Advertisement

கூடு – 2

கிரேக்கர்களின் கடவுளாக கருதப்படும் ஜீயஸ், மற்றும் ஹேரா அவர்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் பரப்பரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை உடை அணிந்த உதவியாட்கள், ஆளுக்கொரு கோப்பை சுமந்த படி இங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தனர்

வெளியே எதற்கோ மக்கள் கூட்டமாய் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்க, காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்தனர்

தன் டுகாட்டி வண்டியை அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கவனமாய் நிறுத்திய பரணி, கைகளில் சாவியை சுழற்றியபடியே ஆட்சியாளரின் தனி உதவியாளரை தேடிப் போனான்

ஏதோ ஓர் பணியாளரை அதட்டிக் கொண்டிருந்த சாமிகண்ணு இவனைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக

தம்பி வாங்கவாங்கஐயாவை பாக்க வந்தீங்களாஇதோ ஒரு நொடியில உத்தரவு வாங்கியாந்துடுறேன்நீங்க முதல்ல உக்காருங்க…. ஏலே சொக்கு ஐயர் ஹோட்டல் பில்டர் காபி ஒன்னு வாங்கியாலே….’’ 

அங்கே காவி உடையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் வேலை ஏவவும், அவர் மின்னல் வேகத்தில் மேஜையில் இருந்த பிளாஸ்கை எடுத்துக் கொண்டு காபி வாங்கி வர ஓடினார்

அவனுக்கு அருகில் இருந்த நாற்காலியில் திமிராக அமர்ந்தவன், கால் மேல் கால் போட்டபடி, “நான் கலெக்டர் சாரைப் பாக்க வரலை சாமிகண்ணுநம்ம ஊருக்கு புதுசா யாரோ சப் கலெக்டர் அம்மா வந்து இருக்காங்களாமேஅவங்களைப் பாக்க வந்தேன்…’’ 

அவன் தொனியே கூறிற்று அவன் ஏதோ பிரச்சனை செய்ய வந்து இருக்கிறான் என்பதை. சாமிகண்ணு இருபது வருடங்களாக அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்

அதோடு கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்சியாளரின் தனி உதவியாளராவும் பணியில் இருப்பவர். அவருக்கு அந்த ஊரின் முக்கிய பிரமுகர்கள் முதல், அவர்களின் சொந்த விஷயங்கள், அரசல் புரசல்கள் அத்தனையும் அத்துப்படி

அத்தோடு அவரும் வள்ளியூரை சேர்ந்தவரே. பிடிவாதமாய் தன் முன் அமர்ந்து இருப்பவனை பார்த்தவர், “தம்பிஅம்மாஇப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதோ ஆரம்ப சுகாதார நிலையத்துல நடந்த பிரசவத்துல குழந்தை இறந்து போச்சுன்னு வந்த புகாரை விசாரிக்க நேரா போய் இருக்காங்க…’’ அவர் தயங்கி தயங்கித் தான் பேசினார்

உடனே எழுந்துக் கொண்டவன், “எந்த ஊர் ஹாஸ்பிடல்..’’ என வினவ, அவனுக்கு பதிலை சொல்லியவர்

தம்பிமுன்ன அவங்க யாரா வேணா இருந்து இருக்கலாம். இப்ப அவங்க நம்ம ஊர் சப் கலெக்டர் அம்மா. பொது இடத்துல ஏதும் பிரச்சனை பண்ணிடாதீங்க தம்பி. ஐயாவுக்கு தெரிஞ்சா கோவிக்க போறாரு..’’ 

அவர் பேசப் பேச எழுந்து நின்றவன், அவர் கண்களை நேராய் பார்த்தபடி, “அவ உங்களுக்கு தான் கலெக்டர் அம்மாஎங்களுக்கு எப்பவும் எங்க குடும்பத்தை நாசப்படுத்தின பொம்பளையோட பொண்ணு அவ்ளோதான்தில்லா நம்ம ஊர் மண்ணை மிதிச்சி இருக்கா இல்லஅதுக்கு அவளைப் பாராட்ட வேண்டாம்’’ 

