Advertisement

கூடு – 5

பண்டையகாலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற பெண்கள் மறுக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மட்டுமே பங்கேற்று அவர்கள் திறமையை வெளிப்படுத்த, ஹேரேயோ போட்டிகள் நடத்தப்பட்டன

தன் நினைவோட்டத்தில் மூழ்கி இருந்தவளை, சங்கரி வந்து அழைக்க, நாட்சியா, கண்களைத் திறந்து, என்ன..? என்பதைப் போல பார்த்தாள்

அம்மா நீங்க சாப்பிடுற நேரம் தாண்டி போச்சுங்க…’’ அவள் மென் குரலில் அறிவுறுத்தவும், “சாப்பாடு வேண்டாம்முதல்ல இங்க இருந்து கிளம்பு..’’ என்ற வார்த்தைகள் உதடு வரை வந்துவிட்டது.

அதை கடினப்பட்டுஅடக்கியவள், “போய் எடுத்துவை சங்கரிபத்து நிமிசத்துல வறேன்…’’ என்றவள் முகம் கழுவி வந்து உணவு மேஜையில் அமர்ந்தாள்.

எளிமையாகவும், அதே சமயம் ருசியாகவும் இருந்த உணவை அனுபவித்து உண்டாள். “சாப்பாடு சூப்பர் சங்கரி..’’ என்ற அவளின் பாராட்டில் சங்கரியின் முகம் மத்தாப்பாய் ஒளிர்ந்தது

எந்தப் பணியாளராய் இருந்தாலும் அவர்களின் சிறு சிறு செயலையும் பாராட்டி, அவர்களை உற்சாக நிலையில் வைத்தே வேலை வாங்குவது நாட்சியாவின் தனித் திறமை. அதே சமயம் தப்பு செய்தவர்களை முறையாய் கண்டிக்கவும் தயங்க மாட்டாள்

இரவு உணவிற்கு பின் தன் அலுவலக அறையில்சற்று நேரம் நேரம் செலவிட்டாள். கோப்புகளை சரி பார்த்தாள். சில தகவல்களை கணினியில் தேடிக் குறிப்புகள் எடுத்து வைத்தாள்

எல்லாம் முடிந்து அவள் எழுந்துக் கொள்ளும் போது, நேரம் இரவு ஒன்பதாகி இருந்தது. “ராஜீவ்…’’ அவள் சற்றே பெரிய குரலில் அழைக்க, வெளியே இருந்த காவலாளி உள்ளே வந்தார்

ஸ்விம் பண்ணப் போகணும்..’’ அவள் சொல்லி முடிக்கவும், “எஸ் மேம்’’ என வெளியே ஓடிப்போனவர், அடுத்த பத்து நிமிடத்தில் உள்ளே வந்தார்

ஸ்விமிங் பூல் ப்ரீயா இருக்கு மேம், நாம போகலாம்’’ சொல்லிவிட்டு அவர் நிற்க, நாட்சியா தன் நீச்சல் உடைகள் அடங்கிய பாலிதீன் பையை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்

அவள் வெளியே நடக்கவும் மேலும் இரு காவலாளிகள் அவளைப் பின் தொடரத் தொடங்கினர். அவள் குடியிருப்பின் பின் புறம் பெரிய தோட்டம் அமைந்திருக்க, அதைத் தாண்டி சுற்றிலும் மதில் சுவர்களால் சூழப்பட்ட நீச்சல் குளம் இருந்தது

அந்த நீச்சல் குளத்தின் வெளியேயும் இரு காவலாளிகள் இருந்தனர். அவளைக் கண்டவுடன் மரியாதையாய் எழுந்து நின்று, “குட் ஈவ்னிங் மேம்..’’ என்றனர்

பதிலுக்கு மாலை வணக்கம் சொன்னவள், நீச்சல் குளத்திற்கு செல்லும் கதவைத் திறந்துக் கொண்டே

நான் ஸ்விம் பண்ணி முடிச்சதும் கால் பண்றேன். அப்ப வந்தா போதும். இங்க தான் இவங்க இருக்காங்க இல்ல.. நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க..’’ என்று சொன்னதும் இரு காவலாளிகளும், “எஸ் மேம்..’’ என விரைப்பாய் ஒரு சல்யூட்டை அவளுக்கு பரிசளித்துவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினர்.  

