Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 23
அஞ்சலியின் முகத்தில் தெரிந்த பயம் கலந்த பதட்டம், கதிருக்கு அவ்வளவு
உவப்பானதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும், தன்னுடைய கேள்விக்கு பதில்
அளிக்காமல், “எதோ தவறு செய்தது போல்..!!??” அவள் பயப்படுவதும்,
பதட்டப்படுவதும், கதிருக்கு பிடிவாதத்தையே கொடுத்தது.
அதனாலே, உறுதியுடன்  “சொல்லு அஞ்சலி.. எனக்கு வேர்க்கடலை அலர்ஜின்னு
உனக்கெப்படி தெரியும்..? சொல்லு”  என்று விடாமல் கேட்டான், அவனின் தொடர்
கேள்வியில், விடமாட்டான் என்று புரிந்து கொண்ட அஞ்சலிக்கு, மேலும்
பதட்டம் கொண்டு வேர்க்கவே செய்ய, கண்களில் மெலிதான கெஞ்சலுடன் கணவனை
பார்த்தாள்,
அவளின் கெஞ்சல்  புரிந்தும், புறக்கணித்தவன், “சொல்லுடி.. எனக்கு
இன்னிக்கு பதில் தெரிஞ்சே ஆகணும்..” என்று அழுத்தத்துடன் கேட்க,
“ஒரு சின்ன விஷயத்துக்கு நீங்க என்ன  என்னை இப்படி கேள்வி கேட்டுட்டு
இருக்கேங்க..?” என்று என்ன சொல்வது என்று யோசித்தவாறே அலட்சியமாக சொல்வது
போல் சொன்னவளின் நடிப்பை கண்டு நக்கலாக சிரித்த கதிர்,
“அதைதானேடி நானும் சொல்றேன், ஒரு சின்ன விஷயத்துக்கு பதில் சொல்ல நீ ஏன்
இவ்வளவு யோசிக்கிற..? சீக்கிரம் சொல்லிடு  பார்ப்போம்”, என்று விடாமல்
கேட்க,
“அது அண்ணி..” என்று நாயகியின் பெயரை சொல்ல போக,
“ம்ஹூம்.. வேண்டாம் அஞ்சலி, நான் இப்பவே அக்காவை கூப்பிட்டு
கேட்டுருவேன்”, என்று மிரட்டலாக  சொல்ல, அந்த வழியும் அடிபட்டு போக, திரு
திருவென முழித்தவளிடம்,
“அடுத்து நீ அப்பாவையோ, இல்லை சுப்புவையோ சொல்லமாட்டன்னு நம்புறேன்..”
என்று நக்கலாக சொன்னவனின் கிடுக்குபிடி பிடிவாதத்தில் அஞ்சலிக்கு மெலிதான
கோவம் உண்டாக,
“என்ன என்ன தான் உங்க பிரச்சனை..? ஏன்  இப்படி என்னை விடாம கேள்வி
கேட்டுட்டு இருக்கீங்க..?” என்று சந்தேகத்துடன் கணவனிடம்  பொங்கினாள்,
“அஞ்சலி.. உனக்கு இந்த விஷயம் எப்படி தெரியும்ன்னு, எனக்கு நீ இப்போ
சொல்லியே ஆகணும்”, என்று
“நான் விடபோவதில்லை..” என்ற உறுதியை கண்ணில் தேக்கி நின்ற கணவனின்
உறுதிக்கு தானும் சளைத்தவளில்லை, “நானும் சொல்ல மாட்டேன்..”  என்று
அழுத்தத்துடன் நின்றாள் மனைவி, அவளின் அழுத்தத்தில் அவள் சொல்லமாட்டாள்
என புரிய,
“அப்போ சொல்லமாட்ட அப்படித்தானே..? ஓகே, அஞ்சலி இந்த சத்தியத்தை
பத்தியெல்லாம் நீ என்ன நினைக்கிற..?”, என்ற கேட்டவாறே அவளின் கையை
எடுத்து தன் தலையில் வைத்துவிட, நொடியில் கணவன் செய்துவிட்ட செயலில்,
அதிர்ந்து நின்றவளிடம்,
