Advertisement

“இதோ ஆரம்பிச்சிட்டா இல்லை..” என்று.   “இதுக்கு நான் எவ்ளோ ட்ரைனிங்
கொடுத்திருக்கேன்”, என்று மகளை பெருமையாக பார்த்தான் அந்த நல்ல தந்தை,
ஆனால் எப்போது மகள் கத்தினாலும், ஓடி வரும் அம்மாவும், மனைவியும் இன்று
வராமல் போக,
“என்னடா இது..?’, என்று ஆச்சரியமாக கிட்சன் பக்கம் பார்த்த அசோக்,
திடீரன்று மகள் கத்துவதை நிறுத்தவும்,
“இவ ஏன் அதுக்குள்ள நிப்பாட்டிட்டா..?” என்று திரும்பி மகளை பார்த்தவன்,
அவளின் பயந்த பார்வையில், யாரென்று பார்த்தால் நம் தேவா, அவளுக்கு முன்
நின்று அவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்.
“ச்சே.. இவன் இருக்கிறதை மறந்துட்டினே..” என்று நொந்து போனான் அசோக்,
பின்னே ஜானு பயப்படும் ஓரே ஆள் நம் தேவா மட்டுமே. அதென்னமோ முதலில்
இருந்தே ஜானுவிற்கு, தேவாவை பார்த்தால் பயம், அவன் இருக்குமிடம் போகவே
மாட்டாள்,
தேவாவிற்கும் அவளின் கத்தல்  பயங்கர அலர்ஜி, அவள் இதுபோல்  கத்த
ஆரம்பித்தாலே, அவனுக்கு ஆகாது, அதனாலே கோவம் கொண்டு, வாய் மேல் கைவைத்து,
கண்ணாலே உருட்டி மிரட்டிவிடுவான். இன்றும் அதுபோல மிரட்டியவன்,
“இதுக்கு அப்பறம் சத்தம் வந்துச்சு..”  என்று ஒற்றை விரல் நீட்டி
மிரட்டிவிட்டு சென்றான்.
“டேய்.. இத்தனை நாள் நீதான் எனக்கு வில்லனா இருந்த, இப்போ உன் மகனும்
ஆரம்பிச்சுட்டானா, எதோ என் மகளை வச்சி, கொஞ்சம் கெத்தா திரிஞ்சிட்டு
இருந்தேன், அது பொறுக்காதே உங்களுக்கு”.
“இனி அவன் இங்கிருக்கிறவரை என் தங்கம் வாயவே திறக்காதே,  இன்னிக்கு
பார்த்து வீட்ல விருந்தாச்சே, நான் என்ன செய்வேன்..?” என்று கதிரிடம்
பொருமினான் அசோக். அசோக்கின் புலம்பலில் சிரித்த கதிர்,
“ஏன் சீனியர் நான் வேணும்ன்னா உங்களுக்கு எதாவது..?” என்று அவன்
சொல்லும்போதே, அவசரமாக இடையிட்ட அசோக்,
“தெய்வமே வேண்டாம், நீ எதுவும் செய்ய வேண்டாம், அப்பறம் கிடைக்கிற பீஸ்
இல்லா பிரியாணியும்  கிடைக்குமா போயிடும்”, என்று கையெடுத்து
கும்பிட்டான் அசோக்.
“அசோக்.. கேக் ரெடியா..?” என்று மாலை தோட்டத்தில் ஏற்பாடு ஆகியிருந்த
பிறந்த நாள் விழாவிற்கென தயாராகி வந்த  சுந்தரம் கேட்கவும் ,
“ம்ம்ப்பா.. ரேடி, கேக் கட்  செஞ்சிடலாம்,  எல்லா அரேஞ்மென்ட்ஸ்
முடிஞ்சது”, என்று அவன் சொல்லவும், தானே வீட்டிற்குள் சென்று மாறனை
கூட்டிட்டு வந்தார் சுந்தரம்.