தரை முழுவதும் பளிங்காய் மின்ன, தினமும் தூய்மைப் படுத்தப்படும் குளம் குட்டிக் கடலாய் நீல நிறத்தில் நீந்த வருபவர்களை நோக்கி காத்திருந்தது

பெண்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று உடை மாற்றி வந்தவள், பெண் மீனாய் அக்குளந்தில் விழுந்து நீந்த தொடங்கினாள்

டேய் வேண்டாம்மாட்டிகிட்டா ரொம்ப அசிங்கமா போயிடும் திரும்பி போயிடலாம் வாடா..’’ ஏறக் குறைய தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருந்த நண்பனை மதிக்கும் நிலையை எல்லாம் பரணி கடந்து இருந்தான்.

மாலை தன்னை அலைபேசியில் அழைத்த நண்பன், “டேய் பரணி உங்க குடோன் எல்லாம் செக் பண்ண செக் வாரன்ட் ரெடி ஆயிட்டு இருக்குலேஅப்படி அதுல ஏதாவது சிக்கினா குடோன் ஓனர்ஸான உங்க அப்பாவையும், அண்ணனையும் கூட அரஸ்ட் பண்ண வாரான்ட் ரெடியாயிட்டு இருக்கு….’’ 

அப்படி சொன்னானோ இல்லையோ, “என்னது…’’ என அதிர்ந்த பரணி, தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு, தனக்கு தகவல் தெரிவித்த நண்பனை தங்கள் பண்ணை வீட்டிற்கு வர சொல்லி விட்டு தானும் கிளம்பினான்

வண்டியை கிளப்பிக் கொண்டே, “எங்க குடோன் மேல செக் வாரன்ட் கொடுக்க யாருக்குலே தைரியம் வந்துச்சி..’’ பரணி அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கேட்க,  

எல்லாம் நம்ம புது சப் கலெக்டர் அம்மா உத்தரவு தான் பரணி…’’ என நண்பன் சொன்னானோ இல்லையோஅடுத்த நொடி பரணிக்குள் பெரும் கோபம் சூறாவளியாய் கிளம்பியது.

நாம ஒதுங்கி போகணும்னு நினைச்சாலும் இவ விட மாட்டா போலையேஎன மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், தன் வண்டியில் விரைவாய் தங்கள் பண்ணை வீட்டை சென்று அடைந்தான்.

இவர்கள் பண்ணை வாயிலிலேயே பரணியின் நண்பன் விஜயன் அவனுக்காய் காத்துக் கொண்டிருந்தான். இருவரும் உள்ளே செல்ல பண்ணையை காவல் காக்கும் முருகன், “ஐயா..’’ என ஓடி வந்து நின்றார்

நீ உன் வேலையைப் பாரு முருகாதேவைனா கூப்பிடுறேன்….’’ அவன் அப்படி சொன்னதும் அவர் அங்கிருந்து நகர, பண்ணையின் நடுவில் அழகுற அமைந்திருந்த அந்த சிறிய குடிலை திறந்துக் கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்

உள்ளே நுழைந்தது பரணி தொப்என அருகில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தான். விஜயன் அவன் நிலைப் புரிந்தவனாக அமைதியாய் நின்றான்

விஜயன் திருநெல்வேலி மாவட்டத்தின்  உதவி ஆணையாளர் பதவியில் இருப்பவன்

வட மாநிலத்தில் காய்ந்த ரொட்டி உண்டு கொண்டு இருந்தவன் தன் சொந்த ஊருக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து நிம்மதியாய் இருக்கிறான் என்றால் அதற்கு முழு முதற் காரணம் பரணி தான்.

