Advertisement

அதை இப்போது நினைத்து பார்த்து பொங்கி கொண்டிருந்தவளுக்கு அசோக்கிடம்
இருந்து போன் வரவும் அடுத்து இவரா..? என்று சலித்தபடியே எடுத்தவள்,
“சொல்லுண்ணா..” என,
“அஞ்சலி.. உனக்கும், கதிருக்கும் ஏதாவது பிரச்சனையா..?” என்று சந்தேகமாக
கேட்டான் அசோக்,
“ஏன் கேட்கிற..?” என்று யோசித்தபடியே கேட்டாள் அஞ்சலி,
“இல்லை.. கதிர் ஏதோபோலதான் இருக்கான், அதான் கேட்டேன்”, என்றவன்,
“ஏன் அஞ்சலி..? ஒருவேளை நீ சந்தேகப்பட்ட மாதிரி   உன் காதல் விஷயம்
கதிருக்கு தெரிஞ்சிருக்குமோ..?” என்று இழுக்க, கடுப்பானவள்,
“அது தெரிஞ்சா மட்டும் இப்போ என்ன..?” என்று நொடிக்க,
“என்ன இவ்வளவு அசால்ட்டா சொல்ற..?”
“ம்ப்ச்.. இப்போ அதைப்பத்தி நீ ஏண்ணா கேட்கிற..?”
“இல்லை எனக்கென்னமோ கொஞ்சநாளா எதோ சந்தேகமாவே இருக்கு, அவன்
கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்  நான் மாடியில வீடியோ கால் பேச
வந்தேன்  இல்லை, அது யார் தெரியுமா..?”
“யார்ண்ணா..?” என்று கலக்கத்துடன் கேட்க,
“கதிர்கிட்ட தான்..”
“மூன்று வருடங்களுக்கு முன் கதிரின் திருமணத்திற்கு முன்தின இரவு,
அஞ்சலியால் அவளின் காதல் தொல்வியடைவதை நினைத்து என்ன முயன்றும் தூங்க
முடியாமல் போக,  இரண்டு தூக்கமாத்திரை போட்டு தூங்க முயற்சித்தாள்”.
“ஆனாலும் அடிமனதின் ஆழந்ததுக்கம் அவளை தூங்கவிடாமல்  செய்ய, தட்டு
தடுமாறி  எழுந்து மொட்டை மாடிக்கு வந்தாள்.  அவள் போட்டிருந்த இரண்டு
தூக்க மாத்திரையின் விளைவால், அவளால் ஒழுங்காக பார்க்க முடியமால், கண்கள்
பாதி தூக்கத்திற்கு  இழுக்க, படிக்கட்டு என்று நினைத்து பூ ஜாடி
வைத்திருந்த சிறு மொட்டை மாடி சுவற்றில் ஏறி நின்றுவிட்டாள்.
அப்பொழுதுதான் கதிரிக்கு  வீடியோகால்  செய்தபடியே அங்கு வந்த  அசோக்,
தங்கை மேலே நிற்பதை பார்த்துவிட்டு பதறியன், மொபைலை அப்படியே
வீசிவிட்டு,
“அஞ்சலி என்ன செய்ற நீ..?” என்று கத்திகொண்டே  ஓடிச்சென்று உஷாராக
தங்கையின் கைபிடித்து   மேலிருந்து கீழ் இறக்கியவன், கோபத்துடன்,
“என்ன செஞ்சிட்டிருக்க அஞ்சலி..? என்று கேட்க, அப்பொதுத்தான்
அஞ்சலிக்கும் தான் ஏறிநின்றது மாடி சுவர் என புரிய அவளும்தான் திகைத்து
போய் பார்த்தாள்.
“அஞ்சலி உன்கிட்டத்தான் கேட்கிறேன், அங்க நின்னு என்ன செய்ற..?” என்று
தங்கையின் செயலை தப்பாக நினைத்து கொண்டவன், “என்ன பிரச்சனை அஞ்சலி..? ஏன்
இப்படி செய்ய போன..?”
“நான் வேணும்ன்னே அங்க போய் நிக்கலண்ணா, தூக்க  கலக்கத்துல தான்..”
“என்ன செய்றேன்னு கூட தெரியாம அப்படியென்ன தூக்க கலக்கம், அப்போ படுத்து
தூங்க வேண்டியதுதானே, இங்க ஏன் வந்து நிக்கிற..? உண்மையை சொல்லு..? என்ன
பிரச்சனை..? நீயும் கொஞ்சநாளா ஏதோபோல்த்தான் இருக்க, அண்ணன்கிட்ட சொல்லு
அஞ்சலி, சொல்லு..” என்று விடாமல் கேள்வி கேட்டான்,
அஞ்சலியால் அசோக்கின் சந்தேக கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியமால் திணற,
அசோக்கிற்கோ தங்கை செய்ய இருந்த செயலில் மிகுந்த கவலை, ஆதங்கம் கொண்டவன்,
 அவள் பதில் சொல்லும்வரை விடாமல் கேட்கவும், ஏற்கனவே துக்கத்தில் இருந்த
அஞ்சலி, அண்ணனின் தோள் சாய்ந்து தான் கதிரை காதலிப்பதை சொல்லிவிட்டாள்.
