Advertisement

“வாடி வா, இப்போ நீயே வந்தியா என்வழிக்கு..? எவ்ளோ ஸீன் ஓட்டுற, ம்ம்..
என்னமோ எனக்கு செய்றதை வேண்டாவெறுப்பா செய்றமாதிரி என்ன நடிப்பு, போடி..”
என்று மனதில் நினைத்தபடி கணவன்  சிரித்து கொண்டிருக்க, ஓடிப்போன மனைவியோ,
தோட்டத்தில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள்.
“கொஞ்சநேரத்துல என்ன செஞ்சிட்டார்..? இவர்கிட்ட நான் இன்னும் ரொம்ப
உஷாராதான் இருக்கணும், சரியான கேடி, சேன்ஸ் கிடைச்சா போதுமே..!!” என்று
கணவனின் அடாவடியில் முகம் சிவக்க, நின்றிருந்தவள், கேட்டிற்கு வெளியே
“அண்ணா..” என்று கூப்பிடும் சத்தம் கேட்கவும், ராமசாமி சென்று கேட்டை
திறக்க, வெளியே கதிரின் இளைஞர் படை நின்றிருந்தது,
“இவங்க எல்லாம் ஏன் இங்க வந்திருக்காங்க..?” என்று அவர்களுக்கும், கதிர்,
அசோக்கிற்கும் உள்ள பழக்கம் பற்றி தெரியாமல் பார்த்து கொண்டிருக்க,
ராமசாமி சென்று கதிரை கூட்டிக்கொண்டு வந்தார்,
“என்னங்கடா.. இந்த நேரத்துல வந்திருக்கீங்க..?” என்று கதிர் கேட்கவும்,
“ண்ணனே நாம மோசம் போயிட்டோம்ண்ணே. மோசம் போயிட்டோம், இந்த ஊர் பெருசுங்க
எல்லாம் நம்மளை ஏமாத்திருச்சுங்கண்ணே..” என்று அழுகையுடன் ராகம் போட,
உள்ளுக்குள் சிரித்த கதிர், வெளியே முறைப்புடன்,
“டேய் அடங்குங்கடா.. முதல்ல என்ன காரணம்ன்னு சொல்லிட்டு நடிங்கடா.” என்று அதட்ட,
 “இல்லண்ணே, அன்னிக்கு அந்த பெருசுங்க என்ன தீர்ப்புண்ண சொன்னாங்க,
திருவிழாக்கு எல்லா கோவிலுக்கும் வெள்ளையடிக்க தானே சொன்னாங்க,
நாங்களும் இன்னிக்கு நல்ல பிள்ளைங்களா வெள்ளை அடிக்க போனோமோ, அங்க
வெள்ளை அடிக்க ஒண்ணுமே இல்லண்ணே”,
“என்னடா இதுன்னு நாங்க போய் அந்த பெருசுங்க கேட்டா, அதுக்கு அந்த
பெருசுங்க நக்கலா என்ன சொன்னாங்கன்னு தெரியுமாண்ணா..? நாங்க ஏன் பொருள்
எல்லாம் தரணும், நீங்கதான் உங்க சொந்த செலவுல வெள்ளை அடிக்கணும்ண்ணு
சொல்லிட்டு சிரிக்கிறாங்கண்ணே, சிரிக்கிறாங்க..”,
“இந்த ஊர்ல இருக்கிற சின்ன கோவில்லேருந்து, பெரிய கோவில் வரைக்கும்
வெள்ளை அடிக்க, எம்புட்டு துட்டு ஆகும், அம்புட்டு துட்டுக்கும் நாங்க,
இந்த பச்சை மண்ணுங்க எங்கண்ணே போவோம், எங்க போவோம்..? நீங்களே சொல்லுங்க,
அதான் உங்ககிட்டேயே வந்துட்டோம்..” என்று ராகத்தோடு ஒருவர் மாற்றி ஒருவர்
சொல்லி முடிக்க, நக்கலாக சிரித்த கதிர்,
“அதான் சொல்லி முடிச்சிட்டீங்க இல்லை, கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு
உள்ளே செல்ல பார்க்க,
“அண்ணே..” என்று மீண்டும் கோரஸாக கத்தியவர்கள், “என்னண்ணே இது, உங்க
உயிருக்கு உயிரான தம்பிகளை, உங்க உடன்பிறவா ரத்தங்களை இப்படி தவிக்க
விட்டுட்டு போலாமா..? சொல்லுங்கண்ணே..!!” என்று வராத கண்ணீரை துடைக்க,
“டேய்.. ஓவரா நடிக்காதீங்கடா, அடங்குங்க, நான் தான் முதல்லே சொன்னேன்
இல்லை, ரொம்ப பெருசா செய்யாதீங்கன்னு, ஆனா நீங்க கிடைச்சது சேன்ஸ்ன்னு
உங்களுக்கு ஆகாதவங்களை எல்லாம் தேடி தேடி பொளந்தா விட்டுருவாங்களா..
