Advertisement

அதனாலே  தனக்கு திருமணம் முடிந்தவுடன் தன் தாயுடன் தனியாக சென்றுவிட
நினைத்து இருந்தவன், அதை இன்று லட்சுமி அம்மாவிடம்  சொல்லவும் செய்தான்,
அதை கேட்டு அவர் மெலிதாக சிரிக்க, கடுப்பான கதிர்,

“நான் என்ன ஜோக்கா சொல்லிட்டிருக்கேன்..?”   என்று கடிய, அவர் சைகையாலே
அவனின் தந்தை மாறனை பற்றி கேட்க,    “அவரா..? அவரை என்ன செய்ய..? பேசாம
இங்கேயே   இவங்ககிட்டேயே விட்டுட்டு போயிடலாம். அப்போதான் அவருக்கு
மனுஷங்களோட அருமை தெரியும்” என்று  நக்கலாக  சொல்ல,    கணவனை சொன்னவுடன்
லட்சுமி அம்மா  கோவத்தோடு முகம் திருப்பி கொள்ள,

“ம்க்கும்.. இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை, கவலைப்படாதீங்க
உங்க ஆத்துகாரரையும் கூட்டிட்டு போலாம், அதுவும் உங்களுக்காக தான்”,
என்று கடுப்பாக சொன்னாலும்,   அதில் அவன் தந்தை மேல்  அவனிக்கிருக்கும்
பாசமும், அக்கறையும் லட்சுமி அம்மாவிற்கு புரியாமல் போகுமா..?”

 

“எங்க போக  போறீங்க..?”   என்று கேட்ட படி மாறன் வர,  கதிர் எப்போதும்
போல முகம் திருப்பி கொண்டான்,  “அரசியலுக்காக  அவர் செய்யும் செயல்கள்
எப்போதும்   அவனுக்கு   கசப்பே, அதை அவரிடம் வெளிப்படுத்தவும்
தவறமாட்டான்”,  இப்பொழுதும் லட்சுமி அம்மாவிடம் கேட்பது போல்,

“இன்னிக்கு அந்த வாசுவை போட்டு இவங்க ஆளுங்க அடி அடின்னு
அடிச்சிருக்காங்க,  ஏன்னு தெரியுமா..? இவங்க தெருவுல அவன் அவங்க கட்சி
போஸ்ட்டரை ஓட்டிட்டானம்.. அதுக்கு அந்த அடி, இதெல்லாம்  கொஞ்ச கூட
நல்லாயில்ல  பாத்துக்க சொல்லுங்க”, என்று வெறுப்புடன் சொன்னான்,

“அதுக்கு தான் துரை அவனை ஹாஸ்பிடல்  சேர்த்துட்டு எல்லா செலவையும்
பாத்துக்கிட்டாரே,  அப்பறம் என்ன..? இதெல்லாம் அரசியல் அடிதடிகள்,
இன்னிக்கு நான் செஞ்சா, பதிலுக்கு நாளைக்கு அந்த சுந்தரமும் எதாவது
செய்யத்தான் போறான், இதையெல்லாம் தடுக்க முடியாது,  இன்னும்  சொல்லப்போனா
தடுக்கவும் கூடாது, அப்போதான் நாம நிலைச்சு நிக்க முடியும்”, என்று
அவரும் விட்டு கொடுக்காமல் சொன்னார்,

அவரின் பதிலில் கதிரின் முகத்தில் தெரிந்த கோவத்தில் கணவனை முறைத்த
லட்சுமி அம்மாள், அருகிலிருந்த மகனின் கையை எட்டி பிடிக்க முயற்சி செய்ய,
கதிர் தானே அவரின் கையை பற்றிக்கொண்டான்.

