Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 22
அஞ்சலி..  “காதலை பற்றி தன்னுடைய எண்ணம் என்ன..? என்று தெரிந்து கொள்ளவே,
காதலை பற்றி பேசுகிறாள் என்று  கதிருக்கா புரியாது..?”, ஆனாலும் காதலை
பற்றி  குதர்க்கமாக பதில் சொல்லி மனைவியை கடுப்பேற்றியவன், மனதுள்
சிரித்து கொள்ள,
மனைவியோ..  கணவனின் குதர்க்கமான பதிலில், உச்சி குளிர்ந்து போனவள்,
“போயும் போயும் இவர்கிட்ட போய் காதலை பற்றி கேட்டேன் பாரு என்னை
சொல்லணும், இவருக்கு தெரிஞ்சதெல்லாம், அடிதடி, கட்ட பஞ்சயாத்து, முரட்டு
தனம், அடாவடி தான்”,
“காதல்ங்கிற   வார்த்தைக்கு கூட  அர்த்தம் தெரியாத இவரை   காதலிக்கிற
என்னை..!!  என்ன தான் செய்றது..?” என்று மனதில் பொரிந்தவாறே வர, கதிர்
மனைவியின் முகத்தில் தெரியும் சிடுசிடுப்பில், ஒன்றும் தெரியாதவன் போல்,
“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்போ இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு வர,
அந்த பொண்ணோட புருஷன் அந்த பொண்ணு படற கஷ்டத்தை பார்த்து ரொம்ப
துடிக்கிறார், பொண்டாட்டியை அவ்ளோ லவ் பன்றார்ன்னு நீ  தானே சொன்ன”,
“அதுக்கு தான் நான், இதெல்லாம் நடக்கும்ன்னு அந்த புருஷனுக்கு முன்னாடியே
தெரியாதா..?, ஆனாலும் இப்போ வந்து பொண்டாட்டி வலிய பார்த்து
துடிக்கிறதுக்கு பேர் தான்  காதலா..?ன்னு, தானே உன்கிட்ட கேட்டேன்,
அதுக்கு போய் இப்படி சிடுசிடுன்னு வர..” என்று மீண்டும் மீண்டும் அதையே
சொல்லி வம்பிழுத்தவன்,
“ஏன் இப்போ நம்மளையே எடுத்துக்கோ, நீ எங்கிட்ட கேட்டிருகிற மூணு மாசம்
டைம் முடிஞ்சவுடனே, நமக்குள்ளேயும் சிலபல கில்மாஸ் எல்லாம் நடக்கும்..”,
என்று மனைவியை பார்த்து  உல்லாசமாக கண்ணடித்து சொல்ல, அவனின் பேச்சில்,
பார்வையில் முகம் சிவக்கும் மனைவியையே  பார்த்து ரசித்தபடி,
“அப்பறம் மாமனோட டே அண்ட் நைட் பார்பார்மன்ஸ்ல, நீயும் கன்சீவ் ஆகுவ,
உனக்கும் பிள்ளை பிறக்கும் போது, இப்படித்தான் வலிக்கும், அப்போ உன்
மாமனும் வெளியே நின்னு உனக்காக துடிப்பான், அப்படி பார்த்தா நான்கூட
உன்னை காதலிக்கிற கணக்குல தானே வருவேன்..!!!?”, என்று கிண்டாலாக
சொன்னாலும், அதில் உண்மையும் ஒளிந்திருந்ததோ..?
