Monday, April 29, 2024

Negizhiniyil Nenjam Kondaen 19 1

22023

Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 19

“அருள்மிகு முனீஸ்வரர் கோவில்..!!”  மைதானத்தில்  விருந்திற்கு வரும்
இருபக்க ஆட்களையும் மரியாதையுடன் வரவேற்று அவரவர் பக்க டென்டிற்கு
அனுப்பிவைத்து வைத்துக்கொண்டிருந்தனர் “புதுமண தம்பதியரான  கதிரும்,
அஞ்சலியும்”.

முன்தின நாள் மாலை அசோக்குடன் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்த கணவனின்
நிலையை  கண்டு கவலைப்பட்ட அஞ்சலி, சென்று காபி கொடுக்கவும், அவளை
முறைத்தபடியே காபியை எடுத்து கொண்டான் கதிர், அவனுக்கு

“நீங்க எனக்கு தாலி கட்டாம இருந்திருந்தா இந்த பிரச்சனை எல்லாம்
வந்த்திருக்காதே..” என்று  அஞ்சலி சொல்லியது அவனை மிகவும் கோவத்தோடு
வருத்தத்தமும் படவைத்தது, அதனாலே,

“நாளைக்கு விடியகாலையிலே நம்ம குலதெய்வ கோவிலுக்கு பூஜைக்கு கிளம்பனும்,
ரெடியா இரு..” என்று தகவல் போல சொல்லிவிட்டு,  அசோக்குடன் பேச
ஆரம்பித்துவிட,

அவனின் கோவத்தை புரிந்து கொண்ட அஞ்சலி, அசோக் உடன் இருந்ததால், அவன்
சொல்லியதற்கு சம்மதமாக தலையாட்டிவிட்டு  அமைதியாக வந்துவிட்டவள், நேராக
மீனாட்சியிடம் சென்று கதிர் சொல்லியதை சொல்லியவள்,

“பூஜைக்கு என்ன செய்ய வேண்டும்.? ஏதாவது கொண்டு செல்ல வேண்டுமா..?”
என்று பொறுப்புடன் கேட்க, மகளின் பொறுப்பில் உள்ளம் குளிர்ந்த மீனாட்சி,

“நம்ம பக்கம் புதுப்பொண்ணு  பொங்கல் வச்சி, சாமிக்கு படைக்கனும், ஆனா
மாப்பிள்ளை பக்கம் எப்படின்னு நீ நாயகிகிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோ..!”
, என்று சொல்லவும்,

அவரிடம் பேச அவரின் நம்பர் இல்லாமல் விழித்தவளுக்கு,  மீனாட்சி அவருடைய
போனில் இருந்து கால் செய்தே கொடுத்துவிட, “இந்த அம்மாங்க மட்டும்
எப்படித்தான் இவ்வளவு விவரமா இருக்காங்களோ..?” என்று நினைத்தபடி,
நாயகியிடம் பூஜை ஏற்பாட்டை பற்றி கேட்டாள்,

“அஞ்சலிம்மா.. நம்ம பக்கமும் புதுப்பொண்ணு கையால பொங்கல் வச்சி சாமிக்கு
படைக்கணும்தான், ஆனா தம்பி..?” என்று கதிரை நினைத்து தயங்க,

“அண்ணி.. அதெல்லாம் அவர் ஒண்ணும் சொல்லமாட்டார், அவர்தான் இதெல்லாம்
செய்யமாட்டாரே தவிர, நாம செய்றதுக்கு  மறுக்கமாட்டர்”, என்று கணவனை பற்றி
சொல்லவும்,

“அப்படின்னா ரொம்ப சந்தோஷம்மா..”, என்று என்ன என்ன கொண்டு செல்ல
வேண்டும்..? என்று கேட்டு தெரிந்துகொண்டாள்,

அங்கு தோட்டத்தில் அசோக் யோசனையாக, “ஏன் கதிர் பேசாம மண்டபத்துல, இல்லை
ஏதாவது பெரிய கிரவுண்டில் ரெண்டு பக்கம் ஆட்களையும் சேர்த்து பங்க்ஷன்
வச்சிடலாம்..”  என்று மகிழ்ச்சியுடன் சொன்னவனிடம்,

“நான் ஒரு இடம் யோசிச்சு வச்சிருக்கேன், ஆனா அது எந்த எந்தளவுக்கு
வொர்க்அவுட் ஆகும்ன்னு தான் தெரியல.” என்று யோசனையா இழுக்க,

“எந்த இடம்..?”

