Monday, April 29, 2024

Negizhiniyil Nenjam Kondaen 19 2

25344

Advertisement

அங்கு அஞ்சலி  அவன் சாப்பிட  உணவை எடுத்துவைக்க, “இதுகெல்லாம் டைம்
இல்லை, கிளம்பு போலாம், அங்கேயே பாத்துக்கலாம்..”, என்று  அவசரப்படுத்த,

“ம்ஹூம்.. மனைவி அசந்தால் தானே..!!”

 “ம்ப்ச்.. படுத்ததாடி, டைம் ஆச்சு எல்லாரும் வந்துருவாங்க கிளம்பு..”
என்று அதட்ட, அப்போதும் அசையாமல் நின்ற மனைவியை முறைத்த தம்பியை பார்த்த
நாயகி, சிரிப்புடன்,

“இந்நேரத்துக்கு சாப்பிட்டிருக்காலம் தம்பி.. நீயும் காலையிலிருந்து
சாப்பிடாம தானே ஓடிட்டிருக்க, சாப்பிடு..” என, மாறனும்,

“எவ்வளவு நேரம் ஆகிறபோது சாப்புட்டுக்கோ கதிர்”, என்று மருமகள், மகனை
கவனிப்பதில் பெருமையுடன் வலியுறுத்த, “இது வேறயா..?” என்று கடுப்பானவன்,

