Advertisement

கூடு – 15

ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி மேரி லீலா ராவ். ( 1952 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் பங்கேற்றார்.)

பரணி உள்நாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தான். தன்னுடைய அறையில், பயணப் பொதியை தாயர் செய்துக் கொண்டிருந்தவனின் மனம் முழுக்க பாரமாய் கனத்துக் கொண்டிருந்தது.

வேலுநாட்சியாவை, என்றைக்கு அறைக்கு சுமந்து சென்றானோ, அன்றில் இருந்து நாட்சியாவின் கோபம் இரட்டிப்பாகி அவனோடு அவன் குடும்பத்தையும் சேர்த்து வதைத்துக் கொண்டிருந்தது

அன்று அவன் அவளை அறையின் படுக்கையில் கிடத்த முற்பட, ஏதோ கனவுலகிலிருந்து விடுபட்டவள் போலஅவனிடமிருந்து துள்ளி இறங்கினாள்.  

உங்களை நான் என்னோட ரூம்ல இறக்கிவிட சொன்னதா தான் நியாபகம் மிஸ்டர் கலிங்கத்துப்பரணி என்னோட பெட்ல இல்ல. யூ கேன் கோ நவ்.’’ என முகத்தில் அறைந்ததைப் போல பேச அவளின் திடீர் மாற்றத்திற்கு காரணம் புரியாமல் பரணி தான் திகைத்துப் போய் நின்றிருந்தான்

அதற்கு மேல் நாட்சியா பரணி என்ற ஒருவன் அங்கிருப்பதையே கண்டுக் கொள்ளாமல், அலமாரியை திறந்து குளியலறை செல்ல மாற்றுடைகளை கையில் எடுத்த படி, அவன் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை

அது என்ன பொண்ணுங்க கிட்ட கை நீட்ற பழக்கம், ஐ ஹேட் இட். இனி ஒரு முறை யாரையாவது என் கண் முன்னாடி அடிச்சீங்க பெண்கள் வன் கொடுமை சட்டத்துல நானே உங்களை அரஸ் பண்ணி உள்ள தள்ள வேண்டி வரும் பீ கேர்புல்…’’ என்று எச்சரிக்க வேறு செய்தாள்

செங்கா..’’ என குரல் கொடுக்க, மறு நொடி செங்கன்., “சின்னம்மா..’’ என ஓடி வந்து நின்றான். “இனி அலெக்சான்டரை நான் வாக்கிங் கூடிட்டு போறேன்..’’ என குரலில் இறுக்கத்தோடு சொல்ல, செங்கனும், “அப்படியே ஆகட்டும் சின்னம்மா…’’ என தலையாட்டி வைத்தான்

அதற்கு மேல் பரணிக்கு அங்கு நிற்கவே கடுப்பாக இருக்க, அங்கிருந்து வேகமாய் தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான்

அதோடு அன்று அனைவரும் காலை உணவை உண்ண அமர, தன் தட்டில் வைத்த உணவை அப்படியே நகர்த்தியவள்,செங்கனை அழைத்து, சங்கரி தன் குடி இருப்பில் சமைத்து வைத்திருப்பதை பாக்கிங் செய்து எடுத்து வர சொன்னாள்

கூடுதலாய், “இவங்க வீட்ல சாப்பிடுறதுக்கு ரோட்ல பிச்சை எடுத்து சாப்பிடலாம்செங்கா..’’ என்ற நக்கல் வேறு. “பசி கொடுமைக்கு கூட சாப்பிட முடியாது…. ஒரேடியா போய் சேரட்டும் விஷம் வைக்க கூட தயங்காத மனுசங்க…’’ எனக் குத்திப் பேச, அன்றைய காலை உணவு யார் தொண்டையிலும் இறங்கவில்லை

செல்வாம்பிகாவோ, “சோத்துல விஷம் வைக்கிற அளவுக்கு ஈனப் பிறவிக இங்க யாரும் இல்ல தாயி…’’ எனக் கண்களில் கண்ணீரோடு பேச பரணிக்கு வாழ்கையே வெறுத்து விட்டது

நாட்சியை அதட்ட எழுந்தவனை, மதுரவன் வேண்டாம் என்பதைப் போலப் பார்க்க, எனக்கு டிபனும் வேண்டாம்ஒரு மண்ணும் வேண்டாம்..’’ என அவன் எழுந்து செல்ல, அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் கலைந்து சென்றனர்

