Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்  PREFINAL 2
“கதிர் தம்பி என் பெரிய மகனை போலீசில் புடிச்சு கொடுக்கிறதுக்கு
முன்னாடி, என்கிட்டத்தான் முதல்ல கேட்டார், நானும் ஒரு பொம்பளை புள்ளைய
பெத்திருக்கேன், என் மகன் செஞ்சதும் தப்புக்கு தண்டனை கிடைக்கணும்ன்னு
நானும் ஒத்துக்கிட்ட பின்னாடிதான் தம்பி போலீசுக்கே போச்சு”,
“அதுக்கு அப்பறம் நானும் தம்பியும் எப்போ பார்த்தாலும் பேசிக்குவோம்,
அப்படிதான் அவரோட  கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட் கதிர் தம்பி எனக்கு
போன் செஞ்சு உடனே மண்டபத்துக்கு வர சொல்லியிருந்தார்,  நானும் என்னமோ
ஏதோன்னு ஓடி போனேன், அங்க என் ரெண்டாவது பையன் கதிரோட கட்டுப்பாட்டுல
இருந்தான்”,
“என்னன்னு விசாரிச்சப்போதான் எனக்கே தெரிஞ்சது, என் பையனும், கதிர்
கல்யாணம் செஞ்சிக்க இருந்த பொண்ணு லாவண்யாவும் ஒரே காலேஜில
படிச்சவங்கன்னு, அதுமட்டுமில்லை என் பையன் லாவண்யாவை  அதான் என் மருமகளை
காதலிச்சிருக்கான்னு தெரிஞ்சது”,
“என் மருமகளுக்கும் என் பையன் மேல லேசு பாசா ஆசை இருந்திருக்கு, ஆனா
உனக்குத்தான் தெரியுமே, நம்ம ரெண்டுபக்க பிரச்சனையும், அதனாலே என் மருமக
பயந்துட்டு என் பையனோட காதலை ஏத்துக்காம,  கதிர் தம்பியோட
கல்யாணத்துக்கும் ஒத்துக்கிச்சு, பாவம் பயந்த புள்ள..!!!”,
“ஆனாலும் என் மகன் விடாம மண்டபம் வரைக்கும் போயிட்டான், அப்பறம் என்ன
கதிர் தம்பிகிட்ட மாட்டாம இருக்க முடியுமா..? மாட்டிகிட்டான். அவரும்
விசாரிச்சு எனக்கு போன் செஞ்சிட்டார்”,
“விஷயம் தெரிஞ்சி நானும், கதிர் தம்பியும் மருமக புள்ளைய கூப்பிட்டு
விசாரிச்சோம், அந்த புள்ள பயந்துகிட்டு முதல்ல மறுத்தாலும் அப்பறம்,
அவளும் என் மகனை விரும்பறதை அழுதுகிட்டே ஒத்துக்கிச்சு”,
“அதுக்கு அப்பறம் தான் என்ன செய்றதுன்னு தெரியாம யோசிச்சப்போ, லஷ்மி
அம்மாதான்  விடிஞ்சா முகூர்த்தம், இப்போ எதுவும் செய்ய முடியாது, அதனால
நீங்க உங்க  மருமகளை  கையோடு கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்க”,
“லட்சுமி அம்மா சொன்ன மாதிரி வேற வழியில்லாம நாங்க மருமகளை கூட்டிட்டு
கிளம்பும்போது, ரெண்டு பேர் பாத்துட்டாங்கபோல, அதுக்கு அப்பறம்  இந்த
விஷயம் வெளியே வேறமாதிரி பரவி, பிரச்சனை ரொம்ப பெருசாயிடுச்சு”,
“நாங்களே இதை கொஞ்சம் கூட  எதிர்பார்க்கல, ஏதாவது சொல்லி
சமாளிச்சிக்கலாம்ன்னு தான் நினைச்சிருந்தோம், எனக்கு சென்னை போய் சேர்ந்த
பின்னாடி விஷயம் தெரிஞ்சு  உண்மையை சொல்லிடலாமான்னு கதிர் தம்பிகிட்ட
போன் செஞ்சு கேட்டேன், ஆனா அவர்தான், வேண்டாம்  விடுங்க பரவாயில்லன்னு
சொல்லிட்டார்,
ஆனா  நடந்ததுன்னு என்னன்னு தெரியாம எல்லாரும் பிரச்சனையை பெருசாக்கி
நிறைய பேசிட  லட்சுமி அம்மாதான், மனசளவில ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க,
என்று வருத்தத்துடன் சொன்னவர்,
“ஆனா நாங்க இந்த பிரச்சனையில சுந்தரத்தை கொண்டு வரணும்னு நினைக்கவே
இல்லை, இங்க இருந்தா யார் கண்ணிலாவது பட்டா பிரச்னை ஆகிரும், எங்க
கூட்டிட்டு போறதுன்னு புரியாம முழிச்சப்போ, கதிர் தம்பிதான் உன் அப்பாவோட
சென்னை கிளம்ப ஐடியா கொடுத்தார்”. என்று இறுதியில் மொத்தமாக கதிரையும்
போட்டு கொடுத்துவிட்டார் மனிதர்.