கதிர், அஞ்சலி திருமணம் ஆகிவிட்ட நாளிலிருந்து இருவரும், முன்போல் பகையாக
இல்லாமல், அதே போல் சம்மந்தியாகவும் இல்லாமல் விலகி தான் நின்றனர், ஆனால்
நாட்கள் செல்ல செல்ல, அவர்களின் வயதும் கூட, இன்னும் மனமுதிர்ச்சி அடைந்த
இருவருக்கும், மற்றவர் மேல் மெலிதான புரிதல், கண்ணனுக்கு தெரியாத பாசம்
உருவாக ஆரம்பித்தது,
முதலில் பார்க்காமலே விலகி சென்றவர்கள், அடுத்து ஒருவரை ஒருவர் முகம்
பார்த்து   சிரிக்கும் அளவுக்கு மாறியவர்கள், வருடங்கள் ஓட ஓட  ஒருவர்
மற்றவரின் நல்ல மனதை புரிந்து கொண்டு  சகஜமாகவும் நின்று பேச
ஆரம்பித்தனர்.
அப்படியிருந்தும், இருவரும் தங்கள் இனத்தை பற்றியோ, கட்சியை பற்றியோ
எதுவும் பேசி கொள்ள மாட்டார்கள். எவ்விதத்திலும் மீண்டும் பகை, மனஸ்தாபம்
வருவதை இருவருமே விரும்பவில்ல,
“என்னங்க இது..? இன்னும் கிளம்பாமா இப்படி மகளோட உட்கார்ந்து  TVல மாஷா
பார்த்துட்டு இருக்கீங்க..” என்று அஞ்சலி, கேக் கட் செய்யும் நேரம்
நெருங்கவும் டென்க்ஷனோடு கணவனிடம் கத்த,
“ஷ்ஷ்.. ஏண்டி இப்போ கத்துற..?” என்று மனைவியை அதட்டியவன், “இப்போ
என்ன..? நாங்க கிளம்பனும் அவ்வளுதானே, நீ முதல்ல எங்க டிரஸ் எல்லாம்
எடுத்து வை, நாங்க இதோ வந்துடறோம்..” என்று மகளுடன் சென்று நொடியில்
முகம் கழுவி வந்தவன்,
அஞ்சலி கொடுத்த உடையை அணிந்து தயாராக ஆரம்பிக்க, அஞ்சலியும்  மகளை தயார்
செய்தவள், “நீங்க இவளை கூட்டிட்டு கீழ போங்க, நானும் கிளம்பி
வந்துடுறேன்..” என்று  தயராக சென்றாள், கதிர் வேகமாக மகளை கொண்டு சென்று
மீனாட்சியிடம் விட்டவன், மேலே அஞ்சலியின் ரூமிற்கு வந்தான்,
கணவனை பார்த்து “என்னங்க..? ஏன் வந்துடீங்க..?” என்று  கேட்டபடி, புடவையை
எடுத்து கொண்டு தடுப்புக்கு பின்னால் சென்றாள், மனைவியின் பின் தானும்
சென்ற கதிர், அவளின் பின்னிருந்து கட்டி கொண்டவன்
“டி.. நாம இந்த வாரம் எங்கேயேவாது போலாமா..?” என்று தாபத்துடன் கேட்டவாறே
பின்னங்கழுத்தில் இதழ் புதைத்தான்.
“திடீர்ன்னு இப்போ என்னவாம் சாருக்கு..?” என்று கேட்டவாறே கணவனுடன்
தானும்  இணைந்து நின்றவள், கிசுகிசுப்பாக கேட்டாள்.
“ம்ப்ச்.. சும்மா தாண்டி, நமக்கே நமக்குன்னு எங்க டைம் கிடைக்குது சொல்லு
பார்ப்போம், நாம பர்ஸ்ட் டைம் ஊட்டி போனப்போ உங்க அண்ணன் வந்துட்டான்..”
