Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் EPILOGUE
“மீனும்மா.. காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு, எங்க காபி..?” என்று
மீனாட்சியை அதட்டியது சாட்சாத் “நம் அசோக் தான்”,  அவன் அதட்டியதிற்கு
எவ்வித மறுப்பும் இல்லாமல்,
“நீ காபி கேட்டு ரெண்டு நிமிஷம் தான் ஆச்சு, இந்தா காபி..” என்று
பணிவுடன் கொடுத்ததும் நம் மீனாட்சி தான். அதோடு முடியாமல்,
“ஏய்.. இங்க வாடி..” என்று மனைவியை அதான் நம் லதாவை, அதிகாரமாக கூப்பிட, அவளும்
“என்னங்க..?”  என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து கணவன் முன் பணிவுடன்
நின்றாள். தன் முன் நின்ற மனைவியை, நக்கலாக பார்த்தவன்,
“எங்கடி என்னோட பர்ஸ்..? நான் வெளியே கிளம்புறேன்னு தெரியுதுல்ல, அதை
எல்லாம் எடுத்து என்கிட்ட கொடுத்து வழியனுப்பதிரல்லையா..?” என்று
அவளையும் அதட்ட,
“இதோங்க..” என்று ஓடி போய் எடுத்து கொண்டுவந்து கணவனிடம் கொடுத்தவளின்
பார்வையும், நம் மீனாட்சியின் பார்வையும் அசோக்கின் மடி மேல்
அமர்ந்திருந்த,
“அவ்வீட்டின் சைரன், நம் அசோக்.. லதாவின்  தவ புதல்வி,  அதோடு நம்
அசோக்கின் செல்லா குட்டி.. நான்கு வயது  “ஜானு..” மேல்தான்  இருந்தது,
பின்னே அவள்தான் அசோக்கின் நிலைய அவ்வீட்டில் உயர்த்தி விட்டவளாயிற்றே,
அவளுக்கு ஒரு ஏழு எட்டு மாதம் இருக்கும் போது, மீனாட்சி எப்போதும் போல
மகனை நொடித்து, தலையில் லேசாக கொட்டிவிட, அவ்வளவுதான் கத்த ஆரம்பித்தவள்
கத்த ஆரம்பித்தவள்த்தான், நிறுத்தவே இல்லை, யார் என்ன சொல்லி சமாதானம்
செய்தாலும் அழுகையை நிப்பாட்டுவேனா என்று விட்டாள்,
இது போதாதா நம் அசோக்கிற்கு.?, யார் சப்போர்ட் கிடைக்கும்
என்றிருந்தவனாயிற்றே, விடுவானா..?, அதற்கு பிறகு அவனின் முழு நேர
வேலையும், இன்னும் மகளுக்கு ட்ரைனிங் கொடுப்பதே, “அவளின் சைரன்
சத்தத்திற்கு பயந்தே..!!”, மீனாட்சியும், லதாவும், அசோக்கின் சேட்டையை
பொறுத்து கொள்ள வேண்டிய நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ள பட்டனர்.
மனைவி கொடுத்த பர்ஸை வாங்கி வைத்து கொண்டவன்,  அவ்வளவு நேரம் தன் மடியில்
உட்கார்ந்திருந்த ஜானுவிற்கு முத்தம் வைத்தவன், “ஜானும்மா கிளம்பலாமா..?”