அவன் குரலே சொல்லிற்று, அவன் அவளை எப்படிப் பாராட்ட போகிறான் என்று. அதற்கு மேல் சாமிக் கண்ணுவால் எதுவும் பேச முடியவில்லை. கையில் சாவியை சுழற்றியபடியே தன் துள்ளல் நடையோடு அவன் வெளியேற, சாமிக்கண்ணு தன் கைபேசியை எடுத்தார் நாட்சியை அழைக்க

கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு, நாட்சியை அழைத்து அவரை எச்சரிக்கை செய்வோமா..? வேண்டாமா..? என சற்று நேரம் குழம்பியவர் இறுதியில், இது அவர்கள் குடும்ப பிரச்சனைஅதில் தான் தலையிட தேவையில்லை என முடிவு செய்தவர் காத்திருந்த அலுவலக பணிகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார்

பரணியின் டுகாட்டி நான்கு வழிச் சாலையில் பறந்தது. ‘எல்லார் முன்னாடியும் நறுக்குன்னு நாலு கேள்விக் கேக்கணும் அவளைவேலையாவது மண்ணாவதுன்னு அவ துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஊரை விட்டே ஓடனும்…’ மனதிற்குள் அவளை ஏசிக் கொண்டே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்

பரணியின் தாய் மாமா மத்திய வேளாண்துறை அமைச்சர். அவனின் அத்தையின் கணவர் தமிழகத்தில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனர். அவனின் தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. அவர் பெயரில் திருநெல்வேலி சீமையில் இரண்டு மூன்று அரசு பள்ளிகளே இயங்கிக் கொண்டிருந்தன

தன் 93 வயதிலும் நடை தளராத மனிதர். இத்தனை அடையாளத்திற்கும் மேல் பரணி தனக்கென தனி அடையாளத்தை வைத்திருந்தான். அது அவன் தமிழகத்தின் கால் பந்தாட்ட குழுவின் தலைவன்

அத்தோடு கடைசி முறை நடந்து முடிந்த மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் தமிழகம் கோப்பை வெல்ல முழு முதற் காரணமாய் இருந்தவன்

இந்த ஆண்டு தொடங்க இருக்கும் உலக கால்பந்தாட்ட போட்டிகளில் இந்தியா தகுதி பெறுமா..? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, அவன் ஏற்கனவே இந்திய கால் பந்தாட்ட அணியில் தேர்வாகி இருந்தான்

அத்தோடு இந்தியக் குழுவை வழி நடத்தும் தலைமைப் பொறுப்பும் அவன் வசம் ஒப்படைக்கபடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவன் தலைமை ஏற்பதைப் பொறுக்க முடியாத வட நாட்டுப் பத்திரிக்கைகள் அவன் தாய் மாமா பதவியால் மட்டுமே அவனுக்கு இந்தியக் கால்பந்தாட்டக் குழுவில் இடம் கிடைத்தது என கொளுத்திப் போட பரணியின் கோபம் மீண்டும் அவன் மூளையில் ஏறி அமர்ந்தது

தன்னை உலகுக்கு நிரூபித்தே தீர வேண்டும் என்ற வெறி அவனுள் கிளற, கடந்த ஆறு மாதமாக தன்னை ஓட்டப் பந்தயப் போட்டிகளுக்கு தயார்ப்படுத்தி வருகிறான்

நடக்க இருக்கும் தெற்காசியப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதோடு உலக அளவில் புது சாதனைப் படைக்கவும் முடிவு செய்தவன் அதற்கான பயிற்சிகளில் அதி தீவிரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.  

அந்த மருத்துவமை வாளாக வாசலிலேயே பெரும் கூட்டம் கூடி இருந்தது. ஆங்காங்கே சில காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். சிலர் வாக்கி டாக்கியில் பேசியபடியும், சிலர் கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டும் இருந்தனர்

உள்ளே நுழைந்தவன் கூட்டத்தை தாண்டிச்  சற்று தூரம் நடக்கவும், மெல்லிய ஆனால் உறுதியான பெண் குரல் அவன் செவிகளைத் தீண்டியது.

