Advertisement

“அது அம்மா வீட்ல போடமுடியும், இங்க எப்படி..?”என்று தயக்கமாக இழுக்க,
“இனி போடு, அதான் வீட்ல நம்மளை தவிர யாரும் இல்லையே..!!” என்று புருவத்தை
தூக்கி, குதூகலமாக சொன்ன கணவனை,
“நீங்க இருக்கும்போது தான் முக்கியமா போடக்கூடாது..” என்று மனதில் நினைத்தவள்,
“அதெல்லாம் வேண்டாம், எனக்கு நைட்டியே கம்பர்ட்டபிளா இருக்கு”, என்று
முடித்தாள் மனைவி,
“ம்ஹூம்.. சைட் அடிக்க  எனக்கு கம்பர்ட்டபிளா இல்லை, இப்படி மொத்தமா
போட்டு மூடிக்கிட்டா மாமனுக்கு எப்படி மூடு வரும்,  நாளையோட உன்னோட மூணு
மாசகெடு வேற முடிய போகுது, அதுக்கு அப்பறம்  நோ நைட்டி, ஒன்லி அந்த டிரஸ்
தான், அதிலயும் அந்த ஓவர் கோட் எல்லாம் வேண்டாம்” என்று சீரியஸாக சொல்ல,
அதிர்ந்த அஞ்சலி,
“என்ன என்ன சொல்றீங்க..?”
“என்ன மறந்துருச்சா..?, நாளையோட நீ கேட்டிருந்த டைம் ஓவர்,
நாளையிலிருந்து மாமன் முழுமூச்சா சம்சார மோகத்துல மூழ்கி முத்தெடுக்க
போறான்”,
“நாளையோட அய்யாவோட பிரம்மச்சரியம் முடியுது,  சோ நாளைக்கு பீ ரேடி
பேபி..”  என்று மனைவியை பார்த்து கண்ணடித்து குஜாலாக சொன்னவன்,
படுத்துவிட, அஞ்சலிக்கு அந்த இரவு தூங்கா இரவானது, மறுநாள்
காலையிலிருந்தே அவனின் அலப்பறையை ஆரம்பித்துவிட்டான் கதிர்,
“அஞ்சலி… ஈவினிங் சீக்கிரம் வந்துரு, அப்பறம் நாளையிலிருந்து ஒரு
வாரத்துக்கு லீவ் போட முடியுமா பாரு..?” என்று கேட்க,
“லீவ் எதுக்கு..?”
“லீவ் எதுக்கா..? என்ன அஞ்சலி இப்படி பொறுப்பில்லாம பேசுற, நைட்டெல்லாம்
கண்முழிச்சா பகல்ல எப்படி வேலை பார்ப்ப சொல்லு, அதுக்குத்தான், பெட்டெர்
நீ லீவ் எடுத்துடு”, என்ற உத்தரவாக சொன்னவன், போன் எடுத்து,
“குமார்.. ஒரு மூணு கூடை மல்லிகை பூ வேணும், நாளைக்கு இல்லை இன்னிக்கு
ஈவினிங்கே வேணும், மறந்துட்ட உன்னை கொன்னுருவேன்..” என்று மிரட்டி பூ
ஆர்டர் கொடுத்தவன், கிலியுடன் நின்றிருந்த மனைவியை பார்த்து
விசிலடித்தவாறே குளிக்க சென்றான்,
அதோடு மட்டும் விடாமல், சாப்பிடும் போதும்,  “என்ன ரெண்டு இட்லி
சாப்பிட்ற, இதெல்லாம் பத்தாது, இப்படி நீ வீக்கா இருந்தா, மாமனை எப்படி
தாங்குவ..?’, என்று மேலும் மூன்று இட்லியை வைத்து மனைவி சாப்பிடும் வரை
விடவில்லை,
அடுத்து சுப்புவிடமும் மதியத்திற்கு, அசைவ உணவு செய்ய சொல்லியவன்,
மனைவியிடம் கிசுகிசுப்பாக “அப்போதான் மாமன் நல்லா ஸ்ட்ரெந்தா உழைக்க
முடியும்..” என்று அவளை மேலும் கலங்கடித்தவன்,
அடுத்து சுப்புவிடம், “நைட்க்கு  லைட்டா இட்லி மட்டும் போதும்” என்றவன்,
மனைவியிடம் மறுபடியும்  கிசுகிசுப்பாக, “நைட்டுக்கு லைட்டா
சாப்பிட்டாதான் சரியா இருக்கும்”, என்று சொல்லி செல்ல, அஞ்சலி
பேஸ்தடிந்து அமர்ந்துவிட்டாள்,
“என்ன இவர் இப்படி பன்றார்..? எதோ என்னை எப்போதும் போல சீண்டுறார்னு
நினைச்சா, இவர் பேசுறதை பார்த்தா நைட் கன்பார்ம் தான் போலேயே..!!!”