என்று  மகளை கொஞ்சியபடி அம்மாவை பார்த்து முகத்தை கெத்தாக தூக்கி
வைத்தவன்,
மனைவி பின் தொடர, மகளுடன் காருக்கு சென்றவன், முன்சீட்டில் உட்காரவைத்து
சீட் பெல்ட் போட்டவன், ட்ரிவிங் சீட்டில் தானும் உட்கார்ந்து ஸ்டார்ட்
செய்தவன், மனைவியை பார்க்க, அவள் ஈயென்று சிரித்தபடி டாட்டா காட்டவும்,
உள்ளுக்குள் ஜோராக குதூகலித்த அசோக், வெளியே திமிராக பார்த்தபடி,
“இங்க வா..” என்று மனைவியை ஒற்றை விரல் காட்டி கூப்பிட, அவளும், வேகமாக வந்தவள்,
“என்னங்க..?” என்றபடி கணவனின் பக்கத்தில் குனிந்து கேட்டாள்.தனக்கு
பக்கத்தில் பணிவாக குனிந்து நின்ற மனைவியிடம்,
“நாங்க  போய்  கேக் எல்லாம் வாங்கிட்டு வரதுக்குள்ள எங்களுக்கு பிரியாணி,
மட்டன் சுக்கா, சிக்கன் வறுவல் அப்பறம் முக்கியமா என் ஜானு செல்லத்துக்கு
பிடிச்ச ரெட் சிக்கன் என்று சிக்கன் 65ஐ சொன்னவன், எல்லாம் ரெடியா
இருக்கனும்.” என்று உத்தரவிட,
“சரிங்க..” என்று  பணிவாக தலையாட்டிய மனைவியை குறும்புடன் பார்த்தவன்,
“ம்ம்.. கொடு..” என்று கன்னத்தை காட்டவும்,  அதிர்ந்த லதா, கணவனை
கோபத்துடன்  முறைத்தாள். மனைவியின் முறைப்பை கிண்டலாக பார்த்தவன்,
“ஜானும்மா.. உங்க அம்மா” என்று பக்கத்தில் அமர்ந்து பொம்மையை வைத்து
விளையாடி கொண்டிருந்த  மகளிடம் சொல்ல ஆரம்பிக்கவும், பதறிய லதா,
“கொடுக்கிறேன், கொடுத்து தொலையிறேன்..” பல்லை கடித்து சிரித்தவள்,
கணவனின் கன்னத்தில் லேசாக தன் உதட்டை ஒற்றி எடுக்க,
“ம்ம்.. இது ஓகே தான், இன்னும் கூட நல்லா கொடுத்திருக்கலாம்”  என்று
மனைவியை பார்த்து சீண்டலாக சொன்ன அசோக், மகளுடன் நேரே கேக் வாங்க
சென்றான்.
“அஞ்சுத்தை.. அஞ்சுமா..  எங்க டிரெஸ் எப்படி இருக்கு..?” என்று கிச்சனில்
நின்றிருந்த அஞ்சலியிடம் தங்களின் ஒரே உடையை காட்டி கேட்ட,
“தன் ஆறுவயது மகன் தேவாவையும்”,
“தன் அண்ணன் மகன் ஆறு வயது சூர்யாவையும்” திரும்பி  பார்த்த அஞ்சலி,
“ம்ம்.. ரொம்ப நல்லாயிருக்கு”, என்று இருவரையும் ரசிப்புடன் பார்த்து
சொன்னவள்.
“சரி.. கிளம்பலாமா..?”  என்று இருவரையும் ஆளுக்கொரு கையில் பிடித்தபடி
கிச்சனை விட்டு வெளியே வந்த அஞ்சலி, “அப்பா எங்க தேவா..?” என்று மகனிடம்
கதிரை கேட்டாள்.
“அப்பா.. தூங்கிட்டு  இருக்கார்ம்மா..” என்று மகன் சொல்லவும், “இவரை..”
என்று எப்போதும் போல் கணவனை நினைத்து பல்லை கடித்தவள்,
“சரி நீங்க காருக்கு போங்க, நான் இதோ வந்துடுறேன்..” என்று பிள்ளைகளை
காருக்கு அனுப்பியவள், கணவனை தேடி, ரூமுக்கு சென்றாள். பெட்டில் நன்றாக
இழுத்து போர்த்தி படுத்திருந்த கணவனை, கோபத்துடன் பார்த்தவள்,
“ஏங்க உங்களை குளிக்க சொல்லி எழுப்பிவிட்டு போனா, நீங்க என்னடான்னா
இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க, எழுந்திருங்க முதல்ல.” என்று கணவனை தட்டி
எழுப்ப, அவனோ இன்னும் நன்றாக இழுத்து போத்திகொண்டு படுத்தவன்,
போர்வைக்குள்ளிருந்தே,
 “ஏண்டி  எழுப்புற..?” என்று கத்த,
“ஏன் எழுப்புறேனா..? இன்னிக்கு பசங்கள் பிறந்த நாளுக்கு கோவிலுக்கு
போகணும்ன்னு சொன்னது மறந்துருச்சா..?” என்று கணவனிடம் இருந்து போர்வையை
உருவ பார்த்தால், மனைவிய இழுத்த போர்வையை  விடாமல் இன்னும் இழுத்து
போர்த்தி கொண்டவன்,
“நான் வரல,  தங்கதுரை அண்ணாவோட நீங்களே போய்ட்டு வந்துடுங்க”, என்று
சொல்லிவிட்டு  மறுபடியும் தூங்க ஆரம்பித்துவிட, ரெண்டு மூன்று முறை
கூப்பிட்டு பார்த்த அஞ்சலி, அவன் வரமாட்டான் என்று புரிந்து, “உங்களை
வந்து வச்சிக்கிறேன்..” என்று கத்திவிட்டு கீழே வந்தவள், நேரே மாறனின்
ரூமிற்கு சென்றாள்.