நீங்க சொல்றது சரியில்லையே ஆச்சி…. பனிக் குடம் உடஞ்சி முழுசா ரெண்டு நாள் கழிச்சி தான் உங்க பேத்தியை இங்கக் கூட்டி வந்து இருக்கீங்கஇங்க வந்த அரை மணி நேரத்துல பிரசவம் நடந்து இருக்கு…. ஏற்கனவே குழந்தை வயித்துக்குள்ள இறந்து தான் இருந்து இருக்கு ஆச்சிஇப்ப இங்க டாக்டர்கிட்ட சண்டை போட்டு என்ன பிரயோஜனம் சொல்லுங்க…’’

யாரோ ஒரு முதியவரின் அழு குரலைத் தொடர்ந்து, “அந்தப் பொண்ணே மைனர்பதினேழு வயசுல கல்யாணம் அவசியமாஅவளுக்கு பனிக் குடம் உடஞ்சதைக் கூட சொல்லத் தெரியலஉங்களை எல்லாம்பிரச்சனை வேண்டாம் கையெழுத்து போட்டு குழந்தையை வாங்கிக்கோங்க….

ஒரு மாசம் கழிச்சி அந்தப் பொண்ணோட வந்து என்னை பாருங்கஅவளை படிக்க வைக்க ஏற்பாடு பண்றேன்அடுத்தக் குழந்தை இன்னும் நாலு வருஷம் கழிச்சி பெத்துக்கலாம்… 

அரசாங்கம் சொன்னா ஏன் சொல்லுது எதுக்கு சொல்லுதுன்னு ஒன்னும் காதுல வாங்குறது கிடையாதுஅப்புறம் ஏதாவது ஒரு பிரச்சனை ஆயிட்டா மட்டும் கவர்மென்ட் சரி இல்ல.. கவர்மென்ட் ஆபிசுல வேலை பாக்குறவங்க சரி இல்லைன்னு கொடி பிடிக்க வேண்டியதுஐயா எழுந்துக்கோங்கடாக்டர் அந்த பொண்ணோட ரிலேடிவ்ஸ் எல்லாரையும் உங்க ரூமுக்கு வர சொல்லுங்க நாம உள்ள போயி பேசலாம்’’ 

சொல்லி முடித்த பெண் குரல், அங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டும். கூட்டம் சற்றே கலைந்து இருந்தது. கூட்டத்தில் அவளைத் தேடியவன் கண்களுக்கு முதலில் சிக்கியது வெளிர் மஞ்சள் நிறத்தில் இளம் சிவப்புநிற ரோஜாப் பூக்களிட்ட காட்டன் புடவை தான்

முகத்தைப் பார்க்க முடியவில்லை. பரணியும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து நகர்ந்தான். அரசு மருத்துவமனையின் தனிப்பட்ட மருத்துவர் அறை வரவும், அங்கே நடு நாயகமாய் இருந்த நாற்காலியில் அவள் அமர்ந்தாள்

அவள் அமரவும் பெண் வீட்டு பந்தங்கள் அவளை சுற்றி நின்றனர். அவள் அருகில் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் நின்றுக் கொண்டிருந்தனர்

கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவளை பார்க்க உள்ளே நுழைந்தவன் சரியாய் அவளுக்கு எதிராய் சென்று நின்றான். குனிந்து கையில் இருந்த கோப்பில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவளும், அப்பொழுது தான் பேச நிமிர்ந்தாள்

சரியாய் மிகச் சரியாய் இருவர் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனபரணி அவள் முகம் பார்த்த அடுத்த நொடி உயர் மின் அழுத்தத்தை உடலில் வாங்கியவன் போல அதிர்ந்து போனான்

பரணியைக் கண்டவளுக்கோ பேச வேண்டிய வார்த்தைகள் அனைத்தும் தொண்டை குழியிலேயே சிக்க, அவனை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமலேயே அவள் உதடுகள் முணு முணுத்தன, “கலிங்கா…’’ என

போர்குணம் கொண்டவனும், பெயரில் ஒரு போர்க் களத்தையே கொண்டவனும் வாழ்வில் முதன் முறையாய் திகைத்து நின்றான், “இந்த முகத்தை பார்த்து என்னால கோபப்பட முடியுமா…?’’ என்ற கேள்வியோடு

கலிங்கத்துப்பரணியை பார்த்துக் கொண்டிருந்தவளும் அதே மன நிலையில் தான் இருந்தாள் இந்த முகத்தை என்னால் பழி வாங்க முடியுமா…? என்று

கூடு தேடும்.  

Advertisement