என்று பீதியுடன் யோசித்து கொண்டிருந்த மனைவியை, கிளப்பி கொண்டு போய் நல்ல
கணவனாக ஹஸ்பிடலில் விட்டான்,
அஞ்சலிக்கு அன்று முழுவதும் கதிரின் பேச்சே மைண்டில் ஒரு பக்கம்
ஓடிக்கொண்டிருக்க, 8 மணிபோல் தங்கதுரையுடன் வீட்டிற்கு வந்த அஞ்சலி
எப்போதும் போல் முதலில் குளிக்க ரூமிற்கு சென்றவள், தன் முன் கண்ட
காட்சியில் அதிர்ந்தே விட்டாள்,
அவர்களின் ரூம்  முழுதும் மல்லிகா பூவாலே அலங்காரம் செய்யபட்டு  இருக்க,
வேஷ்டி சட்டையில் கையில் மல்லிகை பூ சுற்றி வாசனை பிடித்தபடி கட்டிலில்
அமர்ந்திருந்த கதிர், மனைவியை பார்த்தவுடன்,
“வருக.. வருக.. முதலிரவு கொண்டாட வரும் என் புது பொண்டாட்டியே, என் ரோசா
பூவே வருக வருக..!!” என்று வரவேற்க, அஞ்சலிக்கு அழுகையே வரும் போல்
இருந்தது, அதே அழுகை குரலில்
“உங்களுக்கு என்னதான் ஆச்சு..? ஏன் இப்படியெல்லாம் செய்றேங்க..?” என்று கேட்க,
“நான் இன்னும் எதுவும் செய்ய ஆரம்பிக்கவே  இல்லையே..?”  என்று மனைவியின்
அழுகை குரலில் உள்ளுக்குள் சிரித்தவன், “சரி சரி பேசி டைம் வேஸ்ட்
பண்ணாத,  இந்தா  ட்ரெஸ் போய் குளிச்சுட்டு வா.. ஓடு” என்று மனைவியை
குளிக்க துரத்திவிட்டான்,
குளித்து முடித்து ட்ரெஸ்ஸ பார்த்த அஞ்சலி, மேலும் கலக்கத்துக்கு
உள்ளானாள். “இது இந்த ட்ரெஸ் என்னோட நைட் டிரஸ் ஆச்சே..!!”, என்று போட
வேறு டிரஸ் இல்லாமல் போக அதே ட்ரெஸ்ஸை போட்டவள்,
அதற்கு மேல் இருக்கும் ஓவர் கோட் இல்லாமல் போக, கணவனின் வேலை என்று
புரிந்தவள்,  அதையே அணிந்துகொண்டு வெளியே வர, கணவன் போனில் அசோக்கிடம்
பேசிக்கொண்டிருந்தான்,
“சீனியர் எங்க இருக்கீங்க..?”
“வீட்லதான் இருக்கேன் கதிர். ஏன் அதுக்கு கேட்கிற..?”
“சும்மாதான், என்றவன் அப்பறம் இன்னிக்கு நைட் நீங்க எனக்கு எதுக்காகவும்
போனும் பண்ண கூடாது, நேர்லயும் வரக்கூடாது..” என உத்தரவாக சொல்ல,
“ஏண்டா எங்கேயாவது போறயா..?” என்று புரியமல் கேட்டவனை,
“காரணம் எல்லாம் கேட்காதீங்க, செய்யாதீங்கன்னா செய்யாதீங்க அவ்ளவுதான்..”
என்ற கதிரிடம்,
“ஏண்டா ஏதாவது பிரச்சனையா..?”
