Advertisement

அவர் மகனும், பேரனும் கைது செய்யப்பட்டால்…. பரணியால் அந்த நினைப்பையே தாங்க முடியவில்லை. கர்ப்பிணியாய் இருக்கும் அண்ணிசின்ன சின்ன விஷயங்களுக்கே பதறிப் போகும் தாய்… 

நாங்க எல்லாம் அந்த காலத்துலஎன்று பழம் பெருமை பேசும் தாத்தா…. ஊருக்குள் பெரிய மனிதனாய் உலா வரும் தந்தைபரணி தன் தலையை கைகளில் தாங்கிய வண்ணம் அமர்ந்து விட்டான்.

என்னடா செய்யலாம் விஜி..’’ அவன் தன் நண்பனைக் கேட்க, “சப்கலெக்டர் மேம் அந்த சர்ச் வாரன்ட்ல நாளைக்கு சைன் பண்ணாமஒரு நாள் தள்ளி சைன் பண்ணாக் கூட நீங்க உங்க குடோன் எல்லாம் வேற யாருக்கோ லீசுக்கு விட்டு இருக்குற மாதிரி பேப்பர்ஸ் ரெடி பண்ணலாம். ஏதாவது சிக்கினாக் கூட நீங்க மாட்டாம தப்பிக்கலாம்ஆனா எது பண்றதா இருந்தாலும் அதுக்கு டைம் வேணும்.’’ 

விஜயன் தனக்கு தெரிந்தவற்றை எடுத்துச் சொன்னான். பரணி மீண்டும் சற்று நேரம் அமைதியாய் அமர்ந்து கொண்டான். காலையில் மருத்துவமனையில் கண்ட அவள் முகம் அவன் கண் முன் வந்தது

அந்தக் கண்கள்….” அந்த எண்ணம் தோன்றியவுடன், வேகமாய் எழுந்தவன், “நாளைக்கு அவ அந்த செக் வாரன்ட் சைன் பண்ண மாட்டா மச்சி..’’ என உறுதியுடன் சொல்லிக் கொண்டு தன் வண்டியை நோக்கி நடந்தான்.

நண்பனின் பேச்சுப் புரியாவிட்டாலும், விஜயனும் அவனோடு கிளம்பினான். வழியில் ஊர்க் கோவிலில் சென்றுசாமிக் கும்பிட்டுவிட்டு வந்தான். அவன் நடவடிக்கை எதுவும் விஜயனுக்கு விளங்கவில்லை

இறுதியாய், விஜயனிடம், “மச்சி கலெக்டர் மாளிகைக்குள்ள போக ரகசிய வழி ஏதாவது இருக்கா…’’ என கேட்கவும் தான் அவன் எண்ணம் ஓரளவிற்கு விஜயனுக்கு புரிந்தது

டேய்நான் நம்ம சிட்டியோட அசிஸ்டன்ட் கமிஷ்னர்டாஎன்னையே திருட்டு தனம் பண்ணக் கூப்பிடுற….’’ அவன் பதட்டப்படவும், “ சரி நீ சொல்லாத…’’ என்றவன், தன் அலைபேசியை எடுத்து ஆட்சியர் மாளிகையின் வரைப்படத்தை கூகிளில் ஆராய்ந்தான்

மச்சிசெமடாநம்ம அரசமர வீதியில தான் மாளிகையோட பின்பக்க சுவர் இருக்குஅதுக்கு பக்கத்துல தான் உங்க சப் கலெக்டர் மேடமோட வீடு இருக்கு…’’ 

மச்சி நான் சுவர் ஏறிக் குதிச்சி உள்ள போறேன்யார்கிட்டையாவது மாட்டிக்கிட்டா உன்கிட்ட கலெக்டர் மாளிகைக்கு போய் அவருக்கு குட் நைட் சொல்லிட்டு வர சவால் போட்டேன்னு சொல்லி சமாளிக்குறேன் உன்ன கூப்பிட்டு கேட்டா நீயும் அதையே சொல்லுயாரும் நம்மளை சந்தேகப் பட மாட்டாங்க…’’ 

