Advertisement

எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..’’ என்ற வார்த்தைகளோடு. அவன் நின்ற திசைப் பக்கம் திரும்பாமல், “விஜய் தேவை இல்லாம இவனை என் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லுஇல்ல இங்க ஒரு கொலை நடக்கும்..’’ 

அவன் வார்த்தைகளின் இறுக்கத்தில் விஜய் பரிதாபமாய் சென்கனைப் பார்க்க, அவன் அதைவிட உறுதியாய் பரணியைப் பார்த்துக் கொண்டே, திடமான குரலில்

எங்க ராணிமா வீட்டுக்காரருக்கு என்ன கொல்ற ஏக போக உரிமை இருக்கு விஜய் சார். ஆனா என்ன கொல்றதுக்கு முன்னாடி எங்க பக்கம் நியாயத்தை விளக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்க சொல்லுங்க. அப்புறம் நானே உண்மையை சொல்லி முடிச்ச சந்தோசத்துல இவர் கையால செத்துப் போறேன்..’’ 

அவன் அப்படி சொன்னதும் அவனை பார்த்து ஏளனமாய் முறைத்த பரணி

ஏலே யாரோ கடத்தின செம்மரக் கட்டையை எங்க குடோனுக்குள்ள கொண்டு வந்து வச்சி நாங்க கடத்தினதா எங்க வீட்டு ஆளுங்களை ஜெயிலுக்கு அனுப்பி இருக்கீங்களே நீயும் உங்க ராணிஅம்மாவும், இதுல விளக்க பெருசா என்னலே இருக்கு….என் முன்னாடி நிக்காம ஒழுங்கா ஓடிப்போயிடுலே….இல்ல..’’ பரணி மீண்டும் அவனை அடிப்பதற்கு பாய்ந்தான்.

விஜய் முடிந்த மட்டும் நண்பனை இறுக்கிப் பிடித்து பின்னால் இழுத்தான். ஆனால் கைகளைக் கட்டிக் கொண்டு நேர் பார்வையோடு நின்றுக் கொண்டிருந்த செங்கனோ

எங்க ரணிமாவுக்கு முதுகுல குத்துற துரோகம் என்னைக்கும் கை வராது. எங்க அம்மா எந்த விசயத்தை செஞ்சாலும் கண்டிப்பா அதுல ஒரு நியாயம் இருக்கும். உங்க பொண்டாட்டி மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நான் எங்க பண்ணை வீட்டுக்கு போறேன். என்னை அங்க வந்து பாருங்க..’’ 

உரைத்து முடித்த செங்கன் அங்கிருத்து வேகமாய் வெளியேற, அவன் கண்களில் உடல் மொழியில் வெளிப்பட்ட நேர்மையில் பரணியே அசந்து தான் போனான்

ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை வெளியேற்றிய பரணி, சோகமாய் இருந்த வீட்டுப் பெண்களிடம் திரும்பி, “இன்னைக்குள்ள எல்லாரையும் வெளிய கொண்டு வந்துடுவேன். தைரியமா இருங்க..’’ என்று உரைத்துவிட்டு வெளியே கிளம்பினான். அவனைப் பின் தொடர்ந்து விஜயும் கிளம்பினான்

விஜய் தன் காரை எடுக்க செல்ல, அவனைத் தடுத்தவன், தன் டுகாட்டியின் சாவியை கொடுத்து, “மச்சிஎன் வண்டியை எடுலே..’’ என சொல்ல விஜய் அவன் சொல்லுக்கு அமைதியாய் கட்டுப்பட்டான்

வண்டியை கிளப்பியவன், பின்னால் பரணி அமர்ந்ததும், “மாப்பிள்ளைஇப்ப எங்க போக..?’’ எனக் கேட்க, குரலில் கொஞ்சம் அலுப்போடு கூறுவதைப் போல

லே…. எங்க மாமான் ஊருக்கு ஒதுக்கு புறமா வாங்கி வச்சி இருக்குற பண்ணை வீட்டுக்கு வண்டியை விடுலேபெருசா என்னமோ நாங்க நியாவதி நேர்மைவாதின்னு புலம்பிட்டு போனாம்ல ஒருத்தன்…. என்னதான் சொல்லுதாம்ன்னு கேட்டுப் பாப்போம்..’’ 

