Advertisement

கூடு – 20

2020 ஆம் ஆண்டிற்க்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன

இரவெல்லாம் விழித்திருந்து பிரேமின் நிலை பற்றி மருத்துவரிடமும், பணியில் இருந்த செவிலியரிடமும், மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தாள் நாட்சியா. 

அதிகாலை மூன்று மணிக்கு மேல் பிரேமின் உடல் நிலை சீராக முன்னேறிக் கொண்டிருப்பதாக அறிவிக்கவும், அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த அழுத்தம் விடை பெற அங்கிருந்த இருக்கையிலேயே சாய்ந்து உறங்க தொடங்கினாள்

இரவில் தன்னுடன் தங்க வந்த செங்கனை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். நள்ளிரவு வரை உடன் இருந்த விஜய் அதற்கு மேல் வீட்டிற்கு செல்வதாய் அவளிடம் உரைத்துவிட்டு விடைபெற்று சென்றிருந்தான்

மருத்துவமனையில் அவளும் அவளுடைய மெய்காப்பாளர்களும் மட்டுமே இருந்தனர். அதிகாலைப் பொழுது அழகுடன் விடிந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டு படைக்குள் நுழையும் போர் வீரன் போல பரணி அந்த மருத்துவமனை படிகளில் தட தடவென ஏறிக் கொண்டிருந்தான்

அவன் பின்னோடே விஜய் ஏதோ விளக்கம் சொல்லியபடி அவனுக்கு இணையாய் நடக்க முயன்று அது முடியாமல் ஏறக் குறைய அவனோடு ஓடிக் கொண்டிருந்தான்

அவசர சிகிச்சை பிரிவைஅடைந்ததும், அவன் கண்களில் முதலில் பட்டது இருக்கையில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த நாட்சியா தான். அவள் முகமே அவளின் சோர்வை எடுத்துக் காட்ட, பரணியின் கால்கள் ஒரு நொடி ஒரே ஒரு நொடி அதன் வேகத்தை குறைத்தன

அடுத்த நொடி சிறையில் இருக்கும் சொந்தங்களின் நினைவு தாக்க, முன்பை விட வேகமாய் அவளை நோக்கி நடந்தான். அவளின் அருகில் சென்றவன், அருகில் இருந்த குசன் இருக்கையை ஓங்கி ஒரு உதைவிட, அது சப்தித்துக் கொண்டே உருண்டு சென்று அந்த டைல்ஸ் தரையில் தலைக் குப்புற விழுந்தது.

அந்த சப்தத்தில், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் ஒரு புறமும், நாட்சியின் மெய் காப்பாளர்கள் ஒரு புறமும் அடித்துப் பிடித்து அவளை நோக்கி ஓடி வந்தனர்

தனக்கு வெகு அருகே திடீரென கேட்ட சத்தத்தில், திடுக்கிட்டு கண் விழித்த நாட்சியா, வெகு நேரம் இருக்கையில் அமர்ந்த வாக்கில் உறங்கியதால் மருத்து போய் இருந்த கால்கள் ஒத்துழைக்க மறுத்ததால், எழ முயன்றும் முடியாமல் கண்களைக் கசக்கிக் கொண்டே தன் முன் நிற்பது யார் எனப் பார்த்தாள்

உடலெல்லாம் இறுகிப் போய் கழுத்து நரம்புகள் புடைக்க பரணி அங்கே நரசிம்ம மூர்த்தியாய் நின்றுக் கொண்டிருந்தான். அவன் உடல் மொழியில் தெரிந்த கோபத்தின் அளவில் நாட்சியாவிற்கு உள்ளே குளிர் பிறந்தது

அவள் அவனை பார்த்து விழித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவனை நெருங்கிய மருத்துவமனை ஊழியர்கள், “சார் இது ஹாஸ்பிடல்இங்க இப்படியெல்லாம் பிஹேவ் பண்ணக் கூடாது….’’ என மென்மையாய் அவனை எச்சரிக்க

நாட்சியின் மெய்க் காப்பாளர்களோ வந்து இருப்பது நாட்சியின் கணவன் என அறிந்ததும், ஏதோ கணவன் மனைவி தகராறு என அங்கிருந்து சற்றே விலகி சென்றனர்.   

