Advertisement

“ஏன் இப்படி செஞ்சீங்க..? பாவம் அண்ணா..” என்று அஞ்சலி, கதிரிடம் சீற,
“ம்ம்.. என் பர்ஸ்ட் நைட்டை கெடுத்தார் இல்லை, அதுக்கு மச்சான் சார்பா
கிப்ட் வேண்டாமா..? அதான்”  என்று கிண்டலாக சொன்னவன், எலிப்பொறியில்
சிக்கிய எலிபோல், அம்மாவிடமும், மனைவியிடமும்  மாட்டிக்கொண்டிருந்த
அசோக்கை சிரிப்புடன் பார்த்தான்,
“எனக்கு வேண்டும்டா, உன்கூட ப்ரண்ட்ஷிப் வச்சிருக்கிற எனக்கு இன்னும்
வேணும்டா, மனுஷனா நீ, உனக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா..?”  என்று
தனியே மாட்டிய கதிரிடம் வெடித்து கொண்டிருந்த அசோக்கை, தோளில் தட்டி,
“விடுங்க சீனியர், வீரனுக்கு பிரச்சனைகள் வந்தாதான் அவன் அவனோட வீரத்தை
காட்டமுடியும், இல்லன்னா லைப் ரொம்ப போரடிச்சிடும்”, என்று தத்துவம்
பேசியவனை,
“எது எனக்கு லைப் போராடிக்கிதா..? நீ என்னோட இருக்கிற வரைக்கும், எனக்கு
கண்டிப்பா போரே அடிக்காதுடா ராசா, அதனால போதும், இதுமேலயும் என்னால
முடியாது, என்னை விட்றுடாயப்பா”,
“உனக்கு புண்ணியமா போகும், இதுக்கே நான் குறைச்சது நாலுநாளைக்கு வீட்ல
இருக்கமுடியாது, மாமியாரும் மருமகளும், என்னை கரைச்சு
குடிச்சிருவாங்க,..” என்று கையெடுத்து கும்பிட்டு பொரிந்துவிட்டு
சென்றான் அசோக்,
“அசோக்..நாளைக்கு நாம நம்ம பங்காளிகளுக்கு கறிவிருந்து போடணும், அதுக்கு
முன்னாடி உன் தங்கச்சியும், மாப்பிள்ளையும் குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு
வரணும்..” என்று அன்று மதிய விருந்திற்காக, எல்லோரும்  கூடியிருக்கும்
போது சுந்தரம் மகனிடம் சொல்வது போல் மருமகனிடம் சொன்னார்,
அது புரிந்த எல்லோரும் கதிரை பார்க்க, அவனோ சுந்தரம் சொன்னது காதில்
விழுக்காதது போல், மனைவி பரிமாற ரசித்து சாப்பிட்டு  கொண்டிருந்தான்,
அதில் பல்லை கடித்த சுந்தரம், அசோக்கை முறைக்க,
“க்கும்.. இதுவேறயா..? எல்லாருக்கும் நான்தான் இளிச்சவாயன்” என்று
வெந்தவன், “கதிர்..”  என்று அழைக்கவும், மீனாட்சி, “அசோக்..!!!?”  என்று
நறநறவென கூப்பிட,
“மாப்பிள்ள்ளை..!!”  என்று அழுத்தி கூப்பிட்டவன், “அப்பா சொன்னதுபோல்
செஞ்சிடலாமா..?” என்று கேட்டான்.
