கூடு – 16

உலகப் போர்களின் காரணமாக, 1916, 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில்  மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை

பரணி தான் கலந்துக் கொண்ட முதல் போட்டியில் இருந்தே கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்து இருந்தான். பந்தை லாவகமாக எதிர் அணியிடம் இருந்து தட்டிப் பறிப்பதிலும், எதிர் அணியின் தடுப்பாளர் எதிர்பாராத திசையில் இருந்து பந்தை வலைக்கு அனுப்பி அதை கோல்ஆக்குவதிலும் மிகச் சிறந்த ஆட்டக்காரனாய் இருந்தான்

பரணி கிடைக்கும் குறுகிய இடைவேளையிலும், நாட்சியாவை அலைபேசியில் அழைத்து பேசவே விரும்பினான். ஆனால் முதல் நாள் தொடர்பு கொண்ட பொழுதே

மாமா நான் என்ன சொன்னேன் உங்ககிட்டவிளையாடும் போது முழுக் கவனமும் விளையாட்டுல இருக்கணும்னு சொன்னேனா இல்லையா..? நீங்க கப்பை வின் பண்ணிட்டு வாங்க நாம அதுக்கு அப்புறம் விடிய விடிய உக்காந்து பேசலாம்..’’ 

அவனிடம் பேசும் பொழுது வெளிப்பட்ட கண்டிப்பு தொனியில், அதன் பிறகு பரணி நாட்சியாவிற்கு அழைக்கவே இல்லை. ஆனால்காலை வணக்கத்தையும், இரவு வாழ்த்தையும் மறக்காமல் புலனத்தில் அனுப்பிவிடுவான்

ஆனால் அதற்க்கான பதில் நாட்சியாவிடமிருந்து வராது. இருந்தாலும் பரணி தினமும் அந்த செய்கையை தன் வாடிக்கையாக்கி வைத்திருந்தான்

நாட்சியா தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாள். யாரிடமும் எந்த வம்பும் வைத்துக் கொள்வதில்லை. வீடு ஒரு வகையில் சொல்லப் போனால் அமைதியாய் இருந்தது

அன்று நாட்சியா தன் அலுவலகத்தில் அமர்ந்து பணியில் ஈடுபட்டு இருந்தாள். அப்பொழுது அவளது உதவியாளர் வந்து, “மேம் பிரேம்னு ஒருத்தர் உங்களைப் பாக்க வந்து இருக்கார்..’’ என்று சொல்லவும்

நாட்சியா மலர்ந்த முகத்தோடு, “உடனே அவரை உள்ள அனுப்புங்க ஜேம்ஸ்..’’ என்று அவருக்கு உத்தரவிட்டாள். அறைக்குள் அவள் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த பிரேம் நாற்பதின் தொடக்கத்தில் இருந்தார்

கண்களில் ரிம்லெஸ் கண்ணாடி. முகத்தில் பிரெஞ்ச் தாடி. உடலை இறுக்கி பிடித்த டீஷர்ட், சற்றே சாயம் போன ஜீன்ஸ் என மனிதர் நவ நாகரீக யுவனாய் இருந்தார்

ஹலோ மிஸ் ஏஞ்சல்..’’ என அவர் கைகுலுக்க முற்பட, அவரைப் பார்த்து பெரிதாய் சிரித்தவள், “சார்நவ் ஐயம் மிசஸ் ஏஞ்சல்..’’ என சொல்லிவிட்டு சிரிக்க, வந்தவர் சற்றே அதிர்ந்தார்

சொல்லவே இல்ல ஏஞ்சல் நீங்க? இப்படி பெரிய பெரிய அதிர்ச்சியா கொடுத்தா என் சின்ன இதயம் தாங்குமா…?’’ என தன் நெஞ்சில் கை வைத்து வலிப்பதைப் போல நடித்துக் காட்டினார்

மீண்டும் பலமாய் சிரித்தவள், “சார் போதும் விளையாட்டு. நான் போன வாரமே உங்களை இங்க எதிர் பார்த்தேன். லேட்டா வந்ததும் இல்லாம இப்ப கதை வேற சொல்லிட்டு இருக்கீங்களா? சீக்கிரம் சொல்லுங்க இந்தமுறையாச்சும் ஏதாவது க்ளூ கிடைச்சதா…?”

