Advertisement

நெகிழிலியினில் நெஞ்சம் கொண்டேன் 7

மீனாட்சியின் மடியில் முகம் புதைந்திருந்த அஞ்சலியை காண.. காண வீட்டில்
எல்லோருக்கும் மனம் பிசையவே செய்தது, கதிர் அவளை விட்டு சென்று இன்றோடு
இரண்டு நாட்கள் முடிந்த பின்னும், கதிரின் செயலால் உண்டான பக்க விளைவுகள்
 இன்னும் தீர்ந்த பாடில்லை,

ஏன் நாளாக.. நாளாக அதிகம் தான் ஆகியது என்றே சொல்லலாம்,  வீட்டிலும்
தொடர்ந்து போன் ஒலித்து கொண்டே இருக்க, வீட்டிற்கும் அடுத்ததடுத்து
யாராவது விசாரிக்க வந்து கொண்டே தான் இருந்தனர், அதனாலே  இவர்களின் வேதனை
இன்னும் கூடத்தான் செய்தது.

அஞ்சலிக்கோ கதிரின் செயல்.. அவளின் மனதில் ஏற்படுத்திய  தாக்கம், அதனால்
அவளுக்கு அவன் மேல் தோன்றிய கட்டுக்கடங்கா கோவம், ஆத்திரம், இவை எல்லாம்
யாரிடமும் வெளிப்படுத்த முடியாமல் தன்னுள்ளே மறுகும் நிலை என்று அவளின்
நிமிடங்கள் மிகவும்  போராட்டமாகவே நகர்ந்து கொண்டிருந்தது.

அப்பொழுதும் “கதிர் ஏன் இப்படி செய்தான்..?” என்று அவளின் நியாயமான மனம்
யோசிக்கவே செய்தது, ஏனெனில் கதிர் எப்போதும்  எந்த சூழ்நிலையிலும்
பெண்களை தங்களின் பிரச்சனைக்குள் கொண்டு வந்ததே இல்லை,

மற்றவர்கள் முயற்சித்தாலும் அதற்கு முதல் எதிரே நிற்பவன் அவனே,  “ஏன் இதே
சூழ்நிலையில் 8 வருடங்களுக்கு முன்பு அஞ்சலியை காப்பாற்றியதும் அவன்
தானே, அதனாலே “எதனால் இப்படி செய்தான்..?” என்று இந்த இரண்டு நாட்களும்
தீவிரமாக  யோசித்ததில் அவளுக்கு தோன்றியது எல்லாம் இதுதான்,

“கதிரின் வாழ்வில் ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது..?” அதுவும்,  “தன்
குடும்பத்தால் தான் நடந்திருக்கிறது”,   இல்லாவிடில்  “கதிர் இந்தளவு
இறங்க கூடியவனே இல்லை..”  என்று அவனை பற்றி முற்றும்.. முழுதாக
அறிந்திருந்தவள் என்பதால் புரிந்து கொள்ள முடிந்தது,

ஆனால் “அப்படி என்ன நடந்திருக்கும்..?”  என்று யோசித்தவளுக்கு ஒன்று
மட்டும் நன்றாக புரிந்தது,  அது  “அவனுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு
நடக்க இருந்த திருமணமும் நடந்திருக்கவில்லை”,   இல்லாவிடில் “திருமணம்
நடந்து அவனின் மனை..? ஏதாவது விபரீதமாக நடந்திருக்கலாம்..”  இவை இரண்டில்
எது நடந்திருந்தாலும், அதற்கு தன் குடும்பம் காரணமாக இருந்திருக்கிறது
என்று மட்டும் தெளிவாக தெரிந்தது.

அப்படியே இருந்தாலும் இருக்கட்டும்.., “அவன் வாழ்வில் என்ன
நடந்திருந்தாலும்..? யார் என்ன செய்திருந்தாலும்..? அதற்காக அவன் தன்னை..
ஒரு பெண்ணை  இவ்வாறு கொண்டு  சென்று  ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து
ஊர் பார்க்க, கொண்டு வந்து விடுவதெல்லாம்!!?”,

 ஒரு பெண்ணாக..  அவன்  தனக்கு உண்டாக்கிய களங்கத்தை நினைத்து உள்ளம்
கொதிக்கவே செய்தாள். அவள் காதல் கொண்ட மனமும்,  அவன்  செய்த செயலை ஏற்று
கொள்ள முடியாமல் தவிக்க  செய்தது

