநான் குடோன் வரைக்கும் போய்ட்டு வறேன்ஜோதி மச்சான் கொஞ்சம் வாங்க உங்களோட இன்னைக்கு தனியா பேசியே ஆகணும்..’’ 

அவர் தனியா என்ற வார்த்தைக்கு கொடுத்த அழுத்தத்தில், பரஞ்சோதிக்கு சற்றே பீதி கிளம்பினாலும், வெளியே தெனாவட்டாக, “போலாம்போலாம்உண்மைய சொன்ன கசக்க தான் செய்யும்..’’ என அடுத்த வம்பை விலைக் கொடுத்து வாங்கிவிட்டே முன்னால் நடந்தார்.

அவரைத் தொடர்ந்து தானும் நடந்த மதுரவன், அப்பொழுது தான் வாசற்படியின் தொடக்கத்தில் தயக்கத்தோடு நின்றுக் கொண்டிருந்த, பிரேமை பார்த்தார்

தம்பி நீங்க..’’ என அவர் இழுக்க, என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் பிரேம் திருதிருக்க, அப்பொழுது தான் சிவாத்மிகாவின் தோளில் இருந்து நிமிர்ந்த நாட்சியா, பிரேம் விழித்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்

அவசரமாய் சிவாத்மிகாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாயிலுக்கு சென்றவள், “மாமாஅவர் எங்க அம்மா வகையில சொந்தம் அம்மாவுக்கு ஒன்னுவிட்ட தம்பி. கொஞ்ச நாள் நம்ம வீட்ல தங்கிட்டு போக வந்து இருக்கார்….’’  என அறிமுகப்படுத்தி வைத்தாள்

அவரும், “அப்படியா ரொம்ப நல்லதுவீடுக்குள்ள நடந்த கலாட்டா பாத்து பயந்துடீங்களா அது நிதம் நடக்குறதுதேன். நீங்க இருங்க நான் குடோனுக்கு போயிட்டு சடுதியா வந்துடுதேன். உள்ள கூட்டிட்டு போயி சாப்பிட எதுவும் கொடு தாயி..’’ என மருமகளுக்கும் அறிவுரை கூறி விட்டே சென்றார்

அவரை அவசரமாய் இடை மறித்தவள், “மாமா எங்க கல்யாணம் பத்தி பரணி  மாமா டீம் கப் வாங்கினதுக்கு அப்புறம்  அனவுன்ஸ் பண்ணிக்கலாம் மாமா..’’ என வேண்டுகோள் வைக்க, “உன் விருப்பபடியே செஞ்சிடலாம் தாயி..’’ எனச் சொன்னவர் மீண்டும் கிளம்ப அவரோடு தரணியும் இணைந்துக் கொண்டான்

போகிற போக்கில், “அவனுக்கு ஏதோ பயங்கர ஆப்பை ரெடி பண்ணிட்ட போலையே நாட்சிஎனக்கு உன் முகத்தைப் பார்த்தாலே பீல் ஆகுதே..’’ என தரணிகண்ணடித்து வினவ, நாட்சியாவின் முகமும் புன்னகை பூசிக் கொண்டது.   

ஆம்என்ற விதத்தில் அவனுக்கு தலை அசைத்து அவன் அதிர்ச்சிப் பார்வைக்கு சிரித்தவள், நடந்து கொண்டிருந்த அனைத்தையும் வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்த பிரேமை உள்ளே அழைத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி விட்டு, அவருக்குண்டான அறையைக் காண்பிக்க மாடிக்கு அவரை அழைத்து சென்றாள்

அவர்களுக்கு தேவையான காபியை தான் தயாரித்துக் கொண்டுவருவதாய் சிவாத்மிகா சொல்லிவிட்டு சமயறைக்குள் புக,அப்பொழுது தான் செங்கன் அங்கே இல்லாது அவள் கருத்திலேயே பதிந்தது. எங்கே சென்று இருப்பான் என்று இவள் குழப்பத்தோடு மாடிப் படிகளில் நடந்தாள்

ஊருக்கு செல்லும் குறுக்கு பாதையில் பிழிந்து பிழிந்து அழுதுக் கொண்டிருந்த தேவிஸ்ரீயின் முன், “இப்பெண்ணை கண்டிக்க வந்தது தவறோஎன கைகளைப் பிசைந்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான் செங்கன்

கூடு நெய்யும். 

 

Advertisement