Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 21
“அஞ்சலி.. என்ன ஆனாலும் இன்னைக்கு அவரை விடவே கூடாது, என் முகத்தை கூட
பார்க்க முடியாத அளவுக்கு  அப்படியென்ன ஒரு கோவம் அவருக்கு..?”
“இத்தனைக்கும் நான் பெருசா என்ன செஞ்சுட்டேன், அவர் பாத்தவுடனே  ஒரு டீ
கொடுக்கல, அவ்வளவுதான், அதுக்கு இத்தனை  அக்கப்போரா..? ஏன் அவருக்கு
மட்டும் தான் கோவம் எல்லாம்  வருமா..? தப்பித்தவறி எனக்கு கோவம்
வந்துட்டா  அவர் முறுக்கிட்டு தெரிவாரா..? வரட்டும் இன்னைக்கு..” என்று
மனதுள் கருவியவாறே அமர்ந்திருந்தாள் அஞ்சலி.
அவளும் தான் என்ன செய்வாள்..? கதிர் அவளிடம் முகம் கொடுத்து பேசி மூன்று
நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, அன்று கோவத்தில் சொன்னதுபோல், இதுவரை
அவளின் கையால் எதையும் செய்து கொள்வதில்லை, ஒன்று அவனே செய்து கொண்டான்,
இல்லை சுப்புவிடம்  கேட்டு செய்து கொண்டான்,
மாறன் உடன் இருக்கும்போது மட்டும் சாதாரணமாக இருப்பவன், அவர்
இல்லாசமயங்களில் முகத்தை தூக்கிவைத்து கொண்டே திரிவான், நாயகியும்
விருந்து முடிந்த அடுத்த நாளே, அவரின் வீட்டிற்கு கிளம்பிவிட, அஞ்சலி
முடிந்தமட்டும் அவனை நெருங்க முயற்சி செய்தாள், பலன் என்னமோ..?
வீட்டில் மாமனார் இருப்பதால், ஓர் அளவுக்கு மேல் அவனிடம் நெருங்கி
பேசவும், ஏன் சண்டை போட கூட முடியாமல் கருவிக்கொண்டிருந்தவளுக்கு,
இன்றுதான்  நல்ல வாய்ப்பு கிடைத்திருந்தது, மாறன் இரண்டு நாட்களுக்கு
சென்னை கிளம்பிவிட,
சுப்புவிற்கும் இரண்டு நாட்கள் லீவ் கொடுத்து அனுப்பிவிட்டாள், சுப்பு
இருந்தால்தானே அவரிடம் கேட்டு அவன் செய்து கொள்ள..?, மாலை ஆகவும்,  இன்று
கணவனிடம் ஒரு முடிவு தெரிந்து கொள்ளாமல் விடப்போவதில்லை, என்று கங்கணம்
கட்டிக்கொண்டு சோபாவிலே அமர்ந்திருந்தாள்.
