Advertisement

38
“சொல்லுங்க மிஸ்டர் நீங்க அவனுக்கு அல்லக்கையா??”
“ஹலோ என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டு போறே. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. மரியாதையா பேசு சொல்லிட்டேன்”
“உனக்குலாம் எதுக்குடா மரியாதை கொடுக்கணும். சரி சொல்லு அவனுக்கு இப்போ என்ன வேணுமாம். எதுக்கு இப்படி சீப்பா நடந்துக்கறான். எனக்கு தெரிஞ்சு அவன் இவ்வளவு கேவலமா நடந்ததில்லையே”
“நான் கூட வேற யாரு செஞ்சிருப்பாங்கன்னு குழம்பிட்டு இருந்தேன். எப்போ அவனை சிசிடிவி பூட்டேஜ்ல பார்த்தேனோ அப்போவே எனக்கு டவுட் வந்திடுச்சு. அதை நீ வந்து கன்பார்ம் பண்ணிட்டே”
“அவனுக்கும் எனக்கும் இப்போ எந்த பேச்சு வார்த்தையும் இல்லையே. எதுக்கு ஆசினியை கடத்தி வைச்சிருக்கான்??”
“எல்லாத்தையும் நான் சொல்லிட்டா அப்புறம் நீங்க எதுக்கு இருக்கீங்க கண்டுப்பிடிச்சு கூட்டிட்டு போங்க” என்றான் மற்றவன் நக்கலாய்.
ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஆருத்ரனுக்கு அவனின் பேச்சு சகிக்கவில்லை. அவன் கன்னத்திலேயே ஒரு அறைவிட்டான். அதில் பொறி கலங்கிப் போனது அவனுக்கு.
“ஒழுங்கா பேசலைன்னு வை இன்னும் அதிகமா அடிவாங்குவே. உன் உண்மையான பேரு என்ன??”
“ஹான் ஸ்ரீவத்சன்” என்று சொல்லி மீண்டும் ஒரு அறை வாங்கிக் கொண்டான் அவன்.
“டேய் எதுக்குடா பேசிட்டு இருக்கும் போதே அடிக்கிறே??”
“உன்னை அப்போவே சொன்னேன்ல ஒழுங்கா பேசு இல்லைன்னா அடி பலமா விழும்ன்னு. நக்கலாவே பேசிட்டு இருக்கே. ஓவரா பேசினா பேச வாயே இருக்காது பார்த்துக்க”
“என்கிட்ட இருக்க பசங்க என்னைவிட மோசமானவங்க. அவங்ககிட்ட சொன்னேன்னு வை உன்னை உரிச்சு கடல்ல தூக்கி போட்டு மீனுக்கு இரையாக்கிடுவாங்க” என்று சொல்ல அப்போது சரியாய் லோகுவும் உள்ளே நுழைந்தான்.
“ண்ணா இந்தாளு நேத்து உன்னை தேடி வந்தான் ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு. என்னாவாம் நாங்க கேட்டா பதிலே சொல்லலை. சார் கொஞ்சம் நக்கலா பேசுனார்ன்னு வேற கேள்விபட்டேன்” என்று வேறு சொல்ல ஆருத்ரன் திரும்பி மற்றவனை பார்த்தான்.
“சொல்லு உன் பேரு என்ன??”
“ஸ்ரீவத்சன்னு நேத்து சொன்னாருண்ணா”
“டேய் நீ கொஞ்சம் பேசாம இருடா. அவனே சொல்லட்டும்” என்றான் ஆருத்ரன்.
“இளமாறன்”
“அப்புறம் ஏன் ஸ்ரீவத்சன்னு நேத்து என்கிட்ட சொன்னே?? ண்ணா யார் இவன் ஆளும் பார்வையும் சரியே இல்லையே. என்ன விஷயம் எதுவும் பிரச்சனையா??” என்று சட்டையை மடித்துவிட்டு முன்னே வந்தான் லோகு.
“லோகு கொஞ்ச நேரம் வெளிய இரு. நான் இவன்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன் உனக்கு” என்று அவன் சொன்ன மறுநிமிஷமே அவன் வெளியேறினான்.
“சொல்லு ஆசினி எங்கே இப்போ??”
“அது எனக்கு தெரியாது, நிஜமாவே எனக்கு தெரியாதுங்க” என்றான் ஆருத்ரனின் முறைப்பில்.
“சரி எதுக்காகன்னு தெரியுமா??”
“ஹ்ம்ம்…”
“எதுக்கு??”
“அதை நான் சொல்லக் கூடாதுன்னு பாஸ் சொல்லியிருக்கார்”
“நீ சொல்லலைன்னா??”
“சும்மா முறைக்காதீங்க சார் எங்க பாஸ் சொல்லுவாரு”
“என்ன சொல்லுவான்?? போன் போடு முதல்ல அவனுக்கு”
“அவரே தான் போடுவாரு”
இளமாறனிடத்தில் இருந்து எந்த தகவலும் வாங்கவே முடியவில்லை. எதை கேட்டாலும் இடக்கான பதிலே அவனிடத்தில். 
 “சரி நீ கிளம்பு” என்று ஆருத்ரன் முடிக்கவும் மற்றவன் அவனை ஆச்சர்யமாய் பார்த்தான்.
