Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 20
“கதிர்.. எனக்கென்னமோ உன் அண்ணன்ங்க மேல நம்பிக்கையே  இல்லை, நாளைக்கு
பஞ்சாயத்து கூடறதுக்குள்ள ஏதாவது செய்வாங்கன்னு தோணுது..”  என்று அசோக்
யோசனையுடன் கதிரிடம் சொல்ல,
“சான்சே இல்லை, அப்படியே ஏதாவது செஞ்சாலும் பாத்துக்கலாம் விடுங்க..”
என்று சொன்ன கதிரின் எண்ணம் முழுதும் மனைவியின் மேல்தான் இருந்தது,
“பிரச்சனை வரும் என்று சொன்னதற்கே, தங்களின் திருமணம் தான் காரணம் என்று
ஆரம்பித்தவள், இப்போது தாங்களே பிரச்சனை செய்திருக்கிறோம் என்று
தெரிந்தால் என்ன சொல்வாள்..? என்ன நினைப்பாள்..?” என்றே
நினைத்திருந்தான்,
அதோடு மாறனிற்கும், சுந்தரத்திற்கும்  தான் செய்ததில் சிறிது கூட
உடன்பாடு இல்லை என்று அவர்களின் முகத்திலே தெரிந்தது, எல்லோரும் பிரச்சனை
முடிந்து கிளம்பியிருக்க, இருவர் மட்டும் அங்கேயே இவனை எதிர்பார்த்து
ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருந்தனர்,
இவன் அவர்களிடம் சென்று நிற்கவும், உட்காரசொல்லி சைகை காட்டிய தந்தையை
மறுத்துவிட்டு,  கைகளை கட்டிக்கொண்டு தயாராக நின்றான். முதலில் சுந்தரம்
தான் அசோக்கை பார்த்து,
“நாம ஏற்பாடு செஞ்ச விருந்துல நாமளே இப்படி செய்யலாமா..?  எது செய்றதா
இருந்தாலும் நீங்களே முடிவெடுத்து நீங்களே செஞ்சிடறதா..?, வீட்ல
பெரியவங்கன்னு நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம், நீங்க செஞ்சிருக்கிற
வேலையாலா  என்ன என்ன புது பிரச்சனை எல்லாம் முளைக்கும்ன்னு
யோசிச்சீங்களா..?”
“உங்களெக்கெல்லாம் இளரத்தம், இப்படித்தான் எடுத்தமா..? கவுத்தமான்னு தான்
செய்ய  தோணும்..” என்று அதிருப்தியுடன் சொன்னவர், முகத்தை திருப்பி
கொள்ள, மாறனின் பேச்சில் இருந்த உண்மை, சுந்தரத்திற்கும் தெரிந்து
இருந்ததால்,
“ஏன் கதிர் இந்த அவசரம்..? இன்னும் கொஞ்சம் கூட பொறுமையா
செஞ்சிருக்கலாம்..?” என்று பொறுமையாக மகனிடம் கேட்டார். அவர்கள் இருவரின்
உணர்வுகளை புரிந்து கொண்ட கதிர்,
“உங்க ரெண்டுபேரோட கோவம், வருத்தம் எல்லாம் ரொம்ப சரி, நீங்க சொல்றதும்
எனக்கு நல்லா புரியத்தான் செய்து, எங்களுக்காக யோசிக்கிற உங்க உணர்வுகளை
நான் ரொம்ப மதிக்கவும் செய்றேன், ஆனா.. அதேசமயம் நான் செஞ்சதும் தப்பு
இல்லை”, என்று உறுதியுடன் சொன்னவனை,
“உங்க அண்ணங்களையே நீங்களே  இப்படி மாட்டிவிடறது ரொம்ப சரியோ..?”  என்று
சுந்தரம்  கூர்மையாக கேட்க,
“கண்டிப்பாவே தப்புதான், அதை நான் மறுக்கவே மாட்டேன், ஏன்