என்று சொல்ல,
“அவர் வந்ததுல மட்டும் உங்களுக்கு என்ன குறைஞ்சு போச்சு..?, எல்லாம்
உங்களுக்கு ஏத்தமாதிரிதானே இருந்துச்சு”,
“எனக்கு மட்டும் ஏத்தமாதிரி இருந்தா பரவாயில்லையே, உங்க அண்ணனுக்கு
ஏத்தமாதிரியும் இல்லை இருந்துச்சு, எனக்கு இப்பவும் உண்மையிலே நம்ப
முடியலடி, உங்க அண்னணுக்குள்ள இப்படி ஒரு ரோமியோவா..?” என்று இன்றும்
ஊட்டியில் அசோக் அடித்த லூட்டியை நினைத்து சிரித்தான் கதிர்
அங்கு லதாவும் கிளம்பிக்கொண்டே அதையேதான் ரசிப்புடன் நினைத்து பார்த்து
கொண்டிருந்தார், அசோக் குடும்பம், ஊட்டி சென்ற முதல் நாளே, இரவு உணவு
முடிந்ததும், அசோக் எப்போதும் போல்,
“வா கதிர் ஒரு வாக் போய்ட்டு வரலாம்”, என்று அழைக்க, கதிர் திரும்பி
மனைவியை முறைத்து பார்த்தான்,
“ஏண்டி உங்க அண்ணனுக்கு இது அடுக்குமா, ஹனி மூனுக்கு வந்த என்னை, இவர்கூட
வாக்கிங் கூப்பிடுறாரே, இவரை என்ன செய்ய..?” என்று அஞ்சலியிடம்
கடுப்படித்தான், அஞ்சலியின் முகத்தில் தெரிந்த சங்கடத்தில்,  புரிந்து
தலையில் அடித்து கொண்ட லதா,
“ஏங்க.. இந்த நைட்ல வெளியே பயங்கர பனியா இருக்கு, இப்போ போய் யாராவது
நடப்பாங்களா..?” என்று ரகசியமாக சைகை காட்டி கேட்டாள். மனைவி
வெளிப்படையாக பேசினாலே புரியாத நம் அசோக், ரகசிய சைகையை புரிந்து
கொண்டாலும்..!!
“இப்போ நடக்க ரொம்ப நல்லா இருக்கும்டி, அதுவும் இது கதிருக்கும்
பிடிக்கும் என்னடா..?” என்று கதிரிடமே கேட்டான்.
“ஆமா ஆமா ரொம்ப பிடிக்கும், அதுவும் உங்ககூட நடக்க எனக்கு பிடிக்காம
இருக்குமா..?”  என்று  நக்கலாக இழுக்க, “பார்த்தியா..?” என்று மனைவிக்கு
காட்டியவன்,
“சரி வா போலாம்..” என்று தயாராக எழுந்து நின்றான்.
“நீங்க இருங்க தம்பி, நான் அவர்கூட அந்த மலை மேல வரைக்கும் நடந்துட்டு
வரேன்..” என்று தூரத்தில் தெரிந்த மலையை கைகாட்டி சொன்னாள் லதா, மனைவி
தன்னுடன் நடக்க வரேன் என்றதே அசோக்கிற்கு அதிர்ச்சி  என்றால், அவள் மலை
மேல் வரை காட்டியது, சந்தேகத்தை கொடுத்தது.
“அதென்ன மலை மேல வர நடக்கணும், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் தூங்க
போறேன்”, என்று மனைவியின் தீப்பார்வையில் உஷாரான அசோக், விட்டால் போதுமென
மகளுடன் ரூமிற்கு ஓடிவிட்டான். அவன் பின்னாலே சென்ற லதா, மகள் தூங்கும்
வரை பொறுமையாக இருந்தவர், ஸ்வேதா தூங்கவும் கணவனை பிடி பிடியென
பிடித்துவிட்டார்,
“உங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா..? அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க,
அவங்களை தனியா விடறதை விட்டு, நீங்க அவங்களோட ஜோடி போட பாக்கிறீங்க,
உங்களை என்னதான் செய்யறது..?” என்று பொரிந்து தள்ளினார்,
“ஏய் சும்மா வாக்கிங் கூப்பிட்டது குத்தமா..? அதுவும் இல்லாமா, கதிர்
இன்னும் அஞ்சலிகிட்ட சண்டைதான் போட்டுட்டு இருக்கான்”, என்று சொன்னான்.
“நீங்க ரொம்பத்தான் கண்டீங்க..”
“ஏய் நிஜமாடி, நான் உண்மையைத்தான் சொல்றேன்”,
“அய்யோ இவருக்கு நான் எப்படி புரியவைப்பேன்..?” என்று மனதில் நொந்தவர்,
“எல்லோரும் உங்களை மாதிரியே  இருக்க மாட்டங்க”, என்று சொல்லவும்,
“நான் என்ன மாதிரி இருக்கேன்..”
 “ம்ம் கொஞ்சம் கூட பொண்டாட்டியை கவனிக்காம”,
“யார் நான் உன்னை கவனிக்கலயா..? இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி நீ பேசறது”,
“என்ன அநியாயமா பேசிப்புட்டேன், ஏன் இப்போ ஸ்வேதாவுக்கு கூட ஆறு வயசு
ஆகிருச்சு இல்லை..” என்று சட்டென சொல்லிவிட்டவள், தானே அதிர்ந்து கண்மூடி
கொண்டு ஒற்றை கண் திறந்து கணவனை பார்த்தவள்,வேகமாக திரும்பி நின்று
கொண்டாள்.
