Advertisement

“அண்ணா.. ப்ளீஸ்ண்ணா உண்மையை சொல்லிடு, நீதானே அவர்கிட்ட சொன்னே..”,
என்று ஒரு நேரத்தில் கெஞ்சி கேட்பவள்,
“எனக்கு கண்டிப்பா தெரியும் நீதான் சொல்லியிருப்ப, நீயும் அவரும் எவ்வளவு
திக்  ப்ரண்ட்ஸ்ன்னு நாந்தான் பாக்கிறேனே, நீ ப்ராண்டுக்காக தங்கச்சியை
ஏமாத்திட்ட..”  என்று சண்டையும் போட்டாள். போதாதற்கு லதாவிடமும்
சொல்லிவிட்டாள். லதா சொல்லவா வேண்டும்..?
“அஞ்சலி எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது,  கண்டிப்பா இவர்தான்
சொல்லியிருப்பார்..” என்று அஞ்சலியை ஏற்றிவிடவே செய்தார், அதில் மேலும்
பதறிபோன அசோக்,
“அவ சொல்றதை நம்பாத,  சத்தியமா நான் சொல்லலை அஞ்சலி,  என்னை நம்பு..”
என்று எவ்வளவு சொல்லியும் ஏற்றுக்கொள்ளாத தங்கையையும், மனைவியையும்
நொந்துபோய் பார்த்தவன்,
“நான் வேணும்ன்னா கதிர்கிட்ட உங்கமுன்னாடியே கேட்கிறேன், அப்பாவது என்னை
நம்புவீங்களா..?” என்று மிக புத்திசாலித்தனமா யோசனை சொல்ல, லதாவும்,
அஞ்சலியும் அவனையே கொலை வெறியுடன் முறைத்தனர்,
“இப்போ தெரியுதா அஞ்சலி இவரோட புத்திசாலித்தனம், இதுல இருந்தே தெரியல
இவர்தான் கண்டிப்பா சொல்லியிருப்பார்ன்னு..”, என்று லதா கடுப்பாக சொல்ல,
“ஆமாண்ணி.. எனக்கு தெரிஞ்சு போச்சு, இவர்தான் கண்டிப்பா இதுபோல ஏதாவது
உளறியிருக்கணும்..”, என்று அஞ்சலியும் லதா சொன்னதை ஏற்றுக்கொண்டு அழுவது
போல் பேசியவள்,
“உன்னை நம்பி சொன்னதுக்கு, நீ என்னை மாட்டிவிட்டுட்ட இல்லை, நீயெல்லாம்
ஒரு அண்ணனா..? அம்மா சொல்றது போல நீ ஒரு சுயநலக்காரன் தான், நாந்தான்
உன்னை பாசமலர் ரேஞ்சுக்கு நினைச்சுட்டு இருந்தேன், ஆனா நீ..?” என்று
இடைவிடாமல் அண்ணனை பொரிந்தவள், வெளியே வர,
மகளின்  சோர்ந்த கவலையான முகத்தை கண்டுகொண்ட மீனாட்சி, “என்னாச்சு..?’
என்று மகளிடம் விசாரித்தார்,
“ம்ம்மா.. இந்த அண்ணன் ரொம்ப மோசம், நீங்க சொல்றதுதான் சரி, இந்த அண்ணன்
சரியான சுயநலவாதி தான்..” என்று அன்னையிடம் அழுகையுடன் சொல்ல,
லதாவும்,”ஆமாத்தை  உங்கபுள்ளை கொஞ்சம் கூட சரியில்லை..” என்று ஒத்து ஊத,
“ஆமா பாட்டி… இந்த அப்பா நேத்து நைட் எனக்கு கொஞ்சம் கூட தராம  அவரே
எல்லா ஐஸ்க்ரீமையும் சாப்பிட்டுட்டார், இந்த அப்பா சரியில்லை தான்..”
என்று செல்ல பேத்தியும் அழுக, அவ்வளவுதான்,
“அசோக்..” என்று மீனாட்சி கத்திய கத்தலில் என்னவோ ஏதொன்று ஓடிவந்த
அசோக்கை, மீனாட்சி பிழி பிழையென பிழிந்துவிட்டார்,
“எல்லா வீட்லயும் மருமகத்தான் சரியில்லாம இருப்பா, ஆனா இங்க என் மகன்தான்
 சரியில்லை, நான் என்ன செய்ய..? ஏது செய்ய..? கடவுளே, இப்போவே இப்படின்னா
இன்னும் நாள் எங்க இருக்கு..?” என்று ராகம் இழுக்க ஆரம்பித்துவிட, அசோக்
தலையிலே கை வைத்து அமர்ந்துவிட்டான்.