“நம்ம  ஊர் எல்லை முனீஸ்வரர் கோவில் தான்”,

“ஏய் சூப்பர் கதிர், அங்கேயே வச்சிக்கலாம், கோவிலுக்கு முன்னாடியும்
பெரிய மைதானமே இருக்கு, அங்கேயே அம்மன் கோவில்ல உங்க கல்யாண விருந்து
போட்டது போல, கறிவிருந்தும் தனி தனி டென்ட் போட்டு செஞ்சுக்கலாம்”, என்று
மிகுந்த உற்சாகத்துடன் சொன்னான் அசோக்,

“அதுமட்டுமில்லை அந்த கோவிலும் எல்லாருக்கும் பொது, அங்க கறிவிருந்து
தானே ஸ்பெஷல்..!!”, என்று மேலும் சந்தோஷத்துடன்   சொன்னவன், கதிரின்
முகத்தில் இன்னமும் இருந்த குழப்பத்தில்,

“என்னடா அதான் சூப்பரான இடம் செலக்ட் செஞ்சுட்டியே..!  இன்னும் என்ன
குழப்பம்..?  விடு பாத்துக்கலாம்”,  என சொல்ல,

“ம்ம்.. சரி, நான் முதல்ல அப்பாகிட்ட பேசிட்டு வந்துடறேன், அப்பறம் உங்க
அப்பாகிட்டேயும் பேசிடாலம்”, என்றவாறே தந்தைக்கு அழைத்தவன்,

“ப்பா.. நாளைக்கே நாமும் கறிவிருந்து கொடுக்கறோம்ன்னு எல்லாருக்கும்
தகவல்  சொல்லிடுங்க..” என்று சொல்லவும், அதிர்ந்த மாறன்,

“அதெப்படிப்பா செய்ய முடியும்..? நாளைக்கு சுந்தரத்தோட விருந்தாச்சே..?”
என்று கேட்டார்.

“ம்ம்.. ஆமாப்பா அவரோட விருந்தும் இருக்குத்தான்,..”

“அப்பறம் எப்படி நாம நாளைக்கு விருந்து கொடுக்க முடியும்..? நீயும்,
மருமகளும் எப்படி இரண்டு இடத்திலும் இருப்பீங்க..?”

 “இருப்போம்ப்பா.. கவலைபடாதீங்க, இடம் மட்டும் நம்ம முனீஸ்வரர் கோவில்
மைதானம்ன்னு சொல்லிடுங்க..” என்று சொல்லவும், புரிந்து கொண்ட மாறன்,
மகிழ்ச்சியுடன்,

“ரொம்ப சந்தோஷம்ப்பா, என்ன..? எப்படின்னு..? ரொம்ப கவலையாயிருந்தேன், இனி
விருந்தை ஜமாய்ச்சிடாலம்..”   என்று குதூகலத்துடன்,

 “என்ன உணவு..?, எத்தனை ஆடு..?, விருந்திற்கு வரும் ஆட்களின் தோராய
எண்ணிக்கை, சமையல் செய்யும் ஆட்கள், பொருட்கள் என எல்லாவற்றையும் கலந்து
பேசி முடிவெடுத்தவர்கள், ஒரே இரவில் எல்லாருக்கும் தகவல் சொல்லப்பட்டு,

இரவோடு இரவாக, விருந்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும்  தன்னுடைய
நம்பிக்கையான ஆட்களை வைத்துக்கொண்டு இருக்குடும்பத்துக்கும் சேர்த்து
கதிரே முன்னின்று செய்தான்.

