Advertisement

அவனின் கடியில் “ஸ்ஸ்..” என்று மெதுவாக முனகிய மனைவியின், முகத்தோடு தன்
முகம் புதைத்தவன், அவளின் உதட்டுகளை தன் உதட்டால் உரசியவாறே,
“நான் உன்னை லவ் பண்றேனா..? இல்லையான்ற உன் சந்தேகத்தை தீர்த்துடலாமா..?”
என்று கேட்டவன், அவளின் கன்னத்தை கவ்வ, கணவனின் ஸ்பரிசத்தில் உண்டான
மயக்கத்தில் நின்றிருந்த அஞ்சலி, எவ்வித மனசஞ்சலமும், தயக்கமும்
இல்லாமல், கணவனின்  கட்டி கொண்டு தன் சம்மதத்தை சொன்னாள்.
மனைவியின் ஒப்புதலில் மேலும் மோகம் கொண்ட கதிர், மனைவியை கையில்
அள்ளிக்கொண்டு கட்டிலிக்கு சென்றவன், நொடியும் தாமதிக்காமல் தன் காதலை
முழுமூச்சாக மனைவிக்கு காட்டினான்.
“எப்படி இருந்தது மாமனோட காதல்..?”  என்று தன் மேல் படுத்திருக்கும்
மனைவியின் முகம் நிமிர்த்தி கேட்டவனின், கையில் அடித்த அஞ்சலி,
“சரியான முரடு நீங்க, இப்படியா கடிச்சு வைப்பீங்க..” என்று கன்றிய
இடங்களை காட்டி, கோவத்தோடு சொல்ல,
“உனக்கு என் காதல் மேல சந்தேகம் வந்துரக்கூடாது இல்லை, அதான் மாமன் தடம்
பதிச்சு என் காதலை காட்டியிருக்கேன்..”  என்று கன்றிய இடங்களை ஒரு விரால்
வருடியவாறே குறும்புடன் சொன்னவனின் வருடல் அழுத்தமான வருடலாக மாறவும்
உஷாரான அஞ்சலி,
வேகமாக கணவனை விட்டு விலக பார்க்க, கணவனும் அதே வேகத்துடன் மனைவியை
இழுத்து தன் மேல் போட்டு கொண்டவன், “எங்கடி ஓட பாக்கிற..? இன்னும் நான்
என் காதலை முழுசா காட்டவே இல்லை, அதுக்குள்ள ஓடுற..” என்று கொஞ்சியவாறே
அவளின் உதட்டை கவ்வி கொண்டவன், அடுத்தடுத்து மனைவிக்கு தன் காதலை காட்டி
கொண்டேதான் இருந்தான்,
“எனக்கு பசிக்குது..” என்று சோர்வுடன் சொன்ன மனைவியின் சோர்ந்த அழகில்
மேலும் ஈர்க்கப்பட்டவன், கட்டுப்படுத்த முடியாமல் அவளின் வீங்கிய
உதட்டில் லேசாக தன் உதட்டை ஒத்தடம் போல் ஒற்றி எடுத்தவன்,
“ம்ஹூம்.. இது வேலைக்காகாது, இதுக்கு மேலயும்  உன் பக்கத்துலே இருந்தா
உன் கதையும் கந்தல், என் கதையும் கந்தல் தான்..” என்றபடியே   மனைவியை
தானே அள்ளிக்கொண்டு பாத்ரூமில் விட்டவன்,
“குளிச்சிட்டு வா, நானும் பக்கத்து ரூம்ல குளிச்சிட்டு வந்துடுறேன்..”