அவனின் கோவத்தை புரிந்து கொண்ட மாறனும்,  அவனின் கல்யாண ஏற்பாட்டை பற்றி
பேச ஆரம்பித்துவிட்டார்,   “லட்சுமி மண்டபத்துக்கு நாளைக்கு சீக்கிரமே
கிளம்பிடனும், அப்போ  தான் ரிசப்ஷனுக்கு கிளம்ப வசதியா இருக்கும்,
தலைவர் முகூர்த்ததுக்கு தான் வருவாரன்னாலும், கட்சி ஆளுங்க எல்லாம்
நாளைக்கே மண்டபத்துக்கு வந்துடுவாங்க”,

“அதோட நம்ம பிஸினெஸ் சர்க்கிள்ல எல்லாம்  ரிசப்ஷனுக்கு  தான் வருவாங்க,
அதனால டைம் மெயின்டெயின் பண்றது ரொம்ப முக்கியம், அப்பறம் சாப்பாடு..”
என்று எல்லா ஏற்பாடுகளை பற்றியும் மனைவிக்கு மட்டுமல்ல,   “தன் திருமணம்
தான்..”  என்ற நினைப்பே இல்லாமல் சுற்றி கொண்டிருந்த மகனுக்கும் சேர்த்து
சொன்னவர்,

“இது நம்ம வீட்ல நடக்குற கடைசி கல்யாணம், எந்த குறையும் இல்லாம பயங்கர
கிராண்டா செஞ்சு  ஜமாய்ச்சிடனும் என்றார் பூரிப்புடன்”, கதிருக்கு
இந்தளவு ஆடம்பர திருமணம் பிடிக்காவிடினும்,  தன் ஆசை, செல்ல மகனின்
திருமணத்தை பெரிதாக செய்ய வேண்டும் என்ற தன் அம்மாவின் விருப்பத்திற்காக
ஒத்து கொண்டான்.

“அப்பறம்  இன்னிக்கு  ஈவினிங் அவனுக்கு கங்கனம் கட்டிடுவாங்க, அதனால
நாளையிலருந்து உன் மகனை எங்கேயும் வெளியே போக வேண்டாம்ன்னு சொல்லிடு
லட்சுமி”,  என்றவர் கிளம்பு முன், மனைவியை  பார்க்க, அவரும் புரிந்து
கொண்டு, சைகையில் கதிரிடம்  “லாவண்யாவிடம் பேசினாயா..?”   என்று
மணப்பெண்ணை பற்றி கேட்க,  புரிந்து கொண்ட கதிர்,

 “ம்ம்..   இன்னிக்குதான்  பேசினேன், கொஞ்ச பயந்த சுபாவம் போல, எனக்கு
எப்படி அந்த மாதிரி பயந்த பொண்ணு செட்டாகும்ன்னு உங்க புருஷன் பாத்தாரோ
தெரியல..” என்று உதட்டை பிதுக்க,

“க்கும்.. சுத்தம்,  வரப்போற பொண்ணும் இவனை மாதிரியே  சண்டை போட்டுட்டுடே
 திரிஞ்சா  குடும்பம் விளங்கிடும்,  இவனை மாதிரி இல்லாம வர பொண்ணாவது
அமைதியா இருக்கட்டும்ன்னு தான் அந்த பொண்ணை செலக்ட் பண்ணேன்”,

“குடும்பமும் நம்மளை போல் பேர் சொல்லிக்கிற அளவு பெரிய குடும்பம்,
நமக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவங்க, சமமானவங்க,   உன் பையனோட
முரட்டு தனத்துக்கும், கோவத்துக்கும், அடிதடிக்கும்  பொறுமையான பொண்ணு
தான் சரி வருவா,   வந்துட்டாரு,  சண்டியருக்கு ஏத்த சண்டிராணிய
தேடிகிட்டு..”   என்று கத்திவிட்டு செல்ல,

“நான் இப்படித்தான்..  இப்போ  எனக்கு  கல்யாணம் செஞ்சி வைக்க சொல்லி
நானா கேட்டேன்..? நீங்கதானே   கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒத்தை கால்ல நின்னு
ஒரே மாசத்துல முடிவு செஞ்சிங்க..”  என்று கதிரும் தன் பங்குக்கு கத்த,
லட்சுமி அம்மாள் தான் மகனை கையை தட்டி கொடுத்து சமாதானம் செய்ய
வேண்டியிருந்தது,