மற்ற எல்லாவற்றயும் பொறுத்து கொண்ட அசோக்கால், கதிர் தான் சுந்தரத்தோடு
செல்ல  ஐடியா கொடுத்ததை மட்டும் பொறுத்து கொள்ள முடியவில்ல,
“டேய்.. நீயே ரூட் போட்டு  கொடுத்துட்டு,  இத்தனை நாளா எங்களை அந்த
பாடுபடுத்தினயா..? உன்னை விடமாட்டேன்டா..” என்று அவனின் மேல் பாய்ந்தே
விட்டான், இருவரும் சிறிது நேரம் உருண்டு புரண்டு சண்டையே போட்டனர்.
ரத்தினம் அவர்களின் சண்டையில் சிரிக்க, அஞ்சலி கணவனை தான் ஆச்சரியத்துடன்
பார்த்து கொண்டிருந்தாள்.
.
“நீயே இதெல்லாம் செஞ்சிட்டு அப்பறம் ஏண்டா அஞ்சலியை இப்படி..?” என்று
சண்டை முடியவும்,  சந்தேகத்துடன்  கேட்ட அசோக்கிடம்,
“விடுங்க சீனியர்..”  என்று ஒரே வார்த்தையில்  முடித்த கதிரின்
விருப்பமின்மையை புரிந்து கொண்ட  அசோக்கிற்கு, நன்றாக தெரிந்தது,
“கதிருக்கு அஞ்சலியின் காதல் முதல்லே தெரிந்திருக்கிறது..” என்று,
 அதனாலே, “சரி விடு..  இப்போ ஆல் ஓகேதான், அது போதும்..”என்று தானும்
முடித்துவிட்டான். அதற்கு பின் சிறிது நேரம் மூவரும்
பேசிக்கொண்டிருந்துவிட்டு, வீட்டிற்கு கிளம்ப, கதிரே அஞ்சலியை கூட்டிட்டு
கிளம்ப, அசோக்கும் ரத்தினமும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.
கதிருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அஞ்சலிக்கு, “கதிரை புரிந்து
கொள்வதில் தான் எங்கேயோ தவறிவிட்ட உணர்வு..!!! வலுவாக தோன்ற
ஆரம்பித்தது”.
“அப்போ கூட என்னை கல்யாணம் செஞ்சிகிட்டப்போ, எதோ சொல்லணும்ன்னு
சொன்னாரே..!!  நாந்தான் அப்போ இருந்த கோவத்துல அவர் சொல்ல வர்றதை கேட்காம
விட்டுட்டேன்”,
“ச்சே.. நான் ஏன் இப்படி ஆயிட்டேன்..? அன்னிக்கு கொஞ்சம் பொறுமையா
இருந்திருக்கலாமோ..?” என்று தன்னயே மனதில் கடிந்து கொண்டவள், கணவனிடம்
எப்படி கேட்க..? என்ற மிகுந்த தயக்கத்துடனும், அவனின் அதீத கோவத்தில்
பயத்துடனும் கணவனை பார்த்தபடியே வீட்டிற்கு வந்தாள்.
வீட்டிற்குள் வந்தவுடனே கதிர் படுக்க ஆயத்தமாக, அவசரமாக அவன் முன் சென்று
நின்றவள், “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று
“கதிர் அன்று சொல்ல வந்ததை,  இதற்கு மேலும் கேட்காமல் இருப்பது
தவறு..!!!” என்று தோன்ற, இறுதியில் கணவனிடம் வந்து நின்று விட்டாள்.
