Advertisement

நெகிழியினியில் நெஞ்சம் கொண்டேன் 17

கதிரின் மிக நெருங்கிய முகம், தன் உதட்டை நெருங்கவும், சிலை போலே நின்ற
அஞ்சலிக்கு, உணர்வு இருந்தாலும், கதிரின் செயலை எதிர்பார்க்காத
அதிர்ச்சி, அவனின் தொடுகை, நெருக்கம், அவனின் ஆண்மையின் மனம் எல்லாம்
அவளின்   சிந்தை  கலங்க செய்ததால், எந்த எதிர்வினையும் இல்லாமல் சிலை
போலே நின்றாள்.

அஞ்சலியின் இடைய இறுக்கி பிடித்து தன்னோடு அணைத்த கதிரின் உடலோடு, அவளின்
மொத்த உடலும் பாரபட்சம் இல்லாமல்  உரசி, அவனின் மோகத்தை  மேலும் தூண்ட,

வெற்றிடையில் ஊறும் அவனின் விரல்கள் அழுத்தத்தை கூட்டி,  உட்சபட்ச
தாபத்தோடு நெருங்கிய அவனின் உதடு, அஞ்சலியின் தேன்மிட்டாய் உதட்டை
ஆவேசமாக கவ்வி கொள்ள, அஞ்சலிக்குள்  நெருப்பும், குளிச்சியும் கலந்த ஓர்
பிரவாகமே பொங்கி அவளை தகிக்க வைத்தது,

மனைவியின் நெருக்கம் போதாமல் மேலும் அவளின் இடைய இறுக்கி பிடித்தவாறே
தன்னோடு இன்னும்,  இன்னும்  சேர்த்து அணைத்து அவளின் உதட்டை
முரட்டுத்தனமாக உறிஞ்சியவன், பாரபட்சம் இல்லாமல் அவளின் கண், மூக்கு,
நெற்றி என தோன்றும் இடமெல்லாம் அழுத்தமாக தன் இதழை புதைத்தவன்,

கன்னத்தை லேசாக கடித்தும் வைக்க, வலியில் விலகியவளை ஒரு இன்ச் கூட
அசையவிடாமல் மேலும் இறுக்கி அணைத்தவனின் கைகள், அஞ்சலியின் உடலில்
மேலும், கீழும் அலைந்து அவளின் மென்மையை..!!, பெண்மையை..!!
உணர்ந்தவனக்கு, மோகம் தீயாக தகிக்கவே செய்தது,

அவனின் ஆக்ரோஷமான, முரட்டுத்தனத்தில்  நிற்கமுடியாமல் கண்மூடி அவன் மேலே
முழுமையாக சாயந்தவளை, கைகளில் தூக்கி கொண்டு, கட்டிலில் விட்ட, அடுத்த
நொடியே தானும் அவள் மேல் முழுதாக கோடி போலே படர்ந்துவிட்டவன்,

அவளின் கழுத்தில் முகம் புதைக்கும் போது, வெளியே கதவு தட்டும் சத்தம்
கேட்கவும், இருவருமே  அளவுகடந்த உணர்ச்சி கடலில் மூழ்கி கொண்டிருந்ததால்,
இருவருக்குமே அந்த சத்தம் கேட்கவில்லை, அடுத்த முறை  சத்தமாக தட்டவும்,
தன் மேல் படர்ந்திருந்த கதிரை, முழுதாக கண்விழித்து பார்த்த அஞ்சலி,
அதிர்ந்து அவனை விலக்க பார்த்தாள்,

அவளின் திடீர் விலகலில் மேலும் ஆவேசம் கொண்ட கதிர் இன்னும் அழுத்தத்துடன்
அவள் மேல் படர்ந்தவன்,  நிமிர்ந்து அவளை தாபம் பொங்கிய கண்களில் முறைக்க,
அவனின் முறைப்பையும் மீறி தெரிந்த அவனின் மோகத்தில், அச்சம் கொண்ட
அஞ்சலி,

“இல்லை.. வெளியே கதவு தட்டுறாங்க..”  என்று சொன்னவாறே அவனை விலக்கிவிட்டு
எழப்பார்க்க,