அங்கு மாறன் தன் 3  வயது செல்ல பேத்தி, “கதிர், அஞ்சலியின் மகள்
மீரா”வுடன் விளையாடிட்டு கொண்டிருந்தார்,, உள்ளே சென்ற அஞ்சலி,
“மாமா கிளம்பலாமா..?”  என்று கேட்டபடி மீராவை தூக்கி கொள்ள,
“ம்ம்.. கிளம்பலாம்மா, கதிர் எங்க..?” என்று  கேட்டார்.
“அவர் இன்னும் தூங்கிட்டு இருக்கார் மாமா..” என்று கடுப்புடன் சொன்ன
மருமகளை பார்த்து சிரித்த மாறன்,
“விடும்மா, அவன் இப்படி செய்ரது நமக்கென்ன புதுசா, ஆமா நம்ம பார்த் டே
பாய்ஸ் எங்க..?” என்று பேரன்களை கேட்டபடி வெளியே வந்தார்.
“அவங்க காருக்குள்ள இருக்காங்க மாமா,  நாம கிளம்பலாம்” என்ற அஞ்சலி,
மாறனோடும், மகளுடனும் காருக்கு வந்தவள், தங்க துரையுடன் தன் இஷ்ட
தெய்வமான அம்மன் கோவிலுக்கு சென்றாள். அங்கு மீனாட்சியும், சுந்தரமும்
வந்திருக்க,
“வாப்பா சுந்தரம்..” என்று மாறன், சகஜமாக பேசியபடி அவருடன் கோவிலுக்குள்
சென்றனர், அன்று அம்மனுக்கு தேவா, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு
சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும் ஏற்பாடு செய்யபட்டிருக்க,
எல்லாவற்றையும் முடித்தவர்கள், கிளம்பும் போது,
“சம்மந்தி.. இன்னிக்கு மதிய விருந்துக்கு…” என்று சுந்தரம் ஆரம்பிக்கவும்,
“இந்த ஒரு வராமா நீயும் எத்தனை முறை சொல்லிட்ட, கண்டிப்பா வந்துடுறேன்..”
என்று மாறன் சிரிப்புடன் சொல்லவும், தானும் சேர்ந்து சிரித்த சுந்தரம்,
“சரி நீங்க வந்துருங்க, நான் பேரப்பிள்ளைகளை இப்போ என்னோடே கூட்டிட்டு
போறேன்..” என்று தேவா, சூர்யாவை இருவரையும் தன்னோடு அழைத்து கொண்டு
சென்றுவிட்டார். இவர்கள் மூவர் மட்டும் வீட்டிற்க்கு  வர, அங்கு கதிர்
ஜாலியாக காபியை ரசித்து குடித்தபடி அமர்ந்திருந்தான்,
“ப்பா…”  என்று தந்தையை பார்த்ததும் தாயின் கையிலிருந்த மீரா அவனிடம் தவ்வவும்,
“பட்டு குட்டி தங்கம்..  எங்க போயிருந்தீங்க..? கோவிலுக்கா..?” என்று
காபி கப்பை கீழே வைத்துவிட்டு மகளை கொஞ்சியபடி வாங்கி கொண்ட கணவனை
முடிந்த மட்டும் முறைத்தாள்  மனைவி,
அவனோ எப்போதும் போல் அவளின் கோவத்தை கண்டு கொள்ளாமல், மகளை கொஞ்சி
கொண்டிருக்க, “க்கும்.. இவர் என் கோவத்தை கன்சிடர் பண்ணிட்டாலும்..”
என்று மனதுள் சலித்து கொண்ட அஞ்சலி, கணவனின் நெற்றியில் திருநீறு வைக்க
போகவும்,
“ம்ஹூம்.. எனக்கு ஒன்னும் நீ கோவமா வைக்கிற திருநீறு வேண்டாம்..” என்று
மனைவியின் கையை தட்டிவிட்டவன், மகளிடம் “செல்லம் அப்பாக்கு திருநீறு..”
என,
மீரா..  “நானு.. நானு..” என்று தன் மழழை குரலில் குதித்தபடி, அஞ்சலியின்
கையில் இருந்த திருநீறை தன் பிஞ்சு விரலால் எடுத்து தந்தைக்கு
வைத்துவிட்டு கைதட்டி சிரித்தாள் மகள். மீரா வைத்த திருநீறை பார்த்து
அஞ்சலி சிரிக்கவும்,
“என்னடி.. பொறாமையில் பொசுங்குவன்னு பார்த்தா இப்படி சிரிக்கிற..” என்று
சந்தேகத்துடன் கேட்டான் கதிர்.