எதிர்பார்ப்பில் மின்னும் அவள் கண்களைக் காணும் போது அவருக்கே சற்று பாவமாகத் தான் இருந்தது. தனியார் துப்பறியும் நிறுவனத்தை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கு,கடந்த ஐந்து வருடமாக, இவள் வாடிக்கையாளராய் இருக்கிறாள்

முதல் ஒரு வருடம் தொலைந்த தன் தாய், தந்தையை தேடினாள். கடைசியாய் கஜபதியும், அல்லியும் மலேசியா செல்லும் கப்பலில் பயணித்து இருக்கிறார்கள் என்ற தகவலைத் தவிர வேறு எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை

ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்தவள், ராசு மதுரவன், பரஞ்சோதி மற்றும் பரணி இவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தர சொன்னாள். அவரும் அதை இம்மி பிசகாமல் செய்தார்

போதையின் பிடிக்கு பரஞ்சோதியை அடிமையாக்கி, பெண்களுடன் அவர் லீலையில் ஈடுபடுவதைப் போன்ற வீடியோ இவள் வசம் கிடைக்கவும், அவர் தான் காரணம்

அப்படி தான் பரணியின் விருப்பு வெறுப்பும், ராசுமதுரவன் மற்றும் பரஞ்சோதியின் தொழில் தொடர்புகளும், பலம் , மற்றும் பலவீனங்களும் நாட்சிக்கு அத்துப்படி

ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அன்று அந்தக் கப்பலில் பிரயாணித்த பயணிகளின் பட்டியலை வெற்றிகரமாக வாங்கி இருந்தார்கள். அதில் பயணித்த ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தையும் தனித் தனியே சந்தித்து, கஜபதி, மற்றும் அல்லி பற்றிய தகவல் ஏதும் தெரிகிறதா என அறிந்து வர அவர் மலேசியா பயணித்து இருந்தார்

அந்த முடிவிற்காக தான் தற்சமயம் நாட்சியா காத்திருப்பதும். “ஏஞ்சல் ஒரு காபிக் கூட கொடுக்காம வந்ததும் உன் விசாரணையை தொடங்கியாச்சா..?’’ அவர் போலியாய் அலுத்துக் கொண்டார்.

தாய், தந்தையைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்பதை நாட்சியா உணர்ந்துக் கொண்டாள். முகம் ஏமாற்றத்தில் சுருங்க, ஆனாலும் அதை அவருக்கு காண்பிக்க அவள் விரும்பவில்லை

எஸ் சார் காபி குடிச்சிட்டே பேசலாம்..’’ என்றவள், “ஜேம்ஸ்’’ எனக் குரல் கொடுக்க அவள் உதவியாளர் வந்து எட்டிப் பார்த்தார். “ஸ்ட்ராங்கா ரெண்டு காபி..’’ என அவரிடம் சொல்ல, “எஸ் மேடம்..’’ என வெளியேறினார்.

அடுத்த ஐந்து நிமிடங்களில், ஆவி பறக்கும் காபி கோப்பைகளோடு ஒரு பெண்மணியை உள்ளே அனுப்பி வைத்தார். இருவரும் காபியை மிகவும் ரசித்து அருந்தினர். அங்கே ஆழமானதொரு மௌனம் சூழ, அதை பிரேம் தான் முதலில் கலைத்தார்

சாரி ஏஞ்சல்…. அந்த தேதியில பயணம் பண்ண எட்டு தமிழ்க் குடும்பத்தையும் தேடிப் போய் விசாரிச்சிட்டு வந்துட்டேன். அதில் இப்போ மூணு குடும்பம் இந்தியால தான் இருக்கு. யாருக்குமே கஜபதி, அப்புறம் அல்லினு அவங்க கூட பிரயாணம் பண்ணின மாதிரி நியாபகம் இல்லையாம்….’’ என்றவர் தன் பேச்சில் கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்

