Advertisement

கூடு – 17

2016 ஆம் ஆண்டு டி ஜெனிரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி 31 வது ஒலிம்பிக் போட்டியாகும்.

பிரேம், நாட்சியா, செங்கன் மூவரும் இதற்கு முன் நாட்சியா விடுமுறையில் இன்பமாய் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த பண்ணை வீட்டிற்கு வந்து இருந்தனர்

பிரேம் தன் துப்பறியும் மூளையால் அந்த இடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தார். நாட்சியா அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களையும் தடவி தடவி தன் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டிருந்தாள்

செங்கனின் உடல் தான் அங்கிருந்ததே தவிர, நினைவுகள் மொத்தமும், காலையில் சந்தித்துவிட்டு வந்த தேவியின் மீதே நிலைத்திருந்தன

காலையில் செங்கன், தேவி நாட்சியிடம் நடந்துக் கொண்ட முறை சரியில்லை என்றுக் கண்டிக்க, வழமையாய் அவள் கல்லூரிக்கு செல்லலும் ஒற்றையடிப் பாதையில் அவளுக்காய் காத்திருந்தான்

தேவி அவன் எதிர் பார்த்தவாறே தனியாய் நடந்து வரவும், எதிர்பாராத நேரத்தில், அவள் முன்னால் சென்று நின்றவன், “நீங்க செஞ்சது கொஞ்சம் கூட சரி இல்லைங்கஇனி எங்க ராணிமா மேல கை வச்சீங்கபொண்ணுன்னு கூட பொறுத்து போக மாட்டேன்..’’ 

அவன் ஏறக்குறைய மிரட்டல் தொனியில் அவளுக்கு ஆணையிடவும், திடுமென தன் முன்னால் வந்து நின்ற ஆஜானுபாகான ஆணைக் கண்டு மிரண்ட தேவி, அதை வெளியே காட்டாமல்

அவனை முறைத்துப் பார்த்து, “நான் அப்படி தான் பேசுவேன். உன்னால என்ன பண்ண முடியுமோபண்ணிக்கோஆளைப் பாருவந்துட்டான் காலங் காத்தால முறை தப்பிப் பிறந்த கழுதைக்கு எல்லாம் வக்காலத்து வாங்கிகிட்டு…’’ 

அவள் அந்த வார்த்தையை உச்சரித்து முடித்த அடுத்த நொடி, செங்கனின் வலக் கரம், அவளது இடது கன்னத்தில் வேகமாய் இறங்கி இருந்தது. தேவி கன்னத்தை பிடித்துக் கொண்டு செங்கனை அதிர்ந்து போய்ப் பார்த்தாள்

அதுவரை இருந்த தைரியம் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விடை பெற்று செல்ல, அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில், தேவி அங்கிருந்த நிலைக்கல்லில் அப்படியே அமர்ந்தாள்

கண்களில் கண்ணீர் கரகரவென வழியத் தொடங்கியது. அப்படி அமர்ந்தவள் குழந்தையென விசும்ப தொடங்கினாள். “எனக்கு மட்டும் ஏன் யாருமே இல்ல…. அன்னைக்கு மாமாவும் அடிச்சாங்கஇன்னைக்கு நீங்களும் அடிக்கிறீங்க….ஏன்னா அக்கறைக் காட்ட ஆளில்லாத அநாதை தானே நான். அப்பா! எங்க அப்பா இருந்த இப்படி யார்னே தெரியாத ஒரு ஆம்பளை என்னை கை நீட்டி அடிச்சி இருக்க முடியுமா..? பொம்பளையை அடிக்கிறவன் ஆம்பளையே இல்லைன்னு சொல்ற ஆள் அவர்…. 

எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து நான் மெத்தை மேல தூங்கினது இல்லஎங்க அப்பா மேல தான் தூங்கி இருக்கேன். என்னையும், அக்காவையும் இளவரசிங்க மாதிரி தான் வளத்தார்

கேட்டதை வாங்கி கொடுத்து வளத்த அப்பாவாஅவரு….தேவை தெரிஞ்சி வாங்கிக் கொடுத்த அப்பா அவரு…. உலகத்தை சொல்லிக் கொடுத்த அப்பா அவரு

அம்மா பொட்ட பிள்ளைங்க அடக்க ஒடுக்கமா இருங்கடின்னு அடிக்கும் போது எல்லாம்…. அம்மாகிட்டபொண்ணுங்க பராசக்தி சொரூபம்.. அவளால ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் அவங்களை தாழ்த்தி பேசாதேன்னு அம்மாகிட்ட சண்டை போடுவாரு.