“ஹான்.. பொசுங்குவாங்க, பொசுங்குவாங்க.. அது என்ன தேவைக்கு நான்  என்
மகளை பார்த்து பொறாமை படணும்”,
“நீ பொறாமை பட்டுட்டாலும்.” என்று தானும் சலித்த கதிர், “அப்பறம் எதுக்கு
சிரிச்சவ..?” என்று கேட்டான்,
“ம்ம்.. நீங்களே கண்ணாடி பார்த்து தெரிஞ்சிக்கோங்க..” என்று
நொடித்துவிட்டு சென்ற மனைவியிடம்,
“ரொம்பத்தான் ஏத்தம் கூடி போச்சுடி உனக்கு..” என்று கத்தியவன், “வா
செல்லம், நாம போய் கண்ணாடி பார்க்கலாம்”, என்று மகளுடன் சென்று கண்ணாடி
பார்த்தவனுக்கு, மகள் தன் நெற்றியில் திருநீரால் கோலம் வரைந்து
வைத்திருப்பதை பார்த்து சிரிப்பு பொங்கியது.
“என் அம்மு தங்கம்  அப்பா நெத்தியில சூப்பரா படம் வரைஞ்சிருக்கே.” என்று
அதுக்கும் மகளை கொஞ்சி கொண்டான் தந்தை.
“வாங்க சம்மந்தி, வாங்க மாப்பிள்ளை.. வாம்மா” என்று என்று விருந்துக்கு
தங்கள் வீட்டிற்கு வந்திருந்த மாறனின் குடும்பத்தையும், அவர்களுடன்
வந்திருந்த நாயகி குடும்பத்தையும்   முன்னின்று வரவேற்ற சுந்தரம்,
மாறனின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே செல்ல,
“என்னடி உங்க அப்பா சம்மந்தியையும், அக்கா குடும்பத்தையும் மட்டும்
கூட்டுட்டு,  என்னை அதுவும் அவருக்கு இருக்கிற ஒத்தை மருமகனை கண்டுக்காம
போறார், அப்பறம் நான் இப்படியே கிளம்பிடுவேன் பார்த்துக்கோ..” என்று
மனைவியிடம் மிரட்டி கொண்டிருந்த கதிரை,
“மாப்பிள்ளை.. வாங்க வாங்க என்ன அங்கேயே நின்னுட்டேங்க..”  என்று
மீனாட்சி மருமகனை ஆரவாரத்துடன் வரவேற்றபடி வரவும்,
“என்ன அத்தை இது நம்ம வீட்டுக்கு வரதுக்கு போய் நீங்க என்னை
கூப்பிடுணுமா..?”  என்று மாமியாரிடம் பேசிக்கொண்டே உள்ளே சென்ற கணவனை
மனதுள் செல்லமாக சலித்தாள் மனைவி.
“கேக் வந்தாச்சு…” என்று மகளுடன் வந்த அசோக், மாறனையும், நாயகி
குடும்பத்தையும்  பார்த்து முறைப்படி  விசாரித்தவன், கதிரின் பக்கத்தில்
அமர்ந்துகொண்டான். அசோக்கின் கையிலிருந்த ஜானு மாமனை பார்த்ததும்,
 “மாமா..” என்று கதிரிடம் பாயவும், “வாங்க மருமகளே..” என்று ஜானுவை ஒரு
காலிலும், தன் மகள் மீராவை இன்னொரு காலிலும் வைத்து கொண்டான்,
“நான் வந்து இவ்வளவு நேரம் ஆச்சு, இன்னும் எனக்கு ஜூஸ் தரல..” என்று
முனங்கிய அசோக், “மீனும்மா..” என்று  சத்தமாக கூப்பிடவும்,
“இதோ வந்துட்டேன்..” என்று ஜூஸோடு வந்தவர், எல்லோருக்கும் கொடுத்தார்,
அசோக்கை தவிர,  அதில் ஆத்திரம் கொண்ட அசோக்,
“மீனும்மா..” என்று கத்த,
“க்கும்.. போடா” என்று அலட்சியமாக சிலிப்பிட்டு சென்ற  தன் தாயை,
“இருங்க இருங்க.. உங்களை என்ன பண்றேன் பாருங்க..” என்று கண்டான அசோக்,
“ஜானு செல்லம், இந்த பாட்டி அப்பாக்கு மட்டும் ஜூஸ் தரல..” என்று அழுவது
சைகை காட்டவும், அவளும் எப்போதும் போல,
“ஆஆஆஆ..” என்று எடுத்தவுடன்  சைரன் போல சத்தமாக கத்த ஆரம்பித்தாள்.

Advertisement