தன்னை எச்சரித்த பணியாளரை நோக்கி திரும்பிய பரணி, “உங்க ஹாஸ்பிடல் ஓனர் மிஸ்டர் காளிமுத்து கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன். சும்மா ரூல்ஸ் பேசிட்டு யாரும் கொஞ்ச நேரம் என் முன்னாடி வராதீங்க. விஜய்….’’

அவன் குரலில் வெளிப்பட்ட கடினத்தில் அவனுக்கு பின்னே நின்றுக் கொண்டிருந்த விஜய் அவனுக்கு முன்னே வந்து நின்றான். தன் அலைபேசியை எடுத்து அவனிடம் கொடுத்தவன்

இப்பவே என் போன்ல இருந்து என் மாமா பரஞ்சோதிக்கு கால் பண்ணி இந்த ஹாஸ்பிடல் ஓனர் காளிமுத்துகிட்ட பேச சொல்லுநான் இங்க கொஞ்சம் பிரச்சனை பண்ண போறேன்னு…. யாரும் நடுவுல வரக் கூடாதுன்னு சொல்ல சொல்லு..’’ 

நேற்றுவரை இங்கே அனுமதிக்கப்பட்டு இருந்த உதவி ஆணையாளரையே அவன் மிரட்டும் தொனி கண்டு மருத்துவமனை ஊழியர்கள் சற்றே பின்னடைந்தனர்

அவன் கொடுத்த அலைபேசியை அமைதியாய் கைகளில் வாங்கிக் கொண்ட விஜய், “சிஸ்டர்…. ப்ளீஸ் உங்க வொர்க்கர்ஸ் எல்லாம் உள்ள போய் வேலையை பாக்க சொல்லுங்கஇங்க ஒன்னும் பிரச்சனை ஆகாம நான் பாத்துக்கிறேன்…’’ அவன் குரலில் இருந்த உறுதியில் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.  

பரணியின் கோபத்தில் மரத்த கால்களையும் பொருட்படுத்தாதா நாட்சியா அப்படியே எழுந்து நின்றாள். அவளை பார்த்து முறைத்துக் கொண்டே முன்னேறிய பரணி, கைமுஸ்டியை இறுக்கி அவள் முகத்தை நோக்கி உயர்த்தினான்

நாட்சி பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள். ஆனால் அடுத்த நொடி அவளுக்கு பின்புறம் இருந்த கண்ணாடி ஜன்னல் சில்லு சில்லாய் சிதறி இருந்தது

கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு பதறிய நாட்சியா விழிகளை திறந்துப் பார்க்க, அங்கே பரணியின் வலது கரம் முழுக்க ஆங்காங்கே கண்ணாடி குத்தியும் கிழித்தும் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது

ஐயோ..’’ நாட்சி பதட்டத்தோடு பரணியின் கரம் பற்ற முயல, அவளிடமிருந்து விலகி நின்றவன், “என்னை தொட்ட கொன்றுவன்..’’ என்று உறுமினான். அதற்குள் ரத்தம் துளி துளியாய் வழிந்து அந்த தரையில் சிறிய சிறிய புள்ளிகளாய் சொட்ட தொடங்கியது

அப்பொழுது தான் உள்ளே சென்று இருந்த மருத்துவ பணியாளர்களும் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு வெளியே வந்து இருந்தனர். விஜய் வேகமாய் ஓடிச் சென்று தன் நண்பனின் கரத்தை பற்றிக் கொண்டான்

இடியட்என்ன காரியம்டா செஞ்சி இருக்கஐயோ கண்ணாடி ரொம்ப ஆழமா கிழிச்சி இருக்கும் போலையே….. நர்ஸ்.’’ அவன் குரல் கொடுப்பதற்கென்றே காத்திருந்தார் போல ஒரு செவிலி அங்கிருந்து ஓடி வந்தார்