“ம்ம்.. இப்போ சொல்லு..” என்று மிகவும் பிடிவாதத்துடன் கேட்ட கணவனை   வெறித்தவள்,
“நீங்களும்,அத்தையும் கோவில்ல பேசிட்டு இருந்தப்போ கேட்டேன்”,
“ஓஹ்.. எப்போ நாங்க பேசினதை  நீ கேட்ட..? அதாவது எந்த வருஷம்
இருக்கும்..?” என்று ஆராய்தலுடன்  அடுத்த கேள்வியை கணவன் கேட்க,
“நீங்க என்கிட்ட இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியும்ன்னு கேட்டிங்க, நான்
சொல்லிட்டேன் அவ்வளவுதான்”, என்று  தன் கையை அவனிடம் இருந்து
பிடுங்கிக்கொண்டு வேகமாக  நகர பார்க்க,
“ம்ஹூம்.. இன்னைக்கு நீ பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது அஞ்சலி..”,
என்றவாறே மனைவியின் இடையை வளைத்து தனக்கு நெருக்கமாக  நிறுத்தியவன்,
அவளின் கண்களை பார்த்தவாறே,
“சொல்லு.. நானும், அம்மாவும் கோவில்ல பேசினதை  நீ எப்போ கேட்ட..?” என்று
கேட்க, அஞ்சலிக்கு அவனின் தொடர் கேள்வியில், மனதில் ஓராயிரம் எண்ணங்கள்
முட்டி மோதின, கணவனின் கேள்வி, அவளுக்கு பல சந்தேகங்களை கொடுக்க, கணவனின்
முகத்தையே ஆராய்ந்தபடி நின்றவளை, மேலும் தனக்கு நெருக்கமாக இழுத்தவன்,
அவளின் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவாறே,
“சொல்லுடி..” என, அவனின் அழுத்தமான பிடிவாதத்தில், கணவன் கண்டிப்பாக
விடமாட்டான் என்று புரிய,
“என்னோட  MBBS  பர்ஸ்ட் இயர்ல கேட்டேன்”, என்று கண்கள் மூடியவாறே சொல்ல,
“ம்ம்ம்.. அப்போ உன்னோட வயசு ஒரு 18 இருந்திருக்கும் இல்லை”, என்று
அவளின் மூக்கில் தன் மூக்கை உரசியபடி கேட்டவன், “ஆனா நீ இத்தனை வருஷம்
ஆகியும் அதை ஞாபகம் வச்சிருக்க இல்லை”,
“ஏன் அஞ்சலி..?” என்று கேட்க,
அவனின் ஒற்றை கேள்வியில், உள்ளுக்குள் துடித்த அஞ்சலியின்  கண்ணில்
கண்ணீர் பெருக, கைகள் இரண்டையும் உள்ளங்கையில் இறுக்கி மூடி, உடல்
நடுங்கியபடி கணவனின் கையணைப்பில் நின்றவளை,
“சொல்லு.. அஞ்சலி”, என்றவாறே  அவளின் கண்ணீரை தன் உதட்டால் துடைத்தவன்,
கன்னத்தில்  அழுந்த தன் இதழை புதைத்தவன், அதை மெலிதாக கடிக்கவும்
செய்தான்,
“ஸ்ஸ்..” என்று மெலிதான வலியில் முனகியவளின், கன்னத்திற்கு தன் இதழை
கொண்டே மருந்திட்டவன்,  “சொல்லுடி..”, என்று விடாமல் கேட்டான், கணவனின்
கேள்வி செல்லும் திசை புரிந்திருந்த அஞ்சலிக்கு, நெருப்பின் மேல் நிற்பது
போல் இருந்தது,
அவனின் “ஏன்..?” என்ற ஒற்றை கேள்விக்கான பதில்,
“அவளின் இத்தனை வருட வாழ்க்கை அல்லவா..!!!, அவளால் எவ்வாறு கணவனிடம்
தன்னுடைய காதலை சொல்ல முடியும்..? அது எப்படி முடியும்..? என்னவென்று
சொல்வது..? எப்படி சொல்வது..? சொன்னால் தன்னை பற்றி என்ன நினைப்பான்..?