கதிரோ மனைவியின் பேச்சு காதில் விழுக்காதது போல, அவளை சுத்தி கொண்டு
பெட்டிற்கு  தூங்க சென்றுவிட்டான்,
கணவனின் இத்தகைய செயலை எதிர்பார்த்தே இருந்த மனைவி, தானும் பெட்டிற்கு
சென்றவள், அவன் அருகில் உட்கார்ந்தபடி, “என்னங்க.. ப்ளீஸ் நான் அன்னிக்கு
நீங்க சொல்ல வந்ததை பொறுமையா  கேட்காம விட்டது தப்புதான், சாரி..” என்று
இறங்கி வந்தவள்,
கணவனின் மூடிய கண்களை பார்த்தபடியே, “இப்போ கேட்கிறேன் சொல்லுங்க
ப்ளீஸ்..” என்று தயக்கத்துடன் மெலிதான குற்ற உணர்ச்சியுடன் கேட்க,
கதிரின் முகம் மிகவும் இறுகிதான் போனது, அவனின் முகத்தில்  தெரிந்த
கோவத்தில், லேசான பயம் எழுந்தாலும்,
“அன்னிக்கு எதோ கோவம்.. அதான் அப்படி.. தப்புதான்”, என்று சொல்ல, டக்கென
கண்களை திறந்த கதிரின் கண்கள் கோவத்தில் சிவந்திருக்க,
“அன்னிக்கு தான் எதோ கோவம். சரி, ஆனா அதுக்கு அப்பறம் இந்த மூணு மாசமும்
உனக்கு என்கிட்ட கேட்க தோணல தானே அப்பறம் என்ன..? வந்துட்ட இப்போ மட்டும்
 பெருசா கேட்க,..?” என்று கோவத்தில் பல்லை கடித்து கேட்டவனிடம்,
“அது.. அது” என்று பதில் சொல்ல முடியாமல் தயக்கத்துடன் இழுத்த மனைவியை வெறித்தவன்,
“நீ என்னை லவ் பண்ணிட்டா  என்னை பத்தி என்னவேனும்னாலும் பேசுவியா..?
இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன், என்னோட கேரக்டர் என்னன்னு தெரியாமத்தான்
இத்தனை வருஷமா நீ என்னை லவ் பண்னுனியா..?”
“என்னைக்கு நான் பிரச்சனைக்குள்ள பொண்ணுங்களை கொண்டு வந்திருக்கேன்..? நீ
வருஷக்கணக்கா லவ் பண்ண என்னை பத்தி உனக்கு எந்தளவு நல்ல எண்ணம்.
இப்படிப்பட்ட உன் காதலை பார்த்து நான் புல்லரிச்சு போயிட்டேன் போ”,
“இதுல என்னமோ இந்த உலகத்திலே இந்தம்மா  காதல் தான் பெருசுன்னு நினைப்பு
வேற, போடி.. இந்தளவுக்கு   என்னை பத்தி  உயர்வா நினைச்ச உனக்கு, நான்
எந்த விஷயத்தையும் சொல்றதா இல்லை, எழுந்து போயிடு..” என்று ஆவேசமாக
மிரட்டியவன், கண்கள் மூடி படுத்துவிட,
அவனின் கோவத்தில் உள்ள நியாயத்தில் எதுவும் பேச முடியாத அஞ்சலி, கதிரை
சமாதானப்படுத்தும் முயற்சியாக மறுபடியும், “என்னங்க.. ப்ளீஸ்.. நான்
உங்களை  தப்பா நினைச்சது தப்புதான், ஒத்துகிறேன், ஆனா, என் பக்கமும்
கொஞ்சம் கேளுங்களேன்..” என்று கெஞ்சலாக கேட்டவளை, கண்களை திறந்து
முறைத்தவன்,
“ஏய் எந்திரிடி முதல்ல..” என்று சத்தமாக அதட்ட, அவனின் திடீர் அதட்டலில்
படக்கென எழுந்த மனைவியை,
“போ போய் படு போ.. போடி” என்று அதற்கு மேல் அவள் பேச வாய்ப்பு
கொடுக்காமல் கோவப்பட்ட அவனின் கோவம்,  அன்று மட்டுமில்லை அந்த வாரம்
முழுவதும் தொடர, அஞ்சலி தான் நிலையில்லாமல் தவிக்க ஆரம்பித்தாள்,
“ஒரு நேரம் தான் தான் தவறோ..?” என்று யோசிப்பவள், அடுத்த நேரம்,
“நான் எப்படி தப்பு..? அவர்தான் தப்பு, ஒருவேளை அந்த பொண்ணை தேடி
அன்னிக்கு ரத்தினம் மாமா பையன் மட்டும் வரலைன்னா, இவர் அந்த பொண்ணை
கல்யா.. செஞ்சிருப்பார் தானே, இதுல அவரோட பங்கு என்ன இருக்கு..?” என்று
கணவன் மேல் கோவம் கொண்டு தானும் முறுக்கி கொண்டு திரிவாள்,
ஆனால்  அவளின் அந்த கோவம் சில நேரம் கூட தாக்கு பிடிக்காமல், மறுபடியும்
“கணவன்  பக்கம் எதோ காரணம் இருக்கு, அது என்னன்னு சொன்னாதான்
என்னவாம்..?” என்று கெஞ்சி கொண்டு கணவன் பின்னே சுத்துவாள்.
