Advertisement

நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் FINAL END
கதிர் நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்கவும், என்ன பேசுவதென்றே தெரியாமல்..
புரியாமல் நின்றிருந்த அஞ்சலியிடம், “நான் உன்னை காதலிக்கிறேனா..?
இல்லையான்னு..? இப்போ நீதான் எனக்கு சொல்லணும்..” என்று அவளுடைய
கேள்விக்கான பதிலை  அவளிடமே கேள்வியாக  கேட்டான் கதிர்.
கணவன் தன்னிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும்  மனதுக்குள் முழுதாக ஏற்றி
மறுபடியும் மறுபடியும் அவளுள் அவளே ஓட்டி பார்த்து கொண்டிருந்த
அஞ்சலிக்கு, அவளின் கேள்விக்கான பதிலும், கணவனின் கேள்விக்கான பதிலும்
அவன் சொன்னதில் இருந்தாலும்,
ஏனோ ஒரு சொல்ல முடியா..? என்னவென்று அவளுக்கே புரியாமல் நின்றவள், கணவனை
பார்க்க, அவனும் அவளின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை தான் உன்னிப்பாக
பார்த்து கொண்டிருந்தான்.
அஞ்சலிக்கு இன்னும் நிறைய உறுத்தல்கள் மனதில் வரிசை கட்டி நிற்க,
கணவனிடம் கேட்கவும் முடியாமல், அவன் கேட்ட கேள்விக்கு பதிலும் சொல்ல
முடியமால், தடுமாற்றத்துடன் நின்றவளை பார்த்த கதிர்,
அஞ்சலி.. இன்னையோட எல்லாத்தையும் பேசி முடிச்சிக்கலாம்,  உனக்கு என்கிட்ட
என்ன என்ன கேட்கணுமோ எல்லாத்தையும் கேளு என்று சொல்லவும், முதலில்
தயங்கிய அஞ்சலி, பின்  கணவன் சொல்வது போல் இன்றே பேசிடலாம் என்று தானும்
நினைத்தவள்,
“நீங்க  என்னை அப்படி தூக்கிட்டுபோய் கல்யாணம் செய்யாம, பேசி வேற
எப்படியாவது நல்ல முறையில கல்யாணம் செஞ்சிருக்கலாம் இல்லை..” என்று தன்
நீண்ட நாள் உறுத்தலை கேட்டவள், பதிலுக்காக கணவனை பார்க்க, அவன்,
“எல்லாத்தையும் மொத்தமா கேட்டுடு, நான் பதில் சொல்றேன்..” என்று சொல்லிவிட்டான்.
“அப்பறமும் நான் கோவில்ல பேசினத்துல நீங்க  என்கிட்ட பேசாம, கோவமா
விலகித்தானே போயிட்டேங்க, எனக்கு பேசி புரியவச்சிருக்காலம் இல்லை..”,
என்று அவனை அப்போது எங்கோ ஓர் மூலையில் எதிர்பார்த்து ஏமாந்திருந்த
ஏமாற்றத்தை சொன்னவள்,
“அதுவுமே நீங்க என்னை பழி வாங்கத்தான் தாலி கட்டினீங்கன்னு என்னை
நம்பவைக்க ஒரு காரணமா ஆயிடுச்சு, அதோடு நான் செஞ்சதும் தப்புதான், நீங்க
கட்டின தாலியை மறைச்சிருக்க கூடாதுதான்…” என்று தன் தவறையும் ஒத்து
கொண்டவள்,
“அதுமட்டுமில்லாம நான் இங்க வந்ததுக்கு அப்பறமும் நீங்க என்கிட்ட
இதையெல்லாம் சொல்லாம கோவமா என்னை சீண்டிட்டு தானே இருந்தீங்க..?”  என்று
வருத்தத்துடன் கேட்டவளிடம்
“ம்ம்ம்.. எல்லாத்தையும் கேட்டுட்டியா..? ஓகே, இப்போ நான் உன்கிட்ட சில
கேள்வி கேட்பேன், அதுக்கு நீ கரெக்ட்டா பதில் சொல்லணும்..” என்று
பீடிகையுடன் ஆரம்பித்தவன்,
“முதல்ல உனக்கு என்னை எத்தனை வருஷமா தெரியும்..?” என்று கேட்க,
“இந்த வருஷத்தோட ஒன்பது வருஷமா தெரியும்..”  என்று மனைவி சொல்லவும்,
“ஓகே.. அப்போ உனக்கு என்னை பத்தி ஓரளவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும் தானே..”