பொண்ணுங்க அன்பா இருந்தா போதும், அடங்கி ஒடுங்கி எல்லாம் இருக்க வேண்டாம்னு சொல்வாரு…. இப்படி இருந்த அப்பா யாரோ ஒரு பொம்பளையை கூட்டிட்டு வந்தவர்னு தெரிஞ்சி நான் அவரை கேள்வி கேக்கும் போது எனக்கு எட்டு வயசு

அப்போ கூட அப்பா என்ன சொன்னார் தெரியுமா…? உங்க கூட மட்டும் தான் கடைசி வரை அப்பாவா இருக்கப் போறேன் தேவிமா…. அவங்க இப்போ சின்ன குருவிசிறகு வந்ததும் என்னை விட்டு பறந்து போயிடுவாங்க.

எனக்கு எப்பவும் மகளா என் கூடவே இருக்க போறது நீங்க தான். உங்களை விட்டு அப்பா ஒரு நாளும் பிரியவே மாட்டேன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் நான் அதைப் பத்தி அப்பாகிட்ட பேசவே இல்லை

ஆனா ஒரு நாள் தூங்கி எழும் போது அப்பா இல்ல…. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த அப்பா இல்லஅம்பாரி சுத்தின அப்பா இல்ல…. தொப்பை டாக்டர் ஊசி போடும் போது கட்டி பிடிச்சிக்கிற அப்பா இல்லமழை பெஞ்சா கப்பல் செஞ்சி தந்த அப்பா இல்ல…. காக்கா கதை சொல்லி சோறு ஊட்டின அப்பா இல்ல.

வயசுக்கு வரும் போது, ‘இதுல பயப்பட ஒன்னும் இல்லைன்னுகை பிடிச்சி ஆறுதல் சொன்ன அப்பா இல்ல. தாவணி போட்ட வயசுலலையும் தோள்ல கை போட்டு நண்பனா இருந்த அப்பா இல்ல

யார்கிட்ட சொல்லி அழுவேன் நான். அக்கா உடஞ்சி போயிட்டாஅம்மா நொறுங்கி போயிட்டாங்க. அதுவரைக்கும் சாந்தமா இருந்த நான் உக்கிரமா மாறி திட்டி திட்டி தான் அவங்களையே இந்த உலகத்துக்கு திருப்பினேன்.

ஆனா அப்பாவோட தேவிமா அவரோடையே  தொலைஞ்சி போயிட்டாஅப்பா தொலஞ்சது ஊருக்கே தெரிஞ்சது. எனக்குள்ள நான் தொலைஞ்சி போனது எங்க அம்மாவுக்கு கூட தெரியல….

அப்பாவுக்கு அந்தக் குட்டி குருவி இல்லாம இருந்து இருந்தா அவர் எல்லாருக்கும் நல்லவரா இருந்து இருப்பாரேன்னு சின்ன வயசுல நினச்சி இருக்கேன்

அப்பா செஞ்சது தப்புன்னு இப்போ புரியுது. ஆனா அந்த வயசுல அப்பாவை எல்லாரும் திட்டுறதுக்கு காரணம் இவதான்னு இவ மேல சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பை வளத்து வச்சி இருந்தேன்

அவ மேல எந்த தப்பும் இல்ல தான். அது என் அறிவுக்கு தெரியுது. மனசு அது என்ன செய்யும். இவ தான் எங்க அப்பா தொலையவே காரணம்னு விடாம நம்புதே. அதான் நல்லா படிச்சி பெரிய உத்தியோகத்துல இருக்கா இல்ல….

அப்புறமும் முருங்கை மரம் தேடுற வேதாளம் மாதிரி என் குடும்பத்து மேல ஏன் ஏறி உக்காந்து ஆடுறாஅப்போ எங்க ஆச்சி சொல்றது நிஜம் தானேஎங்க குடும்பத்தை பழி வாங்க தானே வந்து இருக்கா

இப்படிப்பட்டவளை ஆராத்தி எடுத்து கொஞ்சவா முடியும். அவ வேசத்தை யார் வேணா நம்பலாம். நான் நம்ப மாட்டேன். நான் உயிரோட இருக்குற வரை அவளை வீட்டை விட்டு துரத்த என்னாலான எல்லா வேலையும் செய்வேன்.’’ 