மாறனிடம் பேசி கலந்தோசிவிட்டு,  சுந்தரத்திடமும் தானே நேரில் சென்று,
“அவர் விருந்து வைக்கும் இடத்தை மட்டும் மாற்ற முடியுமா..?” என்று
வேண்டுகோளாகவே கேட்க,

மருமகனுக்காக மாற்ற ஒத்துக்கொண்ட சுந்தரம், தன்னுடைய ஆட்களுக்கும் தகவல்
சொல்லும் வேலையையும், விருந்திற்கான ஏற்பாடுகளையும் கவனிக்க
ஆரம்பித்தார்,

இருபக்க விருந்தும் ஒரே இடம் என்பதால், இரவு விருந்திற்கான ஏற்பாடு
செய்வதற்காக வந்திருந்த மாறனும், சுந்தரமும் நேரில் எதிர்ப்படும் போது,
முன்போல் பகையாக முறைத்து கொள்ளாமல், சாதாரணமாக விலகி செல்வதே போதுமென்று
இருந்தது கதிருக்கும், அசோக்கிற்கும்.

அதோடு இரவு வெகுநேரம் ஆகுமென்பதால் இரு தந்தைகளையும் வீட்டிற்கு
அனுப்பிவிட்டு மாமனும், மச்சானுமே எல்லா ஏற்பாடுகளையும் ஒன்றாகவே
செய்தனர், இவர்களின் இளைஞர் பட்டாளங்கள், வேறு தங்களின் தலைகளின்
உதவிற்கு வந்துவிட பேச்சும், ஆட்டமுமாக வேலை எல்லாம் உற்சாகத்துடனே,
ஆற்பாட்டமுமாகவே  நடந்தது.

என்னதான் வேலை நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தாலும், கதிரின் முகத்தில்
 சிந்தனை இருந்தவண்ணமே இருக்க, “என்னடா ஆச்சு..?” என்று அசோக் கவனித்து
கேட்க,

“இந்த முறை சமாளிச்சிட்டோம், ஆனா என்னோட அண்ணன்ங்க ஒவ்வொரு முறையும்,
இதுபோல ரெண்டுபக்க ஆட்களுக்குள்ளேயும், என்னையும், அஞ்சலியும் வச்சி
பிரச்சனை இழுத்துவிட்டா என்ன செய்யன்னு யோசிக்கிறேன்”,

“என்னோட கல்யாணம் ரெண்டு பக்க ஆட்களிக்குள்ள நல்ல மாற்றத்தை
கொண்டுவரலன்னா கூட பரவாயில்லை, ஆனா..  மேலும் பிரச்சனையை, பகையை தூண்டி
விட்றது போலத்தான்  என்னோட அண்ணனங்க செய்வாங்க. இதுக்கு எப்படி
புல்ஸ்டாப் வைக்கிறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்”, என யோசனையுடன் சொன்னான்
கதிர்,

“ம்ம்.. நீ சொல்றதும் கரெக்ட் தான் கதிர், பார்ப்போம் முதல்ல இந்த
கறிவிருந்து முடியட்டும், அப்பறம் இதைப்பத்தி யோசிக்கலாம்” என்று அசோக்
சொல்லவும்,

“ம்ஹூம்.. அங்க தான் நாம தப்பு பண்றோம், இதுபோல என் அண்ணன்களோட விஷ
எண்ணத்தையெல்லாம் விதையிலே மண்ணோடு மண்ணா புதைச்சிரணும், துளிர்க்கவே
விடக்கூடாது”  என்று சொன்னவன்,

“அதுக்குத்தான் ஒரு பிளான் வச்சிருக்கேன்..!!??” , என்று அசோக்கிடம் தன்
பிளானை சொல்ல, அதிர்ந்த அசோக்,

“டேய் இதுல ரிஸ்க் அதிகம்டா, கொஞ்சம் மிஸ் ஆனாலும் நம்ம பக்கமே ரெவெர்ஸ்
ஆக சான்ஸ் இருக்கு, வேண்டாம்டா..” என்று பதற,

“ம்ஹூம்..  அப்படியே ஆனாலும் பிரச்சனையில்லை, சமாளிச்சிக்கலாம், ஆனா
எக்காரணம் முன்னிட்டும் நான் இதுலிருந்து பின் வாங்கிறதா இல்லை..”, என்று
 உறுதியாக முடித்துவிட்டவன், அங்கு வேலை செய்து கொண்டிருந்த இருபக்க
இளைஞர் பட்டாளத்தையும் வரச்செய்து, தன் எண்ணத்தையும், பிளானையும்
சொன்னவன்.

