Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 28 { FINAL 1 }
“கதிர்.. நான் கொஞ்சநாளைக்கு நம்ம ஊட்டி கெஸ்ட் அவுசுல இருக்கலாம்ன்னு
நினைக்கிறேன்..” என்று மதிய உணவின்போது மாறன் சொல்லவும்,
“ஏன்ப்பா.. என்ன ஆச்சு..?” என்று தந்தையின் திடீர் முடிவில் கவலையுடன்
கேட்டான் கதிர்,
“ஒண்ணுமில்லைப்பா, சும்மாதான், எனக்கு இங்கேயே இருக்க எப்படியோ போல
இருக்கு..”, என்று மனைவி இழந்த முதுமை வயதின் தனிமை வாட்ட சொன்ன
தந்தையின் தனிமை துயரை புரிந்து கொண்ட கதிர்,
“ம்ம்.. சரிப்பா, போலாம், நாங்களும்  வரோம்” என்று தந்தையை தனியே விட
மனமில்லாத கதிர் தங்களையும் இணைத்து கொள்ள,
“வேண்டாம்ப்பா.. நீங்க இங்கேயே இருந்து உங்க வேலைகளை பாருங்க, நான்  நம்ம
நாயகியும், மாப்பிள்ளையும் என்னோட கூட்டிட்டு போறேன், அவங்களும்
பிள்ளைங்களை கட்டி கொடுத்துட்டு தனியாத்தான் இருக்காங்க, அவங்களுக்கும்
ஒரு மாறுதலா இருக்கும்”, என்று முன்னமே யோசித்து வைத்திருந்த மாறன்
சொன்னார்.
“அக்காவும் வரட்டும், நாமளும் போலாம்ப்பா..” என்று மறுபடியும் சொன்ன
மகனின் எண்ணத்தை கண்டுகொண்ட மாறன்,
“கதிர் நீ என்னை நினைச்சு கவலை படாத, நான் நல்லாத்தான் இருக்கேன், ஒரு
சேஞ்சுக்காக மட்டுமே போறேன். அதுமட்டுமில்லாம நீங்க இப்படி உடனே  போட்டது
போட்டபடியே கிளம்ப முடியாது, மருமகளுக்கும் ஹாஸ்பிடல் டியூட்டி இருக்கு”,
“உனக்கும் நீதான் இங்க எல்லாத்தையும் பார்த்துக்கணும், அதனால நீங்க
பொறுமையாவே வாங்க, நாங்க முதல்ல கிளம்புறோம்” என்று மாறன் முடிவாக
சொல்லிவிட, அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தபடியால், கதிரும்
“சரிப்பா..” என்றுவிட்டான்.
மாறன் அன்றிரவு மருமகளிடமும் இதையே சொல்ல, “ஏன் மாமா இப்படி நாளைக்கே
போகணும், ஒருநாள் மட்டும் டைம் கொடுங்க, நாங்களும் உங்களோட வரோம்..”
என்று மாமனாரின் தனிமை உணர்வை முன்னமே கணித்திருந்த அஞ்சலி சொல்லவும்,
“உங்க வேலையெல்லாம்  ஓரங்கட்டிட்டு  நீங்களும் ஒரு அஞ்சு,பத்து நாள் அங்க
தங்குறது போல பொறுமையா வாங்கம்மா,  கல்யாணம் ஆன நாள்லலிருந்து
எங்கேயும் போகாம நீங்களும் வேலை வேலைன்னு தான் ஓடிட்டு இருக்கீங்க”,
என்று முடிவாக  முடித்துவிட்டவர்,  சொன்னதுபோல் மறுநாளே  நாயகியுடனும்,
மருமகனுடனும் ஊட்டிக்கு கிளம்பிவிட்டார்.
“என்னங்க.. தண்ணீ கேட்டங்களே..”  என்று அஞ்சலி கொடுக்கவும், அமைதியாக
வாங்கி கொண்ட  கதிர், குடிக்காமல் ஏதோ சிந்தனையில் இருக்க,
“ஏங்க  குடிக்கலயா..?” என்று 5 நிமிடம் பொறுத்துப்பார்த்த அஞ்சலி
கணவனிடம் கேட்டாள்.