 “ம்ம்..  பிரச்சனையா..? ஆமா ஆமா என் பிரச்சனை கரடி ரூபத்துல என்கூடவே
இருக்கு..”, என்று நொடித்தவன்,
“இங்க பாருங்க இதுதான் கடைசி நான் சொல்றது, உங்க தலையில இடியே
விழுந்தாலும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, வைங்க..” என்று கடுப்பாக
கத்தியவன்,
“இவரை வச்சிக்கிட்டு..  லதாக்கா தான் பாவம்..” என்று வாய்விட்டு
திட்டியவன், திரும்ப அங்கு குளித்து வந்திருந்த மனைவியை பார்த்து
உல்லாசமாக விசிலடித்தவாறே, அவளின் அருகில் வந்தவன்,
“ஏய்.. செமயா இருக்கடி..” என்று மனைவியை இன்ச் பை இஞ்சாக பார்வையால்
அளந்தவன், அவளின் தாலியை சுவாதீனமாக கை விட்டு எடுத்து வெளியே விட்டவன்,
“இப்போதான் இன்னும் இன்னும் அள்ளுற போ..!!” என்றவனை, திகிலுடன் பார்த்த மனைவி,
“என்ன ஏன் ஏன் இப்போ இப்படியெல்லாம்..?” என்று  கணவனின் மோகப்பார்வையில்
திணறலுடன் கேட்க,
“இப்போ இல்லாம வேற எப்போ..? இதுவே லேட் தெரியுமில்லை”, என்றவன், “இந்தா
இந்த மல்லி பூவை வச்சிக்கோ..” என்று கொடுக்க,
“எனக்கு வேண்டாம், தலை வலிக்கும்..” என்று அவசரமாக சொன்னவளின் தலையில்
தானே பின் எடுத்து வைக்க தெரியாமல் ஏக்கு மாக்காக சொருக,
“நான்.. நானே வச்சிக்கிறேன்..” என்று தானே வைத்துக்கொண்டாள் மனைவி. அதில்
சிரித்த கணவன்,
“சரிவா சாப்பிட போலாம்..” என,
“எனக்கு பசிக்கல, நீங்க போய் சாப்பிட்டு வாங்க,  நான் தூங்க போறேன்..”
என்று சொன்னவள், வேகமாக பெட்டிற்கு போக,
“ம்ஹூம்.. இதுதானே வேண்டாங்கிறது”, என்று மனைவியை மடக்கி பிடித்தவன்,
“நீ என்ன சின்ன பொண்ணா அஞ்சலி, இப்படி பயப்பட்ற, அதிலும் டாக்ட்டர் வேற”,
“டாக்ட்டரா இருந்தா என்ன..? நானும் பொண்ணுதானே, எல்லோருக்கும் இருக்கிற
அதே பீலிங்ஸ் எங்களுக்கும் இருக்கும்”,  என்று படபடத்தவள், கணவனின்
பிடியில் இருந்து விலக பார்க்க,
“எனக்கு  இருக்கிற  பீலிங்ஸ் உனக்கு இருக்கிற மாதிரியே தெரியலையே.?
நமக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு, இன்னமும் இப்படியே இருந்தா
எப்படி..?”
 “நீங்கதான் என் மேல கோவமா இருக்கீங்களே..? மறந்துட்டேங்களா..?” என்று
அவனின் கோவத்தை வைத்து தப்பிக்க பார்க்க,
“கோவம்.. ஆமா இப்பவும் என்னை நம்பாத உன்மேல் கோவம் இருக்குத்தான், ஆனா
அதுக்காக எல்லாம் இதை தள்ளி போட முடியுமா..?”
“அதுமட்டுமில்லை  நானும் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி
பிரம்மச்சாரியாவே இருக்கிறது, அதுவும் இப்படி ஒரு “நச்..” பொண்டாட்டியை
பக்கத்துல வச்சிக்கிட்டு மூணு மாசம் சும்மா இருந்த என்மேலே எனக்கு
சந்தேகம் வந்துரும் போல”,
“அதனால  இனிமேலும் நான் இந்த விஷப்பரிட்சைய எடுக்கிறதா இல்லை”, என்று
சீரியஸாக சொன்ன கணவனின் தோணியில்,
“என்னங்க.. இது கொஞ்சம் சீக்கிரம் மாதிரி தோணுது, இன்னும் கொஞ்ச நாள்..”