“அழுத்தகாரிடி நீ.. போடு” என்று மனைவியை உறுத்து விழித்தபடி சாப்பிட
ஆரம்பித்தவன், “நீ..?” என்று அந்த கடுப்பிலும் மனைவியை  கேட்க, “ம்ம்..
சாப்பிட்டேன்..” என ஆமோதிப்பாக தலையாட்டவும், வேகமாக சாப்பிட்டவன்,
எல்லோரயும் அழைத்து கொண்டு கோவிலுக்கு வந்தான்.
அஞ்சலி கோவிலுக்கு வரும் சமயம், அவள் வீட்டிலும் இருந்து வர, பெண்கள்
பொதுவாக பேச, மாறனும், சுந்தரமும் எப்போதும் போல் எதுவும் பேசாமல்,
விலகி அவரவர் வேலைகளை பார்க்க சென்றுவிட்டனர்,
விருந்து ஆரம்பிக்கவும், எல்லோரும் வர, முகப்பிலேயே நின்று தம்பதி
சகிதமாக எல்லோரையும் வரவேற்று, அவரவர் பக்க டென்டிற்கு, ஆட்கள் மூலம்
அனுப்பி கொண்டிருந்தனர்,
அப்போது கதிரின் சகோதரர்கள், குடும்பமாக வர, கதிர், அஞ்சலி இருவரும்
இன்முகத்துடனே எல்லோரையும் வரவேற்க, கதிர் வரவேற்றதற்கு மட்டும் பதில்
அளித்தவர்கள், அஞ்சலியை கண்டு கொள்ளாமல் செல்ல, முகம் இறுகிய கதிர்,
“நில்லுங்க..” என்று சொல்ல, புரியாமல் பார்த்தவர்களை,
“எதுக்கு வந்திருக்கீங்க..?” என கேட்க, இதென்ன கேள்வி என்று அவர்கள்
கோபத்துடன் பார்த்தனர்,
“விருந்து கொடுக்கிறதே நானும், அஞ்சலியும் தான், அவ கூப்பிடறதுக்கு பதில்
சொல்லாம, அவகொடுக்கிற விருந்துக்கு எனக்கென்ன உள்ள போனா என்ன அர்த்தம்..?
,
“அப்படியொண்ணும் நீங்க யாரும் வேண்டாவிருப்பா நீங்க விருந்துல
கலந்துக்கணும்ன்னு  எந்த கட்டாயம் கிடையாது, கிளம்பிக்கோங்க, வீட்டுக்கே
சாப்பாடு வந்துரும்..”, என்று கடுமையாக சொன்னவன்,
அடுத்து வந்தவர்களை வரவேற்க ஆரம்பித்துவிட,  “இது என்ன பேச்சு..?”  என்று
அஞ்சலி கணவனை அதிருப்தியுடன் பார்க்க, அவன் யாரையும் கண்டுகொள்ளாமல்
இறுக்கமாகவே நின்றான்,
“மோகனின் மனைவி சுதாவும், சேகரின் மனைவி கவிதாவும்”, கதிர்
அவமானபடுத்தியதற்கு திரும்பி தன் கணவன்மார்களை முறைக்க, அவர்கள்
அதுக்குமேல மனைவியை முறைத்தவர்கள், அஞ்சலியிடம் பேசும்படி சைகை காட்ட,
கன்றி போன முகத்துடன் வேறு  வழியில்லாமல் தாங்களே சென்று அஞ்சலியிடம்
பேசிவிட்டு உள்ளே சென்றனர்,
“ஏன் இப்படி நடந்துக்கிறீங்க..?”என்று அஞ்சலி கணவனிடம் கோவமாக  கேட்க,
“அப்படித்தான் நடந்துப்பேன்..!!” என்று திமிராக சொன்னவன், அதற்கு மேல்
அதை பற்றி பேசாமல், விருந்தினர் வர அவர்களை வரவேற்கும் பணியில்
இறங்கிவிட்டான்,
“ண்ணா.. கதிர் ரொம்ப ஓவரா தான் போறான்..”, என்று சேகர் அண்ணனிடம்
ஆத்திரத்துடன் சொல்ல,
“அவனை பத்தி தெரிஞ்சுதுதானே விடு..” என்று மோகன் யோசித்தவாறே  தம்பியிடம் சொல்ல,
“போங்கண்ணா.. நாம அவனை மாட்டிவிட  என்ன பிளான் செஞ்சாலும், இதுபோல ஏதாவது
 செஞ்சு தப்பிச்சிடுறானே..!!! இதோ இப்போ கூட பாருங்க, கல்யாண
விருந்துக்கும், சரி இப்போ நடந்திட்டிருக்கிற கறிவிருந்துக்கும் சரி
இடத்தை எப்படி செலெக்ட் செஞ்சிருக்கான் பாருங்க”,
“கோவில்ல.. ஏன்னா எல்லாருக்கும் பொதுவான கோவில்ல  பிரச்சனை செஞ்சா,
ஆப்பு.. நமக்குத்தான்ன்னு ஊர் கட்டுப்பாடை  வச்சி, நாம எதுவும்
செய்யமுடியாதபடி, பக்காவா பிளான் செஞ்சு  எல்லாம் செய்றான்”, என்று
இயலாமையுடன்  பொறும,
“விட்றா பாத்துக்கலாம், இந்த சான்சை விட்டா என்ன, அடுத்த சான்ஸ் வராமலே
போகும், அப்போ வெய்ட்டா செஞ்சுடலாம்..” என்று அடுத்து நடக்க போவது