இதில் அவளை மேலும் கதிரின் கோவம் கொள்ள வைத்தது, இன்று காலை அவன் பேசிய
பேச்சுதான், அன்று காலை மாறனும், கதிரும் அமர்ந்து  காலை உணவு சாப்பிட்டு
கொண்டிருக்கும் போது, மாறனிடமும், கணவனிடமும், அவள் மறுபடியும் வேலைக்கு
செல்ல கேட்க,
“ சந்தோஷமா போயிட்டு வாம்மா..” என்ற மாறன், உண்டுமுடித்துவிட்டு கைகழுவ
செல்ல, இவள் எதுவும் சொல்லாமல் உண்ணும் கணவன் முகத்தை பார்த்தவள்,
மறுபடியும் கணவனிடம் கேட்க, அதற்கு அவன்,
“நீ  வேலைக்கு போறது உன் இஷ்டம், இதுல என்ன கேட்க என்ன இருக்கு..?, இல்லை
நான் தான் உரிமையா சொல்லவும் என்ன இருக்கு..?” என்று தட்டை பார்த்தபடியே,
ஒதுக்கத்துடன் சொன்னவன், எழுந்து சென்றுவிட, அவனின் பதிலில், முதலில்
கண்ணீர் வந்தாலும், நினைக்க நினைக்க ஆத்திரமும் பொங்கியது,
“அதெப்படி கணவன் தன்னிடம் உரிமையா சொல்ல என்ன இருக்கு..?” என்று
சொல்லலாம், “ஏன் நான் யாருமே இல்லையா அவருக்கு..? வரட்டும், இன்று
இரண்டில் ஒன்று தெரிந்து கொள்ளாமல் விடப்போவதில்லை”,
அவர்  பேசிய பேச்சுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும், என்று உறுதியுடன்
அமர்ந்திருக்கும் பொழுது, வெளியே கதிரின் புல்லட்  சத்தம் கேட்கவும், எதோ
போருக்கு தயாராவது போல், கணவனிடம் சண்டை போடா ரெடியாக அமர்ந்திருந்தாள்.
 வீட்டிற்கு உள்ளே வந்த கதிர் தன்னையே முறைத்தபடி சோபாவிலே அமர்ந்திருந்த
மனைவியை கண்டு கொள்ளாமல், நேரே மேலே ரூமிற்கு செல்ல, கடுப்பான அஞ்சலி,
“என்னடா இங்க ஒருத்தி உட்கார்ந்து நம்மளை கோவமா முறைச்சி பாக்கிறேளான்னு
இல்லாம எனக்கென்னன்னு என்னை கண்டுக்காம மேலே போனா என்ன அர்த்தம்..?”
என்று கோவத்தில் புஸுபுஸுவென மூச்சு விட்டவள், கணவனை தொடர்ந்து தானும்
மேலே ஏறினாள்,
கதிர் ரூமில் இல்லாமல் போக, எங்கே என்று தேடியவளுக்கு பாத்ரூமில் சத்தம்
கேட்கவும், அங்கேயே அப்படியே வழியை அடைத்தபடி பாத்ரூமிற்கு வெளியவே
நின்றாள், கதிர் கதவை திறக்கவும், வழியை மறைத்து எதிரே நின்ற மனைவியை
எதிர்பாக்காமல் முதலில் திகைத்தவன்,
பின் அவளின் கோபமூச்சில்  தோளை குலுக்கியவாறே, வழியில் நின்ற மனைவியை
வலுவாக இடித்துவிட்டு சென்றான். அவன் இடிப்பான் என எதிர்பாரா அஞ்சலி,
அவனின் வலுவான இடியில்,  விழாமல்  தட்டு தடுமாறி நின்றவள், ஆத்திரத்தோடு
கணவனை திரும்பி பார்க்க,
அவன் உல்லாசமாக விசிலடித்தபடி, தலை வாரியவன், அவளை பொருட்படுத்தாமல் கீழே
இறங்கி செல்ல, “இவரை..” என்று பல்லை கடித்த அஞ்சலி, தானும் அவன் பின்னே
கீழே இறங்கியவள், கிட்சனில் சத்தம் கேட்கவும், அங்கு சென்றால், அவன்
கூலாக டீ தயாரித்து கொண்டிருக்க,
“இந்த டீயால தான் எனக்கு இவ்வளவு பிரச்சனை..” என்று கொஞ்சம் கூட லாஜிக்
இல்லாமல் டீ மேல் கோவப்பட்ட அஞ்சலி, வேகமாக  சென்று டீ அடுப்பை
அணைத்துவிட்டு, கணவனை பார்க்க, அவன் அவளின் செயலை கவனிக்காதவன் போல்
மறுபடியும் அடுப்பை பத்தவைக்க, அந்த அடுப்பையும் அணைத்த அஞ்சலி, கணவனின்
எதிரே நின்று நேருக்கு நேர் முறைத்தவள்,
“நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க..? நானும் இந்த
நாலுநாளா பாத்துட்டு இருக்கேன், ரொம்பத்தான் ஓவரா பண்றீங்க, உங்களுக்கு
என்னை பார்த்தா எப்படி தெரியுது..?” என்று பொங்க,
அவனோ அவளின் பேச்சு காதில் விழுக்காதது போல், விலகி செல்ல பார்க்க,
சட்டென அவனின் கையை பிடித்தவள், “நான் பேசிட்டேஇருக்கேன், நீங்க பேசாம
எனக்கென்ன போன என்ன அர்த்தம்..?” என்று கேட்டவளின் கையில் இருந்த தன்
கையை குறிப்பாக பார்த்த கதிர், மனைவியை பார்க்க, அவளோ, அவனின் கையை
பிடித்திருப்பதையே உணராமல் மேலும்,
“ஏன் காலையில நான் வேலைக்கு போகட்டான்னு கேட்டதுக்கு அப்படி பேசுனீங்க..?