அவனுக்கு ஆட்சியாளர் மிகவும் நெருக்கம் தான். நேர் வழியில் சென்றால் கூட எந்த நேரமும் ஆட்சியர் மாளிகையில் அவனை அனுமதிப்பார்கள். ஆனால் என்ன சொல்லி சப்கலெக்டரை பார்க்க முடியும்

இரவு கவிழும் வரை நண்பர்கள் இருவரும் காத்திருந்தனர். விஜயன் முழுப் பதட்டத்தில் இருந்தான். முடித்தவரை அவனை தடுத்துப் பார்த்தான். ஆனால் பரணி பின் வாங்குவதாய் இல்லை

ஆட்சியர் மாளிகையின் பின்பக்கம் பெரிதாய் இருந்த கொன்றை மரம், மாளிகைக்குள்ளும் தன் பெரிய கிளைகளை பரப்பி இருக்க, பரணி திரும்பி விஜயனை ஒரு முறைப் பார்த்துவிட்டு சர சரவென மரத்தில் ஏறி மறுபக்கம் குதித்திருந்தான்

அடுத்து என்ன நடக்குமோ, என்ற பீதியில் விஜயன் அந்த குளிர் இரவிலும் உடல் வேர்க்க நின்றுக் கொண்டிருந்தான்

உள்ளே குதித்த பரணி, அது என்ன இடம் என்பதைப் போல கண்களைப் சுற்றிலும் ஓட்டினான். அடர்ந்த மரங்கள் மட்டுமே அணிவகுத்து நிற்க, தன் காலடி ஓசை எழுப்பா வண்ணம், மெதுவாய் நடந்தவன், சுற்றிலும் பார்த்தபடியே முன்னேறினான்

அன்று முழு நிலவு. அந்த இடமே ஏதோ ரம்யமான கானகத்தை ஒத்து இருந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும், மரங்களின் அடர்த்திக் குறைந்து ஏதோ வாசனை மலர்களின் நறுமணம் மூக்கைத் துளைத்தது

இன்னும் கொஞ்ச தூரத்தில் தோட்டம் இருக்கக் கூடும் என்று அனுமானித்தான். இருளில் இன்னும் சற்று தொலைவு நடந்ததும், பாதை சமமான நடைப் பாதையாய் மாறி இருந்தது

அங்கிருந்த சோடியம் விளக்குகள் ஒளியை உமிழ, அந்த இடமே ஏதோ மாய லோகம் போல காட்சி தந்தது. பார்வையை சுழற்றியபடி நடந்தவன், தொலைவில் கண்ட காட்சியில் அப்படியே விக்கித்து நின்றான்

நெடு நேரம் நீந்தி முடித்திருத்த நாட்சியா, குளத்தின் ஓரத்தில் இருந்த க்ரில் கம்பிகளைப் பற்றிக் கொண்டு, படியேறிக் கொண்டிருந்தாள். நெடு நேரம் நீரில் மூழ்கி இருந்ததில் சருமம் இன்னும் வெளுத்திருந்தது

அதுவும் அந்த சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில், அவள் மேனி பால் நிலவாய் ஒளிர்ந்தது. நாட்சியாவின் நீச்சல் உடை ஒன்றும் அவ்வளவு அபாயகரமாய் இல்லை

கைகளற்ற மேல்உடையும், முழங்கால் வரை நீண்டிருந்த கீழ் உடையும் அவள் மேனியை முழுமையாய் மூடி இருந்தாலும், அவளை இறுக பற்றி இருந்ததால் அவள் மேனிச் செலுப்பை அப்பட்டமாய் படம் பிடித்துக் காட்டின

