Advertisement

நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 18
கதிருக்கு காலை உணவு பரிமாறி கொண்டிருந்த அஞ்சலியின் மனதில் கிட்சனில்
காலை உணவு தயாரித்து கொண்டிருக்கும்போது நாயகி சொன்னதே ஓடி
கொண்டிருந்தது.
“என் தம்பி சொன்னப்போ நான் நம்பலை, ஆனா இப்போ தான் அவன் சொன்னது
உண்மைன்னு புரியுது..”, என்று நாயகி ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் சொல்ல,
லதாவும், அஞ்சலியும் அவர் சொன்னதை புரியாமல் பார்க்க, சிரித்த நாயகி,
“இல்லை..  இங்க சமைக்கிறதுக்கும், மத்த எல்லா வேலைக்கும் காசியும், அவங்க
சம்சாரம் சுப்புவும் இருக்காங்க, ஆனா கதிர், அஞ்சலி வந்ததுக்கு அப்பறம்
அவளே சமையலை பாத்துப்பா, நீங்க அவளுக்கு ஹெல்ப் செஞ்சா மட்டும்
போதும்ன்னு சொல்லிட்டான்”,
“நான் கூட கேட்டேன் அவன்கிட்ட, அஞ்சலிக்கு சமைக்க தெரியுமான்னு..?
அதுக்கு அவன் அதெல்லாம் நல்லா சமைப்பா, இவங்க அவளுக்கு ஹெல்ப்
செஞ்சிகிட்டு மத்த வீட்டு வேலைகளை பாத்துக்கிட்டா போதும்ன்னு
சொல்லிட்டான்”,
“நான் அப்போ அவன் சொன்னதை நம்பலை, ஏன்னா நீ டாக்டர் படிச்ச புள்ள, சமைக்க
எல்லாம் செய்வியா..?ன்னு யோசிச்சேன், ஆனா அவன் உன்னை நல்லா தெரிஞ்சு
வச்சிருக்கான்..”  என்று பெருமையுடன் சொன்னதையே நினைத்து கொண்டிருந்த
அஞ்சலிக்கு,
“இவருக்கு எப்படி நான் நல்லா சமைப்பேன்னு தெரியும்..? ஒருவேளை அண்ணா
சொல்லிருப்பாரோ..?” என்று யோசித்தவாறே பரிமாறிக்கொண்டிருக்கும் போது,
நேற்று மாலை  “பெரிய வீட்டிற்கு சென்றிருந்த கதிரின் அப்பா, மாறன்
வரவும்”, அவரிடம் இதுவரை பேசியிராத அஞ்சலி, மிகுந்த  மரியாதையாக பார்க்க,
அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த கதிர், அவளின் கையை பிடித்து இழுக்க,
குனிந்து பார்த்தவளை, தந்தையை கண்ணால் காட்ட,
“மா.. மாமா” என்று மிகுந்த தயக்கத்துடன் அழைத்த அஞ்சலி, “சாப்பிட
வாங்க..” என்று உணவுண்ண கூப்பிட, மருமகளின் தயக்கமான பேச்சில் சிரித்த
மாறன்,
“வேண்டாம்மா.. இப்போதான் சாப்பிட்டு வந்தேன்..” என,
“அது.. நான் ஸ்வீட் செஞ்சிருக்கேன், அதை மட்டுமாவது கொஞ்சம்
சாப்பிடறீங்களா..? என்று கேட்க, அவர் மகிழ்ச்சியுடன் தலையாட்டவும்,
பவுலில் அண்ணாச்சி பழ கேசரியை பரிமாறி, ஸ்பூனுடன் கொடுத்தாள்.
