Advertisement

செல்வாம்பிகை, “சின்ன குழந்தய பட்டினி போட்டீகளா..?’’ எனக் கேட்டு அழ, சிவாத்மிகா இறுதியாய் அவள் தன்னை நோக்கி வீசிய சொல் அம்புகளால் துடித்துக் கொண்டிருந்தார்

ராசு மதுரவன், பரணியிடம் ஏதோ விளக்கம் கொடுக்க முயல, “கொஞ்ச நேரம் எல்லாரும் என்னைத் தனியா விடுங்கப்பா..’’ என்றவன் தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்

பரஞ்சோதி மட்டும் ராசுமதுரவனிடம் அடுத்து என்ன செய்து பிரச்னையை முடிக்கலாம் என அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்

அறையில் படுத்திருந்த பரணியும் அதைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான், என்ன செய்து பிரச்னையை முடிப்பது என. பரணியால் என்றும் தன் குடும்பத்தை விட்டுக் கொடுக்க முடியாது

அதே சமயம் நாட்சிக்கு இழைத்த அநீதிக்கும் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். விடிய விடிய சிந்தித்தவன், அடுத்தநாள் தெளிவான மனநிலையோடு எழுந்து தயாராகத் தொடங்கினான் பிரச்சனைகளை முடித்து வைக்க.  

முதலில் குடும்பத்தினரோடு அவசர ஆலோசனை நடத்தியவன், அடுத்த ஒரு மணி நேரத்தில் தன் மொத்தக் குடும்பத்துடனும் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்தான் கால வரையற்ற உண்ணா விரதம் என்ற அறிவிப்போடு

முதலில் இவர்கள் குடும்பம் மட்டும் உண்ணா விரத்தில் இருந்தனர். கொஞ்ச நேரத்தில் பரஞ்ஜோதியின் தொண்டர்கள் வந்து அமர்ந்தனர். அடுத்து ஊருக்குள் இருந்த முக்கிய தலைக்கட்டுகள் வந்து அமர்ந்தனர்

அவன் உண்ணா விரதத்தை தொடங்கி அரை மணி நேரத்தில், கிட்டதட்ட ஐயாயிரம் பேர் ஆட்சியர் வளாகத்தில் கூடி விட்டனர். மறுபடி மீடியாக்கள் குவிந்தன. எதற்காய் போராட்டம் என கேட்டபடி

பரணி கை குவித்து வணக்கம் சொன்னபடி மீடியாவை பார்த்துப் பேசத் தொடங்கினான். “எல்லாருக்கும் வணக்கம். ஊருக்குள்ள எங்க குடும்பத்து பேரே தியாகி ஐயா குடும்பம்னு தான். எங்க தாத்தா சுதந்திரத்திற்கு போராடினவர். இன்னைக்கு எங்க குடும்பத்துக்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்க ஆள் இல்ல

இதோஎன்றபடி தன் மாமன் பரஞ்ஜோதியைக் காட்டியவன், “வேளாண் துறை அமைச்சரா என்ன என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்கடைசியா சில எதிர்க் கட்சிகளின் திட்டமிட்ட சதிக்கு இவர் பதவியை பறிச்சி வெளிய அனுபிட்டாங்க…. 

இவங்க எங்க அத்தை ஊரே கூடி நின்னு ஆசிர்வாதம் பண்ணி நடந்த கல்யாணம் அவங்களுடையது….இப்போ யாரோ இவங்க லீகலா வைப் இல்லைன்னு சம்மன் அனுப்பி எங்க தொழிலை முடக்க பாக்குறாங்கஎங்களுக்கு நீதி உடனே வேணும்.. சம்மனுக்கு அனுப்பின பத்திரம் எல்லாம் முதல்ல அசல் தானான்னு உடனே சோதிக்கணும்….

வழக்கை கால தாமதப்படுத்தாம உடனே விசாரிக்கணும்அப்புறம் எங்க மாமா ஒரிஜினலா ஆஸ்திரேலியாவுல நடந்த அவங்க காலாச்சார விளையாட்டு கலந்துக்கிட்டு வந்ததை தான் யாரோ துண்டிச்சி துண்டிச்சிமோசமான படமா சித்தரிச்சி இருக்காங்கஅவர் கலந்துக்கிட்ட விளையாட்டின் உண்மையான வீடியோ இதோ

என்றபடி ஒரு பென்ட்ரைவை எடுத்துக் கொடுத்தான். மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அதை கை நீட்டிப் பெற்றுக் கொண்டார்

