Advertisement

பார்வையின் பொருள் புரியாவிட்டாலும் நல்ல சிவனை பரணி மனதின் ஒரு மூலையில் குறித்து வைத்தான். “சரி மாமா…. உன்னோட கணக்கு வழக்கு சொத்து சம்மந்தப்பட்ட விவரம் எல்லாம் யார் பாத்துக்கிறது…’’ 

பரணி தன் அடுத்த விசாரணையை தொடங்க, “எல்லாம் என் பி.ஏ தான் பாத்துக்கிடுதான் பரணி…. ரொம்ப நல்லவன். என்கிட்ட வேலைக்கு சேந்த இந்த இருபத்தஞ்சி வருசத்துல பயலை ஒரு குறை சொல்ல முடியாது.’’ 

பரஞ்சோதி அள்ளி விட, “அப்போ சைனா மேட்டர் கூட அப்படி தான்னு சொல்றியா…?’’ எனக் கிடுக்கிப் பிடி போட, அவர் முகம் யோசனையில் சுருங்கியது

அப்பொழுது தான் அவருக்கு தான் விஜயிடம் போனில் பேசிய தினம் நினைவிற்கு வந்தது. கையில் தங்கள் வீட்டு கார்ட்லெஸ் போனை வைத்துக் கொண்டிருந்த நல்லசிவம்

ஐயா காலையில இருந்து நாலு பத்திரிகைகாரங்க அந்த பேங்க் கொள்ளை பத்தி விசாரிக்க வந்துட்டாங்கநீங்களே நம்ம ஏ.சி.பி தம்பிக்கிட்ட பேசி நிலவரத்தை கேட்டு சொன்னா நல்லா இருக்கும்..’’ என்று போனை கையில் கொடுத்தும், அதை தொடர்ந்து தம்பி ட்ரைவிங்ல இருக்கு போல வண்டியை ஓரமா நிறுத்திட்டு பேச சொல்லுங்க என சொன்னதும் நினைவிற்கு வந்தது

தனக்கு நினைவிற்கு வந்த விசயத்தை அவர் தன் மருமகனிடம் பகிர்ந்துக் கொள்ள, விஜய்யும், “ஆமாம் பரணி பஸ்ட் வேற யாரோ தான் மினிஸ்டர் வீட்ல இருந்து பேசுறோம்னு சொல்லி பேசுனாங்கஅப்புறம் தான் சார் பேசுனார்…’’ என உரைத்தான்

பரணி யோசனையோடு தன் முன் நெற்றியை தேய்த்துக் கொண்டான். “யோவ் அந்த ஆளுக்கு எந்த ஊரு..?’’ எனக் கேட்க, “அதெல்லாம் எனக்கு தெரியாது மாப்பிள்ளை….’’ என்றவர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டு

ஹாஒரு முறை உன் மாமன் கஜபதிகிட்ட நல்லசிவம் ரொம்ப தெரிஞ்சவர் மாதிரி நின்னு பேசினதை பாத்து இருக்கேன். அப்போ கூப்பிட்டு கேட்டப்ப உங்க மாமன் தம்பிக் கூட ஏதோ பள்ளிக் கூடத்துல ஒண்ணா படிச்ச பயன்னு சொல்லிக்கிட்டு இருந்தாப்லஉங்க மாமன் கூட எல்லாம் இனிப் பேசிக்கிட்டு திரியக் கூடாதுன்னு அந்த நிமிஷம் கண்டிச்சதோட சரி அப்புறம் நான் எதைப் பத்தியும் கேட்டுகிட்டதில்லை பரணி…’’ 

அவர் அப்படி சொன்னதும், “ஓ எல்லாம் சரி நாட்சிய கடத்தி வச்சி இருந்தீங்க இல்லஅப்ப என்ன நடந்ததுன்னு எனக்கு முழு விவரம் வேணும். ஏற்கனவே ஒருத்தன் நடந்ததை எல்லாம் சொல்லிட்டான். நீ எதையும் கூட்டி குறைக்காம உண்மைய சொல்லுநீ சொல்லப் போறதை வச்சி தான் உன்ன என்ன பண்ணலாம்னு நான் முடிவு பண்ணனும்.’’ 