நாட்சியா தோளைக் குலுக்கி அலட்சிய பாவத்தை காட்டியவள், செங்கன் அவளுக்கான காலை உணவோடு வர, அதை ஒரு கட்டு கட்டினாள். அதற்கு பின் ராஜேஷோடு அவள் வாகனமும் வர நாட்சியா தன் அன்றாட பணியை கவனிக்க சென்றாள். அதற்குப் பின் அவளுக்கு யாரைப் பற்றி சிந்திக்கவும் நேரம் கிடைக்கவில்லை

அன்றைக்கு இரவு தன் உணவை உண்ணும் போது தான் நாட்சியா வீட்டில் எதுவும் சமைக்கப்படமால் இருப்பதை கவனித்தாள்

அப்பொழுதும் அதை அலட்சியபடுத்திவிட்டு அவள் தன் அறைக்குள் நுழைய முயல, பரணி அவள் முன் வந்து நின்றான்.

அவள் கண்களையே உற்றுப் பார்த்தவன், “நாட்சி உன்ன அப்பா எவ்ளோ நாள் பட்னி போட்டு கொடுமைப்படுத்தினார்னு எங்களுக்கு தெரியாது. தெரிஞ்சோ தெரியாமலோ அவர் செஞ்ச பாவத்துல அவர் பசங்களான எங்களுக்கும் பங்கு இருக்கு. அதனால அன்னைக்கு நீ அனுபவிச்ச அதே வேதனையை நாங்களும் அனுபவிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். வீட்ல இருக்க யாரும் காலைல இருந்து தண்ணிக் கூட குடிக்கல! அண்ணிய தடுத்து பாத்தோம் ஆனா அவங்க கேக்கல.’’ என்றவன் நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு தொடர்ந்து பேசினான்

எம் புருசனுக்கு வர சொத்துல மட்டும் இல்ல கஷ்டத்துலையும் எனக்கு பங்கு இருக்கு. அதனால நானும் அந்த தணடனைய அனுபவிக்கிறேன்னு அவங்களும் சாப்பிடாம இருக்காங்க. உனக்கே நம்பிக்கையோட எப்ப நம்ம வீட்ல உக்காந்து  சாப்பிட மனசு வருதோ….’’ என்றவன் அவள் விழிகளின் அதிர்ச்சியை கிரகித்தான்

தொடர்ந்து, “அப்ப தான் நாங்களும் சாப்பிடுவோம். அம்மாக்கு விரதம் இருந்து பழக்கம். மீதி யாருக்கும் சாப்பிடாம இருந்து பழக்கமே இல்ல நாட்சி. ஒரு வேளை சாப்பிடாம இருந்தாலே குழந்தை வளர்ச்சி பாதிக்குமாமே! அண்ணி குழந்தைக்கு ஒன்னும் ஆகாது இல்ல…’’ 

அவன் குரலில் இருந்த தயக்கமும், கலக்கமும் நாட்சியின் இதயத்தின் ஆழத்தில் சென்று மோத, “உங்களுக்கு எல்லாம் பைத்தியமா பிடிச்சி இருக்கு...?’’ என்று அவனைப் பார்த்துக் கத்தினாள்

செங்கா..’’ என பூமியே அதிரும் படிக் கத்தினாள். செங்கன் அவள் அருகில் வந்து நிற்கவும், “நம்ம பாண்டி கடையில வீட்ல இருக்குற எல்லாருக்கும் டிபன் வாங்கிட்டு வா சீக்கிரம்..’’ என ஆணையிட்டாள்

செல்வாம்பிகா, “நீ எங்களோட சாப்பிடுதேன்னு சொல்லு. நிமிசத்துல தோசை வார்த்து சட்னி அரைக்கிறேன்…’’ என்று ஓடி வர, அவரைப் பார்த்தவள், “அப்படியே நில்லுங்க அத்தை. இன்னும் கொஞ்ச நேரம் சேந்தாப்பல நின்னா மயங்கி விழுந்துடுவீங்க போல. மூச்...! சாப்பிடுற வரைக்கும் யாரும் எதுவும் பேசக் கூடாது.’’ 

நாட்சியா போட்ட அரட்டலில், செல்வாம்பிகா அமைதியாய் அமர்ந்துக் கொள்ள, வெளியே சென்ற செங்கன் பத்து நிமிடங்களில் உணவுப் பொட்டலங்களோடு திரும்பி வந்தான்.