என்றவன், சொன்னபடி வேகமாக குளித்து, கீழே வர, சுப்பு வந்திருந்தார்,
அவரிடம் காபியை கலந்து கொடுக்க சொல்லி எடுத்து கொண்டவன், சீக்கிரம் டிபன்
செய்யவும்  சொல்லிவிட்டு மேலே தங்களின் ரூமிற்கு வந்தான்,
அஞ்சலியும்  குளித்துவிட்டு வந்திருந்தவள், பெட்டை பார்க்க தன்னாலே
சிவந்தது முகம், “எவ்வளவு பூ பாரு, இந்த பூவையெல்லாம் வச்சு நைட் என்ன
அட்டகாசம், சரியான கேடி..”  என்று இரவு கூடலின் போது கணவன் செய்த
சேட்டைகளில் மேலும் சிவந்தவள்,
பெட்டில் இருக்கும் பூவை எல்லாம் அள்ளி குப்பை கூடையில்
போட்டுகொண்டிருக்க, உள்ளே வந்த கணவன், மனைவியின் சிவந்த முகத்தில்,
அவளின் எண்ணவோட்டத்தை புரிந்து சிரித்தவன், பெட்டில் உட்கார்ந்தபடி  அவளை
இழுத்து தன் மடியில் உட்காரவைத்தவன்,
“முதல்ல காபியை குடி, அப்பறம் பாத்துக்கலாம்..” என்றவாறே ஒரே கப்பில்
மனைவிக்கும் கொடுத்து தானும்  மாற்றி மாற்றி காபி குடித்து முடிக்கவும்,
அஞ்சலி சோர்வில் கணவன் மேலே சாய்ந்து படுத்தவள், நொடியில் தூங்கியும்
விட்டாள்.
தூங்கிய மனைவியை  ரசிப்புடன் பார்த்திருந்த கதிரை, கீழிருந்து சுப்பு
கூப்பிடவும், மனைவியை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன், கீழே செல்ல
அங்கு அசோக் அமர்ந்திருந்தான்.
அசோக்கை காணவும் சத்தமாகவே சிரித்துவிட்ட கதிரை,  முறைப்புடன் பார்த்த
அசோக், “ஏண்டா சிரிக்கிற..?’, என்று கத்த,
“இல்லை நீங்க நைட்டே வருவீங்கன்னு நினைச்சேன் பரவாயில்லை, இப்போதான்
வந்திருக்கீங்க..” என்று சிரிப்புடன் சொன்னவாறே அசோக்கின் பக்கத்தில்
அமர,
“நான் நைட்டே தான் வந்திருப்பேன், இந்த லதாதான் என்னை விடல”, என்று
கோவத்தோடு முனங்கிய அசோக்,
“ஏண்டா நைட் அப்படி சொன்ன, எங்கேயாவது போயிருந்தியா..? ஏதாவது
பிரச்சனையா..? உன் அன்ணனங்க  மறுபடியும் ஏதாவது ஆரம்பிச்சிட்டாங்களா..?”
என்று யோசனையாக கேட்டான்,
“உங்களுக்கு என்னை பார்த்த இந்த சண்டை, பிரச்சனை இதுதான் ஞாபகத்துக்கு
வருமா..?” என்று சிரிப்புடன் கேட்ட கதிரிடம்,
“பின்ன அதானே நீ..? என்ன புதுசா கேட்கிற..? ஆமா அஞ்சலி எங்க..?” என்று
வீட்டில் தேடியபடி கேட்டான் அசோக்,
“தூங்கிட்டு இருக்கா..”  என்று சொல்லும்போதே கதிரின் குரல் வாஞ்சையுடன்
ஒலிக்க, அது எல்லாம் எங்கே நம் அசோக்கிற்கு புரியும்..?   அதனாலே,
“என்ன இன்னும் தூங்கிட்டு இருக்காளா..?..” என்று நேரத்தை பார்த்து
கேள்வியாக கேட்ட அசோக், கதிரின் சிவந்த கண்களை சந்தேகமாக பார்த்தபடி,
“டேய் நைட்டெல்லாம் அவகிட்ட சண்டை போட்டியா..?” என்று ஒரு அண்ணனாக
முறைப்புடன் கேட்டான், அதில் கடுப்பான கதிர்,
“ஆமா விடிய விடிய சண்டை போட்டோம், அதுவும் சும்மா இல்லாம சேதாரத்தோட
சண்டை போட்டோம்..” என்று கோவத்தோடு சொன்னாலும், அதில் இரவின் கிறக்கம்
இன்னும் மீதம் இருக்கத்தான் செய்தது.