“ப்பா.. நம்ம ஊரு பெரிய ஆளுங்க எல்லாம், கதிர் செஞ்சதுக்கு நாளைக்கு
பஞ்சாயத்து வச்சிருக்காங்க போல, நம்மளையும் வர சொல்லி தகவல்
வந்திருக்கு”, என்று அசோக், சுந்தரத்திடம் அந்த இரவில் சொல்ல,

“ம்ஹூம்.. இப்போ வேண்டாம், ஒரு நாள் டைம் கொடுக்க சொல்லு, அப்பறம்
பேசலாம்ன்னு நான் சொன்னதா சொல்லிடு”,

“ஏன்ப்பா.. இந்த பஞ்சாயத்து எல்லாம் தேவையா..?” அங்க இதை பத்தி இன்னும்
நிறைய பேச பிரச்சனை இன்னும் பெருசாதான் ஆகும், ஏன் ரத்தினம் மாமா
பஞ்சாயத்துல, கதிரை அப்படி பேசிதானே, இப்போ இப்படியெல்லாம் நடக்குது,
வேண்டாம்ப்பா”, என்று அசோக் தன் மறுப்பை சொன்னான்,

“எனக்கும் அதெல்லம்  தெரியும் அசோக், ஆனா அப்படி எல்லாம் நம்மால ஊர்
கட்டுப்பாடை மீறமுடியாது, போய் தான் ஆகணும், பார்ப்போம்.. என்னதான்
நடக்குதுன்னு..? என்று முடித்தவர், அடுத்து

“அசோக்..  அந்த கதிர்கிட்ட பேச ஏற்பாடு  செய்”  என்று, மகனிடம் சொல்ல,
அதிர்ச்சியடைந்த அசோக்,   “வேண்டாம்ப்பா.. அது சரிபட்டு வரும்ன்னு எனக்கு
தோணல..” என்று யோசனயுடன் மறுப்பாக சொன்னான்,

“இல்லை அசோக்.. நான் இப்போ எதையும் பாக்கிற நிலையில இல்லை, எனக்கு இந்த
பிரச்சனை இதோட முடியனும், அவ்வளவுதான்” என்று  சொன்னவருக்கு,  மிகவும்
உறுதியாக தெரிந்தது  “கதிர்  இதோட விடமாட்டான்,  இன்னும்  ஏதாவது
கண்டிப்பாக செய்வான்” என்று,

அதனாலே பஞ்சாயத்திற்கு முன்  “அவனிடம் பேசி எல்லா பிரச்னைகளையும்
இத்தோடு முடித்து விட வேண்டும்”  முடிவு செய்தவர், அசோக்கின் மூலம்
கதிரிடம் பேச உறுதி செய்யப்பட்டு மறுநாள் இரவு அவர்களின் பண்ணை வீட்டில்
சந்திக்க ஏற்பாடும் செய்ய பட்டது.

“அஞ்சலிக்கு தூக்கம் வராமல்  போக,  மனம் கண்டதையும் நினைத்து வேதனைபட,
பேசாமல்  தோட்டத்தில் நடக்காவது  செய்யலாம்..”  என்று வெளியே வந்த
அஞ்சலி, ஆபிஸ் ரூமில் அசோக்கும், சுந்தரமும் பேசுவதை கேட்டு முதலில்
அதிர்ந்தாலும்,

பின் “இது தான் சமயம்..  என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள என்று
தோன்றவும்”,  உடனடியாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளே
சென்றுவிட்டாள் ,

அஞ்சலியை பார்த்த  இருவரும்  ஆச்சரியமாக அவளை பார்க்க, அவளோ அவர்களை
கூர்மையாக பார்த்தவாறே, “எனக்கு கதிர் விஷயத்துல என்ன நடந்ததுன்னு
தெரியனும்..” என்று சொல்ல, அவளின் கேள்வியை புரிந்து கொண்டு, அசோக்கும்,
சுந்தரமும் பதில் அளிக்க யோசிக்கவே செய்தனர்,

 ஆனால் அஞ்சலியோ, கையை கட்டிக்கொண்டு உறுதியாக அங்கிருந்த சேரில்
அமர்ந்து கொள்ள, அவளிடம் தெரிந்த உறுதியில், பெருமூச்சை விட்ட சுந்தரம்,
மகனிடம் சொல்லும் படி சைகை காட்டிவிட்டு எழுந்து சென்றுவிட, அசோக்
அஞ்சலிக்கு பக்கத்தில் இருக்கும் சேரில் அமர்ந்தவாறு சொல்ல ஆரம்பித்தான்,