அதுவரை வெட்கத்தில் சிவந்த முகத்துடன் அவன் பேச, பேச எல்லாவற்றையும்
மனக்கண்ணில்  கண்டு கொண்டிருந்த அஞ்சலிக்கு, அவன் இறுதியில் சொன்ன,
“அவனும், அவளை காதலிக்கும் கணக்கு..!!!?” என்ற வார்தையில், தன் இனிய கனவு
கலைய, திரும்பி கணவனை உறுத்து விழித்தவள்,
“அதென்ன, காதலிக்கிற கணக்கு..?, உங்களுக்கு  என்னை பார்த்தா எப்படி
தெரியுது..? என்று சீற,
“உன்னை  பார்த்தவா..?” என்று பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் மனைவியை
திரும்பி நன்றாக பார்வையால் மேய்ந்தவன்,
“சும்மா சொல்லக்கூடாது அப்படியே  நச்சுன்னு இருக்க, அதுவும் இந்த கருப்பு
கலர் புடவை, உன் ரோஸ் கலருக்கு அப்படியே அள்ளுது போ, இப்போ கூட பாரு,
கருப்பு புடைவுக்குள்ள தெரிஞ்சும் தெரியாமலும் தெரியற உன் ரோஸ் கலர்
இடுப்பு, மாமனை அப்படியே சுண்டி இழுக்குது, பாரு என் கைகூட   என்ன
பாடுபடுது..!!!”,  என்று ஒரு கையை மறுகையால் பற்றியபடி, அவளின் இடுப்பையே
தாபத்தோடு பார்த்தபடி சொல்லவும்,
அவசரமாக, சேலையை இழுத்து இடையை  மறைத்தவள், கணவனை கோவத்தோடு முறைக்க,
அவளின் முறைப்பை கண்டு கொள்ளாமல்,
 “ம்ம்ம்.. என்ன இருந்து என்ன பிரயோஜனம்..? நீ தான் மூணு மாசத்துக்கு
டைம் கேட்டு மாமன் கை கட்டி போட்டுட்டியே..” என்று பெருமூச்சு விட்டவனை
பார்த்து, கடுப்பானவள், தன் தலையில் அடித்து கொள்ள,
“போடி ரொம்பத்தான்..” என்று உதட்டை சுழித்தவன், காரை எடுக்கவுமே தான்,
அஞ்சலிக்கே புரிந்தது, அவன் காரை நிறுத்திவிட்டு தன்னிடம்
வம்பிழுத்திருக்கிறான் என, “இவரை..” என்று பல்லை கடித்தவள்,
“நான் என்ன கேட்டா இவர் என்ன சொல்றாரு, இப்படியே எப்போ பார்த்தாலும்
பேச்சை, டிவெர்ட் பண்ணிடுறது,  சரியான கேடி..”  என்று மனதுள் கணவனை
அர்ச்சித்து கொண்டே வந்தாள் மனைவி,
இருவரும் வீட்டிற்குள் செல்ல, திருவிழாக்கு என வந்திருந்த நாயகி,
தம்பியையும், தம்பி ,மனைவியையும் குளித்துவிட்டு முதலில் கோவிலுக்கு
சென்று வர சொல்ல,
“வேண்டாம்க்கா, அப்பறமா போயிக்கிறோம், அவ  ரொம்ப டயர்டா இருக்கா, கொஞ்ச
நேரம் தூங்கட்டும்..” என்று கதிர் மறுப்பாக சொன்னான்,
“இல்லை தம்பி, நீங்க இப்போ போயிட்டு வந்துட்டா தான் உண்டு, மதியத்துக்கு
மேல, அப்பாவோட கட்சி ஆளுங்க, நம்மகிட்ட வேலை செய்றவங்க எல்லாம்
வந்துருவாங்க”,
“அவங்களை எல்லாம் வரவேர்த்து, சாப்பாடு, துணிமணி எல்லாம்  அஞ்சலிதான்
வீட்டு மருமகளாய்  முன்ன நின்னு செய்யணும், அதான்.?” என்று தயக்கத்துடன்
அஞ்சலியின் சோர்ந்த முகத்தை பார்த்து, நாயகி கவலையுடன் இழுக்க, புரிந்து
கொண்ட அஞ்சலி,
“இல்லைண்ணி, நாங்க இப்பவே போயிட்டு வந்துடுறோம்..”, என்று சொல்லிவிட்டு
கிளம்ப சென்ற மனைவியை பின் தொடர்ந்தவன்,
“நீ ரெஸ்ட் எடு, அப்பறம் போயிக்கலாம்..” என்று அவளின் சோர்ந்த முகத்தில்
தெரிந்த களைப்பில் அக்கறையாய் மறுபடியும் சொல்ல,
“யாரும் ஒண்ணும் எனக்காக அக்கறை பட தேவையில்லை, நான் பாத்துக்கிறேன்..”