இறுதியாய் கண்களில் வழியாத நீரை சுண்டி எறிந்தவன், “அதோ அங்க பாருங்க உங்க தியாகி ஐயா கிருஷ்ணமூர்த்தியை, அவர் பக்கத்துல கர்ப்பிணியான எங்க அண்ணியைநாங்க யாரும் எங்களுக்கு நியாயம் கிடைக்குற வரை பச்ச தண்ணியைக் கூட குடிக்க போறதில்லை…’’ 

இறுதியாய் மீண்டும் கை குவித்து வணக்கம் சொன்னவன், அமைதியாய் தன் குடும்பத்தினரோடு சென்று அமர்ந்துக் கொண்டான். விசயம் அடுத்த வைரலாகி பரபரப்பை கிளப்பியது

தொண்நூற்றி மூன்று வயது முதியவர் கண்களில் நீரோடு உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதை சமூக வலைதளங்கள் உச்சுக் கொட்டிப் பார்த்ததோடு உடனே வழக்கை விசாரிக்க குரல் கொடுக்கத் தொடங்கின

அடுத்த ஒரு மணி நேரத்தில், மதுஸ்ரீ மயங்கி விழவும், போராட்டக் களம் இன்னும் சூடு பிடித்தது. அவன் போராட்டத்தை தொடங்கி சரியாய் இரண்டு மணி நேரத்திலேயே அவர்கள் வழக்கை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது

விஜயனை அலைபேசியில் அழைத்த பரணி, “ஏலேஒழுங்கா நான் தான் எல்லாத்தையும் குடும்ப பகையில பண்ணேன்னு அந்த சப் கலெக்டர் அம்மாவை வந்து ஒத்துகிட்டு கேசை வாபஸ் வாங்க சொல்லு.. இல்ல ரொம்ப மோசமா கேவலப்பட்டுப் போவாஇன்னும் கொஞ்ச நேரத்துல சர்டிபிகேட் வெரிபே பண்ணப் போறாங்க….’’ 

அவன் சொன்னதை இம்மிப் பிசகாமல் விஜயன் நாட்சியிடம் மொழியவும், அவள் அலட்டிக் கொள்ளாமல், என் பிரச்னையை நான் பாத்துக்கிறேன். அவனை அவன் வேலையைப் பாக்க சொல்லு என பதில் சொல்லி அனுப்பினாள்

அதே பதிலை அவன் பரணியிடம் மொழியவும், “அடங்கமாட்டாளே…’’ என பற்களைக் கடித்தவன், அவளை எப்படி அணுகுவது எனப் புரியாமல் அமர்ந்துக் கொண்டான்.மக்கள் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

நாட்சியாவின் மனுவை தாக்கல் செய்தது அவளின் கார்டியன் என்றபடி ஓங்கு தாங்காய் ஆண் ஒருவன் வந்து நிற்க பரணியின் நெற்றி சுருங்கியது

அடுத்தடுத்து வாதங்கள் சூடு பிடிக்க, அவர்கள் சமர்பித்தது போலிச் சான்றிதழ் என அனைவர் முன்பும் நிரூபிக்கப்பட்டது. ராசு மதுரவனின் தொழில் மீது போடப்பட்டிருந்த தடைகள் உடனே விளக்கிக் கொள்ளப்பட்டன.

வழக்கை தொடர்ந்திருந்த செங்கன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், சான்றிதல் மோசடி வழக்கும் உடனடியாய் பதியப்பட்டது. அவர்கள் என்ன பேசினாலும் முகத்தில் ஒரு மாறுதலையும் காட்டாத அந்த செங்கன் இறுதியாய், “மன்னிசிக்கோங்க ஐயா..’’ என இயந்திரமாய் கும்பிட்டபடி அங்கிருந்து நகர்ந்தான்

முதல் வழக்கு அவர்கள் பக்கம் தீர்ப்பானதும், அடுத்து பரஞ்ஜோதியின் வழக்கு விசாரணைக்கு வந்தது. முதல் இரண்டு வீடியோ காட்சிகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு, இறுதியில் முதலாவதாக வெளிவந்த வீடியோ மார்பிங் செய்யபட்டது. அசலைப் போன்ற போலியானது என தீர்ப்பு வெளியிடப்பட்டது

அவர்கள் கட்சி அடிப் பொடிகள், ஊரையே திருவிழாவாக்கிக் கொண்டிருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் தனி விமானத்தில் சென்னைக்கு பறந்து சென்றவர் தன் வேளாண்துறைப் பதவியை மீண்டும் பெற்றார்

அவரைக் கட்டிப் பிடித்து புகைப்படத்திற்கு போஸ் தந்த முதல்வர், “ஜோதிபொய்களை எரித்து புடம் போட்ட தங்கமாய் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார். இதன் மூலம் எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் பதவியை துச்சமென தூக்கி எறியும் தன்மான சிங்கங்கள் என மக்களுக்கு நிரூபித்து உள்ளோம். தேவைப்பட்டால் தீக்குளிக்க தயாராய் உள்ள ஆண் சீதைகள் நாங்கள்…’ என ஏகத்திற்கும் அவரை வைத்து தங்கள் கட்சிக்கு இலவச விளம்பரத்தை தேடிக் கொண்டார்.