“ம்ம்.. ரொம்ப நல்லாயிருக்குமா.. இது கதிருக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட்,
லட்சுமிக்கு முடியறவரை மகனுக்காக அடிக்கடி செஞ்சு கொடுப்பா”,  என்று
சொல்ல, எல்லோரும் ஆச்சரியத்துடன் கதிர், அஞ்சலியை பார்த்தனர்,
மாறன் சொன்னதுக்கு எந்தவித ரியாக்சனும் இல்லாமல் கதிர் அமைதியாக
சாப்பிட்டு கொண்டிருக்க,  அஞ்சலி கண்டுகொள்ள பாவனையில் வேகமாக
கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்,
“மாமா.. இன்னைக்கு கதிரிக்கும், அஞ்சலிக்கும்  மறுவீட்டு
சம்பிரதாயத்துக்காக  அப்பா உங்ககிட்ட கேட்க சொன்னாங்க..”  என்று அசோக்
மாறனிடம் மரியாதையாக கேட்கவும்,
“ம்ம்.. கதிரோட பிளான் என்னன்னு பாத்துகிட்டு, கூட்டிட்டு போங்க” என்று
மாறன் முடித்துவிட, அசோக் கேள்வியாக கதிரை பார்க்கவும்,
“போலாம்.. கொஞ்ச வேலை மட்டும் இருக்கு, முடிச்சிட்டு கிளம்பிரலாம்”
என்றவன், கிட்சனுக்குள் நின்றிருந்த மனைவியை, “அஞ்சலி..” என கூப்பிட,
வெளியே வந்தவளிடம்,
“நீ சாப்பிட்டிட்டு, எனக்கு ஸ்வீட் எடுத்துக்கிட்டு மேல வா..”  என்று
சொல்லிவிட்டு செல்ல,
“டிபன் வச்சப்பவே பர்ஸ்ட் ஸ்வீட் தான் சாப்பிட்டிருக்கணும், நான் முதல்ல
ஸ்வீட் வச்சப்போ, எனக்கு வேணாம்ன்னு சொல்லிட்டு, இப்போ மட்டும்
என்னவாம்..?” என்று மனதில் நொடித்தவாறே மெதுவாகவே நாயகி, லதாவுடன்
சாப்பிட்டவள், அங்கேயே பேசி நேரம் கடத்த,
“அஞ்சலிம்மா.. தம்பி ஸ்வீட் கேட்டுச்சு இல்லை, எடுத்துட்டு போ” என்று
நாயகி இரண்டு முறை சொன்னபிறகே, உதட்டை சுழித்து கொண்டு ஸ்வீட்டை எடுத்து
சென்றாள். ரூமிற்குள் சென்றவுடன் மொபைல் பார்த்துக்கொண்டிருந்த கதிர்,
“ஏன் இவ்வளவு நேரம்..?”  என்று கேட்டவாறே, மனைவி கொடுத்த ஸ்வீட்டை
வாங்கி, பக்கத்து டேபிளில் வைத்தவன், நொடியில் அஞ்சலியின் கை
சுண்டியிழுத்து தன்னை பார்க்கும்படி குறுக்காக மடியில் உட்காரவைத்துவிட,
பதறிப்போன அஞ்சலி, வேகமாக எழுந்திருக்க பார்க்க,
“ஷ்ஷ்..” என்று அதட்டியவன், ஸ்வீட்டை எடுத்து அவளின் கையில் தர,
புரியாமல் பார்த்த மனைவியிடம், ஊட்டுமாறு வாயை திறந்தான்,  அவனின்
செயலில் கடுப்பான அஞ்சலி, முகத்தை திருப்பிக்கொள்ள, அவளின் கன்னத்தை
பிடித்து  திரும்பியவன்,
“ஊட்டுடி..”  என்று அதிகாரமாக அதட்ட, அவனின் அதட்டலில் மேலும் கடுப்பான
அஞ்சலி, ஸ்பூனை அழுத்தி பிடித்தபடி அடமாக உட்கார்ந்திருந்தாள், அவளின்
பிடிவாதத்தில் நக்கலாக சிரித்த கதிர்,
“இப்போ நீ ஊட்டலன்னா நான் உனக்கு ஸ்வீட் ஊட்ட வேண்டியதாயிருக்கும், ஆனா
கையால இல்லை, என்றவாறே உதட்டை குவித்து காண்பித்தவன் எப்படி வசதி..?”