உக்காந்து அழுதுக் கொண்டே இருந்தவள், இந்த வார்த்தைகளை சொல்லி முடித்ததும், முகத்தை கடினமாக்கிக் கொண்டு, வேகமாய் எழுந்து அங்கிருந்து நடக்க தொடங்கினாள்

செங்கன் அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது எனப் தெரியாமல் திகைத்துப் போய் நின்றுக் கொண்டிருந்தான். ஏனோ அந்தக் கனம் கஜபதியின் மேல் ஆத்திரம் பொங்கியது அவனுக்கு. தொலைந்தவர் தான் மட்டும் தொலையாமல் எத்தனை பேர் இயல்புகளை சேர்த்து தொலைத்திருக்கிறார் என.  

ஏஞ்சல்…’’ பிரேமின் உற்சாக குரலில், அங்கிருந்த மரக் குதிரை ஒன்றை தடவியபடி பால்ய நினைவுகளில் மூழ்கி இருந்த நாட்சியாவை அவர் இருந்த அறையை நோக்கி ஓட வைத்தது

என்னாச்சு பிரேம் சார்…’’ நாட்சியா அவர் முன் பரபரப்போடு நிற்கவும், பழுப்பு நிற டைரி ஒன்றில் இருந்து, ஓரங்கள் இற்று போன இன்லேன்ட் லெட்டர் ஒன்றை எடுத்து அவளிடம் காண்பித்தார்

உங்க அம்மாவுக்கு யாரோ லெட்டர் போட்டு இருக்காங்க…. சண்முகநாதன்னுஉனக்கு அப்படி யாரையாவது தெரியுமா..?’’ அவர் அப்படிக் கேட்கவும்

எனக்கு அப்படி யாரையுமே தெரியாதே சார்….’’ என்றவள், மீண்டும் வாய்விட்டு, “சண்முகநாதன்….’’ என சொல்லிப் பார்த்துவிட்டு, “ஆனா எங்கையோ கேள்விப்பட்ட பெயரா இருக்கே சார்…’’ என்று தலையில் ஆள்காட்டி விரலால் தட்டியபடி சிந்திக்க தொடங்கினாள்.

எழுத்து எல்லாம் மறைஞ்சி போச்சி நாட்சியாடிபார்ட்மென்ட்க்கு அனுப்பி தான் முழு தகவல் வாங்கணும்மொதோ பெரிய கவர் இருந்தா கொண்டுவா லெட்டரை உடையாம வைக்கணும்…’’ 

அவர் அப்படி சொன்னதும் அவர் சொல்படியே ஓடிச் சென்று ஒரு பெரிய நெகிழினி தாளைக் கொண்டு வந்துக் கொடுத்தாள்

அதில் பிரேம் கடிதத்தை பத்திரப்படுத்தியதும், அவரை விழிவிரித்துப் பார்த்தவள், “சார் நீங்க பெரிய துப்பறியும் சிங்கம் தான் போங்க. நானும் செங்கனும் இந்த வீட்டை நூறு முறைக்கும் மேல அலசி ஆராஞ்சி இருப்போம். எங்களுக்கு ஒரு பிட்டு காகிதம் கூட கிடைக்கல. ஆனா உங்களுக்கு ஒரு லெட்டரே கிடச்சி இருக்கே.எனக்கு என்னவோ இப்போ முழு நம்பிக்கை வந்து இருக்கு சார். இனி  சீக்கிரம் அப்பா அம்மாவை கண்டு பிடிச்சிடுவோம்னு.’’ அவள் நம்பிக்கையோடு பேச லேசாய் அவள் முதுகில் தட்டியவர்

கமான் ஏஞ்சல்கிடச்சி இருக்குறது ஒரு லெட்டர் தான். சோ ரொம்ப எல்லாம் எக்சைட் ஆகாதஅப்புறம் நீ ஏமாந்து போகும் போது உன் மூஞ்சி லாலிபாப்பை பாதியில பிடுங்கின குழந்தை மாதிரி ஆயிடும்….எனக்கு ரொம்ப பசிக்குதுசோ லெட் அஸ் மூவ் டூ ஹோம்…..’’ பேசிக் கொண்டே அவர் முன்னால் நடந்தார்

சார்சுத்தி வளச்சி என்னை பேபின்னு சொல்லிடீங்கஅதுக்காக எல்லாம் நான் காரை ஸ்லோவா ஓட்ட போறதில்லைவாங்க போகலாம்.’’ உள்ளே உள்ளம் எதிர்பார்ப்பில் பூரித்தாலும் அதை அவரிடம் காட்டாமல், இயல்பாய் இருப்பதைப் போல அவருடன் வெளியே நடந்தாள்