அதென்ன புதுசா உரிமை பத்தியெல்லாம் பேசுறீங்க, ஏன் எனக்கு உங்ககிட்ட
எந்த  உரிமையும்  இல்லயா..?” என்று ஆதங்கத்தோடு கேட்டவளை, வெறித்தவன்,
“நான் எனக்கு தான் உன்மேல உரிமை இல்லன்னு சொன்னேன்”, என்று  அழுத்தத்தோடு
சொன்னவன், அவளின் கையிலிருந்து தன் கையை விடுவித்து கொண்டு செல்ல, வேகமாக
மறுபடியும் வழிமறைத்தவள்,
“பர்ஸ்ட் நைட்ல என்னமோ நானும் நீங்களும் புருஷன், பொண்டாட்டி, உங்களுக்கு
என்மேல எல்லா உரிமையும்  இருக்குன்னு அந்த கோவபட்டீங்க,  இப்போ மட்டும்
என்ன  திடீர்ன்னு உங்களுக்கு என்ன  மேல எந்த உரிமையும்  இல்லாம
போயிருச்சா..?”  என்று  கொதித்தவளை, கைகளை  கட்டி கொண்டு தீர்க்கமாக
பார்த்தவன்,
“எனக்கு உன்மேல என்ன உரிமை இருக்குன்னு நீ சொல்ற..?” என்று கேட்க,
கோவத்தில் நிதானத்தில் இல்லா அஞ்சலிக்கு, அவனின் பேச்சு செல்லும் திசை
தெரியாமல், அவனுடனே சென்றாள்,
“உங்களுக்கு என்மேல என்ன உரிமை இல்லை, எல்லா உரிமையும் தான் இருக்கு..”
என்று சொன்னவளை, உள்ளுக்குள் சிரித்தபடியே பார்த்த கதிர், கண்களில்
மின்னும் குறும்புடன்,
“அப்போ எனக்கு உன்கிட்ட எல்ல்லா உரிமையும் இருக்கு அப்படித்தானே..?”