அப்பொழுது எதிர்ப்பாரா விதமாக மனைவியை அழைத்து கொண்டு செல்ல தானே
வந்துவிட்ட கதிரை கண்டு எல்லோரும் ஆச்சரியமடைய, அசோக்கோ நண்பனை கடுப்பாகா
பார்த்தான். “உன்னாலதாண்டா எனக்கு இந்த நிலைமை..”, என்று மனதில்
கொதித்தவன் கதிரை முறைத்து பார்த்தான்,
அவனின் கோவத்தில் புரியாமல் பார்த்த கதிர், “என்ன ஆச்சு..?” என்று
சைகையில் கேட்ட படியே அவனின் அருகில் உட்கார்ந்தான், அதற்குள் சுதாரித்து
கொண்ட மீனாட்சி, மருமகனுக்கு விருந்து தயார் செய்ய மருமகளிடம்
கிச்சனுக்குள் ஓடினார்.
“என்ன ஆச்சுன்னு கேட்டேனே சீனியர்..? ஏன் ரொம்ப கோபமா இருக்கீங்க..?”
என்று அவர்கள் செல்லவும் சத்தமாக கேட்க,
“டேய் என்னை எதுவும் கேட்காத, அப்பறம் நான் தான் உன்கிட்ட எதாவது
சொல்லிட்டேன்னு  மொத்த குடும்பமும் என்கிட்ட சண்டை போடும்..”, என்று
சிடுசிடுப்பாக பொரிய, தலையில் அடித்து கொண்ட அஞ்சலி, அசோக்கிற்கு சைகை
காண்பிக்க முயற்ச்சி செய்தாள்.
அவள்தான் அந்த அலர்ஜி விஷயத்துக்கே கணவனிடம் நன்றாக பட்டுவிட்டாளே, ஏன்
இன்னுமும் விட்டபாடில்லை, ஞாபகம் வரும்போதெல்லாம் அஞ்சலியிடம் பதில்
வாங்க முயற்சிப்பதை கதிர் விடவே இல்லை, அப்படி இருக்கும்போது இந்த அண்ணன்
ஏதாவது ஏடாகூடமாக உளறிவிட்டால் என்ன செய்ய..?” என்று பதறியவள்,
அசோக்கிற்கு கதிருக்கு தெரியாமல் சைகை காண்பிக்க, கவனிக்க வேண்டியவன்
கவனிக்காமல் போக, கவனிக்க கூடாதவன் கவனித்து விட்டான், மனைவியின்
சைகையில் சுவாரஸ்யமானவன், அசோக்கிடம்  அவன் பாணியில் போட்டு வாங்க
செய்தான்,
“என்ன சீனியர் இப்படி சொல்லிடீங்க, என்கிட்ட சொல்றதுக்கு போய் யாராவது
சண்டை போடுவாங்களா..? போங்க சீனியர் நீங்க பொய் சொல்றீங்க..” என்று
நம்பாதவன் போல சொன்னான்,
கணவனின் பேச்சிலே அவனின் எண்ணத்தை புரிந்துகொண்ட அஞ்சலி, “ண்ணா.. உன்னை
அப்பா கூப்பிட்டாங்க பாரு சீக்கிரம் போ..” என்று அசோக்கை அங்கிருந்து
விரட்ட முயற்ச்சி செய்தாள்,
கதிரின் நம்பாத பேச்சில் மேலும் கடுப்பான அசோக், தங்கையின் எச்சரிக்கையை
கன்டுகொள்ளாமல், “என்னது நான் பொய் சொல்றேனா..? சொல்லுவடா சொல்லுவ,
இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ,  இந்த கொஞ்ச நாளா உன்னால நான்
எவ்வளவு  கஷ்டபடறேன்னு  உனக்கு தெரியுமாடா..?” என்று பொங்கியவனை பார்த்து
உள்ளுக்குள் சிரித்த கதிர்,
“என்ன என்னால நீங்க கஷ்டபடறீங்களா..? இதென்ன புது கதையா இருக்கு.. நான்
என்ன செஞ்சேன்..?” என்று கோவபடுபவன் போல கேட்டான்,
“ஆமாடா உன்னாலதான் அஞ்சலி என்னை நம்பாம சந்தேகமா கேள்வி கேட்டுட்டு
இருக்கா, ஏதோ நான்தான் சொன்னது போல”,
“ண்ணா..” என்று  சத்தமாகவே கத்திய அஞ்சலி, அசோக்கை தீப்பார்வை பார்க்க,
அப்போதுதான் அசோக்குமே தான் செய்துகொண்டிருக்கும் செயலை உணர்ந்தான்,
“போச்சு போச்சு, இனி நான் என்ன சொன்னாலும் இவ நம்ப போறதில்லை”, என்று
அஞ்சலியை பாவமாக பார்த்தவனை, கதிர் விடாமல்,
“என்ன அஞ்சலியா..? அவ ஏன் உன்னை நம்பாம கேள்வி கேட்குறா..? அப்படியென்ன
விஷயம் சீனியர்..?” என்று மனைவியை பார்த்து குறும்பாக கண்ணடித்து
மச்சானிடம் கேட்டான்.