“கதிரோட கல்யாணம் நடக்கிறதுக்கு” என்று அசோக் ஆரம்பிக்கும் போதே,
இடையிட்ட அஞ்சலி,   “உனக்கும், அவருக்கும் எப்படி பழக்கம்..?
எப்போதிருந்து பழக்கம்..?” என்று அசோக்கையே பார்த்தவாறே கேட்க, அவளின்
கேள்வியில் திகைத்த அசோக், “அது.. அது” என்று இழுத்தவன், பின் “இனி
மறைத்து என்னாகிற போகிறது..?” என்று முதலில் இருந்தே எல்லாவற்றையும்
சொன்னான்,

“என்னோட காலேஜ் தான் கதிர், என்னோட ஜூனியர். நம்மளோட பகை தான் தெரியுமே,
அதனால நாங்க ரெண்டு பேறும் முதல்ல பேசாமதான் இருந்தோம்,  இப்படியே கொஞ்ச
மாசம் போச்சு, அப்போ கதிர், அவனோட கிளாஸ் பொண்ணுங்க கிட்ட கலாட்டா
செஞ்சதுக்காக வேற டிபார்ட்மென்ட் சீனியர் பசங்களை அடிச்சிட்டான்”, என்று
சொல்ல,

அஞ்சலி நக்கலாக சிரிக்கவும், “அவளின் சிரிப்பு  எதனால்..?” என்று
புரிந்து கொண்ட அசோக்,  “அப்போ அவன் அவ்வளவு நல்லவனா தான் இருந்தான்,
இப்போதான் அவன் புத்தி புல்லு மேய போயிருச்சு”  என்று பல்லை கடித்து
கொண்டு சொன்னவன், தொடர்ந்து அவர்களின் பழக்கத்தை சொல்ல செய்தான்,

“சீனியர் மேல ஜூனியர் அதுவும்..  பர்ஸ்ட் இயர் படிக்கிற பையன்,  கை
வச்சா, சும்மா விடுவாங்களா..?  பக்காவா ஸ்கெட்ச் போட்டு ஒரு நாள் நைட்
ஒரு அம்பது பசங்க அவனை மடக்கிட்டாங்க, எனக்கு அந்த டிபார்ட்மென்டல
ப்ரண்ட் ஒருத்தன் இருந்தான், அவன் என்கிட்ட இதை பத்தி சொல்ல, எனக்கு
முதல்ல அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்ன்னு தோணவே இல்லை”,

ஆனா, “அவன் கண்ணுல எப்பவும் ஒரு நேர்மையை தான் பாத்திருக்கேன், அவன்
அண்ணன்களை போல இல்லாமல்,  இவன்  நல்லவனா, நியாயமானவனா  தான் இருந்தான்,
என்ன சாருக்கு கொஞ்சம்  திமிரு.. தெனாவட்டு தான் இருக்கும்”,

“ம்ஹூம்.. கொஞ்சம் இல்லை, நிறையவே இருக்கு” என்று அஞ்சலி நக்கலாக
சொல்லவும், “ஆமா.. அதிகம் தான்”, கேட்டா நான் அப்படி தான், அது எனக்கும்
தெரியும் தான்ன்னு அதையும் திமிராதான் சொல்வான்”, என்று சொன்ன அசோக்,
தொடந்து, “அவனோட நேர்மையை பார்த்து தான் எனக்கு,  அவனுக்கு  ஹெல்ப்
பண்ணனும்ன்னு தோணுச்சு”, நானும் என் டிபார்ட்மென்ட் பசங்களோட அங்க போனா..
இவன் அவங்ககிட்ட,

 “என்னை அடிக்க இத்தனை பேரா..? சூப்பர் இல்லை, அப்போ நானும்
ரௌடிதான்ன்னு”  திமிரா  கொஞ்சம் கூட பயப்படாம டயலாக் பேசிட்டிருக்கான்,
அதை பாத்து எனக்கு அப்போ சிரிப்பு வந்துச்சு, அப்பறம் அவன் கூட பழக பழக
தான் தெரிஞ்சது,  அவன் கேரக்டரே இப்படி தான்னு, என்ன செய்ய..?

நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணவும் சாருக்கு என் மேல முதல்ல  சந்தேகம் தான்,
என்கிட்டேயே நேராவே அன்னிக்கே கேட்டான், “நீங்க ஏன் எனக்கு ஹெல்ப்
பண்றீங்கன்னு..?”, நானும், “எனக்கு தோணுச்சு செஞ்சேன் அவ்வளவுதான்ன்னு”
சொல்லிட்டு வந்துட்டேன்,  நாள் நாள் போக போகத்தான் எனக்கும், அவனுக்கும்
ஒரு நல்ல பாண்ட் வந்தது,

“இது அவனோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நல்லாவே தெரியும், இங்க நம்ம
வீட்டிலும்  நானே அப்பாக்கு  சொல்லிட்டேன், ரெண்டு பேர் வீட்டிலும்,
அரசியல், இன பிரச்சனைக்காக எங்க பழக்கத்தை வெளியே காட்டிக்க வேணாம்ன்னு
சொல்லிட்டாங்க”, என்று அதை முடித்தவன், அடுத்து கதிரின் திருமணத்தில்
நடந்த பிரச்சனையை சொல்ல ஆரம்பிக்கும் பொழுது,

“அண்ணா.. நீங்க.. நீங்க.. நான்..”  என்று எப்படி கேட்பது என்று தெரியாமல்
திணறவும், அவள் கேட்க வருவதை  புரிந்து கொண்ட அசோக், “நான் இப்பவரைக்கும்
அவன்கிட்ட அதை பத்தி சொல்லவே இல்லை”, என்று சொல்லவும் தான் அஞ்சலிக்கு
மனம் நிம்மதியானது.

“கதிரோட கல்யாணத்துக்கு முந்தின நாள், நான் அவனோட வீடியோ கால்
பேசிட்டிருந்தது உனக்கு தெரியுமில்ல”  என்று அசோக் கேட்கவும், ஆமோதிப்பாக
அஞ்சலி தலையாட்ட, “அப்போ நீ..”  என்று  ஆரம்பித்தவன், அஞ்சலியின் முகத்தை
பார்த்து விட்டு, நான் அன்னிக்கு பேசிட்டு வச்சிட்டேன், ஆனா அதுக்கு
அப்பறம் தான் அங்க பெரிய பிரச்சனையே ஆரம்பிச்சிருக்கு,

“உனக்கு நம்ம ரத்தினம் மாமா தெரியுமில்ல, அவர் கரெக்ட்டா கல்யாணத்துக்கு
முன்னாடி நாள்  கல்யாண பொண்ணை  தூக்கிட்டார்..”  என்று சொல்ல, அதிர்ந்த
அஞ்சலி,  “அச்சோ..  அவர் ரொம்ப நல்ல மனுஷராச்சே, எப்பவும் இந்த கட்சி,
இனப்பிரச்னையில கூட அவர் தலையிடாம கண்டுக்கமாத்தானே இருப்பார், அவரா..?
ஏன் இப்படி செஞ்சாரு..?”

 “ம்ம்ம்..  என்ன சொல்ல, எல்லாம் பகை தான்”,

“அவரோட இவருக்கு என்ன பிரச்சனை..?” என்று அஞ்சலி புரியாமல் கேட்டாள்,
“இவனுக்கு யாரோடத்தான் பிரச்சனை இல்லை, எல்லார்கிட்டயும் வம்பை  இழுத்து
வச்சிருக்கான்..” என்று கடுப்பாக சொன்ன அசோக்,

“அவரோட பையன் அந்த பொறுக்கி  மனோகர் இருக்கானில்லை, அவன் ஒரு பொண்ணை
கெடுத்து, கொன்னதுமில்லால், அதை மறைச்சிட்டு வீட்ல  பாத்திருக்கிற
பொண்ணுகூட கல்யாண மேடை வரை வந்துட்டான், அப்பறம் என்ன..  இது இவனுக்கு
தெரிஞ்சு, கல்யாணம் நடக்கிற அன்னிக்கே  போய், அவனை அடிச்சி இழுத்து வந்து
போலீஸ்ல ஒப்படைச்சிட்டான்,

 அது அவங்க மனசுல வச்சிக்கிட்டே இருந்துட்டு, கரெக்ட்டா சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி கல்யாண பொண்ணை  தூக்கி அவனை பழிவாங்கிட்டாங்க,  அப்பறம்
என்ன..? விஷயம்  பரவி, அவங்க எல்லோரும் எவ்வளவு தேடியும் கல்யாண பொண்ணை
கண்டு பிடிக்க முடியல,  “ஏன்னா.. நம்ம அப்பாதான் அந்த பொண்ணை
கூட்டிகிட்டு சென்னை வந்துட்டாரே..!!” என்று முடிக்க,