 “ம்ம்.. நல்லா தெரியும்தான்..” என்று “கணவன் எங்கு வருகிறான்..?’ என்று
புரிந்து மெலிந்த குரலில் சொன்னாள்.
“ஒன்பது வருஷமா உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும், நிறைய முறை என்னை
பார்த்திருக்க, என் செயல்களை பார்த்திருக்க, என் பழக்கவழக்கம் எல்லாம்
நல்லா தெரிஞ்சிருக்கும், ஏன் நீ என்னை முதல் முறை பார்த்ததே உன்னை அதாவது
ஒரு பொண்ணை காப்பாத்திரதுல தான்”,
“அப்படியிருந்தும்   நான்  உனக்கு தாலி கட்டினப்போ பழிவாங்கதான் தாலி
கட்டினேன்னு எப்படி என்னை பார்த்து நீ சொன்ன அஞ்சலி..?”  என்று தன்
மனவருத்தத்தை முதன் முறையாக மனைவியிடம் கேட்டான்.
“அது..” என்று அஞ்சலி பதில் சொல்ல முடியாமல் திணற,
“ம்ஹூம்..  எனக்கு உன்கிட்ட இருந்து பதில் வேண்டாம்”, என்று மனைவியை
நிறுத்தியவன், அடுத்து என்ன கேட்ட,
“உன்னை தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சிருக்க வேண்டாம்ன்னு, வேற எப்படி
நான் உன்னை கல்யாணம் செஞ்சிருக்க முடியும்..? உங்க அப்பாகிட்ட கேட்டா
உன்னை எனக்கு கொடுப்பாரா..?’,
“அதுவும் எனக்கு ஏற்பாடு ஆகியிருந்த கல்யாணத்துல வந்த பிரச்சனையில
தேவையில்லாம  அவரும் பாதிக்கப்பட்டிருக்கார், அப்படியிருக்கும் போது அது
சாத்தியமே இல்லை, அதனால அதைத்தவிர எனக்கு அப்போ வேறவழியும் இல்லை”,
“அடுத்து நான் உன்கிட்ட பேசல, உனக்கு புரியவைக்கலன்னு கேட்ட, என்ன சொல்லி
புரியவைக்கணும் அஞ்சலி..?, நானே உன்மேல கோவத்துல, வருத்தத்துல
இருக்குபோது, நான் உன்கிட்ட பேசி உன்னை சமாதானப்படுத்த என்னால எப்படி
முடியும்..? சொல்லு”,
“அப்படியே நான் வந்து, இப்போ உன்கிட்ட சொன்ன மாதிரி அப்போ வந்து நடந்த
எல்லாத்தையும்  சொல்லியிருந்தா அதை நீ நம்பியிருப்பியா..?”
“என்னை விடு,  நீ என்கிட்ட ஏன் உன் காதலை சொல்லலை, நான் உன்னை நம்பாம,
வேற ஏதாவது பேசிடுவேன்ற பயம் தானே..!! என்னை பத்தி நல்லா  தெரிஞ்சிருந்த
உனக்கே என்மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சுதானே”,
“ஆனா எனக்கு உன்னை பத்தி என்ன தெரியும் சொல்லு பார்ப்போம், நீ சீனியாரோட
தங்கச்சி..!!, அடுத்து நீ என்மேல வச்ச காதல்..!!!”