கதிரின் கேள்வியில், “அஞ்சலி போய் என்கிட்ட என்ன கேட்க போறா..? அதெல்லாம்
ஒண்ணுமில்லை..”, என்று அவசரமாக  சொன்னான்,
“அதில்லை சீனியர்..” என்று கதிர் மேலும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, “எனக்கு
எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு, நான் இதோ வந்திடுறேன்..” என்று அங்கிருந்து
ஓடியே போனான், அவனின் ஓட்டத்தில் சிரித்த கதிர், மனைவியிடம்,
“என்னடி செஞ்ச என் மச்சானை..? இப்படி ஓடுறார்..? அப்படியென்ன கேட்ட..?”
என்று குறுஞ்சிறுப்புடன் கேட்டான், அவனின் சிரிப்பிலே அவன் கண்டுகொண்டான்
என்று புரிந்து கொண்ட அஞ்சலிக்கு கதிரை எப்படி சமாளிப்பது என்று இப்போதே
மலைப்பாக இருந்தது, அவளின் பயம் சரியே என்பது போல, அன்றிரவு தூங்க
போகுமுன்,
“சீனியரோட என்ன சண்டை..?” என்று கேட்க, உஷரானவள்,
“அதெல்லாம் ஒரு சண்டையும் இல்லை, எனக்கு தூக்கம்  வருது, நான்
படுக்கணும்..” என்று வேகமாக படுக்க,
“ம்ஹூம்.. அதுக்குள்ளே தூக்கமா..?” என்று அவளை இழுத்து பிடித்து உட்கார வைத்தவன்,
 “சொல்லு என்ன சண்டை..? அவர் எதோ என்கிட்ட சொல்லிட்டாருன்னு நீ சண்டை
போட்டதா சொன்னாரே..? அப்படியென்ன உன் புருஷனுக்கு தெரிய கூடாத
ரகசியம்..?”
 “ரகசியமா..? அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது, நீங்களாவே ஏதாவது இமேஜின்
பண்ணிக்காதீங்க”, என்று கதிரின் முகம் பார்க்காமல் சொன்னவளை,
“ஓஹ்.. அப்படி, ம்ம்ம்.. அப்போ எனக்கு தெரியாத ரகசியம் உன்கிட்ட எதுவும்
இல்லை, அப்படித்தானே..!!?”, என்று சீரியஸான முகப்பாவத்துடன் கேட்டான்,
அதிலே அவன் இனி சொல்லாமல் விடமாட்டான் என புரிய, ஏற்கனவே இருந்த
மனஅழுத்தில் அஞ்சலிக்கு எல்லையில்லா கோவமும், ஆத்திரமும் உண்டானது,
“நானும் பாத்துட்டு இருக்கேன், எப்போ பார்த்தாலும் என்கிட்ட ஏதாவது
சந்தேகமா கேட்டுட்டே இருக்கீங்க..? என்ன என்ன என்னதான் உங்க பிரச்சனை..?”
என்று
“கடந்த சிலநாட்களாகவே கணவனுக்கு தன் காதல் தெரிந்திருக்குமோ..? எப்படி
தெரிந்திருக்கும்..?” என்று இடைவிடாத மனழுத்தத்தில் இருந்தவள்,
தன்னையறியாமல் வெடித்தாள்.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனா நீதான் தேவையில்லாததை நினைச்சு
உன்னை நீயே வருத்திக்கிற”, என்று மனைவியின் மனஅழுத்தத்தை உணர்ந்திருந்த
கதிர் சொன்னான்.
“எது தேவையில்லாதது..? உங்களுக்கு ரொம்ப தெரியுமோ எனக்கு அது
தேவையில்லாததுன்னு..?” என்று  “தன் காதலை தான் தேவை இல்லாதது என்று
சொல்கிறானோ..?” என்று கோவத்தோடு கேட்க, அவனின் மனஅழுத்தம் வெடிப்பதை
உணர்ந்து கொண்டான்.