பார்த்த விழி பார்த்தபடி பூத்திருப்பதுஎன்றால் என்ன என்று பரணி அன்று தான் உணர்ந்தான். கண் இமைத்தால் இந்த அழகிய கனவு கலைந்து விடுமோ என பயம் கொண்டவனாய் இமைக்காது அவளை பார்த்துக் கொண்டிருந்தான்

அந்த நிலையிலும் அவன் உள் மனதோ, “யோவ் மாமா இதெல்லாம் ரொம்ப அநியாயம்யாஅண்டா குண்டா பெத்து வச்சன்னு உன்ன கிண்டல் பண்ண பாவத்துக்கு நான் ஒரேடியா மூச்சு முட்டி சாகுற அளவுக்கு அழகாவ ஒரு பொண்ணை பெத்து வைப்பஉனக்கு எப்படியா இவ்ளோ கலரா பொண்ணு பொறந்தாஒரு வேளை இந்த புள்ள தோளு மட்டும் அந்த அத்தையாட்டம் இருக்குமோ…’’ என்றோ தொலைந்து போன மாமனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது

மனதிற்குள் என்றாலும் முதல் முறையாய் தன் மாமாவின் மற்றொரு உறவைத் தானும் உறைவாய் அவனுக்கு தெரியாமலேயே ஏற்றுக் கொண்டிருந்தான்

கரை ஏறிய நாட்சியா தன்னை ரசித்துக் கொண்டிருந்தவனை மேலும் சோதிக்கும் வண்ணம், தன் பையில் இருந்த துண்டை எடுத்து ஒருவன் தன்னை இமைக்காமல் ரசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் தன்னை துடைத்துக் கொண்டிருந்தாள்

முழு நிலா, மலர்களின் மனம், இரவு நேர இதமான தென்றல், தேவலோக அனங்கோ எனும்படி ஒரு பெண். பரணி இதுவரை அனுபவித்தறியாத ஒரு உணர்வலையை அவன் உடலைத்தாக்கத் தொடங்கியது

தொண்டை தீடீரென வரண்டு போனார் போல் ஆனது. குளிர் இரவிலும் சடுதியில் வேர்த்தது. அவன் இதயத் துடிப்பு அவனுக்கே கேட்டது.

பையில் இருந்த உலர்ந்த உடைகளை எடுத்தவள், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தோளைக் குலுக்கியபடி மேலாடையில் கை வைக்கவும், மின்னல் வேகத்தில் திரும்பி நின்ற பரணி, “இங்க நான் இருக்கேன்…’’ என்று உரத்தக் குரலில் அறிவித்தான்

வேகமாய் அங்கிருந்த பெரிய துண்டைக் கொண்டு தன் உடலைப் போர்த்தியவள், “யார் அது…?’’ என்று கர்ஜித்தாள் ஒரு மகா ராணியின் தோரணையில்

அவள் குரலில் வெளிப்பட்ட கடினத்தில் பரணியை சூழ்ந்து இருந்த மாய வலை அறுந்துப் போக, அவனும் நிமிர்வுடனே இறுகிய முகத்தோடு தான் நின்றுக் கொண்டிருந்த இடத்தில் இருந்து வெளி வந்தான்

அவனைக் கண்டதும், “இவன் தானா…?’’ என்ற அலட்சியம் முகத்தில் வந்து அமர, போர்த்தியிருந்த துண்டை சுவாதீனமாய் எடுத்து அருகில் இருந்த சாய்வு நாற்காலியில் திமிராய் வீசினாள்

அதே திமிரோடு அங்கே இருந்த மற்றொரு சாய்வு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவள், “வெல் மிஸ்டர் கலிங்கத்துப்பரணி…. திருட்டுத் தனமா என்னை எதுக்குப் பாக்க வந்து இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா…?’’