அதெல்லாம் நம் மங்குனி அமைச்சர் அசோக்கிற்கு புரிந்தால் தானே, அவனோ,
“நினச்சேன், நீ இதைத்தான் செய்வேன்னு நான் நினைச்சேன், ஏண்டா எப்போ
பார்த்தாலும் அவகிட்ட சண்டை போடுற..? பாவம்டா அவ”, என்று தங்கைக்காக
வரிந்து கட்டி கொண்டு வர,
“இவரை..” என்று தெரிந்தோ தெரியாமலோ முதல் முறையாக கதிரை பல்லை கடிக்க
வைத்தான் அசோக்,
“டேய் நான்தான் எப்பவும் உன்னால பல்லை கடிப்பேன், இப்போ நீ என்ன புதுசா
என்னை பார்த்து பல்லை கடிக்கிற..” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“உங்களை மாதிரி ஒரு  மச்சான் இருந்தா போதும்.. நான் ஏழு கடல் ஏழு மலையை
மட்டுமில்ல, ஏழு லோகத்தையும் தாண்டிடுவேன்..” என்று சிடுசிடுப்புடன்
சொன்னான்,
“நீ சொல்றதை பார்த்தா பாராட்டு மாதிரி தெரியலையே..”  என்று சந்தேகமாக
இழுத்த அசோக்கை கண்டு,
“தேங்க காட், அட்லீஸ்ட் உங்களுக்கு இதுவாவது புரிஞ்சதே..!!” என்று
நெஞ்சில் கைவைத்து கடுப்புடன் பொரிய,
“நான் எல்லாம் புத்திசாலிதான், அது உனக்கும் என்னை பெத்த
தெய்வத்துக்கும், என்னை கட்டிக்கிட்ட மகராசிக்கும் தான்
தெரியமாட்டேங்குது”, என்று முகத்தை திருப்பிய அசோக்கை பார்த்து சிரித்த
கதிர்,
“உங்க பொண்ணை விட்டுட்டிங்களே..?” என்று எடுத்து கொடுக்க,
“என்ன நக்கலா..?” என்று பாய்ந்தவன், “இந்த கதை எல்லாம் விடு முதல்ல, நைட்
என்ன பிரச்சனை..?” என்று ஆரம்பித்த இடத்திலே வந்து நின்றான்.
“ம்ம்.. ரொம்ப கஷ்டம், நீங்க என்னை ஓரு சண்டைக்காரனாவே முடிவு
பண்ணிட்டிங்க, இதுக்கு மேல பேசினா என்னால முடியாது, என்னை விட்டுடுங்க..”
என்று கதிர் இரவு முழுதும் தூங்காத சோர்வில், சரணடைந்தவன்,
“எனக்கு பசிக்குது, டிபன் சாப்பிடலாமா.?’ என்று கேட்டான்.
“என்னடா  விளையாடுறியா..?  என் தங்கச்சிகிட்ட சண்டை போட்டு, அவளை கஷ்ட
படுத்திட்டு, அதைப்பத்தி கொஞ்சமும் கவலைப்படாம, என் தங்கச்சிக்காக கேள்வி
கேட்கிற  என்னையே சாப்பிட கூப்பிடற..?” என்று பாசமலராக கொதித்த அசோக்கை
மீண்டும் தோன்றிய கடுப்புடன் முறைத்த கதிர், போனை எடுக்கவும்,
“ஏண்டா யாருக்கு போன்..?”  என்று கேட்ட அசோக்கை குறுஞ்சிறுப்புடன்
பார்த்த கதிர், அந்த பக்கம் எடுத்ததும்,
“க்கா.. சீனியர் இருக்காரா..?” என்று கேட்க,
“நான் இங்கேதானே இருக்கேன், இவன் வேறெந்த சீனியரை கேட்கிறான்..?” என்று
புரியாமல் பார்த்திருந்த அசோக்கை பார்த்தவாறே,
“இல்லை..ராதா இருக்காங்க இல்ல அதான்  நம்ம சீனியாரோட க்ரஷ் அவங்க சீனியரை
எங்கேயாவது வெளியே வச்சி பார்க்க முடியுமான்னு கேட்டாங்க..” என்று பற்ற