என்று நொடித்துவிட்டு குளிக்க சென்றுவிட, அவளின் கோவத்தில் சிரித்தவன்,
தானும் கோவிலுக்கு செல்ல தயாராகி வர, அஞ்சலி தயராகி வரவும், அவளை
கோவிலுக்கு அழைத்து சென்றவன்,
வழக்கம் போல கையெடுத்து கும்பிடாமல் கைகளை கட்டிக்கொண்டு நின்றவன்,
வெளியே வரவும், அஞ்சலி அவனுக்கு திருநீறு வைத்துவிட அவனின் முகம்
பார்க்க,
“நீ என்மேல  கோவமா இருந்தியா…? அதான் வைக்க மாட்டேன்னு நினைச்சேன்..”
என்று குறும்புடன் கூறியபடி குனிய, திருநீறு வைத்தவள், “கிளம்பலாம்..”
என்ற படி, அவன் வருகிறானா  இல்லையா என்று கூட பார்க்காமல், காருக்கு
சென்றுவிட,
“என்னடா இது..?” என்று மனைவியின் முகத்தை ஆராய்ந்தவாறே காரை ஓட்ட,
அதுக்கும்,  “ரோட்டை பார்த்து ஓட்டுங்க..!!” என்று சிடுசிடுத்த மனைவியை,
“ரொம்பத்தான் பண்றடி..” என்றபடியே காரை ஓட்டியவன், வழியில் ராகுலை
காணவும் சிரிப்புடன் நிறுத்தியவன்,
“டி.. உன் சின்ன மாமன்..”  என்றவாறே, ராகுலை கூப்பிட, கதிரை முறைத்தபடி
வந்தான் ராகுல்.
“என்ன எதுக்கு கூப்பிட்டிங்க..?” என்று கதிரிடம் விறைப்பாக கேட்டவன்,
அஞ்சலியிடம் மட்டும் பாசமாக,
“அஞ்சலி எப்படி இருக்க..?” என்று கேட்க,
“டேய் எதுக்குடா என்னை பேர் சொல்லி கூப்பிடற..?” என்று கதிரின் சீண்டலான
பார்வையில், கோபத்துடன் கேட்ட மாமன் மகளிடம்,
“இதென்ன புதுசா கேட்கிற அஞ்சலி, நான் எப்பவும் உன்னை அப்படிதானே
கூப்பிடுவேன்,  நீ என் முறைப்பொண்ணு, எனக்கு எல்லா உரிமையும் இருக்கு,
தெரியுமில்ல, அப்பறம் என்ன.?”
“எதோ நீ வயசுல  என்னை விட கொஞ்சம் அதிகமா போயிட்ட, இல்லன்னா என்னை மீறி
யாராவது உன்னை தூக்கிட்டு போய் பிடிக்காம தாலி கட்டியிருக்க முடியுமா..?”
என்று கதிரை பார்த்து வீராவேசத்துடன்  பொங்கினான் அஞ்சலியின் குட்டி
மாமன்.