“இதைத்தவிர உன்னை பத்தி எனக்கு வேறென்ன தெரியும்..? ஒண்ணுமே தெரியாது,
இதுல உன் முகம் கூட எனக்கு தெரியாது, ஆனாலும் நான் உன்னை நம்பி, உன்
காதலை நம்பி உன் கழுத்துல தாலி காட்டினேன்”,
“ஆனா  எந்த நம்பிக்கையை வச்சி உனக்கு தாலி கட்டினேனோ அந்த நம்பிக்கையை நீ
தாலி கட்டின அடித்த செகண்டே உடைச்சிட்ட அஞ்சலி”.
“அப்படியும்  என்னோட வாழவரமாட்டேன்னு விலகி போன உன்னை  விடமுடியாம என்
கோவத்தை,  ஏமாற்றத்தை விட்டு ஸ்டெப் எடுத்து என்னோடு வாழ வற்புறுத்தி
கட்டாயத்தின் பேர்ல தான் கூட்டிட்டு வந்திருக்கேன்”, என்று ஒரே மூச்சாக
வெடித்த கதிரின் ஏமாற்றம்,கோவம், ஆதங்கம் எல்லாம் புரிந்த அஞ்சலி,
பேசமுடியாமல் சிலையாக நின்றுவிட்டாள்.
“கதிர் சொல்ல சொல்லத்தான் தன் தவறை உணர்ந்த அஞ்சலி, கணவனை
வருத்தத்துடனும், கலக்கத்துடனும்  பார்த்தாள், மனைவியின் வருத்தம்,
கலக்கம் புரிந்த கணவன்”,
“எனக்கு இதையெல்லாம் கேட்டு உன்னை கஷ்டபடுத்தணும்ன்னு விருப்பம்
இல்லாமத்தான், இத்தனை நாளா நான் இதையெல்லாம் உன்கிட்ட கேட்டுக்கல”,
“அதோடு எனக்கு உன்னை.. உன் பயத்தை, உன் சந்தேகத்தை புரிஞ்சிக்க
முடிஞ்சது, உன்னை சுத்தமாவே பாக்காத ஒருத்தன், திடீர்னு உன் கழுத்துல
தாலி கட்டினா, நம்ப தோணாதுதான்”,
“ஆனா எனக்கும் உன்னை என்கிட்ட கொண்டுவர அதை தவிர வேற வழி இல்லை,உன்கிட்ட
பேசி புரியவச்சி, உங்க அப்பாவை,  எங்க அப்பாவை கன்வீனியன்ஸ் செஞ்சு,
ரெண்டுபக்க ஆளுங்களையும் கன்வீனியன்ஸ் செஞ்சு..”
 “ம்ஹூம் சேன்ஸே இல்லை அஞ்சலி, அப்பறம் உனக்கும் எனக்கும் 60ம் கல்யாணம்
தான் நடந்திருக்கும், அதுக்கும் கேரண்ட்டி இல்லை..”, என்று கணவன்
சிரிப்புடன் சொல்லவும், அவன் சொல்வதில் இருந்த உண்மை புரிந்த அஞ்சலியும்
மெலிதாக சிரித்தாள். மனைவியின் சிரிப்பையே பார்த்த கதிர்,
“அஞ்சலி, நம்மை சேர்த்து வச்சது எது தெரியுமா..? உன்னோட காதல்..!!, நாம
சேர  வாய்ப்பே இல்லன்னு தெரிஞ்சும் என்னை காதலிச்ச உன்னோட காதல்..!!,”
“நடக்கவே நடக்காத ஒன்னை உன் காதல் சாத்தியப்படுத்தியிருக்கு,
அப்படிப்பட்ட உன்னோட காதலை தவிர எனக்கு வேறென்ன வேணும் சொல்லு..?”
