Advertisement

கூடு – 18

ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டி கி.மு490 ஆம் நூற்றாண்டில் மாரத்தான் போரில் வென்ற செய்தியை மாரத்தான் நகரில் இருந்து, 25 மைல் தொலைவில் உள்ள ஏதென்ஸ் நகருக்கு ஓடி வந்து, சொல்லிவிட்டு வீர மரணமடைந்த கிரேக்க வீரர் பிடிபிடஸ் நினைவாக நடத்தப்படுகிறது. 

நாட்சியாவிற்கு அந்த பரிசை திறக்கவே பயமாய் இருந்தது. பரிசு வந்த மூன்றாம் நொடி பிரேமை அழைத்து இருந்தாள். அதற்குள் உதவியாளரை அழைத்து அந்தப் பரிசை மற்றொரு அறைக்கு மாற்றி இருந்தாள்

பிரேம் தன்னுடன் விஜயனையும் அழைத்து வந்து இருந்தார். விஜயன் முதலில் பாம் டிடக்கடர் போல ஏதோ ஒன்றை வைத்து அந்த பரிசை சோதித்தான்

உள்ளே இருப்பது வெடி பொருள் இல்லை என்பது உறுதியானதும், அவன் பிரேமிற்கு கண் ஜாடை காட்ட, கையுறைகளை அணிந்து கொண்ட பிரேம் மிக கவனமாய் பரிசை சுற்றி இருந்த வண்ண தாள்களை பிரிக்க தொடங்கினார்

பரிசு பிரிக்கப்பட்டது, அந்த அறையில் குப்பென்று கெட்ட வாடை பரவியது. முகத்தை தன் முந்தானையால் மூடிக் கொண்ட நாட்சியா ஆர்வ மிகுதியில் எட்டிப் பார்க்க, அங்கே எப்பொழுதோ இறந்து போய் இருந்த நாய்க் குட்டி ஒன்று அழுகிய நிலையில் இருக்க, சுற்றி பல வெண்ணிற புழுக்கள் அதன் மாமிசத்தை தங்கள் உணவாக்கி கொண்டிருந்தன

பிரேம் தன்னைப் போல பின்னால் நகர, விஜயனின் முகமும் அருவருப்பில் சுருங்கியது. முகத்தை மூடி இருந்த நாட்சியா தன் அறைக்கு ஓடிச் சென்று, காலை உணவை முழுக்க வாந்தி செய்தாள்

சற்று நேரம் கழித்து, பிரேமும், விஜயனும் அவள் அறைக்குள் வந்தனர். அவர்களோடு ஒரு டைப் செய்யப்பட்ட கடிதம். சோர்ந்திருந்த அவள் முகத்தைப் பார்த்தவர்

ஏஞ்சல் நம்மளை டைவர்ட் பண்ண தான் யாரோ இப்படி எல்லாம் விளையாடுறாங்கலெட்டர்ல நீ இன்னும் ஒரு வாரத்துல இந்த ஊரை விட்டு கிளம்பலைனாஅடுத்த வாரம்உன் நிலைமை இப்படி தான் இருக்கும்னு அனுப்பி இருக்காங்க….’’ 

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, இடையிட்ட விஜயன், “சிஸ்டர்.. இதுக்கு மேல பரணிகிட்ட விசயத்தை மறைக்கிறது நல்லதா எனக்கு படல…’’ அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே

நாட்சியா வேண்டாம் என்பதாய் தலை அசைத்து மறுத்தாள். பிரேம் தற்சமயம் எதுவும் பேச வேண்டாம் என்பதைப் போல, விஜயனுக்கு கண் ஜாடைக் காட்டினார்

நாட்சி இன்னைக்கும் நாங்க பண்ணை வீட்டுக்கு போய் புல் போலிஸ் போர்ஸ்சோட சோதனைப் போடுறோம். நீ கொஞ்சம் கேர் புல்லா இரு. உன் பாடிகார்ட்ஸ் இல்லாம இனி வெளிய எங்கயும் போகாத… 

முக்கியமா உன் காரை நீ தனியா ஓட்டிட்டு போகாதமறுபடியும் சொல்றேன் ரொம்ப ஜாக்கிரதையா இரு. நாங்க கிளம்புறோம்.’’ சொன்னவர் விஜயனோடு வெளியேறினார். 