அவர்கள் கிளம்பவும் செங்கனும் கதவை அடைத்துவிட்டு வெளியே நடந்தான். சீக்கிரம் கஜபதி இருக்கும் இடம் தெரிந்தால் பரவாயில்லை என்று அவனுக்கு தோன்ற தொடங்கி இருந்தது

மூவரும் வீட்டை அடைந்து அவரவர் அறையில் முடங்க, நள்ளிரவு தண்ணீர் குடிக்க எழுந்த நாட்சியா வீல் என அந்த தெருவே அதிரும்படி அலறினாள்

அனைவரும் அவள் அறையை நோக்கி ஓட, அதற்குள் அறைக் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்து இருந்தவள், எதிரே இருந்த சிவாத்மிகாவை ஆறுதல் தேடும் குழந்தையாய் அணைத்துக் கொண்டாள்

அவரும் அவள் முதுகை வருடியபடியே, “என்னாச்சு நாட்சி…’’ என ஆறுதலாய் விசாரிக்க, வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரும் அவள் அறைக்குள் நுழைந்தனர்

அங்கே அவள் ஆசையுடன் வளர்ந்து வந்த அலெக்சாண்டர் ரத்தம் வடிய வடிய தலைகீழாய் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன், செங்கன், “ஐயோ..’’ என அதை தொடப் போக அவனை தடுத்த பிரேம்

அதிர்ச்சியோடு நின்றுக் கொண்டிருந்த, தரணியையும், ராசுமதுரவனையும் அறையை விட்டு வெளியேற சொன்னார். தரணி தலைகீழாய் தொங்கிக் கொண்டிருந்த நாயை பார்த்துக் கொண்டே வெளியேறியவன்

சார்செவுத்துல ஏதோ ரத்தத்துல எழுதி இருக்காங்க…’’ என சொல்ல, பிரேம் தரணியை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் நின்று கோணல் மாணலாய் இருந்த எழுத்துக்களை ஒன்றுக் கூட்டி பொறுமையாய் படிக்க தொடங்கினார்

தொலைத்ததை தேடாதே…. கிடைக்காதுதொடர்ந்து தேடினால் நீயும் தொலைந்து போவாய்…’’ 

முதன் முதலாய் சிக்கலின் நுனி வேறு எங்கோ இருப்பதை உணர்ந்த பிரேம், முகத்தில் படிந்த வியர்வையை துடைத்துக் கொண்டே

எல்லாரும் வெளிய இருங்கமுதல்ல போலிஸ்ல சொல்லணும்.. இந்த ரூம்ல இருக்குற எதையும் யாரும் தொடாதீங்க….’’ சொல்லிவிட்டு அவரும் வெளியே வர, பெண்களின் அணைப்பில் இருந்த நாட்சியா சற்றே தெளிந்தவளாய்

சார்எங்க ஹஸ்பன்ட் பிரண்ட் அசிஸ்டன்ட் கமிஷ்னரா இருக்கார்அவரை வர சொல்லுவோம்.. இப்போதைக்கு வெளிய எந்த நியூசும் பரவ வேண்டாம். நீங்க சொன்ன மாதிரி எங்க அப்பாவை பத்தி இங்க இருக்க யாருக்கோ தெரிஞ்சி இருக்கு…’’ 

நாட்சியா சிந்தனையில் சுருங்கிய நேற்றியோடே பேச பிரேம் தன் விசாரணையை முதலில் அவளிடம் இருந்தே தொடங்கினார். “தூங்கும் போது ரூம் தாள் போடுற பழக்கம் இல்லையா..?’’ என.

இல்லைஎன மண்டையை உருட்டியவள், “வாசல்ல எப்பவும் அலெக்ஸ் இருப்பான்.” இந்த வார்த்தைகளை சொல்லும் போதே அவள் குரல் அழுகையில் கரகரத்தது

நேத்து நைட் நல்ல தூக்கமா ரூம்ல நடந்த உருட்டல் சத்தம் எதுவும் கேக்கலையா…?’’ அவர் அப்படிக் கேட்டதும், தயங்கிக் கொண்டே

காதுல எட் செட் போட்டு இளையராஜா சாரோட மெலோடி சாங் கேட்டுட்டு இருந்தேன்.எப்ப தூங்கினேன்னு தெரியாம அசந்து அப்படியே தூங்கிட்டேன். எப்பவும் நைட்ல அவர் மெலோடிஸ் கேட்டுக்கிட்டே தான் தூங்குவேன். சில சமயம் எட் செட் கழட்டி வைப்பேன். பல சமயம் அப்படியே தூங்கி போயிடுவேன்.’’

