Advertisement

கூடு – 21 

தற்சயம் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 64 இடம் பிடித்து உள்ளது

தான் அமர்ந்து இருந்த இருக்கையில் தன் தலையை பின்னே சாய்த்து அமர்ந்து இருந்த நாட்சியாவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது

அவள் சிந்தனை முழுவதும், பரணி இறுதியில் உரைத்து விட்டு சென்ற வார்த்தைகளிலேயே உழன்றது. அவன் சொன்னது போல, இறந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் இடையில் ஊசலாடும் தன் நிலையை எண்ணி, வாழ்வையே வெறுத்தவளாக அமர்ந்திருந்தாள் நாட்சியா

அந்த நேரம் தீவிர சிகிச்சை பிரிவின் கண்ணாடி கதவுகள் திறக்கும் ஓசை கேட்டு தன்னை மீட்டுக் கொண்டவள், பிரேமின் தற்போதையை உடல் நிலை பற்றி அறிய எண்ணி வேகமாய் கதவின் புறம் தன் பார்வையை செலுத்தினாள்

அங்கே, யாரோ ஒரு மருத்துவர் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே அந்த அறைக்குள் நுழைய முயல, அவரது செய்கை நாட்சியாவிற்கு வித்யாசமாக தோன்ற, அவளும் அவர் கவனத்தை கவரமால் அவரை கண்காணிக்க எழுந்தாள்

தன்னை அறியாமல் ஒருத்தியின் கவனத்தை கவர்ந்து இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாத அந்த உருவம், அங்கிருத்து நேராய் பிரேம் இருந்த கட்டிலை நோக்கி நகர்ந்தது

கட்டிலின் முன்பு தொங்கிக் கொண்டிருந்த குறிப்பேட்டை படிப்பதைப் போல சற்று நேரம் தயங்கி நின்ற உருவம், யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று உறுதி செய்ததும், மெதுவாய் பிரேமை நெருங்கி அவருக்கு பிராண வாயுவை அளித்துக் கொண்டிருந்த ஆக்ஸிஜன் மாஸ்கை அவர் முகத்தில் இருந்து அகற்றியது

நடக்கும் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்த நாட்சியா, “ஏய் என்னப் பண்ற..’’ எனத் தன்னை மீறி அலற, ஒரே நொடியில் அவளை நோக்கி திரும்பிய உருவத்தின் கண்களில் வெளிப்பட்ட உணர்சிகளின் குவியத்தில் நாட்சியாவே தடுமாறிப் போனாள்

வேகமாய் பிரேமை நெருங்கியவள், மூச்சுக் காற்றுக்காய் தவித்துக் கொண்டிருந்த பிரேமின் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்கை ஒழுங்காக பொருத்தியவள்

யார் நீ….?’’ என்று அந்த உருவத்திடம் கேள்வி எழுப்பியவள், “டாக்டர் நர்ஸ்…’’ என்ற அடுத்த நொடி உரத்த குரலில் அழைக்க, அந்த உருவம் அங்கிருந்து தலை தெறிக்க ஓடத் தொடங்கியது

மற்றவர்கள் கவனம் அவர்கள் முன் திரும்பும் முன் அறைக் கதவை திறந்துக் கொண்டு அந்த உருவம் ஓட, நாட்சியா முடிந்த அளவு அந்த உருவத்தை துரத்திச் சென்றாள்

இவள் குரல் கேட்டு இவள் மெய்க் காப்பாளர்களும் விரைய, அதற்குள் கீழ் தளத்தை அடைந்து இருந்த உருவம் கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து மறைந்து இருந்தது

இருந்தாலும் சற்று நேரம் நாட்சி சொன்ன அடையாளங்களை வைத்து அவளது மெய்க் காப்பாளர்கள் அந்த இடம் முழுவதும் சல்லடை போட்டு அலசிவிட்டே வந்தார்கள்

அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவமனையில் காவலர் படை குவிக்கப்பட்டது. பிரேம் சிகிச்சை பெரும் அறையில் சிறப்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது

அந்த அறைக்கு வெளியே  பரபரப்பாக அலைந்து கொண்டிருந்த நாட்சியா, பிரேம் தன் பெற்றோர் பற்றி இதுவரை சேகரித்த தகவல்கள் அடங்கிய கோப்பையை எடுத்துவர சொல்லி அங்கே அப்பொழுது தான் நுழைந்திருந்த செங்ககனைப் பணித்திருந்தாள்

சற்று நேரத்திற்கு முன்பு, வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டிருத்த நாட்சியாவாக இல்லாமல் எந்த சூழ்நிலையையும் தன் கட்டுக்குள் கொண்டு வரும் நாட்சியாவாக மாறி இருந்தாள்