தெரியாமல்..!!?? தம்பிக்கு மட்டுமில்லை தனக்கும் ஆறுதல் சொல்லியபடி மனதை
தேத்திகொண்டான் அண்ணன்காரன்,
விருந்திற்கு வந்திருந்த மாறனின் பக்க, பெரியதலைகள், “இங்க ஏன் விருந்து
வச்சிருக்க..? நம்ம வீட்டுலயோ..? இல்லை மண்டபத்துலயோ..? தானே
வச்சிருக்கணும், அதை விட்டு இப்படி கோவில்ல வச்சா எப்படி..?” என்று
வம்புக்காக பேச செய்ய,
“முனீஸ்வரர் கோவில்ல செய்யணும்ன்னு தான் என்னோட வேண்டுதல், அதான்..”
என்று  மாறன் எல்லோரிடமும், ஒரே வாக்கியத்தில் முடித்துவிட, அது போல்
எல்லோரும் வேண்டுதல் செய்வதால், வேறெதுவும் கிளற முடியாமல் எல்லோரும்
அமைதியாகிவிட்டனர்.
 “கதிர், அஞ்சலி வாங்க அவ்வளுதான்.  நாம சாப்பிட்ரலாம்..” என்றபடி
விருந்தினர் வருகை குறையவும்  அசோக், லதா வர,
“ம்ம்.. சாப்பிடலாம்”, என்ற கதிர் அவர்களின் டென்ட் நோக்கி செல்லப்போக,
அங்கிருந்த சுந்தரம் மருமகனை கோவமாக பார்த்தார், “ஏன்..?” என்று
புரியாமல் விழித்தவனின் கையை சுரண்டிய அஞ்சலி,
“அங்கேயும் நாம விருந்து சாப்பிடணும்..” என்று மெதுவாக சொன்னாள்.
“ஓஹ்..” என்றவன், “நாங்க இங்கேயே சாப்பிட்டுக்கிறோம், நீங்க போய் உங்க
சாப்பாடை கொண்டு வாங்க”, என்றவன், “நாயகியிடம், அவர்கள் சாப்பாட்டை
கொண்டுவர சொன்னவன்”, மனைவியுடன் அங்கிருக்கும் டேபிளில் அப்படியே
அமர்ந்துகொண்டான்.
விருந்து சாப்பாட்டுடன் வந்த மீனாட்சி, நாயகி, இருவரும் அசோக், லதா
உதவியுடன் இருபக்க உணவையும் புரிதலுடன் மணமக்களுக்கு  பரிமாறினர்,
பெண்கள் எல்லாம் விருந்து முடிந்து செல்ல, ஆண்கள் அவர்களுக்கான தனி
“தண்ணி விருந்தில்..” பங்கேற்க, அங்கேயே நின்றனர்,
“நீ அக்கோவோட வீட்டுக்கு கிளம்பு..”  என்று கதிர் மனைவியிடம் சொல்ல,
அவனின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தில், “ஏதோ செய்ய போகிறான்..?” என்று
புரிந்துவிட,
“நீங்க..?”  என்று கேள்வியாக இழுத்தாள்,
“நான் வரேன்.. நீ போ..” என்று சொல்ல,
“இல்லை.. நீங்க ஏதோ..?”
“கிளம்புடி..” என்று மனைவியை பேசவிடாமல் அதட்டி, உடனே நாயகியுடன்
வீட்டிற்கு அனுப்பிவிட்டவனின் முகத்தில் உள்ள தீவிரத்தில், மாறனும்,
சுந்தரமும் யோசனையானர், சுந்தரம் உடனே மகனை கூப்பிட்டு,
“என்ன ஏதாவது செய்ய போறீங்களா..?” என்று அழுத்ததுடன் கேட்க,
“இல்லைப்பா..” என்று மழுப்ப பார்த்த மகனை, “அசோக்..?” என்று சுந்தரம்
கண்டிப்புடன் அதட்ட,
“அது.. கதிரோட அண்ணன்ங்க..”  என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லிவிட,
“இதுக்குத்தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க அவ்வளவு யோசிச்சேன்,
இப்ப சமாளிச்சிட்டிங்க, நல்லது, ஆனா அடுத்து ஒவ்வொரு முறையும் இப்படியே
சமாளிக்க முடியுமா..?” என்றவர்,
“எனக்கு எண்ணமோ உங்க பிளான் க்ரெட்க்டா வரும்ன்னு  தோணல, ஊர் கட்டுப்பாடு
தெரியுமில்லை, நீங்க மாட்டினா..? நானோ, இல்லை அவரோ.. என்று மாறனை
குறிப்பிட்டவர், இதுல ஒண்ணும் செய்ய முடியாது, தெரியுமில்லை..?”  என்று
எகிற, மாறனும் இதையேதான் மகனிடம் பொறுமையாக சொல்லி கொண்டிருந்தார்,
 “இல்லப்பா.. நாங்க மாட்டமாட்டோம், அப்படியே மாட்டினாலும்
பிரச்சனையில்லை, விடுங்க, ஆனா அண்ணன்ங்க இனி இதுபோல செய்ய கனவுல கூட
நினைக்ககூடாது அவ்வளவுதான்..” என்று உறுதியாக முடித்துவிட்டான்,