“ம்ம்.. குடிக்கிறேன்” என்று சொன்னவன், குடிக்காமல் இருக்க,
“மாமாவை நினைச்சு கவலை படறீங்களா..?” என்று அஞ்சலி கணவனின் கவலையை
புரிந்து கேட்கவும்,
“ம்ம்..” என்றவன், “அவரோட தனிமையை எப்படி குறைக்கிறதுன்னு தெரியல..?’,
என்று யோசனையாக சொன்னவன்,
“முன்னாடியாவது பிஸினஸ், கட்சி, கட்ட பஞ்சயாத்துன்னு ஓடிட்டேருப்பார்,
ஆனா அம்மா..?  அப்பாவுக்கு எல்லாத்திலும்   இண்டெர்ஸ்ட்  போயிருச்சு”,
“நானும் அவரை பழையபடி கொண்டுவர நிறைய முயற்சி செஞ்சுட்டேன், ஆனா அவராலே
முன்னமாதிரி  முடியல, ஓர் அளவுக்கு அவரை வற்புறுத்த மேல என்னாலயும்
முடியல, அதான் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன்”. என்று சொன்ன கதிரின் கவலை
சரியே என்று அஞ்சலிக்கும் புரிய,
“அவருக்கு பிடிச்சதா யோசிச்சு ஏதாவது கண்டிப்பா செய்யலாங்க..”, என்று
தானும் யோசனையுடன் சொன்னவளுக்கு, காலை கிளப்பும்போது நாயகி தனியே
கூப்பிட்டு சொன்னது ஞாபகம் வரவும், தன்னையறியாமலே முகம் சிவந்துவிட்டாள்.
“அவருக்கு பிடிச்சது..” என்றவாறே சிறிது நேரம் யோசித்தவனுக்கு, சட்டென்று
ஒரு யோசனை தோன்றவும் அதுவரை இருந்த கவலை மறைந்து, முகம் பிரகாசமானது,
“ம்ம்.. ஓரு ஐடியா வந்திருக்கு அஞ்சலி, பாக்கலாம் எந்தளவுக்கு ஒர்க்
அவுட் ஆவுதுன்னு..” என்று சொன்னவாறே மனைவியை பார்த்த கதிர்,  அவளின்
திடீர் முகசிவப்பில் புரியமல்,
“என்னடி..?” என்று கேட்க,
“ஒன்னும்.. ஒன்னும் இல்லை”, என்று கதிரின் முகம் பார்க்காமல் சொன்னவள்
சட்டென முகம் திருப்பிக்கொண்டு படுப்பதற்கு ஆயத்தமாக பார்த்திருந்த
கதிருக்கு மனைவியின் மாற்றம் கோவத்தையே தந்தது,
இதுபோல்தான் இப்போதெல்லாம்  தான் என்ன கேட்டாலும், கோவப்பட்டாலும்,
சீண்டினாலும் அமைதியாக விலகி போகும் மனைவியின் செயலில்தான் கடுப்பானன்
கணவன்.,
கதிரின் பிறந்தநாளிற்கு பிறகு அஞ்சலிக்கும், கதிருக்கும் இடையில் சண்டையே
வரவில்லை, ஏனெனில் இங்கு கதிர் மட்டுமே மனைவி தன்னை நம்பாத கோவத்தை
வாய்ப்பு அமையும் போதெல்லாம் காட்டிகொண்டிருக்க, அஞ்சலியோ கணவனின்
கோவத்தை பொறுத்து கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும்,
அவளை பொறுத்தவரை கதிருடனான வாழ்க்கை  அவள் ஆசைப்பட்டு ஏங்கின வாழ்க்கை,
அதை எக்காரணம் முன்னிட்டும்  கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை,
அதுமட்டுமில்லாமல் அன்று கணவன் கேட்ட கேள்வி
“என்னோட கேரக்டர் என்னன்னு தெரியாமத்தான் நீ என்னை லவ் பண்றியா..? என்ற
கேள்வியும்,
“என்மேல இந்தளவு உயர்வான எண்ணம் உள்ள உன் காதலை பார்த்து நான்
புல்லரிச்சு போயிட்டேன் போ…”  என்று அவனை தப்பாக நினைத்த என்னை.. என்
காதலை கதிர் கிண்டலாக பேசியதும் அஞ்சலியை மிகவும் மாற்றியது என்பதை விட
பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அதோடு அவளுக்குமே கணவனை நம்பாமல் தன் காதலை தானே சந்தேகபட்டத்தோடு,  அவனை
காயப்படுத்திவிட்டதாகவும்  தோன்ற ஆரம்பித்திருந்தது,
அவர் என்கிட்ட கேட்டது போல, “என்னை நீ லவ் செஞ்சிட்டா என்னை பத்தி என்ன
வேணும்னாலும் பேசுவியா..?” என்ற அவனின் தார்மீக கோவம், அஞ்சலிக்கு தன்
தவறை உணர்த்தியது,
அவர் கேட்டதும் சரிதானே..!!!, அவர் அப்படி இல்லை என்று குறைந்தபட்சம்
எனக்கு நன்றாகவே தெரியாத்தானே செய்யும், அப்படியிருந்தும்  “கோவத்தில்
அவரை அப்படி பேசியதோடு, அவரோடு வாழவரமாட்டேன்னு சொல்லி, அவர் கட்டின
தாலியையும் மறைச்சு, இப்போது நினைத்து பார்த்தால், தான் அன்று
செய்ததெல்லாம் மிகப்பெரிய தவறோ..?” என்று ஆழமாக தோன்றியது.