ஆனா டெப்சர் போர்டிங்லையும் உங்க அம்மா அப்பா பேர் இருக்கு. அரைவல் போர்டிங்லையும் உங்க அம்மா அப்பா பேர் இருக்கு. அதான் எனக்கு ஒண்ணுமே புரியல…’’ என்றவர் சற்று நேரம் மௌனமானார்

பிறகு மீண்டும் தானே மௌனம் கலைந்தவர், “சரி யார் கூடவும் பேசாம மூணு நாள் ட்ராவல் பண்ணி இருந்தாலும், மலேசியா முழுக்க சல்லடை போட்டு தேடியும் பாத்தாச்சு அவங்க அங்க இருக்குற மாதிரி தெரியல. சாரி ஏஞ்சல் உனக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தை மட்டுமே தரேன்.’’ என்றவரின் குரலில் வேதனை வெளிப்பட்டது

நாட்சியா தன் வேதனையை குரலில் காட்டாமல், “பத்து வருசமா அனுபவிக்கிற வேதனை தானே…. பழகிப் போச்சு சார்..’’ என விரக்தியாய்க் கூறினாள்

அவரோ சற்று நேரம் சிந்தனைவயப்பட்டு அமர்ந்துவிட்டார். அதன் பிறகு ஒரு முடிவோடு நிமிர்ந்து அவளைப் பார்த்தவர், “கடல் கடந்து எல்லாம் அவங்களைப் போய் விசாரிச்சிட்டு இருக்கோமே ஏஞ்சல்அவர் பிறந்து வளர்ந்த ஊர்ல கொஞ்ச நாள் இன்வஸ்டிக்கேட் பண்ணிப் பார்த்தா என்ன…?’’ எனவும் நாட்சியா அவரை ஆச்சர்யமாய் பார்த்தாள்

எஸ் ஏஞ்சல்..! அவருக்கு நெருங்கின சொந்தக்காரங்க பிரண்ட்ஸ் இப்படி. உன்னை காண்டாக்ட் பண்ணினா உன் உயிருக்கு ஆபத்தோன்னு பயந்து வேற யார் மூலமாவது உன்னை பத்தி தெரிஞ்சிக்கிட்டு இருக்கலாம் இல்லையா அவங்க.’’ என்றவர்  நாட்சி சிந்திக்க கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்

மீண்டும் அவரே, “நான் என்ன சொல்ல வறேன்னாகொஞ்ச நாள் உங்க அப்பா வளர்ந்த ஊர்ல தங்கி யார் கவனத்தையும் கவராம, இன்வெஸ்டிகேட் பண்ணிப் பாத்தா நிச்சயம் நமக்கு ஏதாவது நுனி கிடைக்கும்னு தோணுது…. உன்னோட எண்ணம் என்னமா…?’’ என்றார்

அவர் கேள்வியாய் நிறுத்தவும், “சூப்பர் ஐடியா சார்கண்டிப்பா செய்யலாம்உங்களை எங்க அம்மா வகையறா சொந்தம்னு சொல்லி எங்க வீட்லையே தங்க வைக்குறேன். ம்நீங்க ஒன்னு பண்ணுங்க….. திருநெல்வேலியில எப்படியும் ரூம் போட்டு இருப்பீங்க. அதை வகேட் பண்ணிட்டு ஈவ்னிங் இங்க வந்துடுங்க. நாம சேந்தே எங்க வீட்டுக்கு போகலாம்…’’ என சொல்ல அவரும், “ஓகே ஏஞ்சல் ஈவ்னிங்மீட் பண்ணலாம்..’’ என அங்கிருந்து விடை பெற்றுக் கிளம்பினார்

அவர் விடை பெற்று சென்றதும் நாட்சியாவிற்குள் பல நினைவுகள் முட்டி மோத, அதை எல்லாம் ஒதுக்கி வைத்தவள் தன்னை முழுமையாய் பணியில் ஈடுபடுத்திக் கொண்டாள்

அவள் அலுவலக நேரம் முடிவடையும் நேரம், பிரேம் தன் மூட்டை முடிச்சுகளோடு அங்கே வந்து சேர்ந்தார். இருவரும் அவளுடைய காரில், பரணியின் வீட்டிற்கு பயணப்பட, நாட்சியாவின் கரங்களில் அந்த ஸ்போர்ட்ஸ் கார் புஷ்பக விமானம் போல பறந்தது.