அதே நேரம், விஜயும், பரணியும் பரஞ்சோதியின் இல்லத்திற்குள் நுழைந்து இருந்தனர். இவனைக் கண்டதும், “வாலே மாப்பிள்ளை…. அப்புறம் கப் எல்லாம் ஜெயிச்சிட்ட போல..’’ என்று அன்பாய் கட்டி அணைத்து வரவேற்க வந்த மாமனை ஒரு அடி தள்ளி நிறுத்தியவன்

யோவ் உன் பேர்ல இருக்க குடோன்ல எல்லாம் என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா..?’’ என்று கேள்வி எழுப்ப, “என்னவே இப்படி கேக்குற.. நாம வழக்கமா செய்யிற வேலை தானலே…. ஏற்றுமதி இறக்குமதி…. போன வாரம் கூட திருப்பூர்ல இருந்து பனியன் மெட்டிரியல் எல்லாம் மூணு குடோன்ல வந்து இறங்கி இருந்தது

அப்புறம் அதெல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு கப்பல்ல முந்தா நேத்து தான் போச்சு. ஏம்லே வந்ததும் வராததுமா என்னை பகடி செய்யலைனா உனக்கு பொழுது போகாதே..’’ 

பரஞ்சோதி உரிமையாய் கோபித்துக் கொள்ள, “யோவ் அடங்குறியா ஏதாவது அசிங்கமா பேசிடப் போறேன்…. உன்ன எல்லாம் நம்பி எங்க அத்தை எப்படி தான் ரெண்டு பிள்ளைங்களை பெத்துச்சோ..’’ மீதி வார்த்தைகளை அவன் வாய்க்குள் முனகி கொள்ள, அங்கு நின்றுக் கொண்டிருந்த விஜயனுக்கு தான் சங்கடமாய் போயிற்று

மாப்பிள்ளை அப்பா, அண்ணன் தாத்தா எல்லாம் ஜெயில்ல இருக்க வருத்ததுல இப்படி பேசுறேன்னு புரியுதுய்யா….. நம்ம வக்கீல் நாளைக்கு ஜாமீன் வாங்கிடலாம்னு சொல்லி இருக்கார்நீ அதை எல்லாம் நினச்சி உன்ன டென்சன் பண்ணிக்காதஅப்புறம் உங்க வீட்டு அல்லி ராணியைப் போய் பாத்தியாஎன்ன சொல்றா அந்த சண்டி ராணி..’’ 

அவர் கேட்டுக் கொண்டிருக்க  அவரைப் பார்த்து முறைத்தவன், “யோவ்…. எம் பொண்டாட்டிய எதாவது பேசுன.. நாக்கை இழுத்து வச்சி அறுத்துருவேன்…. என்ன கொழுப்பா உனக்கு. உன் குடோன்ல என்ன நடந்துட்டு இருக்கு தெரியுமாசைனா சரக்கை எல்லாம் இறக்குமதி பண்ணி இண்டியன் லேபிள் ஒட்டி இந்திய சந்தையில வித்துக்கிட்டு இருக்காங்க….’’

அவன் அப்படி சொல்லி முடித்ததும் பரஞ்சோதியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. “என்ன மாப்பிள்ளை சொல்ற நீ…. ஐயோ அது பெரிய தேச துரோகம் ஆச்சேவிஷயம் வெளிய தெரிஞ்சா பார்லிமென்ட்ல வச்சி என்ன கிழி கிழின்னு கிழிச்சி தோரணம் கட்டி தொங்க விட்ருவாங்களே….அடுத்த எலக்சனை நினச்சி கூட பாக்க முடியாதே. எதிர்கட்சிக்காரங்களுக்கு மேட்டர் போச்சி ஏதோ நான் தீவிரவாதிகளுக்கு வெபன் சப்ளை பண்ற மாபியா மாதிரியே ஜோடிச்சி கதை கட்டி விட்ருவானுங்களே. ஏலே மாப்பிள்ளை நீ சொல்றது உண்மையாலேஇல்ல எம் மேல இருக்க காண்டுல கதை சொல்லிக்கிட்டு இருக்கியா..?’’ 

