Advertisement

இம்முறை பரணி அவளை விடுவிக்கையில், நாட்சியின் முகம் அந்தி வானமாய் சிவந்திருக்க, அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டவள், “முரட்டு மாமா…. மீசை குத்திடுச்சி…. அப்படி என்ன வேகம்முதல்ல மீசையை ட்ரிம் பண்ணுங்க…’’ என சிணுங்கினாள்

வெடி சிரிப்பு சிரித்த பரணியோ, “நல்லவேளை  மயிலு…. முழுசா எடுக்க சொல்லாம போனியேகொஞ்சம் சத்தமா பேசு மயிலு மாமாக்கு காது கேக்கல….’’ என வேண்டும் என்றே அவளை வம்பிற்கு இழுத்தான்

மா…. மா…’’ என மீண்டும் சிணுங்கியவள், அவன் மார்பில் செல்லமாய் குத்த, அவள் விரல்களை பிடித்துக் கொண்டவன், ‘ வலிக்க போகுது மயிலு…’’ என்று ஒவ்வொரு விரலாய் முத்தம் கொடுக்க தொடங்கினான்

அவர்கள் அவர்கள் பிரத்யேக உலகில் மூழ்கி இருக்க, அறைக் கதவு வேகமாய் திறக்கப் பட்டது. நாட்சி அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை பறித்துக் கொண்டாள்

யார்டா அது பூஜை வேளை நரி….’’ என்று பரணி வாயிலைப் பார்க்க, அங்கே செல்வாம்பிகா இவன் வழக்கமாய் பதினோரு மணிக்கு அருந்தும் சத்து மாவுக் கஞ்சியோடு நின்றுக் கொண்டிருந்தார். (கரடியே எல்லா பூஜையும் டிஸ்ட்ரப் பண்ணனுமா என்னஎல்லா கரடியும் பிசி…. சோ நான் நரிய கூப்பிட்டு மேனேஜ் பண்ணி இருக்கேன் மக்காஸ்ஹி ஹி)

தாயைக் கண்டதும், முகத்தில் அசட்டு சிரிப்பை தேக்கியபடி, “வாம்மா….’’ என்றவன் எழுந்து சென்று அவர் கையில் இருந்த சத்துமாவுக் கஞ்சியை வாங்கவும், மருமகளை அங்கே அந்த நேரத்தில் செல்வாம்பிகா எதிர்பார்க்கவில்லை.

நீங்க பேசுங்கநான் பிறகு வாறேன்தம்பி உனக்கு ப்ளைட் ஏதோ மதியம் ஒரு மணிக்கு இருக்காமே அப்பாவும், அண்ணனும் உன்னை தயாரா இருக்க சொன்னாங்க. ஏதோ நம்ம ஊர் லோக்கல் பத்திரிக்கைகாரங்களோட உன் மாமா பரஞ்ஜோதியும் உன்ன வழி அனுப்ப விமான நிலையத்துக்கு வாராங்களாம்…’’சொன்னவர் திரும்பி நடக்க, நாட்சியா, “அத்தை’’ என அழைத்து அவரை நிறுத்தினாள்

மாமா, அத்தான் மத்த எல்லாரையும் நேரா திருநெல்வேலி ஏர்போர்ட்டுக்கே வர சொல்லிடுங்க அத்தை. நானும் பரணி மாமாவும் என்னோட கார்ல இங்க இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்புறோம்..’’ என சற்று தயக்கத்தோடே மொழிந்தாள்

அதற்குசெல்வாம்பிகா மலர்ந்த முகத்தோடு, “அதுகென்ன தாயி சொல்லிட்டா போச்சு.’’ என சொல்லி புன்னகைத்து செல்ல, அவர் அந்தப் பக்கம் நகர்ந்தாரோ இல்லையோ, பரணி பாய்ந்து போய்க் கதவை அடைத்தான்

முன்னால் நடந்துக் கொண்டிருந்த செல்வாம்பிகா, கதவடைக்கும் ஒலி கேட்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். கதவைப் பூட்டிய பரணி வேகமாய் நாட்சியாவை படுக்கையில் அமர்த்தி, அவள் மடியில் தன் தலையை சாய்த்துக் கொண்டான்