“என்ன பார்க்கிறே கிளம்பு… இனிமே உன்கிட்ட பேசுறது வேஸ்ட்டுன்னு தெரிஞ்சு எதுக்கு உன்னை இங்க பிடிச்சு வைக்கணும் நீ போகலாம். ஆசினியை எப்படி கூட்டிட்டு வரணும்ன்னு எனக்கு தெரியும் நான் பார்த்துக்கறேன்”
அதிர்ச்சி விலகாது அங்கிருந்து கிளம்பினான் இளமாறன். 
_________
அர்ஜுன் நீ என்ன சொல்றே எனக்கு புரியலை. அவரை நீ ஜெயிக்கணுமா எதுக்காக??”
 “அவன் எப்பவும் என் வழியில தான் குறுக்க வர்றான்
“ஒண்ணு எனக்கு புரியற மாதிரி பேசு. இல்லனா பேசாத
உனக்கு ரொம்ப திமிர், எங்க பேசக் கத்துகிட்ட உன் புருஷன்கிட்டயா??”
ஆமா அதுக்கு இப்போ என்ன பண்ணப்போறேஎன்றாள் இவளும் இடக்காகவே.
என்னை எதுக்கு இங்க வைச்சுருக்க
ஒரே கேள்வியை நீ எத்தனை தடவை தான் கேட்பே??”
பதில் வரலையே இன்னும் “
ருத்ரன் தோக்கறவரைக்கும் நீ இங்க தான் இருக்கணும். அவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம். எப்பவும் போல பொணத்த தூக்கறது விட்டு புதுசா அவனை யாரு இந்த வேலையில் இறங்க சொன்னது
அருளாசினி குறுக்கே ஒன்றும் பேசவில்லை, அவள் பதில் பேசினால் தானே அவன் தேவை இல்லாது பேசுவான் என்றவள் அவனை பேசவிட்டாள்.
ப்ரீசர் பாக்ஸ் வேலையை விட்டுட்டு என் வேலைக்கு எதுக்கு வர்றான் அவன்”
“உன் வேலை என்ன??”
“ஏன் நான் என்ன பண்றேன்னு உனக்கு தெரியாதா??”
அவளுக்கு தெரியும் அவன் ஏதோ கட்டுமான கம்பெனி வைத்திருப்பதாக அவளை நேரில் பார்த்த போது சொல்லியிருந்தான் தானே.
“நீ செய்யற வேலையில அவர் என்ன செஞ்சார்??”
“புது ஆர்டர் ஒண்ணு அதுக்கு நாங்க கோட் பண்ண அமௌன்ட் ஓகே ஆகிடுச்சு. இப்போ டிசைன்ஸ் கேட்டு இருக்காங்க. அதோட பர்ஸ்ட் லெவல்ல நாங்க செலக்ட் ஆகி இருக்கோம்”
“நீ சொல்றது நம்புற மாதிரியே இல்லை. அவர் எதுக்கு இந்த வேலை பார்க்க போறாரு”
“உனக்கு என்னைப் பத்தியும் தெரியலை, உன் புருஷனையும் பத்தி ஒண்ணும் தெரியலை. உன் புருஷன் என்ன படிச்சிருக்கான்னு உனக்கு தெரியுமா??”
“B.Tech.,”
“எங்க படிச்சான்னு தெரியுமா, B.Tech.,ல அவன் என்ன மேஜர்ன்னு தெரியுமா??” என்று கேட்டவனிடம் அருளாசினி உதட்டை பிதுக்கினாள் தெரியாது என்பது போல.
“சிவில். அவன் படிச்சது IIT டெல்லில. கோல்ட் மெடலிஸ்ட் அவன் அதாச்சும் தெரியுமா??” என்று அர்ஜுன் அடுக்க ஒன்றும் புரியாமல் விழித்தாள் அவள்.
அவளுக்கு இதெல்லாம் தெரியாதே, ஒரு முறை அவன் படிப்பை பற்றி மட்டும் சொல்லியிருந்தான். ஆனால் அதில் என்ன என்றெல்லாம் அவளும் அன்றைக்கு கேட்டிருக்கவில்லை, அவனும் சொல்லியிருக்கவில்ல.
ஆருத்ரன் பற்றி மற்றவன் சொல்ல அதை கேட்க அவளுக்கு பெருமையாகவும் இருந்தது. அதை முற்றிலும் விட்டு ஆருத்ரன் வேறு தொழில் செய்வது அவளுக்கு ஆச்சரியம் தான்.
அவளுக்கு ஏதோ ஒரு குழப்பம் அதை தெளிவாக்கிக் கொள்ளும் பொருட்டு “நீயும் அவரும் பிரண்ட்ஸா??”
“என்னைப் பார்த்தா அவனுக்கு பிரண்ட் மாதிரியா தெரியுது”
“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சீங்களா??”
“ஹ்ம்ம்”
“நீ எப்போ?? எப்படி??”
“அப்பாக்கு மாற்றல் ஆகிப் போனது டெல்லிக்கு தானே. அங்க தான் படிச்சேன். உன் புருஷனும் அங்க தான் வந்து சேர்ந்தான் எனக்கு போட்டியா”

Advertisement