அதற்குள் தன் கரத்தை விஜய்யின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்ட பரணி, “டேய் எனக்கு ட்ரீட்மென்ட்டும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்…’’ என்று கத்தி விட்டு நாட்சியை நோக்கி திரும்பினான்

வாழ்வில் முதல் முறையாக அச்சத்தை கண்களில் தேக்கி அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் நாட்சியா நின்றுக் கொண்டிருந்தாள். கலங்கி இருந்த விழிகள் அதிர்ச்சியில் கண்ணீர் உற்பத்தியை கூட நிறுத்தி இருந்தன

அவள் முகத்தை அப்படிக் கண்டதும் உள்ளே உருகி வழிந்த உள்ளத்தை இறுக்கிப் பிடித்தவன், அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே, “என்ன இப்ப உனக்கு குளு குளுன்னு இருக்கா…. இல்ல இன்னும் உனக்கு பழி வாங்குற வெறி அடங்கலைனா சொல்லுஅப்படியே உன் முன்னாடி என் கழுத்தை அறுத்துக்கிட்டு செத்துப் போறேன்….. என்ன செய்யவா…?’’ 

அவன் குரலில் இருந்த சொன்னதை செய்து விடும் உறுதியில் நாட்சியா திகைத்துப் போய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “உனக்கு நாங்க கெடுதல் செஞ்சவங்க தான் ஒத்துக்கிறேன்டி…. ஒத்துகிறேன்எங்களைப் பழி வாங்கத்தான் நீ எங்க வீட்டுக்குள்ளயும் வந்த….. அதைக் கூட என்னால ஏத்துக்க  முடிஞ்சது..

ஆனா எப்படிடி எப்படி எங்க மேல பொய் கேஸ் போட்டு எங்க வீட்டு ஆளுங்களை உள்ள தள்ற அளவுக்கு நீ தரம் தாழ்ந்து போன…. ஏற்கனவே பிடிபட்டு இருந்த செம்மரத்தை நைட்டோட நைட்டா எங்க குடோனுக்கு ஷிப்ட் பண்ணி இருக்க.

இங்க நான் இல்லைனா இங்க என்ன நடந்தாலும் எனக்கு தெரியாம போயிடும் நினைச்சியா. இப்படி ஒரு ஏமாத்து தனத்தை முதுகுல குத்துற துரோகத்தை உன்கிட்ட நான் எதிர் பாக்கலை நாட்சி. செங்கன் நம்ம வீட்டு ஆளுன்னு தான்…. அவனை ஈசியா குடோன்குள்ள அலோ பண்ணி இருக்காங்கஅதை நல்லா மிஸ் யூஸ் பண்ணிட்ட இல்ல…. 

உன்கிட்ட எனக்கு பிடிச்சதே நேரா நின்னு தில்லா சொல்லிட்டு அடிக்கிற உன்னோட தைரியம் தாண்டிநீ ஏன் நாட்சி இப்படி ஒரு துரோகத்தை என் குடும்பத்துக்கு செஞ்ச அதுவும் நான் இல்லாத நேரத்துலஎப்போ தான் எங்க குடும்பத்தை உன் குடும்பமா ஏத்துக்க போற.

கடைசி வரைக்கும் உன் கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் நடுவுல போராடிட்டே இருக்க போறியா..? நீ உன்னால முடிஞ்சதை செஞ்சிட்ட இனி நான் என்னால என்ன முடியும்னு செஞ்சிட்டு வந்து உன்ன பாக்குறேன்…’’ அவளிடம் கத்தி முடித்தவன் அங்கிருந்து வேகமாய் வெளியேற, விஜய் இவளிடம் பார்வையால் விடை பெற்றபடி அவன் பின்னோடு ஓடினான். நாட்சியிடம் கத்தி முடித்ததும், பரணியின் கோபம் சற்றே மட்டு பட்டு இருந்தது