“அப்பாவா..? அவர் ஏன் இப்படி செஞ்சாரு..?”  என்று அஞ்சலி கோவத்தோடு
கேட்க, “உனக்கு எப்படி சொல்ல அஞ்சலி..?, உண்மையிலே அவருக்கு அது கதிர்
கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு தெரியாது”, என்று சொன்னான் அசோக்,

அஞ்சலி நம்பாமல் பார்க்க, மெலிதாக சிரித்த அசோக், “நீ மட்டுமில்லை..
கதிரும், அவுங்க ஆளுங்களுமே நம்ப மாட்டேங்கிறாங்க, நானும், அப்பாவும்
எவ்வளுவோ சொல்லிட்டோம், ஆனா.. ம்ப்ச்..”  என்று அயர்ச்சியாக தோளை
குலுக்கியவன்,

“ரத்னம் மாமா.. பொண்ணை தூக்கிட்டு நேரே அப்பாகிட்ட தான் வந்திருக்கார்,
அப்பா..  அப்போதான் உன்னை லண்டன் வழியனுப்ப, சென்னை கிளம்ப ரெடியா நிக்க,
வந்த இவர் அந்த சந்தர்பத்தை பயன்படுத்திகிட்டார்”,

“அந்த பொண்ணு அவரோட சின்ன மகன், சதீஷ் லவ் பண்ற பொண்ணுன்னும், அந்த
பொண்ணுக்கு வீட்ல அவசரமா கல்யாணம் பண்ண போறாங்கன்னும், அதான் என்
மகனுக்காக தூங்கிட்டேன் சொல்ல”, அப்பாவும்  “அவர் மேல இருந்த
நம்பிக்கையில, நல்ல அபிப்பிராயத்துல அவர் சொன்னதை நம்பியிருக்கார்”,

அவருக்கு, கதிர் கல்யாணம் செய்ய போற குடும்பத்தை பத்தி தெரியுமே தவிர,
பொண்ணை தெரியாது இல்லை, அது மட்டுமில்லை, அவர் அந்த பொண்ணை பாக்க
கூடயில்லை,  அவர் சொன்னதை  நம்பி, அவருக்கு உதவி செஞ்சிருக்கார்,

ஆனா உன்னை அனுப்பிச்சிட்டு ஊருக்கு வந்ததுக்கு அப்பறம் தான் அவருக்கு
தெரிஞ்சிருக்கு, அது கதிர் கல்யாணம் செஞ்சுக்க இருந்த பொண்ணுன்னு, ஆனா..
அதுல  ரொம்ப கொடுமையான விஷயம், கதிரோட அம்மா.. என்று நிறுத்த, அவன் சொல்ல
வருவது புரிந்து பதறி போன அஞ்சலி, “அண்ணா..”  என்று கலக்கமாக இழுக்க,

“ஆமா.. அஞ்சலி,  அவங்க இப்போ இல்லை, மகனோட கல்யாணம் நின்ன அதிர்ச்சியில
ஏற்கனவே பலகீனமா இருந்த உடம்பு தாங்கல”, என்று துயரத்தோடு சொன்னவன்,
அடுத்து என்ன, “அந்த பிரச்சனைக்காக பஞ்சாயத்து வைக்க, நம்ம ஆளுங்களும்
சும்மா இல்லாம இது தான் சான்ஸுன்னு, நிறைய பேசிட்டாங்க”,

 “கல்யாணம் நின்னதுக்கு, அதுவும் அந்த பொண்ணை நம்ம ஆளுங்க தானே தூக்கி
அவனை அசிங்க படுத்தினாங்க, அதை வச்சி,  கல்யாணம் செய்ய போற பொண்ணையே
உன்னால காப்பாத்த முடியல.. நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா..?”

 இப்படி நிறைய.. நிறைய பேசிட்டாங்க, அதை எல்லாம் இத்தனை வருஷமா மனசுலே
வச்சி,  எங்க கண்ணு முன்னாடியே உன்னை தூக்கினதும் இல்லாம, மறுநாள்
விடும்போதும் எல்லாரையும் பார்த்து அந்தகேள்வி கேட்டுட்டு போயிருக்கான்.