“என்கிட்டேயா சொன்னார்..? என்ன சொன்னார்..? என்று ஒன்றும் தெரியாதவன்
போல் கேட்டவன், நேரடியாக  சுந்தரத்தையே பார்த்தான், அதில் மீனாட்சி கணவனை
முறைக்க, வேறு வழியில்லாமல், அவனிடமே முன் சொன்னதயே சொல்ல,
“ம்ம்.. எங்க குலதெய்வ கோவிலுக்கு நாளைக்கு காலையில போகணும்ன்னு அப்பா
சொல்லிட்டிருந்தார், அதனால் நான் அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்”, என்று
சொன்னவன், “கறிவிருந்து நீங்க சொன்னது போலே செஞ்சுக்கலாம்..” என்று
முடித்துவிட்டவன்,
தந்தைக்கு அழைத்து, சுந்தரம் சொன்னதை சொல்லி, “என்ன செய்வது..?”  என்று
கேட்டான், யோசித்த மாறன்,
“கதிர்.. நம்ம குலதெய்வ கோவிலுக்கு முதல்ல போறதுதான் முறை, அதனால
நாளைக்கு காலையிலே நீயும், மருமகளும் நேரா கோவிலுக்கு வந்துடுங்க, நானும்
வந்துடுறேன், அங்க பூஜை முடிச்சிட்டு அதுக்கு அப்பறம், நீங்க சுந்தரம்
கொடுக்கிற கறிவிருந்துல கலந்துக்கோங்க..”  என்று சொல்லவே,
அதை அஞ்சலி மூலமாக சுந்தரத்திடம் கதிர் சொல்லிவிட, அவரும் முறை
தெரிந்தவர் என்பதால், “நாளை மறுநாள் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு
செல்லாம்..”  என்று ஒத்துக்கொண்டார்,
ஆனால் இதில் கதிரின் அண்ணன்களின் மூலம் பிரச்சனை முளைத்தது, மதிய
விருந்திற்கு பிறகு, அஞ்சலியின் ரூமிற்கு ரெஸ்ட் எடுக்க வந்த கதிர்,
அவளின் ரூமில் உள்ள புத்தகங்களை கண்டு, மலைத்தவன்,
“ஏய்.. என்னடி இது ரூம் புல்லா இப்படி புக்கா வச்சிருக்க, இதைவைச்சி ஒரு
புக் கடையே ஓபன் செஞ்சிரலாம் போல..!!” என்று வியப்பாக சொன்னவன்,
“இவ்வளுவும் நீ படிச்ச புக்ஸா..?” என்று புத்தத்தங்களை ஆராய்ந்தபடி
கேட்டு கொண்டிருந்தான்,
அவனின் கேள்விக்கு பதில் சொல்லமால், அவன் படுப்பதற்கு பேட்டை தயார்
செய்து கொண்டிருந்த மனைவியை பார்த்தவன்,
“இப்போ அதை எதுக்கு வேஸ்டா ரெடி செய்ற, நீ மட்டும் டைம் கேட்காம
இருந்திருந்தா, பகல் ஷோவாது நடத்தியிருக்கலாம், ம்ம்.. இப்போ என்ன
செய்ய..? கல்யாணமாகியும்  நான் இன்னும் கட்டை பிரமச்சாரிதானே..!!”  என்று
சலித்தவனை,
திரும்பி முறைத்த அஞ்சலியை,  கதிர் குறும்புடன் நெருங்கும் சமயம், அவனின்
போன் ஒலிக்க, எடுத்து பார்த்தால், அவனின் பெரியப்பா, “இவர் ஏன் போன்
பண்றார்..?” என்று யோசனையுடன் எடுத்து,
“சொல்லுங்க பெரியப்பா..” என, அவரோ கோவமாக,
“நீ எப்படி நம்ம ஆளுங்களுக்கு முதல்ல கறிவிருந்து கொடுக்காம, அந்த
சுந்தரம் அவங்க ஆளுங்களுக்கு கொடுக்கிற கறிவிருந்துல கலந்துக்க
முடியும்..?”