“அது மட்டுமில்லாம, விறைப்பா திரிஞ்சு மாமனையே உன் காதலை வச்சி
உன்பக்கம் இழுத்திட்டத்தானே  அப்பறம் என்ன..?” என்று குறும்பாக
கண்ணடித்து, தன்னை  சிவக்க வைத்த கணவனை பார்த்திருந்த அஞ்சலிக்கு,
மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்ததிலும், இப்போது கணவன் சொன்னதும்
மீண்டும் மீண்டும் மனதில் ஓட, எல்லாவற்றையும் புரிந்த கொண்ட அஞ்சலிக்கு
ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது,
“அது கதிர்  அவளை, அவள் காதலை முழுவதுமாக புரிந்து வைத்திருக்கிறான்,
அதுவும் தான் சொல்லாமலே..!!”
 “அதோடு தன்னுடைய காதலுக்கான மரியாதையும் அவன் கொடுத்திருக்கிறான்,
இன்னும் சொல்ல போனால் என்னுடைய காதல் தான் கணவனுடைய மனதையும் தன்பால்
இழுத்திருக்கிறது..” என்றும் நன்றாக புரிந்தது,
“இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு..? என்னுடைய ஒரு தலை காதல்.. நான்
சொல்லமால் எனக்குள்ளே வைத்து தினம் தினம் மருகிய காதல்.. நிறைவேறாது
என்று நினைத்த காதல்..  இன்று என்னை என் காதலுக்கு உரியவரிடமே என்னை
கொண்டு சேர்த்திருக்கிறது”,
“இதை விட என் காதலுக்கு வேறென்ன என்ன வேண்டும்..? என்று இத்தனை வருடம்
தான் தவித்த தவிப்பு எல்லாம், பிரசவ வலி முடிந்து குழந்தையை காணும்
தாயின் ஆத்மசிரிப்பை போல்,
முற்றும் முழுவதுமாக தன் வலி எல்லாம் கரைந்து,  மறைந்து போனது போல் அந்த
நொடி உணர்ந்த அஞ்சலியின் கண்ணில் கண்ணீர் நிற்காமல் வர,
தன்னையே கனிவாக பார்த்து கொண்டிருந்த கணவன், தன் அம்மாவிடம் “என்னுடைய
காதலை அவருடைய அம்மாவின் அன்பிற்கு நிகராக சொன்னது..!!”  ஞாபகத்திற்கு
வரவும், “இதை விட வேறென்ன வேண்டும்..!!?” என்ற நெகிழ்வுடன் முதல் முறையாக
கணவனை அணைத்து கொண்டு கதறினாள்,
“இவன் என்னவன்.. என் காதலை என்னை கவுரவபடுத்திய என் காதலன்..  என் காதலை
எனக்கே எனக்கென்று  மீட்டு கொடுத்த என் கணவன்..” என்று மனதில் பொங்கிய
உவகையுடன் கணவனை இறுக்கி கொண்டு அழுதாள்.
தன்னை கட்டி பிடித்து அழும் மனைவியின் உணர்வை துல்லியமாக புரிந்து கொண்ட
கதிர், ஆறுதலாக மனைவியை அணைத்து வருடிவிட்டான்.
இந்த நொடி அஞ்சலியின் மனதில் உள்ள “ஓர் நிறைவு, பேரானந்தம், திருப்தி..”
இனி இது போன்ற ஓர் நாள் தன் வாழ்க்கையில் என்றும் கிடைக்காது என்று
உணர்ந்த அஞ்சலி,
உரிமையாய், காதலாய் கணவனின் நெஞ்சில்  அழுத்தி,  மிக மிக அழுத்தி தன்
காதலின் தடத்தை தன் இதழின் முத்தத்தின் வழியாக கணவனுக்கு கடத்தினாள்.