 நாட்சி தன் இருக்கையில் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள். சற்று நேரத்திற்கு எல்லாம் ஆட்சியர் அவள் தனி அறைக்கு அவளைப் பார்க்க வந்தார்

என்னாச்சு நாட்சி சாமிக்கண்ணு ஏதேதோ சொல்லார் என்ன பார்சல் வந்தது உனக்கு. கமிஷ்னர்கிட்ட பேசி என்னன்னு பாக்க சொல்லலாமா?’’ அவர் ஆதரவாய் வினவவும்

வேண்டாம் சார். ஆல்ரெடி போலிஸ் இன்வால்வ் ஆகி இருக்காங்க. கேஸ் மட்டும் பைல் பண்ணல. யார்னு தெரியல சார். எங்களுக்கு கொஞ்சம் பேர் மேல டவுட் இருக்கு. கூடிய சீக்கிரம் உண்மை வெளிய வரும் சார்.’’ 

நாட்சியா சற்றே தெளிவாய் பேசவும், அவளை ஆதுரமாய் பார்த்த ஆட்சியர், “ஓகே நாட்சி எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் தாராளமா என்னைக் கேளுங்க நாம மினிஸ்டர்ஸ் லெவல்ல கூட பேசலாம். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.’’ என்றவர், தன் உதவியாளரை அழைத்து

சாமிக் கண்ணு, இன்னைக்கு நாட்சியா பைல் அண்ட் ப்ரோக்ராம்ஸ் எல்லாம் என்னோட மெர்ஜ் பண்ணிடுங்க. அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். அப்பப்ப என்ன வேணும்னு கேட்டு கொஞ்சம் பாத்துக்கோங்க..’’ 

அவர் உத்தரவிட, “செஞ்சிடலாம் சார்…’’ என சாமிக்கண்ணு மிக பவ்யமாக பதில் அளித்தார். அவளைப் பார்த்து நம்பிக்கையாய் புன்னகைத்து விட்டு அவர் விடை பெற்று செல்ல, நாட்சியா மீண்டும் இருக்கையில் சரிந்தாள்

அவள் பாதுகாவலர், ராஜேஷ் வந்து, “மேம் நான் டோர்கிட்ட தான் இருக்கேன். என்ன வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க…’’ என சொல்லி விடை பெற்று சென்றார்

சரி என்பதாய் தலை அசைத்தவள், அந்த சுழல் நாற்காலியில், சற்றே பின் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். நடக்கும் நிகழ்வுகளுக்கு காரணம் என்ன..? என அவள் மனம் அலசி ஆராய, நினைவடுக்கின் கதவுகளை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தது.

நாட்சியா எட்டாம் வகுப்பிற்கான கோடை விடுமுறைக்கு சென்னையில் இருந்த அவர்கள் விருந்தினர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டாள். நாட்சிக்கு ஏன் எதற்கு என்று புரியாவிட்டாலும், அதை எல்லாம் அதிகம் ஆராயாமல் மற்ற நாட்களை விட, அதிகம் கிடைத்த தந்தையின் அருகாமையில் மகிழ்ந்து போய் இருந்தாள்

ஆனால் அதற்கு நேர்மாறாக கஜபதி எப்போதும் ஆழ்ந்த ஒரு சிந்தனையில் இருந்தார். நாட்சியின் புத்தகம் படிக்கும் பழக்கம் அவள் அறிவை பல வகையில் விசாலப்படுத்தி இருந்தது.