அவரிடம் “அன்று பொறுமையாக பேசியிருக்கலாமோ..?’ என்று நூறாவது முறையாக
இன்றும் தோன்றியது,  இதுபோன்ற காரணங்களுக்காகவே கதிர் கோவப்படும்
போதெல்லாம் அமைதியாக விலகி சென்றுவிட்டாள் அஞ்சலி.
அவள் எதிர்த்து சண்டை போட்டாலாவது சண்டை போட முடியும், இப்படி விலகி
போகிற அவளிடம் கோவத்தை காட்டமுடியாத கதிர், மனதில் பொறுமவே செய்தான்,
அதனாலே,
“என்னடி ஆச்சரியமா இருக்கு, பழிவாங்க தாலி கட்டின புருஷனை இப்படி
விழுந்து விழுந்து கவனிக்கிற..?” என்று அவனுக்கு தேவையானதை செய்யும்போது
சீண்டுபவன்,
“என்னடி பழிவாங்க தாலி கட்டின புருஷனுக்கு போய் ஏன் செய்யணும்ன்னு
செய்யாம இருக்கியா..?” என்று அவள் ஏதாவது செய்யாமல்  விட்டுப்போனாலோ,
மறந்து போனாலோ,  பேச்சிலே குத்த செய்வான்,
அவனின் குத்தலில் முணுக்கென்று கோவம் வந்தாலும், அவன் வேண்டுமென்றே தான்
பேசுகிறான் என்று ஞாபகப்படுத்தி தன்னை தானே கட்டுப்படுத்தி கொள்வாள்.
இன்றும் அதுபோல் தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தூங்க செல்லும் மனைவியை,
“என்னன்னு கேட்டேன் இல்லை..?” என்று மறுபடியும் அதட்டி கேட்க,
“ஒன்னும் ஒன்னும் இல்ல இல்லங்க..” என்று  நீண்ட நாட்களுக்கு பிறகு சிவந்த
மனைவியின் முகத்திலும், திணறலலிலும்  தன் கோவத்தை மறந்து
சுவாரிஸ்யமானவன்,
“அப்போ என்னன்னு டாக்ட்டர் மேடம் என்கிட்ட சொல்லமாட்டேங்க
அப்படித்தானே..?” என்றவனுக்கு காலையில் நாயகி கிளம்பும்போது மனைவியை
தனியே கூப்பிட்டு எதோ சொன்னதும், அதற்கு மனைவி முகம் சிவந்ததும்
ஞாபகத்திற்கு வர,
“காலையில் அக்கா உன்னை தனியா கூப்பிட்டு என்ன சொன்னாங்க..?”  என்று கேட்க,
“அண்ணி.. அண்ணி என்ன சொன்னாங்க, ஒன்னும் இல்லையே..!!” என்று அந்த பக்கம்
முகம் திருப்பி படுத்தவாறே சொன்ன மனைவியை தன் பக்கம் திருப்பியவன்,
அவளின் சிவந்த முகத்தை ரசனையாக பார்த்தபடி,
“ம்ஹூம்.. எதோ சொன்னாங்க, அதுக்கு உன் முகம் இப்போ சிவந்திருக்கிற
மாதிரிதான் அப்பவும் சிவந்திருந்துச்சு, அப்படியென்ன சொன்னாங்க சொல்லு”,
என்று விடாமல் தூண்டி துருவியவனிடம்,
“இதுவரை அவர்கிட்ட உளரனது எல்லாம் போதும் அஞ்சலி, இனியாவது உஷரா
இரு..!!!” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள்,
“அது சும்மா நாங்க லேடீஸ் ஏதாவது பேசுவோம், அதெல்லாம் சொல்ல முடியுமா..?”
என்று மழுப்பிய மனைவியை கிண்டலாக பார்த்த கதிர்,
“ஓஹ்.. உஷாரா இருக்கீங்களாக்கும்..!!” என்று நக்கலாக சொன்னவன், “கடைசியா
கேட்கிறேன் சொல்லுவியா..? மாட்டியா..?” என்று கேட்ட கணவனிடம்,
“சும்மாதான் பேசினாங்க, அதுல முக்கியமா சொல்றதுக்கு என்ன இருக்கு..?”