என்று கண்ணடிக்க, அதிர்ந்தவள் முறைப்புடன் அவனை பார்க்க,
“ம்ம்.. சரி கொடு, நானே சாப்பிட்டு உனக்கு ஊட்டுறேன்” என்று வாயை
சப்புக்கொட்டி கண்களில் சிரிப்புடன் சீண்ட, வேறுவழி இல்லாத அஞ்சலி,
முறைப்புடன் ஸ்பூனால் ஊட்டபோக,
“ம்ஹூம்.. நான் முதல்ல சொன்னப்போ ஊட்டியிருந்தா ஸ்பூன்ல
ஊட்டியிருக்கலாம், இப்போ நோ ஸ்பூன், உன் கையிலாதான் ஊட்டணும்”, என்றபடி
ஸ்பூனை பிடிங்கி தூர எறிந்தவன், அவளின் கையை, தன் கையால் பிடித்தபடி
கேசரியை எடுத்து ஊட்ட வைத்தான் அஞ்சலியின் அதிரடி கணவன்,
“ம்ம்.. எனக்கு போதும், அடுத்து உனக்கு..”  என்றபடி தன் கையால் மனைவி
மறுக்க மறுக்க ஊட்டியவன், அவளின் உதட்டில் ஒட்டியிருந்த கேசரியை, தன்
விரலால் எடுத்து அவளை பார்த்தபடி ரசித்து சாப்பிட, சிவந்த அஞ்சலி,
அவசரமாக அவன் மடியிலிருந்து  எழுந்து ஓட பார்க்க,
“ம்ஹூம்.. எங்க ஓடற..? வா..?” , என்றவாறே அவளின் கையை பற்றி வாஷ்
பேசனிற்கு இழுத்து சென்றவன், தன் விரலோடு  அவளின் விரல்களை கோர்த்தபடியே
கைகளை  கழுவியவன், அவளின் அவளின் புடவை முந்தானையை இடைய விரலால்
வருடியவாறே எடுத்து  வாயை துடைக்க, செங்கொழுந்தாக மாறிய அஞ்சலி,
“என்ன செய்றீங்க நீங்க,..?  இது போலெல்லாம் செய்யாதீங்க..?” என்று காதல்
மனது அவனை ரசிக்க அதை  தட்டி, முகத்தை சுருக்கி தடுமாற்றம் கலந்த
கோவத்துடன் சொல்ல,
“அப்படியா..? நான் செய்யக்கூடாதா..?” என்று அவளின் சிவந்த முகத்தை
ரசனையாக வருடியபடி சொன்னவனின் கண்ணில் தெரிந்த குறும்பில், மிரண்டு
போனவள், வேறெதுவும் செய்யுமுன் வேகமாக அங்கிருந்து ஓடியே போனாள்.
“வாங்க மாப்பிள்ளை..”  என்று சொன்னபடி வேலைகளை முடித்துவிட்டு சிறிது
நேரத்திலே அசோக், லதா உடன்வர, மறுவீடு வந்த மருமகனை மீனாட்சி மலர்ந்த
முகத்துடன் ஆரத்தி எடுத்து மரியாதையுடன் வீட்டிற்கு உள்ளே அழைத்து
சென்றார்,
ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த சுந்தரத்திற்கு கதிர் மேல் இன்னும் கோவம்
போகாததால், வாசலில் வைத்து “வாங்க.”  என்று கூப்பிட்டு விட்டு உள்ளே
வந்து அமர்ந்து கொண்டார்.
சுந்தரத்திற்கு எதிரில் உள்ள சோபாவில் மருமகனை, மகளுடன் அமரவைத்த
மீனாட்சி, லதாவுடன் சென்று ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க, எடுத்து கொண்டவன்,
அமைதியாக பருகியபடி, சுந்தரத்தை பார்க்க, அவரோ மருமகனையும், மகளையும்
பார்க்காமல் பார்த்து திணறி கொண்டிருந்தார், அவரின் செயலில் லேசாக
சிரித்த கதிர் குனிந்து மனைவியிடம்,
“என்னடி உங்க அப்பா இந்த பாடுபட்றார்..”  என்று நக்கலடிக்க, தந்தையின்
முன் முறைக்க முடியாத அஞ்சலி, சிரித்தபடி
“எங்க அப்பாவை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க..” என்று பல்லை கடித்து கொண்டு பேச,
“ம்ம்.. உன்னை எனக்கு தாரைவார்த்து கொடுத்த  என் மாமனாரா போயிட்டாரே,
அதான்..!!”  என்று விடாமல் நக்கலடித்தவனை எதுவும் செய்ய முடியாமல்
கடுப்பாக அமர்ந்திருந்தவளை மேலும் வெறியேற்றும் பொருட்டு, மாமியாரிடம்,
“இன்னைக்கு ரொம்ப அனலா இருக்கு இல்லத்தை..”  என்று அப்பாவையும், மகளையும்
பார்த்து கிண்டலாக சொல்ல, புரிந்து கொண்ட, மாமனாரும், மனைவியும் அவனை
முறைக்க, அவனின் கிண்டலை புரிந்து கொள்ள முடியாத மீனாட்சி,
“ஆமா மாப்பிள்ளை.. என்னைக்கும் இல்லாம இன்னிக்கு கொஞ்சம் அனல் தான்..”