உருவத்திற்கும், பேச்சிற்கும் சம்மந்தம் இல்லை என்பதைப் போல, அந்த வயதிலேயே கம்பரின் ராமாயணம் முதல், மார்க்சின் கம்யூனிசம் வரைப் பேசினாள்

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் கஜபதிக்கு முகம் பெருமையில் பூரித்துப் போகும். அன்றும் அப்படித்தான் தினசரி ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாள். அதில் மாநில அளவில் நடக்கும் கால்பந்துப் போட்டிகளில் ஏதோ இரு கல்லூரிகள் இறுதிச் சுற்றில் மோதிக் கொள்வதாய் அறிவித்து இருந்தனர்

அந்த செய்தியை ஏனோ, தானோவென்று படித்துக் கொண்டிருந்த நாட்சியா, அங்கிருந்த குழுப் புகைப்படத்தில் பரணியின் முகத்தைக் கண்டதும், துள்ளி எழுந்தாள்

மாமாவோட கேம். போயே ஆகணுமே..’’ சற்று நேரம் சிந்தித்தவள், வழக்கம் போல அவள்  துணைக்கு வரவழைக்கப்பட்டிருந்த, செங்கனை துணைக்கு அழைத்துக் கொண்டு

பூஜை அறையில் இருந்த தாயிடம், “மாபிரண்ட் பர்த்டே வருது. கிப்ட் வாங்கணும். நானும் செங்கனும் வெளிய கொஞ்சம் ஷாப்பிங் போய்ட்டு வறோம்….’’ என அறிவித்துவிட்டு அவர் பதில் சொல்லும் முன்பே வாசலை நோக்கி விரைந்து இருந்தாள்

இருவரும் ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு, அந்த கால்பந்தாட்டம்  நடைபெற்றுக் கொண்டிருந்த கல்லூரியை அடைந்தனர். இவர்கள் சென்ற நேரம், இறுதிப் போட்டியில் இரு கல்லூரி அணிகளும், மிகத் தீவிரமாய் பலப் பரீட்சை நடத்திக் கொண்டிருந்தனர்

நாட்சியா சுவாரசியமாய் விளையாட்டை கவனிக்க, அங்கு வந்து சேரும் வரை எங்கே செல்கிறோம் எதற்கு செல்கிறோம் எனப் புரியாமல் இருந்த செங்கன், நாட்சியா பரணியின் விளையாட்டைக் காணவே அங்கு வந்திருப்பதை அறிந்ததும் அவன் மூளையில் மணியடிக்க தொடங்கியது

ஆர்ப்பாட்டமாய் கைத்தட்டி விளையாட்டடை ரசித்துக் கொண்டிருத்த நாட்சியாவைக் கண்டவனுக்கு, சின்னாம்மா இதெல்லாம் எதுக்கு செய்யிறாங்கன்னே தெரியலையேபோன வாட்டியே கபடி விளையாட்டை பாக்க போயிட்டு வந்ததுக்கு அப்புறம், ஐயா இனி நாட்சியாவை எங்கயும் தனியா கூட்டிட்டு போகக் கூடாதுஅதுவும் பரணி இருக்குற இடத்துக்கு கண்டிப்பா கூட்டிட்டு போகக் கூடாதுன்னு சொன்னாங்க…’’ என எண்ணியவனுக்குள் உள்ளுக்குள் உதறல் எடுக்க துவங்கியது.    

மேலும் மனதிற்குள், “போதா குறைக்கு இந்தவாட்டி லீவுக்கு கூட ராணிமாவை சென்னை வீட்லையே தங்க வச்சிட்டாக. ஆனா ராணிமா எந்த தடை இருந்தாலும் தாண்டி பரணி ஐயாவை பாக்க வந்துடுவாங்க போலையே…’’ தனக்குள் பலவாறாக சிந்தித்து முடித்திருந்த செங்கன், இரவு கஜபதி ஐயாவிடம் பேசியே தீர வேண்டும் என ஒருமனதாக முடிவெடுத்துக் கொண்டான்