ஆனால் அவளின் கணவனோ அவள் கெஞ்சி கொண்டு அவன் பின்னே சுத்தும் போது கண்டு
கொள்ளாதது போல் , அவள் அவன் மேல் கோவப்பட்டு  பேசாமல் இருக்கும்போதும்
கண்டு கொள்ள மாட்டான், அதில் அஞ்சலி இன்னும்தான் சோர்ந்து போனாள்.
“இவருக்கு என்னதான் வேணுமா..? நான்தான் நான் செஞ்சது தப்புன்னு
ஓத்துக்கிட்டு சாரியும் கேட்டுட்டேன், அப்படியும் என்ன நடந்துச்சுன்னு
சொல்லாம இப்படி என்னை அலையவிட்டா என்ன அர்த்தம்..?” என்று மனதுக்குள்
புழுங்கியவளின் வேதனையை கண்டும் புறக்கணித்தான்  கதிர்,
இப்படியே இவர்களின் நாட்கள் நகர, “மறுநாள் கதிரின் பிறந்தநாள்.!!”,
முன்தினமே மாமனாரிடம் லக்ஷ்மியின் வேண்டுதலை ஞாபகப்படுத்தி, மறுநாள்
கோவிலில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தவள் மனதளவில் ஓர் முடிவுக்கு
வந்துவிட்டாள்,
“இனி அவர் என்கிட்ட எதுவும் சொல்லன்னா கூட பரவாயில்லை, எனக்கு அது
தேவையும் இல்லை, அன்னிக்கு அவர் கோவப்பட்டு சொன்னமாதிரி அவர் கேரக்டர்
என்னன்னு தெரியாமையா அவரை நான் காதலிக்கிறேன்”,
“அவர் என்ன செஞ்சிருந்தாலும் சரி, செய்யலன்னாலும் சரி,   என் காதல்
உண்மைதானே..!!  ஒருகாலத்துல அவரோட வாழணும்ன்னு நான் ஏங்கின வாழ்க்கை தானே
இது..”,
“நான் கனவுல கூட நினைச்சு பார்க்காத வாழ்க்கை..!! அதிசயத்திலும் அதிசயமா
எனக்கு இப்போ கிடைச்சும் இருக்கு, அப்படிப்பட்ட வாழ்க்கையை நான் ஏன்
கோவப்பட்டு, சண்டை போட்டு கஷ்டப்படுத்துகினும்..”
“அப்போ தான்  நான்  கோவப்பட்டு எதோ எதோ நடந்திருச்சு, இனியும் அது தொடர
வேண்டாம், அவர் எப்போ என்னோட சமாதானம் ஆகிறாரோ ஆகட்டும்,  என்று நிலையான
முடிவெடுத்தவள்,
மறுநாள் காலை, கணவனிடம் வந்து நின்றவள். “கோவிலுக்கு போகணும்..” என்று கேட்க,
“போ..”  என்பதுபோல் பார்த்தவன், விலகி செல்ல, மறுபடியும் அவன் முன் நின்றவள்,
“நீங்களும்தான் வரணும்..” என்று அவனின் கண் பார்த்து உறுதியாக சொல்ல,
அவளின் மாற்றத்தை உடனே கண்டுகொண்டவன்,

Advertisement