“ஏன்னா..? எங்க கண்முன்னாடி உன்னை தூக்கியும், எங்களால அவனை தடுக்க
முடியாமல் போனதோடு, ஒரு நைட் முழுசும் உன்னை கண்டுபிடிக்கவும்
முடியாமத்தானே இருந்தோம், அதான் அவன் அவ்வளவு திமிரா பேசிட்டு
போயிருக்கான்”.  என்று பெருமூச்சோடு முடிக்க,

நடந்ததை கேள்விப்பட்டு அஞ்சலிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை, இங்கு
 தன் தந்தை மீது  எந்த தவறும் இருப்பதாகவே தோன்றவில்லை, தங்களுக்கு
நெருக்கமான நல்ல மனிதர்கள் உதவி கேட்கும் போது யாராக இருந்தாலும் இதை
தானே செய்வர்,

 ஆனால் இங்கு “அந்த உதவியே தங்களை தாக்கும் கோடாளியாக
மாறியுள்ளதே..!!”என்று நினைத்து நொந்தவள், பின் வேகமாக அந்த கல்யாண
பொண்ணை பற்றி கேட்க,

“அந்த பொண்ணை, ரத்தினம் மாமாமா சொன்ன மாதிரி அவரோட  சின்ன பையன் அந்த
ரமேஷுக்கே கல்யாணம் முடிச்சிட்டார்”, என்று சொல்ல,  “என்னண்ணா
சொல்றீங்க..? அதெப்படி அந்த பொண்ணை..? வேற வேற  ஆளுங்க ஆச்சே,  அப்போ
எப்படி..?” என்று புரியாமல் கேட்டாள்.

“ம்ம்.. நாங்களும்  விஷயம் கேள்விப்பட்டு அதை தான்  ரத்தினம் மாமாகிட்ட
கேட்டோம்”, அதுக்கு அவர், “எனக்கு கதிர் கிட்ட தான் பிரச்சனையே தவிர, ஒரு
பொண்ணு வாழ்க்கை அழிய நான் காரணமா இருக்க விரும்பல, அதான் என்  மகனுக்கே
கல்யாணம் செஞ்சு  வச்சிட்டேன்ன்னு முடிச்சிட்டார்”,

“அந்த பொண்ணு வீட்டிலும் ரொம்ப பெரிய எதிர்ப்பு இருக்கிற மாதிரி தெரியல..
அதுக்கு அப்பறம் நாங்க என்ன பேச..? அமைதியா வந்துட்டோம், அது கூட  கதிரோட
கோவத்தை இன்னும் கூட்டிருக்கும் போல.. என்ன செய்ய..? எல்லாம் நேரம்”,
என்று சொல்லியவன்,

“இவ்வளுதான் நடந்துச்சு அஞ்சலி, இனி கதிருக்கு இதை எல்லாம் எப்படி
புரியவைக்கனும்ன்னு பாக்கணும், நானும் இத்தனை வருஷமா அவனை சமாதானபடுத்த
முயற்சி செஞ்சேன், ஆனா பலன்..? இப்போ அப்பா அவன்கிட்ட பேசணும்கிறார்,
பாக்கலாம்”, என்று முடித்தவன் எழுந்து செல்ல,

தானும் எழுந்து ரூமிற்குள் வந்தவளின் எண்ணம் முழுவதும் கதிரின் அம்மாவை
பற்றி தான் இருந்தது, அடிக்கடி கோவிலில் அவரை பார்ப்பாள், மிகவும்
நல்லவர், அதோடு “கதிருக்கு அவனின் அம்மா மேல் இருக்கும் பாசம் அஞ்சலிக்கு
நன்றாகவே தெரியும், கண்டிப்பாக அந்த சமயத்தில் மனதளவில் மிகவும்
துயரப்பட்டிருப்பான்”  என்று அஞ்சலியால்  நன்றாக புரிந்து கொள்ள
முடிந்தது.    .

மறுநாள் இரவு, முன்னமே திட்டமிட்டபடி அசோக்கும், சுந்தரமும் கதிரை
பார்க்க, அவர்களின் பண்ணை வீட்டிற்கு செல்ல, எப்போதும் போல ஒரு மணி நேரம்
லேட்டாகவே வந்த கதிரை அசோக் முறைக்க, தானும் சளைக்காமல் முறைத்தவன்,

 “5 மணிநேரம் லேட்டா வரலாம்ன்னு தான் யோசிச்சேன், ஆனா போனா போகட்டும்ன்னு
தான் ஒரு மணி நேரத்திலே வந்திருக்கேன்” என்று அலட்சியாயமாக சொன்னவன்,
அங்கிருக்கும் சேரில் தானே அமர்ந்து கொண்டு சுந்தரத்தை “எதுக்கு
வரச்சொன்னீங்க..?” என்பது போல் கேள்வியாக  பார்த்தான்.

Advertisement