“டேய் தூக்கிட்டு போய் தாலி காட்டினேன்ன்னு மட்டும் சொல்லு, ஆனா
பிடிக்காம தாலி காட்டினேன்ன்னு எல்லாம் சொல்லாத, ரொம்ப  பிடிச்சுதனாலதான்
தாலி கட்டியிருக்கோம்..”, என்று அஞ்சலியைவே பார்த்தபடி சொன்னவன்,
“என்ன அஞ்சலி..?   நான் சொன்னது சரிதானே..?”  என்று மனைவியிடம்  கேட்க,
“இதென்ன புது கதை..?” என்று கணவனை பார்த்த அஞ்சலி, அதையே கேள்வியாக கேட்க,
“எல்லாம் பழைய கதைதான், ஏன் நான் உனக்கு புருஷனா வந்தது உனக்கு
பிடிக்கலையா என்ன..?”  என்று அழுத்தத்துடன் விஷமாமாக கேட்க, பல்லை கடித்த
அஞ்சலி,
“வார்த்தையை எப்படி எல்லாம் மாத்துறாரு பாரு..?” என்று உள்ளுக்குள் உஷரானவள்,
“இங்க தூக்கிட்டு போய் தாலி கட்டினது மட்டும் தான் பேச்சே தவிர, புருஷனை
பத்தி கிடையாது..”  என்று கவனமாக பதில் சொல்லாமல் எதிர் கேள்வி
கேட்டவளிடம்,
“என்னடி இது, தாலி கட்டினா புருஷன்தானே..!!  அந்த புருஷனைத்தானே  உனக்கு
பிடிச்சிருக்கா..? பிடிக்கலையான்ன்னு..?   நானும் கேட்கிறேன்..”, என்று
ஒரு முடிவோடு கேட்டு கொண்டிருக்க, இன்னும் உஷாரானவள்,
“அவன்  என்னை தூக்கிட்டு  போய்,  பிடிக்காம தாலி கட்டியிருக்கீங்கன்னு
உங்களை தான் சொன்னான், என்னை இல்லை..”, என்று தப்பிக்க பார்க்க,
“டேய் நீ யாருக்குடா  பிடிக்கலன்னு சொன்ன, எனக்கா..? இல்லை
அஞ்சலிக்கா..?” என்று ராகுலிடமே கதிர் கேட்டுவிட,
“நான் அஞ்சலிக்கு தான் பிடிக்கலன்னு சொன்னேன், உங்களுக்கு என்ன..?
சாய்பல்லவி மாதிரி இருக்கிற எங்க அஞ்சலியை பிடிக்காம போகுமா என்ன..?”
என்று மாமன் மகளின் பெருமையை சொல்ல,  தன்னை மாட்டிவிட்ட ராகுலை
கொலைவெறியோடு முறைத்தவள்,
“டேய் கிளம்புடா.. இங்க என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு..” என்று அவனை விரட்ட,
“என்ன அஞ்சலி நீ..? உனக்காக தான் நான் சப்போர்ட் பண்ணிட்டிருக்கேன்,
என்னையவே விரட்டுற, இந்த மாமன் பொண்ணுங்களை எல்லாம் புரிஞ்சிக்கவே
முடியலப்பா..!!!?”, என்று பெரிய மனிதன் போல்  புலம்பியபடி சென்றவனை
பார்த்து சிரித்த கதிரை,
“உங்களுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு, அங்க அண்ணி நமக்காக வெய்ட்
பண்ணிட்டிருப்பாங்க, நாம இன்னமும் இங்கேயே இருந்தா எப்படி, இப்போ வண்டியை
கிளப்புறீங்களா..? இல்லை நான் இறங்கி நடந்தே போயிக்கவா..?” என்று ஜீப்பை
விட்டு இறங்க பார்க்க,
“உட்காருடி, ரொம்பத்தான்..  இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி
தப்பிக்கிறேன்னு  நானும் பாக்கிறேன்..!!?”  என்று தலையை ஆட்டியபடி
சொன்னவன், வீட்டிற்கு வண்டியை விட்டான், அதற்கு பிறகு, இருவருக்குமே
நேரம் சரியாக இருந்தது, மதியத்திற்கு மேல் ஆட்கள் வந்தவண்ணம் இருக்க,
எல்லோரையும் வரவேற்று அங்கேயே தோட்டத்தில்  ஷாமினா கட்டி பந்தல்
போட்டிருக்க, பந்தி நடந்தபடியே இருந்தது,
 அவர்களிடம்  வேலை செய்பவர்களுக்கு துணியும், ஒரு மாத சம்பளமும் மாறன்,
மருமகள் கையாலே குடுக்க செய்தார், அதற்கு மட்டுமில்லாமல் மற்ற
எல்லாவற்றிர்க்கும் மருமகளை தான் முன்னிறுத்தினார். “இனி இந்த
குடும்பத்தில் லட்சுமிக்கு பிறகு எல்லாமே  அஞ்சலி தான்..” என்பதை
எல்லோருக்கும் தன் செயலின் மூலம் காட்டிகொடுத்தார்.