அவள் வலக்கரத்தை தன் கரத்தில் எடுத்துக் கொண்டவன், ஒவ்வொரு விரலாய் மீண்டும் முத்தமிட தொடங்கினான். பரணியின் கேசத்தில் தன் மற்றொரு கரத்தை நுழைத்த நாட்சியா மெதுவாய் அவன் கேசம் வருட தொடங்க, பரணி அந்த நொடிகளை உணர்ந்து அனுபவித்தான்

மாமாடைம் ஆச்சு கிளம்பலாமா?’’ நாட்சியா மெதுவாய் கேட்க, பரணியோ அவள் விரல்களை வருடிய படியே, “ போய் தான் ஆகணுமா…?’’ என சலிப்பாய் கேட்டான்

அவனை பார்த்து அழகாய் முறுவலித்தவள், “ மாமா உங்க டீம் ரொம்ப பாவம்இப்படி ஒரு சோம்பேறி அவங்களுக்கு கேப்டனா கிடச்சி இருக்க வேண்டாம்…’’ என அவனைக் கிண்டல் செய்தாள்

ஏய் என் டீம் பாவமாஉன்ன.’’ என அவள் காதுகளை வலிக்காமல் திருகியவன்,  “நாங்க கிரவுண்ட்ல கில்லி தெரியும் இல்ல…’’ என தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்

அதெல்லாம் எங்களுக்கு தெரியும். எல்லாருக்கும் தெரியனும்னா நாம இப்ப கிளம்பி போய் ப்ளைட்டை பிடிச்சா தான் முடியும். சீக்கிரம் எந்திரிங்க.’’ என அவனை எழுப்பி விட, பரணி மனமே இல்லாமல் அவள் மடியில் இருந்து எழுந்துக் கொண்டான்

நாட்சி அவன் பைகளைப் தூக்க முயல, வேண்டாம் என்றவன் அவனே தன் தோள் பையை தூக்கிக் கொண்டான். “மயிலுஉன்னோட ஆல்பா வண்டியிலையா போகப் போறோம்..’’ என ஆசையாய் கேட்டான்

ஆமா மாமா அதுல தான் போகப் போறோம்…. நீங்க தான் ஓட்டப் போறீங்க..’’ என சொல்ல, பள்ளியில் சுற்றுலா அறிவித்தால் குதூகலிக்கும் சிறுவனைப் போல ஓடிப் போய் வண்டியின் அருகில் நின்றான்

நாட்சி அவனிடம் சாவியை தூக்கிப் போட அதை அழகாக கேட்ச் செய்தவன், வண்டியில் அமர்ந்து அதை இயக்க, நாட்சியா முன் புறம் அவன் அருகில் சென்று அமர்ந்தாள்

வண்டி ஆரம்பத்திலேயே வேகம் பிடிக்க, அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள், அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு, “உங்க சின்ன தாத்தா வீட்டுக்கு போய்ட்டு போலாம் மாமா. தாத்தா பாட்டிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கணுமில்ல..’’ என சொல்ல பரணியோ ஒரு கையால் வண்டியை ஓட்டியபடி, மறுகையால் அவள் இடையை வளைத்தவன், “சரி மயிலு..’’ என சந்தோஷக் குரலில் தன் சம்மதத்தை அறிவித்தான்

அவன் தன் இளைய தாத்தா வீட்டிற்குள் நுழைய, நாட்சி காரிலேயே அவனுக்காக காத்திருப்பதாக சொல்லிவிட்டாள். இருக்கும் உற்சாக மனநிலையை கெடுத்துக் கொள்ளாத விருப்பம் இல்லாத பரணி தான் மட்டும் தனியே சென்று பெரியவர்கள் ஆசி பெற்று திரும்பினான்

இருவரும் மீண்டும் விமானநிலையத்தை நோக்கிய தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். இருவரும் மலர்ந்த முகத்தோடு விமான நிலையத்திற்குள் நுழைய, ஒரு கூட்டமே பரணியை வழியனுப்ப காத்திருந்தது

அனைவரிடமும் பூங்கொத்தைப் பெற்றுக் கொண்டு, அவன் விடைபெறும் தருணம், அவன் அருகில் வந்த மதுஸ்ரீ, “என்னக் கொழுந்தனாரே என் தங்கச்சி செமத்தியா கவனிச்சி இருக்கா போல. மூஞ்சில சூரியனே எரியுது.’’ என அவனை நக்கல் அடிக்க, பரணியோ, “போங்க மயினி..’’ என அழகாக வெட்கப்பட்டான்