சொல்லி முடித்த பரணி பால்கனி ஊஞ்சலில் அமர்ந்துக் கொள்ள, சற்றே தலையை குனிந்துக் கொண்ட பரஞ்சோதி, “அப்போ உங்க மாமனைக் காணோம்கிற வெறி மட்டும் தான் கண்ணுக்குள்ள இருந்தது பரணி

முதல்ல அந்த பிள்ளையை நம்ம குடோன்ல அடைச்சி வச்சி சோறு தண்ணி தராம இருந்தாலே உண்மைய சொல்லிரும்னு நினைச்சோம். ஆனா அது ரொம்ப பிடிவாதமா இருந்தது. அதோட உன்னை வேற மாமா மாமன்னு முறை சொல்லிக் கூப்பிடவும்

முறையா பிறந்த உங்க அத்தை மகள்களும் இவளும் ஒண்ணா அப்படிங்கிற கோபத்துல, என்கிட்டே அடியாள் வேலை பாத்துக்கிட்டு இருந்த வில்வா அப்படிங்கிற ஒருத்தன்னுக்கு காசு ஆசை காட்டி எப்படியாவது நாட்சியா வாயில இருந்து உண்மையை வரவழைக்க சொன்னேன்

உனக்கே தெரியும் என் தங்கச்சி மேல நான் வச்சி இருக்க பாசம். உன் மாமன் ஓடிப் போனதும், ஏதோ தன் சொந்த அண்ணன்காரன் ஊரை விட்டு ஓடிப் போன மாதிரி உங்க ஆத்தா சோறு தண்ணி திங்காம நெதம் அழுதுக்கிட்டு கிடந்துச்சி

அந்த கோலத்துல என் தங்கச்சிய பாத்த வெறுப்புல கடைசியா வில்வா சொன்ன மாதிரி நாட்சியாவுக்கு பட்டை சாராயம் வாங்கி ஊத்தி விட்டோம். அப்பவும் அந்தப் பிள்ள வாந்தி தான் எடுத்தது. உண்மையை எங்களால கண்டு பிடிக்க முடியல.

அப்புறம் உங்க தாத்தா தான் இதுக்கு மேல ஒரு பொட்டப் பிள்ளைய கொடுமைபடுத்தினா ஏழு தலைமுறைக்கும் பாவம் தாக்கும் அது இதுன்னு சொல்லிஅந்தப் பிள்ளைய அவங்க சொந்தகாரங்க கிட்ட ஒப்படைக்க சொன்னார்

ஆனா அன்னைக்கு நைட்டே அந்த பிள்ள தப்பிச்சி போயிட்டதா அவளை பிடிச்சி வச்சி இருந்த வில்வா பய சொன்னான். அப்ப கூட கிடந்து நான் தான் குதி குதின்னு குதிச்சேன். கண்டிப்பா அந்தப் பிள்ள அவங்க அப்பன் ஆத்தா இருக்க இடத்துக்கு தான் போயி இருக்கும்னு.

ஹும் இப்ப தானே தெரியுது…. இந்த புள்ளைக்கே தண்ணி காட்டிட்டு உங்க மாமன் ஓடிப் போய் இருக்கான்னு. ஏண்டா மாப்பிள்ளை இப்போ எப்படியும் உங்க மாமான் ஆசைக் காதலி கூட ஒரு ஆறேழு பிள்ள குட்டி பெத்துகிட்டு சந்தோசமா இருக்க மாட்டான்.’’ 