பரணியை பார்த்து முறைத்தவள், “எல்லாரையும் வர சொல்லுங்க..’’ என முறைப்போடே சொல்ல, மலர்ந்த முகத்தோடு பரணி, “இதோ மயிலு..’’ என அனைவரையும் அழைக்க சென்றான்

தரணி, மதுஸ்ரீ, மதுரவன் இவர்களோடு சிவாத்மிகாவும் வந்து அமர, நாட்சியாவின் நெற்றி வியப்பில் மேல் ஏறியது. தேவி தன் பாட்டியோடு தன் சிறிய தாத்தா வீட்டிற்கு சென்று இருந்த விஷயம் செங்கன் மூலம் அவள் ஏற்கனவே அறிந்து இருந்தாள்

அனைவரும் வரவும், உணவுப் பொட்டலங்களை பிரித்து அவரவர் தட்டில் அடுக்கியவள், மதுஸ்ரீயின் முறை வரும் போது அவளை நன்றாக முறைத்து விட்டு, தரணியைப் பார்த்து

இனி இவங்க ஒரு வேளை சாப்பிடலைனா மூணு வேளை உங்களுக்கு சாப்பாடு கட் பாத்துக்கோங்க. படிச்சவங்க தானே நீங்க எல்லாம். கன்சீவ்வா இருக்குற சமயத்துல இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்கலாமா..?’’ என அவனை வறுத்தெடுத்தாள்

தட்டில் இருந்த இட்டிலியை வாயில் அடைத்து இருந்தவன், அதை விழுங்கவும் முடியாமல், நாட்சியாவிற்கு பதில் சொல்லவும் முடியாமல் திரு திரு வென்று விழிக்க, அங்கே நெடு நாட்கள் கழித்து மொத்தக் குடும்பமும் விழுந்து விழுந்து சிரித்தது

வேக வேகமாய் உணவை அள்ளி விழுங்கிய பரணி, “டேய் தரணி எதுக்கும் ஜாமீன் எடுத்து வச்சிக்கோ. இனி ஒரு நாள் உன் வீட்டம்மா பட்டினி இருக்க அலோ பண்ண பெண்கள் வன்கொடுமை சட்டம் உன் மேல பாயும்..’’ என சொல்ல, மதுஸ்ரீ அவன் கேலியை சாமர்த்தியமாய் அவனுக்கே திருப்பினாள்.

ஐய என் அருமை கொழுந்தனாரே! அதை மொதோ நீங்க எடுத்து வச்சிக்கிறது ரொம்ப நல்லது. நாங்களாவது டைனிங் டேபிளோட எஸ் ஆகுற ஆளுங்க. நீங்க தான பெட் ரூம் வரை அவங்களோட குப்பை கொட்டசாரி சாரி குடும்பம் நடந்தப் போறீங்க. சோ உங்களுக்கு தான் ஜாமீன் அதிகம் தேவைப்படும்.’’ என பரணி அடித்த பந்தை நோ பால் ஆக்க, மீண்டும் மொத்தக் குடும்பமும் விழுந்து விழுந்து சிரித்தது

அண்ணி உங்களுக்கு இணை நீங்க தான். உங்களுக்கு புன்யமா போகும் சாப்பிட விடுங்க அண்ணி!’’ என பரணி கெஞ்சலில் இறங்கினான்

பின்ன எங்க புருஷமாருங்களை மத்தவங்க முன்னாடி விட்டுக் கொடுத்துடுவோமா? திருநெல்வேலி பொண்டாட்டிங்க ஸ்பெசல் அம்சமில்ல அது…’’  என கெத்துக் காட்ட, பரணி மற்றவர் அறியாமல், “அப்படியா...?’’ என நாட்சியாவை பார்க்க, அவளோ சாம்பார் கிண்ணத்தில் முகத்தை கவிழ்த்தி இருந்தாள்

அனைவரும் இரவு உணவை உண்டு முடிக்கவும், தங்கள் அறையை நோக்கி நடக்க, நாட்சியா ஒரு நிமிஷம் என அனைவரும் நிறுத்தினாள்

ராசுமதுரவனின் கண்களை பார்த்தவள், “நீங்க சம்பாதிக்கிற பணத்துல என்னால ஒரு கவள சாப்பாட்டை கூட சாப்பிட முடியாது.ஏன்னு உங்களுக்கே தெரியும். அப்படி அந்த சாப்பாட்டை சாப்பிட்டா அன்னைக்கு நீங்க கோபத்துல பேசின வார்த்தையை  எல்லாம் நான் உண்மையாக்கின மாதிரி ஆயிடும். என் புருஷன் சம்பாதிச்சா அது வேற கணக்கு. எங்க அவர் தான் தீராத விளையாட்டு பிள்ளையையா புட் பாலை கட்டி பிடிச்சிட்டு தொங்குறாரே.” என்றவள் பரணியின் புறம் ஓர் பார்வையை செலுத்திவிட்டு தொடர்ந்து பேசினாள்.  

Advertisement