போங்கடா, போய் வெள்ளையடிக்கிற வேலையை ஆரம்பிங்க”, என்று சொல்ல,
“அண்ணே.. இப்படியெல்லாம் நீங்க சொல்ல கூடாது, நீங்களும் கைவிட்டா இந்த
குழந்தைங்க  எல்லாம் எங்கண்ணே போவோம், காப்பாத்துங்கண்ணே..!!”  என்று
எல்லோரும் மொத்தமாக நீட்டி படுத்தே விட,
“டேய்..டேய் எழுந்து தொலைங்கடா, மானத்தை வாங்காதீங்க”, என்று கத்த,
எழுந்து நின்றவர்களை, கண்டிப்புடன் பார்த்த கதிர்,
“ஓகே உங்களுக்காக எல்லா செலவையும் நானே பாத்துக்கிறேன், ஆனா” என்று
இழுக்க, எதோ பெருசா கைவைக்க போகிறான் என்று புரிந்து கொண்டவர்கள்,
“அண்ணே பார்த்து பதமா செக் வைங்கண்ணே, அடுத்து திருவிழா வேற வருது..”
என்று உஷாராக  சொன்னவர்களை கண்டு நக்கலாக சிரித்தவன் “அதெல்லாம் நீங்க
ஓடி ஓடி அடிச்சேங்க இல்லை அப்ப இருந்திருக்கணும்”,
“இப்போ கட் என்னன்னா..? உங்க எல்லோருடைய ஒரு மாச சம்பளம், அது மட்டும் இல்லாம..”.
“அண்ணே போதும்..  இதுக்கே லைட்டா நெஞ்சு வலி வர்ற மாதிரி இருக்கு” என்று
ஒருவன் நெஞ்சை பிடித்தபடி பாவமாக சொல்ல,
“அப்படியா..? அப்போ அடுத்ததும் கேட்டு மொத்தமா போய் சேந்துருடா”, என்று
கிண்டலாக சொன்ன கதிர்,
“இன்னும் மூணு மாசத்துக்கு உங்க எல்லோருடைய மாச தண்ணி கோட்டாவும் கட்”
என்று முடிக்க, நெஞ்சு வலி வந்தவன், அதிர்ச்சியில் வலிப்பு வந்தது போல்,
கீழே விழுந்து இழுக்க ஆரம்பித்தான்,
“நான் சொன்னது தான் முடிவு, அதுக்கு ஒத்துக்கறதா இருந்தா, நாளைக்கு
காலையில இருந்து வேலையை ஆரம்பிச்சுடுங்க, அப்பறம் போகும்போது, இவனையும்
தூக்கிட்டு போய் வீட்ல போட்டுட்டு போங்க..” என்று முடித்துவிட்டு உள்ளே
வந்தவன்,
தன் எதிரே நின்று முறைக்கும் மனைவியை, புரியாமல் பார்த்தவன், “என்னடி..?”