அவன் கேள்வியில் சற்று முன் அவள் மீது தோன்றிய மயக்கம் முற்றிலும் தொலைய, தன் முழு நெஞ்சை நிமிர்த்தி தானும் திமிராய் நின்றவன், எப்படிப் பேசினால் அவளுக்கு வலிக்குமோ அப்படிப் பேசினான்

வெல் மிஸ் வேலுநாட்சியாஉங்க பேருக்கு பின்னாடி ஒரு பேர் வச்சி இருக்கீங்களே…. கஜபதி பாண்டியன்…. உண்மையா அவர் பொண்ணு தானா நீங்க..?” அந்தக் கேள்வியை முடிக்க கூட இல்லை நாட்சியா வேகமாய் எழுந்து இருந்தாள் அவனை நோக்கி, “ஏய்…’’ என்றபடி

கூல்நாட்சியா கூல்எனக்கு ஏன் அந்த டவுட்டு வந்ததுன்னா எங்க மாமா பரஞ்சோதி பக்கத்துல இல்லாதப்ப எங்க குடோனுக்கு எல்லாம் அவசர அவசரமா சர்ச் வாரன்ட் ரெடி பண்றீங்க போல... நீ தைரியமான பொண்ணா இருந்தா எம் மாமன் கஜபதி பாண்டியன் பொண்ணா இருந்தா இதே வேலையை எங்க மாமான் ஊர்ல இருக்கும் போது செஞ்சி பாருடி பாப்போம்! வாரன்ட் ரெடி பண்ண நீ ஆர்டர் இஸ்யூ பண்ண அடுத்த நிமிஷம் உனக்கு வடநாட்டுப் பக்கம் ட்ரான்ஸ்பர்  பேக்ஸ்ல வந்து இருக்கும்.’’ 

அவன் குரலில் இருந்த நக்கல் தொனியில், நாட்சியா அவனையே உற்றுப் பார்த்தாள்

ரொம்ப பயந்துட்ட போலஎன்னஎன்ன டைவர்ட் பண்ணப் பாக்குறீயாயோவ் மாமா நீ பச்ச மண்ணுபோபோயி புட்பால் விளையாடு உனக்கு அதைத் தவிர ஒரு மண்ணும் தெரியாது…’’அவன் பேசிய அதே நக்கல் தொனி அவள் குரலிலும் வெளிப்பட்டது.

அவள் அப்படி சொன்னதும், அவன் ஆத்திரமாய் அவளைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தான். அவனை கை உயர்த்தி தடுத்தவள், “உன் மாமன் அந்த பரஞ்சோதி வரட்டும்அவன் வந்ததுக்கு அப்புறமே சர்ச் வாரன்ட் இஸ்யூ பண்றேன். நானும் பாக்குறேன் அந்த கிழவன் என்னத்தை கிழிக்க போறான்னு…’’ 

சொல்லி முடித்தவள், “கொஞ்சம் கொஞ்சமா உங்க குடும்பத்தை கதற விடலாம்னு இருந்தேன். சும்மா இருந்த என்ன இப்படி சொறிஞ்சி விட்டியே மாமாஅந்த தியாகி இன்னும் ஒரு வாரத்துல ஊருக்கு வரார் இல்லமொத்தக் குடும்பமும் தயார இருங்க. கதறி கதறி அழஅப்படி உங்களை அழ வைக்கலை நீ சொன்ன மாதிரி நான் கஜபதி பாண்டியன் பொண்ணு வேலு நாட்சியா இல்ல லே…’’ 

பேசிக் கொண்டே அவன் முகத்திற்கு வெகு அருகில் வந்திருந்தவள், அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே, கடைசி வரியை சொல்லி முடிக்கவும், அவள் கண்கள் அடர் பழுப்பாய் மாறவும் சரியாய் இருந்தது

முதன் முதலாய் அப்படி நிறம் மாறும் கண்களை திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தான் கலிங்கத்துப்பரணி.

கூடு தேடும். 

 

Advertisement