நாட்சி விளையாட்டை பார்த்து முடித்து, பரணியின் அணி கோப்பையை வென்று குதூகலிப்பதைக் காணும் வரை அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள்

சென்ற முறையைப் போல இம்முறையும் அருகில் சென்று வாழ்த்து தெரிவிக்கவே அவளுக்கும் ஆசை இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்றுத் தடுக்க, பரணியின் கொண்டாட்டத்தை சற்று நேரம் தள்ளி நின்று ரசித்தவள்

நாம போலாம் செங்கா.’’ என செங்கனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள். அன்று மாலை தனிமையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த கஜபதியை நெருங்கிய செங்கன் காலையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்புவித்து விட்டு அவர் முகம் பார்த்தான்

அதில் பெரிதாக பதட்டம் எல்லாம் ஒன்றும் இல்லை. மாறாக ஏதோ ஒரு முடிவை எடுத்துவிட்ட உறுதி மட்டுமே இருந்தது. “அப்படியாராணிமாவுக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும் இல்ல. அதுவும் தெரிஞ்சவங்க விளையாடுறாங்க அப்படிங்கிறதால நேர்ல பாக்க போய் இருப்பாங்க. இனி எப்போ வெளிய கூப்பிட்டாலும் மொதோ எனக்கு போனை போடு. நானே நேர்ல வந்து கூட்டிட்டு போறேன்.’’

அவரின் அந்த மறைமுக உத்தரவிற்கு செங்கன் சரி என்பதாய் தலை அசைத்து வைத்தான். செங்கன் அங்கிருந்து நகர்ந்ததும் கஜபதியின் முகம் யோசனையில் சுருங்கியது

படித்துக் கொண்டிருந்த புத்தகம் ஒன்றை கஜபதியின் அறையில் தவறி வைத்துவிட்டு வந்த நாட்சியா, அதை எடுத்துக் கொண்டு வருவதற்க்காய், இரவு அவர் அறைக்கு செல்ல, இரவின் நிசப்தத்தில் அமைதியாய் இருந்த வீட்டில் கஜபதியின் வருத்தம் தேய்ந்த குரல் நாட்சியாவின் காதுகளை துல்லியமாய் வந்தடைந்தது

நாட்சி இன்னைக்கு பரணியோட மேட்ச் பாக்க போய் இருக்கா அல்லி…’’ என சொன்னதும், அல்லி, “என்னது…’’ என அதிர்வது, கதவுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த நாட்சியாவிற்கு துள்ளியமாக கேட்டது

எனக்கு பரணி மேல இருக்க அதே ஈர்ப்புஇப்போ நாட்சிகும் இருக்குஏன் எதுக்குன்னு எப்படின்னு எல்லாம் சொல்ல தெரியல அல்லி…. நான் பெத்த பொண்ணுங்களை விட அதிகமான பாசத்தை நான் பரணி மேல வச்சி இருக்கேன். அந்த பாசம் எப்பவும் என் கண்ணுல தெரியும்னு சிவா சொல்லுவா…. அதே பாசத்தை நான்.. நான் நம்ம நாட்சியா கண்ணுல பாத்தேன் அல்லிஅன்னைக்கு திருவிழால…. 

இப்போ வரை நாட்சி சின்ன பொண்ணு….இந்த அன்புக்கு அர்த்தம் அவளுக்கு புரியாது. ஆனா அது புரியிற வயசுலஅவ ஆசைப்பட்டதை நிறைவேத்த முடியாத தகப்பனா நான் ஆயிட்டேனே அல்லி….என் மனசுல கூட நம்ம ராணிமாவுக்கு ஏத்த இளவரசனா எப்பவும் பரணி தான் கண்ணு முன்னாடி வந்து நிப்பான்.’’ அவர் குரல் கரகரப்பது கதவுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த நாட்சியின் மனதையும் பிசைந்தது