நியாயப்படுத்தவும் முடியாது, ஆனா.. இதை நான் இன்னைக்கு செய்யலைன்னா,
அவங்க இதை விட பெருசா இழுத்து விடுவாங்க, அவங்க என்னோட நேருக்கு நேரா
மோதுனா எனக்கு பிரச்சனையே இல்லை”,
“ஆனா அவங்க ரெண்டு குடும்பத்துக்குள்ள, ரெண்டுபக்க ஆளுங்களுக்குள்ள
என்னோட கல்யாணத்தை வச்சி பிரச்சனையை  உண்டுபண்ண பாக்கிறாங்க, அது ரொம்ப
தப்பு”,
“ஏன் ஒரு லிமிட்டுக்கு மேல அவங்க போயிட்டா அவங்களை நம்மால சமாளிக்க
முடியுமா, யோசிச்சு பாருங்க, என்ன ஆகும்ன்னு..? அந்த ஒரே காரணத்துக்காக
தான் நான் இதை ஆரம்பத்துலே முடிக்க பார்த்தேன்”,  என்று தெளிவாக, தன்
அண்ணன்களின் திட்டத்தை சொன்னான்,
“இருந்தாலும்.. எனக்கென்னமோ அவங்ககிட்ட உட்கார்ந்து பொறுமையா
பேசியிருக்கலாம்ன்னு தான் தோணுது..” என்று சுந்தரம் சொல்லவும்,
“அது சரிப்பட்டு வரல..”  என்று மாறன் அசோக்கை பார்த்தபடி சொன்னார், “நான்
இவங்க கல்யாணம் தெரிஞ்சவுடனே அவங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டு வச்சி
நிறைய முறை பேசிப்பார்த்தேன், மிரட்டி பார்த்தேன், ஏன் கெஞ்சிக்கூட
பார்த்தேன்.. ஆனா..!!??” என்று வருத்தத்தோடு தோளை குலுக்கிய மாறன்,
“அவங்க ரெண்டுபேரும் ஏன் இப்படி ஆனாங்கண்ணு  எனக்கு தெரியல, என்ன
சொன்னாலும் பகையிலதான் நிக்கிறாங்க”, என்று வேதனையுடன் சொன்ன மாறனை
பார்த்து சுந்தரத்தால் சந்தோஷப்பட முடியவில்லை,
முன்பானால் எதிரிகளாக இருந்தனர், ஆனால் இப்பொழுது சம்மந்திகள், அதோடு
இருவருக்குள்ளும் பிள்ளைகளளுக்காக மறைமுக புரிதல் உண்டாகியிருக்க, அவரின்
வருத்தம் புரிந்த சுந்தரம்,
“அவங்களோட சகவாசமும் சரியில்லை, என்ன செய்ய..? ஏன் இப்போ
மாப்பிள்ளைக்கும், அசோக்குக்கும் நல்ல ப்ரண்ட்ஷிப் இருக்க போய்த்தான்
அவங்க ஏதோ சரியா இருக்காங்க, இல்லை அவங்களும், அவங்க ரெண்டுபேர் மாதிரி
ஆகியிருக்க நிறைய வாய்ப்பிருக்கு, ஏன்னா காலம் அந்தமாதிரி
போயிட்டுருக்கு”,
“இதுல நம்ம பங்கு என்ன இருக்கு..? ஒரு வயசுக்கு மேல நாம பிள்ளைங்களை
பிடிச்சு வச்சு புத்தி சொன்னாலும் அவங்க கேட்டுக்க மாட்டாங்கங்கிறாங்க,
இதெல்லாம் நமக்கு தெரியாதா என்ன..? அதனால அவங்களை நினைச்சு வேதனைப்படாம,
ஏதாவது செஞ்சு முடிகிறது மேல்..!!” என்று பொதுவாக சொல்வது போல்,
சம்பந்தியிடம் சொல்ல,
“ம்ம்ம்.. சீக்கிரம் ஏதாவது செஞ்சு முடிச்சு விட்றனும்..” என்று மாறனும்
சம்மந்தி பேச்சை ஆமோதிக்க, பார்த்திருந்த அசோக்கிற்கும், கதிருக்கும்
அவர்களின் மாற்றங்கள் அதிசயமே..!!