“அவனும் இந்த இரண்டு மாதத்தில் எத்தனையோ வழிகளில் முயன்று பார்த்து
விட்டான், அவளிடம் மறைமுகமாகவும் கேட்டு பார்த்துவிட்டான். அப்படி அவன்
கேட்க கேட்க சொல்லமால் இருப்பதற்காக தன்னை தான் வருத்தி கொண்டாளே  தவிர,
சொல்ல மாட்டேன் என்பதில் மிக மிக அழுத்தமாக, உறுதியாக நின்றாள்”,
அதனாலே அவளின் தற்போதைய நிலைய புரிந்து கொண்டவன், அதே ரீதியில் மேலும்
பேசி, “இதுவரை ஆடிய கண்ணணாம்மூச்சு ஆட்டத்தை இன்றோடு முடித்து விட
வேண்டும்” என்று உறுதி கொண்டான்,
“ஆமா.. இப்பவும் சொல்றேன், உனக்கு அது தேவையில்லாதது”, என்று அதையே
சொல்லி அவளை தூண்ட,
“வேண்டாங்க,  திரும்ப திரும்ப அதையே சொல்லாதீங்க, அப்பறம் நான் என்ன
செய்வேன்னு எனக்கே தெரியாது..” என்று எச்சரிக்கையாக விரல்  நீட்டி
மிரட்டியவளின் விரலை மடக்கி பிடித்தவன்,
“அப்படிதாண்டி சொல்வேன், உனக்கு வாழ்க்கைக்கு எது முக்கியம்ன்னு கூட
தெரியல, எப்பவும் கனவுல வாழமுடியாது அஞ்சலி..”,
“நான்..  நான் என்ன கனவுல வாழ்ந்திட்டேன்..?”
“ஆமா.. நீ நிஜத்தை விட்டுட்டு கனவுலதான் வாழ்றே, உனக்கும் எனக்கும்
கல்யாணமாகி ரெண்டு மாசம் முடிய போகுது, ஆனாலும்  இன்னமும் உன்னால என்னோட
நிஜத்தை ஏத்துக்க முடியல..  உன்னோட கனவு காதல் கூட தான் நீ பொய்யாய்
வாழ்ந்திட்டுருக்க..” என்று ஒரே போடாக போட்டான், அவனின் பேச்சை உணராத
அஞ்சலி,
“என்ன..?  நான் உங்கமேல வச்சிருக்கிற காதலை, ஒரு பொய்யான கனவு காதல்ன்னு
எப்படி நீங்க சொல்லலாம்..? உங்களுக்கு என்னோட காதலை பத்தி என்ன
தெரியும்..?  என்னோட இத்தனை வருஷ காதலை நீங்க கனவு காதல் சொல்லிடீங்க..?”
என்று ஆத்திரத்தோடு “தன் காதலை தானே சொல்லிவிட்டவளை”  வெறித்தவன்,
“பைனலி.. பைனலி..  இத்தனை வருஷம்.. இத்தனை வருஷம் கழிச்சு  நீயே உன்
காதலை என்கிட்ட சொல்லிட்ட..” என்று கூர்பார்வையுடன் கேட்க,
அப்போதுதான் தன் ஆத்திரத்தால் தானே தன் காதலை சொல்லிவிட்டதை உணர்ந்து
அதிர்ச்சியில் கண்கள் விரிக்க, மூச்சு காற்றிற்கு தவித்தவாறே, வாய்மேல்
கைவைத்து சிலையாய் நின்றுவிட்டாள். அவளின் அதிர்ச்சியை கண்டும்
புறக்கணித்தவன்,
“உன்னால எப்படி அஞ்சலி  எனக்கே தெரியாம..!!  என்னை  இத்தனை வருஷம்
காதலிக்க முடிஞ்சது..?”
“எந்த அடிப்படையில், எந்த நம்பிக்கையில் ஒரு எதிரி குடும்பத்தை பையனை நீ
காதலிச்ச அஞ்சலி..?” என்று
ஒவ்வொரு வார்த்தைக்கும் நிறுத்தி நிதானமாக கேள்வி கேட்ட கணவனின்  எந்த
கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல்..!!?, பதில் இல்லாமல்..!!? நின்ற
அஞ்சலி,  இயலாமையுடன் கைகளில் முகம் புதைத்து கதறினாள்.

Advertisement