எல்லோருக்கும் தனித்தனியாக, தண்ணி விருந்து பரிமாறப்பட, சிறிது நேரத்திலே
எல்லோரும் காற்றில் மிதக்க ஆரம்பித்தனர், கதிரின் அண்ணன்களும் மிதமான
மிதப்பில் இருக்க, அவர்களை நெருங்கிய, அசோக்கின் ஆட்கள்,
“இவங்காளல எப்படித்தான் இப்படி கொஞ்சம் கூட சொரணை இல்லாம வரமுடியுதோ..?
தம்பி கொஞ்சம் கூட மதிக்கிறதில்லை, சொத்தும் எல்லா அவன் கண்ட்ரோல் தான்
இருக்கு, அவனா பாத்து ஏதாவது கொடுத்தாதான் உண்டு, ஆனாலும் இந்த வெட்டி
பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்லை, என, மற்றொருவன்,
“ஆமாண்ணா..  இப்படி சொரணை இல்லாம இருக்கிறதுக்கு எல்லாம் ஒரு தனித்திறமை
வேணும்”, என்று ஆரம்பித்து மோகன், சேகர், மற்றும் அவர்களை சுற்றியிருந்த
அவனின் எடுபிடி ஆட்கள் காதில் விழுமாறு சத்தமாக, இன்னும் இன்னும் பேச,
“கோவிலில் பிரச்சனை செய்ய கூடாது என்ற  ஸ்ட்ரிக்டான ஊர் கட்டுப்பாட்டில்,
இவர்கள் வேண்டுமென்றே தான் பேசுகிறார்கள்..” என்று புரிந்து தங்களை
கட்டுப்படுத்தி கொண்டிருந்தவர்களை மேலும் தூண்டிவிடும் பொருட்டு,
அசோக்கின் ஆட்கள்,
“இவனுங்களுக்கு  எல்லாம் எதுக்கு மீசை, பேசாம சேலை கட்டிக்க சொல்லுடா…
சுத்த மானங்கெட்ட பசங்க..” என்று சொல்லிவிட,
“என்னங்கடா சொன்னீங்க..?” என்று மோகன், சேகர் மற்றும் அவர்களின்
எடுபிடிகள், அசோக்கின் ஆட்கள் மேல் பாய்ந்துவிட,  பதிலுக்கு அவர்களும்
அடிக்க, “கறிவிருந்து, அடிதடி  கலாட்டா விருந்தாக மாறியது”,
கதிர், அசோக்கின் இளைஞர் பட்டாளங்கள், தங்களுக்கு வேண்டாதவர்களை எல்லாம்
கிடைத்தது சேன்ஸ் என்று பொளந்துகட்ட, “டேய் நான் நம்ம ஆளுடா..!” என்று
அலறியவர்களை, வேட்டியை உருவிட்டு,
“யார் நீ..? நான் பாத்ததேயில்லையே..!”  என்று அடிவெளுத்தனர், அதிலும் ஒருவன்,
“டேய் நானே கல்யாணம் ஆகாம நொந்துபோயிருந்தா,  நீ என்னை பாக்கும்
போதெல்லாம் வேணும்ன்னே, எப்போ கல்யாணம்ன்னு கேட்டு என்னை
கடுப்பேத்தினல்ல, அவ்வளவு அக்கறை இருக்கிறவன், உன் பொண்ணை எனக்கு
கல்யாணம் செஞ்சு கொடுக்கிறது..” என்றபடி கேப்பில் பெண் கேட்டு வெளுக்க,
மற்றவன்,
“என்னை பாத்து இனிமே வேலைக்கு போகலையான்ன்னு கேட்ப..?”,  என்று அடிக்க,
இன்னொருவன்  “அஞ்சுரூபா வட்டி வாங்குவியா..?” என அடிக்க, மற்றவன் “உன்
தங்கச்சியை சைட் அடிச்சதுக்கு , எங்கப்பா போட்டு கொடுத்தல்ல, மவனே
இன்னைக்கு நீ காலி..” என தங்களின் பகை ஆட்களை எல்லாம் தேடி தேடி அடித்து
நொறுக்கிவிட்டனர்,
இறுதியில் மாறன், சுந்தரம் மற்றும் ஊரின் தலைவர்கள் எல்லாம் தலையிட்டு
கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர், “அதுவரை அசோக்கும், கதிரும் டெண்டை
விட்டு வெளியவே வரவில்லை”,
“மறுநாள் பஞ்சாயத்து..”  என  ஊர்க்கட்டுப்பாடு கூட்டத்தில் அறிவிக்கப்பட,
கதிரின் அண்ணன்கள், ஆத்திரத்துடன் கதிரை நெருங்கி,
“நீ நினைச்சதை சாதிச்சிட்ட இல்ல..” என கத்த,
“நான் நினைக்கல, நீங்க தான் நினைச்சீங்க, அதை ஒரு நல்ல தம்பியா நான்
உங்களுக்கு நிறைவேத்தி கொடுத்திருக்கேன், அவ்வளவுதான், உங்க நல்ல
எண்ணத்துக்கு, நாளைக்கு பஞ்சாயத்துல ரிவார்ட் தருவாங்க, வாங்கிக்க
ரெடியாகிக்கோங்க”, என்று நக்கலாக சொன்னான் தம்பிக்காரன்.

Advertisement

error: Content is protected !!