என்று கேட்க,
“இது எல்லாம் என்ன..?” என்று அங்கு தூரத்தில் வலிப்பு வந்தவனை துரத்தி
கொண்டு ஓடும் கூட்டத்தை கைகாட்டி கோபத்துடன் கேட்டாள்,
“ஓஹ் இவங்களா..? வா சொல்றேன்..”  என்று நடந்தவாறே அவளின் தோளில் கைபோட,
எட்டி அதை தவிர்த்தவள்,
“அப்படியே சொல்லுங்க..”  என்று உஷாருடன் அவன் கையில் சிக்காமல் முறைக்க,
“க்கும் ரொம்பத்தான் உஷாரு, அதுவும் மூணு மாசத்துக்கு தானே”, என்று  நொடித்தவன்,
“அவங்க எல்லாம் நானும், உன் அண்ணனும் சேர்த்திருக்கிற ஒரு படைன்னு வச்சுக்கோயேன்”,
“ஏன் உங்களுக்கு எதுக்கு படை..?” என்று புரியாமல் கேட்ட மனைவியிடம்,
“எங்களுக்கான படை இல்லை. எல்லாத்துக்கும் தேவைப்படும் படை, நம்ம
ரெண்டுபக்கம் இருக்கும் எல்லா பிரச்சனையும் அடுத்த தலைமுறைக்கும்
கடத்தாம தடுக்கும் படை, இவங்க எல்லாம் தானே  அடுத்த தலைமுறை..!!!”, என்று
சொன்ன கணவனின் தொலைநோக்கு பார்வையில், பூரிப்படைந்த மனைவி, கணவனை
பெருமையுடன் பார்க்க, புரிந்து கொண்டவன்,
“மாமனுக்கு கிப்ட் ஏதும் தரப்போறியா..?” என்று வினயமாக கேட்க, சுதாரித்து
கொண்டவள்,
“நான் எதுக்கு உங்களுக்கு கிப்ட் தரணும்..” என்று நொடித்தபடி உள்ளே சென்ற
மனைவியை ரசிப்புடன் பார்த்தான் கணவன்,
கதிரின் முகத்திருப்பல்கள் எல்லாம் மறைந்து மறுபடியும் நாட்கள் வழமை
போல்,  “கணவனின் சீண்டலுடனும், மனைவியின் மறைமுக காதலுடனும்.!!!?”,
இருவருக்கும்  சுவாரஸ்யமாகவே சென்றது,
காலையிலே எழுந்து சுப்புவின் உதவியுடன் காலை டிபன் மட்டும் செய்யும்
அஞ்சலி, அதற்கு பிறகு கதிருடனே ஹாஸ்பிடல் டியூட்டிக்கு கிளம்புவாள்,
கதிருக்கு வேலை இருக்கும் நாட்களில், சுந்தரத்திடம் கேட்டு
அஞ்சலிக்காகவே இங்கு வரவைத்திருந்த தங்கதுறையுடன் செல்வாள்,
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவின் வீட்டிற்கும் சென்று வருவாள்,
இல்லாவிடில், அசோக் இங்கு வருவான், இப்படியே நாட்கள் செல்ல, திருவிழா
நாளும் வந்தது, திருவிழா நாளிற்கு முன்தின இரவு, அஞ்சலிக்கு இரவு
டியூட்டி இருக்க, எப்போதும் போல் கதிரே கொண்டுவிட்டு வந்தான்,
அன்று இரவு, ஒரு பிரசவ கேஸ், வர, அவசரமாக தலைமை டாக்டரை தொடர்பு கொண்டு,
விஷயத்தை சொன்னவள், அந்த பெண்ணிற்கு தனக்கு தெரிந்தவரை முதலுதவி
செய்தாள். பின் டாக்டர் வந்துவிட, அவர் பார்த்துக்கொள்ள, வெளியே
வந்தவளிடம், அப்பெண்ணின் கணவன், பதட்டத்தோடு மனைவியின் நிலையை விசாரிக்க,