பிரேம் அவளிடம், “தெய்வமே லைப்ல இன்னும் ஒரு கேர்ள் பிரண்ட்எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா ஒன்னையும் பாக்கலை தெய்வமேகொஞ்சம் பாத்து பொறுமையா போதெய்வமே..’’எனப் புலம்பினார்

உங்களுக்கு கேர்ள் பிரண்ட் இல்லைனா அது உங்க தப்பு சார். என் கார் என்ன செய்யும். நீ பறடா என் செல்ல குட்டி.’’ என ஸ்டியரிங்கிற்கு ஒரு கிள்ளு முத்தம் கொடுத்தவள் முன்பை விட வாகனத்தை விரைவாய் செலுத்த, பிரேம் வாயே பேசாமல் இருக்கையில் பல்லி போல ஒட்டிக் கொண்டு வந்தார்

நாட்சி வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தினாளோ இல்லையோ, கிடைத்தது மோட்சம் என வாகனத்தில் இருந்து துள்ளிக் குதித்தவர், “ரோலர் கோஸ்ட்ல ஏறின மாதிரி பீல் பண்ண வச்சிட்ட ஏஞ்சல்..’’ என முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு சொல்லவும், நாட்சியா பெரிதாய் சிரித்தாள்

வாங்க சார் வீடுக்குள்ள போகலாம்…’’ என அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். வீட்டின் வரவேற்பரையில் இருந்தவரை கண்டதும் நாட்சியின் புன்னகை இதழிலேயே உறைய அவள் முகம் நொடியில் இறுகியது

வரவேற்பரையில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு, பரஞ்சோதி அமர்ந்து இருக்க, அவர் அருகில் ராசு மதுரவன் அமர்ந்து இருந்தார்

அவர்களுக்கு பின்னால், மதுஸ்ரீ, தரணி, செல்வாம்பிகா, சிவாத்மிகா என மற்றவர்கள் நின்றுக் கொண்டிருக்க, பரஞ்சோதியின் வலது கை என அரசியல் மற்றும் ஊடகங்களால் வர்ணிக்கப்டும், நல்லசிவம் சாந்தம் தவழும் முகத்தோடு தன் எஜமானரின் பின்னால் கைகட்டி நின்றுக் கொண்டுடிருந்தார்

அனைவரின் கவனமும் தான் உள்ளே வருவதற்கு முன் தொலைகாட்சியின் மீதே இருந்தது என்பது, நாட்சியாவிற்கு தெளிவாக, பரஞ்சோதியை தவிர அனைவரின் முகமும் ஏதோ குழப்பத்தில் இருந்ததை அவளால் உணர முடிந்தது

அனைவர் மேலும் ஆராயும் பார்வையை செலுத்தியவள், இறுதியில் விடாது ஒலித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி பெட்டியின் மீது தன் கவனத்தை திருப்பினாள்.

பரபரப்பு செய்தி என்ற வரிகள் அச்செய்திகள் தொலைக்காட்சியின் கீழே ஓடிக் கொண்டிருக்க, அதில், ‘ஹிந்தி திரை உலகின் கனவுக் கன்னி தாராதத், தன் அணிக்கு வெற்றி மேல் வெற்றியை  குவித்து தரும் இளம் வாலிபர் கலிங்கத்துப் பரணியை விளையாட்டு மைதானத்தில் பலர் முன்னிலையில் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, முத்தம் கொடுத்து பாராட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.’

என தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க, அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த சம்பவம் மீண்டும் மீண்டும் தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்தது. பின்னணியில் ஏதோ ஓர் பெண் குரல் பேசிற்று