அங்கே அசோக்கின் வீட்டில், அசோக் நிலை தான் மிகவும் கவலைகிடமாக இருந்தது,
அங்கும் சுந்தரத்தின் கட்சி ஆட்கள், அவர்களிடம் வேலை செய்பவர்கள் என
எல்லாம் வந்தபடியே இருக்க, அங்கும் ஷாமினா பந்தல் போடப்பட்டு
எல்லோருக்கும் பந்தி விடாமல் நடைபெற்றது.
இரவு நெருங்கவும் தான், ஆட்களின் வரவு குறைய, அன்றிரவு திருவிழாவுக்கென
அரேன்ஜ் செய்யப்பட்டிருந்த பாட்டுக்கச்சேரி, கூத்து, ஒயிலாட்டம்,
மயிலாட்டம், வானவேடிக்கை எல்லாம் தொடங்க இருந்ததால், அங்கு செல்வதற்காக
வேகமாக தயாரான அசோக், சந்தோஷத்துடன் கிளம்ப, வழியை மறைத்தபடி எதிரே நின்ற
மீனாட்சி, கண்களில் தீப்பந்தத்தை எரிய விட்டு கொண்டிருந்தார்,
“இப்படி புதுமாப்பிள்ளை கணக்கா சீவி சிங்காரிச்சிகிட்டு எங்கடா
கிளம்புற..?” என்று கோவத்தோடு கேட்க,
“ம்மா.. என்ன புதுசா கேட்கிற..? இன்னிக்கு எத்தனை ப்ரோகிராம் இருக்கு,
அங்க எல்லாம் அய்யா போகவேன்டாமா..? அதுக்குத்தான் புதுத்துணி எல்லாம்
போட்டுக்கிட்டு ஜோரா கிளம்பிட்டேன்…”  என்று மகிழ்ச்சியோடு சொல்ல,
“ஆறு கடக்கிற வரை அண்ணன் தம்பி, ஆத்தை கடந்த பின்னாடி நீ யாரோ, நான்
யாரோன்னு இல்லை ஆகிப்போச்சு என் மக நிலைமை..”, என்று திடீரென உச்ச கட்ட
சத்தத்தில் கூப்பாடு போட,
“ம்மா.. ம்மா.. என்னம்மா வேணும், ஏன் இப்படி கத்துற.?” என்று அம்மாவின்
கத்தலில் வெளியே வந்த தந்தையை பார்த்து பதறிபோய் கேட்க,
“பின்ன என்னடா..? என் ஒரே மக, கல்யாணமாகி போய் இன்னும் முழுசா ஒரு மாசம்
கூட முடியல, அதுக்குள்ளே அவளை மறந்துட்ட ஒரு சுயநலக்காரா பிள்ளையை பெத்து
வச்சிருக்கேனே..!! கடவுளே நான் என்ன செய்ய..? ஏது செய்ய..?” என்று ராகம்
இழுக்க, நொந்தவன்,
“ம்மா.. ப்ளீஸ்ம்மா புரியற மாதிரி பேசு, அஞ்சலியை யாரு மறந்தா
சொல்லுங்க..” என்று புரியாமல் கேட்க,

Advertisement