தன்னுடைய 8 வருட காதல் அவன் கண்களுக்கு எப்படி தெரியும்..?” என்று
சில நொடிகளிலே மிகவும் அதிகமான மனப்போராட்டத்தை எதிர்கொண்ட அஞ்சலி
ஓய்ந்து போனவளாக நிற்க, அவளை  காப்பாற்றுவது போல் கதிரின் போன் ஒலிக்க,
“தப்பித்தேன்..!!” என்ற விடுதலை உணர்வுடன் முகம் பிரகாசமாக கணவனை
பார்த்தாள்.
அவனோ.. “ம்ஹூம்.. நீ முதல்ல சொல்லு. அது அடிச்சா பரவாயில்லை” என,
“அச்சோ.” என்றானது அஞ்சலிக்கு, ஆனால் கதிரின் போன் விடாது ஒலிக்க, ஏன்
என்ற யோசனையுடன் மனைவியை விடுவித்தவன், வேகமாக சென்று போன் எடுத்தான்.
“என்ன குமாரும், கணேஷுமா..? நான் உங்ககிட்ட பாத்து இருந்துக்கோங்கன்னு
தானே சொன்னேன்..” என்று எதிர் புறத்தில் இருந்தவர்களிடம் கோவமாக
கத்தியவன், “சீனியருக்கு சொல்லுங்க, நான் இதோ வந்துடுறேன்” என்று
வைத்தவன்,
“அஞ்சலி.. நீ தூங்கு நான் வந்துடுறேன்” என்றவன், மனைவியின் பதிலை கூட
எதிர்பார்க்காமல் உடனடியாக கிளம்பிவிட்டான், கதிர் கிளம்பவும்,
ஆசுவாசத்துடன் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்ட அஞ்சலியின் மனதில்
பல்வேறு சந்தேகங்கள் முளைக்க, எல்லாவற்றையும் ஆராய்ந்தவாறே தீவிரமாக
யோசித்தவளுக்கு “தன் காதல் கதிருக்கு தெரியுமோ..?” என்ற உறுதியான
சந்தேகம் உண்டாக, திகைத்து போய்விட்டாள்.
“இல்லை இல்லை, அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லையே, யார் சொல்லுவார், தன்
காதல் தெரிந்ததே லதா, தங்கதுரை, மற்றும் அசோக் மட்டுமே, இவர்கள் மூவரும்
கண்டிப்பாகவே சொல்ல மாட்டார்கள், ஒருவேளை இவர்களில் யாராவது
சொல்லியிருந்தால்..?, அண்ணனோ..?”,
“ம்ஹூம்.. அப்பாவின் ஆபிஸ் ரூமில் கதிர் பற்றி கேட்டு தெரிந்து கொண்ட
அன்று, நான் அண்ணாவிடம் கேட்டதற்கு அவர் சொல்லவில்லை என்றுதானே சொன்னார்,
பின் எப்படி தெரிந்திருக்கும்..?, இல்லை, நான் தான் தேவையில்லாமல்
நினைத்து குழம்புகிறேனோ..?” என்று பலவாறு யோசித்தவள் அப்படியே தூங்கி
போனாள்,
மறுநாள் காலை எழும்போதே அஞ்சலிக்கு தலை மிகவும் பாரமாக இருக்க, தலையை
பிடித்தவாறே எழுந்து அமர்ந்தவளுக்கு, இரவு நடந்ததெல்லாம் தொடர்ச்சியாக
ஞாபகம் வர,  அவசரமாக திரும்பி பக்கத்தில் கணவனை பார்க்க, அவன் அங்கு
இல்லை,
“எங்க போனார்..? ஒருவேளை நைட் வெளியே போனவர் வரவே இல்லையோ..?” என்றபடி
நேரம் பார்த்தால், மணி 8 என்றது, “அய்யோ.. இவ்வளவு நேரமாச்சா..?