மறுநாள் காலையிலுருந்தே கதிரின் திருமணம் அமர்க்களம் பட ஆரம்பிக்க,
ஆட்கள் வந்தது வந்த வண்ணமே இருக்க,  பந்தியும் எவ்வித குறையுமில்லாமல்
நடந்தது நடந்து கொண்டேஇருந்தது, “நலங்கிலுருந்து, குலதெய்வ வழிபாடு வரை”
எல்லாம் சிறப்பாக முடித்துவிட்டு,

“மாப்பிள்ளை அழைப்பிற்கு  வழி  முழுவதும் வாணவேடிக்கை வெடிக்க, செண்டு
மேளம்   முதல்   ட்ரம் செட் வரை வானம் அதிர அடிக்க,   ஒயிலாட்டம் முதல்
கரகாட்டம் வரை முன்னே ஆடிக்கொண்டு செல்ல, கட்சி ஆட்கள், உறவினர்கள் என்று
ஒரு பெரிய பட்டாளமே மாப்பிள்ளையுடன் செல்ல திருமணம் மிக சிறப்பாக,
எல்லோரும் மூக்கு மேல் விரல் வைக்கும் அளவு ஆடம்பரத்துடனும் நடைபெற்று
கொண்டிருந்தது,

அங்கு அஞ்சலியோ..  அவளின் அன்னையின் மடியிலே புதைந்து போயிருந்தாள்,
அவளுக்கு பயாமாக இருந்தது, ஆம் பயம்தான், நேரம் செல்ல செல்ல,  “அவளின்
காதல் அவளுக்கு இல்லாமல் போகும் வலியில், ஏமாற்றத்தில், அழுகையில்,
விரக்தியில்  உள்ளிருந்து கொள்ளும் இந்த வலியை தாங்க முடியாமல்,   ஏதாவது
 செய்து  எல்லா வலிகளையும், வேதனையும்..  முடித்து  கொள்வோமா”  என்றே
தீவிரமாகவே   தோன்ற ஆரம்பித்திருந்தது

அவளையே கண்காணித்து கொண்டிருந்த லதா, அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டு,
மீனாட்சியிடம் சென்று  “அஞ்சலி தங்களை விட்டு செல்வதற்காக வருத்த
படுகிறாள் போல”, என்று சொல்லி அவளை அவரிடம் ஒப்படைத்து விட்டார்,
மீனாட்சியும் மகளின் முகத்தில் தெரிந்த அளவில்லா வேதனையில் மகளுடனே
இருந்து கொண்டார்,

இப்படியாக அவள் லண்டன்  கிளம்பும் வரை அவளுடனே இருந்து அவளை கண்காணித்து
கொண்ட லதாவிற்கு,   அவள் லண்டன் சென்றபின் எப்படி என்ற பயம் வரவே, அவள்
கிளம்புவதற்கு முதல் நாள் இரவு, அவளிடம் சென்றவர்,

“அஞ்சலி..   எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடுப்பியா..?”  என்று லேசான
தயக்கத்துடன்  கேட்க, எதற்கு என்று முதலில் புரியமால் விழித்தவள், பின்
புரிந்து கொண்டு அவரின் கையை இறுக பற்றி  கொண்டவள்,

“அண்ணி எனக்கு முதல்ல அப்படி தோணிச்சு தான்,  நான் இல்லைன்னு பொயெல்லாம்
சொல்ல மாட்டேன்,   ஆனால் இப்போ இல்லை அண்ணி, அது விரக்தியில  வந்த  ஒரு
நேர  முடிவுதான் தான், ஆனா இப்போ நான் மறுபடியும் ஸ்ட்ராங் ஆயிட்டேன்..
என்னை நானே  ஸ்ட்ராங் பண்ணிக்கிட்டேன்”,

“இது இப்பொமட்டுமில்லை, அவரை நான் காதலிக்கிறேன்னு, எனக்கு
தெரிஞ்சப்போலிருந்தே  என்னை நான் இந்த வலிக்கெல்லாம் தயார்
செஞ்சுக்கிட்டேன்”,