நாட்சியா அப்படி சொல்லியதும், “..’’ என்று அதைக் கேட்டுக் கொண்டவர், அடுத்து செல்வாம்பிகையை நோக்கி திரும்பினார். “நேத்து சாயங்காலத்துக்கு அப்புறம் வீட்டுக்கு யார் யார் எல்லாம் வந்தாங்க…” அவர் வினவ

நைட் ஒரு ஒம்பது மணி இருக்கும் எங்க அண்ணன் வந்து கொஞ்சம் கோவமா பேசிட்டு போனாரு. நாச்சிய அண்ணன் நிதம் வம்புக்கு இழுக்குறது எங்க வீட்டுக்காரருக்கு பிடிக்கல. அவர் என்ன சொன்னாரோ எனக்கு தெரியாது

ஆனா என்கிட்ட வந்து உன் முகத்துக்காக மச்சானை பொறுத்து போறேன் தங்கச்சி அப்படின்னு கொஞ்சம் சத்தம் போட்டுட்டு போனார். இது அப்பப்ப நடக்குற விஷயம் தானேன்னு நானும் கண்டுகல.’’

செல்வாம்பிகா சற்றே நடுக்கத்தோடு பேசி முடிக்க, வீட்டில் இருந்த மற்றவர்களின் மேல் ஒரு பார்வையை செலுத்தியவர், “வேற யாரும் வீட்டுக்கு வரலை இல்லையா..?’’ எனப் பொதுப்படையாக ஒரு கேள்வியாய் அனைவரிடமும் கேட்டு வைத்தார்

மதுஸ்ரீ ஏதோ நினைவிற்கு வந்தவள் போல, நைட் ஒன்பது மணிக்கு மேல, என் சிஸ்டர் தேவி வந்து இருந்தா. நாளைக்கு ஏதோ பிரண்ட் கல்யாணத்துக்கு போறதுக்கு அவ நகைங்களை அம்மாகிட்ட இருந்து வாங்கிட்டு போக வந்து இருந்தா.’’

அவள் அப்படி சொல்லி முடித்ததும், செங்கன் ரௌத்திரம் பொங்கிய முகத்தோடு, “இது ஆடி மாசம். இதுல யார் கல்யாணம் பண்ணுவா நம்ம ஊர்ல. இந்தப் பொண்ணு எல்லாம் சொல்லுல அடங்குற ஆளா இல்ல..’’ 

அவன் தன் பாட்டிற்கு மனதிற்குள் பொறுமி தள்ளவும், அவனிடமும் பிரேம் சற்று நேரம் தகவல்களை சேகரித்துக் கொண்டார். விஜயக்குமார் தன் படையோடு உள்ளே நுழையும் போது வீடு விழித்து ஒரு மணி நேரம் கடந்து இருந்தது

கையுறை மாட்டிய காவலர்கள் அறையில் இருந்த அலெக்சாண்டரை இறக்கியதொடு, பவுடர் தெளித்து கைரேகை சேகரிப்பிலும் இறங்க, விஜியை கண்டிப்போடு பார்த்த நாட்சியா

இங்க நடக்குற எந்த விசயமும் உங்க நண்பர் காதுக்கு போகக் கூடாது..’’ அவள் கண்டிப்போடு சொல்ல, விஜயனும் மண்டையை உருட்டிக் கேட்டுக் கொண்டான்

பரணியிடம் சொல்லாமல் விடுவதால், வாழ்வு மேலும் மேலும் சிக்கலாகப் போகிறது என்பதை உணராத நாட்சியா விடியற்காலையில் அலெக்சான்டருக்கு தங்கள் தோட்ட வீட்டில் நல்லடக்கம் செய்து விட்டு மனதை அழுத்திய பாரத்தோடே பணிக்கு சென்றாள்

அன்று சரியாய் பதினோரு மணிக்கு, அவளுக்கு வண்ண காகித தாள் சுற்றப்பட்ட பரிசு ஒன்று குரியரில் வந்தது. பட படக்கும் இதயத்தோடு அனுப்புனர் முகவரி அவள் தேட

ஏதேதோ பெயருக்கு நடுவில், மூன்றே எழுத்துக்கள் சிவப்பு மையால் அடிக் கோடிடப்பட்டு இருந்தன. எதிரிஎன. கொரியரை கையில் வாங்கியவள் படித்து உணர்ந்த அனுப்புனர் முகவரியில் அப்படியே உறைந்து நின்றாள்

கூடு நெய்யும்.  

Advertisement