இன்னைக்கு நிறைய வேலையிருக்கே..!!” என்று தலையில் அடித்து கொண்டவள்,
நொடியில் குளித்து தயாராகி கீழே ஓடினாள்,
“அண்ணி.. சாரிண்ணி..”  என்று தனியாளாக எல்லாவற்றயும் பார்த்து
கொண்டிருந்த நாயகியிடம் குற்ற உணர்வுடன் மன்னிப்பு கேட்டாள்,
 “ம்ப்ச்.. அஞ்சலி, எதுக்கு சாரியெல்லாம் கேட்கிற, நமக்கு இன்னைக்கு
எல்லாத்தையும் மேற்பார்வை பாக்கிற வேலைதான்,   தம்பி எல்லா வேலைக்கும்
தேவையான ஆளுங்களை ஏற்பாடு செஞ்சுட்டான், அதனால, நீ டென்சன் ஆகாம, முதல்ல
இந்த காபியை குடி.” என்று சுப்பு கொண்டுவர கொடுத்தார்,
“அவர் எங்கேண்ணி..?” என்று கணவனை கேட்டபடி காபியை வாங்கிகொள்ள,
“காலையில இருந்து நானும் அவனை பார்க்கலைம்மா, அப்பாகிட்ட தான் அடிக்கடி
போன் செஞ்சு பேசிட்டு இருக்கான், அப்பாவும் எதோபோலத்தான் இருக்காரு,
என்னன்னு தெரியல..?”, என்று கவலையுடன் சொல்ல,
அப்போதுதான் அஞ்சலிக்கும் நேற்று இரவு கணவன், போனில் டென்ஷனுடன் பேசியது
ஞாபகத்திற்கு வர, வேகமாக  கணவனுக்கு போன் செய்தாள், அவன் எடுக்கவில்லை
எனவும்,அடுத்து தன் அண்ணனுக்கு அழைக்க, அண்ணனும் போனை எடுக்காமல் போக,
அஞ்சலிக்கு கவலையோடு  பயமும்  உண்டானது,
நாயகி தொடர்ந்து, “என் பெரிய தம்பிங்க தான் எப்பவும் போல, இப்பவும் எதோ
வினையை இழுத்து விட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன், என்ன செஞ்சு
வச்சிருக்காங்கன்னு தெரியல”, என்று சொல்ல,
“அண்ணி அவங்களை தான், எந்த நல்லது, கெட்டதிலும் கலந்துக்க கூடாதுன்னு
ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருக்கே, அவங்க எப்படி..?” என்று புரியாமல்
கேட்டாள் அஞ்சலி,
“அவங்களை தானே ஒதுக்கி வச்சிருக்கு, அவங்க கைத்தடிகளை  இல்லையே..!!”,
என்று வெறுப்புடன் நாயகி சொல்ல, அஞ்சலிக்கு பயம் அதிகமானது, அவர்களால்
கணவனுக்கு ஏதாவது ஆபத்து..? என்று யோசிக்கும்போதே  சர்வமும் நடுங்கியது,
“அண்ணி.. அண்ணி.. அவர், அவரை அவங்க ஏதாவது..?” என்று பயத்தில் திக்கியவாறு கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா, கதிர் நல்லாயிருக்கான், இப்போ வீட்டுக்கு
வந்துட்டு இருக்கான்”, என்று மாறனின் குரல் கணீரென பின்னிருந்து
ஒலித்தது, அவரை பரிதவிப்புடன் திரும்பி பார்த்தவள், “அவர் சொல்வது
உண்மையா..?” என்பது போல் பார்க்க,
“நிஜம் தான்மா, இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே வந்துருவான்”, என்று அவர்
சொல்லிய சிறிது நேரத்திற்குள்ளே கதிர் வந்துவிட்டான், கணவனின்
ஆரோக்கியத்தை பார்த்தபிறகே நிம்மதியானாள் மனைவி, கதிர் வந்தவன், முதலில்
சென்று குளித்துவிட்டு வர, அவனுக்கும், மாமனாருக்கும், அண்ணிக்கும் உணவு
பரிமாறிய அஞ்சலிக்கு,
கணவனின் கோபமுகத்தில் “எதோ பெரிய பிரச்சனை..?” என்பது மட்டும் புரிய,
“என்னவானது..?” என்று நெருங்கி கேட்கவும், கணவனின் இறுகியமுகம் தயக்கத்தை
 கொடுக்க, நிலையில்லாமல் நின்றிருந்த மருமகளின் முகத்தில் தெரிந்த
பயத்தையே பார்த்து கொண்டிருந்த மாறனுக்கு, மனதில் பல்வேறு சிந்தனைகள்
ஓடியது,

Advertisement