அந்த நன்றி பெருக்கு அவன் நெஞ்சு முழுக்க எப்பொழுதும் உண்டு. அதோடு பரணி, விஜயனின் கல்லூரித் தோழன். அவர்கள் கால்பந்தாட்டக் குழுவில் அப்போது விஜயனும் இடம் பெற்றிருக்கவே இருவருக்கும் நெருக்கம் சற்று அதிகம்

அமைதியாய் அமர்ந்திருந்த பரணி, அடுத்து என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டிருந்தான். அவர்கள் குடும்ப தொழில் ஏற்றுமதி இறக்குமதி. பல காலமாய் நகரில் மலிவாய் கிடைக்கும் பொருட்களை வெகுவாய் வாங்கி அதற்கு தேவையுள்ள நகர்களுக்கோ, நாடுகளுக்கோ நல்ல விலைக்கு அனுப்பி வைப்பார்கள்

திருநெல்வேலி முழுக்க அறுபது இடங்களில் அவர்களுக்கு குடோன்கள் இருந்தன. குடோன் என்றால் அது வெறும் சதுர அடிகளில் அடங்கி விடுபவை அல்ல. ஒவ்வொரு குடோனும் ஏக்கரில் தான் தொடங்கும்

அதுவும் ஒவ்வொரு குடோனும் வெவ்வேறு ஊர்களில் இருந்தன. அதை தாங்கள் மட்டும் பயன்படுத்தி இருந்தால் பரணி இந்த சோதனைகளுக்கு எல்லாம் இவ்வளவு பதட்டப்பட்டு இருக்கமாட்டான்

அவனின் தாய் மாமா பரஞ்சோதி இவர்களை பினாமியாய் வைத்துக் கொண்டு பாதிக் குடோனுக்கு மேல் பயன்படுத்தி வந்தார். இக்காலத்தில் அரசியல்வாதிகள் யாரும் தியாகிகள் இல்லை என்பது ஊர் அறிந்த ரகசியம்

அதுவும் அரசியலில் தியாகியாய் இருக்கவும் முடியாது என்பது பரணியின் எண்ணம். அவன் இதுவரை தொழிலில் பங்கேற்றது இல்லை. அதனால் அதைப் பற்றியெல்லாம் அவனுக்கு ஒன்றும் தெரியாது

மாமா சட்டத்திற்கு புறம்பாய்  வேலைகள் செய்வார் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அது எம்மாதிரியான வேலைகள் என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை

அவனைப் பொறுத்தவரை அவன் தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தான். தனக்கென்று எந்த வகையிலும் அவர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்த மாட்டான்

விஜயன் சொன்ன அடுத்த நொடி மாமாவிற்கு தகவல் தெரிவிக்க அவர்  அலைபேசிக்கு அழைத்தான். அது அணைந்து இருந்தது

அவர்கள் வீட்டிற்கு அழைத்தால் போனை எடுத்த அவன் அத்தை, “தம்பி மாமா ஏதோ வெளிநாட்டுப் பிரயாணம் போய் இருக்காங்கையா…’’ என்றார்

பரணி நொந்து விட்டான். அவன் அப்பாவிற்கு தகவல் தெரிவித்தால் அதைக் கையாளும் அளவிற்கு அவருக்கு திறமை இல்லை என்பது அவன் அறிந்த விஷயம். தரணி தன் மனைவி மதுஸ்ரீயுடன் குல தெய்வ கோவில் வழிபாட்டிற்கு சென்றிருந்தான்

தொழிலில் அவரை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று பரணி ஏற்கனவே தந்தையை எச்சரித்து இருந்தான். ஆனால் அவன் பேச்சை யாரும் செவிமடுக்கவில்லை

அவன் தந்தையோ, “தொழில்னா ஆயிரம் நெளிவு சுளிவு வேனும்லே பரணிஉங்க மாமன் பங்காளியா இருக்குறது எவ்ளோ உதவியா இருக்கு தெரியுமாலேசரக்கெல்லாம் ஒரு தடையும் இல்லாம கிளம்புது வந்து இறங்குதுஅவன் செய்யிற உதவிக்கு பணம் கூட வாங்குறது இல்லகாலியா கிடக்க நம்ம குடோனுங்களை பயன்படுத்திக்கிடுதான் அவளோ தான்…’’ 

அப்பா அன்று என்னவோ எளிதாக சொல்லிவிட்டார். இன்றைக்கு பரணி அதை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தான். பணம், புகழ், செல்வாக்கு இது எல்லாவற்றையும் விட அவர்கள் குடும்பம் காலங் காலமாய் கட்டிப் பாதுகாத்து வருவது, அவர்கள் குடும்ப கௌரவம். ‘தியாகி ஐயா வீடுஎன்று ஊருக்குள் இருக்கும் மரியாதை

Advertisement