என்று மறுபடியும் டைம் கேட்ட மனைவியை தீர்க்கமாக பார்த்த கணவன்,
“ஏன் அஞ்சலி உனக்கு இப்போ என்ன பிரச்சனை.?”  என்று கேட்டான், அவனின்
கேள்வியில் பதில் சொல்ல முடியமால் நின்ற அஞ்சலியின் மனதில், இன்னமும் ஒரு
விஷயம் மட்டும்  உறுத்தலாகவே இருந்தது. அதை வாய்விட்டு சொல்ல
யோசித்தவளின் தயக்கத்தை புரிந்து கொண்ட கதிர்,
“அஞ்சலி.. நீ என் பர்த்டேக்கு அப்பறம் என்கிட்ட எந்த கோவமும் படறதில்லை,
நான் கோவப்பட்டாலும் நீ விலகித்தான் போற, ஏன் அஞ்சலி இந்த திடீர்
மாற்றம்..?” என்று கூர்மையாக கேட்க, முதலில் பதில் சொல்ல யோசித்த அஞ்சலி,
பின் அவளே,
“இல்லை.. நான் உங்களை பழிவாங்கதான் என்னை கல்யாணம் செஞ்சிகிட்டேங்கன்னு
சொன்னது எனக்கே தப்பா, உறுத்தலா இருந்துச்சு, அதான்..” என்று சொன்னாள்,
“அப்போ மேடம் நீங்க சொன்னதுக்காக பீல் பண்றீங்க, ஓகே, ஆனா நான் இன்னும்
எதுக்கு உன்னை கல்யாணம் செஞ்சிகிட்டேன்னு சொல்லலை, ஏன் நீயும் என்கிட்ட
கேட்கிறதும் இல்லை..”
“நீங்க சொல்லலதான், எனக்கும் அதை கேட்கணும்ன்னு தோணல, ஆனாலும் கண்டிப்பா
எந்த தப்பான காரணமும் இருக்காதுன்னு தெரியும், அதான்”,
“அப்போ எல்லாம் ஓகேதானே, இன்னும்  என்ன..?” என்று அஞ்சலியின் மனநிலையை
தெரிந்தே கேட்டான்,
கதிர் சொல்வது போல் மேலோட்டமாக பார்த்தால் இதில் மறுக்க எதுவும்
இல்லைதான், ஆனால் அஞ்சலியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, உறுத்தல்,
கேள்வி, எல்லாம் கதிர் தன்னை காதலிக்கிறானா என்பதே..!!”
அது தெரியாமல் எப்படி தாம்பத்திய வாழ்க்கை..? என்றே நினைத்து தவித்தவள்,
கணவனிடம் அதை கேட்கவும் முடியமால் நின்றாள்,
“அஞ்சலி.. இனி  இதுதான் நம்ம வாழ்க்கை,  நானும்.. நீயும் தான்
காலத்துக்கும், எவ்வளவு காதல் இருந்தாலும்  நமக்குள்ள ஒளிவு மறைவும்,
தயக்கமும், சந்தேகமும், இருந்தா வாழ்க்கை நரகம் தான்”,
“அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் உனக்கு என்கிட்ட என்ன கேட்குணுமோ
கேளு..?” என்று நிறுத்தி நிதானமாக சொன்ன கதிரின் பேச்சில் உள்ள பொருளை
புரிந்து கொண்ட அஞ்சலி, கணவனின் முகத்தை பார்க்காமல், வேறுபக்கம்
திரும்பியவாறே,
“நீங்க.. நீங்க என்னை..? நான் உங்களை, அந்த மாதிரி…?’ என்று
கேட்கமுடியாமல் தடுமாறியவளின் கண்ணில் நீர் வர, மனைவியின் முகத்தை தன்
பக்கம் திருப்பியவன்,
“நானும் உன்னை லவ் பண்றேனான்னு தானே கேட்கிற..?” என்று பளிச்சென்று கேட்ட
கணவனை, கண்ணீர் வழிய பார்த்த அஞ்சலி, “ஆமா..” என்று தலையாட்ட,
“உனக்கு நான் உன்னை லவ் பறேனான்னு மட்டும் தெரிஞ்சா போதுமா..? இல்லை நான்
 ஏன் உன்னை கல்யாணம் செஞ்சிகிட்டேன்னு தெரியணுமா..?”
“எனக்கு முதல் கேள்விக்கு மட்டும் பதில் தெரிஞ்சா போதும், வேறேதுவும்
தெரிய வேணாம்..”, என்று மெலிதான அழுகையுடன் சொன்னாலும், உறுதியாக சொல்லி
தன் காதலை நிரூபித்தாள் அஞ்சலி.
“சரி நான் ரெண்டாவது கேள்விக்கு பதில் சொல்றேன், அதை வச்சி  நான் உன்னை
லவ் பண்றேனா..? இல்லையான்னு நீயே கண்டுபிடிச்சுக்கோ..?” என்று
எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான் கதிர்.

Advertisement