பரஞ்சோதியோ மனதிற்குள் கட்சி தலைமைக்கு, அதிரடி நீதி மன்றத்திற்கு, சைபர் கிரைம் துறைக்கு என காலையில் இருந்து கை மாறிய நூற்றி இருபது கோடியை எண்ணி பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்

தன் அறையில் ஆத்திரம் அடங்காமல் நடந்துக் கொண்டிருந்தாள் நாட்சியா. “பாஸ்டர்ஸ்….’’என அவள் வாய் அடிக்கடி யாரையாவது திட்டிக் கொண்டே இருந்தது.  

அப்பொழுது அவளது அறைக்கு வெளியே, “நான் யாருநான் யாருகொய்யாலேநீக் கூறுராஜாநான் ராஜாஎப்போதும் நான் ராஜாராஜாநான் ராஜாஎங்கேயும் நான் ராஜா…’’ 

என்ற பாடல் உச்சஸ்தாயிலில் ஒலிக்க, நாட்சியா தன் அறையில் இருந்து வெளியே வந்தாள். அங்கே மீசையை முறுக்கிக் கொண்டே பரணி படு ஸ்டைலாக நின்றுக் கொண்டிருந்தான். அருகில் முழுக் காவலர் உடையில் விஜயன்

இருவரும் உள்ளே நுழைய அனுமதி கிடைத்த விதம் அவளுக்குப் புரிய, கைகளைக் கட்டிக் கொண்டு இருவரையும் முறைத்தாள்

தொட்டா தீப் பொறி தாண்டாசுட்டா சூரியன் தாண்டாவிட்டா இடி இடிப்பேன்டா வாடா….’’ பாடல் தொடர்ந்து ஒலிக்க, பரணி தொடர்ந்து மீசையை முறுக்கி கொண்டிருந்தான்

ஸ்டாப் இட்..’’ நாட்சியா கொடுத்த அலறலில், விஜயன் கையில் இருந்த அலைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை நிறுத்தினான். அவள் முறைப்பதை சட்டை செய்யாமல் அவளை நெருங்கியவன்

மயிலுநோ மயிலு மாமாவ பாத்து எல்லாம் அப்படி டென்சன் ஆகக் கூடாதுஇன்னும் நீ பாக்க வேண்டியது எவ்ளோ இருக்குடி செல்லம்..’’ என்றவன், அவள் கையில் ஒரு கவரைத் திணித்தான்

அதை அவள் வீசி எறிய முயல, அவள் கைகளை விடாது பற்றிக் கொண்டிருந்தவன், “திறந்து பாரு மயிலு..’’ என அவளிடம் செல்லம் கொஞ்சினான்

வேண்டா வெறுப்பாய் அந்த கவரை திறந்தவள் திகைத்துப் போனாள். அது அவர்கள் வழக்கத்தில் அணியும் கல்யாண கூரைப் புடவை. அதோடு சில நகைகள்

நாட்சியா அவனை அதிர்ச்சியாய்ப் பார்க்க, “நாளைக்கு காலைல ஆறு மணிக்கு நெல்லையப்பர் கோவில்ல உனக்கும் எனக்கும் கல்யாணம்சரியா ஐஞ்சி நாப்பதுக்கு நான் கொடுத்த புடவையை கட்டிக்கிட்டு, நகையை போட்டுக்கிட்டு கோவிலுக்கு வந்து சேர்ற…’’ 

அவன் முகம் அவள் முகத்திற்கு வெகு அருகே இருக்க, அந்தக் குரலில் வெளிப்பட்ட , ‘நான் சொல்வது நடந்தே தீரும்..’ என்ற உறுதி, எதற்கும் கலங்காத நாட்சியாவையே கலங்கடித்து, அவள் கண்களை அடர் பழுப்பிற்கு மாற்றியது

அவள் கண்களின் நிற மாற்றத்தை ரசனையோடு பார்த்தவன், கன்னத்தில் வந்து விழுந்திருந்த கூந்தல் கற்றையை காதின் பின் புறம் சொருகிய படி, “மாமா வர்டாடி செல்லம்…’’ என்று விடை பெற்றுக் கிளம்பினான்

துள்ளல் நடையோடு செல்லும் அவனையே உறைந்துப் போய் விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தாள் நாட்சியா.  

 கூடு நெய்யும். 

Advertisement