அவன் கத்தி விட்டு சென்றதும், தொப் என இருக்கையில் அமர்ந்தவள் காதுகளில், “என்ன செஞ்சா உன் பழிவெறி போகும் நாட்சி என் கழுத்தை வேணா அறுத்துக்கட்டுமா..?’’ என்ற பரணியின் வார்த்தைகளே மாறி மாறி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன

வேகமாய் தன் வீட்டிற்குள் நுழைந்தவன் முதலில் தேடி சென்றது தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த செங்கனை தான். வீட்டில் அவனைக் கண்டதும் ஆவலாய் அவனிடம் ஓடி வந்த வீட்டுப் பெண்களை கண்டு கொள்ளாதவன், “எங்க அந்த செங்கன்..?’’ என விசாரித்துக் கொண்டே செங்கனை நோக்கி வந்து இருந்தான்

மண்வெட்டியை கையில் வைத்து வேலை செய்துக் கொண்டிருந்த செங்கன், வேகமாய் வரும் பரணியைக் கண்டதும், தலையில் கட்டி இருந்த முண்டாசைக் எடுத்துக் கொண்டே அவன் கோபத்தை ஏற்றுக் கொள்பவன் போல அப்படியே நின்றான்

வேகமாய் வந்த பரணி ஏற்கனவே அடிபட்டு இருந்த கைகளால் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்

அந்த குத்து செங்கனை ஒன்றும் செய்யவில்லை. மாறாக பரணியின் சுண்டுவிரல் எலும்பை பதம் பார்க்க, ஏற்கவே காயம் பட்டு இருந்த கைவேறு தன் பங்கிற்கு வலியை காட்டியது

அம்மா’’ பரணி கையை உதறிக் கொண்டே வலியில் முணங்க…. செல்வாம்பிகை அப்பொழுது தான் மகனின் கரத்தில் வழிந்த குருதியை கண்டார்

ஆத்தாடி…. எம்பிள்ள கையெல்லாம் ரத்தம்…’’ அவர் பெருங்குரல் கொடுக்கவும், மற்றவர்களுக்கும் அவன் கரத்தை கவனித்தனர். செங்கன் அவன் கரம் பற்ற முற்பட பின்னால் நகர்ந்தவன்

ஏய் துரோகி நீ என்னை தொடாதடா..’’ என கத்த, அவன் வார்த்தைகள் வீட்டில் இருந்தவர்களுக்கு புரியவில்லை. சிவாத்மிகா வேகமாய் வந்து அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு

பரணி முதல்ல கைக்கு கட்டு போடுவோம் வாலேவந்ததும் வாராததுமா உப்பு கல்லு கணக்கா காயுதவா..’’ அவனை பிடித்து வலுக்கட்டாயமாய் வீட்டிக்குள் அழைத்து சென்றார்

அதற்குள் மதுஸ்ரீ வீட்டில் இருந்த முதல் உதவி பெட்டியை கொண்டு வந்து வைக்க, செல்வாம்பிகா வெந்நீரை தாயார் செய்து இருந்தார். சிவாத்மிகா பரணியின் கைகளை வெந்நீரில் சுத்தப்படுத்திவிட்டு மருந்து வைத்து கைகளுக்கு கட்டுப் போட்டு முடிக்கும் வரை பரணி அமைதியாய் இருந்தான்

அதற்குள் செல்வாம்பிகை மகனுக்கு சத்து மாவுக் கஞ்சியை தயார் செய்துக் கொண்டு வர, பரணி எதுவும் பேசாமல் அதை வாங்கிக் குடிதான். வீட்டுப் பெண்களின் முகத்தில் இருந்த வேதனை அவர்கள் மனநிலையை சொல்ல, அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைப் போல

இன்னைக்கு ஜாமீன் வாங்கிடலாம்யாரும் வருத்தப்படாதீக…. நான் போய் பரஞ்சோதி மாமாவை பாத்துட்டு வறேன்…’’ அவன் வேகமாய் எழுந்துக் கொள்ள, அதை விட வேகமாய் செங்கன் அவன் முன் வந்து நின்றான்

Advertisement