“ம்ப்ச்..” என்று அதிருப்தியானவன், விலகவும், அவசரமாக எழுந்த அஞ்சலி,
கதவை திறக்க போகவும், தானும் வேகமாக எழுந்து அவளின் முன்னால் நின்றவன்,

“நீ இரு..  நான் போய் திறக்கிறேன்..”  என்று அவளின் கலைந்த கோலத்தை
தாபத்தோடு வெறித்தவாறே  சொல்லிவிட்டு செல்ல, அவனின் பார்வை சென்ற இடத்தை
குனிந்து பார்த்த அஞ்சலிக்கு, தன்னை நினைத்தே கூச, சிவந்த முகத்துடன்
வேகமாக முந்தானைய சரிசெய்தவளுக்கு தன்னை நினைத்தே  “அய்யோ..” என்றானது.

“இங்க   என்ன நடந்திட்டிருக்கு..? நான் என்ன செஞ்சிட்டிருக்கேன்..?
என்னோட கோவம் இவ்வளவுதானா..? அவர்  தொட்டவுடனே நான் இப்படி அவர்  கையிலே
கரைஞ்சி போயிருவேனா..? இவ்வளுதானா என் உறுதி..?

என் காதலை..!!, என்னைய..!!  அவமானபடுத்தினவருடைய தொடுகையை என் மனசும்,
என் உடம்பும்  ஏத்துக்க ரெடியா இருக்கா..? என்று தன்னுள்ளே மிகவும்
சோர்ந்த மனநிலையில்  போராடிக்கொண்டிந்தாள் அஞ்சலி,

கதவை திறந்த கதிருக்கு, கதவிற்கு வெளியே கதவை தட்டி கொண்டிருந்த அசோக்கை
காணவும், அவனின் முகம் எல்லையில்லா ஆத்திரத்தில்,  கோபத்தில் சிவந்தது,
அவனின் கோவமுகத்தை புரிந்து கொள்ளாத அசோக்  சிரிப்புடன்,

“கதிர் உன் மொபைலை விட்டுட்டு வந்துட்ட பாரு  இந்தா..”  என்று கொடுக்க,
அவனையும், மொபைலையும் கடுப்புடன் பார்த்த கதிர்,

“இப்போ இது ரொம்ப முக்கியமா..?” என்று சிடுசிடுப்புடன் சீற,

“என்னடா கோவமா இருக்கியா என்ன..?” என்று புரியாமல் கேட்ட, அசோக்,
“ஒருவேளை அஞ்சலிக்கு, இவனுக்கும் ஏதாவது சண்டை வந்திருக்குமோ..?”
என்றுதான் யோசித்தான்,

இருவருக்குமிடையில் இருந்த பிரச்சனை நன்றாக புரிந்தவனாததால்,  அவனால்
அவ்வாறே யோசிக்க முடிந்தது, அவனுக்கென்ன தெரியும் “கதிர் இப்படி
அதிரடியாக  சம்சார மோகத்தில் மூழ்கி முத்தெடுப்பான்..!!”  என, அதனாலே,

“கதிர்.. ரொம்ப சண்டை போட்டுக்காதீங்க, ஏதா இருந்தாலும் உங்களுக்குள்ளே
பொறுமையா பேசி சரி செஞ்சுக்கோங்க..” என்று பெரியாவனாய் அறிவுரை கூறவும்,
அவனை வெறியுடன் பார்த்த கதிர்,

“இன்னைக்கு வரைக்கும் நான் உங்களை எப்பாவது மரியாதை இல்லாம
திட்டியிருக்கேனா..?” என்று பல்லை கடித்து கொண்டு கேட்க, அவனின் கேள்வியை
புரிந்தும் புரியாமலும் நின்ற அசோக், அசட்டு சிரிப்புடன்,

“என்னடா என்ன என்னமோ கேட்கிற..? உனக்கும் அஞ்சலிக்கும் ஏதாவது பெரிய
பிரச்னையா..?  அந்த கோவத்தை தான் என்கிட்ட காட்டுறியா..?” என்று அதே
ரீதியில் தான் பேசியவனை,  காண்டாக முறைத்த கதிரை, புரியாமல் பார்த்த
அசோக், மறுபடியும் பேச வரவும்,

“நிறுத்துங்க..”  என்று கை காட்டி நிறுத்திய கதிர், “கிளம்புங்க..”
என்று கதவை சாற்ற போக,