அல்லி கஜபதியிடம், “நாம உண்மைய நாட்சியாவுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.’’ என கல்லைப் போல இறுகி விட்டிருந்த குரலில் சொன்னார். அதற்கு கஜபதி, “அல்லிஅவ குழந்தை’’  என மறுப்பதும், தொடர்ந்து அல்லி ஏதோ சொல்வதுமாய் இருக்க, நாட்சி சத்தம் போடாமல் தன் அறைக்கு திரும்பினாள்

மனதில் பல விதக் குழப்பங்கள். அதோடே உறங்கியவளுக்கு மறுநாள் விடியல் எதையும் சிந்திக்க முடியாத நிலையை உருவாக்கியது. மறுநாள் நாட்சியா பூப் பெய்தி இருந்தாள்

அல்லி மகளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட, “அம்மாஇப்போ எதுக்கு அழறீங்க? இட்ஸ் எ சிம்பல் ஆப் மை மதர்வுட் அவ்ளோ தான். எங்க கிளாஸ் மிஸ் இதை பத்தி எல்லாம் சொல்லிக் கொடுத்து இருக்காங்க…. இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு போய் ஏன் இவ்ளோ எமோசனல் ஆகுறீங்க..?’’ 

பெற்ற மகளின் கேள்வியில்,அல்லியின் அழுகை தானாக நின்றது என்றால், மகள் பயம் கொள்வாளோ என்று மூத்த இருமகள்களின் நினைவில் நாட்சியை சமாதானப்படுத்த வந்திருந்த கஜபதியின் நெஞ்சம் பெருமையில் பூரித்து போனது

அவருக்கு அந்த நிமிடம் உரைத்தது. தன் மகள் வளர்ந்ததோடு மட்டுமல்லாமல், இனி எத்தகு சூழ்நிலைகளையும் நின்று எதிர் கொள்வாள் என்ற நம்பிக்கையும் உதித்தது

அந்த வருட கோடை விடுமுறை முடிய, நாட்சியா ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாள். அந்த வருடம் அவளை பள்ளி விடுதியில் விடும் முன் கஜபதி மகளை கடற்கரைக்கு அழைத்து சென்றார்

நுரைத்து பொங்கும் அலைகளோடு விளையாடி களைக்கும் வரை மகளை வேடிக்கை பார்த்தவர், அவள் அருகில் வந்து அமர்ந்ததும் அவளுக்கு பிடித்த, மாங்காய் சுண்டலை வாங்கிக் கொடுத்தார்

மகள் அதை ரசித்து உண்பதை கண்டபடியே, “ரணிமாஅப்பா உங்ககிட்ட சில உண்மைகளை சொல்லணும். அந்த உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்பவும் அப்பாவை வெறுத்துட மாட்டீங்க இல்ல….’’ 

அவர் குரலில் கலக்கத்தை உணர்ந்தவள், அவரை நிமிர்ந்து பார்த்து வெள்ளந்தியாய் சிரித்து விட்டு, “அப்பா! நீங்க ராணிமாவோட அப்பா.! உங்களால எப்பவும் தப்பு செய்ய முடியாது..’’ என சொல்லிவிட்டு மீண்டும் சுண்டலை உண்ண தொடங்கினாள்

அந்த நொடி அவருக்கு ஏற்பட்ட உணர்சிகளை வார்த்தையால் வடித்து விட முடியாது. தன்னில் இரண்டறக் கலந்த மனைவிக்கு தன் மேல் இல்லாத நம்பிக்கை, பெற்றவர்களுக்கு இல்லாத நம்பிக்கை, நண்பனான மச்சினனுக்கு இல்லாத நம்பிக்கை, பெற்ற குழந்தை போல போற்றி வளர்ந்த மருமகனுக்கு தன் மேல் இல்லாத நம்பிக்கை சிறிய வண்ணத்து பூச்சி போல இமை கொட்டி பார்க்கும் மகளுக்கு இருப்பதை உணர்ந்தவர்