அவர் அப்படிக் கேட்கவும், காற்றில் கை முஷ்டியை மடக்கி இறக்கியவன், “யோவ் பெரிய மனுசன்னு பாக்குறேன்…. இல்ல.. உன்கிட்ட பொய் சொல்லி காரியம் சாதிக்க நான் என்ன உன்னோட எதிர்க் கட்சியா..? சரி அதை எல்லாம் விடுஒரு முறை மாட்டினா தான் உனக்கும் புத்தி வரும்….ரெண்டு நாளைக்கு முன்னாடி விஜய்க்கு நீ போன் பண்ணி பேசுனியா…?” எனக் கேட்க, எப்போ என தன் தாடையில் கை வைத்து யோசித்து விட்டு

ஆமாம் பரணி நம்ம ஊர்ல ஐ..பி பேங்க்ல லட்சக் கணக்குல பணம் கொள்ளை போயி இருந்தது. அது சம்மந்தமா தம்பிகிட்ட பேசினேன். அதுக்கு என்ன இப்ப..’’  

சரி ஏன் காரை விட்டு இறங்கி பேச சொன்ன..’’ எனத் தன் இரண்டாவது கேள்வியை முன் வைக்க, “சிக்னல் விட்டு விட்டு கேட்டுச்சிஅதான் இறங்கி பேச சொன்னேன்..’’ 

என பரஞ்சோதி பதில் கொடுக்க, “ஓ அப்ப தான் அப்ராணியா உள்ள இருக்க பிரேமை லாரி வச்சி தூக்க வசதியா இருக்கும்னு அப்படி சொல்லி இருக்க…’’ எனக் கேட்க

லேய் மாப்பிள்ளை என்னடா சொல்லுத..?’’ எனப் பரஞ்சோதி கலங்கித் தான் போனார். தன் முக பாவனைகளை இறுக்கமாய் மாற்றிக் கொண்ட பரணி

யோவ் மாமா ஆரம்பத்துல இருந்தே உனக்கும் என் மாமன் கஜபதிக்கும் ஒத்து வராதுன்ற உண்மை ஊருக்கே தெரியும். அதோட நாட்சியா இந்த ஊருக்கு வந்த நாள்ல இருந்து எங்க வீட்ல பத்த வச்ச வேலையை நீ தான் செஞ்ச. உண்மைய சொல்லு எம் மாமா குடும்பத்தை கண்டுபிடிக்கிற வேலைல இருந்த பிரேமை ஏன் கொல்ல பாத்த…. ஒழுங்கா இப்ப நீ உண்மைய சொல்லலஅப்புறம் என் நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்..’’ 

பரணியின் மிரட்டலில் பரஞ்சோதி கலங்கியே போய் விட்டார். “லேய் லேய்நான் உன் தாய் மாமன்டா. இது வரைக்கும் எந்த வேலை செஞ்சாலும் உங்க குடும்பத்தோட நல்லதுக்கு தான் அதை செஞ்சி இருக்கேன்

உங்க அப்பாவுக்கு என்னை விட உன் மாமன் கஜபதி மேல ஆரம்பத்துல இருந்தே பிரியம் கொஞ்சம் அதிகம்.அதோட என் தங்கச்சி பசங்களான உங்களுக்கு என்னை விட அந்த ஆளை தான் ரொம்ப பிடிக்கும். அந்த காண்டுல சில மோதல் எங்களுக்குள்ள வெடிச்சி இருக்கு தான்

ஆனா நீ நினைக்கிற அளவுக்கு உம் மாமன் கெட்டவன் இல்ல பரணி. நான் ஒரு பச்சை மண்ணுன்னு உனக்கு தெரியாதா..? நீ வேற ஏண்டா எதை எதையோ சொல்லி எனக்கு பீதிய கிளப்புற…’’ 

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே, பரஞ்சோதியின் பி.ஏ  நல்லசிவம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த மாடி பால்கனிக்கு வந்தார். “ஐயாநாளைக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் இருக்கு. சாயங்காலம் ரயிலுக்கு டிக்கெட் புக் பண்ணவாஇல்ல காலையில பிளைட்டுக்கு டிக்கெட் புக் பண்ணவா..?’’

அவர் பவ்யமாக வினவ, “ஏலேய் முடிஞ்சா என் மண்டையில கல்லை தூக்கி போட்டு ஒரேடியா எனக்கு டிக்கெட் புக் பண்ணு. இங்க எவ்ளோ முக்கியமா விஷயம் பேசிக்கிட்டு இருக்கேன். எப்ப பாரு ஐயா, நொய்யானுக்கிட்டு, போலே அங்குட்டு….’’ 

பரஞ்சோதி எரிந்து விழுகவும், “மன்னிச்சிக்கோங்க ஐயா..’’ என்ற நல்லசிவம் அங்கிருந்து விலகி செல்ல, செல்லும் முன் பரணியை ஒரு முறை ஆழமாக நோக்கி விட்டு சென்றார்

Advertisement