“இப்போ நாளைக்கு பஞ்சாயத்துல என்ன செய்ய..?” என்று பிள்ளைகளின் அதிசயமான
பார்வை, கொஞ்சம் சங்கடத்தை கொடுக்க, வேகமாக பேச்சை மாற்றினார் சுந்தரம்,
“நாம என்ன செய்றது..? பஞ்சாயத்துல என்ன முடிவோ அதை அவங்க ஏத்துக்கட்டும்,
நான் கண்டிப்பா அவங்களுக்கு ஆதரவா எதுவும் செய்ய போறதில்லை”, என்று
அசோக்கை பார்த்தே சொன்ன மாறன்,
“கதிர்.. இன்னைக்கு நடந்தது ஓகே, ஆனா இனிமே நீங்க ரெண்டுபேரும் எது
செய்றதா இருந்தாலும் எங்களை கேட்காம  செய்ய கூடாது”, என்று தந்தையின்
அதிகாரத்தோடு சொல்ல, அதையே சுந்தரமும் மகனிடம் சொல்வதுபோல்,
மருமகனுக்கும் சேர்த்து சொன்னார்,
“சரி கிளம்புங்க.. வீட்டுக்கு போலாம்..” என்று பெரியவர்கள் கிளம்பிவிட,
சின்னவர்களும் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர். கதிர் முன்னமே தந்தையிடம்
தோட்ட வீட்டிற்கு வந்துவிட சொல்லியிருந்ததால், மாறன் நேரே தோட்ட
வீட்டிற்கு தான் சென்றார்,
அங்கே அஞ்சலி, கோவிலில் அடிதடி  என கேள்வி பட்டத்திலிருந்து கணவனின்
நிலையை நினைத்து கவலைபட்டு கொண்டிருந்தாள், என்னதான் கதிரின் தைரியத்தின்
மீது நம்பிக்கை இருந்தாலும், உயிரானவர்களுக்கு பிரச்சனை என்றால் மனம்
துடிக்கத்தானே செய்கிறது. அதோடு அவளுக்கு தான் கணவனின் பிளானே
தெரியாதே..!!,
அதனாலே  கதிரின் அண்ணன்கள் சண்டையை ஆரம்பித்துவிட்டார்களோ..? சண்டையில்
கதிரை ஏதாவது..? இல்லை கோவத்தில் கதிர் எதாவது செய்துவிட்டால் என்ன
செய்ய..? ஊர் கட்டுப்பாடு வேறு இருக்கிறதே..!! என்று பலவாறு நினைத்து
பயந்து கொண்டிருந்தவள்,
மாறன் உள்ளே வரவும், வேகமாக வந்தவள் அவரின் பின் கணவனை தேட, மெலிதாக
சிரித்த மாறன், “கதிர் பின்னாடி வாரன்..” என்று பொதுவாக சொல்லிவிட்டு
சோபாவில் அமர, நாயகியும் சிரித்தபடி,
“கோவில்ல பிரச்சனைன்னு கேள்விப்பட்டதிலிருந்து இப்படித்தான் புருஷனை
தேடிகிட்டு உங்க மருமக  ரொம்ப நேரமா வாசலுக்கும், வீட்டுக்குமா
நடக்கிறா..” என்று சொல்ல, அவர் தன்னை கண்டு கொண்டதில், வெட்கி, அவசரமாக
கிச்சனுக்குள் சென்றவள், சுப்புவின் உதவியுடன் வேகமாக டீ கலந்துகொண்டு
வந்து மாமனாருக்கும், அண்ணிக்கும் கொடுக்க,
“உனக்கு..” என்று கேட்டவாறு எடுத்துக்கொண்ட நாயகியிடம், “குடிக்கிறேன்
அண்ணி..” என்று சொல்ல,
“ஓஹ்..  உன் புருஷன் வருணுமாக்கும்..” என்று கிண்டலாக சொல்ல,
“இல்லை.. அப்படியெல்லாம் இல்லை..” என்று அவள் மறுக்க, “நம்பிட்டோம்..”