என்ன தவம் செய்தேனோ..? இவளை நான் பெற…” என்ற எண்ணத்தில் கண் கலங்கி அமர்ந்து விட்டார். கஜபதி பேசாமல் இருப்பதை உணர்ந்தவள், “அப்பா..’’ என அவரை அழைக்க, கஜபதி மகளை தாவி அணைத்துக் கொண்டார்

ரணிமா…. ரணிமா…. நீங்க எனக்கு கிடச்ச பொக்கிஷம்மாபுதையல்மாஎப்பவும் நான் தான் உங்களோட அப்பா….’’ தந்தையின் தவிப்பிற்கு காரணம் புரியவில்லை என்றாலும்

தந்தையின் தோளில் உரிமையாய் தலை சாய்த்துக் கொண்டு, “நான் எப்பவும் உங்க ராணிமா தான் டாடி….’’ என செல்லம் கொஞ்சினாள். கஜபதிக்கு மகளிடம் பேச வந்த விஷயங்கள் மறந்து போயின

அவளை அன்புடன் பார்த்த படி, “ராணிமாநீங்க உங்க பேருக்கு தகுந்த படி ஊரை ஆளனும். அதுக்கு நல்லா படிச்சி கலெக்டர் ஆகணும். அது தான் அப்பாவோட ஆசை. எல்லாரும் கஜபதி பொண்ணு நாட்சியான்னு சொல்லாம வேலுநாட்சியா அப்பா இவர் அப்படின்னு சொல்லணும். எம் பொண்ணு கலெக்டர் அப்படின்னு நெஞ்சை நிமித்திகிட்டு அப்பா திமிரா சுத்தி வரணும். அப்பாவோட ஆசையை நிறைவேத்துவீங்களா ராணிமா…?’’ 

தந்தை அப்படிக் கேட்டதும், அவர் நெற்றியில் செல்லமாக முட்டியவள், “கண்டிப்பா டாடி! எங்க ஸ்கூல்ல ஏற்கனவே இண்டியன் அட்மின்ஸ்ரேடிவ்ஸ் படிக்க விருப்பம் உள்ளவங்களுக்கு எய்த் ஸ்டான்டர்ட்ல இருந்து ஸ்பெஷல் ட்ரைனிங் தராங்க. இந்த வருஷத்துல இருந்து அந்த ஸ்பெஷல் கிளாஸ்ல நானும் ஜாயின் பண்ணிக்கிறேன். ஆர் யூ ஹாப்பி?’’ எனக் கேட்கவும் கஜபதி மலர்ந்து சிரித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

இருவரும் வீட்டிற்கு திரும்புகையில், “டாடிஇன்னும் ஒன் வீக்ல ஸ்கூல் ஜாயின் பண்ணனும். மறுபடி நெக்ஸ்ட் இயர் தான் லீவ். எனக்கு நம்ம வீட்டுக்கு போகணும் போல இருக்கு டாடி.ப்ளீஸ் ப்ளீஸ்போன முறை நான் லீவ்க்கு வந்தப்ப நாம ரெண்டு பெரும் சேந்து நட்டு வச்சோமே அந்த ரோஸ் செடி எல்லாம் பூத்துச்சா பாக்கணும்…. அப்புறம் அலெக்ஸ் பாக்கணும்மாமரத்துல ஊஞ்சல் கட்டி ஆடணும்..’’ 

அவள் தொடர்ந்து என்ன எல்லாம் பேசி இருப்பாளோ, அதற்குள் கஜபதி, “நாளைக்கு ஊருக்கு கிளம்பலாம் ராணிமா. போதும் உங்க லிஸ்ட்..’’ என சொல்லி சிரித்தார். 

தந்தையோடு தான் கழிக்கும் இறுதி இன்பமான நொடிகள் அவை தான் என்பதை உணராமல், தானும் சிரித்தபடி அவரோடு பயணித்துக் கொண்டிருந்தாள் நாட்சியா

கூடு நெய்யும். 

 

Advertisement