அவன் அப்படி சொன்னதும் விஜயின் இதழ்களில் நாட்சியாவின் மேல் பரணிக்கு இருக்கும் காதலை எண்ணி ஒரு குறுநகை மலர்ந்தது. “உங்க பொண்டாட்டி மேல நம்பிக்கை இருந்தா..?’’ என்ற செங்கனின் வார்த்தைகள் நன்றாக வேலை செய்து இருப்பதை அந்த நொடி உணர்ந்துக் கொண்டான்

இருவரும் பண்ணை வீட்டை சென்று அடைந்ததும், அவர்கள் வரவை எதிர் பார்த்தவன் போல செங்கன் வாயிலியே நின்றுக் கொண்டிருந்தான். இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வரவும்

வாங்கவாங்க சின்னய்யா..’’ என்று வாயிலுக்கே வந்து வரவேற்றவன், இருவரையும் அழைத்துச் சென்று வரவேற்பறை சோபாவில் அமரவைத்தான்

அங்கிருந்த டீபாயில் இருந்த புகைப்பட ஆல்பத்தை கண்டவனின் கண்கள் ஆச்சர்யத்தை வெளிபடுத்த அதை கைகளில் எடுத்து புரட்டிப் பார்க்க தொடங்கினான். அது அவனின் பால்ய புகைப்பட தொகுப்பு

அவன் விழிகளில் இருந்த ஆச்சர்யத்தை படித்த செங்கன், “சின்னய்யா அப்படியே ஒவ்வொரு போட்டோவையும் உருவி பின்னாடி பாருங்க..’’ என்று சற்று புன்னகையோடு சொல்ல

பரணி, செங்கன் கூறியதைப் போலவே முதல் புகைப்படத்தை திருப்பி பின்னால் பார்த்தான். பின்புறம் வெள்ளையாய் இருந்த பக்கத்தில், பரணியின் சிறுவயது குப்புற விழுந்த புகைப்படமான அதில், நாட்சியா,

டூ பேட் பரணி மாமா இன்னர் கூட போடலநல்ல வேளை போட்டோகிராபர் குப்புற போட்டு போட்டோ எடுத்து இருக்கார்….இல்லனா….ஹா ஹா ஹா….’’ இதே போல அவனின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நச் நச் என சில கமெண்டுகளை வாரி வழங்கி இருந்தாள்

இதையெல்லாம் வெகு வருடங்களுக்கு முன்பே அவள் எழுதி இருக்க வேண்டும் என்பதை அவள் குழந்தைதனமான கையெழுத்து அவனுக்கு அறிவுறுத்தியது. மனம் மிக லேசாக ஏனோ உணர்வோடு கண்களில் காதல் மின்ன அந்த புகைப்படங்களை புரட்டிக் கொண்டிருந்தான்

ஒரு வழியாய் புகைப்பட தொகுப்பு முடிவடையவும், “என்னோட இந்த ஆல்பம் நாட்சியாகிட்ட எப்படி…’’ என பரணி சற்று தயக்கத்தோடே செங்கனிடம் கேட்க

செங்கன் ஆதியோடு அந்தமாய் நாட்சியா சிறுவயது முதலே பரணியின் மேல் கொண்டிருந்த ஈர்ப்பை விளக்கி முடித்தான். அதை பரணி விரிந்த கண்களோடு பரவசமாய் கேட்டுக் கொண்டிருந்தான்

அனைத்தையும் விளக்கி முடித்தவன், கஜபதி தொலைந்த இரு தினங்களில் நாட்சியாவை அவர்கள் குடும்பத்தினர் கடத்தியதையும் அவளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதையும், உணவு கொடுக்காமல் துன்புறுத்தியதையும். மேலும் பரணியை மாமா என்று அழைத்ததற்காய் அவளை தகாத வார்த்தைகளில் திட்டியதையும், இறுதியாய் அவளுக்கு சூடு வைத்தது முதல் சொல்லி முடித்தவன்