“எனக்கு நல்லா தெரியும், என் காதல் கை கூட ஒரு சதவீதம் கூட
வாய்ப்பில்லைன்னு,   இருந்தாலும்   மனசுல எங்கேயோ ஒரு மூலையில  ஒரு
புள்ளி சதவீதம் நம்பிக்கை இருந்துச்சு அண்ணி, இனி அதுவும் கிடையாது,
அவருக்கு நேத்து தான்.. ? ..  முடிஞ்சிருக்கும்”, என்று சொல்லி
கொண்டிருக்கும் போதே லதாவின் கைகளில் முகம் புதைத்து கதறவும், லதாவும்
அவளின் வேதனையை புரிந்து கொண்டு அவளை கட்டி அணைத்து ஆறுதல் சொல்ல,
சிறிது நேரத்திலே  தன்னை சமாளித்து கொண்டவள்,

“பயப்படாதீங்க அண்ணி,  எனக்காக நீங்க எல்லாம் இருக்கீங்கள்ல, அந்த
நினைப்பு   கண்டிப்பா  எனக்கு எப்பவும்  இருக்கு அண்ணி, அதனால் கவலை
படாதீங்க”, என்று சொன்னவளின் கண்கள் கண்ணீரில் மிதந்தாலும், அவள்
முகத்திலும் உறுதி தெரிய நிம்மதியானார் லதா,

கதிரின் பிறந்தநாளிற்கு எல்லா வருடம் போல அந்த வருடமும் கோவிலுக்கு
சென்று கொண்டிருந்த அஞ்சலியுடன்,  லதா வர  தங்கதுரை கார் ஓட்ட,  மூவரும்
காரில் சென்று கொண்டிருக்கும் போது தான்,   “கதிருக்கு அன்று காலையிலே
ஆக்சிடென்ட் ஆன விஷயத்தை  எதேச்சையாக   தங்கதுரை  சொல்ல, அன்று அஞ்சலி
தவித்த தவிப்பில் தான் இருவருக்கும்   “அஞ்சலி கதிரை காதலிக்கிறாள்..
அதுவும் ஒரு தலையாக காதலிக்கிறாள்” என்றே தெரிந்தது

மறுநாள் காலையிலே அஞ்சலியை வழியனுப்ப   எல்லோரும் ஏர்போர்ட்டிற்கு
கிளம்ப, தன் தந்தை  இன்னும் வராமல் போகவும்,  “ம்மா.. அப்பா எங்கேம்மா..?
நான் கிளம்பரத்துக்குள்ள வந்துடுவரா..?”  தந்தையை பார்க்க முடியாதோ..?
என்ற கவலையில் அஞ்சலி மீனாட்சியிடம் கேட்டாள்,

 “அவர் நேரே ஏர்போட்டிற்கு வந்துடுறேன்ன்னு இப்போ தான் போன் செஞ்சார்,
அவர் கண்டிப்பா வந்துடுவார், நீ வருத்தப்படமா நல்ல படியா கிளம்பு
பாப்பா..”   என்று மீனாட்சி சொல்ல, எல்லோரும் ஏர்போர்ட்டிற்கு கிளம்பி
சென்றனர், சொன்னது போல்  அங்கே வந்த சுந்தரம், மகளின் தலையை வாஞ்சையாக
வருடி கொடுத்தவர்,

 “நல்ல படியா  போயிட்டு வா பாப்பா..” என்று பாசமாக சொல்ல, “
“எல்லோரையும் பிரியும் வேதனை ஒரு புறம்,   காதல் வலி ஒரு புறம் அவளை
பாடாய் படுத்தினாலும், இனி இதுதான் நிரந்தரம்”  என்ற  மன உறுதியுடன்
தன்னை தானே சமாளித்து கொண்டவள்,  எல்லோரிடமும் நல்ல முறையில் விடைபெற்று
கொண்டு  நிரந்தரமாக..? லண்டன் கிளம்பியும் விட்டாள்…

Advertisement