என்று சிரித்த நாயகி, தந்தையிடம்,
“என்னப்பா ஆச்சு..? கோவில்ல எதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன், பெரிய
தம்பிங்க ரெண்டுபேரும் எப்பவும் போல வினையை இழுத்து விட்டுட்டாங்களா..?”
என்று வெறுப்புடன்  கேட்க,
“ம்ஹூம், இந்த டைம் அவங்க பிரச்சனை ஆரம்பிக்கல, உன் கடைசி தம்பிதான்,
வேணும்ன்னே பிரச்சனையை ஆரம்பிச்சு, அவங்களை மாட்டிவிட்டிருக்கான்..”
என்று அஞ்சலியின் முன் கதிரின் பிளானில் ஆரம்பித்து  எல்லவாவற்றையும்
சொல்லிவிட்டார்,
அவர் சொன்னதை  கேட்டதும் அஞ்சலிக்கு, எல்லையில்லா ஆத்திரம் பொங்கியது,
பின்னே கணவனின் நிலைய நினைத்து துடித்து கொண்டிருந்தவளாயிற்றே..!!
இவ்வளவு நேரம் அவள் பயந்ததென்ன..?, இங்கே கணவன் செய்து
வைத்திருப்பதென்ன..? நினைக்க நினைக்க அஞ்சலிக்கு கொதித்து கொன்டு வந்தது,
அப்போது கதிரின் புல்லட் சத்தம் கேட்க, வெளியே ஓட துடித்த கால்களை
கட்டுப்படுத்தி கொண்டு உள்ளேயே நின்றவள், கதிர் உள்ளே வரவும், அவசரமாக
அவனை தலை முதல் கால் வரை  ஆராய்ந்தவளுக்கு, அவன் சாதாரணமாக இருக்கவும்
தான் ஆசுவாசமானது,
அவளையே பார்த்தவாறு உள்ளே வந்த கதிர், அவளின் முகத்தில் தெரிந்த
ஆசுவாசத்தில், உதட்டை சுழித்தவன், தந்தையின் அருகில் உட்கார, நாயகி
வருத்தத்துடன்,
“ஏன் தம்பி இப்படி செஞ்ச..?” என்று தம்பியிடம் கேட்டார், தந்தை
சொல்லிவிட்டார் என புரிந்து கொண்டவன், மனைவியின் முகத்தில்  தெரிந்த
கோவத்தை பார்த்தவாறே
“நாம   செஞ்சுதான் ஆகணும், இல்லன்னா அண்ணன்ங்க ஏதாவது பெருசா செஞ்சு
வம்பை இழுத்து விட்டுடுவாங்க, விடுக்கா.” என்று முடிக்க பார்க்க,
“அதுக்காக இது தப்பில்லையா தம்பி..? நாளைக்கு பஞ்சாயத்துல  அவங்களுக்கு
தண்டனை உண்டே..!!?” என்று கூடப்பிறந்த பாசம் பேச,
“கொடுப்பாங்க தான்க்கா, ஆனாலும் அவங்க அடங்க மாட்டாங்க, கண்டிப்பா
திருப்பி ஏதவது செய்வாங்க, என்ன செய்ய..? அவங்க திருந்த போறதில்லை,
நானும் விடப்போறதில்லை..” என்று உறுதியாக முடித்துவிட்டவன் மனைவியை
டீக்காக பார்க்க,
அவளோ  கணவனின் செயலில், பேச்சில், எல்லையில்லா கடுப்பாக பார்த்தவள்
“அவங்க அடங்கமாட்டங்களா..? இவர் மட்டும் ரொம்ப அடங்கினவரோ..? என்ன
அநியாயமான பேச்சு..?” என்று கணவனின் பார்வையை புறக்கணித்து முறைத்தவளை,

Advertisement