அவன் வெட்கத்தை பார்த்து அதிசயித்த மதுஸ்ரீ, “அடப்பாவிகளா அப்ப நான் சொன்னது உண்மையா. நடக்கட்டும் நடக்கட்டும்.’’ என அவனை வாழ்த்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்

நாட்சியா அங்கே இருந்த காரணத்தால், வாழ்த்த வந்த அனைவரும் அங்கிருந்து கிளம்ப, நாட்சியா அருகில் வந்து பரணியின் கரம் கோர்த்துக் கொண்டாள்

இருவரும் அங்கிருந்த பயணிகள் இருக்கையில் அமர, நாட்சியா பரணியின் தோள் சாய்ந்துக் கொண்டாள். அவள் முன் உச்சியை தன் தாடையில் தாங்கிக் கொண்டு அவள் கரத்தோடு தன் கரம் கோர்த்துக் கொண்ட பரணி சற்றே கர கரத்தக் குரலில்

இனி உன்ன பிரிஞ்சி இருக்க முடியும்னு தோணலை மயிலு…’’ என்று சொல்ல, நாட்சி, “எனக்கும் தான்’’ என்று உணர்த்தும் விதமாய் தன் கரத்தில் இருந்த அவன் கரத்தில் சற்றே அழுத்தத்தை கூட்டினாள்.

வார்த்தைகளற்ற மௌனம் அந்த நிமிடங்களை மேலும் ரம்யமாக்க, இருவரும் அந்த நிமிடங்களை அனுபவித்தபடி அமர்ந்து இருந்தனர்

கடைசியாய் பயணிகள் உள் நுழைய வேண்டிய அறிவிப்பு வர, பரணி மௌனமாய் எழுந்து நின்றான். அவனோடு தானும் எழுந்து நின்ற நாட்சியா, அவன் கரத்தை தன் கரம் கொண்டு சிறைபடுத்தினாள்

மாமா. நீ கண்டிப்பா ஜெயிச்சிட்டு தான் திரும்பி வரணும் மாமா. நீ என்னைத் தவிர யார்கிட்டையும் தோக்கக் கூடாது. உன் வாழ் நாள் லட்சியத்தோட முதல் அடியை எடுத்து வைக்க போற. உன்ன தொடந்து வரவங்க யாரும் அழிச்சிட்டு போற மாதிரி அது லேசான அடியா அது இருக்க கூடாது.அழிக்க நினைச்சாலும், அழிக்க முடியாத கல்வெட்டா இருக்கனும் உன்னோட ஒவ்வொரு அடியும்…. போமாமா…. போய் ஜெயிச்சிட்டு வா. உன்னோட நினைப்புல இந்த நிமிசத்துல இருந்து யாரும், எதுவும் இருக்கக் கூடாதுஅது நானா இருந்தாலும் சரி…. உன் சிந்தனை முழுக்க புட் பாலா தான் இருக்கனும்…. சப் கலெக்டர் புருசனா போற நீ…. பெரிய புட் பால் சாம்பியன் வைப் இவங்கன்ற பெருமையை எனக்கு வாங்கி தர மாதிரி தான் திரும்பி வரணும்….’’ என்று உருக்கமாய் பேச, பரணியும் அவள் வார்த்தைகளில் உருகித்தான் போனான்

கண்டிப்பா மயிலு..’’ என்றவன், அவளை அருகில் இழுத்து நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து அவளிடமிருந்து விடைப் பெற்றுக் கிளம்பினான்

விமானம் கிளம்பி, புள்ளியாய் மறையும் வரை நாட்சி அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள். விடை பெற்றவனும், விடை கொடுத்தவளும், அப்போது அறியவில்லை, அவர்கள் ஆசைப்பட்ட வெற்றிக்கு பிறகு கொதிக்கும் மனநிலையோடும், ஒருவரை ஒருவர் பார்வையில் பஸ்பமாக்கும் கோபத்தோடும் மோதிக் கொள்ளப் போவதை

 கூடு நெய்யும். 

Advertisement