அசோக்கும் லதா சொன்னவுடன்  முதலில் அதிர்ந்தவன், பின் எல்லையில்லா
காதலோடு மனைவியை நெருங்கியவன், “ஏண்டி.. நீதானே நான் எப்போ பக்கத்துல
வந்தாலும், அந்த வலி,  இந்த வேலை, அந்த விரதம்ன்னு ஓடுற, இதுல ஸ்வேதா வேற
ரெண்டு பேருக்கு நடுவுல”,
“அப்படியும் கேப் பிடிச்சு பக்கத்துல வந்தா, எதாவது சண்டை வந்துருது,
இதுல என்னை குறை சொல்ற நீ..” என்று கேட்டவாறே, மனைவியை பின்னிருந்து
அணைத்து பிடித்தவன்,  அவளின் காதுக்கருகில்,
 “ஸ்வேதாவோட அம்மாவுக்கு பொண்ணு வேணுமா..? பையன் வேணுமா ..?” என்று
மோகத்தோடு கேட்டு  அவளின் காதில் முத்தம் வைத்தவனின் கைகள், லதாவின் இடை
மறைத்த புடவைக்குள் நுழைந்து , அவளின் இடையை முழுதாக வருடி மனைவியை
சிலிர்க்க செய்தவன், அவளின் வேற்று முதுகில் தன் உதட்டால் தடவினான்.
கணவனின் முத்தத்தில், நெருக்கத்தில்  திணறிய லதா, நிற்கமுடியாமல் கணவன்
மீதே முழுவதுமாக சாய்ந்து விட்டாள். மனைவி தன் மீது முழுவதும் சாய,
தானும் நன்றாக இறுக்கி கொண்டவன், நீண்ட நாள் கழித்து கிடைத்த மனைவியின்
நெருக்கத்தில், நொடியும் வீணாக்காமல், விடிய விடிய மனைவியுடன் காதல்
பாடம் படித்தான்,
அன்று மட்டுமில்லை அங்கிருந்த ஒரு வாரமும், ஸ்வேதா நாயகியிடம்
ஒட்டிக்கொள்ள, அசோக், லதா  இருவரும் மிக நன்றாகவே காதல் படம் படித்தனர்.
அதன் விளைவுதான் “சூர்யா”, அப்படியும் நிறுத்தாமல் மேலும் காதல்
படித்ததன் ரிசல்ட் தான் “ஜானு”
அசோக்கின் தொந்தரவு இல்லாமல் நம் கதிரும், மனைவிக்கு முழுநேரமும் தன்
காதலை புரிய வைத்ததன் பலன் தான் “தேவா…”
இப்படி தான் இருவரும் ஒரே மாதத்தில் கருவுற, பிரசவம் ஆனதும் சிறிது நேர
இடைவெளியிலே,  அதோடு அசோக்தான், ஒரே நாளில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கு
தங்களின் நட்பின் அடையாளமாக “தேவா, சூர்யா” என்று தளபதி நட்பின் பேரை
சூட்டினான்.
இரவு பங்கஷன் முடியவும், பிள்ளைகள் எல்லாம் களைப்பில் அங்கேயே தூங்கிவிட,
நாயகி குடும்பமும், கதிர், அஞ்சலி, மாறன் மட்டும் தங்களின் வீட்டிற்கு
திரும்பினர். இரவு களைப்பு நீங்க குளித்துவிட்டு வந்த அஞ்சலியை பார்த்து
கடுப்பான கதிர்,
“என்னடி டிரஸ் இது..? மொத்தமா மூடிக்கிட்டு, முதல்ல இந்த நைட்டிய போய்
மாத்திக்கிட்டு, அந்த ட்ரெஸை போட்டுட்டு வா..” என்று கத்த,
“ஏன் இதுல இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை..?” என்று வீம்புக்கென்றே
மாற்றாமல் நின்றாள் அஞ்சலி.