“டேய் ஏதா இருந்தாலும் பாத்து பேசுடா, அஞ்சலி பாவம்..” என்று விடாமல்
குரல் கொடுத்தவனை கொலை வெறியுடன் பார்த்த கதிர்,

“இதுக்குமேல ஒரு வார்த்தை பேசுனீங்க..” என்று ஒற்றை விரல் நீட்டி
“கொன்னுடுவேன்..”  என்பதுபோல் மிரட்டியவன், படாரென கதவை மூடிவிட்டான்,

அவனின் மிரட்டலும், கோவமும் அசோக்கிற்கு கவலையை கொடுக்க, அதே கவலையுடன்
அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வர, அங்கு பத்ரகாளியாக அமர்ந்திருந்த
லதா, அவன் உள்ளே நுழைந்தும் நுழையாமலும்,

“இதுவரை  இதுபோல என்கிட்ட எத்தனை விஷயங்களை மறைச்சிருக்கீங்க..?”  என்று
ஆரம்பிக்க, அவளின் திடீ கேள்வி புரியாத அசோக்,

“என்ன கேட்ட..?” என்று யோசனையுடன் கெட்டவனை,

“ஓஹ்.. நான் என்ன கேட்கிறதுங்கிறது கூட புரியாத அளவுக்கு ஆயிருச்சா..?”
என்று வம்படியாக சண்டையை இழுக்க,

“ஏய் என்னை கடுப்பேத்ததாடி, புரியலைன்னா, புரியலன்னு தான் கேட்க
முடியும், அதுக்கு ஒரு சண்டையா..?”  என்று லதாவின் மனநிலை தெரியாமல்
ஆரம்பித்துவைக்க, அடுத்தென்ன, அவனின் ஆரம்பித்து வைத்ததை லதா ஏகபோகமாக
தொடர, விடிய விடிய கச்சேரிதான் அசோக்கிற்கு,

இதில் அசோக்கிற்கு மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், “இறுதிவரை லதா
எதற்காக சண்டை போட்டார்..?” என்பதே தெரியாமல் போனதுதான், அதை கேட்டாலே
இன்னும் ஆங்கராமாக கத்தும் மனைவியிடம், கேட்காமல் இருப்பதே மேல் என்று
தோன்றிவிட, அமைதியாகிவிட்டான் லதாவின் அன்பு கணவன்.

கடுப்புடன்  கதவை மூடிவிட்டு உள்ளே வந்த கதிருக்கு, அஞ்சலி தலை மேல்
கைவைத்து அமர்ந்திருப்பதை பார்த்து, மேலும் தான் கோவம் வந்தது, அதனாலே,
“என்னடி..?” என்று அதட்டி கேட்க,

அதற்குள்ளாக தன்னை சுதரித்திருந்த அஞ்சலி, வெறுமையான கண்களுடன் அவனை
நிமிர்ந்து பார்த்தில், அவளிடம் முன்பு இருந்த மயக்கம் காணாமல் போனதை
கண்டு கொண்ட கதிர்,

“ம்ப்ச்.. “ என்று அதிர்ப்தியாக சொன்னவன், கட்டிலில் அஞ்சலியின்
பக்கத்தில் அமர்ந்து கொண்டான், தன் அருகில் கணவன் உட்காரவும், சட்டென
எழுந்த அஞ்சலியை, தீர்க்கமாக பார்த்த கதிர்,

நின்றிருந்த அவளின் கையை சுண்டி இழுத்தவன்  தன் மடியில் உட்காரவைத்து
அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டவன், அவளின் பின்னங்கழுத்தில் வாசனை பிடிக்க,
முன்போல் தடுமாறாமல், விறைப்பாக அமர்ந்திருந்த அஞ்சலி, அவனிடமிருந்து
எழமுயற்சி செய்யவும், விடாமல் இன்னும் சேர்த்து அணைத்து பிடித்தான்,

அவனின் வலுவான பிடியில் விடமாட்டான் என்று புரிந்து கொண்ட அஞ்சலி, “என்னை
விடுங்க..”  என்று விருப்பமில்லா குரலில் கேட்க, அதை புரிந்து கொண்டு,
அவளின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்திருந்த கதிர், தலையை நிமிர்த்தி
அவளின் காதுக்கருகில் தன் முகத்தை வைத்து தேய்த்தவன்,

“ஏன் விடணும்..?” என்று அடாவடியாக புரியதாவன் போலே கேட்டான்,

“ப்ளீஸ்.. என்னை  முதல்ல விடுங்க, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..”