“நாமதானே முதல்ல கறிவிருந்து கொடுக்கணும், இந்த சுந்தரம் எப்படி
கொடுக்கலாம்..? என்ன செய்ய..? அவன் நம்ம ஆளாயிருந்தா அவனுக்கு நம்ம முறை
தெரிஞ்சிருக்கும், அவன் வேற ஆள்தானே…”  என்று பேசிக்கொண்டே போக,
“பெரியப்பா..” என்று அழுத்தி கூப்பிட்டவன், “நீங்க  சொன்னதுக்கு நான்
செய்றதுன்னு பாக்கிறேன்”, என்று முடிக்க பார்க்க,
“என்னது பாக்கிறியா..? என்ன பதில் இது கதிர், நாம தான் முதல்ல
கறிவிருந்து கொடுக்கணும், இது நம்ம கவுரவ பிரச்சனை, இதுல விட்டு கொடுக்க
முடியாது..”  என்று கண்டிப்புடன் பேசிவிட்டு வைத்துவிட்டார்,
அவரின் பேச்சில் உண்டான கோவத்தில், முகம் இறுகி நின்ற கதிரை கண்ட அஞ்சலி,
“என்ன ஆச்சு..?” என்று  யோசனையாக கணவனை பார்த்தாள், அடுத்து கதிர் தன்
தந்தைக்கு அழைத்து பெரியப்பா சொன்னதை சொல்லி,
“எப்படிப்பா இது ஆச்சு..? அவர் ஏன் இதை பெருசு பண்றார்..?” என்று
யோசனையுடன் கேட்டவன், “அண்ணன்ங்க  ஏதாவது..?” என்று கேள்வியாக இழுக்க,
“ம்ம்.. ஆமா கதிர், இது அவனுங்க வேலைதான், எனக்கும் நம்ம
பெரியாளுங்ககிட்ட இருந்து போன் வந்துச்சு”, என்று பெருமூச்சுடன்
சொன்னார், அவரின் பேச்சிலே அவரின் திணறிய நிலைய புரிந்துகொண்ட கதிர்,
“பாத்துக்கலாம், விடுங்கப்பா, நான் என்ன செய்ய முடியும்ன்னு பாத்துட்டு
சொல்றேன்”, என்று வைத்தவனை, அவனின் பேச்சிலே பிரச்சனையை புரிந்து கொண்ட
அஞ்சலி, கணவனை கவலையுடன் பார்த்தாள்,
கதிரின் இக்கட்டான நிலைய புரிந்துகொண்ட அஞ்சலி, யோசனையுடன், “நாம
வேணும்ன்னா அப்பாகிட்ட பேசி பாக்கலாமா..?” என்று கேட்க,
“ம்ஹூம்.. அது சரியா வராது”  என்று  முடித்துவிட்ட கதிர், சிந்தனையுடன்
அமர்ந்திருக்க, அடுத்து இன்னொரு பெரியப்பா, மாமா என்று அவனுக்கு போன்
வந்து கொண்டேயிருக்க, அத்தனை பேரிடமும் பேசி சமாளித்து கொண்டிருந்தவனை
பார்த்த அஞ்சலி, வருத்தத்துடன்,
“நீங்க என் கழுத்துல தாலி கட்டாம இருந்திருந்தா, இது போல  பிரச்சனை
எல்லாம் உங்களுக்கு வந்திருக்காது  தானே..!!?” என்று ஆற்றாமையுடன்
கேட்டாள், அதில்  கோவத்தில் சிவந்த முகத்துடன் ஆங்காரத்துடன் நின்ற
கதிர்,
“இன்னொரு முறை இந்த வார்த்தை உன் வாயில வரவே கூடாது, வாயில மட்டுமில்ல
மனசுலயும் வரக்கூடாது”, என்று கர்ஜிக்க, அவனின் கர்ஜனையில்
நடுங்கினாலும்,
“இல்லை.. இதுமட்டுமில்ல இன்னும் இதுபோல நிறைய பிரச்சனைகள் வரத்தானே.. ?”