வைக்க,  புரிந்து பதறி போன அசோக், எட்டி வேகமாக அவனிடம் இருந்து போனை
பிடுங்கயவன்,
“மனுஷனாடா நீ..?  அப்போ பத்தவச்சதே  இன்னும் எரிஞ்சிக்கிட்டு இருக்க,
இதுல மேற்கொண்டு எண்ணையாயவா ஊத்துற, உனக்கு நான் என்னடா பாவம் செஞ்சேன்”,
“உனக்கு நல்லா தெரியும் ராதா மேல எனக்கு இருந்தது ஜஸ்ட் ஒரு க்ரஷ்ன்னு,
அப்பறம் ஏண்டா அதையே இழுத்துவிட்டு என்னை கும்மி அடிக்கிற..?”, என்று
அவன் மேல் பாய்ந்து சண்டை போட்டவனை சிரிப்புடன் சமாதானப்படுத்தி இருவரும்
சேர்ந்தே காலை உணவு முடித்து, அசோக் கிளம்பிவிடவும்,
கதிர் உணவோடு மேலே ரூமிற்கு வந்தவன், மனைவியை எழுப்ப, அவள் அசையாமலே
படுத்திருக்க, இரண்டு மூன்று முறை எழுப்பி பார்த்தவன், அவள் எழாமல்
அசந்து தூங்கவும், தானும் சோர்வாக உணர்ந்தவன், மனைவியின் பக்கத்திலே
படுத்து கொண்டான்.
இருவரும் நன்றாக தூங்க, முதலில் கண்விழித்த அஞ்சலி, பக்கத்தில் கணவன்
தூங்குவதை பார்க்கவும், அவனை பார்த்தபடி திரும்பி படுத்தவளுக்கு, நடந்தது
எல்லாம் ஓர் கனவு போலே இருந்தது.
அசந்து தூங்கும் கணவனின் கம்பீர அழகில் அவனை ரசித்தபடி பார்த்திருந்தவள்,
தங்களுக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து நடந்ததை எல்லாம் நினைத்து
பார்த்தபடி படுத்திருக்க, கதிரும் தூக்கம் கலைந்து கண் விழித்தவன், தன்னை
பார்த்தவாறே படுத்திருந்த மனைவியை இழுத்து தன் மேல் போட்டு கொண்டவன்,
“என்னடி மாமனை சைட் அடிக்கிறியா..?” என்று கண்ணடித்து குறும்புடன்
கேட்டான், அவனின் கண்ணடிப்பில் மயங்கி சிவந்தாலும்,
“க்கும்.. ரொம்பத்தான்..”  என்று பொய்யாய் நொடித்தவளை பார்த்து  சிரிக்க,
“போதும் போதும்  ரொம்பத்தான் சிரிக்காதீங்க..” என்று அவனின் சிரிப்பை
எப்போதும் போல் இப்போதும் ரசித்தவாறே அதட்ட,
“உனக்குத்தான் மாமனோட சிரிப்பு ரொம்ப பிடிக்குமே அப்பறம் என்னடி..?’
என்று அவளை கண்டு கொண்டிருந்தவன், குறும்புடன் கேட்டான்.
“எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கார்..”  என்று மனதுள் செல்லமாக
கடிந்தவள், “எனக்கு பசிக்குது..”  என்று சொல்ல, அவளை கண்டுகொண்டவன்
சிரிப்புடன்,
“சரி வா சாப்பிட போலாம்..” என்று இருவரும் எழுந்து ரெப்ரெஷ் செய்து
கொண்டு கீழே சாப்பிட வந்தவர்கள் அமைதியாக சாப்பிட்டு முடிக்கவும்,
மனைவியை கூட்டிக்கொண்டு மேலே ரூமிற்கு வந்தவன், எப்போதும் போல் மனைவியை
இழுத்து மடிமேல் அமரவைத்தவன்,
“அஞ்சலி.. அப்பாக்கு என்ன செய்றதுன்னு ஒரு விஷயம் யோசிச்சிருக்கேன்..”