என்று கேட்டவன், கோவத்தில் மேலும் சிவந்திருந்த தன் ரோஸ் கலர் அழகியின்
இடையை வளைத்தவன், அவளின் கண்களை பார்த்தபடியே,
“சொல்லு..  எனக்கு உன்மேல எல்லா உரிமையும் இருக்குதானே..?” என்று
கேட்டபடி, அவளின் நெற்றியில் இதழ் பதித்தவன், அவளை மேலும் தன்னோடு
இறுக்கி கொண்டவாறே, அவளின் காது மடலில்  சில்லென முத்தம் பதித்தவாறே,
“சொல்லுடி..”  என்று கொஞ்ச, அஞ்சலி அதிர்வுடன் செயலற்று நின்றிருந்தாள்,
அவள் கோவத்தோடு கணவனிடம்  சண்டை போட்டு கொண்டிருக்க, கணவனோ அவளின்
கோவத்தை எல்லாம் ஒன்றும் இல்லாமல்  செய்து, அவளையே வசியப்படுத்தி
கொண்டிருந்தான்,
அவனிடம் இருந்து இத்தகைய செயலை எதிர்பார்க்காத அஞ்சலி, தன் கோவத்தை
எல்லாம் மறந்து அவனின் நெருக்கத்தில், ஸ்பரிசத்தில் மெய்மறந்து
நின்றாள்,
அவளின் நிலையை புரிந்து கொண்டவன், அவளின் வெற்றிடையில் தன் விரல் கொண்டு
வருடியவாறே தன் இதழை கீழிறக்கி, அவளின் கழுத்தில் முத்தம் பதிக்க,
“ஸ்ஸ்..” என்று சிலிர்த்த அஞ்சலி, உணர்ச்சி வேகத்தில் தன் உதட்டை கடிக்க,
அவளை தன்னிடம் இருந்து லேசாக விலக்கியவன், கடித்த உதட்டை,  தன் இதழால்
உரசி,  விடுவித்தவன், தன் இதழால்,  அவளின் இதழை முழுதும் கவ்வி கொண்டான்,
அவனின் ஆழ்ந்த முத்தத்தில், திணறிய அஞ்சலியை, தன்னோடு சேர்த்து மேலும்
மேலும் இறுக்கி அணைத்த கணவனின்,  நீண்ட  முரட்டு இதழ் முத்தம், அஞ்சலியை
மூச்சுக்கு தவிக்க செய்ய, “ம்ம்ம்..” என்று முனக, அப்படியும் விடாமல்
இதழை சுவைத்தவனிடமிருந்து,
வேகமாக தன் இதழை விடுவித்து கொண்டவள், தள்ளி நின்று “ம்ஹா..” என்று
மூச்சு வாங்கி கொண்டே, கணவனை பார்க்க, அவனோ அவள் மூச்சு வாங்கும் அழகை
தாபத்துடன் ரசிக்க, கண்டுகொண்டவளின் முகம் கோவம், வெட்கம் கலந்து மேலும்
சிவந்தது,
“என்ன செய்ரீங்க நீங்க..?” என்று முயன்று வரவைத்த முகக்கடுமையுடன் மனைவி கேட்க,
“நான் என்ன செஞ்சேன், நான் சும்மாதான் இருந்தேன், நீதாண்டி எனக்கு உன்மேல
எல்லா உரிமையும் இருக்குன்னு, என்கிட்ட சண்டை போட்ட, அதான் நீ சொன்னது
உண்மையான்னு டெஸ்ட் செஞ்சேன்”, என்று உதட்டை சப்பியபடி  சொன்னவன்,
“இந்த டெஸ்ட் ஓகே ரகம் தான், இன்னும் கூட நல்லா டெஸ்ட் செய்யணும்”,
என்றபடி அவளின் அருகில் வர, பதறிபோனவள்,
“அங்கேயே நில்லுங்க..”, என்று அவசரமாக சொன்னாள். அவளின் பதட்டத்தில் சிரித்தவன்,
“ஏன் நான் கிட்டவந்தா என்னவாம்..?” என்று குறும்பாக கேட்டபடி நெருங்கும் கணவனிடம்,
“இங்க பாருங்க, என்கிட்ட வராதீங்க, அங்கேயே நில்லுங்க”, என்று தவிப்புடன்
சொன்னவள், அவன் கேட்காமல் அருகே வர வர, என்ன செய்வது என்று ஓர் நொடி
முழித்தவள், அடித்து நொடி வேகமாக அங்கிருந்து ஓடியே போனாள். மனைவி
ஓடவும்,
“ஏய் பாத்து போடி..”  என்று கத்தியவன், சத்தமாக சிரித்தான்,

Advertisement