தன் முகத்திற்கு வெகு அருகே இருந்த முகத்தை நோக்கி காரி உமிழ எச்சில் கூட்டிய பரணியை கண்டு பரஞ்சோதி வேகமாய் பின்னடைய, தனக்கு அருகில் இருந்த மண் தொட்டியில் எச்சிலை துப்பிய பரணி

எப்படி ஏதோ உரம் பத்தி பேசப் போறேன்னு அடிச்ச சரக்குல என்ன செய்யிறோம்னே தெரியாம வெறும் அன்ட்ராயரோட கேட்ச் கேட்ச்னு வெளிநாட்டு பொண்ணுங்களோட கூத்தடிச்சியே அப்படியா..? உன்ன எல்லாம் அந்த கேஸ்லையே சிக்கிச் சாவுன்னு விட்டு இருந்து இருக்கனும்

அத்தை முகத்துக்காக போன போகுதுன்னு காப்பாத்தி விட்டேன் பாரு என்ன சொல்லணும்உன்ன பாத்துட்டே இருந்தா அப்படியே உன் முகரையை பேக்கணும் போல ஆத்திரம் வருது. ஒழுங்கா நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லுஇல்ல மறுபடி நானே அந்த வீடியோவை இன்னும் கொஞ்சம் அசிங்கமா மாத்தி யூடியூப்ல அப்லோட் பண்ணி விட்ருவேன்.’’

பரணியின் குரலில் வெளிப்பட்ட ஆத்திரத்தில் பரஞ்சோதி தன் வாலை முழுமையாக சுருட்டிக் கொண்டார். “லேய் நான் தாண்டா உனக்கு தாய் மாமன். எப்பப் பாரு அந்த கஜபதி பயலையே தூக்கி வச்சி பேசு..’’ அவர் குரலில் சலிப்பு வெளிபட்டாலும் அதை மீறி அப்பட்டமாய் ஆதங்கம் வெளிப்பட்டது

கஜபதியின் மீதான நேசம் பற்றிய பேச்சு வரவும், பரணியின் முகம் மென்மையாய் மாறியது. “யோவ்அந்த ஆள் எனக்கு மாமன் இல்லதகப்பனையும் தாண்டிநண்பனையும் தாண்டிஎன்னோட இன்னொரு உசுறா என் கூட உலாத்தின சொந்தம். உனக்கு ஏன் அவரை பிடிக்காம போச்சின்னு எனக்கு தெரியல. ஆனா அவரைப் பத்தி தப்பா பேசுற உரிமை, யோக்யதை உனக்கு இல்ல..’’ என்று சொன்னவன்

உன்னோட வாக்கு மூலம் சரி இல்லையே. சின்ன பிள்ளைக்கு சூடு வச்சது உன்னோட வாக்கு மூலத்துல வரவே இல்லையே. அதோட அந்தப் பிள்ளை தப்பிச்சி எல்லாம் போகல. மயக்கமாகி இருந்த பிள்ளைய ஹாஸ்பிடல்ல சேத்துட்டு யாரோ செங்கன் பாட்டிக்கு தகவல் சொல்லி இருக்காங்க.’’ 

எனக் தன் விசாரணையை தொடர, “என்னது சூடாமாப்பிள்ளை சத்தியமா எனக்கு அதெல்லாம் தெரியாதுலே…. அதே மாதிரி வில்வா அந்தப் பிள்ள தப்பிச்சி போயிடுச்சின்னு தான் எங்ககிட்ட சொன்னான்.’’

பரஞ்சோதி அப்படி சொல்லவும், “எல்லாம் சரிஅந்த வில்வா எங்க..?’’ என பரணி எதிர்க் கேள்வி கேட்கவும், ஜோதி, “அந்தப் பயஉங்க மாமன் தொலஞ்ச ரெண்டாவது மாசமேஏதோ சொந்த ஊர்ப் பக்கம் போய் தொழில் பாக்க போறதா சொல்லிட்டு கிளம்பிட்டான்யா…. அதுக்கு அப்புறம் அந்தப் பயகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்ல..’’

ஒரு வழியாய் பரஞ்சோதியிடம் தன்னுடைய விசாரணை கமிசனை முடித்த பரணி, “யோவ் மாமாநாளைக்கு காலையில நீ என்னப் பண்ற…. எங்க குடோன்ல செம்மரம் சிக்க காரணம் உன்னோட எதிர்க் கட்சிக்காரங்க சதி தான் காரணம்னு சொல்லிட்டு, உண்மையை உலகுக்கு உணர்த்தும் வரை சிங்கம் சிறையில் தவமிருக்கும்அப்படின்னு பத்திரிக்கைகாரங்களை கூப்பிட்டு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு…. 