எங்க ராணிமா ரொம்ப பாவம் சின்னய்யா... அவங்க சின்ன வயசுல இருந்து அவங்க அறிஞ்ச நேசிச்ச ஒரே சொந்தம் நீங்க தான். அவங்க அப்பா அம்மாவை காணோம்னு தவிச்சப்ப உங்களை தான் முதல் ஆளா அவங்க மனசு தேடி இருக்கு. எல்லாம் இருந்தும் அனாதையா வாழ்ந்தவங்க எங்க ராணிமா


அவங்க கோபத்தோட உண்மையான காரணம் இப்ப உங்களுக்கு புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன். வெளிய உங்களைப் பழி வாங்க எதை செஞ்சாலும் உங்களை விட நூறு மடங்கு அதிகமா உள்ளுக்குள்ள துடிக்கிறது என்னவோ எங்க ராணிமா தான்

இப்ப கூட உங்க வீட்ல அவங்க ரூம்ல தூங்கிட்டு இருந்த ராணிமா ரூம்ல எங்க பாளையத்தான் கழுத்தை அறுத்து தொங்க விட்டாங்க. செத்து அழுகின நாய்க் குட்டியை பார்சல் அனுப்பி உங்க அப்பா அம்மாவை தேடாதேன்னு மிரட்டுறாங்க.

இதுக்கெல்லாம் எங்க ராணிமா ஓஞ்சி போயிடுவாங்கன்னு கண்ணனுக்கு தெரியாத எதிரி நம்பிட்டு இருக்கான். இந்த இடத்துல எது நடந்தாலும் தான் திடமா நிக்கிற ஆள்னு காட்டத்தான் அவங்க சொந்தத்தையே ராணிமா ஜெயிலுக்கு அனுப்பி இருக்காங்க

அதோட உங்க மாமா மேலையும் எங்க ராணிமாவுக்கு சந்தேகம் இருக்கு. உங்க குடோன்ல அரசாங்கம் தடை பண்ணி இருக்குற சீனப் பொருளை எல்லாம் வாங்கி குவிச்சிஅந்த பொருட்கள்ல இந்திய தயரிப்புன்னு சீலை ஒட்டி எல்லா மாநிலத்துக்கும் அனுப்பி வைக்குறாங்க. நம்ம நாட்டோட உள்நாட்டு சந்தை மதிப்பு இதனால மிக மோசமா பாதிக்கப்படும்னு ராணிமா புலம்பிக்கிட்டு இருந்தாங்க

நம்ம குடோன்ல என்ன நடக்குதுன்னே தெரியாம மச்சான் மேல அதீத நம்பிகையில இருக்குற உங்க அப்பா, அண்ணா, தாத்தாவுக்கு எல்லாம் நிலவரம் புரியணும்னு தான் வேற இடத்துல கிடச்ச செம்மரத்தை அங்க கொண்டு வந்து வச்சி…. அவங்களை கைது பண்ண ராணிமா முடிவு பண்ணாங்க

நாங்க கண்டுபிடிச்ச கேஸ்ல அவங்க உள்ள போற மாதிரி இருந்தா நேரடியா தேச துரோக வழக்குல உள்ள தள்ளி ஜாமீன் இல்லாம, விசாரணை இல்லாம புழல் சிறையில போட்டு இருப்பாங்க சின்னய்யாசெம்மரமும் பெரிய வழக்கு தான் இருந்தாலும் இதுல வேற சாட்சியங்களை உள்ள நுழச்சி அவங்களை காப்பாத்த முடியும்

சின்னய்யா அதோட ராணிமா அப்பா அம்மாவை தேடிட்டு இருக்குற பிரேம் ஐயாவுக்கு விபத்து நடந்ததுக்கு காரணம் உங்க மாமா பரஞ்சோதி தான். ஏன்னா அன்னைக்கு காரை ஓட்டிட்டு இருந்த விஜய் ஐயாவுக்கு போன் பண்ணி, வெளிய இறங்கி நின்னு பேசு எனக்கு சரியா கேக்கலைன்னு சொல்லி நம்ம விஜய் ஐயாவை இறங்கி நிக்க சொன்ன, அதே சமயம், ஓரமா நின்னுட்டு இருந்த வண்டியை லாரி இடிச்சி தள்ளிட்டு போய் இருக்கு