“இந்த பிளான் 100 பெர்சென்ட் வொர்க் அவுட் ஆகுமா தெரியாது, ஏன்  நமக்கே
டேமேஜ் ஆகவும் நிறைய வாய்ப்பு இருக்கு, ஆனாலும் ஒரு நல்ல விஷயத்துக்காக
இதை செய்றோம், என்ன சொல்றீங்க..?” என்று கேட்க,

“செய்யலாம்ண்ணா, நமக்கெல்லாம் இந்த பிரச்சனையை சந்திக்கிறது எல்லாம்
புதுசா..? விடுங்கண்ணா, ஒரு கை பாத்துடலாம்..” என்று எல்லோரும்
ஒட்டுமொத்த மனதுடன் கதிரின் பிளானை ஆமோதிக்க,

“ஓகே.. அப்போ நாளைய நாள் நம்ம நாள்..” என்று சொன்ன கதிரிடம், அவர்கள்
சிலவற்றை கேட்க, முதலில் மறுத்த கதிர் அவர்கள் வேண்டவும் சிரிப்புடன்,
“சரி.. ஆனா பெருசா ஆகாம பாத்துக்கோங்க..” என்றுவிட்டான்.

விடியக்காலை நேரம் ஆகவும், சுந்தரத்தின் வீட்டிற்கு வந்த கதிர்,
அஞ்சலியின் ரூமிற்கு செல்ல, அவள் கோவிலுக்கு செல்ல தயாராகி
அமர்ந்திருந்தாள், “ஓஹ்.. ரெடியாட்டியா..? நான் இதோ 5  நிமிஷத்துல
ரெடியாகிடுறேன்..” என்றபடி குளிக்க செல்ல,

அவன் வருவதற்குள், அவனின் உடையை எடுத்து வைத்தவள், காபி எடுத்துக்கொண்டு
வர, தயாராகியவன், காபியை பார்த்து, “ம்ம்… ரொம்ப தேவைப்பட்டுச்சு..!!”
என்றபடி, இரவெல்லாம் தூக்கமில்லாததால் தலைவலியுடன்  எடுத்து குடிக்க
ஆரம்பித்தவன், மனைவியிடம்,

“நீ குடிக்கலயா..?” என,

“இல்லை.. எனக்கு வேணாம்”, என்று மறுத்தவளுக்கு, அவனின் காபியை ஷேர் செய்ய போக,

“இல்லை கோவில்ல பொங்கல் வைக்கணும், பூஜை முடிஞ்சபிறகு
சாப்பிட்டுகிறேனே..!!” என்று சொல்ல ,

“ம்ப்ச்.. நீயும் அம்மா போல ஆரம்பிச்சிட்டியா.?” என்று கோவத்தோடு
சலித்தவன், “பூஜை செய்ரதுக்கு, காபி குடிச்சா என்ன தப்பு..? குடி”
என்றவன்,  அஞ்சலியின் முகத்தில் தெரிந்த உறுதியில் அவள் குடிக்க மாட்டாள்
என புரிய, தானும் அப்படியே குடிக்காமல் வைத்துவிட்டான், அதில்
பதறிப்போனவள்,

“நீங்க குடிங்க..” என்று வேகமாக மறுபடியும் எடுத்து  கொடுக்க,

“எனக்கு வேணாம், விடு கிளம்பலாம்”, என்று ஒரேடியா மறுத்து கிளம்பிவிட
முகத்தை தூக்கி வைத்து கொண்ட வந்த மனைவியை, கடுப்பாக பார்த்தவன்,

“என்னை காபி குடிக்க விடாம செஞ்சதுக்கு நான் தான்டி கோவப்படணும், நீ
அடங்கு..”  என்று சீற, நொடித்து கொண்டவள், கார் கிளம்பவும்,