“ஓஹ்.. அப்போ மாத்தமாட்ட, சரி விடு நீ மாத்தலன்னா போகுது, நானே என் கையால
உனக்கு மாத்தி விடுறேன்..” என்று குறும்புடன் மனைவியை நெருங்கவும், முன்
போல் பயந்து ஓடாமல் நின்ற அஞ்சலியும் கணவனை மயக்கத்துடனே பார்த்தவள்,
“உங்க கையாலே நீங்களே மாத்திக்கோங்க, யார் வேண்டாம்ன்னு தடுத்தா..”
என்று கண்ணடித்து சொன்னாள். மனைவியின் கண்ணடிப்பில் இன்னும் இன்னும்
சீண்டப்பட்ட கதிர்,
“ஒய் ரொம்பத்தான் மாறிட்டடி..”  என்று கிறக்கத்துடன் கேட்டவாறே தன்
கையால் தானே உடை மாற்றினான், ஆனால் விடியும் நேரத்தில்தான்.
“வர வர நீதான் கலக்குற போ..” என்று குளித்து தனக்கும், கணவனுக்கும் காபி
எடுத்து கொண்டு வந்த மனைவியை வழக்கம் போல் மடியில் அமரவைத்து ஒரே கப்பில்
இருவரும் காபி குடிக்கும் போது, கதிர் ரகசிய சீண்டலுடன் சொன்னான்.
கணவனின் சீண்டலை புரிந்து முகம் சிவந்த அஞ்சலி, “உங்களை..” என்று அவனின்
தோளில், நெஞ்சில் அடிக்கவும், மனைவியின்அடியை சிரிப்புடன் வாங்கி கொண்ட
கதிரை மிகுந்த நெகிழ்ந்த நெஞ்சோடு பார்த்த அஞ்சலி,
இந்த நொடி, எல்லயில்லா மகிழ்ச்சியில், தன் காதலை தனக்கே மீட்டு கொடுத்த
நன்றியில்..!!!, தன்னோடு  ஓவ்வொரு நொடியும் காதலோடு ரசித்து வாழும்
கணவனின் காதலில்..!!!, நெகிழ்ந்த அஞ்சலி, கணவனின் கழுத்தை கட்டிக்கொண்டு
அவனின்  நெற்றியோடு தன் நெற்றி முட்டியவள், அவனின் கண்களை பார்த்தவாறே,
“ஐ லவ் யூ..!!!”  என, இறுதியாக தன் காதலை தன் காதலனிடமே சொல்லி விட்டாள்
மனைவி தன்னுடைய வருட கணக்கான காதலை சொல்லிவிட, கதிர் மூச்சு கூட
விடமுடியாமல் திணறித்தான்  போனான். இருவருமே இதுவரை தங்களின் காதலை வாய்
வார்த்தையாக சொல்லாமல் தான் இருந்தனர், அது அவர்களுக்கு பெரிய
குறையாகவும் இல்லை,
ஆனால் இப்போது அஞ்சலி  எதிர்பார்க்காமல் திடீரென காதலை சொல்லவும், கதிர்
அசையாமல் சிலை போலே அமர்ந்துவிட்டான். அஞ்சலி காதலை சொன்ன நிமிடம், கதிர்
உணர்ந்த உணர்வு, அதை சொல்ல வார்த்தைகளே இல்ல என்றுதான் சொல்ல வேண்டும்,
அந்தளவு கதிர் அஞ்சலியின் காதலில் மூழ்கி கிடந்தான்.
இவள் தன்னை காதலிக்காவிடில், தான் என்னவாகியிருப்போம், இது போல் ஓர்
காதல் வாழ்க்கை தனக்கு கிடைத்திருக்குமா..? என்று  காதலாக உள்ளம்
நெகிழ்ந்தது போன  கதிர், மனைவியை மிக மிக இறுக்கி அணைத்து கொண்டான்.
அஞ்சலியும்..  கணவன் பதிலுக்கு தன்னிடம் காதலை சொல்ல வேண்டும் என்று
சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஏனோ தான் சொல்ல வேண்டும் என்று தோன்றியதாலே
தன் காதலை சொல்லிவிட்டவள், தானும் கணவனை நன்றாக இறுக்கி கொண்டாள்,
இருவருமே  தங்களின் துணையை கரத்தால் மட்டும் இறுக்கி கொள்ளாமல்..!!!,
தங்களின் காதலாலும்..!!!  இறுக்கி கொண்டனர்.
இன்று மட்டுமல்ல…!!!   என்றும்..!!!   என்றென்றும்..!!!
…………………………………………….

Advertisement