ராணிமா நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் இந்த வேலைய செய்யணும்னு இருந்தாங்க. ஆனா பரஞ்சோதி ஐயா செஞ்சி வச்ச வேலையில, அவங்களும் உங்க பரம்பரை தானே சின்னய்யா, கோபம் தலைக்கேறி உடனே திட்டத்தை செயல்படுத்த சொல்லிட்டாங்க

ராணிமாவுக்கு பரஞ்சோதி ஐயா தான் அவங்க அம்மா அப்பாவை தேட பெரிய தடையா இருக்காரு அப்படிங்கிற நினைப்பு இருக்கு. அவர் கவனத்தை எங்க பக்கம் இருந்து முழுசா திசை திருப்பவும் தான் இந்த கைது நடவடிக்கை. அதோட ஜெயில்ல அவங்களை நல்லா பாத்துக்கணும்னு கலெக்டர் ஐயா உத்தரவே இருக்குறதால, நீங்க அவங்களை பத்தி கவலையெல்லாம் பட தேவையில்ல

உள்ள அனுப்பின ராணிமாவே அவங்களை குத்தம் செய்தாவங்கன்னு பூரண கும்ப மரியாதையோட வெளிய எடுப்பாங்க. அவங்க மேல நம்பிக்கை இருந்தா நீங்க ரெண்டு நாள் பொறுத்து இருங்க சின்னய்யா..’’ 

நீளமாய் பேசி முடிந்த செங்கன், இனி முடிவு அவனுடையது என்பதைப் போல இருவருக்கும் இளநீர் சீவி கொண்டுவந்துக் கொடுத்தான். செங்கன் கொடுத்த இளநீரை பருகி முடித்த பரணி தன் விசாரணையை விஜயனிடம் இருந்து ஆரம்பித்தான்

விஜய் நீ ட்ரைவ் பண்ணிட்டு இருக்கும் பொழுது மாமாஉனக்கு போன் போட்டாரா..?’’ எனக் கேட்க, “ஆமாம் மச்சி ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம ஊர்ல நடந்த பேங்க் கொள்ளை பத்தி விசாரிச்சிட்டு இருந்தார். நான் சொல்ற பதில் தெளிவா கேக்கலைன்னு இறங்கி நின்னு என்னை பேச சொன்னார்…’’ 

அவன் கூறியவற்றை கேட்டுக் கொண்ட பரணி, செங்கனை நோக்கி திரும்பினான்.  

நீ முதல்ல ஹாஸ்பிடலுக்கு கிளம்பு செங்கன். அங்க போனதும் நான் கைக்கு கட்டு போட்டுகிட்டேன்னு உங்க ராணிமாகிட்ட சொல்லிடு. அப்புறம் அவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுஏதோ பஞ்சத்துல அடிபட்டவ மாதிரி இருக்கா

சாப்பிட மாட்டேன்னு ஏதாவது ரூல்ஸ் பேசினானா உங்க புருஷன் ஆர்டர்னு சொல்லு உங்க ராணிமா அமைதியா கேட்டுப்பா. நானும் விஜயும் இப்ப எங்க மாமாவை பாக்க போறோம்

எல்லா குழப்பத்துக்கும் முதல்ல விடை கண்டுபிடிக்கணும். நீ நான் ஹாஸ்பிடல் வர வரைக்கும் உங்க அம்மாவை விட்டு எங்கயும் நகர கூடாது புரியுதா…? இனி எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். வீட்டை பூட்டிட்டு ஹாஸ்பிடல் கிளம்பு.’’ 

பரணி சொல்லி முடித்ததும், செங்கன், “சரிங்க ஐயா…’’ என பதில் அளித்தவன் மருத்துவமனைக்கு கிளம்ப தொடங்க நண்பர்கள் இருவரும் பரஞ்சோதி வீட்டை நோக்கி கிளம்ப தொடங்கினர்

அதே நேரம், மருத்துவர் உடை அணிந்து முகத்தில் முகவுரை அணிந்து முகத்தை மறைத்த உருவம் ஒன்று தயங்கி தயங்கி பிரேம் இருந்த அறையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது

 கூடு பாயும். 

Advertisement