எங்க அப்பா, அண்ணா, தாத்தா எல்லார் சார்பாவும் நீ ஜெயிலுக்கு போறபுரிஞ்சதாவழக்கம் போல உங்க கட்சிக்காரங்க உன்ன தன்மான சிங்கம் அப்படின்னு பாராட்டு பத்திரம் வாசிப்பாங்க…. 

நான் சொல்ற வரை நீ ஜெயில்ல இருஅப்புறம் அந்த சைனா கூட்ஸ் மேட்டர் இப்போதைக்கு வெளிய லீக் ஆகக் கூடாது. நாளைக்கு ஜெயிலுக்கு போக ரெடியா இருமீதியை எல்லாம் நான் பாத்துக்கிறேன். இப்போதைக்கு நான் கிளம்புறேன்.’’ 

என்ற பரணி அங்கிருந்து கிளம்ப, “லேய் மாப்பிள்ளை..’’ என பரஞ்சோதி அவரை அப்பாவியாய் அழைத்து வைத்தார். “எல்லாம் என் மயிலு வாயில சாராயம் ஊத்துறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கனும். உனக்கு இருக்கு ஜெயில்ல…. கேப்பக் கூலுக்கு பதிலா பல்லி பாயாசம் வச்சி தர சொல்றேன். யோவ் என் கோபம் மூளைக்கு ஏறி நான் ஏடா கூடமா எதையாவது பேசுறதுக்குள்ள இங்க இருந்து போயிடுறேன். நீ மூடிட்டு இரு.’’ 

பரணி ஆத்திரத்தில் வார்த்தைகளை கடித்து துப்பவும், பரஞ்சோதி, “நான் உன் மாமன்டா..’’ என்றார் அப்பாவியாய். “வாய தான் மூட சொன்னேன். நகரு..’’ என்றவன், படிகளில் இறங்க, அவனை தொடர்ந்து விஜயும் படிகளில் இறங்கினான்

அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த நல்லசிவம் இருவரையும் கண்டதும், அலைபேசியை உடனே கைகளுக்கு பின்னால் மறைத்துக் கொண்டு பவ்யமாய் நின்றார். ஆனால் அந்த பார்வையில் ஒரு குள்ளநரி தந்திரம் ஒளிந்து இருந்தது

அவரை ஆழமாய் பார்த்துக் கொண்டே பரணியும் படிகளில் இறங்கியவன், “விஜய் அடுத்து நாம எங்க மாமாவோட பண்ணை வீட்டுக்கு போலாம். எனக்கு என்னவோ அங்க தான் நம்ம தேடிக்கிட்டு இருக்க விசயங்களுக்கு விடை கிடைக்கும்னு தோணுது.’’

அவன் அப்படி சொன்னதும், நல்லசிவன் முகத்தில் ஒரு நொடி அதிர்ச்சி வந்து விலகியது. அதை பரணி உணர்வதற்குள் விஜய்யின் போலிஸ் மூளை குறித்துக் கொண்டது. இவரை தனியாய் கவனிக்க வேண்டும் என மனதிற்குள் குறித்துக் கொண்டான்

இருவரும் அங்கிருந்து வெளியேறி கஜபதியின் பண்ணை வீட்டை நோக்கி தங்கள் வாகனத்தை செலுத்திக் கொண்டு இருந்தார்கள். அதே நேரம் செங்கன் நாட்சி எடுத்து வர சொன்ன கோப்பை எடுத்து செல்வதற்காய் பண்ணை வீட்டினுள் நுழைந்தவன், பின் மண்டை எதனாலோ பலமாய் தாக்கப்பட்டு அப்படியே மயங்கி விழுந்தான்

செங்கனை மயங்கி விழ செய்து இருந்த உருவம், நாட்சியா குறிப்பிட்ட கோப்பை கைபற்றிக் கொண்டு அங்கிருந்து வேகமாய் நழுவி சென்றுக் கொண்டிருந்தது.

கூடு நெய்யும். 

 

Advertisement