என்று மருமகனுக்கு ஒத்து ஊதினார், அதில் மேலும் கண்டான சுந்தரம்,
“உள்ள போய் சமையல் வேலையை பாரு..”  என்று மனைவியிடம் எறிந்துவிழ,
“அதெல்லம் முடிஞ்சிருச்சு, மாப்பிள்ளை வந்தா உடனே பந்தி பரிமாற
வேண்டியதுதான்..”, என்று கணவரை நொடித்தவர், மருமகனிடம் பேச
ஆரம்பித்துவிட,
வந்த முதநாளே தன்னை,  தன் வீட்டிலே டேமேஜ் செய்யும் மாப்பிளையை
முறைத்துப்பார்த்த சுந்தரம் எழுந்து சென்றுவிட, அஞ்சலி திரும்பி தன்
கணவனை முறைத்தாள், அவனோ யாரையும் கண்டுகொள்ளாமல் மாமியாரிடம் பாசப்பயிரை
வளர்த்து கொண்டிருந்தான்.
கதிரின் லொள்ளையே பார்த்துக்கொண்டிருந்த அசோக், “இவன் மட்டும் அடங்கவே
மாட்டானா..?” என்று எப்போதும்போல் நொந்து கொண்டவன், முகத்தை திருப்ப,
அங்கு நின்றிருந்த மனைவி, அவனை இன்னமும் சண்டை போடும் மனநிலையிலே
பார்க்க, அரண்டு போன அசோக் அவசரமாக தன் பார்வையை மாற்றினான்,
“உன்னை விட்டேனா பார்..!!”  என்று கங்கணம் கட்டிக்கொண்ட லதா, “ஏங்க உங்க
ஜூனியரை சாப்புட கூட்டிட்டு வாங்க..” என்று பல்லை கடித்து வார்த்தைகளை
துப்ப,
அவள் சொல்லிய ஜூனியரில் பதட்டத்துடன் மனைவியை பார்த்தவன், வேகமாக
திரும்பி கதிரையும் பார்த்தான், அப்பொழுதான் அசோக்கிற்கு, கதிருக்கும்
“லதா நேற்று இரவு எதற்கு முறைத்தார்..?”  என புரிந்துவிட, இருவரும்,
அஞ்சலியை பார்த்தனர்,
அவள் அண்ணனை குறுஞ்சிறுப்புடன் பார்த்தாள்,  “ராட்சசி.. இதைத்தான்
வத்திவச்சாளா..?” என்று அசோக் பாவமாக தங்கையை பார்த்து, உதவிக்காக கதிரை
பார்க்க, அவனோ கண்ணடித்து  குறும்பாக பார்த்தான், அதில் மேலும் அரண்டுபோன
அசோக், கதிரை கெஞ்சலாக பார்த்தான்,
“நேத்து நைட் என் பர்ஸ்ட் நைட்டை கெடுத்த இல்லை.. மவனே இன்னைக்கு நீ
காலி” , என்று மச்சானை குறுஞ்சிறுப்புடன் பார்த்தவன், லதாவிடம்,
“அக்கா..” என்று பாசமாக கூப்பிட்டவன்,
“உங்களுக்கு நான் தான் இவர் ஜூனியர்ன்னு தெரிஞ்சிருச்சா..?”  என்று
சைடில் தங்களை யோசனையாக பார்த்துக்கொண்டிருந்த மீனாட்சியையும் பார்த்து
சொன்னவன்,
“எனக்கும் அவருக்கும் பத்து வருஷத்துக்கு கிட்ட பழக்கம் இருக்கும்ன்னு
உங்களுக்கு தெரிஞ்சிருச்சா..? நான் முதல்லே சீனியர்கிட்ட சொன்னேன்க்கா,
நம்ம வீட்டு ஆளுங்ககிட்ட மட்டுமாவது  நம்ம பழக்கத்தை சொல்லிடுங்கன்னு”,
“அதுக்கு அவர் அதெல்லாம் வேண்டாம், எங்க வீட்டு ஆளுங்க எல்லாம்
லொடலொடன்னு எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லிடுவாங்கன்னு
சொல்லிட்டார்”,
“ஆனா உங்களையும் அத்தையும் பார்த்தா அப்படி தெரியலயே..!! அப்பறம் ஏன்
அப்படி சொன்னீங்க சீனியர், நான் எல்லாம் என் அம்மா வரைக்குமாவது
சொன்னேன், ஆனா நீங்க அத்தைகிட்ட கூட சொல்லலை, போங்க சீனியர்” என்று
வினயமாக சொன்னவனை, கொலை வெறியுடன் முறைத்த அசோக்கை, உப்பு கண்டம் போடுவது
போல் பார்த்தனர், அவ்வீட்டின் மங்கையர் திலகங்கள்,

Advertisement