மனைவியின் திடீர் சிலிர் முத்தம், கணவனை  மொத்தமாக சிலிர்க்க செய்ய,
இன்னும் இன்னும் மனைவியை இறுக்கி கொண்டான்.
“ஓய் என்னடி மாமனுக்கு முத்தம் எல்லாம் தர்ற..”  என்று முதல் முறையாக
முத்தம் தரும் மனைவியிடம் மயக்கத்துடன் கேட்க,
“ம்ம்.. என் புருஷன் நான் தருவேன்..” என்று உரிமையாய் கொஞ்சிய மனைவியை
நம்பாமல் முகம் நிமிர்த்தி பார்த்தவன்,
“என்னடி இது அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா கொடுக்கிற”, என்று  அவள்
மூக்கில் தன் மூக்கை உரசி கேட்ட   கணவனுடன் தானும் இன்னும் ஒன்றி
நின்றாள். முதலில் எல்லாம் விலகி செல்லும் மனைவி இன்று தானே இன்னும்
ஒன்றவும், மகிழ்ச்சியுடன் அவளின் இடை சேர்த்து வளைத்து பிடித்தவன்,
“என்ன உன் கேள்விக்கு பதில் கிடைச்சுதா..?” என்று கேட்டான்,
“ம்ம்.. கிடைச்சிருக்கு ஆனா கிடைக்கல..” என்று முகத்தை சுருக்கி செல்லமாக
சொன்னாள் மனைவி,
“ஹாஹாஹா..”  என்று அவளின் பதிலில் உள்ள குழப்பத்தை புரிந்து சிரித்தவன்,
“டாக்ட்டர் மேடத்துக்கு என்ன கிடைச்சுது..? என்ன கிடைக்கல..?”
“என் காதலுக்கான உங்க காதல் கிடைச்சுது ஆனா, எனக்கே எனக்கான உங்க காதல்
கிடைக்கல..”  என்று சொன்னாள் மனைவி,
“ம்ம்.. உன் காதலை காதலிக்கிற நான் உன்னை காதலிக்கலன்னு நீ
நினைக்கிறாயா..?” என்று கணவன் கேட்டான்.
“ஆமா..  என்னோட காதல் தான் உங்களை என்கிட்ட கொண்டுவந்து சேர்த்திருக்கு,
அந்தவகையில் எனக்கு என்காதல் மேல சொல்ல முடியா அளவு சந்தோஷம், நிறைவு
தான்”,
“ஆனாலும் நீங்க என்னை எனக்காக  காதலிக்கிறாங்களான்னு தெரியல..” என்று
உதட்டை பிதுக்கி சொல்லவும், அவளின் பிதுக்கிய உதட்டை விரலால் சேர்த்து
பிடித்தவன்,
“உன்னை நான் காதலிக்கிறானா.? இல்லையான்னு..? என்கூட  வாழ்ற வாழ்க்கையில
நீ  கண்டிப்பா புரிஞ்சிப்ப, அதுக்கு ஒரு செம்பில் வேணும்ன்னா இப்போவே
கிடைக்கும்..”, என்று குறும்புடன் சொன்ன கணவனின் பேச்சை புரிந்து சிவந்த
மனைவியின் அழகில் கிறக்கம் கொண்ட கணவன், இறுக்கி பிடித்த உதட்டை லேசாக
நிமிண்டியவன்,
“என்ன சொல்ற செம்பில் பார்க்கலாமா..?” என்று கேட்டவண்ணம் அவளின் வேற்று
தோளில் தன் மீசையை வைத்து தேய்த்தவாறே முத்தம் பதித்தான், அவனின் மீசை
உராய்வில், முத்தத்தில் கூசிய மனைவியின் தேக சிலிர்ப்பை கண்டு மேலும்
தாகத்தோடு அவளின் வெற்று தோளில் முத்தம் வைத்தவன் போதாமல் லேசாக
கடித்தும் வைத்தான்.

Advertisement