“பாத்துட்டு இருக்காங்க, உங்க சம்சாரம் நல்லா இருகாங்க, கவலை படாதீங்க,
நார்மல் டெலிவரியே ஆக வாய்ப்பு இருக்கு..” என,
“இல்லை அவ ரொம்ப வலி தாங்கமாட்டா, நீங்க வேணும்ன்னு ஆப்பரேஷன் கூட
செஞ்சுடுங்க..” என்று மனைவியின் வலி கதறலை தாங்க முடியமால் சொல்ல,
“ம்ஹூம், ஆப்பரேஷன் தான் அவங்களுக்கு காலத்துக்கும் வலி கொடுக்கும், இது
கொஞ்சநேர வலிதான்”, என்று விளக்கமாக சொன்னவளின் மனம் முழுதும் கணவனிடம்
தான் இருந்தது,
தனக்கு இதுபோல் இருந்தால், தன் கணவனும், இவரை போல் தன் வலிக்காக
துடிப்பாரா..? என்று நினைத்தவுடன்  அஞ்சலிக்கு ஏனோ தோன்றியதெல்லம்,
“இல்லை..??”  என்ற பதில்தான்,
“அவர் கண்டிப்பா எனக்காக எல்லாம் துடிக்க மாட்டார், அவர் பழிவாங்கதானே
என்னை கல்யாணம் செஞ்சிருக்கார், எப்படியும் நான் தான் அவர் மனைவின்னு
ஆனதுக்கப்புறம், என்னோட வாழஆசைப்படுறார் அவ்வளவுதான்”,
“அதைத்தவிர அவருக்கு  என்மேல பெருசா வேற என்ன  இருந்திட போது..? இதுல
நான் அவரை காதலிக்கிறேன்னு வேற தெரிஞ்சிட்டா, என்ன சொல்வார்..? கண்டிப்பா
சந்தோஷம் மட்டும் படமாட்டார்..”, என்று  இரவு முழுவதும் தன்னுள்ளே
உழன்றவளை, கூட்டிட்டு செல்ல வந்த கதிர்,
“என்ன ஆச்சு..? ரொம்ப டயர்டா தெரியுற..?” என்று அவளின் சோர்ந்த விழிகளை
பார்த்து கேட்க,
“ம்ப்ச்..” என்றவள், இரவு நடந்ததை சொல்லி, அந்த கணவனின் காதலை பற்றி சொன்னவள்,
“பொண்டாட்டிக்காக என்ன பாடுபட்ரார் தெரியுமாங்க, அவ்வளவு காதல்
பொண்டாட்டி மேல, என்னங்க..?” என்று கதிரின் மனநிலையை தெரிந்து
கொள்வதற்காக கேட்க, அவனோ நக்கலாக சிரித்தபடி,
“பொண்டாட்டி மேல அவ்வளவு காதல் இருந்திருந்தா, அவளை தொட்டே இருந்திருக்க
கூடாது, அப்படி தொட்டதனால தானே, இந்த வலி எல்லாம், அப்பறம் இதுல காதல்
எங்கிருந்து வருது..?” என்று குதர்க்கமாக கிண்டல் செய்ய, கடுப்பான
அஞ்சலி,
“உங்ககிட்ட வந்து காதலை பத்தி கேட்டேன் பாருங்க என்னை சொல்லணும்..” என்று வெடிக்க,
“ஏய் ஏண்டி இவ்வளவு கோவப்படற, நான் என்ன தப்பா சொல்லிட்டேன், அவன்
தோட்டத்தால தானே அந்த பொண்ணுக்கு இந்த வலி,  ஏன் அவன் தொட்டால்
இப்படியெல்லாம் ஆகும்ன்னு அவனுக்கு தெரியாதா என்ன..?”
“அப்பறம் என்ன இப்போ வந்து என் பொண்டாட்டி கஷ்டபட்ரான்னு துடிச்சா சரியா
போயிருமா..? இது எல்லாம்தான் காதலா..?” என்று மறுபடியும் அதையே தான்
சொன்னான் “அஞ்சலியின் காதல் கணவன்..!!!?”.

Advertisement