என்று சொல்ல,
“ஆமா அப்போ எதோ சொன்னீங்களே..? என்ன..?” என்று கேட்டவளிடம்,
“அப்பாக்கு இந்த மேனேஜ்மென்ட் ரொம்ப பிடிக்கும், அதான் உனக்கும்,
அவருக்குமா நாமளே ஒரு ஹாஸ்பிடல் ஓபன் பண்ணிடலாம், அவர் அட்மினிஸ்டிரேஷன்
பாத்துக்கட்டும், நீ உன் வேலையை பாரு..” என்று சொல்லவும்,
“ம்ம்.. நல்ல ஐடியா தாங்க, செஞ்சிடாலம், ஆனா என்னால இவ்வளவு சீக்கிரம்
எல்லாத்தையும் பார்த்துக்க முடியாது, அதனால எல்லா ஹாஸ்பிடல் போல, ஒரு
ஹெட் டாக்ட்டர் வச்சியே பாத்துக்கலாம்..” என்று சொன்னாள். அவள் சொல்வதும்
சரியாய் இருக்க,
 “சரி.. அப்படியே செஞ்சுடாலம்..  ஆனா இப்போ இல்ல, நாம ஊட்டிக்கு போய்ட்டு
வந்ததுக்கு அப்பறம்”, என்று சொல்ல,
“ஊட்டிக்கு போறோமா..? எப்போ..?” என்று புரியாமல் கேட்டாள் மனைவி,
“நாளைக்கே போலாம், அப்பா, அக்காவோட இருந்த மாதிரியும் இருக்கும், நாமும்
ஹனிமூன் போன மாதிரியும் இருக்கும், உனக்கு என் காதலை டே அண்ட் நைட்
புரியவைக்கவும் வசதியா இருக்கும்..” என்று மனைவியின் கன்னத்தை
தேய்த்தவாறே  கண்ணடித்து உல்லாசமாக சொன்னான்.
கதிரின் ஏற்பாடு போல், மறுநாள் ஊட்டி கிளம்பியவர்கள், அங்கு சென்றதும்,
அங்கிருந்த அசோக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்த கதிர், மனைவியிடம்
“நமக்கு ஹனிமூன் நடந்த மாதிரிதான், இவருக்கு பயந்துகிட்டே நான் இங்க
வந்தா..  இவர் எனக்கு முன்னாடி இங்க வந்து உட்காந்திருக்கார், அதுவும்
குடும்பத்தோட..!!” என்று கடுப்படிந்தவனை பார்த்து சிரித்த அஞ்சலி,
“நான் நேத்து அம்மா வீட்டுக்கு தகவல் சொன்னதும், அவரும் வரேன்னு
சொன்னார், அதுவும் உங்க கிட்ட சொல்லவேண்டாம், உங்களுக்கு சர்பிரைஸா
இருக்கட்டும்ன்னு சொல்லிட்டார் அதான்..”  என்று சொல்ல,
“அடிப்பாவி.. இதை முன்னாடியே சொல்லியிருந்தா நான் அங்கேயே நிம்மதியா
ஹனிமூன் கொண்டாடியிருப்பேனே..” என்று மனைவியை திட்டி கொண்டிருந்தவனிடம்,
சிரிப்புடன் வந்த அசோக்,
“கதிர் நான் வந்துட்டேன்..” என்று ஈயென்ற இளிப்புடன் சந்தோஷமாக சொல்ல,
“ரொம்ப சந்தோசம்..”  என்று பல்லை கடித்து சிரிப்புடன் சொன்ன கணவனை
ரகசியமாக பார்த்து சிரித்த மனைவியின் காதருகில் குனிந்தவன்,
“ரொம்ப சிரிக்காதடி.. எப்படியும் மாமன் இங்கிருந்து கிளம்பறதுக்குள்ள
உனக்கு என் காதலை  புரியவைக்காம விட மாட்டேன்..” என்று மனைவியின் இடையை
அழுத்தமாக கிள்ளிவிட்டு அசோக்குடன் பேசியபடி சென்ற கணவனை,
“நெகிழ்ந்த நெஞ்சத்தோடு பார்த்து கொண்டிருந்தாள் அஞ்சலி…!!!”

Advertisement