“யார்.. யாரை சொல்ற..? கதிர்.. கதிரா..? மாறன் அங்கிளோட மகன்.. அந்த கதிரா..?”
 “ஆமாண்ணா.. அவர்தான்”  என்று அவள் மறுபடியும் தெளிவாக சொல்லவும்,
அசோக்கின் அதிர்ச்சியை சொல்லவுமா வேண்டும்.
“எப்படி.. எப்போலிருந்து..? ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல..?” என்று
கோவத்தோடு கேட்க,
“நான் 12த் படிக்கும் போது என்னை அவங்க ஆளுங்ககிட்டேயிருந்து
காப்பாத்தினாங்க இல்லை, அப்போதான் அவரை நான் பாக்க ஆரம்பிச்சேன், ஆனா அது
எப்போ..? எப்படி காதலா மாறுச்சுன்னு எனக்கும் தெரியலைன்னா..”என்று
அளவில்லா துயரத்தோடு சொல்லி அழும் தங்கையை சமாதானப்படுத்துவதை தவிர, அவன்
வேறென்ன செய்ய முடியும்..?
அதை இன்று நினைத்து பார்த்தவன் “அஞ்சலி.. நான் அன்னிக்கு கதிர்கிட்ட
பேசறதுக்காக வீடியோ கால் செஞ்சேன் இல்லை, அப்போ உன்னை பாக்கவும் மொபைலை
அப்படியே கீழே போட்டுட்டேன்”,
“ஆனா எனக்கென்னமோ அன்னிக்கு கதிர் அந்த காலை அட்டென்ட்
செஞ்சிருப்பானோன்னு தோணுது, உன்கிட்ட பேசிட்டு உன்னை கீழே கூட்டிட்டு
போகும்போது மொபைல் எடுத்தேன் இல்லை, அப்போ மொபைல் ஸ்க்ரீன் நம்ம பக்கம்
தான் இருந்தது..”  என்று யோசித்து யோசித்து சொன்னான்,
“ஒருவேளை அண்ணன் சொல்றமாதிரி அன்னிக்கு நாங்க பேசினதை அவர்
கேட்டிருப்பாரோ..? அப்படியே கேட்டா மட்டும் என்ன..? அவருக்கு தான்
முதல்லே தெரிஞ்சிருக்கே..!!” அதனாலே,
“விடுண்ணா பரவாயில்லை..” என்று சாதாரணமாக சொல்ல,
“இல்லை அஞ்சலி.. நீ இத்தனை நாளா இதைத்தானே நினைச்சு கவலைபட்டுட்டு
இருந்த, அதான்  இப்படி ஏதாவது தெரிஞ்சிருக்குமோன்னு சொன்னேன்”, என்ற
அசோக் வைத்துவிட்டான்.
அதற்கு மேல் அஞ்சலியும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், ஊருக்கு கிளம்பி
தயாராக ஆரம்பித்தாள். இல்லையென்றால் மீனாட்சிதான் விடமாட்டாரே.. அதனாலே
வேறு வழியில்லாமல், ஹெட் டாக்டரிடம் சொல்லிவிட்டு, அன்றே பிளைட் புக்
செய்து கிளம்பியும் விட்டாள்.
அசோக் அப்போது சென்னையிலே இருந்ததால் அவனே அஞ்சலியை ஊருக்கு
கூட்டிச்செல்ல வந்திருந்தான், அவர்கள் ஊருக்குள் செல்லும்போது இரவு
ஆகிவிட,
அஞ்சலியை அவளின் வீட்டில் விட சென்ற அசோக்கின் பார்வையில் “கதிரும்,
ரத்தினமும்..” பேசி சிரித்து கொண்டிருப்பது தெரிய, நம்பாமல் மேலும்
நன்றாக ஊன்றி பார்த்தவனிற்கு. அது கதிர், ரத்தினம் தான் என புரிய,
அதிர்ச்சியில் காரையே நிப்பாட்டிவிட்டான்.