என்று சொன்ன மனைவியை கண்கள் சுருக்கி பார்த்தபடி மொபைலை எடுக்க, அவன்
செய்ய போகும் செயலில் பதறிய அஞ்சலி, வேகமாக எழுந்து அமர்ந்து அவனிடம்
இருந்து மொபைலை பிடுங்க பார்க்க,
“அப்படி வாங்கிடுவ நீ..” என்று மொபைலை தூக்கி பிடித்து, நாயகிக்கு கால் செய்ய போக,
“ஏங்க என்ன செய்றீங்க நீங்க, அந்த மொபைலை முதல்ல கொடுங்க..” என்று மொபைலை
வாங்க முயற்சித்தவளை, கண்டு கொள்ளாமல், கால் செய்தும் விட,
“அச்சோ.. காலே பண்ணிடீங்களா..?” என்று பதறியவளிடம்,
“பின்ன பண்ண மாட்டோமா..? நீதான் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டியே..?”
என்றவன், அந்த பக்கம் நாயகி போன் எடுத்துவிடவும்,
“க்கா.. காலையில..” என்று பேச ஆரம்பிக்க, வலுவாக எட்டி மொபைலை பிடிங்கியவள்,
“அண்ணி.. சும்மாதான் பண்ணோம், எல்லாரும் சாப்பிட்டங்களா..? மாமா என்ன
செய்றாங்க..?” என்று பொதுவாக பேச வைத்தவள்,
“என்ன என்னதான் உங்க பிரச்சனை..?, ஏன் இப்படி செஞ்சேங்க..?” என்று
கணவனிடம் கத்த, அவனோ,
“ஏன் அஞ்சலி, நீ இங்க வந்ததிலிருந்து அந்த ட்ரெஸை போடவேயில்ல..?’, என்று
கேட்க, அவனின் திடீர் சம்மந்தமில்லா கேள்வியில் புரியாமல் முழித்த
அஞ்சலி,
“எந்த டிரஸ்..?’ என்று கேட்க,
“அதான் நான் உங்க வீட்டுக்கு பர்ஸ்ட் பர்ஸ்ட்டா வந்தப்போ,  தூங்கி
எந்திருச்சு அப்படியே ஓடி வந்திருந்ததியே அப்போ ஒரு டிரஸ் போட்டிருந்த
இல்ல அந்த டிரஸ் தான்.”
 “அந்த ட்ரெஸ்ல சும்மா அப்படி இருந்த, அதுலயும் அந்த டிரஸ் மேல நான்
கட்டின தாலி பளிச்சென தொங்கவும், பார்த்த மாமனுக்கு எப்படி எப்படியோ
ஆகிருச்சு போ..!!”, என்று உல்லாசத்துடன் சொன்ன, கணவனை திகைப்புடன்
பார்த்தாள் மனைவி,
“அப்போ எதுக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தார் இவர், அப்போ போய் என்ன
வேலை பார்த்திருக்கார்..!!” என்று முறைக்க,
“என்னடி.. என் பொண்டாட்டியை நான் சைட் அடிச்சா என்ன தப்பு..” என்று பதில்
கேள்வி கேட்டவனை கடுப்புடன் பார்த்தவள்,
“எதோ சீனியாரோட தங்கச்சியை சைட் அடிக்க மாட்டேன்னு சொன்னேங்க..”
“ஆமா இப்பவும் சொல்றேன், சீனியாரோட தங்கச்சியை சைட் அடிக்க மாட்டேன்னு
தான், அது ப்ரண்ட்ஷிப்புக்கு கொடுக்கிற மரியாதை”,
“ஆனா என் பொண்டாட்டியை சைட் அடிக்கிறது என் பொண்டாட்டிக்கு  கொடுக்கிற
மரியாதை, இல்லன்னா என் பொண்டாட்டி ரொம்ப வருத்தபட மாட்டா, ஏற்கனவே நான்
அவளை சைட் அடிக்கலன்னு ஏகத்துக்கும் சண்டை போட்றா..” என்று சிரிப்புடன்
சொல்ல,
“இது என்ன பதில்..?” என்று பார்த்த மனைவியிடம்,
“அதெல்லாம் விடு, நீ ஏன் அந்த டிரஸ்  போடறதில்லை..?” என்று அதுதான்
முக்கியம் என்பது போல் கேட்க,

Advertisement