“நம்ம தோட்ட வீட்டுக்கு போய்ட்டு போகலாம்..” என்று சொல்ல, புரியாது
பார்த்தவன், “ஏன்..?” என்று கேட்க,

“இல்லை.. பொங்கல் வைக்கிறதுக்கும், பூஜைக்கும் திங்க்ஸ் எடுக்கணும்,
அண்ணி எடுத்து வச்சிருப்பாங்க, அப்படியே எடுத்துட்டு, மாமாவையும்
கூட்டிட்டு கிளம்பிடாலம்”, என, திரும்பி முறைத்தவன்,

அவளின் முகத்தில் தெரிந்த கெஞ்சலில், “என்னமோ செய்..” என்று
கடுப்படைந்துவிட்டு, மனைவி சொன்னதுபோல்,  வீட்டிற்கு சென்று, பொருட்களை
எடுத்துக்கொண்டு, “தந்தையையும், உடன் வருகிறேன் என்று சொன்ன
அக்காவையும்..” அழைத்து கொண்டு கோவில் சென்றான்,

கோவிலில்  அஞ்சலி நாயகியின் உதவியோடு பொங்கல் வைக்க, பார்த்திருந்த
மாறனுக்கு மருமகளின் செயலில் எல்லையில்லா திருப்தி, அதையே மகனிடமும்,

“மத்த ரெண்டு மருமகள்ங்க மாதிரி இல்லாம  என் சின்ன மருமக நிறைய விஷயத்துல
அப்படியே உங்க அம்மா மாதிரியே..!!  எல்லா வளமையும் தெரிஞ்சிருக்கு..”,
என்று பெருமையுடன் சொல்ல,

நாயகியிடம் சிரித்து பேசியபடி, மலர்ந்த முகத்துடன் பொங்கல்
வைத்துக்கொண்டிருந்த  மனைவியை இன்னதென்று புரியா பாவனையுடன் பார்த்து
கொண்டிருந்தான்  கதிர்,

சாமிக்கு தீபாராதனை காட்ட, கதிரின் பக்கத்தில் ஜோடியாக நின்றிருந்த
அஞ்சலி, முழுமனதுடன் வேண்டிக்கொள்ள, கதிரோ எப்போதும்போல், கைகளை
கட்டியபடி நின்றிருந்தான், பூஜை முடியவும், திருநீறும், குங்குமமும்
கொடுக்க, அஞ்சலி தன் நெற்றிலும், மாங்கல்யத்திலும் வைத்து கொண்டு, கணவனை
பார்க்க,

“அவன் வைப்பேனா..?” என்பதுபோல் விறைத்தவாறு நின்றான், வேறு வழியில்லாமல்,
எட்டி தானே அவனின் நெற்றியில் வைக்க போக,

“வச்சே ஆகணுமா..?”  என்று விருப்பமில்லாமல் கேட்ட கணவனை,

“முதல்முதலா குலதெய்வ கோவிலுக்கு வந்திருக்கோம்..” என்ற அஞ்சலியும்,
“வைக்க வேண்டும்..!!”  என்றே நின்றாள், போனால் போகிதென்ற முகபாவனையில்
குனிந்த கணவனின் நெற்றியில் திருநீறு வைத்தாள். அடுத்து அஞ்சலி வைத்த
பொங்கலை, கொஞ்சமாக எடுத்து கொண்டவர்கள், மற்றதை பூசாரியிடம் கொடுத்து,
வருபவர்களுக்கு கொடுக்க சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

எல்லோரையும் வீட்டில் விட்டவன், “நான் சொல்லும்போது வந்தா போதும்..!!”,
என்றுவிட்டு தான் மட்டும் கிளம்பி வந்து விருந்திற்கான ஏற்பாட்டில்,
அசோக்குடன் இணைந்து கொண்டான். மதியம் போல விருந்து ஆரம்பிக்கும் சமயம்,
எல்லோரையும் கூட்டி கொண்டு வர தானே தோட்ட வீட்டிற்கு சென்றான்

Advertisement

error: Content is protected !!