“என்னாச்சுண்ணா..? ஏன் காரை நிப்பாட்டிடீங்க..?” என்று கேட்டபடியே
அண்ணனின் பார்வை சென்ற திசையை தானும் பார்த்தவள்,
“ண்ணா.. அது அது ரத்தினம் மாமாதானே அவர்கிட்ட பேசிட்டிருக்கிறது…”
என்று திக்கியபடி அதிர்ச்சியில் கேட்க,
“ம்ம்ம்.. அவரேதான்”, என்று வேகமாக மனக்கணக்கு போட்ட அசோக், கோவமாக காரை
திறந்து இறங்கி, அவர்கள் முன் சென்று நிற்க, தானும் அண்ணன் பின்னே
சென்றாள் அஞ்சலி,
ஆனால் கதிரோ இவர்களை நன்றாக பார்த்தும்  கொஞ்சம் கூட கவலைப்படாமல்,
ரத்தினத்திடம் பேசி  சிரித்து கொண்டிருக்க, “இவனை..” என்று எப்போதும்
போல் பல்லை கடித்தவன், அவனின் முன் சென்று நிற்க,
“சீனியர்.. என்னது இது தள்ளி போங்க, பேசிட்டு இருக்கேன்ல”, என்று கொஞ்சம்
கூட அலட்டாமல், அசோக்கை அதட்டியவன், மறுபடியும் ரத்தினத்திடம் பேச
ஆரம்பித்துவிட்டான்,
அதில் மேலும் கடுப்பான அசோக், கதிரை விட்டு ரத்தினத்தை முறைத்தபடி,
“மாமா..” என்று கத்த,
“இரு மருமகனே.. பேசிட்டு வந்துடுறேன்”, என்று அவரும் அசோக்கை கண்டு
கொள்ளாமல் பேச, அஞ்சலி..  புரிந்தும் புரியாமலும் அதிர்ச்சியுடன்
கதிரையே  பார்த்து கொண்டிருந்தாள்.
“இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு முதல்ல  சொல்லிட்டு, அதுக்கு அப்பறம்
நீங்க ரெண்டு பேறும் விடிய விடிய கூட பேசிட்டிருங்க”. என்று சத்தமாக
கத்தியபடி இருவருக்கும் இடையில் நின்றுவிட்டான் அசோக்,
“என்ன செய்றீங்க நீங்க..?” என்று மனைவியை திரும்பியும் பார்க்காமல்
மச்சானிடம் கோபத்துடன் கேட்டான் கதிர்.
“நான் செய்றது இருக்கட்டும், முதல்ல நீ என்ன செஞ்சேன்னு எனக்கு சொல்லு..”
“என்ன சொல்லணும் உங்களுக்கு இப்போ..?”
“இதுவரை என்கிட்ட என்ன சொல்லியிருக்க நீ..?” என்று அவனுக்கு மேல்
கோவத்தில் எகிறிய அசோக்,
“உன் கல்யாணத்துல என்ன திருக்குத்தனம் செஞ்சன்னு ஒழுங்கு மரியாதையா நீயே
சொல்லிடு..”, என்று ஆத்திரத்துடன் கேட்ட அசோக்,
“மாமா.. இதுல நீயும் கூட்டா…? இத்தனை நாளா எங்களை எல்லாம் ஏமாத்தி
இருக்க நீ..?” என்று மாமனிடமும் எகிறினான்,
“நான் என்னடா ஏமாத்தினேன், நீங்களேதான் ஏமாந்திங்க..?” என்று நக்கலாக
சொல்லிவிட்டு ரத்தினம் பெரிதாக சிரிக்க, காண்டான அசோக்,
“மாமா..” என்று கத்த,
“டேய் சும்மா சும்மா கத்தாதடா, நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்,
போடா..” என்று அலட்சியமாக அவனின் கோவத்தை புறந்தள்ளியவர்,
“அப்பறம் அஞ்சலி.. சொல்லும்மா எப்படி இருக்க..?” என்று தன் மருமகளின்
நலம் விசாரிக்க,
“ம்ம்.. நல்லா இருக்கேன் மாமா..” என்று யோசனையிலே பதில் சொன்னவள்,
“மாமா.. இவர்.. இவர் எப்படி உங்ககிட்ட பேசி, பேசிட்டு” என்று தொடர்ந்து
கேட்க முடியாமல் தயக்கத்துடன் இழுத்தவளின் பார்வை கணவன் மேல் தான்
இருந்தது, தன் மேல் கோவத்தில் இருக்கும் கணவன் தன்னிடம் எதையும்
சொல்லமாட்டான் என்று நன்றாக தெரியுமாததால்  நேரடியாக ரத்தினத்திடமே
கேட்டுவிட்டாள்.
“என்னம்மா இது என்கிட்ட கேட்கிற..? இன்னுமா  உன் புருஷன் உன்கிட்ட
எல்லாத்தையும் சொல்லலை”.என்று கேள்வியாக இழுத்தவர், சந்தேகத்துடன் கதிரை
பார்க்க,
அவனோ அலட்சியமாக தோளை குலுக்கியபடி வேறுபக்கம் முகம் திருப்பி கொண்டான்.
பின் ரத்தினம் என்ன நினைத்தாரோ..? தானே நடந்தவற்றை சொல்ல செய்தார்.

Advertisement