“இப்போதான் சொன்னேன், நீ இதுபோல் பேசக்கூடாதுன்னு”, என்று அதட்டியவன்,
“நமக்கு ஒரு விஷயம் வேணும்ன்னா அதுக்காக எந்த அளவுக்கும் போராடணுமே தவிர,
விலகுறதோ, பிரச்சனையை பார்த்து பயப்படறதோ நான் கிடையாது, அதுக்காக
இதென்ன.. இதுபோல் இன்னும் இன்னும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் என்னால
சமாளிக்க முடியும்”, என்று உறுதியாக முடித்துவிட்டான்,
“கதிர்.. அப்பா உன்கிட்ட பேசணும்ன்னு சொல்றார்..” என்று அசோக் வந்து
கூப்பிடவும், “ஏன்..?” என்று புரிந்து கொண்ட கதிர் அசோக்குடன் செல்ல,
தானும் உடன் சென்றாள் அஞ்சலி,  ஹாலில் எல்லோரும் இருக்க, கதிர் வரவும்,
“என்ன என்னமோ விஷயம் கேள்விப்பட்டேன்..?”  என்று சுந்தரம் கதிரை பார்த்து கேட்க,
“ம்ம்.. ஆமா”, என்று மழுப்பாமல் கதிர் சொல்ல,
“நான் வேற எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன்..”, என்று அவர் சிறிது
கோவமாகவே சொன்னார்,
“அவருக்கும் இது கவுரவ பிரச்சனைதான், ஆரம்பிக்காத வரை பிரச்சனை இல்லை,
ஆனால் இப்பொழுது அவர் எல்லா ஏற்பாட்டையும் ஆரம்பித்திருக்க, இப்போது
கதிரின் ஆட்களுக்காக அவர் பின்வாங்கினால் அவருடைய ஆட்களுமே சண்டைக்கு
நிற்பார்கள்”,
அதனாலே அவரிடம் கோவம் தென்பட,  அவரின் நிலைய புரிந்துகொண்ட கதிர், “நீங்க
எந்த ஏற்பாட்டையும் நிப்பாட்ட வேண்டாம், இதை நான் பாத்துகிறேன்”, என்று
புரிதலுடன் சொன்னான், அவனின் புரிதலில், சற்று நிதானத்திற்கு வந்த
சுந்தரம்,
“உங்களால சமாளிக்க முடியலைன்னா சொல்லுங்க, நம்ம பக்கம் என்ன செய்ய
முடியும்ன்னு பாக்கலாம்..” என்று தானும் மருமகனுக்காக அனுசரணையாக
சொன்னார்,
“ம்ம்.. சரி”  என்று சொன்ன கதிரின் முகத்தில் இருந்த மெலிதான சிரிப்பு,
அஞ்சலி, சுந்தரம் உட்பட எல்லோருக்கும் கொஞ்சம் சமாதானத்தை தந்தது.  ஆனால்
உன்மையில் கதிர் உள்ளுக்குள் இதற்கு என்ன செய்வது என்று எந்த வழியும்
புலப்படாமல் தீவிரமாக தான் யோசித்து கொண்டிருந்தான்,
“கதிர்.. என்ன செய்யலாம்..?” என்று அசோக், தோட்டத்தில் வைத்து கதிரிடம் கேட்க,
“அதான் எனக்கும் தெரியல..”, என்று கைவிரித்த கதிர்,
“இது என் அண்ணன்ங்க தூண்டி விட்ற பிரச்சனை, அவனுங்க எண்ணம் என்ன
தெரியுமா..? இதால ஒண்ணு எனக்கும், எங்க பக்க ஆளுங்களுக்கும்  பிரச்சனை
வரணும், இல்லை, எனக்கு..!!  உங்களோடவும், உங்க பக்க ஆளுங்களோடும்
பிரச்சனை வரணும்”,
“இது ரெண்டுல எது நடந்தாலும், எனக்கு பிரச்சனை, கஷ்டம்தான், இதை எப்படி
சமாளிக்கன்னு தான் தெரியல”,
“விஷயம் என்னமோ சின்னதுதான், ஆனா இதால எனக்கு வர பிரச்சனை  காலத்துக்கும்
 இருக்கும்,  என்ன செய்றதுன்னு பாக்கணும்..”  என்று மிக மிக தீவிரமாக
யோசித்தவாறே சொன்னவனை அசோக் மட்டுமில்லாமல், காபி கொடுக்க வந்த
அஞ்சலியும் கேட்டு கணவனின் இக்கட்டான நிலைய புரிந்து கவலையானாள்.

Advertisement