“ம்ஹூம் ஏதா இருந்தாலும் இங்கிருந்து இப்படியே பேசு..” என்றவன், அவளின்
காதில் முத்தம் வைக்க, அவனின் முத்தத்தில் உடல் சிலிர்க்க செய்யவும்,
அதுவரை இருந்த இறுக்கம் லேசாக தளர ஆரம்பிக்கவும் புரிந்து அதிர்ந்த
அஞ்சலி,

கதிர் எதிர்பார்க்காத போது, வேகமாக அவனை உதறிவிட்டு எழுந்து தள்ளி
நின்றுகொண்டாள். அவளின் திடீர் உதறலில், நெருப்பாக பார்த்த கதிரை கண்டு
லேசாக அச்சம் கொண்டாலும், முயன்று தைரியமாக நின்றவள்,

“எனக்கு இதெல்லாம் பிடிக்கல, வேண்டாம்..” என்று முகத்தில் தன்
விருப்பமின்மையை காட்டி சொல்ல,

எதெல்லாம் பிடிக்கல..? என்று அழுத்தமாக கேட்டவனின் முகத்தில் திடீரென
குறுஞ்சிறுப்பு உதயமாக, உஷாராக பார்த்த மனைவியிடம்,

“சரி.. அப்போ உனக்கு பிடிச்ச மாதிரி சொல்லு, அப்படியே செய்யலாம்”, என்று
குறும்பாக கண் சிமிட்டலுடன் கேட்க, அவனின் கேள்வியில் “ஆஹ்..” என்று வாயை
பிளந்த அஞ்சலி, அவனின் சிரிப்பில், முறைத்தவாறே,

“நான் சீரியஸா சொல்லிட்டிருக்கேன்..” என்று கடுகடுவென  சொன்னாள்,

“நானும் சீரியஸாதான் சொல்றேன், சொல்லு எப்படி செய்யலாம், நீ பாரின்
எல்லாம் போயிட்டு வந்திருக்க, நிறைய பாத்திருப்ப, அங்க இதெல்லம் ரொம்ப
சதாராணமாச்சே..!!”  என்று விடாமல் வம்புக்காக கேட்பவனை, வெறித்து பார்த்த
அஞ்சலி,

“எனக்கு வேண்டாம், நான் தூங்கணும் அவ்வளவுதான்..” என்று பொரிந்துவிட்டு,
கீழே படுக்க பெட்ஷீட்டை இழுக்க போனவளை, மறித்த கதிர்,

“இப்போ வேண்டாமா..? இல்லை எப்பவும் வேண்டாமா..?” என்று கூர்மையாக
பார்த்தப்படி கேட்டான், அவனின் கேள்வியில் விழித்தவளை பார்த்து
மறுபடியும் அழுத்தத்துடன்,

“இப்போ மட்டும் வேண்டாமா..?  இல்லை எப்போதுமே  வேண்டாமா..?” என்று
தன்னையும்.!!, கட்டிலையும் சுட்டி காட்டி, கேட்பவனை, உள்ளம் கொதிக்க
பார்த்தாள் அஞ்சலி,

“நீ வேண்டாம் என்று என்னால எப்படி சொல்ல முடியும்..? என்னோட காதல்
தெரிந்தால் உன்னால் இவ்வாறு என்னிடம் கேட்க முடியுமா..? என்னோட வேதனை
உனக்கு புரியுமா..?” என்று மறுக்கியவாறே வெறித்தவளை,

“நானும் நீயும் புருஷன் பொண்டாட்டி..!!  தெரியுமில்ல, நான் தொட்றதை
பிடிக்கல, வேண்டாம்ன்னு சொல்லுற, ஏன் அப்படிசொல்ற..? சொல்லு..?” என்று
கதிர் கொஞ்சம் சத்தமாக அதட்டி கேட்டான், அவனின் சத்தத்தில்,  முகம்
காட்டிய ரௌத்திரத்தில் நடுங்கினாலும்,

Advertisement